என் மலர்
ஆந்திர பிரதேசம்
- ஜனவரி 2-ந்தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
- சொர்க்கவாசல் தரிசனத்தில் 10 நாட்கள் அனுமதி.
திருப்பதி :
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி மாதம் 2-ந் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
அன்று காலை சுப்ரபாத சேவை முடிந்த பின்னர் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்காக ஸ்ரீ வாணி அறக்கட்டளை மூலம் தினமும் 2 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் 20,000 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டன.
இந்த நிலையில் ஜனவரி 2-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை ரூ.300 கட்டணத்தில் ஆன்லைன் தரிசன டிக்கெட்டில் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் 10 நாட்களுக்கு 2.50 லட்சம் டிக்கெட்டுகள் இன்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
- ஏழுமலையானை தரிசனம் செய்யும் பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றி உண்டியலில் காணிக்கை செலுத்துகிறார்கள்.
- 2022 ஏப்ரல் மாதம் தொடங்கி நவம்பர் வரை ரூ.1029 கோடி வசூல் செய்துள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி:
திருப்பதி சென்று வந்தால் வாழ்வில் திருப்பம் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் தினமும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் சென்று வருகின்றனர். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர்.
2021ல் இந்தியாவில் கொரோனா பரவ துவங்கி வேகமெடுத்தது. இதனால் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதன்பிறகு கொரோனா கட்டுக்குள் வந்தபோது கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்க துவங்கினர். தற்போது பெரும்பாலான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் தினமும் கோவிலில் ஆர்வமாக குவிந்து வருகின்றனர். குடும்பத்துடன் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இவ்வாறு தரிசனம் செய்யும் பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றி உண்டியலில் காணிக்கை செலுத்துகிறார்கள். தங்கம், வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள், பணத்தை காணிக்கையாக வழங்கி வருகின்றனர். மேலும், இ-உண்டியல் மூலம் ஆன்லைனிலும் பக்தர்கள் தினமும் லட்சக்கணக்கில் காணிக்கை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 8 மாதங்களில் ரூ.1000 கோடியை கடந்ததாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 2022 ஏப்ரல் மாதம் தொடங்கி நவம்பர் வரை ரூ.1029 கோடி வசூல் செய்துள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
- இந்தியாவில் அதிக பாலியல் தொழிலாளர்கள் உள்ள மாநிலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.
- இந்தியாவில் அதிக பாலியல் தொழிலாளர்கள் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.
திருப்பதி:
இந்தியாவில் பாலியல் தொழிலாளர்கள் தொடர்பான சில முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டது.
அதன்படி பூர்வீக பாலியல் தொழிலாளர்கள் அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் முதல் 3 இடத்தில் தென்மாநிலங்கள் உள்ளன.
இந்தியாவில் எச்.ஐ.வி.யை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக நாட்டில் உள்ள பாலியல் தொழிலாளர்களும் கணக்கில் கொள்ளப்படுகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் சார்பில் சில ஆய்வுகள் மேற்கொண்டது. அதன்படி புலம்பெயர் பாலியல் தொழிலாளர்கள், பூர்வீக பாலியல் தொழிலாளர்கள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டன.
இந்நிலையில் இந்தியாவில் அதிக பாலியல் தொழிலாளர்கள் உள்ள மாநிலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி பூர்வீக பாலியல் தொழிலாளர்கள் அடிப்படையிலும், பூர்வீகம் மற்றும் புலம்பெயர் பாலியல் தொழிலாளர்கள் என 2 வகைகளில் மாநிலங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி பூர்வீக பாலியல் தொழிலாளர்கள் அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் முதல் 3 இடத்தில் தென்மாநிலங்கள் உள்ளன. 1.33 லட்சம் பூர்வீக பாலியல் தொழிலாளர்களுடன் ஆந்திரா முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து கர்நாடகா 1.16 லட்சம் மற்றும் தெலுங்கானாவில் 1 லட்சம் பேர் என அடுத்தடுத்த இடத்தில் உள்ளது.
புலம் பெயர்ந்த மற்றும் பூர்வீக பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கையை பொறுத்தமட்டில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இங்கு மொத்தம் 6.6 லட்சம் பேர் பாலியல் தொழில் செய்கின்றனர்.
இதன்மூலம் இந்தியாவில் அதிக பாலியல் தொழிலாளர்கள் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக 2.3 லட்சம் பாலியல் தொழிலாளர்களுடன் குஜராத் 2வது இடத்திலும், குஜராத்தை விட சற்று குறைந்து டெல்லி 3வது இடத்திலும் உள்ளது.
