என் மலர்tooltip icon

    அசாம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பராக் பள்ளத்தாக்கில் மனித வாழ்விடத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில் மிகப்பெரியது.
    • வனவிலங்கு ஆராய்ச்சியாளரும் பாதுகாவலருமான பிஷால் சோனார் தலைமை ஏற்றார்

    அசாமின் சில்சார் பகுதியில் சுமார் 100 கிலோ எடையுள்ள ராட்சத மலைப்பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. 17 அடி நீளமுள்ள, பர்மிய மலைப்பாம்பு பராக் பள்ளத்தாக்கில் மனித வாழ்விடத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில் மிகப்பெரியது.

    அசாம் மாநிலம் சில்வார் பகுதியில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பெண்கள் தங்கும் விடுதி அருகே சுமார் 100 கிலோ எடையுள்ள ராட்சத பாம்பு நுழைந்துள்ளது.

    கடந்த 18 ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கிட்டத்தட்ட 100 கிலோகிராம் எடையுள்ள 17 அடி நீளமுள்ள இந்த பர்மிய மலைப்பாம்புபராக் பள்ளத்தாக்கில் மனித வாழ்விடத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகப்பெரியது.

    பாம்பு வந்தது குறித்த தகவலின் பேரில் வனவிலங்கு ஆராய்ச்சியாளரும் பாதுகாவலருமான பிஷால் சோனார் மற்றும் அவரது உதவியாளர் திரிகல் சக்ரவர்த்தி உள்ளிட்ட 13 பேர் சேர்ந்து பாம்பை மீட்டனர். இதுதொடர்பான காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.  

    • குழந்தை திருமணத்திற்கு எதிரான போராட்டத்தை அசாம் தொடர்கிறது.
    • 335 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    அசாமில் குழந்தை திருமணங்களை தடுக்க அம்மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கட்டமாக 3,483 பேர் கைது செய்யப்பட்டு 4,515 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அக்டோபர் மாதத்தில் 915 பேர் கைது செய்யப்பட்டு 710 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    இந்த நிலையில் 3-ம் கட்டமாக நடந்த நடவடிக்கையில் 416 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக அம்மாநில முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    குழந்தை திருமணத்திற்கு எதிரான போராட்டத்தை அசாம் தொடர்கிறது. டிசம்பர் 21, 22-ந்தேதிகளில் இரவு தொடங்கப்பட்ட 3-வது கட்ட நடவடிக்கை களில், 416 பேர் கைது செய்யப்பட்டனர். 335 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட நபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள். நாங்கள் தொடர்ந்து துணிச்சலான நடவடிக்கைகளை எடுப்போம். இந்த சமூகத் தீமையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தார்.

    கடந்த ஜூன் மாதம் நிஜுத் மொய்னா என்ற திட்டத்தை முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்தார். இதில் 11-ம் வகுப்பு முதல் முதுகலை வரை படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது.
    • பெண்கள் பிரிவில் இந்திய ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

    கவுகாத்தி:

    கவுகாத்தியில் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், இன்று நடந்த பெண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-தனிஷா கிரஸ்டோ ஜோடி, சீனாவின் லி ஹுவா, வாங் ஜி ஜோடியுடன் மோதியது.

    இந்தப் போட்டியில் இந்திய ஜோடி 21-18, 21-12 என்ற புள்ளிக்கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அன்மோல் கார்ப், சீனாவின் காய் யான் யானிடம் 21-14, 13-21, 19-21 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வி கண்டார்.

    • கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது.
    • இதில் இந்திய வீரரான சதீஷ்குமார் சாம்பியன் பட்டம் வென்றார்.

    கவுகாத்தி:

    கவுகாத்தியில் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் சதீஷ்குமார் கருணாகரன், சீனாவின் ஜூ ஜுவான் உடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் சதீஷ்குமார் 21-17, 21-14 என்ற புள்ளிக்கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார். இந்தப் போட்டி 44 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

    கடந்த ஆண்டு நடந்த ஒடிசா மாஸ்டர்ஸ் சூப்பர் 100 போட்டியில் சதீஷ்குமார் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கவுகாத்தியில் நடந்து வருகிறது.
    • இதில் இந்திய வீராங்கனை அன்மோல் அரையிறுதியில் வெற்றி பெற்றார்.

