என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • 24-ந் தேதி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது.
    • 7 வாகனங்களில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருகிற 28-ந் தேதி ரதசப்தமி விழா நடக்கிறது. விழாவையொட்டி 7 வாகனங்களில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். காலை 7 மணி முதல் 8 மணி வரை சூரியபிரபை வாகனத்திலும், 8.30 மணி முதல் 9.30 மணி வரை ஹம்ச வாகனத்திலும், 10 மணி முதல் 11 மணி வரை அஸ்வ வாகனத்திலும், 11.30 மணி முதல் 12.30 மணி வரை கருட வாகனத்திலும் எழுந்தருளி காட்சியளிக்கிறார்.

    அதேபோன்று மதியம் 1 மணி முதல் 2 மணி வரை சின்னசேஷ வாகனத்திலும், மாலை 6 மணி முதல் 7 மணி வரை சந்திரபிரபை வாகனத்திலும், இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை கஜ வாகன சேவை நடக்கிறது. முன்னதாக மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை பத்மாவதி தாயார் கோவிலில் உள்ள கிருஷ்ணசுவாமி முகமண்டபத்தில் தாயார் உற்சவருக்கு திருமஞ்சனம் நடத்தப்படுகிறது. இதை முன்னிட்டு கோவிலில் ஆர்ஜித கல்யாண உற்சவம், சாமவேத புஷ்பாஞ்சலி, சஹஸ்ரதிபாலங்கர சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.

    ரதசப்தமியை முன்னிட்டு வருகிற 24-ந் தேதி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது.

    • சந்தேகத்தின் பேரில் ஜோதியை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து எரித்ததை ஒப்புக்கொண்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து ஜோதியையும், அவரது கள்ளக்காதலனையும் கைது செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம், தகராபு வலசை, எம்.பி.டி காலனியை சேர்ந்தவர் ஜோதி. இவருக்கும் பீமிலி மண்டலம், வேலந்த பேட்டையை சேர்ந்த பைடி ராஜு (வயது 35) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன. பைடி ராஜு டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தார்.

    திருமணத்திற்கு முன்பு ஜோதிக்கும், வாச வாணி பாலம் பகுதியை சேர்ந்த சுரு ராஜு என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. திருமணத்திற்கு பிறகும் ஜோதி தனது காதலனுடன் பழகி வந்துள்ளார்.

    இருவரும் தினமும் சந்தித்துக் கொள்வதற்காக விசா நகரில் வாடகைக்கு வீடு எடுத்தனர். ஜோதி விசாகப்பட்டினத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் தூய்மை பணியாளர் பணி கிடைத்துள்ளதாக கூறி தினமும் காலை காதலன் வீட்டிற்கு சென்று இரவு வீடு திரும்புவதை வாடிக்கையாக கொண்டு இருந்தார்.

    கடந்த 6 மாத காலமாக ஜோதி தன்னுடைய காதலனுடன் இருந்து வந்தார். இவர்களது விவகாரம் கணவர் பைடி ராஜுக்கு தெரியவந்தது. அவர் கள்ளக்காதலை கண்டித்தார்.

    இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு நடந்தது. கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள கணவரை தீர்த்துக்கட்ட ஜோதி முடிவு செய்தார். உணவில் அதிக அளவு தூக்க மாத்திரையை கலந்து கணவருக்கு கொடுத்தார்.

    தூக்க மாத்திரை கலந்த உணவை சாப்பிட்ட பைடி ராஜு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அப்போது தனது கள்ளக்காதலனுக்கு போன் செய்த ஜோதி அவரை வரவழைத்தார். இருவரும் சேர்ந்து பைடிராஜுவை கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து கணவருக்கு உடல்நிலை சரி இல்லாததால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வேண்டும் என தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பைடி ராஜு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து இருவரும் சேர்ந்து பைடி ராஜுவின் உடலை மயானத்திற்கு கொண்டு சென்று பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.

    இந்த நிலையில் கணவர் திடீரென காணாமல் போனதாக கூறி பீமிலி போலீசில் ஜோதி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஜோதி சிபிஐ அலுவலகத்தில் வேலை செய்யவில்லை என்பதை கண்டுபிடித்தனர்.

    சந்தேகத்தின் பேரில் ஜோதியை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து எரித்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஜோதியையும், அவரது கள்ளக்காதலனையும் கைது செய்தனர்.