தென்மாநிலங்களில் புலம்பெயர்ந்த பாலியல் தொழிலாளர்கள் குறைவாக உள்ளதோடு, பூர்வீகமாக வசிப்பவர்கள் பாலியல் தொழிலாளர்களாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஜனவரி 2-ந்தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
- சொர்க்கவாசல் தரிசனத்தில் 10 நாட்கள் அனுமதி.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி மாதம் 2-ந் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
அன்று காலை சுப்ரபாத சேவை முடிந்த பின்னர் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்காக ஸ்ரீ வாணி அறக்கட்டளை மூலம் தினமும் 2 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் நேற்று 20,000 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டன.
இந்த நிலையில் ஜனவரி 2-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை ரூ.300 கட்டணத்தில் ஆன்லைன் தரிசன டிக்கெட்டில் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் 10 நாட்களுக்கு 2.50 லட்சம் டிக்கெட்டுகள் நாளை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
- லாக்கரில் பல கோடி மதிப்பிலான 4 வைர நெக்லஸ்கள் மற்றும் தங்க நகைகள் காணாமல் போனது.
- வடமாநில கொள்ளை கும்பல் கொள்ளையில் ஈடுபட்டதா என வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் பவன் குமார். இவர் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள பிலிம் நகரில் தங்க, வைர நகை விற்பனை மற்றும் தயாரிக்கும் பட்டறை நடத்தி வருகிறார்.
இவர் குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து தங்க நகை தயாரிக்கும் மூலப் பொருட்களை வாங்கி வந்து ஆர்டரின் பேரில் தங்க, வைர நகைகள் செய்து கடைகளுக்கு சப்ளை செய்து வருகிறார். மேலும் நகை பட்டறை அருகிலேயே நகைக்கடையை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று கடையை மூடிவிட்டு மறு நாள் காலை கடையை திறந்த போது கடையில் இருந்த லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். லாக்கரில் பல கோடி மதிப்பிலான 4 வைர நெக்லஸ்கள் மற்றும் தங்க நகைகள் காணாமல் போனது.
இது குறித்து பவன் குமார் பஞ்சாரா ஹில்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
மிகவும் வலிமையான இரும்பு லாக்கரை கொள்ளையர்கள் எப்படி உடைத்து அதில் இருந்த நகைகளை திருடினார்கள். வடமாநில கொள்ளை கும்பல் கொள்ளையில் ஈடுபட்டதா என வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 5 மணிநேரம் தரிசனம் நிறுத்தப்படுகிறது.
- ஜனவரி 2-ந்தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி 2-ந் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் என்னும் பரமபத வாசல் திறக்கப்பட உள்ளது. ஏழுமலையான் கோவிலில் சங்கராந்தி, தீபாவளி ஆஸ்தானம், பிரம்மோற்சவ விழா மற்றும் முக்கிய பண்டிகைகளின் போது கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி வரும் 27-ந் தேதி கோவிலை சுத்தம் செய்யும் ஆழ்வார் திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி, அன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை மூலவர் மீது பட்டு துணியால் மூடப்படும்.
கருவறை, ஆனந்த நிலையம், கொடிமரம், யோக நரசிம்ம சாமி, வகுலமாதா, பாஷ்யகாரல சன்னதிகள், சம்பங்கி மண்டபம், ரங்கநாதர் மண்டபம், மகாதுவாரம் என அனைத்து இடங்களும் தூய்மைபடுத்தும் பணிகள் நடைபெறும். பின்னர் பச்சை கற்பூரம், மஞ்சள், கிச்சலிகட்டை உட்பட பல்வேறு மூலிகை பொருட்கள் கொண்டு தயார் செய்யப்பட்ட கலவை கோவில் முழுவதும் தெளிக்கப்படும்.
கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி, தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட உள்ளது. அன்று காலை 11 மணிக்கு பிறகு வழக்கம்போல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் 5 மணிநேரம் தரிசனம் நிறுத்தப்படுகிறது.
திருப்பதியில் நேற்று 63,145 பேர் தரிசனம் செய்தனர். 22,411 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினார். ரூ.4.39 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- ஆசிரியர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் மாணவரின் பெற்றோர் கேட்க மறுத்தனர்.
- உங்களின் வறுமை நிரந்தரமாக நீங்கவே, நான் உங்களை வற்புறுத்துகிறேன் என்று கல்வியின் முக்கியத்துவத்தை புரிய வைத்தார்.
ஐதராபாத்:
தெலங்கானா மாநிலம், சித்திபேட்டை மாவட்டம், பெஜ்ஜிங்கி உயர்நிலைப்பள்ளியில் மொத்தம் 64 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
இதில், வரும் மார்ச் மாதத்தில் 6 மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ளனர். இவர்களில் நவீன் என்ற மாணவன் கடந்த 10 நாட்களாக பள்ளிக்கு வரவில்லை. தலைமையாசிரியர் உத்தரவின் பேரில், ஆங்கில ஆசிரியர் பிரவீன் குமார், நவீன் வீட்டிற்கு சென்று விசாரித்தார்.
