என் மலர்
ஆந்திர பிரதேசம்
- அதானியிடம் மத்திய அரசு ஏன் விசாரணை நடத்தவில்லை.
- தெலுங்கானா மாநிலத்தில் மட்டும்தான் அதானி குழுமத்துக்கு எந்த திட்டங்களும் கொடுக்கப்படவில்லை.
திருப்பதி:
ஐதராபாத்தில் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) தலைவரும், தெலுங்கானா முதல்-அமைச்சருமான சந்திரசேகரராவ் மகளும், எம்எல்சியுமான கவிதா நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த நாட்டில் பொது மக்களுக்காக உழைக்கும் ஒரு அரசை கொண்டுவருவதுதான் பி.ஆர்.எஸ். கட்சியின் செயல்திட்டம். நாட்டில் வளர்ச்சி ஏற்படாததற்கு பெரும்பாலான பொறுப்பு காங்கிரசையே சேரும். அதற்கு பிறகு பா.ஜ.க.வை சேரும்.
இப்போது பி.ஆர்.எஸ். ஒரு தேசிய கட்சி. இதனால் காங்கிரஸ் உட்பட எந்த கட்சியின் ஆதரவையும் நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தயார்.
அதானி விவகாரத்தில் பார்லிமென்ட் கூட்டு குழு அல்லது சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். அதானி குழும முறைகேடு காரணமாக மக்கள் ரூ.10 லட்சம் கோடியை இழந்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தில் மட்டும்தான் அதானி குழுமத்துக்கு எந்த திட்டங்களும் கொடுக்கப்படவில்லை. தேர்தல்கள் நெருங்கும் போதெல்லாம், அமலாக்க துறை, சிபிஐ,வருமான புலனாய்வுத்துறை போன்ற அமைப்புகளை பா.ஜ.க. பயன்படுத்துகிறது.
எனக்கு எதிரான மதுபான முறைகேடு வழக்கும் இதேபோன்றதுதான். நான் இந்திய பிரஜை என்ற முறையில் சிபிஐ விசாரணைக்கு நன்கு ஒத்துழைத்தேன். இதேபோல் அதானியிடம் மத்திய அரசு ஏன் விசாரணை நடத்தவில்லை. அதானி விவகாரத்தில் மத்திய அரசு மவுனமாக இருப்பது ஏன்? ஏனென்றால், மத்திய அரசுக்கு அதானி மிகவும் நெருக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்யும் விவகாரத்தை சந்திரசேகர ராவ் பேசினார்.
- கடந்த 8 ஆண்டுகளில் 8 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெலுங்கானா, போலீசில் ரெய்து ஸ்வராஜ் வேதிகா அறிக்கை தெரிவித்துள்ளது.
திருப்பதி:
தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் வெளி மாநில முதல் கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
அந்த கூட்டத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்யும் விவகாரத்தை சந்திரசேகர ராவ் பேசினார்.
இந்த பேச்சை சுட்டிக் காட்டி தெலுங்கானாவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது குறித்து ஓய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சி தலைவரும் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையுமான ஷர்மிளா கேள்வி எழுப்பி உள்ளார்.
மகாராஷ்டிராவில் விவசாயிகள் தற்கொலை பற்றி முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பேசியது நல்லது. அதே போல் தெலுங்கானாவில் எத்தனை விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்ற கேள்விக்கும் பதில் தர வேண்டும் அல்லவா?
தெலுங்கானாவில் கடந்த 8 ஆண்டுகளில் 8 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெலுங்கானா, போலீசில் ரெய்து ஸ்வராஜ் வேதிகா அறிக்கை தெரிவித்துள்ளது. அந்த விவசாயிகளின் உயிர்களுக்கு மதிப்பில்லையா?.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- விழா 11-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.
- 16-ந்தேதி தங்கத் தேரோட்டம் நடக்கிறது.
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருகிற 11-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடக்கிறது. அதையொட்டி 11-ந்தேதி காலை பிரம்மோற்சவ விழா கொடியேற்றம், இரவு பெரியசேஷ வாகன வீதிஉலா நடக்கிறது.
