என் மலர்
ஆந்திர பிரதேசம்
- தி.மு.க. அரசின் பட்ஜெட் மக்களுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் இல்லை.
- ராகுலின் தகுதி இழப்பு விவகாரம் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து முழுக்க முழுக்க சட்டப்படி நடந்துள்ளது.
திருமலை:
மத்திய மந்திரி எல். முருகன் திருப்பதியில் நேற்று தரிசனம் செய்தார். வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை வழி பட்ட அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
பின்னர் மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. அரசின் பட்ஜெட் மக்களுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் இல்லை. கடந்த பட்ஜெட்டில் பட்டியல் இன மக்களின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை தி.மு.க. அரசு முழுவதுமாக செலவு செய்யவில்லை. இதுகுறித்து எங்கள் கட்சி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் சட்டசபையில் கேள்விகள் கேட்டுள்ளார்.
தேர்தல் நேரத்தில், குடும்ப தலைவிகள் அனைவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும். என்று தி.மு.க. வாக்குறுதி அளித்தது.
ஆனால் இப்போது தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அரசு கூறுகிறது.
இந்த விஷயத்தில் அவர்கள் தேர்தல் நேரத்தில் சொன்னதை செய்ய வேண்டும். ராகுலின் தகுதி இழப்பு விவகாரம் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து முழுக்க முழுக்க சட்டப்படி நடந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இங்கிலாந்தின் ஒன்வெப் செயற்கைகோள் நிறுவனத்தின் 36 செயற்கைகோள்களுடன் பூமியின் தாழ்வான வட்டப்பாதையில் இந்த ராக்கெட் ஏவப்படுகிறது.
- எல்.வி.எம்3-எம்3 ராக்கெட் 8 டன் எடை வரை தூக்கி செல்லும் திறன் கொண்டது.
ஸ்ரீஹரிகோட்டா:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதிக எடையை தூக்கி செல்லும் ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் 'எல்.வி.எம்3-எம்3' என்ற ராக்கெட்டை வடிவமைத்து உள்ளது. இந்த ராக்கெட் 'ஜி.எல்.எஸ்.வி எம்.கே-3' என்று அழைக்கப்பட்டது. இதில் ஒன்வெப் இந்தியா-2க்கான 36 செயற்கைகோள்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
இங்கிலாந்தின் ஒன்வெப் செயற்கைகோள் நிறுவனத்தின் 36 செயற்கைகோள்களுடன் பூமியின் தாழ்வான வட்டப்பாதையில் இந்த ராக்கெட் ஏவப்படுகிறது. அப்போது தகவல் தொடர்பு செயற்கைகோள்கள் புவிசார் சுற்றுப்பாதையில் செலுத்தப்படும்.
இந்த 36 செயற்கை கோள்களின் மொத்த எடை சுமார் 5.8 டன்னாகும். எல்.வி.எம்3-எம்3 ராக்கெட் 8 டன் எடை வரை தூக்கி செல்லும் திறன் கொண்டது.
இதற்கான இறுதிகட்டப்பணியான 24 மணி நேரம் 30 நிமிடம் கவுண்ட்டவுன் நேற்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து எல்.வி.எம்3-எம்3 ராக்கெட் இன்று காலை 9 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
- சாலையோரம் அடர்ந்த காட்டில் முட்புதரில் சிறுத்தை ஒன்று பதுங்கியபடி உறுமி கொண்டிருந்த சத்தத்தைக் கேட்டு அலறியடித்து ஓடினர்.
- திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் பீதி அடைந்துள்ளனர்.
திருப்பதி:
திருமலை திருப்பதி முதலாவது மலைப்பாதையில் நேற்று மாலை 5 மணியளவில் பக்தர்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, சாலையோரம் அடர்ந்த காட்டில் முட்புதரில் சிறுத்தை ஒன்று பதுங்கியபடி உறுமி கொண்டிருந்த சத்தத்தைக் கேட்டு அலறியடித்து ஓடினர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். எனினும் சிறுத்தை அங்கிருந்து காட்டுக்குள் தப்பியோடி விட்டது.
திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் பீதி அடைந்துள்ளனர்.
- 36 செயற்கைகோள்களை சுமந்தபடி 'எல்.வி.எம்-3' ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது.
- எல்.வி.எம்-3 ராக்கெட் 8 டன் எடை வரை கொண்டு செல்லும் திறன் கொண்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து அவற்றில் செயற்கைகோள்களை பொருத்தி விண்ணில் ஏவி வருகிறது.
