என் மலர்
ஆந்திர பிரதேசம்
- சங்கரம்மா வீட்டில் இல்லாததை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ராமுலுவிடம் விசாரித்தனர்.
- தாயின் உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டின் முன்பாக உள்ள தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் அமடபாகுலா பகுதியை சேர்ந்தவர் சங்கரம்மா (வயது 64). இவரது மகன் ராமுலு, மருமகள் சிவமணி. ராமுலு அதே பகுதியில் கறிக்கடை நடத்தி வந்தார். 3 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் சங்கரம்மா கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் அவதி அடைந்து வந்தார். ராமுலு தாயை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்தார். இருப்பினும் அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இதனால் தனது மனைவியுடன் சேர்ந்து தாயை கொலை செய்ய முடிவு செய்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த தாயை கழுத்தை நெருங்கி 2 பேரும் கொலை செய்தனர்.
பின்னர் தாயின் உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டின் முன்பாக உள்ள தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்தனர்.
சங்கரம்மா வீட்டில் இல்லாததை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ராமுலுவிடம் விசாரித்தனர். அதற்கு அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.
இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் வனபர்த்தி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்- இன்ஸ்பெக்டர் நாகசேகர் மற்றும் போலீசார் ராமுழு அவரது மனைவி சிவமணி ஆகியோரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் தாய் நடக்க முடியாமல் அவதி அடைந்து வந்ததால் அவரை கொலை செய்து தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்திருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சங்கரம்மாவின் உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வனபர்த்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து மகன், மருமகளை கைது செய்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் ஏராளமான திரண்டு வந்து புளியை வாங்கி செல்கின்றனர்.
- பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம் அனந்தகிரி மண்டலம் காசி பட்டினத்தில் 20-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. மலை கிராமங்களில் உள்ள புளிய மரத்தில் இந்த ஆண்டு புளி விளைச்சல் அமோகமாக உள்ளது.
மலை கிராமத்தை சேர்ந்த நாலாயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் புளியம் பழங்களை சேகரித்து மூங்கில் கூடைகளில் அடைத்து டோலி கட்டி மலையிலிருந்து கீழே கொண்டுவந்து சந்தை மைதானத்தில் வைத்து விற்பனை செய்கின்றனர்.
சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் ஏராளமான திரண்டு வந்து புளியை வாங்கி செல்கின்றனர். இதனால் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. ஆண்டுதோறும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் புளி வியாபாரம் செய்து வருவதாக பழங்குடியின மக்கள் தெரிவித்தனர்.
- தெலுங்கு புத்தாண்டான யுகாதியை முன்னிட்டு திருமலை அன்னமா பவனில் வருடாந்திர பட்ஜெட் குறித்த முழு விவரம் வெளியிடப்பட்டது.
- பக்தர்களின் உண்டியல் காணிக்கை மூலம், ரூ.1,131 கோடி வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாக மதிப்பிடப்பட்டு இருந்தது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் பக்தர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
2023-24-ம் ஆண்டிற்கான 4,400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை திருப்பதி தேவஸ்தானம் தயாரித்தது. ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு ஏற்கனவே கடந்த மாதம் ஆட்சி மன்ற குழு ஒப்புதல் அளித்தது. ஆனால், தேர்தல் விதிமுறைகள் அமலில் இருந்ததால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
தெலுங்கு புத்தாண்டான யுகாதியை முன்னிட்டு திருமலை அன்னமா பவனில் வருடாந்திர பட்ஜெட் குறித்த முழு விவரம் வெளியிடப்பட்டது.
தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி, முதன்மை செயல் அலுவலர் தர்மாரெட்டி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
பக்தர்களின் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க, திருப்பதி தேவஸ்தானத்தின் ஆட்சி மன்ற குழு 2023-24 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர பட்ஜெட்டை சுமார் ரூ.4,400 கோடியில் தயாரித்துள்ளது.
உண்டியல் மூலம் ரூ.1,591 கோடி வரை வருவாய் வரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வங்கியில் உள்ள டெபாசிட் பணம் மூலம் வட்டி சுமார் ரூ.1000 கோடியும், பிரசாத விற்பனை மூலம் ரூ.500 கோடியும் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
விடுதி வசதிகள், அறைகள், கடைகள் வாடகை என ரூ.100 கோடி வருவாய் கிடைக்கும். பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ரூ.3,200 கோடி மதிப்பீட்டில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா தொற்று தாக்கத்தால், உண்டியல் வருமானம் கணிசமாகக் குறைந்துள்ளது, அதற்கேற்ப வருடாந்திர பட்ஜெட் மதிப்பீடுகளும் குறைக்கப்பட்டுள்ளன.