12-ந்தேதி காலை சிறியசேஷ வாகன வீதிஉலா, இரவு ஹம்ச வாகன வீதிஉலா, 13-ந் தேதி காலை சிம்ம வாகன வீதிஉலா, இரவு முத்துப்பந்தல் வாகன வீதிஉலா, 14-ந் தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு சர்வபூபால வாகன வீதிஉலா, 15-ந் தேதி காலை பல்லக்கு உற்சவம் (மோகினி அவதாரம் வீதிஉலா), இரவு கருட வாகன வீதிஉலா (கருடசேவை) நடக்கிறது.
16-ந்தேதி காலை அனுமன் வாகன வீதிஉலா, மாலை வசந்தோற்சவம், மாலை தங்கத் தேரோட்டம், இரவு கஜ வாகன வீதிஉலா, 17-ந்தேதி காலை சூரியபிரபா வாகன வீதிஉலா, இரவு சந்திரபிரபா வாகன வீதிஉலா, 18-ந்தேதி காலை தேரோட்டம் (மரத்தேர்), இரவு குதிரை வாகன (அஸ்வ) வீதிஉலா, 19-ந்தேதி காலை சக்கர ஸ்நானம், இரவு கொடி இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.
பிரம்மோற்சவ விழா நாட்களில் காலை 8 மணியில் இருந்து 9 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரையிலும் கோவிலின் நான்கு மாடவீதிகளில் வாகனச் சேவை நடக்கிறது. அதில் 15-ந்தேதி கருட சேவை அன்று இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை வாகன வீதிஉலா நடக்கிறது.
மேற்கண்ட வாகனங்களில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் தனித்தும், உபய நாச்சியார்களுடன் சேர்ந்தும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
ஆழ்வார் திருமஞ்சனம்
இதனை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. காலை 6.30 மணி முதல் 11 மணி வரை கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் போன்றவற்றை தண்ணீரால் சுத்தப்படுத்திய பின், நாமகோபு, ஸ்ரீசூர்ணம், கஸ்தூரி மஞ்சள், கட்ட கற்பூரம், சந்தனப்பொடி, குங்குமம், கிச்சிலிக்கட்டை போன்ற சுகந்த வாசனை திரவியங்கள் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது. அதன்பிறகு பக்தர்கள் சர்வ தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
திருப்பதியை சேர்ந்த பரதாள மணி என்ற பக்தர் கோவிலுக்கு இரண்டு திரைச்சீலைகளை நன்கொடையாக வழங்கினார்.
- குலுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்டு டிக்கெட் ஒதுக்கீடு செய்யப்படும்.
- டிக்கெட்டுகள் நாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இம்மாதம் 22-ந் தேதி முதல் 28 ம் தேதி வரை நடக்கும் கல்யாண உற்சவம், கட்டண பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை, ஊஞ்சல் சேவை ஆகிய கட்டண சேவைகளில் மெய் நிகர் அடிப்படையில் கலந்து கொள்ள தேவையான டிக்கெட்டுகள் நாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.
மெய்நிகர் அடிப்படையிலான கட்டண சேவைகளில் பங்குபெறும் பக்தர்களுக்கு மற்றொரு நாளில் ஏழுமலையானை நேரடியாக தரிசிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.
இதேபோல் இம்மாதம் 22ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்கும் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அபிஷேகம் ஆகிய கட்டண சேவைகளில் பங்கு பெற விரும்பும் பக்தர்கள் இன்று காலை 10 மணி முதல் 10 ம் தேதி காலை 10 மணி வரை தேவஸ்தான வெப் சைட் மூலம் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவு செய்த பக்தர்கரின் பெயர்கள் குலுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு டிக்கெட் ஒதுக்கீடு செய்யப்படும்.