    கவுகாத்தி:

    கவுகாத்தியில் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்தியாவின் அன்மோல் கர்ப், சக வீராங்கனை மான்சி சிங்குடன் மோதினார்.

    இதில் அன்மோல் கர்ப் 21-19, 21-17 என்ற புள்ளிக்கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்தப் போட்டி வெறும் 40 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சதீஷ்குமார் 13-21, 21-14, 21-16 என்ற புள்ளிக்கணக்கில் சீன வீரரை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார்.

    இதேபோல், பெண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-தனிஷா கிரஸ்டோ ஜோடி, சீனாவின் கெங் ஷு லியாங்-வாங் டிங் கெ ஜோடியை 21-14, 21-14 என வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.

    • கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கவுகாத்தியில் நடந்து வருகிறது.
    • இதில் இந்திய வீராங்கனை காலிறுதியில் வெற்றி பெற்றார்.

    கவுகாத்தி:

    கவுகாத்தியில் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் அன்மோல் கர்ப், தாய்லாந்து வீராங்கனையுடன் மோதினார்.

    இதில் அன்மோல் கர்ப் 21-13, 22-24, 22-20 என்ற புள்ளிக்கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இந்தப் போட்டி சுமார் ஒரு மணி நேரம் 14 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

    • கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கவுகாத்தியில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் ரஜாவத் 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

    கவுகாத்தி:

    கவுகாத்தியில் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் தருண், சக வீரரான பிரியான்ஷு ரஜாவத்துடன் மோதினார்.

    இதில் தருண் 24-22, 15-21, 21-13 என்ற புள்ளிக்கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இந்தப் போட்டி சுமார் ஒரு மணி நேரம் 10 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

    • உணவகங்கள், விடுதிகள், பொது இடங்களிலும் மாட்டிறைச்சி சமைப்பதற்கும் உண்பதற்கும் தடை
    • கோயில்களை சுற்றி 5 கி.மீ. சுற்றளவில் கால்நடைகளை அறுப்பதும், இறைச்சியை விற்பதும் குற்றமாகும்.

    அசாம் மாநிலத்தில் மாட்டிறைச்சிக்குத் தடை விதிப்பதாக அம்மாநில முதலமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    அசாமில் திருத்தம் செய்யப்பட்ட கால்நடை பாதுகாப்புச் சட்டம் 2021ன் படி இந்துக்கள், ஜைனர்கள், சீக்கியர்கள் பெரும்பான்மையாக வசிக்கக் கூடிய இடங்கள் மற்றும் கோயில்களை சுற்றி 5 கி.மீ. சுற்றளவில் கால்நடைகளை அறுப்பதும், இறைச்சியை விற்பதும் குற்றமாகும்.

    இந்த சட்டத்தை திருத்தி புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாக அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார். அதன்படி அசாம் மாநிலத்தில் உணவகங்கள், விடுதிகள், பொது இடங்களிலும் மாட்டிறைச்சி சமைப்பதற்கும் உண்பதற்கும் தடை விதிக்கப்படுகிறது.

    இந்த தடையை மீறுபவர்களுக்கு 3 முதல் 8 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.3 முதல் 5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாட்டிறைச்சி தடைக்கு அசாம் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    • கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கவுகாத்தியில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் ரஜாவத் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    கவுகாத்தி:

    கவுகாத்தியில் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பிரியான்ஷு ரஜாவத், சக வீரரான ஆர்யா பிவ்பதகியுடன் மோதினார்.

    இதில் ரஜாவத் 22-20, 21-14 என்ற புள்ளிக்கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இந்தப் போட்டி சுமார் 35 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

    இதேபோல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் தன்வி சர்மா முதல் சுற்றில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • அசாம் மாநிலத்தின் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
    • இதில் கரீம்கஞ்ச் மாவட்டத்தை ஸ்ரீபூமி என பெயர் மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தின் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமை தாங்கினார்.

    இந்தக் கூட்டத்தில் அசாம் மாநிலத்தின் கரீம்கஞ்ச் மாவட்டத்தை ஸ்ரீபூமி என பெயர் மாற்றுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக, அசாம் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா கூறுகையில், 100 ஆண்டுகளுக்கு முன்பு, கபிகுரு ரவீந்திரநாத் தாகூர் நவீன கரீம்கஞ்ச் மாவட்டத்தை ஸ்ரீபூமி - மா லட்சுமியின் நிலம் என விவரித்தார். இன்று, அசாம் அமைச்சரவை நமது மக்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி உள்ளது.