    • சிவபெருமான் சிலை அமைக்கும் பணி கலை நயத்துடன் நடந்து வருகிறது.
    • சிவன் சிலை பக்தர்களை கவரும் வகையில் நுட்பமாக அமைக்கப்படும்.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்த கைலாசகிரி மலைக்கு கிரிவலம் செல்லும் பாதையில் அஞ்சூர் மண்டபம் அருகில் ராமாபுரம் நீர்த்தேக்கம் உள்ளது. அதில் கரையோரம் தாமரைப்பூக்கள் பூத்துக்குலுங்கும். அது, பக்தர்களை கவரும் வகையில் இருக்கும்.

    இந்தநிலையில் ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்த எம்.எம். வாடா பகுதியைச் சேர்ந்த பக்தர் மாத்தையா என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது தந்தையின் நினைவாக அஞ்சூரு மண்டபத்தைச் சீர்படுத்தி, அங்கு அரசு அனுமதியோடு ராமாபுரம் நீர்த்தேக்கத்தில் சிவன், பார்வதி சிலைகளை நிறுவினார். அதில் சிவன் சிலை 7 அடி உயரமும், 15 அடி அகலமும் கொண்டதாகும். சிலைகளை நிறுவும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இதுகுறித்து பக்தர் மாத்தையா கூறியதாவது:-

    சிவபெருமான் சிலை அமைக்கும் பணி கலை நயத்துடன் நடந்து வருகிறது. சிவன் தலையில் இருந்து கங்கைநீர் அருவியாய் விழுவதுபோல் செயற்கை நீரூற்று அமைக்கப்படும். ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் இந்த நீர்த்தேக்கத்துக்கு வந்து சிவன் சிலையை தரிசிக்கலாம். சிவன் சிலை பக்தர்களை கவரும் வகையில் நுட்பமாக அமைக்கப்படும்.

    சிவன் சிலையைச் சுற்றிலும் கண்களை கவரும் வகையில் மின் விளக்குகள் அமைக்கப்படும். இசை நீரூற்று ஏற்பாடு செய்யப்படும். தன்னால் இயன்ற சேவையை சிவபெருமானுக்கு செய்கிறேன்.

    கைலாசகிரி மலைக்கு பக்தர்கள் கிரிவலம் செல்லும் பாதையை, தமிழகத்தில் திருவண்ணாமலையில் இருப்பதுபோல் சீரமைக்கப்படும். ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் ஒத்துழைப்போடு சிவபெருமான் சிலையை அமைத்து வருகிறேன்.

    வரும் காலத்தில் தனக்கு அரசு அனுமதி அளித்தால் ராமாபுரம் நீர்த்தேக்கத்தில் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் படகு சவாரி செய்ய படகு குளம் அமைக்க ஏற்பாடு செய்வேன். நீர்த்தேக்கம் அருகில் பூங்காவை அமைப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருப்பதி மற்றும் திருமலையில் 7500 அறைகள் கட்டப்பட்டுள்ளன.
    • பக்தர்களின் செல்போனை வைத்துவிட்டு செல்வதற்காக லாக்கர்கள் வைக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள அன்னமய்யா பவனில் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் சாதாரண மற்றும் நடுத்தர பக்தர்களின் வசதிக்காக ரூ 50, 100 குறைந்த வாடகையில் அறைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக திருப்பதி மற்றும் திருமலையில் 7500 அறைகள் கட்டப்பட்டுள்ளன.

    இந்த அறைகள் ரூ.120 கோடியில் வெந்நீர் மற்றும் பர்னிச்சர் வசதியுடன் நவீனப்படுத்தப்பட்டு உள்ளன. இருப்பினும் வாடகை உயர்த்தப்படவில்லை நாராயணகிரி எஸ் பி ஆர் எஸ் சிறப்பு ஓய்வு இல்லங்கள் நவீனப்படுத்தப்பட்டு விஐபி பக்தர்களுக்கு வாடகை உயர்த்தி வழங்கப்படுகிறது.

    சாதாரண பக்தர்களுக்கு குறைந்த வாடகையில் வழங்கப்படும் அறைகளின் பராமரிப்பு மற்றும் மின் கட்டண செலவு ஒரு நாளைக்கு ஒரு 250 ஆகிறது. மேலும் பக்தர்களின் வசதிக்காக பிஎஸ்சி ஐந்து என்ற கட்டிடம் 100 கோடியில் கட்டப்படுகிறது.

