VIDEO: 17 அடி நீளம்.. 100 கிலோ எடை.. பல்கலைக்கழக லேடீஸ் ஹாஸ்டல் அருகே ராட்சத மலைப்பாம்பு

பராக் பள்ளத்தாக்கில் மனித வாழ்விடத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில் மிகப்பெரியது.வனவிலங்கு ஆராய்ச்சியாளரும் பாதுகாவலருமான பிஷால் சோனார் தலைமை ஏற்றார்
VIDEO: 17 அடி நீளம்.. 100 கிலோ எடை.. பல்கலைக்கழக லேடீஸ் ஹாஸ்டல் அருகே ராட்சத மலைப்பாம்பு
Published on: 

அசாமின் சில்சார் பகுதியில் சுமார் 100 கிலோ எடையுள்ள ராட்சத மலைப்பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. 17 அடி நீளமுள்ள, பர்மிய மலைப்பாம்பு பராக் பள்ளத்தாக்கில் மனித வாழ்விடத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில் மிகப்பெரியது.

அசாம் மாநிலம் சில்வார் பகுதியில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பெண்கள் தங்கும் விடுதி அருகே சுமார் 100 கிலோ எடையுள்ள ராட்சத பாம்பு நுழைந்துள்ளது.

கடந்த 18 ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கிட்டத்தட்ட 100 கிலோகிராம் எடையுள்ள 17 அடி நீளமுள்ள இந்த பர்மிய மலைப்பாம்புபராக் பள்ளத்தாக்கில் மனித வாழ்விடத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகப்பெரியது.

பாம்பு வந்தது குறித்த தகவலின் பேரில் வனவிலங்கு ஆராய்ச்சியாளரும் பாதுகாவலருமான பிஷால் சோனார் மற்றும் அவரது உதவியாளர் திரிகல் சக்ரவர்த்தி உள்ளிட்ட 13 பேர் சேர்ந்து பாம்பை மீட்டனர். இதுதொடர்பான காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com