என் மலர்tooltip icon

    குஜராத்

    • 6 பேரை சம்பவ இடத்திற்கு மீண்டும் அழைத்து வந்து கம்பத்தில் கட்டினர்
    • 6 பேரை சம்பவ இடத்திற்கு மீண்டும் அழைத்து வந்து கம்பத்தில் கட்டினர்

    குஜராத் மாநில கேடா (Kheda) மாவட்டத்தில் மடர் தாலுக்காவில் உள்ளது உந்தேலா கிராமம்.

    உந்தேலாவில் கடந்த 2022 அக்டோபர் அன்று குஜராத்தின் பிரபலமான நவராத்திரி பண்டிகையின் போது இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் பொருட்கள் சேதம், கல்லெறிதல் உள்ளிட்ட விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றது.

    உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் அங்கு வந்தனர்.

    மோதலில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்ட காவல்துறையினர் 6 பேரை தேடி கைது செய்தனர். அவர்களை மீண்டும் மோதல் நடைபெற்ற இடத்திற்கு அழைத்து வந்து அங்குள்ளவர்கள் முன்னிலையில் அங்குள்ள ஒரு மின்சார கம்பத்தில் கட்டி வைத்து ஒரு கம்பால் அடித்தனர்.

    காவலர்கள் அடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலானது.

    பாதிக்கப்பட்ட அந்த 6 பேரும் தங்களை அடித்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடைசியாக நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது காவல்துறையினர் அளிக்க முன் வந்த இழப்பீட்டையும் அவர்கள் ஏற்க மறுத்தனர்.

    இச்செயலுக்காக காவல்துறையினர் பாதிப்புக்குள்ளான 6 பேரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பை கோரியது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், இன்று இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுஃபேயா மற்றும் கீதா கோபி தமது தீர்ப்பை அறிவித்தனர்.

    அதில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

    நடந்தது ஒரு மனிதாபிமானமற்ற செயல். காவல் ஆய்வாளர் பர்மர், துணை ஆய்வாளர் குமாவத், தலைமை கான்ஸ்டபிள் லக்ஷ்மண்சிங் மற்றும் கான்ஸ்டபிள் ராஜுபாய் தாபி ஆகியோர் குற்றவாளிகளே. அந்த 4 காவல்துறையினரும் 14 நாட்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். ஒவ்வொருவரும் ரூ.2000 அபராதம் செலுத்த வேண்டும். பணத்தை செலுத்த தவறினால் மேலும் 3 நாள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும்.

    இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

    தீர்ப்பை அளித்த உயர் நீதிமன்றம், குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கு 90 நாட்கள் அவகாசமும் அளித்துள்ளது.

    காவல்துறையினரின் அத்துமீறலுக்கு இந்த தண்டனை போதுமானதல்ல என பெரும்பாலானோர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • சுமார் 3200 கி.மு. முதல் 2600 கி.மு. வரை சுமார் 500 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்ததாக நம்புகிறார்கள்.
    • குழந்தைகள் புதைக்கப்பட்ட சிறிய கல்லறைகள் உள்ளன. உடல்கள் மல்லாந்து வைக்கப்பட்டுள்ளன.

    இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தில், குறைந்த மக்கள் தொகை கொண்ட கட்ச் பகுதியில் உள்ள கிராமம் கதீயா. இங்கு ஒரு மணல் குன்று ஆராய்ச்சியாளர்களின் கண்களில்பட்டது. இந்த மணல் குன்றினை தொல்லியல் அறிஞர்கள் அகழாய்வு செய்தனர்.

