என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா அதிரடியாக விளையாடி வருகிறார்.
    • மொத்தம் 565 ரன்கள் எடுத்துள்ள அவர் உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த டாப் 5 வீரர்களில் ஒருவராக உள்ளார்.

    இந்தியாவில் நடந்து வரும் உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா அதிரடியாக விளையாடி வருகிறார். லீக் போட்டிகளின் முடிவில் 565 ரன்கள் எடுத்துள்ள அவர், இந்த உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த டாப் 5 வீரர்களில் ஒருவராக உள்ளார்.

    23 வயதிலேயே ஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கர் சாதனையும் அவர் முறியடித்தார்.

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரச்சின் ரவீந்திராவின் குடும்பம் பெங்களூருவில் இருந்து நியூசிலாந்து சென்றதால், அந்நாட்டிற்கு கிரிக்கெட் விளையாட துவங்கி தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட துவங்கியுள்ளார்.

    இந்திய வீரர்களான ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் பெயர்களைக் கலந்து ரச்சின் ரவீந்திரா என அவரது பெற்றோர் பெயர் சூட்டியதாக செய்திகள் வெளியானது.

    இந்நிலையில், சச்சின் மற்றும் டிராவிட் ஆகியோர் பெயரை கலந்து தமது மகனுக்கு பெயர் சூட்டவில்லை என ரச்சின் ரவீந்திரா தந்தை ரவி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் ரவ் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:

    ரச்சின் பிறந்தபோது என்னுடைய மனைவி தான் இந்தப் பெயரை பரிந்துரைத்தார். அதைப்பற்றி மேற்கொண்டு விவாதிப்பதற்கு நாங்கள் நிறைய நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. அந்தப் பெயர் நன்றாக, எளிதாக, சிறியதாக இருந்ததால் நாங்கள் அதை வைக்கலாம் என்று முடிவெடுத்தோம். சில வருடங்கள் கழித்துதான் அது ராகுல் மற்றும் சச்சின் ஆகியோரின் பெயரைக் கொண்ட கலவையாக இருப்பதை நாங்களே உணர்ந்தோம்.

    ரச்சின் கிரிக்கெட்டராக வரவேண்டும் என்பது போன்ற எண்ணத்துடன் நாங்கள் அவருக்கு இந்தப் பெயரை சூட்டவில்லை என தெரிவித்தார்.

    • மும்பையில் நாளை நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
    • கொல்கத்தாவில் நாளை மறுநாள் நடைபெறும் 2-வது அரையிறுதியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மோதுகின்றன.

    மும்பை:

    இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.

    மும்பை வான்கடே மைதானத்தில் நாளை நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்த இந்திய அணியும், 4வது இடம் பிடித்த நியூசிலாந்து அணியும் மோதுகின்றன.

    கொல்கத்தாவில் நாளை மறுநாள் நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா மோதுகின்றன.

    இந்நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறவுள்ள அரையிறுதி போட்டிகள் மற்றும் நவம்பர் 19-ம் தேதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டி ஆகியவை மழையின் காரணமாக தடைபெற நேரிட்டால், ரிசர்வ் டே முறையில் அடுத்த நாட்களில் போட்டிகள் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.

    உலக கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 33 கோடி பரிசாக வழங்கப்படும். இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 16.5 கோடி பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • உலக கோப்பை முதல் அரையிறுதி போட்டி மும்பையில் நாளை நடைபெறுகிறது.
    • வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    மும்பை:

    உலக கோப்பை முதல் அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இதற்கிடையே, அரையிறுதிப் போட்டியில் பங்கேற்க இன்று மதியம் இந்திய அணி மும்பை வந்தடைந்தது.

    இந்நிலையில், இந்திய கேப்டன் ரோகித் சர்மா மும்பையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்தியா முதல் உலக கோப்பையை (1983) வென்றபோது பாதி பேர் பிறக்கவில்லை. அதன்பின், இரண்டாவது உலக கோப்பையை வென்றபோது (2011) பாதி பேர் கிரிக்கெட் விளையாடவில்லை.

    எங்களைப் பொறுத்தவரை தற்போதைய வீரர்களின் மனநிலை, இன்று என்ன நடக்கக்கூடும் என்பதில் மிகவும் அதிகமாக உள்ளது.

    கடந்த உலக கோப்பை அல்லது முதல் உலக கோப்பையை நாங்கள் எப்படி வென்றோம் என்பதைப் பற்றி அவர்கள் பேசுவதை நான் பார்க்கவில்லை.

