என் மலர்tooltip icon

    ஜம்மு காஷ்மீர்

    • நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ அல்லது பொருட் சேதமோ ஏற்படவில்லை என்று தகவல்.
    • இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ஜம்மு காஷ்மீரில் பல்வேறு ரிக்டர் அளவுகளில் 12 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் இன்று அதிகாலை 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

    குல்மார்க்கிலிருந்து சுமார் 184 கி.மீ தொலைவில் பூமிக்கு அடியில் 129 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ அல்லது பொருட் சேதமோ ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ஜம்மு காஷ்மீரில் பல்வேறு ரிக்டர் அளவுகளில் 12 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது" என்றார்.

    முன்னதாக, ஜூலை 10 ஆம் தேதி அதிகாலை ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    ஜூன் 13 அன்று தோடா மாவட்டத்தில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, வீடுகள் உட்பட டஜன் கணக்கான கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • ஜம்மு கூடுதல் காவல்துறை இயக்குநர் (ஏடிஜிபி) முகேஷ் சிங் தெரிவித்துள்ளார்.
    • சம்பவ இடத்திற்கு பாதுகாப்பு படையினர் விரைந்து நடவடிக்கை.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் இன்று நடைபெற்ற என்கவுன்டரில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

    இந்த தகவலை ஜம்மு கூடுதல் காவல்துறை இயக்குநர் (ஏடிஜிபி) முகேஷ் சிங் தெரிவித்துள்ளார்.

    புதால் பகுதியில் உள்ள குந்தா-கவாஸ் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு போலீசார் மற்றும் ராணுவம் நடத்திய சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையின் போது என்கவுன்டர் நடந்துள்ளது.

    முற்றுகையிடப்பட்ட கிராமத்திலிருந்து துப்பாக்கிச் சூடு சத்தங்கள் கேட்டதாகவும், சம்பவ இடத்திற்கு பாதுகாப்பு படையினர் விரைந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    ஜம்முவில் என்கவுன்டர் நடந்து வருவதாக தெரிவித்த, ஏ.டி.ஜி.பி, " இதுவரை ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டுள்ளார்," என்று தெரிவித்தார்.

    • 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு 4-வது ஆண்டு நிறைவையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.
    • மெகபூபா முப்தி கட்சியின் கருத்தரங்கத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு 4-வது ஆண்டு நிறைவையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

    முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டு காவலில் வைக்கப்பட்டனர்.

    மேலும் மெகபூபா முப்தி கட்சியின் கருத்தரங்கத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    • பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
    • முழு நாடும் நமது துணிச்சலான வீரர்களால் பெருமை கொள்கிறது.

    ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அம்மாவட்டத்தின் ஹலன் பகுதியில் நேற்று இரவு ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலுக்கு ராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

    இதில், பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 3 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர்.

    இந்நிலையில், பயங்கரவாதிகளுடனான என்கவுண்டரில் உயிரிழந்த 3 ராணுவ வீரர்களுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அஞ்சலி செலுத்தினார்.

    இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், " பயங்கரவாதிகளுடனான மோதலில் நாட்டைக் காத்த நமது துணிச்சலான வீரர்களின் அழியா தியாகத்திற்கு எனது அஞ்சலிகள். நமது வீரர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து நம்மைக் காக்கிறார்கள். முழு நாடும் நமது துணிச்சலான வீரர்களால் பெருமை கொள்கிறது" என்றார்.

    • காஷ்மீரில் ராணுவ வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் மோதல் ஏற்பட்டது.
    • இந்த என்கவுண்டரில் ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணமடைந்தனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நாச வேலைகளில் ஈடுபடாமல் தடுப்பதற்காக பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அம்மாவட்டத்தின் ஹலன் பகுதியில் நேற்று இரவு ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    இந்த தாக்குதலுக்கு ராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில், பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 3 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். அப்பகுதியில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஜம்மு-காஷ்மீரில் 8,617 பெண்களும், 1,148 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர்.
    • யூனியன் பிரதேசத்தில் நடப்பதாகக் கூறப்படும் 'மனித கடத்தல்' பற்றியும் நவாப் சின்ஹாவிடம் கேட்டார்.

    ஜம்மு காஷ்மீரில் இருந்து 9,000க்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போனதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தேசிய குற்ற ஆவணக் காப்பகம், நாட்டில் காணாமல் போன பெண்கள் குறித்த பட்டியல் வெளியிட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த தரவு சமீபத்தில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, 2019 முதல் 2021 வரையிலான மூன்று ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீரில் 8,617 பெண்களும், 1,148 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர் என்று தெரிவித்திருந்தது.

    இதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் ஸ்ரீநகரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இங்குள்ள பிரஸ் காலனியில் ஏராளமான ஆம் ஆத்மி கட்சியினர் "ஏன்? யார்? எங்கே? 9765 காணவில்லை" என்ற கேள்விகளை தாங்கிய பதாகைகளை ஏந்தியபடி போராட்டம் நடத்தினர்.

    ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹாவிடம், காணாமல் போன பெண்கள் குறித்து பதில் அளிக்குமாறு ஆம் ஆத்மி ஊடக குழு தலைவர் நவாப் கேட்டுக் கொண்டார்.

    மேலும் அவர்," ஏன் இது நடந்தது, உங்கள் அமைப்பில் உள்ள குறைபாடு என்ன என்று நாங்கள் கேட்கிறோம்? இந்த 9,765 பேர் யார், அவர்கள் காணாமல் போனதற்குக் என்ன காரணம்? காணாமல் போன பெண்கள் எங்கே? காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க நீங்கள் ஏதாவது செய்கிறீர்களா?" என்று கேட்டார்.

    யூனியன் பிரதேசத்தில் நடப்பதாகக் கூறப்படும் 'மனித கடத்தல்' பற்றியும் நவாப் சின்ஹாவிடம் கேட்டார்.

    ஜம்மு காஷ்மீர் பெண்களின் கவுரவம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் துறை ஏதேனும் உள்ளதா? இது அரசியல் பிரச்சினை அல்ல, பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாடு பற்றியது என்று கூறினார்.

    • விடுமுறையில் வந்த ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.
    • ஜாவித் குடும்பத்தினர் அச்சம் அடைந்துள்ளனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டம் அஜதல் பகுதியை சேர்ந்தவர் ஜாவித் அகமது வானி (வயது 25). ராணுவ வீரரான இவர் லடாக்கின் லே பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் விடுப்பில் சொந்த ஊருக்கு வந்தார்.

    நேற்று மாலை அவர் அஜதலில் இருந்து மளிகை பொருட்கள் வாங்க, காரில் சவல்ஹம் பகுதிக்கு சென்றார். இரவு வெகுநேரமாகியும் ஜாவித் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் ஜாவித் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர்.

    ஆனால், செல்போன் இணைப்பு கிடைக்கவில்லை. இதனால், குடும்பத்தினர் அருகில் உள்ள கிராமங்களில் ஜாவித்தை தேடினர். அப்போது, பரன்ஹல் என்ற கிராமத்தின் அருகே ஜாவித் கார் நிறுத்தப்பட்டிருந்தது. காரின் கதவுகள் திறக்கப்பட்டிருந்தது. காரின் இருக்கையில் ரத்தக்கறை இருந்தது. மேலும், ஜாவித்தின் செருப்புகளும் கார் அருகே கிடந்தன. இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து போலீசார், ராணுவம், பாதுகாப்புப்படையினர் விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ராணுவ வீரர் ஜாவித்தை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால் கார் கண்டு பிடிக்கப்பட்ட பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், அவர் கடத்தப்பட்டதை போலீசார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஏற்கனவே இந்த பகுதியில் விடுமுறையில் வந்த ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் ஜாவித் குடும்பத்தினர் அச்சம் அடைந்துள்ளனர்.

    • லடாக் கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரல் எஸ்.டி சிங் ஜம்வால் காவல் நிலையத்தை திறந்து வைத்தார்.
    • சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்கும்.

    யூனியன் பிரதேசமான லடாக்கில் முதன்முதலில் மகளிர் காவல் நிலையம் செயல்படத் தொடங்கப்பட்டுள்ளது.

    லடாக் கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரல் எஸ்.டி சிங் ஜம்வால், பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கையாளும் காவல் நிலையத்தை திறந்து வைத்தார்.

    இதுகுறித்த அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,"இந்த மகளிர் காவல் நிலையம் தேவைப்படும் பெண்களுக்கு உடனடி உதவி மற்றும் ஆதரவை உறுதி செய்வதற்காக 24 மணிநேரமும் செயல்படும். கூடுதலாக, சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்கும் வள மையமாக இது செயல்படும்.