    அப்போது அவர்கள் கண்ட காட்சி வியக்க செய்தது. மணல் குன்றின் உள்ளே பழங்கால குடியிருப்பு புதைந்து கிடப்பது போன்ற அடையாளங்கள் தென்பட்டன. இதை தொடர்ந்து கேரள பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்லியல் அறிஞர் ராஜேஷ் தலைமையில் இந்திய, சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் இந்த 40 ஏக்கர் பரப்பளவிலான தளத்தில் 3 கட்டமாக அகழாய்வு செய்தனர். அப்போது அது 5,300 ஆண்டுகள் பழமையான கல்லறைகள் என தெரியவந்தது. உலகின் ஆரம்பகால நகர நாகரிகங்களில் ஒன்றான சிந்து சமூகத்தைச் சேர்ந்த 500 கல்லறைகள் அதில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்தக் கல்லறைகளில் சுமார் 200 கல்லறைகள் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டுள்ளன.

    ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கப்படும் இந்தச் சமூகம், சுமார் 5,300 ஆண்டுகளுக்கு முன்பு தற்போதைய வடமேற்கு இந்தியா மற்றும் பாகிஸ்தானில் சுடு செங்கல் நகரங்களில் வாழ்ந்த எளிமையான விவசாயிகள் மற்றும் வணிகர்களால் நிறுவப்பட்டது இது சுமார் 3200 கி.மு. முதல் 2600 கி.மு. வரை சுமார் 500 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்ததாக அவர்கள் நம்புகிறார்கள்.

    இதுவரையிலான அகழ்வாராய்ச்சிகள் ஒரே ஒரு முழுமையான ஆண் மனித எலும்புக்கூட்டையும், மண்டை ஓடு துண்டுகள், எலும்புகள் மற்றும் பற்கள் உட்பட பகுதியளவில் பாதுகாக்கப்பட்ட எலும்பு க்கூட்டு எச்சங்களையும் மீட்டுள்ளனர்.மேலும் 100-க்கும் மேற்பட்ட வளையல்கள் மற்றும் 27 ஓடுகளால் ஆன மணிகள். பீங்கான் பாத்திரங்கள், கிண்ணங்கள், தட்டுகள், பானைகள், சிறிய குடங்கள், குவளை, களிமண் பானைகள், தண்ணீர் கோப்பைகள், பாட்டில்கள் மற்றும் ஜாடிகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

    இந்த கல்லறைகளில் தனித்துவமான அம்சங்கள் உள்ளன, இதில் சில முட்டை வடிவமானவை. மற்றவை செவ்வக வடிவமானவை. குழந்தைகள் புதைக்கப்பட்ட சிறிய கல்லறைகள் உள்ளன. உடல்கள் மல்லாந்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அமில மண் காரணமாக பெரும்பாலான எலும்புகள் கரைந்துவிட்டன.

    எகிப்து மற்றும் மெசப டோமியாவில் உள்ள மேல் தட்டு மக்களின் இறுதிச் சடங்குகளைப் போலல்லாமல், இவர்களின் இறுதிச் சடங்குகள் எளிமையானவை இருந்தன. இறந்தவர்களுடன் எந்த நகைகளும் ஆயுதங்களும் வைக்கப்படவில்லை.

    இங்கு, பெரும்பாலான உடல்கள் துணியால் சுற்றி, செவ்வக வடிவிலான மரப் பெட்டிகளில் வைக்கப்பட்டன. கல்லறைக்குழி பெரும்பாலும் மண்பாண்ட பொருட்களால் நிரப்பப்பட்டிருக்கும், பின்னர் பெட்டி அதில் இறக்கப்படும் என்று விஸ்கான்சின் மடிசன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சிந்து சமவெளி நாகரிகத்தின் அறிஞரான ஜொனதன் மார்க் கெனோயர் கூறுகிறார். சிலர் வளையல்கள், மணிகள், அலங்காரப் பொருட்கள், செம்பால் செய்யப்பட்ட கண்ணாடியுடன் புதைக்கப்பட்டனர்.

    முதியவர்கள், அவர்கள் பயன்படுத்திய உணவைப் பரிமாறுவதற்கும் சேமிப்பதற்கும் பயன்படுத்தப்பட்ட வெவ்வேறு வகையான பாத்திரங்களுடன் புதைக்கப்பட்டுள்ளனர்,

    ஆனாலும் இந்த கல்லறைத் தளத்தில் பல மர்மங்கள் அடங்கி உள்ளன.