மேலும் இம்மாதம் 22 ம் தேதி முதல் 28 ம் தேதி வரை நடக்க இருக்கும் கட்டண சேவைகளில் நேரடியாக பங்கு பெற விரும்பும் பக்தர்கள் இன்று பகல் 12 மணி முதல் தேவையான டிக்கெட்டுகளை www.tirupatibalaji.gov.in என்ற தேவஸ்தான இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
- வேலூர் மாவட்டம் பாச்சூர் வழியாகவும் கிரானைட் கடத்தப்படுகிறது.
- குறிப்பிட்ட சில வழிகளை கடத்தல்காரர்கள் பயன்படுத்துவதும் தெரிய வந்துள்ளது.
சித்தூர் :
இதுகுறித்து தமிழக தலைமைச்செயலாளர் இறையன்புவுக்கு ஆந்திர மாநில எதிர்க்கட்சித் தலைவரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் சட்டசபை தொகுதியைச் (என்னுடைய தொகுதி) சேர்ந்த கிரானைட் மாபியாக்கள், அங்கிருந்து கிரானைட் கற்களை சட்டவிரோதமாக வெட்டி எடுத்து அவற்றை கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்கள் வழியாக தமிழகத்திற்கு கடத்துவதாக தகவல் வந்துள்ளது.
ஆந்திராவில் இருந்து சட்டவிரோதமாக கிரானைட் கற்களை கடத்தி தமிழகத்தின் கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களை அடைவதற்காக குறிப்பிட்ட சில வழிகளை கடத்தல்காரர்கள் பயன்படுத்துவதும் தெரிய வந்துள்ளது. அதன்படி, ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் நதிமூரில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வரதனபள்ளி வழியாகவும்,
சித்தூர் மாவட்டம் ஓ.என்.கொத்தூரில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி வழியாகவும்; சித்தூர் மாவட்டம் மோதிய செனுவில் இருந்து வேலூர் மாவட்டம் பாச்சூர் வழியாகவும் கிரானைட் கடத்தப்படுகிறது.
ஆந்திரா மற்றும் தமிழக எல்லையை ஒட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள், ஆந்திர பிரதேச கிரானைட் மாபியா கும்பலின் ஒத்துழைப்போடு இந்த குற்றத்தில் ஈடுபடுகின்றனர் என்பது பரவலாக நம்பப்படுகிறது. எனவே, ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு சட்ட விரோதமாக கிரானைட் கற்கள் கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தின் நகலை வேலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்ட கலெக்டர்களுக்கும் சந்திரபாபு நாயுடு அனுப்பியுள்ளார். கிரானைட் கடத்தலை தடுத்து நிறுத்த விரைவாக நடவடிக்கைகளை எடுக்கும்படி அவர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதேபோல ஆந்திர மாநில தலைமை செயலாளர் ஜவகர் ரெட்டிக்கும் புகார் அனுப்பியுள்ளார்.
- பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் வந்து 9 ஆண்டுகள் எப்படி இருந்தார்.
- வாலிபருக்கு எப்படி ஆதார் கார்டு வழங்கினர் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், நந்தியால் மாவட்டம், கடிவேமூ பகுதியை சேர்ந்தவர் தவுலத். இவருக்கு திருமணமாகி கணவர் இறந்து விட்ட நிலையில் ஒரு மகன் உள்ளார். பாகிஸ்தானை சேர்ந்தவர் குல்சார் கான்.
இவர் சவுதி அரேபியாவில் பெயிண்டராக வேலை செய்து வந்தார். அப்போது அவருடைய போன் கால் எதிர்பாராத விதமாக தவுலத்திற்கு வந்தது. பின்னர் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டனர்.
தவுலத் பேச்சில் மயங்கிய குல்சார் கான் தனது வேலையை விட்டு விட்டு இந்தியா வரவேண்டும் என எண்ணினார்.
இதையடுத்து சவுதி அரேபியாவில் இருந்து சட்ட விரோதமாக மும்பை வழியாக கருவேமூக்கு வந்தார். கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் 25-ந் தேதி தவுலத்தை திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் அவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் பிறந்தனர். குல்சார் கான் ஆதார் கார்டு பெற்ற பிறகு மனைவி மற்றும் 5 குழந்தைகளுடன் சவுதி அரேபியாவுக்கு செல்ல விசா பெற்றார்.