    மேலும் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கொண்டுவரும் பொருட்களை வைப்பதற்காக 7,500 இலவச லாக்கர்கள் வைக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் செல்போனை வைத்துவிட்டு செல்வதற்காக லாக்கர்கள் வைக்கப்பட்டுள்ளது.

    15 ஆயிரம் பக்தர்கள் தங்குவதற்கு இலவச தங்குமிடம் வழங்கப்படுகிறது. அறைகள் தங்குமிடங்கள் லாக்கர்கள் கழிப்பறைகள் குளியலறை இலவசமாக வழங்கப்படுகிறது ரங்கம்மா அன்னதான பவனில் தினமும் லட்சுக்கணக்கான பக்தர்களுக்கு 3 வேலை இலவச உணவு வழங்கப்படுகிறது அறையில் இருந்து உணவு கூடத்திற்கு வர முடியாத பக்தர்களுக்கு அந்தந்த பகுதியிலேயே கவுண்டர்கள் திறந்து உணவு வழங்கப்படுகிறது.

    திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இன்றி திருப்பதியில் காலடி எடுத்து வைத்தது முதல் சாமி தரிசனம் வரை பைசா செலவு இல்லாமல் தேவஸ்தானம் உணவு, குடிநீர் பால், டிபன், மருத்துவ சேவை, இலவச முடி காணிக்கை, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல இலவச பஸ் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேட்டரி வாகன வசதியும் செய்யப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பக்கதருக்கும் 1 லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்கு இலவச நவீன மருத்துவம் வழங்குவதற்காக ரூ.320 கோடியில் சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

    • பணம் கட்டி ஏமாந்த பொதுமக்கள் அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் புகார் செய்தனர்.
    • கைது செய்யப்பட்ட 6 பேரிடம் இருந்து பணம், தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விஜய நகரத்தை சேர்ந்தவர் மஜ்ஜி அப்பல ராஜு. இவர் அப்பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு ஆலை வைத்துள்ளார்.

    இவரது நண்பர்களான ரமேஷ், பதிவாடா ஸ்ரீலேகா ஆகியோரிடம் சேர்ந்து பொங்கல் பண்டிகைக்கு மளிகை பொருட்கள் தருவதாகவும், மாதம் ரூ.300 வீதம் 12 மாதங்களுக்கு ரூ.3600 கட்டினால் ரூ.5,000 மதிப்பிலான மளிகை பொருட்கள் தருவதாக விளம்பரபடுத்தினர்.

    கடந்த ஆண்டு பணம் கட்டியவர்களுக்கு கூறியபடி மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

    இந்த தகவல் மாவட்டம் முழுவதும் பரவியது. சிறுக சிறுக பணம் கட்டினால் மொத்தமாக மளிகைப் பொருட்கள் கிடைப்பதால் பொதுமக்கள் போட்டி போட்டு பணத்தை கட்டினார். இதற்காக அந்தந்த பகுதியில் ஏஜெண்டுகள் நியமிக்கப்பட்டனர்.

    மாவட்டம் முழுவதிலும் இருந்து 24 ஆயிரம் பேர் ரூ.8.09 கோடி பணம் கட்டி இருந்தனர். பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பணம் கட்டியவர்களுக்கு இதுவரை மளிகை பொருட்கள் வழங்கப்படவில்லை. பணம் கட்டிய அலுவலகத்திற்கு சென்று பார்த்தபோது அலுவலகங்கள் மூடப்பட்டு இருந்தன. பணம் கட்டிய ஏஜெண்டுகளுக்கு போன் செய்தபோது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இதனால் பணம் கட்டி ஏமாந்த பொதுமக்கள் இதுகுறித்து அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் புகார் செய்தனர். அனைத்து வழக்குகளும் மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

    போலீஸ் சூப்பிரண்டு தீபிகா பட்டேல் தலைமையிலான போலீசார் பண மோசடியில் ஈடுபட்ட அப்பல ராஜு, ரமேஷ், பதிவாடா ஸ்ரீலேகா உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.