    கார்கிலில் மகளிர் காவல் நிலையத்தை நிறுவுவது ஒரு முக்கியமான தருணத்தைக் குறிக்கிறது. ஏனெனில், இது அப்பகுதியில் பெண்கள் எதிர்கொள்ளும் கவலைகள் மற்றும் சவால்களை நிவர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும்" என்றார்.

    மேலும், லடாக் காவல்துறை தலைவர் கூறியதாவது:-

    கார்கிலில் மகளிர் காவல் நிலையம் திறப்பு விழா என்பது அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். இந்த முயற்சியானது பெண்கள் தங்கள் கவலைகள் உணர்வுபூர்வமாகவும் விரைவாகவும் தீர்க்கப்படும் என்பதை அறிந்து அதிக நம்பிக்கையுடன் காவல்துறையை அணுக உதவும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியில் 2 பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர்.
    • கைதான 2 பேரும் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நாச வேலைகளில் ஈடுபடாமல் தடுப்பதற்காக பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியில் நேற்று இரவு 2 பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அவர்களை பாதுகாப்பு படையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நவீனரக துப்பாக்கிகள், மற்றும் வெடிப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்,அவர்கள் சதி திட்டத்திற்காக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றார்களா? என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. கைதான 2 பேரும் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    • கத்துவா மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு, நிலச்சரிவால் பல்வேறு இடங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
    • ஜம்மு மற்றும் காஷ்மீரில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு 8 பேர் இன்று உயிரிழந்து உள்ளனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு ள்ளது. இதனால் சாலை பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில், கத்துவா மாவட்டத்தின் மேல்மட்ட பகுதியில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு 8 பேர் இன்று உயிரிழந்துள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    தகவலறிந்து போலீசார் மற்றும் உள்ளூர் மக்கள் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

    • கடந்த வாரம் நடைபெற்ற சம்பவத்தில் 3 பீகார் மாநில தொழிலாளர்கள் காயம்
    • இன்று காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

    ஜம்மு-காஷ்மீரில் சமீப காலமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் இதுபோன்ற நடத்திய தாக்குதலில் 3 பீகார் மாநில தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.

    இந்நிலையில் அனந்த்நாக்கில் வெளிமாநிலத்தைச் சேர்நத தொழிலாளர்கள்மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் இரண்ட பேர் காயம் அடைந்துள்ளனர். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சம்பவம் நடைபெற்ற இடத்தை சுற்றிவளைத்து ஜம்மு-காஷ்மீர் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • புல்வாமா, சோபியான் ஆகிய இடங்களில் கடந்த ஆண்டு திரையரங்குகள் திறக்கப்பட்டன
    • பந்திபோரா, கதர்பால், குல்கால் மாவட்டங்களில் தலா ஒரு திரையரங்குகள் திறக்கப்படும்

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சுமார் 30 வருடங்களுக்குப் பிறகு சினிமா அரங்குகள் திறக்கப்பட்டுள்ளது. புல்வாமா, சோபியான் ஆகிய இடங்களில் ஏற்கனவே சினிமா திரையரங்குகள் கடந்த வருடம் திறக்கப்பட்டன. கடந்த சில நாட்களுக்கு முன் பாரமுல்லாவில் திறக்கப்பட்டது.

    இந்த நிலையில் பந்திபோரா, கதர்பால், குல்காம் மாவட்டங்களில் தலா ஒரு திரையரங்குகள் திறக்கப்படும் என ஜம்மு-மாநில துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்கா தெரிவித்துள்ளார்.

    மேலும், ''பாகிஸ்தான் மற்றும் ஒரு சிலரின் சுற்றுச்சூழல் அமைப்பு பல வருடங்களாக ஜம்மு-காஷ்மீர் மக்களின் கனவுகளை அழிக்க முயற்சித்தன.

    ஆனால் தற்போது ஜம்மு- காஷ்மீர் மக்கள் மற்றும் இளைஞர்கள் புதிய கனவுகளை கொண்டுள்ளனர். புதிய சூழ்நிலை உருவாக உதவி புரிந்து வருகிறார்கள் என்பதை என்னால் கூறமுடியும். அமைதியான இடத்தில்தான் கலை உருவாகும் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். எங்கு அமைதி இல்லையே, அங்கு கலை இல்லை.

    ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட சூழ்நிலையால் கலைஞர்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால் இப்போது, ஜம்மு காஷ்மீரின் இழந்த பெருமையை மீண்டும் கொண்டுவர நமது கலைஞர்கள் புதிய ஆற்றலுடன் பணியாற்றி வருகின்றனர'' எனத் தெரிவித்தார்.

    ×