இதையடுத்து கடந்த 2019-ஆம் ஆண்டு சவுதி அரேபியாவுக்கு செல்வதற்காக குடும்பத்தினருடன் சம்சாபாத் விமான நிலையத்திற்கு சென்றார்.
அப்போது அவரது பாஸ்போர்ட்டை சோதனை செய்த விமான நிலைய அதிகாரிகள், குல்சார் கான் சட்ட விரோதமாக இந்தியாவிற்கு வந்து 9 ஆண்டுகளாக தங்கி இருந்ததை கண்டுபிடித்தனர்.
விமான நிலைய போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதனால் தவுலத் வீட்டு வேலைகள் செய்து கொண்டு தனது 5 குழந்தைகள் மற்றும் மனநலம் குன்றிய சகோதரியுடன் சிரமப்பட்டு வாழ்ந்து வந்தார்.
6 மாதங்களுக்கு பிறகு சிறையில் இருந்து வெளியே வந்த குல்சார் கானை போலீசார் மீண்டும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் வந்து 9 ஆண்டுகள் எப்படி இருந்தார். அவருக்கு எப்படி ஆதார் கார்டு வழங்கினர் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சவுதி அரேபியாவில் இருந்து சட்ட விரோதமாக மும்பை வழியாக குல்சார் கான் கருவேமூக்கு வந்தார்.
- குல்சார் கான் ஆதார் கார்டு பெற்ற பிறகு மனைவி மற்றும் 5 குழந்தைகளுடன் சவுதி அரேபியாவுக்கு செல்ல விசா பெற்றார்.
ஆந்திர மாநிலம், நந்தியால் மாவட்டம், கடிவேமூ பகுதியை சேர்ந்தவர் தவுலத். இவருக்கு திருமணமாகி கணவர் இறந்துவிட்ட நிலையில் ஒரு மகன் உள்ளார். பாகிஸ்தானை சேர்ந்தவர் குல்சார் கான். இவர் சவுதி அரேபியாவில் பெயிண்டராக வேலை செய்து வந்தார். அப்போது அவருடைய போன் கால் எதிர்பாராத விதமாக தவுலத்திற்கு வந்தது. பின்னர் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டனர்.
தவுலத் பேச்சில் மயங்கிய குல்சார் கான் தனது வேலையை விட்டு விட்டு இந்தியா வரவேண்டும் என எண்ணினார். இதையடுத்து சவுதி அரேபியாவில் இருந்து சட்ட விரோதமாக மும்பை வழியாக கருவேமூக்கு வந்தார். கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் 25-ந் தேதி தவுலத்தை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் பிறந்தனர். குல்சார் கான் ஆதார் கார்டு பெற்ற பிறகு மனைவி மற்றும் 5 குழந்தைகளுடன் சவுதி அரேபியாவுக்கு செல்ல விசா பெற்றார்.
இதையடுத்து கடந்த 2019-ஆம் ஆண்டு சவுதி அரேபியாவுக்கு செல்வதற்காக குடும்பத்தினருடன் சம்சாபாத் விமான நிலையத்திற்கு சென்றார். அப்போது அவரது பாஸ்போர்ட்டை சோதனை செய்த விமான நிலைய அதிகாரிகள், குல்சார் கான் சட்ட விரோதமாக இந்தியாவிற்கு வந்து 9 ஆண்டுகளாக தங்கி இருந்ததை கண்டுபிடித்தனர். விமான நிலைய போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதனால் தவுலத் வீட்டு வேலைகள் செய்து கொண்டு தனது 5 குழந்தைகள் மற்றும் மனநலம் குன்றிய சகோதரியுடன் சிரமப்பட்டு வாழ்ந்து வந்தார். 6 மாதங்களுக்கு பிறகு சிறையில் இருந்து வெளியே வந்த குல்சார் கானை போலீசார் மீண்டும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் வந்து 9 ஆண்டுகள் எப்படி இருந்தார். அவருக்கு எப்படி ஆதார் கார்டு வழங்கினர் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
- ஊஞ்சல் சேவை நடந்தது.