    இதன் ரகசியங்கள் என்ன? இங்கு புதைக்கப்பட்டவர்கள் யார்? என்ற கேள்விகளும் எழுகின்றன. இந்தக் கல்லறைகளில் காணப்படும் லாபிஸ் லாசுலி என்னும் நீல நிற கற்கள் தூரத்தில் உள்ள ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தது என்று கருதப்படுகிறது. கல்லறைகள் நன்றாக வரையறுக்கப்பட்ட கல் சுவர்களுடன் கட்டப்பட்டிருப்பது, மக்கள் கற்களைக் கொண்டு கட்டுவதில் தேர்ச்சி பெற்றிருந்ததைக் குறிக்கிறது. இங்கு கிடைத்த மனித உடல் எச்சங்களை வேதியியல் ஆய்வுகள் மற்றும் டி.என்.ஏ. பரிசோதனைகள் செய்தால் இங்கு வாழ்ந்து இறந்த ஆரம்பகால மக்கள் பற்றி மேலும் அறிய உதவும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

    • பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
    • அப்போது ரசிகர்கள் சிலர் முகமது ரிஸ்வானுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

    அகமதாபாத்:

    உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்தப் போட்டியின்போது, பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது ரசிகர்கள் சிலர், அவரை நோக்கி "ஜெய் ஸ்ரீராம்" என கோஷமிட்டனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணைய தளத்தில் பரவி வருகின்றன.

    விருந்தோம்பலுக்கு பெயர் போன இந்தியாவில், முகமது ரிஸ்வானுக்கு எதிராக ரசிகர்கள் கோஷமிட்டதற்கு பலரும் சமூக வலைதளத்தில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    • உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
    • அகமதாபாத்தில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டி இன்று நடைபெறுகிறது.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டி இன்று மதியம் நடைபெறுகிறது.

    இந்தப் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்குகிறது.

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 50 ஓவரில் 282 ரன்கள் சேர்த்தது.
    • அடுத்து ஆடிய நியூசிலாந்து 283 ரன்கள் எடுத்து வென்றது.

    அகமதாபாத்:

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 282 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஜோ ரூட்

    77 ரன்கள் எடுத்தார்.

    தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 36.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. டேவிட் கான்வே, ரச்சின் ரவீந்திரா ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி சதம் அடித்தனர்.

    இந்நிலையில், வெற்றிக்குப் பிறகு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரச்சின் ரவீந்திரா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    எனது பெற்றோர் பிறந்த ஊர் பெங்களூர். உண்மையில் அங்கு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை விளையாடுவதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். பாகிஸ்தானுக்கு எதிராக பெங்களூருவில் விளையாட இருக்கிறேன். இந்தப் போட்டியில் எனக்கு ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன்.

    பெங்களூர் என்றால் எனது குடும்பம் தான் நினைவுக்கு வரும். ஏனென்றால் நான் பெங்களூரில் எனது குடும்பத்துடன் நேரம் செலவிட்டுள்ளேன்.

    தந்தை ரவி கிருஷ்ணமூர்த்திக்கு கிரிக்கெட் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. இதனால்தான் ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் நினைவாக எனக்கு ரச்சின் ரவீந்திரா என்ற பெயரை சூட்டினார் என தெரிவித்தார்.

    • முதல் 2 ஆட்டங்களில் வென்றதால் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
    • நாங்கள் எதை நோக்கி செல்கிறோம் என்பது எங்களுக்கு தெரியும்.

    ராஜ்கோட்:

    ராஜ்கோட்டில் நேற்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி யில் இந்தியா தோல்வி அடைந்தது. முதல் 2 ஆட்டங்களில் வென்றதால் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

    இப்போட்டிக்கு பிறகு இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    நான் பார்முக்கு திரும்பியதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த 8 ஒரு நாள் போட்டிகளில் வெவ்வேறு சூழ்நிலைகளில் நாங்கள் நன்றாக விளையாடினோம். வெவ்வேறு சமயங்களில் சவாலுக்கு ஆளானோம். அந்த சவாலை ஏற்றுக் கொண்டு விளையாடினோம். துரதிஷ்டவசமாக நாங்கள் வெற்றி பெறவில்லை. ஆனால் இந்த ஆட்டத்தை அதிகம் பார்க்க போவதில்லை.