    விசாரணையில் புதியதாக குடிநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்க ரூ 3.50 கோடி முதலீடு செய்யப்பட்டதால் பொதுமக்களுக்கு வாக்குறுதி அளித்தபடி மளிகை பொருட்கள் வழங்க முடியாமல் தெரிவித்தனர்.

    இதையடுத்து கைது செய்யப்பட்ட 6 பேரிடம் இருந்து பணம், தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பொங்கல் பண்டிகைக்கு மளிகை பொருட்கள் தருவதாக கூறி 24 ஆயிரம் பேரிடம் மோசடி செய்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 6 லட்சத்து 9 ஆயிரத்து 219 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    • ரூ.39.40 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2-ந் தேதி அதிகாலை வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

    தொடர்ந்து 10 நாட்கள் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக அனுமதிக்கப்பட்டனர்.

    வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் தரிசனம் நேற்று இரவு நிறைவடைந்தது. இதையடுத்து அர்ச்சகர்கள் சாஸ்திரப்படி வைகுண்ட வாசலை அடைத்தனர்.

    வைகுண்ட ஏகாதசி நாட்களான 2-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ரூ 300 ஆன்லைன் டிக்கெட்டில் 25 ஆயிரம் பேரும், இலவச தரிசனத்தில் 50 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

    வைகுண்ட ஏகாதசி முதல் நாள் அன்று முன்னாள் முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள், நீதிபதிகள் உட்பட ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இதனால் அன்று ஒரே நாளில் ரூ.7.68 கோடி உண்டியல் வருவாய் கிடைத்தது.

    இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்களில் 2.50 லட்சம் பேர் தரிசனத்திற்கு வரவில்லை. இதனால் வைகுண்ட ஏகாதசி நாட்களில் தரிசனத்திற்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது.

    வைகுண்ட ஏகாதசி 10 நாட்களில் 6 லட்சத்து 9 ஆயிரத்து 219 பக்தர்கள் தரிசனம் செய்தனர். ரூ.39.40 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    திருப்பதியில் நேற்று 68,855 பேர் தரிசனம் செய்தனர். 21,280 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.61 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • கள்ளத்தொடர்பு காரணமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • மனைவி வேறு வாலிபருடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்துள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், வெடுரு குப்பம், நக்லம் பள்ளியை சேர்ந்தவர் சேகர். கூலி தொழிலாளி. இவரது மனைவி தேஜாஸ்ரீ (வயது 25). தம்பதிக்கு 3 மாத ஆண் குழந்தை உள்ளது.

    சேகர் வேலைக்கு சென்ற பின்னர் தேஜாஸ்ரீ வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்டு உள்ள தாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று சேகர் வேலைக்கு செல்வதாக தேஜாஸ்ரீயிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் அவர் வேலைக்கு செல்லாமல் மனைவியை கண்காணித்து வந்தார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் சேகர் வீட்டிற்குள் சென்றார். சிறிது நேரம் கழித்து சேகர் வீட்டிற்குள் சென்றபோது தேஜாஸ்ரீ அந்த வாலிபருடன் உல்லாசமாக இருந்தார்.

    இதனைக் கண்ட சேகர் ஆத்திரமடைந்து வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாக வெட்டினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த தேஜாஸ்ரீ வலியால் அலறி துடித்தார்.

    அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தேஜாஸ்ரீ அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்தனர். அங்கு தேஜாஸ்ரீ ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டவர்கள் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தேஜாஸ்ரீ பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து சேகரை கைது செய்தனர். கள்ளக்காதலில் ஈடுபட்டதால் மனைவியை வெட்டி கொன்ற சேகரும் ஜெயிலுக்கு சென்றதால் அவரது 3 மாத குழந்தை அனாதையாக உள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • அன்னமய்யா மாவட்டத்தில் டிராகன் பழ சாகுபடியை நோக்கி விவசாயிகள் திரும்பி வருகின்றனர்.
    • ஆந்திராவில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் நிலப்பகுதி டிராகன் பழம் உற்பத்திக்கு தகுதியாக உள்ளன.

    திருப்பதி:

    டிராகன் பழம் ஒரு காலத்தில் கடைகளில் கிடைப்பது அரிதான ஒன்றாக இருந்து வந்தது. இப்போது, எளிதாக அங்காடிகளில் கிடைக்கிறது.

