search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pakistan Youth"

    • பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் வந்து 9 ஆண்டுகள் எப்படி இருந்தார்.
    • வாலிபருக்கு எப்படி ஆதார் கார்டு வழங்கினர் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், நந்தியால் மாவட்டம், கடிவேமூ பகுதியை சேர்ந்தவர் தவுலத். இவருக்கு திருமணமாகி கணவர் இறந்து விட்ட நிலையில் ஒரு மகன் உள்ளார். பாகிஸ்தானை சேர்ந்தவர் குல்சார் கான்.

    இவர் சவுதி அரேபியாவில் பெயிண்டராக வேலை செய்து வந்தார். அப்போது அவருடைய போன் கால் எதிர்பாராத விதமாக தவுலத்திற்கு வந்தது. பின்னர் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டனர்.

    தவுலத் பேச்சில் மயங்கிய குல்சார் கான் தனது வேலையை விட்டு விட்டு இந்தியா வரவேண்டும் என எண்ணினார்.

    இதையடுத்து சவுதி அரேபியாவில் இருந்து சட்ட விரோதமாக மும்பை வழியாக கருவேமூக்கு வந்தார். கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் 25-ந் தேதி தவுலத்தை திருமணம் செய்து கொண்டார்.

    பின்னர் அவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் பிறந்தனர். குல்சார் கான் ஆதார் கார்டு பெற்ற பிறகு மனைவி மற்றும் 5 குழந்தைகளுடன் சவுதி அரேபியாவுக்கு செல்ல விசா பெற்றார்.

    இதையடுத்து கடந்த 2019-ஆம் ஆண்டு சவுதி அரேபியாவுக்கு செல்வதற்காக குடும்பத்தினருடன் சம்சாபாத் விமான நிலையத்திற்கு சென்றார்.

    அப்போது அவரது பாஸ்போர்ட்டை சோதனை செய்த விமான நிலைய அதிகாரிகள், குல்சார் கான் சட்ட விரோதமாக இந்தியாவிற்கு வந்து 9 ஆண்டுகளாக தங்கி இருந்ததை கண்டுபிடித்தனர்.

    விமான நிலைய போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    இதனால் தவுலத் வீட்டு வேலைகள் செய்து கொண்டு தனது 5 குழந்தைகள் மற்றும் மனநலம் குன்றிய சகோதரியுடன் சிரமப்பட்டு வாழ்ந்து வந்தார்.

    6 மாதங்களுக்கு பிறகு சிறையில் இருந்து வெளியே வந்த குல்சார் கானை போலீசார் மீண்டும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் வந்து 9 ஆண்டுகள் எப்படி இருந்தார். அவருக்கு எப்படி ஆதார் கார்டு வழங்கினர் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×