அந்தவகையில், அதிக எடையை தாங்கிச் செல்லும் ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் தயாரிக்கப்பட்ட மற்றொரு ராக்கெட்டான 'எல்.வி.எம்.எம்-3' ராக்கெட்டை இஸ்ரோ வடிவமைத்து உள்ளது. எல்.வி.எம்-3 இஸ்ரோவின் அதிக எடை கொண்ட ராக்கெட்டாகும். முன்பு இந்த ராக்கெட் ஜி.எல்.எஸ்.வி எம்.கே-3 என்று அழைக்கப்பட்டது.
இந்த ராக்கெட்டை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 9 மணிக்கு விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.
இதற்கான இறுதிகட்டப்பணியான 24 மணி நேரம் 30 நிமிடம் கவுண்ட்டவுன் நேற்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கை கோள்களின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த ராக்கெட்டில் ஒன்வெப் இந்தியா-2-க்கான 36 செயற்கைகோள்கள் பொருத்தப்பட்டு உள்ளன. வெள்ளி (வீனஸ்) கிரகத்தின் மேற்பரப்பில் எரிமலை செயல்பாடு குறித்து கண்டறிவதற்காக இந்த செயற்கைகோள்கள் பயன்படும். 36 செயற்கைகோள்களின் மொத்த எடை சுமார் 5.8 டன் ஆகும். எல்.வி.எம்-3 ராக்கெட் 8 டன் எடை வரை கொண்டு செல்லும் திறன் கொண்டது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
- வசந்த உற்சவ விழா ஏப்ரல் 3 முதல் 5-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
- வசந்த உற்சவம் நடைபெறும் 3 நாட்களும் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஏப்ரல் 3-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை வசந்த உற்சவ விழா நடைபெற உள்ளது.
கோவிலுக்கு மேற்கு பகுதியில் உள்ள வசந்த மண்டபத்தில் தினமும் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை ஏழுமலையான் உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்னபன திருமஞ்சனம் நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விருப்பம் உள்ள பக்தர்களுக்காக திருப்பதி தேவஸ்தானம் நாளை மறுநாள் காலை 10 மணிக்கு டிக்கெட்கள் Tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
ஆண்டுதோறும் வசந்த உற்சவ விழா தொடங்கி பவுர்ணமி அன்று நிறைவடைவது வழக்கம் அதன்படி 3-ந்தேதி காலை 7 மணிக்கு ஏழுமலையான், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் 4 மாட வீதிகள் வழியாக வசந்த மண்டபத்தை சென்றடைகின்றனர். பின்னர் பூஜைகள் முடிந்து மாலை கோவிலுக்கு திரும்புகின்றனர்.
4-ந்தேதி காலை 8 மணி முதல் 10 மணி வரை ஏழுமலையான் 4 மாட விதிகளில் தங்க தேரில் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அதன்பின் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.
5-ந் தேதி ஸ்ரீதேவி, பூதேவி, சமேத ஏழுமலையான், சீதாராமர் லஷ்மணர், ஆஞ்சநேயர், ருக்மணி, கிருஷ்ணர் ஆகிய உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் கோவிலுக்கு வந்தடைகின்றனர்.
வசந்த உற்சவம் நடைபெறும் 3 நாட்களும் உற்சவ மூர்த்திகளுக்கு பால், தேன், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர், சாதம் ஆகியவை மூலம் அபிஷேகம் ஆராதனை நடைபெறுகிறது. மாலை 6 முதல் 6-30 மணி வரை ஆஸ்தானம் கோலாகலமாக நடைபெறுகிறது.
வசந்த உற்சவத்தையொட்டி வசந்த மண்டபம் பலவண்ண மலர்கள் மற்றும் பழங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு உள்ளது. வசந்த உற்சவம் நடைபெறும் 3 நாட்களும் அஷ்டதள பாத பத்மாராதனை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆஜித பிரமோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
திருப்பதியில் நேற்று 63, 507 பேர் தரிசனம் செய்தனர்.29,205 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.72 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- ஒன் வெப் விண்வெளி செயற்கை கோள்களில் 2-வது மற்றும் கடைசி தொகுதி செயற்கை கோள்களை இது சுமந்து செல்கிறது.
- ஏவப்படும் 36 செயற்கை கோள்களின் மொத்த எடை சுமார் 5805 கிலோ ஆகும்.