    தற்போது எவ்வாறு சிறந்து விளங்கலாம், தாங்கள் மேம்படுத்த வேண்டிய விஷயங்கள் என்ன என்பதில் அவர்களின் கவனம் செலுத்தப்படுகிறது. எங்கள் கவனம் எப்போதும் நிகழ்காலத்தில் இருக்கும். முதல் ஆட்டத்தில் இருந்து, இன்று வெற்றி பெறுவதில் கவனம் செலுத்தப்படுகிறது.

    கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும். கடந்த காலத்தில் நடந்தது கடந்த காலம். இன்றும் நாளையும் நீங்கள் என்ன செய்யலாம் என்பதைப் பற்றிதான் நாங்கள் பேசுகிறோம். 10 ஆண்டுக்கு முன் நடந்தது பற்றியோ அல்லது கடந்த உலக கோப்பை பற்றியோ அதிக விவாதமோ, பேச்சோ இல்லை என்று நினைக்கிறேன்.

    எப்படி விளையாட விரும்புகிறார்கள் என்பதன் அடிப்படையில் நியூசிலாந்து மிகவும் ஒழுக்கமான அணியாக இருக்கலாம். அவர்கள் கிரிக்கெட்டை மிகவும் புத்திசாலித்தனமாக விளையாடுகிறார்கள்.

    கடந்த 6-7 ஆண்டுகளில், 2015 முதல் அனைத்து ஐசிசி போட்டிகளிலும் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் அவர்கள் பல ஆண்டுகளாக மிகவும் சீராக விளையாடி வருகின்றனர். அவர்கள் எப்படி கிரிக்கெட் விளையாடுகிறார்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

    அனைத்து அணிகளின் பலம் எங்கே இருக்கிறது, பலவீனம் எங்கே இருக்கிறது என்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அதன் அடிப்படையில் அங்கு சென்று விளையாட நாங்கள் முயற்சிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

    • புனேவில் நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.
    • டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.

    புனே:

    உலக கோப்பை தொடரின் 43வது லீக் ஆட்டம் புனேவில் இன்று நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியா, வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, வங்காளதேசம் முதலில் களமிறங்குகிறது.

    ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதிபெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சுங்க சாவடியில் கட்டணம் செலுத்துவதற்காக வரிசையில் காத்திருந்த மேலும் 6 கார்கள்மீது, அந்த கார் மோதி, விபத்தை ஏற்படுத்தியது.
    • மின்னல் வேகத்தில் வந்து விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டிய நபருக்கும், விபத்தில் லேசாகக் காயம் ஏற்பட்டது.

    மும்பை:

    மும்பையில் பாந்த்ரா-ஒர்லி கடல் பாலம் மிகவும் பிரபலமாகும். இந்தப் பாலத்தில் அடிக்கடி தற்கொலைச் சம்பவங்கள் நடக்கிறது.

    காரை கடல் பாலத்தில் கொண்டு வந்து நிறுத்திவிட்டு, கடலுக்குள் குதித்து பலர் தற்கொலை செய்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று இரவு 10.30 மணிக்கு பாலத்தின் அருகே உள்ள பாந்த்ரா சுங்கச்சாவடியில் ஏராளமான வாகனங்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தன.

    அப்போது வொர்லியில் இருந்து கார் ஒன்று, கடல் பாலத்தில் பாந்த்ராவை நோக்கி மின்னல் வேகத்தில் வந்தது. டோல்கேட் அருகில் வந்தபோது அந்த கார், முன்னால் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றின்மீது மோதியது.

    மோதிய வேகத்தில் சம்பவ இடத்திலிருந்து அதனை ஓட்டி வந்தவர் வேகமாகச் செல்ல முயன்றார்.

    அப்போது சுங்க சாவடியில் கட்டணம் செலுத்துவதற்காக வரிசையில் காத்திருந்த மேலும் 6 கார்கள்மீது, அந்த கார் மோதி, விபத்தை ஏற்படுத்தியது.

    கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக் கொண்டதால், பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டது. இதில் மொத்தம் 6-க்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்தன.

    சில கார்கள் நொறுங்கின. சினிமா காட்சிகளையே மிஞ்சும் அளவுக்கு நடந்த இந்த கோர விபத்து சில நிமிடங்களில் நடந்து முடிந்துவிட்டது.

    இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். அதில் 3 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது.

    மின்னல் வேகத்தில் வந்து விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டிய நபருக்கும், விபத்தில் லேசாகக் காயம் ஏற்பட்டது. காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபர், குஜராத்தைச் சேர்ந்தவர் என்று விசாரணையில் தெரியவந்தது. அந்த காரைப் பறிமுதல் செய்து, காரை ஓட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

    அவர் தற்கொலை செய்யும் எண்ணத்துடன் காரை ஓட்டி வந்தாரா? என விசாரித்து வருகின்றனர்.

