என் மலர்
ஆந்திர பிரதேசம்
- வீட்டில் இருக்கும்போது காவ்யா செல்போன்களில் அவரது தோழியுடன் அடிக்கடி போனில் பேசி வந்தார்.
- காவ்யாவை அடித்து அவரது கழுத்தை பிடித்து இழுத்து வந்து மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் எட்லபாடு கிராமத்தைச் சேர்ந்தவர் வர பிரசாத் (வயது 48) இவரது மகள் காவ்யா அங்குள்ள தனியார் கல்லூரியில் இடைநிலை முதலாமாண்டு படித்து வருகிறார்.
வீட்டில் இருக்கும்போது காவ்யா செல்போன்களில் அவரது தோழியுடன் அடிக்கடி போனில் பேசி வந்தார். இது அவரது தந்தைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர் மகளை கண்டித்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை கல்லூரியில் இருந்து வீடு திரும்பிய காவ்யா தனது தோழி ஒருவருடன் போனில் பேசிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் குடிபோதையில் வரபிரசாத் வீட்டுக்கு வந்தார்.
மகள் போனில் பேசியதை கண்ட அவர் ஆத்திரம் அடைந்தார். மகளை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதுடன் யாருடன் செல்போனில் பேசுகிறாய் என்று கேட்டு தாக்கினார்.
தந்தையின் கொலை வெறி தாக்குதலால் பீதியடைந்த மாணவி அவரிடமிருந்து தப்பி ஓடினார். வீட்டை விட்டு வெளியேறிய அவர் பக்கத்து வீட்டு மாடியில் ஏறினார். அவரை விரட்டிச் சென்ற வரபிரசாத் பக்கத்து வீட்டு மாடியில் வைத்து காவ்யாவை மடக்கி பிடித்தார்.
மேலும் காவ்யாவை அடித்து அவரது கழுத்தை பிடித்து இழுத்து வந்து மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டார்.
இதில் காவ்யாவிற்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சுயநினைவை இழந்தார்.
இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மாணவியை மீட்டு அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் எட்லபாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து வர பிரசாத்தை கைது செய்தனர்.
- மார்ச் மாதத்துக்கான அங்கப்பிரதட்சணம் டோக்கன்கள் இன்று ஆன்லைனில் வெளியிடுகிறது.
- ஆன்லைன் முன்பதிவு காலை 11 மணிக்கு தொடங்குகிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க மார்ச் மாதத்துக்கான அங்கப்பிரதட்சணம் டோக்கன்கள் ஆன்லைன் ஒதுக்கீட்டையும், இந்த மாதம் 23, 28-ந் தேதிகளுக்கான வெளியிடப்படாத டோக்கன்கள் ஒதுக்கீட்டையும் இன்று (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிடுகிறது.
பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மார்ச் இறுதியில் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஏவப்படவிருக்கிறது.
- ஆளில்லா ராக்கெட்டை விண்ணில் ஏவ உள்ளோம்.
ஸ்ரீஹரிகோட்டா :
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்தியாவின் புதிய ரக ராக்கெட்டான எஸ்.எஸ்.எல்.வி. டி-2 ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
அதைத்தொடர்ந்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் விஞ்ஞானிகள் மத்தியில் பேசியதாவது:-
இஸ்ரோ குழுவில் தற்போது புதிய ரக ராக்கெட்டை இணைத்துள்ளோம். இதன் மூலம் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தி உள்ளோம். இந்த வெற்றிக்காக பாடுபட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள். எஸ்.எஸ்.எல்.வி. டி-1 ராக்கெட்டில் ஏற்பட்ட குறைபாடுகளைக் கண்டறிந்து, வெகு விரைவாக டி-2 ராக்கெட்டை தயாரித்து செலுத்தியுள்ளோம். இப்போதைக்கு எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படும். தமிழகத்தின் குலசேகரபட்டினத்தில் ஏவுதளம் அமைக்கப்பட்ட பிறகு அங்கிருந்து எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட் ஏவப்படும்.