    உலக கோப்பைக்காக 15 பேர் கொண்ட அணியை பற்றி பேசும்போது, எங்களுக்கு என்ன தேவை, யார் சரியாக இருப்பார்கள் என்பதில் தெளிவாக இருக்கிறோம். நாங்கள் குழப்பமடையவில்லை. நாங்கள் எதை நோக்கி செல்கிறோம் என்பது எங்களுக்கு தெரியும்" என்றார்.

    • தொடக்க ஆட்ட வீரராக களமிறங்க ரோகித் சர்மா 81 ரன்களை குவித்தார்.
    • இந்தியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது.

    இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதில், முதலில் ஆஸ்திரேலிய அணி வீரரான டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். இதில் இருவரும் அரை சதம் அடித்தனர். டேவிட் வார்னர் 34 பந்துகளில் 56 ரன்களும், மிட்செல் மார்ஷ் 84 பந்துகளில் 96 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இவர்களை தொடர்ந்து விளையாடிய, ஸ்டீவன் ஸ்மித் 74 ரன்களும், மார்னஸ் லாபஸ்சாக்னே 72 ரன்களும், அலெக்ஸ் காரே 11 ரன்களும், கிளென் மேக்ஸ்வெல் 5 ரன்களும், கேமரன் கிரீன் 9 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பாட் கம்மின்ஸ் 19 ரன்களிலும், மிட்செல் ஸ்டார்க் ஒரு ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்நிலையில், இந்த போட்டியின் முதல் பாதியில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, இந்திய அணி 353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.

    தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினர்.

    இதில் ரோகித் சர்மா 81 ரன்களை குவித்தார். வாஷிங்டன் சுந்தர் 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    தொடர்ந்து, விராட் கோலி சதம் அடித்த 56 ரன்களிலும், ஷ்ரேயாஸ் ஐயர் 48 ரன்களிலும், கே.எல்.ராகுல் 26 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    இதேபோல், ரவீந்திர ஜடேஜா 35 ரன்களும், குல்தீப் யாதவ் 2 ரன்களிலும், முகமது சிராஜ் ஒரு ரன்களும் எடுத்து அடுத்தடுத்து அவுட்டாகினர்.

    பிரசித் கிருஷ்ணா ரன் எடுக்காமல் களத்தில் இருந்தார்.

    இந்நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில், இந்திய அணி 49.4 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்தது.

    இதனால், ஆஸ்திரேலிய அணி விதித்த வெற்றி இலக்கை எட்ட முடியாமல் இந்திய அணி தோல்வியடைந்தது.

    இருப்பினும், இந்தியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

    • நமது பெண்களின் பெயரில் லட்சக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டு பதிவு செய்யப்பட்டன.
    • எதிர்க்கட்சிகள் இடஒதுக்கீடு விவகாரத்தில் அரசியலில் ஈடுபடுகிறார்கள்.

    பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக நேற்று குஜராத் சென்றார். அங்குள்ள சோட்டடேபூர் மாவட்டத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் போடேலி நகரில் கல்வி தொடர்பாக ரூ.4,500 கோடி மதிப்பிலான திட்டங்கள் உள்பட ரூ.5,000 மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    பின்னர் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

    நான் உங்களுடன் கணிசமான நேரத்தை செலவிடுவதால், ஏழை மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நான் அறிவேன். அந்த பிரச்சினைகளை தீர்க்க நான் எப்போதும் முயற்சிக்கிறேன்.

    நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு நான்கு கோடி வீடுகளை நமது அரசு கட்டிக் கொடுத்துள்ளதால் இன்று நான் திருப்தி அடைகிறேன். முந்தைய அரசுகளைப் போல் ஏழைகளுக்கு வீடு என்பது வெறும் எண் அல்ல.

    ஏழைகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு கண்ணியம் வழங்க பாடுபடுகிறோம். ஏழைகளின் தேவைக்கேற்ப, அதுவும் இடைத்தரகர்கள் இல்லாமல் வீடுகளை கட்டி வருகிறோம்.

    நமது பெண்களின் பெயரில் லட்சக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டு பதிவு செய்யப்பட்டன. என் பெயரில் வீடு இல்லாவிட்டாலும், லட்சக்கணக்கான பெண் குழந்தைகளை எனது அரசு வீட்டு உரிமையாளர்களாக்கியது.

    உலக வங்கியின் தலைவர் (அஜய் பங்கா) சமீபத்தில் காந்திநகரில் உள்ள வித்யா சமிக்ஷா கேந்திராவிற்குச் சென்றார். வெளியூர் சந்திப்பின் போது, இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்ற மையங்களைத் தொடங்குமாறு அவர் என்னை வலியுறுத்தினார். மேலும், அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக உலக வங்கி இருக்க தயாராக உள்ளது.

    மூன்று தசாப்தங்களாக இழுபறி நிலையில் இருந்த புதிய தேசிய கல்விக் கொள்கை இறுதியாக தனது அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.

    எதிர்க்கட்சிகள் இடஒதுக்கீடு விவகாரத்தில் அரசியலில் ஈடுபடுகிறார்கள்

    அப்போது நான் முதல்வராகும் வரை, குஜராத்தில் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் எந்த அறிவியல் பள்ளியும் செயல்படவில்லை. அறிவியல் பள்ளிகள் இல்லையென்றால், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் எப்படி அனுமதி பெறுவீர்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
    • டேவிட் வார்னர் 34 பந்துகளில் 56 ரன்களும், மிட்செல் மார்ஷ் 84 பந்துகளில் 96 ரன்களும் எடுத்தனர்.

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    இதில், முதலில் ஆஸ்திரேலிய அணி வீரரான டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். இதில் இருவரும் அரை சதம் அடித்தனர். டேவிட் வார்னர் 34 பந்துகளில் 56 ரன்களும், மிட்செல் மார்ஷ் 84 பந்துகளில் 96 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இவர்களை தொடர்ந்து விளையாடிய, ஸ்டீவன் ஸ்மித் 74 ரன்களும், மார்னஸ் லாபஸ்சாக்னே 72 ரன்களும், அலெக்ஸ் காரே 11 ரன்களும், கிளென் மேக்ஸ்வெல் 5 ரன்களும், கேமரன் கிரீன் 9 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    பாட் கம்மின்ஸ் 19 ரன்களிலும், மிட்செல் ஸ்டார்க் ஒரு ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்நிலையில், இந்த போட்டியின் முதல் பாதியில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்தது.

    தொடர்ந்து, இந்திய அணி 353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ளது.

    • ரெயிலில் இருந்த பயணிகள் வேகவேகமாக வெளியேற்றப்பட்டனர்.
    • புறப்பட்ட சில நிமிடங்களில் ரெயிலின் ஜெனரேட்டர் பெட்டியில் தீ பிடித்தது.

    திருச்சியில் இருந்து குஜராத் நோக்கி சென்று கொண்டிருந்த ஹம்சாஃபர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குஜராத் மாநிலத்தின் வால்சத் ரெயில் நிலையத்தில் நின்று, அங்கிருந்து கிளம்பிய சில நிமிடங்களில் ரெயிலின் ஜெனரேட்டர் பெட்டியில் தீ பிடித்தது.

    ரெயில் பெட்டியில் இருந்து தீ வெளியேறுவதை பார்த்ததும், ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. பிறகு, ரெயிலில் இருந்த பயணிகள் வேகவேகமாக வெளியேற்றப்பட்டனர். மேலும் தீயை கட்டுப்படுத்தும் பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

    தீ விபத்திற்கு மின்கசிவு தான் காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் ரெயில் பெட்டியில் ஏற்பட்ட தீ உடனடியாக அணைக்கப்பட்டு விட்டதாக காவல் துறை துணை கண்காணிப்பாளர் கரண்ராஜ் வகெலா தெரிவித்து உள்ளார்.