திருப்பதியில் உள்ள கோதண்டராமசாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் குப்பசந்திரபேட்டை உற்சவம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நேற்று குப்பசந்திரபேட்டை உற்சவம் நடத்தப்பட்டது. அதற்காக நேற்று காலை 6 மணியளவில் உற்சவர்களான சீதா, லட்சுமணர், கோதண்டராமர் பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலில் இருந்து புறப்பட்டனர்.
மேள தாளம் மற்றும் மங்கல வாத்தியங்கள் இசைக்க திருப்பதி அருகே 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குப்பசந்திரபேட்டை கிராமத்துக்கு காலை 9.30 மணிக்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர். அங்கு காலை 10 மணியில் இருந்து காலை 11.30 மணி வரை உற்சவர்களுக்கு மஞ்சள், குங்குமம், பால், தயிர், தேன், சந்தனம் ஆகிய சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் மாலை ஊஞ்சல் சேவை நடந்தது. அங்கிருந்து உற்சவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை அடைந்தனர். சாமி ஊர்வலத்தினபோது இந்து தர்ம பிரசார பரிஷத், தாச சாகித்திய திட்டங்களின் கீழ் பஜனை மற்றும் கோலாட்டங்கள் நடந்தன.
உற்சவத்தில் சின்ன ஜீயர் சுவாமி பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
- பேப்பர் கப், டம்ளர்களை பயன்படுத்தலாம் என்றால், அதன் உட்புறத்தில் பூசப்பட்டிருக்கும் மெழுகு உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது.
- டம்ளரில் டீ குடித்து முடித்ததும், ஐஸ்கிரீம் கோனை சாப்பிடுவதைப் போல் இந்த டம்ளரையும் சாப்பிட்டு விடலாம்.
திருப்பதி:
ஒருமுறை பயன்படுத்திவிட்டு துாக்கி எறியும் தண்ணீர் மற்றும் டீ, காபி பிளாஸ்டிக் டம்ளர்களை பயன்படுத்தினால் அது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
அது வேண்டாம், பேப்பர் கப், டம்ளர்களை பயன்படுத்தலாம் என்றால், அதன் உட்புறத்தில் பூசப்பட்டிருக்கும் மெழுகு உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத அதே நேரம் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்காத கப், டம்ளர்கள் குறித்த தேடல்கள் அதிகரித்துள்ள நிலையில், அதற்கான விடையை தருகிறார் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஜெயலட்சுமி.
விசாகப்பட்டினத்தை சேர்ந்த முன்னாள் ஆசிரியரான ஜெயலட்சுமி, கேழ்வரகு மாவு மற்றும் அரிசி மாவினால் ஆன, டீ, காபி டம்ளர்களை தயாரித்து சந்தைப்படுத்தி வருகிறார்.
ஐஸ்கிரீம் கோன்களை போல், இவர் தயாரிக்கும் டம்ளர்களை அப்படியே சாப்பிடலாம். இந்த டம்ளரில் சூடான பானத்தை 20 நிமிடம் வரை வைத்திருக்க முடியும். இந்த டம்ளரில் டீ குடித்து முடித்ததும், ஐஸ்கிரீம் கோனை சாப்பிடுவதைப் போல் இந்த டம்ளரையும் சாப்பிட்டு விடலாம்.
60 மி.லி., 80 மி.லி., என 2 அளவுகளில் டம்ளர்களை செய்கிறார். நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் டம்ளர்கள் உற்பத்தி செய்கிறார். இதில் ஆண்டுக்கு 7 லட்சம் வரை லாபம் பார்ப்பதாக கூறியுள்ளார்.
- வாழ்க்கையில் விரக்தி அடைந்த சிவலிங்கேஸ்வரி கணவர் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் இருந்த 2 மகன்களையும் ஒருவர் பின் ஒருவராக தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்தார்.