வரும் மார்ச் 2-வது வாரத்துக்கு மேல், இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒன்வெப் நிறுவனத்துக்கு சொந்தமான 36 செயற்கைக்கோள்கள் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 எல்.எம்.வி. ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளன. அதேபோல் மார்ச் இறுதியில் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஏவப்படவிருக்கிறது. மீண்டும் உபயோகிக்கக்கூடிய ராக்கெட்டுக்கான பரிசோதனையை சித்திரதுர்கா மையத்தில் வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறோம்.
மனிதர்களை விண்ணுக்கு சுமந்துசெல்லும் ககன்யான் திட்டம் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கடலில் வீரர்களை பத்திரமாக இறக்குவது பற்றிய பரிசோதனை நடந்துவருகிறது. இந்த ஆண்டு மற்றொரு ராக்கெட்டை ஏவ இருக்கிறோம். குறிப்பாக, ஆளில்லா ராக்கெட்டையும் விண்ணில் ஏவ உள்ளோம். அதேபோல் இந்த ஆண்டு இறுதியில், இந்தியா-அமெரிக்காவின் கூட்டுத்திட்டமான நிசார் செயற்கைக்கோளை ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட் மூலம் ஏவ இருக்கிறோம். இதுதவிர பல பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளும் இந்த ஆண்டு ஏவப்பட உள்ளன. ஆசாதிசாட் செயற்கைக்கோளை வடிவமைத்து வெற்றிகரமாக உருவாக்கிய இளம் குழுவினருக்கு எனது பாராட்டுகள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கான்கிரீட் இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களின் இதயத் துடிப்பைக் கண்டறியும் ரேடார்களை பயன்படுத்தி வருகின்றனர்.
- இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்டு சிகிச்சை அளித்து வரும் இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் டாக்டர்களை அந்த பகுதி மக்கள் கட்டி தழுவி நன்றி தெரிவித்தனர்.
திருப்பதி:
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியின் ஹடாய் மாகாணத்தில் இந்திய ராணுவம் தற்காலிக மருத்துவமனை அமைத்து அவசர மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது. அங்கு தேவைப்படுபவர்களுக்கு அறுவை சிகிச்சைகளை ராணுவ டாக்டர்கள் செய்து வருகின்றனர்.
தற்காலிக மருத்துவமனையில் எந்திரங்கள், வென்டிலேட்டர்கள் மற்றும் அறுவை சிகிச்சை அரங்குகள் உள்ளிட்ட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. காசியான்டெப் பகுதியில் 6 வயது குழந்தை மீட்கப்பட்டது. கான்கிரீட் இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களின் இதயத் துடிப்பைக் கண்டறியும் ரேடார்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்டு சிகிச்சை அளித்து வரும் இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் டாக்டர்களை அந்த பகுதி மக்கள் கட்டி தழுவி நன்றி தெரிவித்தனர்.
இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விஜய்குமார் கவுட் என்ற நபர், துருக்கியில் பணியாற்றி வந்தார். அவர் நிலநடுக்கம் வந்த பிறகு காணாமல் போய்விட்டார். அவரது குடும்பத்தினரும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
- ஒன்றரை வருடங்களாக சவாராபாரியின் கண்ணீரை யாரும் கவனிக்கவில்லை.
- ஓய்வூதியம் நிறுத்தப்பட்டதால் சாப்பாட்டுக்கு வழியின்றி கடைசியாக பட்டினியால் இறந்தார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் மெலியபுட்டி மண்டலம் பத்மாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சவரா பாரி (வயது 86).மாமிடிகுட்டி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்.
இவரது மனைவி 15 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். குழந்தைகள் இல்லாமல் தனிமையில் வசித்து வந்தார்.அரசு வழங்கிய முதியோர் உதவி தொகை மூலம் பிழப்பை நடத்தி வயிற்று பசியை போக்கி வந்தார்.
இந்த நிலையில் முதியோர் உதவித்தொகை பெறுவதில் புதிய முறை கொண்டுவரப்பட்டது இதில் கைரேகை இல்லை என்ற காரணத்திற்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு முதியோர் உதவி தொகை வழங்குவதை அதிகாரிகள் நிறுத்தினர்.