    மாவட்டத்தின் பெயரை மாற்றும் நடவடிக்கை, மாவட்ட மக்களின் எதிர்பார்ப்புகளையும், அபிலாஷைகளையும் பிரதிபலிக்கும் என தெரிவித்தார்.

    • அசாம் மாநிலம் கம்ரூப் மாவட்ட பகுதியில் நடந்ததாக கூறப்படுகிறது.
    • காண்டாமிருகம் தொடர்ந்து வெறிகொண்டு ஓடியபடி கண்ணில் கண்டவர்களையெல்லாம் துரத்துகிறது.

    சிறுத்தைகள், புலிகள் போன்றவையும், யானைகளும்கூட ஊருக்குள், தோட்ட பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்வதை கேள்விப்பட்டு இருப்போம். தாவர உண்ணி விலங்குகளான காண்டாமிருகம் பெரும்பாலும் ஊர்ப்புறத்தில் நுழைவது இல்லை. ஆனால் ஆக்ரோஷமான அவை ஊருக்குள் நுழைந்தால் என்ன நடக்கும் என்பதை சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ள ஒரு வீடியோ படம்பிடித்து காட்டுகிறது.

    கிராம மக்கள் பீதி கிளம்ப ஓடுவதை வீடியோவில் பார்க்க முடிகிறது. இந்த சம்பவம், அசாம் மாநிலம் கம்ரூப் மாவட்ட பகுதியில் நடந்ததாக கூறப்படுகிறது. சிறிய ஊரை ஒட்டிய தோட்ட பகுதிக்குள் இருந்து அந்த காண்டாமிருகம் சாலைக்கு ஏறி வருகிறது. எதிரே ஒரு மனிதரை கண்டதும் அது ஆக்ரோஷம் அடைந்து அவரை தாக்க ஓடுகிறது.

    இதனால் பீதி அடைந்த அந்த நபர் மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு தப்பித்து ஓடுகிறார். காண்டாமிருகம் தொடர்ந்து வெறிகொண்டு ஓடியபடி கண்ணில் கண்டவர்களையெல்லாம் துரத்துகிறது. மக்கள் பீதியில் கூச்சலிடுவதும் வீடியோவில் பதிவாகி உள்ளது. கேமராவில் படம் பிடித்தவரும் காண்டாமிருகத்திற்கு போக்கு காட்டியே வீடியோவை பதிவு செய்து உள்ளார். 2 நாட்களில் இந்த வீடியோ 2 கோடியே 67 லட்சம் தடவை ரசிக்கப்பட்டு உள்ளது.



    • நாகாலாந்தின் பல்வேறு பகுதிகளில் நாய் இறைச்சி பொதுமக்கள் சாப்பிடுகின்றனர்.
    • பிற மாநிலங்களில் இருந்து நாகாலாந்திற்கு நாய்களை இறைச்சிக்காக கடத்துகின்றனர்.

    அசாம் மாநிலத்தில் இறைச்சிக்காக சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 19 நாய்களை போலீசார் மீட்டனர். நாய்களை கடத்தியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்

    இந்த நாய்களை அசாம் மாநிலத்தில் இருந்து நாகாலாந்திற்கு கொண்டு சென்று நாய் இறைச்சிக்கு விற்பனை செய்ய கைது செய்யப்பட்டவர்கள் திட்டமிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    நாகாலாந்தின் பல்வேறு பகுதிகளில் நாய் இறைச்சி பொதுமக்கள் சாப்பிடுகின்றனர். 2020 ஆம் ஆண்டு நாய் இறைச்சி வியாபாரத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால் 2023 ஆம் ஆண்டு கவுகாத்தி உயர் நீதிமன்றம் அந்த உத்தரவை ரத்து செய்தது.

    நாகாலாந்தில் நாய் இறைச்சி சாப்பிடப்பட்டாலும் பிற மாநில மக்கள் நாய் இறைச்சியை சாப்பிடுவதில்லை. ஆகையால் பிற மாநிலங்களில் இருந்து நாகாலாந்திற்கு நாய்களை இறைச்சிக்காக கடத்தும் போக்கு அண்மைக்காலங்களில் அதிகரித்துள்ளது.

    ×