    இந்த விபத்தால், மும்பை கடல் பாலத்தில் 6 கிலோமீட்டர் தூரத்துக்கு கார்களும் இதர வாகனங்களும் அணிவகுத்து நின்றன. விடிய விடிய போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இன்று அதிகாலையில்தான் போக்குவரத்து சரி செய்யப்பட்டது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அறுவை சிகிச்சையை பாதியில் விட்டு சென்ற டாக்டருக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    • டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாக்பூர் மாவட்ட மருத்துவ அதிகாரி சவுமியா சர்மா உறுதியளித்துள்ளார்.

    நாக்பூர்:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் டீ கொடுக்காததால் கோபத்தில் டாக்டர் ஒருவர் ஆபரேசனை பாதியில் விட்டு சென்றுள்ளார். இந்த அதிர்ச்சியான சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    நாக்பூர் மாவட்டம் மவுடா பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் 8 பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது. இதில் 4 பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்து உள்ள நிலையில் டாக்டர் பாலவி மருத்துவமனை ஊழியரிடம் டீ கேட்டுள்ளார்.

    நீண்ட நேரமாகியும் டீ கொடுக்காததால் அவர் கோபம் அடைந்தார். ஆத்திரத்தில் டாக்டர் பாலவி ஆபரேசனை பாதியிலேயே விட்டு சென்றார். மீதமுள்ள 4 பெண்களுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்கு தயாராக இருந்த நிலையில் டாக்டர் வெளியேறி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    டாக்டரின் இந்த செயலால் உறவினர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மாவட்ட மருத்துவ அதிகாரியிடம் இதுதொடர்பாக புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து வேறொரு டாக்டர் வரவழைக்கப்பட்டு ஆபரேசன் செய்யப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து விசாரணை குழு அமைக்கப்பட்டு டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாக்பூர் மாவட்ட மருத்துவ அதிகாரி சவுமியா சர்மா உறுதியளித்துள்ளார்.

    மேலும் அறுவை சிகிச்சையை பாதியில் விட்டு சென்ற டாக்டர் பாலவிக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • பென் ஸ்டோக்ஸ் அதிரடி சதமடிக்க, இங்கிலாந்து 339 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய நெதர்லாந்து 179 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

    புனே:

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 40வது லீக் ஆட்டம் புனேவில் இன்று நடைபெற்றுது. இதில் இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 339 ரன்களை குவித்தது. பென் ஸ்டோக்ஸ் சதமடித்து அசத்தினார். அவர் 84 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டேவிட் மலான் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 87 ரன்னில் வெளியேறினார். கிறிஸ் வோக்ஸ் அரை சதம் கடந்தார்.

    இதையடுத்து, 340 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது. இங்கிலாந்து அணியினர் துல்லியமாக பந்து வீசியதால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

    ஸ்காட் எட்வர்ட்ஸ் 38 ரன்னும், வெஸ்லி பரேசி 37 ரன்னும், சைப்ரண்ட் 33 ரன்னும் எடுத்தனர். தேஜா 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், நெதர்லாந்து 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 160 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து ஆறுதல் வெற்றி பெற்றது.

    இங்கிலாந்து சார்பில் அடில் ரஷித், மொயின் அலி தலா 3 விக்கெட்டும், டேவிட் வில்லே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 339 ரன்கள் குவித்தது.
    • பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக ஆடி சதமடித்தார்.

    புனே:

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 40வது லீக் ஆட்டம் புனேவில் இன்று நடைபெறுகிறது. இதில் இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பேர்ஸ்டோவ் 18 ரன்னில் அவுட்டானார். ஜோ ரூட் 28 ரன்னிலும், ஹாரி புரூக் 11 ரன்னிலும், பட்லர் 5 ரன்னிலும், மொயின் அலி 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டேவிட் மலான் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 87 ரன்னில் வெளியேறினார்.

    பென் ஸ்டோக்சுடன், கிறிஸ் வோக்ஸ் ஜோடி சேர்ந்தார். முதலில் நிதானம் காட்டிய இந்த ஜோடி பின்னர் அதிரடியில் மிரட்டியது.

    இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்தது.

    பென் ஸ்டோக்ஸ் சதமடித்து அசத்தினார். கிறிஸ் வோக்ஸ் அரை சதம் கடந்தார். பென் ஸ்டோக்ஸ் 84 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 339 ரன்களை குவித்தது.

    இதையடுத்து, 340 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்குகிறது.

    • முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்கு 291 ரன்களை எடுத்தது.
    • அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 293 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    மும்பை:

    உலக கோப்பை தொடரின் 39வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்கு 291 ரன்களை எடுத்துள்ளது. சட்ரன் 129 ரன்னும், ரஷித் கான் 35 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இதையடுத்து, 292 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது.

