search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நான் மத்திய மந்திரியாக இருந்த போதுதான்... பிரதமர் மோடிக்கு பதில் அளித்த சரத் பவார்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    நான் மத்திய மந்திரியாக இருந்த போதுதான்... பிரதமர் மோடிக்கு பதில் அளித்த சரத் பவார்

    • விவசாயிகள் இடைத்தரகர்கள் தயவில் இருந்தனர்
    • விவசாயிகளுக்காக சரத் பவார் செய்தது என்ன?- பிரதமர் மோடி

    பிரதமர் மோடி கடந்த வியாழக்கிழமை ஷீரடியில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் கூறும்போது "மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் சிலர், விவசாயிகள் பெயரை பயன்படுத்தி அரசியல் செய்தனர். மகாராஷ்டிராவின் மூத்த அரசியல் தலைவர் மத்திய விவசாயத்துறை அமைச்சராக பதவி வகித்தார். தனிப்பட்ட முறையில் அவரை மதிக்கிறேன். ஆனால், விவசாயிகளுக்காக அவர் செய்தது என்ன?" என பிரதமர் மோடி மறைமுகமாக சரத் பவாரை விமர்சனம் செய்திருந்தார். மேலும், "விவசாயிகள் இடைத்தரகர்கள் தயவில் இருந்தனர்" என்றார்

    இதற்கு பதில் அளித்த சரத் பவார் "2004-ல் நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலை 550 ரூபாய் இருந்தது. அதை நாங்கள் 2014-ல் 1,310 ரூபாயாக உயர்த்தியுள்ளோம். 168 சதவீதம் உயர்த்தியுள்ளோம். அதேபோல் மக்காச்சோளத்திற்கு 198 சதவீதம் உயர்த்தியுள்ளோம். தேசிய தோட்டக்கலை திட்டத்திற்காக பல முயற்சிகள் எடுத்துள்ளேன். ராஷ்டிரிய கிரிஷி விகாஸ் யோஜனா விவசாயத்துறை மாற்றியது.

    முன்னதாக பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தர பிரதேசம், சில தென்இந்திய மாநிலங்களில் மட்டுமே உணவு தானியங்கள் என்ற நிலை இருந்தது. எனினும், வடகிழக்கு மாநிலங்கள், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா மாநிலங்களில் நெல் உற்பத்தி செய்யப்பட்டு 2-ம் பசுமை புரட்சிக்கு வழிவகுத்தது" என்றார்.

    சரத் பவார் மகளும், தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான சுப்ரியா சுலே, "விவசாயத் துறைக்கு உழைத்ததற்காக மோடி அரசு, சரத் பவாருக்கு பத்ம விபூஷன் விருது வழங்க வேண்டும்" என்றார்.

    2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை மத்திய அரசில் சரத் பவார் விவசாயத்துறை மந்திரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×