- மாலை பணி முடிந்து வீட்டிற்கு வந்த இந்திர சேனா மனைவி மற்றும் மகன்கள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், நரசராவ் பேட்டை, பெடசெருவு பகுதியை சேர்ந்தவர் இந்திர சேனா. இவருக்கும் ரொம்பி சர்லா, நல்கர்ல பாடு பகுதியை சேர்ந்த சிவலிங்கேஸ்வரி (வயது 27) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
தம்பதிக்கு சரண் சாய் (8), ஜிதின் (4) என 2 மகன்கள் இருந்தனர். இந்திர சேனா குண்டூரில் உள்ள தனியார் டிராக்டர் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார்.
இந்திர சேனா திருமணத்திற்கு முன்பு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். திருமணத்திற்கு பின்னரும் இந்திர சேனா அந்த பெண்ணுடனான தொடர்பை துண்டிக்காததால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டபோது இந்திர சேனா, சிவலிங்கேஸ்வரியை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சிவலிங்கேஸ்வரி நேற்று காலை கணவர் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் இருந்த 2 மகன்களையும் ஒருவர் பின் ஒருவராக தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்தார். பின்னர் சிவலிங்கேஸ்வரியும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
மாலை பணி முடிந்து வீட்டிற்கு வந்த இந்திர சேனா மனைவி மற்றும் மகன்கள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குண்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+2
- உண்டியல் பணம் கிரேன் மூலம் புதிய கட்டிடத்திற்கு கொண்டுவரப்பட்டது.
- உண்டியல் பணம் எண்ணுவதை பக்தர்கள் அறையில் கண்ணாடிக்கு வெளியே இருந்து காணலாம் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று தொடங்கியது.
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மாரெட்டி கூறியதாவது:
ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் பணத்தை எண்ணும் பணி ஞாயிற்றுக்கிழமை காலை புதிய பரகாமணி கட்டிடத்தில் தொடங்கியது.
புதிய கட்டிடத்தில் அதிநவீன பாதுகாப்புடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சி.சி.டி.வி கேமரா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளதால், நேற்று முதல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கப்பட்டது. உண்டியல் பணம் கிரேன் மூலம் புதிய கட்டிடத்திற்கு கொண்டுவரப்பட்டது.
ஒரு மாதத்திற்கு பின், கோவிலில் உள்ள பரகாமணி மண்டபம், பக்தர்கள் அமர்வதற்கு ஏற்றவாறு அமைக்கப்படும் என்றார்.
முன்னதாக, புதிய பரகாமணி கட்டடத்தில் உள்ள படத்துக்கு வாஸ்து ஹோமம், கோபூஜை, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. உண்டியல் பணம் எண்ணுவதை பக்தர்கள் அறையில் கண்ணாடிக்கு வெளியே இருந்து காணலாம் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதியில் நேற்று 78, 340 பேர் தரிசனம் செய்தனர். 27,063 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.30 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- மாணவர்கள் விடுதி அறைக்கு வந்து பார்த்தபோது தாரனேஸ்வரர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
- மாணவர் தற்கொலை செய்து கொண்டதும் அவர் பிணத்தை பார்த்து விடுதி வார்டன் மயங்கி விழுந்து இறந்த சம்பவமும் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் ஒ.எஸ்.ஆர் மாவட்டம், புலிவேந்தலா பகுதியை சேர்ந்தவர் தாரனேஸ்வரர் (வயது 21).
திருப்பதி கூடூரு பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் விடுதிஅறையில் தனியாக இருந்த தாரனேஸ்வரர் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார். மாணவர்கள் விடுதி அறைக்கு வந்து பார்த்தபோது தாரனேஸ்வரர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து விடுதி வார்டன் சீனிவாசலுக்கு (57) தகவல் தெரிவித்தனர்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சீனிவாசலு மாணவரின் பிணத்தை பார்த்து திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.
அருகில் இருந்த மாணவர்கள் சீனிவாசலுவை மீட்டு கூடுரு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சீனிவாசலு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கல்லூரி மாணவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டதும் அவர் பிணத்தை பார்த்து விடுதி வார்டன் மயங்கி விழுந்து இறந்த சம்பவமும் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