2021-22 ஆம் ஆண்டிற்கான, திருப்பதி தேவஸ்தானத்தின் ஆட்சி மன்ற குழு ரூ.2,937.82 கோடி மதிப்பீட்டில் பட்ஜெட்டை தாக்கல் செய்து ஒப்புதல் அளித்தது. இதில், பக்தர்களின் உண்டியல் காணிக்கை மூலம், ரூ.1,131 கோடி வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாக மதிப்பிடப்பட்டு இருந்தது.
பிரசாத விற்பனை மூலம், ரூ.375 கோடி, அறைகள், கடைகள் வாடகை மூலம் ஆண்டுதோறும் பெரும் வருவாய் கிடைத்து வந்தது. ஆனால் அந்த ஆண்டு ரூ.3 ஆயிரம் கோடி மட்டுமே வருவாயாக கிடைத்தது.
ஒவ்வொரு ஆண்டும் உண்டியல் வருமானம் பெருமளவில் அதிகரிக்கிறது மற்றும் பட்ஜெட் திட்டங்களும் அதிகமாக உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- 3 நாட்கள் ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படுவது பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
- மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஏப்ரல் மாதத்திற்கான இலவச சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் 24-ந் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.
திருப்பதி:
திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு சேவைகள் மற்றும் தரிசனங்களுக்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டு வருகிறது.
அதன்படி ஜூன் மாதத்திற்கான ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் தினமும் 1000 பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் இன்று மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ரதிபாலங்கரா சேவைகளுக்கான டிக்கெட்டுகள் நாளை மறுநாள் காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
அங்கப்பிரதட்சணம் டிக்கெட்டுகள் 24-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஏப்ரல் மாதத்திற்கான இலவச சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் 24-ந் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.
இதனை பக்தர்கள் பயன்படுத்தி தரிசன டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து 3 நாட்கள் ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படுவது பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
- எல்.வி.எம்-3 இஸ்ரோவின் அதிக எடை கொண்ட ராக்கெட்டாகும்.
- எல்.வி.எம்-3 ராக்கெட் 8 டன் எடை வரை கொண்டு செல்லும் திறன் கொண்டது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
சென்னை:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து அவற்றில் செயற்கைகோள்களை பொருத்தி விண்ணில் ஏவி வருகிறது.
அந்தவகையில், அதிக எடையை தாங்கிச் செல்லும் ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் தயாரிக்கப்பட்ட மற்றொரு ராக்கெட்டான 'எல்.வி.எம்.எம்-3' ராக்கெட்டை இஸ்ரோ வடிவமைத்து உள்ளது. எல்.வி.எம்-3 இஸ்ரோவின் அதிக எடை கொண்ட ராக்கெட்டாகும். முன்பு இந்த ராக்கெட் ஜி.எல்.எஸ்.வி எம்.கே-3 என்று அழைக்கப்பட்டது.
இந்த ராக்கெட்டை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.
இந்த ராக்கெட்டில் ஒன்வெப் இந்தியா-2-க்கான 36 செயற்கைகோள்கள் பொருத்தப்பட்டு உள்ளன. வெள்ளி (வீனஸ்) கிரகத்தின் மேற்பரப்பில் எரிமலை செயல்பாடு குறித்து கண்டறிவதற்காக இந்த செயற்கைகோள்கள் பயன்படும்.
36 செயற்கைகோள்களின் மொத்த எடை சுமார் 5.8 டன் ஆகும். எல்.வி.எம்-3 ராக்கெட் 8 டன் எடை வரை கொண்டு செல்லும் திறன் கொண்டது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
- வீட்டிற்கு செல்ல வழி இன்றி தவிப்பதாக கூறி கூறி முதலமைச்சர் அலுவலகத்தில் மனு அளித்தார். மனுவை பெற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தனர்.
- ஆசிரியை ஒருவர் கருணை கொலை செய்து கொள்ள அனுமதிக்க கோரி முதலமைச்சர் அலுவலகத்தில் மனு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், பாபட்லா மாவட்டம், கொரிசபாடு மண்டலம் போடுவானிபாலத்தைச் சேர்ந்தவர் சுதாராணி. இவர் அத்தங்கி மண்டலம், கோபாலபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.
இவர் கடந்த ஜூன் மாதம் 18-ந் தேதி, தனது வீட்டுக்குச் செல்லும் வழியை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர்.
இதனால் வீட்டிற்கு செல்ல வழி இன்றி தவிப்பதாக கூறி கூறி முதலமைச்சர் அலுவலகத்தில் மனு அளித்தார். மனுவை பெற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தனர். மனு அளித்த பிறகும் பிரச்சினை தீரவில்லை.