குடும்ப வறுமை காரணமாக நவீனை பள்ளிக்கு அனுப்ப அவனது பெற்றோர் மறுத்துவிட்டனர்.
ஆசிரியர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் மாணவரின் பெற்றோர் கேட்க மறுத்தனர். இதனால், மாணவரின் வீட்டுமுன் தரையில் அமர்ந்து ஆசிரியர் பிரவீன் குமார் தர்ணாவில் ஈடுபட்டார்.
உங்களின் வறுமை நிரந்தரமாக நீங்கவே, நான் உங்களை வற்புறுத்துகிறேன் என கூறி கல்வியின் முக்கியத்துவத்தை புரிய வைத்தார்.
அதன் பிறகு நவீனை பள்ளிக்கு அனுப்ப அவனது பெற்றோர் ஒப்புக் கொண்டனர். நவீனை பள்ளிக்கு அழைத்து வந்த பிரவீன் குமாரை, தலைமை ஆசிரியர் உட்பட பலரும் பாராட்டினர்.
- வெளிநாட்டிலிருந்து வந்த பெண்ணிற்கு புதிய வகை கொரோனா தொற்று பரவி உள்ளதால் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இளம்பெண்ணின் குடும்பத்தாரையும் தனிமைப்படுத்தி அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் அயனவள்ளி, நெடுநூரி சவரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் குவைத்தில் வேலை செய்து வந்தார்.
இவர் கடந்த 19-ந்தேதி குவைத்தில் இருந்து விமான மூலம் விஜயவாடா கண்ணவரம் விமான நிலையத்திற்கு வந்து இறங்கினார். விமான நிலையத்தில் இருந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் இளம்பெண்ணுக்கு கொரோனா தொற்று உள்ளதா என ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் இளம்பெண் தனது குடும்பத்தினருடன் காரில் வீட்டிற்கு சென்றார்.
நேற்று மாலை பரிசோதனை முடிவில் இளம்பெண்ணுக்கு புதிய வகை ஒமைக்ரான் தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இளம்பெண்ணை கோண சீமா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் இளம்பெண்ணின் குடும்பத்தாரையும் தனிமைப்படுத்தி அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இளம்பெண்ணின் குடும்பத்தார் யார் யாருடன் தொடர்பில் இருந்தார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில் வெளிநாட்டிலிருந்து வந்த பெண்ணிற்கு புதிய வகை கொரோனா தொற்று பரவி உள்ளதால் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஜனவரி 2-ந்தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
- ஸ்ரீ வாணி டிரஸ்ட் டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகின்ற ஜனவரி மாதம் 2-ந் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசி நாட்களில் ஏழுமலையானை தரிசனம் செய்தால், துன்பங்கள் நீங்கி, பூர்வ ஜென்ம புண்ணியம் கிடைக்கும் என்பதால் திருப்பதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம். வைகுண்ட ஏகாதசி நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்பதால் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
தற்போது ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டில் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் என தினமும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் வைகுண்ட ஏகாதசி தொடங்கும் 2 ந்தேதியில் இருந்து 11-ந் தேதி வரை தினமும் 2000 பக்தர்கள் வீதம் 10 நாட்களுக்கு 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ஸ்ரீ வாணி டிரஸ்ட் டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டன. அதன்படி ஸ்ரீ வாணி டிரஸ்ட்க்கு ரூ.10 ஆயிரமும், தரிசனத்திற்கு ரூ.300 என ரூ.10,300 செலுத்தி தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் பக்தர்கள் பதிவு செய்தனர்.
இந்த டிக்கெட் பெற்ற பாக்தர்கள் மகா லகு தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
திருப்பதியில் நேற்று 68,469 பேர் தரிசனம் செய்தனர். 27,025 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.14 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- கொரோனா தொற்று பரவியதால் கணவன், மனைவி, மகள் ஆகிய 3 பேரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தனர்.
- வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்ததால் இருவருக்கும் லேசாக மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், குடியேறு பகுதியை சேர்ந்தவர் சூரியபாபு. கூலி தொழிலாளி. இவரது மனைவி மணி. மகள் துர்கா பவானி. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று பரவியதால் கணவன், மனைவி, மகள் 3 பேரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தனர். தொற்று பரவல் குறைந்ததை அடுத்து சூரியபாபு மட்டும் வேலைக்கு சென்று வந்தார்.
ஆனால் சூரியபாபுவின் மனைவி, மகள் இருவரும் வீட்டை விட்டு வெளியே வராமலும் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமலும் தவிர்த்து வந்தனர். தாயும் மகளும் கடந்த 3 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்ததால் அவர்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டது.
உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக சூரியபாபு அழைத்தார்.
ஆனால் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வர மறுப்பு தெரிவித்தனர். இதுகுறித்து காக்கிநாடா அரசு ஆஸ்பத்திரியில் சூரியபாபு தெரிவித்தார். டாக்டர்கள் மற்றும் நர்சுகள் சூரியபாபு வீட்டிற்கு வந்து தாயும், மகளையும் ஆஸ்பத்திரிக்கு அழைத்தனர்.
அப்போது அவர்கள் உறவினர்கள் தங்களை கொலை செய்வதற்காக ஆட்களை அனுப்பி இருப்பதாக கூறி கதவை திறக்க மறுப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று இருவரையும் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி சென்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து வருகின்றனர். வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்ததால் இருவருக்கும் லேசாக மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
- இறந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி தொகை அறிவித்தார்.
- நிவாரணத் தொகையில் பாதி பணத்தை கேட்ட அமைச்சரை கண்டித்து எதிர்க் கட்சிகள் கண்டனம்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம் சச்சினபள்ளியை சேர்ந்தவர்கள் அணில், வீர பிரம்மம், கொண்டல் ராவ். இவர்கள் 3 பேரும் கடந்த அக்டோபர் மாதம் 25-ந் தேதி தனியார் ஓட்டல் அருகே உள்ள பாதாள சாக்கடையில் இறங்கி அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது விஷவாயு தாக்கி 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இறந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி தொகை அறிவித்தார்.
முதலமைச்சர் அறிவித்த நிவாரணத் தொகையை பெறுவதற்காக நீர்வளத்துறை அமைச்சர் அம்பாடி ராம் பாபுவிடம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சென்றனர்.
அப்போது அவர் ரூ 2. 50 லட்சம் கொடுத்தால் தான் காசோலையை தர முடியும் என திருப்பி அனுப்பி உள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் இது குறித்து அப்பகுதியில் உள்ள ஜனசேனா கட்சி நிர்வாகிகளிடம் தனது மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் காசோலையை தராமல் கமிஷன் கேட்பதாக தெரிவித்தனர்.
நிவாரணத் தொகையில் பாதி பணத்தை கேட்ட அமைச்சரை கண்டித்து ஜனசேனா கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்தனர்.
ஜெகன்மோகன் ஆட்சியில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது சாதாரணமாகிவிட்டது.
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
- திருப்பதி அலிப்பிரி அருகே மலை அடிவாரத்தில் வன உயிரியல் பூங்கா அருகே ஸ்ரீ வெங்கடேஸ்வரா கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் உள்ளது.
- வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை ஒன்று அங்குள்ள மரத்தின் மீது ஏறி பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்தது.
திருப்பதி:
திருப்பதி அலிப்பிரி அருகே மலை அடிவாரத்தில் வன உயிரியல் பூங்கா அருகே ஸ்ரீ வெங்கடேஸ்வரா கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் உள்ளது. வனப்பகுதியை ஒட்டி பல்கலைக்கழகம் அமைந்துள்ளதால் வனப்பகுதியில் இருந்து சிறுத்தைகள் அடிக்கடி பல்கலைக்கழக வளாகத்தில் புகுந்து விடுகின்றன.
இதனை தடுப்பதற்காக 8 அடி உயரத்தில் பல்கலைக்கழகத்தை சுற்றிலும் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை ஒன்று அங்குள்ள மரத்தின் மீது ஏறி பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்தது.
அப்போது வளாகத்தில் படுத்திருந்த நாயை சிறுத்தை அடித்து கொன்றது. நாய் குரைக்கும் சத்தத்தை கேட்ட காவலாளி வந்து பார்த்து கத்தி கூச்சலிட்டர்.
காவலாளியின் சத்தத்தை கேட்டு விடுதியில் இருந்த மாணவர்களும் ஓடி வந்தனர். சிறுத்தையை பார்த்து சில மாணவர்கள் அலறி ஓட்டம் பிடித்தனர்.
அதற்குள் வளாகத்தில் இருந்த சிறுத்தை அங்கு இருந்த மரத்தின் மீது ஏறி வெளியே குதித்து தப்பி சென்றது. சிறுத்தை வந்ததால் மாணவர்கள் பீதியில் உறைந்தனர். கதவு, ஜன்னலை பூட்டி அறைக்குள் பதுங்கினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் பல்கலைக்கழகத்திற்கு வந்து சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்துள்ளனர்.
மேலும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் மாணவர்கள் யாரும் இரவு 7 மணிக்கு மேல் விடுதியை விட்டு வெளியே வரக்கூடாது என எச்சரிக்கை விடுத்தனர்.