    பார்ப்பதற்கு சப்பாத்திக்கள்ளி பழத்தைப் போலவே காணப்படும் டிராகன் பழம், உலகில் வெப்ப மண்டலப் பகுதிகளில் பயிரிடப்படுகிறது. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது.

    வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட டிராகன் பழம் தற்போது ஆந்திராவிலும் விளைச்சலை தொடங்கியுள்ளது.

    பாரம்பரிய பயிர்களை பயிரிடுவதில் குறைந்த அல்லது லாபம் இல்லாததால், ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தின் பல ஆர்வமுள்ள விவசாயிகள், அயல்நாட்டு டிராகன் பழத்தின் சாகுபடியை மேற்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அது நல்ல லாபம் ஈட்டி வருகிறது.

    தற்போதைய நிலவரப்படி, வெளிச்சந்தையில் ஒரு டன் பழத்தின் விலை ரூ.1.50 லட்சத்தை நெருங்குகிறது.

    அன்னமய்யா மாவட்டத்தில் டிராகன் பழ சாகுபடியை நோக்கி விவசாயிகள் திரும்பி வருகின்றனர். இதனால் விளைச்சல் அதிகரித்துள்ளது.

    இப்பகுதியில் இருந்து கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    டிராகன் பழத்தின் பூக்கள் மற்றும் பழங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் நவம்பர் வரை மூன்று முதல் 5 முறை நிகழ்கின்றன, இது பருவமழையுடன் ஒத்துப்போகிறது, மேலும் பூக்கும் நிலைக்குப் பிறகு அறுவடை செய்ய கிட்டத்தட்ட 35 நாட்கள் ஆகிறது.

    "பெரும்பாலான விவசாயிகள் இயற்கை விவசாயம் மூலம் பயிர் செய்கிறார்கள். முதன்முறையாக 7.5 ஏக்கரில் பயிர் செய்து 500 கிலோ மகசூல் பெற்றுள்ளேன். இந்த ஆண்டு, 15-20 டன் மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் என, விவசாயி ஒருவர் கூறினார்.

    ஆந்திராவில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் நிலப்பகுதி டிராகன் பழம் உற்பத்திக்கு தகுதியாக உள்ளன. அந்த பகுதிகளை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய மானியம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.

    • திருப்பாவாடை ஆர்ஜித சேவை மீண்டும் நாளை முதல் தொடங்கப்பட உள்ளது.
    • விமானத்தில் வரும் பக்தர்களுக்கு மட்டுமே நேரடி முன்பதிவு டிக் கெட்டுகள் வழங்கப்படும்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாதாரண பக்தர்கள் தரிசனம் செய்வதைக் கருத்தில் கொண்டு திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை ஆயிரமாக குறைத்துள்ளது.

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நாடு முழுவதும் ஸ்ரீவாணி அறக்கட்டளையை ஏற்படுத்தியது. இந்த அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்குபவர்களுக்கு விஐபி பிரேக் தரிசன அனுமதி வழங்கியது.

    அதன்படி, பக்தர்கள் நன் கொடை அளித்து ஏழுமலையானை தரிசித்து வந்தனர். இதுவரை பக்தர்களின் தேவைக்கு ஏற்றபடி வழங்கப்பட்டு வந்த ஸ்ரீவாணி அறக்கட்டளை விஐபி பிரேக் டிக்கெட்டுகளின் எண்ணிக் கையை, தேவஸ்தானம் ஒரு நாளைக்கு 1,000 டிக்கெட்டுகளாக குறைத்துள்ளது.

    அதில், 750 டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமும், மீதமுள்ள 250 டிக்கெட்டுகள் ரேணிகுண்டா விமான நிலையத்தில் உள்ள தற்போதைய முன்பதிவு மையத்தில் பக்தர்களுக்கு நேரிடையாக வழங்கப்படுகிறது.

    தேவஸ்தானம் ஏற்கனவே 500 ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிட்டுள்ளது. மேலும், 250 டிக்கெட்டுகள் இன்று மாலை வெளியிடப்பட உள்ளது.

    இதுவரை திருப்பதி பஸ் நிலையம் எதிரில் உள்ள மாதவம் ஓய்வு இல்லத்தில் வழங்கப்பட்டு வந்த ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் வழங்கும் மையத்தை தேவஸ்தானம் மூடியது.