சென்னை:
இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் 36 செயற்கை கோள்களுடன் நாளை (26-ந் தேதி) விண்ணில் பாய்கிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது தளத்தில் இருந்து நாளை காலை 9 மணிக்கு விண்வெளிக்கு புறப்படுகிறது.
ஒன் வெப் விண்வெளி செயற்கை கோள்களில் 2-வது மற்றும் கடைசி தொகுதி செயற்கை கோள்களை இது சுமந்து செல்கிறது.
தற்போது ஏவப்படும் 36 செயற்கை கோள்களின் மொத்த எடை சுமார் 5805 கிலோ ஆகும். எல்.வி.எம்.3 ராக்கெட்டுகள் 8 டன் எடை வரை சுமந்து செல்லும் திறன் கொண்டது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தை தலைமையகமாக கொண்ட ஒன் வெப், இங்கிலாந்து அரசு மற்றும் இந்தியாவின் பாரதிய நிறுவனத்தின் ஆதரவுடன் அதிவேக தாமதமில்லா உலகளாவிய தொலை தொடர்பு மற்றும் இணைய இணைப்பை வழங்குகிறது.
- திருமலை புனித ஸ்தலமாக உள்ளதால் இங்கு இறைச்சி, மது, சிகரெட், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் தடை செய்யப்பட்டு உள்ளது.
- கஞ்சாவை சிறுசிறு பொட்டலங்களாக மடித்து பிளாஸ்டிக் கவரில் காலில் கயிற்றால் கட்டி மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
தரிசனத்திற்கு கார், பஸ், பைக் மூலம் வரும் பக்தர்கள் அலிப்பிரியில் உள்ள சோதனை சாவடியில் தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் முழுமையான சோதனைக்கு பிறகு திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
ஏழுமலையான் கோவில் அமைந்துள்ள திருமலை புனித ஸ்தலமாக உள்ளதால் இங்கு இறைச்சி, மது, சிகரெட், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் தடை செய்யப்பட்டு உள்ளது.
தடையை மீறி ஒரு சில ஊழியர்கள் மது, சிகரெட், கஞ்சா உள்ளியிட்டவைகளை நூதன முறையில் கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்வதாக தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் வந்தன.
இந்த நிலையில் நேற்று மாலை வைகுந்தம், கியூ காம்ப்ளக்ஸ் பொருட்கள் வைக்கும் அறை அருகே கஞ்சா பொட்டலம் ஒன்று காணப்பட்டது. இதனைக்கண்ட விஜிலென்ஸ் அதிகாரிகள் அங்கு பணியில் இருந்த திருப்பதியை சேர்ந்த கங்காதரம் என்ற தேவஸ்தான ஒப்பந்த ஊழியரை பிடித்து சோதனை செய்தனர்.
அப்போது அவர் கஞ்சாவை சிறுசிறு பொட்டலங்களாக மடித்து பிளாஸ்டிக் கவரில் காலில் கயிற்றால் கட்டி மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 100 கிராமுக்கு மேற்பட்ட கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து கங்காதரத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜாபர் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து ஆசிரியை திருமணம் செய்து கொள்வதாக கூறினார்.
- ஜாபர் வாலி மீது சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் இதுகுறித்து புக்கராயபுரம் போலீசில் புகார் செய்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், பொண்டல வாடா பகுதியை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். ஆசிரியர் பயிற்சி முடித்த இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார்.
பக்கத்து ஊரான நடிமி தொட்டி பகுதியை சேர்ந்தவர் ஜாபர் வாலி. ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் ஆசிரியை அடிக்கடி ஜாபர் வாலி ஆட்டோவில் பள்ளிக்கு சென்று வந்தபோது இருவருக்கும் இடையே வழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது.
ஜாபர் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து ஆசிரியை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.
தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஆசிரியை ஜாபர் வாலியை வற்புறுத்தி வந்தார்.
இதனால் ஜாபர் வாலி தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்தார். இதையடுத்து ஆசிரியை ஜாபர் வாலி வீட்டிற்கு சென்று அவரது மனைவி மற்றும் பெற்றோர்களிடம் நடந்த சம்பவங்களை கூறினார்.
அப்போது ஆசிரியையை தனியாக அழைத்து வந்த ஜாபர் வாலி உன்னை இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி வழக்கமாக இருவரும் சந்திக்கும் புக்க ராயபுரம் சாய்பாபா கோவில் குளத்தின் அருகே அழைத்துச் சென்றார்.