    • பிரதமர் மோடியின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட உள்ளது.
    • சூரத் நகரில் உள்ள ஆட்டோ ரிக்சா ஓட்டுநர்கள் சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்தனர்.

    அகமதாபாத்:

    பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அவருடைய சொந்த குஜராத் மாநிலத்தில் சிறப்பாக கொண்டாடுவதற்கான நடவடிக்கைகளில் கட்சியினர் மற்றும் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இதன்படி, பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு சூரத் நகரில் உள்ள ஆட்டோ ரிக்சா ஓட்டுநர்கள், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்துள்ளனர்.

    அவர்களில் சிலர் 100 சதவீதம் தள்ளுபடியையும் அறிவித்து வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளனர்.

    இதுதொடர்பாக, குஜராத் எம்.எல்.ஏ. பூர்ணேஷ் மோடி கூறுகையில், பிரதமர் மோடியின் பிறந்தநாளில் ஆயிரம் ஆட்டோ ரிக்சா ஓட்டுநர்கள் 30 சதவீத தள்ளுபடியை அறிவித்துள்ளனர். பிரதமர் மோடியின் 73-வது பிறந்தநாளில் 100 சதவீதம் தள்ளுபடி வழங்கும் 73 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நன்றி என தெரிவித்தார்.

    • ஆட்கள் யாரும் இல்லாததை உறுதி செய்த திருடன், டிராக்டரின் பின் சக்கரத்தின் அருகில் நின்று கொண்டு டிராக்டரை ஆன் செய்துள்ளான்.
    • எதிர்பாராதவிதமாக டிராக்டர் முன்னோக்கி சென்றதால் திருடனின் கால் மீது அதன் சக்கரம் ஏறியது.

    திருடர்கள் திருட சென்ற இடத்தில் சமைத்து சாப்பிட்டது, தூங்கியதால் சிக்கியது போன்ற சம்பவங்களை கேள்விபட்டிருக்கிறோம். அந்த வகையில் குஜராத்தில் நடைபெற்ற ஒரு திருட்டு சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அங்குள்ள மொடோசா பகுதியில் டிராக்டர் ஷோரூம் ஒன்று இயங்கி வருகிறது. அங்கு விற்பனைக்காக நிறுத்தப்பட்டுள்ள டிராக்டர்களை கண்காணிப்பதற்காக சி.சி.டி.வி. கேமிராவும் பொருத்தப்பட்டிருந்தது. சம்பவத்தன்று இந்த ஷோரூமுக்குள் நுழைந்த திருடன் ஒருவன் ஒரு டிராக்டரை திருட திட்டமிட்டுள்ளார். ஆட்கள் யாரும் இல்லாததை உறுதி செய்த அந்த திருடன், டிராக்டரின் பின் சக்கரத்தின் அருகில் நின்று கொண்டு டிராக்டரை ஆன் செய்துள்ளான். ஆனால் எதிர்பாராதவிதமாக டிராக்டர் முன்னோக்கி சென்றதால் திருடனின் கால் மீது அதன் சக்கரம் ஏறியது.

    இதனால் சக்கரத்தில் சிக்கிய திருடன் கீழே விழவே அவன் மீது டிராக்டர் ஏறியது. ஆனாலும் அதிர்ஷ்டவசமாக திருடனுக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. இடுப்பை மட்டும் தேய்த்து கொண்டு, ஓடி சென்று டிராக்டர் மீது தாவி அமர்ந்து அதனை திருடி சென்றுவிட்டான். மறுநாள் டிராக்டர் நிறுவன ஊழியர்கள் அங்கு வந்த போது தான் திருட்டு நடைபெற்றது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை போலீசாரிடம் கொடுத்து புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×