என் மலர்
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் வெளிமாநில தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு
- கடந்த வாரம் நடைபெற்ற சம்பவத்தில் 3 பீகார் மாநில தொழிலாளர்கள் காயம்
- இன்று காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி
ஜம்மு-காஷ்மீரில் சமீப காலமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் இதுபோன்ற நடத்திய தாக்குதலில் 3 பீகார் மாநில தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.
இந்நிலையில் அனந்த்நாக்கில் வெளிமாநிலத்தைச் சேர்நத தொழிலாளர்கள்மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் இரண்ட பேர் காயம் அடைந்துள்ளனர். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடைபெற்ற இடத்தை சுற்றிவளைத்து ஜம்மு-காஷ்மீர் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story