பின்னர் மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொலை செய்தார். ஆசிரியையின் உடைகளை கழற்றி பாறைக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு உடலை நிர்வாணமாக குளத்தில் வீசினார்.
அவரது செல்போனை எடுத்து அவரது சகோதரிக்கு வாட்ஸ் அப்பில் நான் ஜாபர் வாலியை காதலித்தேன். அவரும் என்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார்.
இதனால் இருவரும் தனிமையில் சந்தித்துக்கொண்டோம். ஆனால் ஜாபர் வாலி தன்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவிக்கிறார். இதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் எல்லோருக்கும் குட் பாய் அக்கா என தகவல் அனுப்பினார்.
வாட்ஸ் அப்பில் வந்த தகவலை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். ஜாபர் வாலி மீது சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் இதுகுறித்து புக்கராயபுரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சந்தேகத்தின் பேரில் ஜாபர் வாலியை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் ஆசிரியையை பலாத்காரம் செய்து கொலை செய்து நிர்வாணமாக குளத்தில் வீசியதை ஒப்புக்கொண்டார்.
பிணத்தை குளத்தில் இருந்து போலீசார் மீட்டனர். கொலை செய்து குளத்தில் வீசி 20 நாட்கள் ஆனதால் அவரது உடல் முழுவதும் சிதைந்து காணப்பட்டது.
இதையடுத்து சர்வஜனா அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து ஜாபர்வாலியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் அனுராதா எதிர்பாராத விதமாக வெற்றி பெற்றார்.
- வேட்பாளரின் எதிர்பாராத வெற்றி ஆளும் கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி:
ஆந்திராவில் காலியாக உள்ள 7 எம்.எல்.சி பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. தேர்தல் நடந்த 7 இடங்களில் ஆளுங்கட்சி வேட்பாளர்கள் 6 பேர் வெற்றி பெற்றனர்.
மீதமுள்ள ஒரு இடத்தில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் அனுராதா எதிர்பாராத விதமாக வெற்றி பெற்றார். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 23 எம்.எல்.ஏ.க்களும், தெலுங்கு தேசம் கட்சிக்கு 18 எம்.எல்.ஏக்கள் என 41 எம்.எல்.ஏ.க்கள் வாக்கு அளித்தனர்.
தெலுங்கு தேசம் வேட்பாளர் அனுராதா வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்ற நிலையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்கள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது உள்ள அதிருப்தியால் தெலுங்கு தேசம் கட்சிக்கு வாக்களித்துள்ளனர்.
தெலுங்கு தேச வேட்பாளரின் எதிர்பாராத வெற்றி ஆளும் கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கட்சிக்கு எதிராக வாக்களித்தவர்கள் குறித்து நடத்திய விசாரணையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நாராயணரெட்டி, கோட்டம் ரெட்டி, ஸ்ரீதர் ரெட்டி ஆகியோர் வாக்களித்தது தெரியவந்தது. மேலும் 2 எம்.எல்.ஏ.க்கள் யார் என விசாரணை நடந்தது வருகிறது.
இன்னும் ஒரு ஆண்டில் ஆந்திராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தெலுங்கு தேசம் எம்எல்சி வேட்பாளருக்கு ஆதரவாக ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்தது தெலுங்கு தேசம் கட்சியினரை உற்சாகபடுத்திஉள்ளது.
மாநிலத்தின் பல்வேறு பிரச்சனைகளை ஆளுங்கட்சியால் தீர்த்து வைக்கப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் அரசு மீது நம்பிக்கை இழந்து உள்ளனர்.
வருகிற சட்டமன்ற தேர்தலிலும் இது எதிரொலிக்கும் என அவர்கள் ஆரவாரித்தனர்.
தற்போது எம்எல்ஏக்களாக உள்ள பெரும்பாலானோருக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என கூறப்படுகிறது. எனவே தான் 5 எம்.எல்.ஏ.க்களும் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததாக அரசியல் கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
- எலெக்ட்ரிக் பஸ்கள் 25 பேர் அமரக்கூடிய வகையிலும் 25 பேர் நின்று பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
- 2 புறமும் தானியங்கி கதவுகள் அமைக்கப்பட்டு சிசிடிவி கேமரா மற்றும் பஸ் நிறுத்தம் குறித்த அறிவிப்பு ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
திருப்பதி:
திருப்பதியில் ஏழுமலையானை தரிசிப்பதற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக திருமலையில் தற்போது 12 இலவச பஸ்கள் இயக்கப்படுகிறது. திருமலை பஸ் நிலையத்தில் இருந்து மலை பகுதி முழுவதும் பஸ் ஆங்காங்கே நிறுத்தி பக்தர்களை ஏற்றி இறக்கி செல்கின்றன. தற்போது இயக்கப்படும் பஸ்கள் டீசலில் இயங்கி வருகின்றன.