    இனிமேல் விமானம் மூலம் திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு மட்டுமே ஸ்ரீ வாணி அறக்கட்டளையின் விஐபி பிரேக் தரிசனத்தின் நேரடி முன்பதிவு டிக் கெட்டுகள் வழங்கப்படும். கொரோனா காலத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த திருப்பாவாடை ஆர்ஜித சேவை மீண்டும் நாளை முதல் தொடங்கப்பட உள்ளது.

    இதற்காக பக்தர்கள் திருமலையில் உள்ள சிஆர்ஓ கவுன்ட்டரில் தங்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மின்னணு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து தினமும் 25 பக்தர்களுக்கு வழங்கப்படும்.

    குழுக்களில் தேர்வு செய்யப்பட்ட பக்தர்கள் தங்கள் டிக்கெட்டுகளை பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    திருப்பதியில் நேற்று 58,184 பேர் தரிசனம் செய்தனர்.16,122 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.20 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • சூரியன் அவதாரத்தினத்தை ரத சப்தமியாகக் கொண்டாடுகிறார்கள்.
    • இதை சூரிய ஜெயந்தி என்றும் அழைப்பார்கள்.

    சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் ரத சப்தமி முக்கியமானது. சூரியன் அவதாரத்தினத்தை ரத சப்தமியாகக் கொண்டாடுகிறார்கள். சூரிய ஜெயந்தி என்றும் அழைப்பார்கள். அதன்படி வருகிற 28-ந்தேதி திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட உள்ளூர் வைணவ கோவில்களில் ரத சப்தமி விழா நடக்கிறது.

    கோவில்களில் ரத சப்தமிக்கான விரிவான ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பாக தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மம் திருப்பதியில் இருந்தபடியே அனைத்துக் கோவில் அதிகாரிகளை காணொலி காட்சி மூலம் தொடர்பு கொண்டு கலந்துரையாடி ஆலோசனை நடத்தினாா்.

    அப்போது இணை அதிகாரி வீரபிரம்மன் பேசியதாவது:-

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், திருப்பதி கோதண்டராமசாமி கோவில், சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவில், நாராயணவனம், நாகலாபுரம், கடப்பா ஆகிய கோவில்களில் ரதசப்தமியை முன்னிட்டு வாகனச் சேவையுடன் மூல மூர்த்தியை முறைப்படி தரிசனம் செய்ய அனைத்து முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். வாகனச் சேவைக்கு பயன்படுத்தக்கூடிய வாகனங்களை முன்கூட்டியே பரிசோதிக்க வேண்டும்.

    கடப்பாவில் உள்ள லட்சுமி வெங்கடேஸ்வரா் கோவிலில் தேரோட்டத்துக்காக தேர் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. அந்தந்தக் கோவில்களில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் ஏற்பாடு செய்து, நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    அதேபோல் ஜம்மு, சென்னை, ராமச்சோடவரம், சீ்தம்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள கோவில்களில் மகா கும்பாபிஷேகம் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அந்தந்தக் கோவில்களுக்கு தேவையான நகைகள், கற்சிலைகள், பஞ்சலோக சிலைகள், அர்ச்சகர், ஊழியர்கள், இதர பிரதிநிதிகள், பணியாளர்கள், சுகாதார ஏற்பாடுகள் போன்றவை விவாதிக்கப்பட்டது.

    கோவில்கள் தொடர்பான பணிகள் முன்னேற்றம் குறித்து பொறியியல் துறை அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மகா கும்பாபிஷேக நிகழ்ச்சிகளுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர் வழங்குதல், மின் விளக்கு அலங்காரம், மலர் அலங்காரம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் கோவில் அதிகாரிகள், பிற துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • பிட்ஷாபதி பெயரில் உள்ள இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்கு ஸ்ரீகாந்த் மனு செய்தார்.
    • பிட்ஷாபதி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் போலீசில் புகார் செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், வாரங்கல் மாவட்டம், சென்னரா பேட்டை, போடாதண்டாவை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த்.

    இவர் ஐதராபாத் பாச்சுப்பள்ளியில் ஒரு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் போலியாக வேலைவாய்ப்புகளை உருவாக்கினார். வேலைக்கு வருபவர்களின் பெயரில் வங்கியில் கணக்கு தொடங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி மோசடியாக பணத்தை எடுத்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

    இந்த நிலையில் குண்டூர் மாவட்டம், நர்சம்பேட்டை, குருஜால பகுதியை சேர்ந்தவர் பிட்ஷாபதி. இவர் ஸ்ரீகாந்திடம், எனக்கு பெற்றோர், உறவினர்கள் யாரும் இல்லாத அனாதையாக இருக்கிறேன்.