இதனால் வருமானம் இன்றி வாழ வழி இன்றி சவேரா பாரி தவித்தார். அவரை உயர் அதிகாரிகளிடம் பலமுறை அழைத்துச் சென்றும் நீதி கிடைக்கவில்லை. பல முறை முயற்சித்தும் தீர்வு கிடைக்கவில்லை.
மெலியபுட்டி மண்டலம் நெலபொன் துலோ தெக்காளி சப்-கலெக்டர் ராகுல்க்குமார ரெட்டி சிறப்பு முகாம் நடத்தினார்.அப்போது உடல் நலம் குன்றிய முதியவர் என்று முறையிட்டாலும், கண்பார்வை பாதிக்கப்பட்டதாகச் சொல்லியும், கருணை காட்டவில்லை. ஒன்றரை வருடங்களாக சவாராபாரியின் கண்ணீரை யாரும் கவனிக்கவில்லை.
ஓய்வூதியம் நிறுத்தப்பட்டதால் சாப்பாட்டுக்கு வழியின்றி கடைசியாக நேற்று காலை பட்டினியால் இறந்தார்.
இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இஸ்ரோ மேம்படுத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி - டி2 ரக ராக்கெட்டை வடிவமைத்துள்ளது.
- ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எஸ்.எஸ்.எல்.வி- டி2 ரக ராக்கெட் விண்ணில் ஏவியது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சிறிய செயற்கைக் கோள்களை சுமந்துசெல்லும் எஸ்.எஸ்.எல்.வி- டி1 ரக ராக்கெட்டை விண்ணில் ஏவியது.
இந்த ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டமிட்ட இலக்கில் செயற்கைக் கோள்களை நிலைநிறுத்தவில்லை. இதனால் இஸ்ரோ மேம்படுத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி - டி2 ரக ராக்கெட்டை வடிவமைத்துள்ளது.
இதில் பூமி கண்காணிப்பு செயற்கைக் கோளான இ.ஓ.எஸ்.07 மற்றும் கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டில் செலுத்தப்பட்டு தோல்வி அடைந்த செயற்கைக்கோள்களுக்கு பதிலாக தற்போது தயாரிக்கப்பட்ட ஆசாதி சாட்-2 மற்றும் ஜானஸ்-1 உள்பட 334 கிலோ எடை கொண்ட 3 செயற்கைக்கோள்களை பூமியில் இருந்து 356.2 கிலோமீட்டர் உயரத்தில் 450 கிலோமீட்டர் புவிவட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எஸ்.எஸ்.எல்.வி- டி2 ரக ராக்கெட் இன்று காலை 9.18 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
- கடந்த ஆகஸ்டில் சிறிய செயற்கைக்கோள்களை சுமந்துசெல்லும் எஸ்.எஸ்.எல்.வி- டி1 ரக ராக்கெட்டை ஏவியது.
- இஸ்ரோ மேம்படுத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி- டி2 ரக ராக்கெட்டை வடிவமைத்துள்ளது.
ஸ்ரீஹரிகோட்டா:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சிறிய செயற்கைக் கோள்களை சுமந்துசெல்லும் எஸ்.எஸ்.எல்.வி- டி1 ரக ராக்கெட்டை விண்ணில் ஏவியது. இந்த ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டமிட்ட இலக்கில் செயற்கைக் கோள்களை நிலைநிறுத்தவில்லை. இதனால் இஸ்ரோ மேம்படுத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி - டி2 ரக ராக்கெட்டை வடிவமைத்துள்ளது.
இதில் பூமி கண்காணிப்பு செயற்கைக் கோளான இ.ஓ.எஸ்.07 மற்றும் கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டில் செலுத்தப்பட்டு தோல்வி அடைந்த செயற்கைக்கோள்களுக்கு பதிலாக தற்போது தயாரிக்கப்பட்ட ஆசாதி சாட்-2 மற்றும் ஜானஸ்-1 உள்பட 334 கிலோ எடை கொண்ட 3 செயற்கைக்கோள்களை பூமியில் இருந்து 356.2 கிலோமீட்டர் உயரத்தில் 450 கிலோமீட்டர் புவிவட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வுமையத்தில் இருந்து இந்த ராக்கெட் இன்று காலை 9.18 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்து தயார் நிலையில் உள்ளது என கூறினர்.