இதையடுத்து சுதா ராணி தனது மகன், மகளுடன் முதலமைச்சரின் முகாம் அலுவலகத்திற்கு மீண்டும் சென்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது அங்கிருந்த அதிகாரிகளிடம் மனு ஒன்றை சுதா ராணி கொடுத்தார்.
நான் ஏற்கனவே மனு அளித்தபோது மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். இதனால் தன்னையும், தனது குடும்ப உறுப்பினர்களையும் கருணை கொலை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என கூறி இருந்தார். மனுவை படித்து பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஆசிரியையின் பிரச்சினையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
ஆசிரியை ஒருவர் கருணை கொலை செய்து கொள்ள அனுமதிக்க கோரி முதலமைச்சர் அலுவலகத்தில் மனு அளித்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- 22-ந்தேதி கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.
- 21, 22-ம் தேதிகளில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுக்கு நான்கு முறை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடத்தப்படுகிறது. அவை ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவ விழா, யுகாதி பண்டிகை, வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்கள் நடக்கும் முந்திய வாரத்தில் வரும் செவ்வாய்க்கிழமை அன்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கும்.
22-ந்தேதி யுகாதி பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால், நாளை (செவ்வாய்க்கிழமை) திருமலையில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது.
22-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு சுப்ரபாதம் முடிந்ததும், மூலவர் சன்னதி சுத்தி, காலை 6 மணிக்கு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி, விஷ்வக்சேனருக்கு விசேஷ சமர்ப்பணம், காலை 7 மணியில் இருந்து காலை 9 மணிக்குள் விமான பிரகார வலம், மூலவருக்கும் மற்றும் உற்சவருக்கும் புதிய பட்டு வஸ்திரம் அணிவித்தல், பஞ்சாங்க சிரவணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
ஏழுமலையான் கோவிலில் உள்ள தங்க வாசலில் ஆகம பண்டிதர்கள் மற்றும் பிரதான அர்ச்சகர்கள் அமர்ந்து சாஸ்திர பூர்வமாக உகாதி ஆஸ்தானத்தை நடத்துகின்றனர்.
யுகாதி ஆஸ்தானத்தையொட்டி கோவிலில் 22-ந்தேதி கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.
மேலும் நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (புதன்கிழமை) என 2 நாட்களும் கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 2 நாட்களும் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்துக்கான சிபாரிசு கடிதங்களும் நிராகரிக்கப்படுகின்றன. பக்தர்கள் இதைக் கவனத்தில் கொண்டு திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று அங்குரார்ப்பணம் நடந்தது.
- இன்று காலை 8.45 மணியில் இருந்து 9.32 மணி வரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடக்கிறது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதையொட்டி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை சேனாதிபதி உற்சவம், மேதினி பூஜை, மிருதங்கரஹணம், அங்குரார்ப்பணம் நடந்தது.
அதைத்தொடர்ந்து இன்று காலை 8.45 மணியில் இருந்து 9.32 மணி வரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடக்கிறது. அதன் பிறகு வாகனச் சேவை நடக்கிறது. வாகனச் சேவை தினமும் காலை 8 மணியில் இருந்து காலை 9.30 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரையிலும் நடக்கிறது.
வாகனங்களில் உற்சவர் கோதண்டராமர் தனித்தும், சீதா, லட்சுமணன், ஆஞ்சநேயருடன் இணைந்தும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது.
- 117 ரன்கள் இலக்கை விக்கெட் இழப்பின்றி 11 ஓவர்களில் 121 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணி வெற்றிப்பெற்றது.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் மும்பையில் நடந்தது. இதில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இரு அணிகளும் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தொடங்கியது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது.
இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சும்பன் கில் ஆகியோர் களம் புகுந்தனர். இதில் கில் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆகி ஏமாற்றினார்.
இதையடுத்து ரோகித்துடன் கோலி ஜோடி சேர்ந்தார். இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவின் அபார பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். இதில் கேப்டன் ரோகித் 13 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் கடந்த ஆட்டத்தை போல் இந்த ஆட்டத்திலும் முதல் பந்திலேயே அவுட் ஆனார்.
சற்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி 31 ரன்னில் வீழ்ந்தார். அக்சார் பட்டேல் 29 ரன்களையும் எடுத்தார்.
அடுத்து களம் இறங்கிய ராகுல் 9 ரன், ஹர்த்திக் பாண்ட்யா 1 ரன், ஜடேஜா 16 ரன், குல்தீப் 4 ரன், ஷமி 0 ரன் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆகினர்.
இறுதியில் இந்திய அணி 26 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆஸி. பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 117 ரன்களில் சுருண்டது இந்தியா.