    எனக்கு வேலை கொடுங்கள் என கேட்டார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்த ஸ்ரீகாந்த் பிட்ஷாபதியை வேலைக்கு சேர்த்தார்.

    இதையடுத்து பிட்ஷாபதி பெயரில் ரூ 50 லட்சத்திற்கு இன்சூரன்ஸ் எடுத்தார். அதில் தனது பெயரை நாமினியாக சேர்த்துக் கொண்டார். மேலும் கடந்த 2021-ம் ஆண்டு தனியார் வங்கியில் கணக்கு தொடங்கி பிட்ஷாபதி பெயரில் ரூ.52 லட்சம் கடன் பெற்று அவரது பெயரிலேயே மெடிபள்ளியில் வீடு வாங்கினார். இந்த நிலையில் ஸ்ரீ காந்த்திற்கு திடீரென பண தேவை ஏற்பட்டது. பிட்ஷாபதி பெயரில் வாங்கிய வீட்டை விற்க முடிவு செய்து அவரிடம் தெரிவித்தார். இதற்கு பிட்ஷாபதி மறுப்பு தெரிவித்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்ரீகாந்த் பிட்ஷாபதி பெயரில் உள்ள வீடு மற்றும் ரூ.50 லட்சம் இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.

    ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் காவலாளி மோதிலாலை அணுகி பிட்ஷாபதியை கொலை செய்ய உதவி செய்தால் ரூ.10 லட்சம் தருவதாக தெரிவித்தார். மேலும் அவரது நண்பர்களான சம்மண்ணா, சதீஷ் ஆகியோருக்கு தலா ரூ.5 லட்சம் தருவதாகவும் கூறினார்.

    இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந் தேதி பிட்ஷாபதியை மொகிலி கிடா புறநகர் பகுதிக்கு காரில் அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து பிட்ஷாபதியை அதிக அளவில் மதுவை குடிக்க வைத்தனர்.

    பின்னர் 3 பேரும் சேர்ந்து ஹாக்கி மட்டையால் சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த பிட்ஷாபதியை ரோட்டில் இழுத்து போட்டு அவர் மீது 3 முறை காரை ஏற்றி கொலை செய்தனர். பின்னர் 3 பேரும் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ஷாட் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை மீட்டு விபத்து வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் பிட்ஷாபதி பெயரில் உள்ள இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்கு ஸ்ரீகாந்த் மனு செய்தார். பிட்ஷாபதி சாவில் சந்தேகம் இருப்பதாக இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் மீண்டும் பிட்ஷாபதி வழக்கை விசாரணை செய்தனர். சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது அவரை காரை ஏற்றி கொலை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து ஸ்ரீகாந்த் அவருக்கு உடந்தையாக இருந்த மோதிலால், சம்மண்ணா, சதீஷ் ஆகிய 4 பேரை கொலை நடந்த ஓராண்டுக்கு பிறகு கைது செய்தனர்.

    • 2-ந்தேதியிலிருந்து 11-ந்தேதி வரை 10 நாட்களுக்கு வைகுண்ட துவார தரிசனம் நடக்கிறது.
    • பக்தர்கள் இலவச தரிசன டோக்கன்களை பெற்று சாமி தரிசனம் செய்யலாம்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2-ந்தேதியில் இருந்து 11-ந்தேதி வரை 10 நாட்களுக்கு வைகுண்ட துவார தரிசனத்துக்கான இலவச தரிசன டோக்கன்கள் வழங்கும் பணி நிறைவு பெற்றது.

    அதேபோல் திருப்பதியில் சீனிவாசம், அலிபிரியில் பூதேவி காம்ப்ளக்ஸ், விஷ்ணு நிவாசம் ஆகிய 3 இடங்களில் ஏற்கனவே வழங்கப்பட்ட தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட இலவச தரிசன டோக்கன்கள் 12-ந்தேதி முதல் வழக்கம்போல் வினியோகம் செய்யப்படும். பக்தர்கள் இலவச தரிசன டோக்கன்களை பெற்று சாமி தரிசனம் செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×