- இந்த விழா 13-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை 13 நாட்கள் நடக்கிறது.
- 20-ந்தேதி சிவ பார்வதி திருக்கல்யாணம் நடக்கிறது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா வரும் 13-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை 13 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
அதன்படி முதல் நாளான 13-ந் தேதி பிற்பகல் 2 மணியளவில் சிவன் கோவிலில் மூலவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞான பிரசுனாம்பிகை தாயார், பக்த கண்ணப்பர் ஆகியோருக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்படும்.
அதைத்தொடர்ந்து உற்சவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானபிரசுனாம்பிகை தாயார், பக்த கண்ணப்பர் ஆகியோரை பல்லக்கில் வைத்தும், உடுக்கை படம் வரையப்பட்ட மஞ்சள் நிறத்திலான கொடியை மேள தாளம் முழங்க, வாண வேடிக்கைகளுடன் ஸ்ரீகாளஹஸ்தியில் இருந்து பக்த கண்ணப்பர் கோவிலான கைலாசகிரி மலைக்குப் பக்தர்கள், ஊர்வலமாக கொண்டு செல்கின்றனர்.
அங்கு, வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை முழங்க பக்த கண்ணப்பர் கோவில் கொடி மரத்தில் அர்ச்சகர்கள் கொடியேற்ற உள்ளனர். பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவில் முழுவதும் வண்ண மின்விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. கோவில் கோபுரங்கள் வாகன சேவையில் ஈடு படுத்தப்படும் வாகனங்களுக்கு வண்ணம் தீட்டப்பட்டு வருகிறது.
தரிசனத்திற்கு வரும் பக்தர்களை கவரும் வகையில் 4 மாட வீதிகளில் தரையில் வண்ண ரங்கோலி கோலங்கள் வரையப்பட்டு வருகின்றன. 2-வது நாள் காளஹஸ்தி சிவன் கோவிலில் கொடியேற்றம் நடைபெறுகிறது இதையடுத்து 15-ந் தேதி காலை பூத வாகன சேவையும் மாலை சுக வாகன சேவையும் நடைபெறுகிறது.
16-ந் தேதி காலை ராவண வாகன சேவையும், மாலை மயூர வாகன சேவையும் 17ஆம் தேதி சேஷ வாகன சேவையும் மாலை யாழி வாகனமும் 18-ந் தேதி மகா சிவராத்திரி அன்று லிங்கோத்ஷவமும், மாலை இந்திர விமான வாகன சேவையும், 19-ந் தேதி முக்கிய நிகழ்வாக ரத உற்சவம் நடைபெறுகிறது. மாலை கோவில் வளாகத்தில் உள்ள திருக்குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது.
20-ந்தேதி சிவ பார்வதி திருக்கல்யாணமும், 21-ந் தேதி சபாபதி திருக்கல்யாணமும், 22ந் தேதி கிரி பிரதக்ஷனா நடைபெறுகிறது.23-ந் தேதி யாத்ரிகர் துவாரஜனம் நடைபெற உள்ளது.
26 ஆம் தேதி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் நித்திய பூஜைகளுடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது. பிரமோற்சவ விழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட இடங்களில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்வது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சமூக விரோத கும்பலை கண்காணிக்க கூடுதலாக ஆங்காங்கே கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வருகிறது.
பக்தர்களை கட்டுப்படுத்தி வரிசையில் தரிசனத்திற்கு அனுப்பு வதற்காக ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
- நாளை அங்குரார்ப்பணம் நடக்கிறது.
- 18-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருகிற 11-ந்தேதியில் இருந்து 20-ந்தேதி வரை 10 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடக்க உள்ளது. அதையொட்டி 10-ந்தேதி மாலை கோவிலில் அங்குரார்ப்பணம் நடக்கிறது.