திருமலையில் அதிகாலை மாசு ஏற்படுவதை குறைக்க தேவஸ்தான அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதன்படி திருமலைக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பாட்டில்கள், கவர்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாத பைகள் பிளாஸ்டிக் அல்லாத காகிதங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பைகள் உபயோகப்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள மேகா என்ஜினியரிங் மற்றும் இன்ஃப்ராக்ஸ்ட்ரக்சர் கிரீன்டெக் நிறுவனம் திருமலையில் இயக்குவதற்காக 10 எலெக்ட்ரிக் பஸ்களை தயாரித்துள்ளது. இதில் 5 பஸ்கள் திருமலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் 5 பஸ்கள் கொண்டுவரப்பட உள்ளது. இந்த பஸ்கள் 25 பேர் அமரக்கூடிய வகையிலும் 25 பேர் நின்று பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் 2 புறமும் தானியங்கி கதவுகள் அமைக்கப்பட்டு சிசிடிவி கேமரா மற்றும் பஸ் நிறுத்தம் குறித்த அறிவிப்பு ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதனால் திருமலைக்கு புதிதாக வரும் பக்தர்கள் தங்கள் இறங்க வேண்டிய இடத்தை கண்டறிந்து இறங்கிக்கொள்ள இந்த வசதி உதவியாக இருக்கும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
வருகிற 27-ந்தேதி காலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுபாரெட்டி பஸ் போக்குவரத்தை தொடங்கி வைக்க உள்ளார். ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த இலவச பஸ்களும் கூடுதலாக இயக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதியில் நேற்று 58,955 பேர் தரிசனம் செய்தனர். 25,113 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ.2.50 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- விஜயவாடா பஸ் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தார்.
- 2 இடங்களில் நடந்த சோதனையில் 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பதி:
தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரெயில், பஸ், கார்கள் மூலம் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் 30 பேர் கொண்ட சுங்கத்துறை அதிகாரிகள் குழுவினர் தனித்தனியாக பிரிந்து பல்வேறு இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
விஜயவாடா ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக 3 வாலிபர்கள் ரெயில் நிலையத்தில் சுற்றி திரிந்தனர். அவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களிடம் இருந்த பைகளை சோதனை செய்தனர். அதில் சுமார் 5 கிலோ எடையுள்ள தங்க கட்டிகள், நகைகள் இருந்தது தெரியவந்தது.
அதற்கு உண்டான உரிய ஆவணங்கள் இல்லாததால் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவர்கள் 3 பேரும் சென்னை, டி.நகர், சவுந்தரராஜன் தெருவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் தங்கத்தை எங்கிருந்து யாரிடம் கொண்டு செல்ல கடத்தி சென்றனர். என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் விஜயவாடா பஸ் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தார்.
அவரை பிடித்து விசாரணை செய்த போது அவரிடம் இருந்து 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
மேலும் 2 இடங்களில் நடந்த சோதனையில் 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட 13 கிலோ தங்கமும், சென்னையிலிருந்து கடத்தி வரப்பட்டதாகவும், யாருக்காக கடத்தி வரப்பட்டது என விசாரணை நடத்தி வருவதாகவும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கொரோனாவுக்கு பிறகு உண்டியல் வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது.
- கொரோனாவுக்கு முன், உண்டியல் வருமானம் ஆண்டுக்கு ரூ.1,200 கோடியாக இருந்தது.
திருமலை :
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை திருப்பதி தேவஸ்தானம் தயாரித்து தாக்கல் செய்துள்ளது.
கொரோனாவுக்கு பிறகு உண்டியல் வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு முன், உண்டியல் வருமானம் ஆண்டுக்கு ரூ.1,200 கோடியாக இருந்தது. தற்போது உண்டியல் வருமானம் ரூ.1,500 கோடி வரை உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் உளுந்தூர்பேட்டையில் காணிக்கையாளர்களின் காணிக்கையில் ரூ.4.70 கோடியில் வெங்கடாசலபதி கோவில் கட்ட முடிவு செய்துள்ளோம்.
மேற்கண்ட விவரங்களை அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி தெரிவித்தார்.