அந்த அணி தரப்பில் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா தனது ஆட்டத்தை தொடங்கியது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது. 117 ரன்கள் இலக்கை விக்கெட் இழப்பின்றி 11 ஓவர்களில் 121 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணி வெற்றிப்பெற்றது.
இறுதிவரை ஆட்டம் இழக்காமல் மிட்சல் மார்ஷ் 62 ரன்களையும், ட்ராவிஸ் ஹெட் 46 ரன்களையும் எடுத்தனர்.
- ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
- 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் மும்பையில் நடந்தது.
இதில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இரு அணிகளும் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது.
இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சும்பன் கில் ஆகியோர் களம் புகுந்தனர். இதில் கில் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆகி ஏமாற்றினார்.
இதையடுத்து ரோகித்துடன் கோலி ஜோடி சேர்ந்தார். இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவின் அபார பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர்.
இதில் கேப்டன் ரோகித் 13 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் கடந்த ஆட்டத்தை போல் இந்த ஆட்டத்திலும் முதல் பந்திலேயே அவுட் ஆனார். சற்றி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி 31 ரன்னில் வீழ்ந்தார். அக்சார் பட்டேல் 29 ரன்களையும் எடுத்தார்.
அடுத்து களம் இறங்கிய ராகுல் 9 ரன், ஹர்த்திக் பாண்ட்யா 1 ரன், ஜடேஜா 16 ரன், குல்தீப் 4 ரன், ஷமி 0 ரன் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆகினர்.
இறுதியில் இந்திய அணி 26 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆஸி. பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 117 ரன்களில் சுருண்டது இந்தியா.
அந்த அணி தரப்பில் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளது.
- திடீரென லிப்ட் கதவு மூடப்பட்டு மேலே சென்றது. அங்கிருந்து பலத்த சத்தம் எழுப்பியபடி வேகமாக கீழே விழுந்தது.
- அங்கிருந்த தொழிலாளர்கள் லிப்டை உடைத்து 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், என்.டி.ஆர். மாவட்டம், கொண்டப்பள்ளியில் உள்ள நர்லா தட்டாராவில் அனல் மின் நிலையம் உள்ளது.
இங்கு 5-ம் கட்ட என்டிபிஎஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக 800 மெகாவாட் திறன் கொண்ட புதிய அனுமின் நிலைய கட்டுமானப் பணி நடந்து வருகிறது. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சில நாட்களாக வேலை செய்து வருகின்றனர்.
70 மீட்டர் உயரத்தில் வேலை செய்ய தொழிலாளர்கள் 310 டிகிரி கொண்ட லிஃப்டில் ஏறினர். ஜிதேந்திரசிங், சோட்டூசிங் உள்ளிட்ட 20 தொழிலாளர்கள் லிப்டில் மேலே சென்று கட்டுமான பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் மீண்டும் லிப்டில் கீழே வந்தனர். லிப்ட் கதவு திறக்காததால், தொழிலாளர்கள் உள்ளேயே சிக்கினர். சாவியை போட்டு லிப்டை திறந்தனர்.
அப்போது 20 தொழிலாளர்களில் 18 பேர் வெளியே வந்தனர். மேலும் 2 பேர் வர முற்பட்ட போது, திடீரென லிப்ட் கதவு மூடப்பட்டு மேலே சென்றது. அங்கிருந்து பலத்த சத்தம் எழுப்பியபடி வேகமாக கீழே விழுந்தது. இந்த விபத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஜித்தேந்திரா சிங், சோட்டு சிங் ஆகியோர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தனர்.
அங்கிருந்த தொழிலாளர்கள் லிப்டை உடைத்து 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் வரும்வழியிலேயே அவர்கள் 2 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இன்று அங்குரார்ப்பணம் நடக்கிறது.
- நாளை காலை 8.45 மணியில் இருந்து 9.32 மணி வரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடக்கிறது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் நாளை (திங்கட்கிழமை) வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை சேனாதிபதி உற்சவம், மேதினி பூஜை, மிருதங்கரஹணம், அங்குரார்ப்பணம் நடக்கிறது.
அதைத்தொடர்ந்து நாளை காலை 8.45 மணியில் இருந்து காலை 9.32 மணி வரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடக்கிறது. அதன் பிறகு வாகனச் சேவை நடக்கிறது. வாகனச் சேவை தினமும் காலை 8 மணியில் இருந்து காலை 9.30 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரையிலும் நடக்கிறது.
வாகனங்களில் உற்சவர் கோதண்டராமர் தனித்தும், சீதா, லட்சுமணன், ஆஞ்சநேயருடன் இணைந்தும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