அதைத்தொடர்ந்து 11-ந்தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் மீன லக்னத்தில் நடக்கிறது. அன்று இரவு ஹம்ச வாகன வீதிஉலா, 12-ந்தேதி காலை சூரிய பிரபா வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபா வாகன வீதிஉலா, 13-ந்தேதி காலை பூத வாகன வீதிஉலா, இரவு சிம்ம வாகன வீதிஉலா, 14-ந்தேதி காலை மகர வாகன வீதிஉலா, இரவு சேஷ வாகன வீதிஉலா, 15-ந்தேதி காலை திருச்சி உற்சவம், இரவு அதிகார நந்தி வாகன வீதிஉலா.
16-ந்தேதி காலை வியாக்ர வாகன வீதிஉலா, இரவு கஜ வாகன வீதிஉலா, 17-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு குதிரை வாகன வீதிஉலா, 18-ந்தேதி காலை தேரோட்டம் (போகி தேர்), இரவு நந்தி வாகன வீதிஉலா, 19-ந்தேதி காலை புருஷா மிருக வாகன வீதிஉலா, மாலை சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவம், இரவு திருச்சி உற்சவம், 20-ந்தேதி காலை சூரிய பிரபா வாகன வீதிஉலா, திரிசூல ஸ்நானம், இரவு கொடி இறங்குதல், ராவணாசூர வாகன வீதிஉலா நடக்கிறது. இத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.
மேற்கண்ட வாகனங்களில் உற்சவர்களான கபிலேஸ்வரர், காமாட்சி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மேள தாளம் மற்றும் மங்கல இறை இசை வாத்தியங்கள் இசைக்க வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
கபிலேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி வாகனச் சேவை விவரம் அச்சிடப்பட்ட புத்தகத்தை திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் தனது அலுவலகத்தில் வெளியிட்டார். அப்போது அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
- டேங்கரில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு தொழிலாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- எண்ணெய் ஆலை உரிமையாளர் அம்பாண்டி சுப்பண்ணாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் பெத்தபுரம் மண்டலம் ஜி ராகம்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலை கடந்த ஆண்டு புதியதாக தொடங்கப்பட்டது.
இங்கு அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் உள்ள படேரு மற்றும் புலிமேரு கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணா, நரசிம்மா, சாகர், பாஞ்சி பாபு, கர்ரி ராமராவ், கட்டமுரி ஜெகதீஷ் மற்றும் பிரசாத் ஆகிய 7 தொழிலாளர்கள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தனர்.
இவர்கள் இன்று காலை தொழிற்சாலையில் இருந்த தொட்டி ஒன்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். தொட்டியில் உள்ளே கசடுகளை அகற்ற உள்ளே இறங்கினர்.
அப்போது மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் 7 பேரும் மூச்சு திணறல் ஏற்பட்டு அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.
எண்ணெய் தொழிற்சாலை, தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை. நச்சு வாயு காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பலியான 7 பேர் ஏணியைப் பயன்படுத்தி தொட்டியில் நுழைந்ததும் அவர்கள் அனைவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
தொட்டியில் ஏறிய பிறகு மூச்சு விட முடியவில்லை என்று உயிர் பிழைத்த ஒருவர் கூறினார்.
தொழிலாளர்கள் உடல்கள் மீட்கப்பட்டு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொழிலாளர்களின் உறவினர்கள் திரண்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு காக்கிநாடா எஸ்.பி. ரவிந்தரநாத் பாபு மற்றும் அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பிறந்தநாள் கொண்டாட்டத்திலிருந்த சிறுமியின் நண்பர்கள் 5 பேர் போதைபொருளை அதிக அளவில் சாப்பிட்டு போதையில் இருந்தனர்.
- சிறுமியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய அவரது தோழி அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள சந்திராண குட்டா கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தனது பிறந்தநாளை ஆண் நண்பர்களுடன் கடந்த 4-ந் தேதி கொண்டாடினார். அப்போது அவரது காதலனும் உடன் இருந்தார்.
பிறந்தநாள் கொண்டாட்டத்திலிருந்த சிறுமியின் நண்பர்கள் 5 பேர் போதைபொருளை அதிக அளவில் சாப்பிட்டு போதையில் இருந்தனர்.
