search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பூர்வீக பாலியல் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் ஆந்திரா முதல் இடம்
    X

    பூர்வீக பாலியல் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் ஆந்திரா முதல் இடம்

    • இந்தியாவில் அதிக பாலியல் தொழிலாளர்கள் உள்ள மாநிலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.
    • இந்தியாவில் அதிக பாலியல் தொழிலாளர்கள் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.

    திருப்பதி:

    இந்தியாவில் பாலியல் தொழிலாளர்கள் தொடர்பான சில முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டது.

    அதன்படி பூர்வீக பாலியல் தொழிலாளர்கள் அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் முதல் 3 இடத்தில் தென்மாநிலங்கள் உள்ளன.

    இந்தியாவில் எச்.ஐ.வி.யை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக நாட்டில் உள்ள பாலியல் தொழிலாளர்களும் கணக்கில் கொள்ளப்படுகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் சார்பில் சில ஆய்வுகள் மேற்கொண்டது. அதன்படி புலம்பெயர் பாலியல் தொழிலாளர்கள், பூர்வீக பாலியல் தொழிலாளர்கள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டன.

    இந்நிலையில் இந்தியாவில் அதிக பாலியல் தொழிலாளர்கள் உள்ள மாநிலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி பூர்வீக பாலியல் தொழிலாளர்கள் அடிப்படையிலும், பூர்வீகம் மற்றும் புலம்பெயர் பாலியல் தொழிலாளர்கள் என 2 வகைகளில் மாநிலங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

    அதன்படி பூர்வீக பாலியல் தொழிலாளர்கள் அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் முதல் 3 இடத்தில் தென்மாநிலங்கள் உள்ளன. 1.33 லட்சம் பூர்வீக பாலியல் தொழிலாளர்களுடன் ஆந்திரா முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து கர்நாடகா 1.16 லட்சம் மற்றும் தெலுங்கானாவில் 1 லட்சம் பேர் என அடுத்தடுத்த இடத்தில் உள்ளது.

    புலம் பெயர்ந்த மற்றும் பூர்வீக பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கையை பொறுத்தமட்டில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இங்கு மொத்தம் 6.6 லட்சம் பேர் பாலியல் தொழில் செய்கின்றனர்.

    இதன்மூலம் இந்தியாவில் அதிக பாலியல் தொழிலாளர்கள் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக 2.3 லட்சம் பாலியல் தொழிலாளர்களுடன் குஜராத் 2வது இடத்திலும், குஜராத்தை விட சற்று குறைந்து டெல்லி 3வது இடத்திலும் உள்ளது.

    தென்மாநிலங்களில் புலம்பெயர்ந்த பாலியல் தொழிலாளர்கள் குறைவாக உள்ளதோடு, பூர்வீகமாக வசிப்பவர்கள் பாலியல் தொழிலாளர்களாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×