    டிராவிஸ் ஹெட் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய மிட்செல் மார்ஷ் 24 ரன்னில் வெளியேறினார். டேவிட் வார்னர் 18 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜோஷ் இங்கிலிஸ் டக் அவுட்டானார். இதனால் ஆஸ்திரேலியா அணி 8.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 49 ரன்களை எடுத்து திணறியது.

    லபுசேன் 14 ரன்னிலும், ஸ்டோய்னிஸ் 6 ரன்னிலும், மிட்செல் ஸ்டார்க் 3 ரன்னில் அவுட்டாகினர். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 91 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்து திணறியது.

    ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் மேக்ஸ்வெல் அபாரமாக ஆடி சதமடித்தார். அவருக்கு கேப்டன் பாட் கம்மின்ஸ் ஒத்துழைப்பு கொடுத்தார்.

    இறுதியில், ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுக்கு 293 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. மேக்ஸ்வெல் 201 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார்.

    ஆப்கானிஸ்தானின் நவீன் உல் ஹக், ஓமர்சாய், ரஷித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்கு 291 ரன்களை எடுத்துள்ளது.
    • 292 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது.

    மும்பை:

    உலக கோப்பை தொடரின் 39வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்கு 291 ரன்களை எடுத்துள்ளது. சட்ரன் 129 ரன்னும், ரஷித் கான் 35 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இதையடுத்து, 292 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது.

    டிராவிஸ் ஹெட் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய மிட்செல் மார்ஷ் 24 ரன்னில் வெளியேறினார். டேவிட் வார்னர் 18 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜோஷ் இங்கிலிஸ் டக் அவுட்டானார்.

    இதனால் ஆஸ்திரேலியா அணி 8.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 49 ரன்களை எடுத்து திணறி வருகிறது.

    ஆப்கானிஸ்தானின் நவீன் உல் ஹக், ஓமர்சாய் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
    • அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் இப்ராகிம் சட்ரன் சதமடித்தார்.

    மும்பை:

    உலக கோப்பை தொடரின் 39வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் 21 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ரஹ்மத் ஷா 30 ரன்னும், கேப்டன் ஹஷ்மதுல்லா ஷஹிதி 26 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். அஸ்மதுல்லா ஒமர்சாய் 22 ரன்னிலும், முகமது நபி 12 ரன்னிலும் வெளியேறினர்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் இப்ராகிம் சட்ரன் பொறுப்புடன் ஆடினார். இவர் முதல் சதமடித்து அசத்தினார்.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் 5 விக்கெட் இழப்புக்கு 291 ரன்களை எடுத்துள்ளது. சட்ரன் 129 ரன்னும், ரஷித் கான் 35 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இதையடுத்து, 292 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்குகிறது.

    • வீடியோவில் போட்டியை ஒரு நபர் நேரடி வர்ணனை செய்ததும் காண முடிந்தது.
    • வீடியோவை பார்த்த பயனர் ஒருவர் பார்முலா கார் பந்தயத்தைவிட சுவாரஸ்யமானது என கருத்து தெரிவித்தார்.

    சமூக வலைதளங்களில் கார் பந்தயம், மோட்டார் சைக்கிள் ரேஸ் போன்றவைகளின் வீடியோக்கள் வைரலாவதை பார்த்திருப்போம். ஆனால் தற்போது இணையத்தில் பரவி வரும் ஒரு வீடியோவில் ஆட்டோ பந்தய காட்சிகள் பயனர்களை கவர்ந்துள்ளது.

    ரெடிட் தளத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஆட்டோ பந்தயத்திற்கான கொடியை ஒருவர் அசைத்ததும் 3 ஆட்டோக்கள் பந்தயத்தில் சீறிப் பாய்ந்தன.

    ஒன்றை ஒன்று முந்துவது போல பாய்ந்து செல்லும் வீடியோவில் முடிவு தெரியவில்லை. இந்த வீடியோ மகாராஷ்டிரா மாநிலத்தின் சாங்லி மாவட்டத்தில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. வீடியோவில் போட்டியை ஒரு நபர் நேரடி வர்ணனை செய்ததும் காண முடிந்தது.

    எனினும் இந்த வீடியோ வைரலாகி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்தது. அதைப்பார்த்த பயனர் ஒருவர் பார்முலா கார் பந்தயத்தைவிட சுவாரஸ்யமானது என கருத்து தெரிவித்தார். மற்றொரு பயனர் இந்த பந்தயத்தை பார்க்க விரும்புகிறேன். இது எங்கே நடக்கிறது? என கேள்வி எழுப்பி இருந்தார். மற்றொரு பயனர், இந்த பந்தயம் மிகவும் பொழுதுபோக்காக இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.

    ×