மேலும் அவர்கள் சிறுமியிடம் தங்களுக்கு உனது தோழி யாரையாவது இங்கே அழைத்து வர முடியுமா எனக் கேட்டுள்ளனர். அதன்படி சிறுமி வெளியே சென்றார்.
அப்போது அவரது நெருங்கிய தோழியான 16 வயது சிறுமி அவரது தாயாருக்கு மருந்து வாங்குவதற்காக அருகில் உள்ள மருந்து கடைக்கு வந்திருந்தார்.
அவரிடம் சிறுமி நைசாக பேச்சு கொடுத்தார். எனது பிறந்தநாள் விழா நடக்கிறது. உடனே வர வேண்டும் என கட்டாயப்படுத்தி அழைத்தார். இதனை அடுத்து அவர்கள் கண்டிக்கல் கேட் பகுதியில் உள்ள பிறந்தநாள் கொண்டாடிய வீட்டிற்கு சென்றனர்.
அங்கு சென்றதும் தோழியை ஆண் நண்பர்கள் இருந்த அறையில் தள்ளி விட்டு விட்டு பிறந்தநாள் கொண்டாடிய சிறுமி தனது காதலனுடன் மற்றொரு அறைக்கு சென்று விட்டார்.
அங்கு போதையின் உச்சத்தில் இருந்த 5 வாலிபர்களும் சேர்ந்து அறையில் தள்ளி விடப்பட்ட 16 வயது சிறுமிக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கட்டாயப்படுத்தி வாயில் ஊற்றினர். சிறுமி மயக்க நிலையில் இருந்தபோது 5 பேரும் மாறி மாறி பலாத்காரம் செய்தனர். சிறுமி கூச்சலிட்டால் வெளியே சத்தம் கேட்கக்கூடாது என்பதற்காக தங்களது அறையில் இருந்த ஒலிபெருக்கியில் சத்தமாக சினிமா பாடல் ஒலிபரப்பினர்.
சிறுமியை பலாத்காரம் செய்த 5 பேரும் அவரை அங்கேயே விட்டுவிட்டு சென்று விட்டனர்.
அதிகாலை 3 மணிக்கு சிறுமிக்கு மயக்கம் தெளிந்தது. பின்னர் அவர் வீட்டிற்கு சென்று நடந்த கொடுமைகள் குறித்து தனது தாயாரிடம் கூறினார். இது குறித்து சந்திரநாக போலீசில் புகார் செய்தார். போலீசார் நடந்த சம்பவம் குறித்து சிறுமியிடம் தகவல்களை கேட்டறிந்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
இதுகுறித்து போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தோழி மற்றும் பலாத்காரம் செய்த 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.
கைதான வாலிபர்கள் 5 பேரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். சிறுமியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய அவரது தோழி அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இஸ்ரோ மேம்படுத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி. 2 ரக ராக்கெட்டை வடிவமைத்து உள்ளது.
- ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டமிட்ட இலக்கில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தவில்லை.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சிறிய செயற்கைக்கோள்களை சுமந்துசெல்லும் எஸ்.எஸ்.எல்.வி-01 ரக ராக்கெட்டை விண்ணில் ஏவியது.
இந்த ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டமிட்ட இலக்கில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தவில்லை. இதனால் இஸ்ரோ மேம்படுத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி. 2 ரக ராக்கெட்டை வடிவமைத்து உள்ளது.
இதில் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளான இ.ஓ.எஸ்.07 மற்றும் கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டில் செலுத்தப்பட்டு தோல்வி அடைந்த செயற்கைக்கோள்களுக்கு பதிலாக தற்போது தயாரிக்கப்பட்ட ஆசாதி சாட்-2 மற்றும் ஜானஸ்-1 உள்பட 334 கிலோ எடை கொண்ட 3 செயற்கைக்கோள்களை பூமியில் இருந்து 356.2 கிலோ மீட்டர் உயரத்தில் 450 கிலோமீட்டர் புவிவட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வுமையத்தில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.18 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்து தயார் நிலையில் உள்ளது. இதனுடைய இறுதிகட்ட பணியான கவுண்ட்டவுன் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.






