என் மலர்
ஆந்திர பிரதேசம்
- ஐதராபாத், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மாம்பழப் பிரியர்கள் 77 வகை மாம்பழங்களை வாங்கிச் சுவைக்க இங்கு வருகிறார்கள்.
- மாம்பழ ரகங்களை கண்காட்சி மூலம் பிரபலபடுத்த திட்டமிட்டுள்ளனர்.
திருப்பதி:
இந்த சீசனில் எத்தனை வகையான மாம்பழங்களை சுவைத்திருக்கிறீர்கள்? எண்ணிக்கை ஒன்று அல்லது 2 அல்லது 5 என இருக்கலாம்
பலவித ருசியான மாம்பழங்களை சுவைக்க நீங்கள் தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி நகரத்தில் உள்ள ஸ்ரீ கோண்டா லக்ஷ்மன் தெலுங்கானா மாநில தோட்டக்கலை பல்கலைக்கழகத்தின் பழ ஆராய்ச்சி நிலையத்திற்குச் செல்ல வேண்டும்.
அங்கு சுமார் 4,000 மா மரங்கள் உள்ளன. இந்த பருவத்தில் 77 வகை மாம்பழங்கள் பழுத்து மனம் ருசிக்க ஈர்க்கிறது.
ஐதராபாத், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மாம்பழப் பிரியர்கள் 77 வகை மாம்பழங்களை வாங்கிச் சுவைக்க இங்கு வருகிறார்கள்.
இந்த மாம்பழ ரகங்களை கண்காட்சி மூலம் பிரபலபடுத்த திட்டமிட்டுள்ளனர்.
மேலும் ஒவ்வொரு ரகத்தின் சாகுபடி முறைகள், லாபம் மற்றும் சவால்கள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கி வருகின்றனர்.
அஸாம்-உஸ்-சமர் ரக மாம்பழம் விலை உயர்ந்தது, ஒரு கிலோ ரூ.600-க்கும், ஹிமாயத் ரகம் ஒரு கிலோ ரூ.250-க்கும் விற்கப்படுகிறது
வழக்கமான ரகங்களான பெனிஷான், பெட்டா ரசலு, தாஷேரி, கேசரி, தோதாபுரி, மல்லிகா மற்றும் செருகு ரசலு தவிர, பாம்பே பேடா, கஜூ, தில்பசந்த் மற்றும் ஆசம்-உஸ்-சமார் போன்ற அரிய வகை ரகங்கள் கண்காட்சிகளில் வைத்து வருகின்றனர்.
- கோடை காலம் முடிந்து பள்ளிகள் திறக்கும் வரை இந்த சேவையை செய்ய உள்ளேன்.
- ஆட்டோ குடிநீர் மூலம் பயனடையும் பொதுமக்கள் அவரை பாராட்டி செல்கின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், மர்ரிபாலம், அக்குவானிபாலத்தை சேர்ந்தவர் துர்கா பிரசாத் (வயது 30). இவரது பெற்றோர் தின கூலிகளாக வேலை செய்து வந்தனர்.
தந்தை இறந்து விட்டதால் தாய் பூ வியாபாரம் செய்து வருகிறார். துர்கா பிரசாத் புதியதாக ஆட்டோ ஒன்றை வாங்கி ஓட்டி வருகிறார்.
தற்போது ஆந்திராவில் வெயில் கொளுத்தி வருவதால் பயணிகளின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க தனது ஆட்டோவில் பயணிகளின் இருக்கைக்கு பின்னர் 2 குடிநீர் கேன்களை பொருத்தி தண்ணீர் நிரப்பி வைத்துள்ளார்.
ஆட்டோவில் செல்லும் பயணிகள் நடந்து செல்பவர்கள் தொழிலாளர்கள் யார் வேண்டுமென்றாலும் துர்கா பிரசாத்தின் ஆட்டோவில் பொருத்தப்பட்டுள்ள குடிநீர் பிடித்துக் குடித்துக் கொள்ளலாம்.
இது குறித்து துர்கா பிரசாத் கூறுகையில், குடிநீர் கேன் பொருத்துவதற்காக ஆட்டோவில் இருந்த பயணிகள் சீட்டை கழற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால் அதிக அளவு பயணிகளை ஏற்றி செல்ல முடியாவில்லை வருமான இழப்பு குறித்து கவலைப்படவில்லை தினமும் 10 குடிநீர் கேன்கள் செலவாகிறது. ஆட்டோவில் சம்பாதிக்கும் பணத்தில் செலவு செய்து சமாளிக்கிறேன்.
கோடை காலம் முடிந்து பள்ளிகள் திறக்கும் வரை இந்த சேவையை செய்ய உள்ளேன். கடவுள் எனக்கு இந்த பொன்னான வாய்ப்பை வழங்கி உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் நான் ஏன் ஏழைகளுக்கு சேவை செய்யக்கூடாது என ஆச்சரியத்துடன் கேட்டார்.
ஆட்டோ குடிநீர் மூலம் பயனடையும் பொதுமக்கள் அவரை பாராட்டி செல்கின்றனர்.
- மது போதையில் இருந்த ஜனார்த்தனனுக்கும் பிரேமலதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சஞ்சீவி ரெட்டி நகரை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 40). கூலி வேலை செய்து வந்தார்.
இவரது மனைவி பிரேமலதா (35). இவர்களுக்கு கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் நடந்து. ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.
ஜனார்த்தனன் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து சித்ரவதை செய்து வந்தார். குடிப்பழக்கத்தை கைவிடுமாறு பிரேமலதா கணவரிடம் வற்புறுத்தினார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரேமலதா அவரது பெற்றோருக்கு திருமண நாள் என்பதால் தும்குண்டா, மல்கஜகிரியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். பின்னர் இரவு வீட்டிற்கு திரும்பினார்.
அப்போது மது போதையில் இருந்த ஜனார்த்தனனுக்கும் பிரேமலதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த ஜனார்த்தனன் வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து வந்து பிரேமலதாவை தாக்கினார்.
இதில் படுகாயம் அடைந்த பிரேமலதா ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்தார். பின்னர் ஜனார்த்தனனும் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதிகாலை அவர்களின் பிள்ளைகள் தாய், தந்தை இறந்து கிடந்ததை கண்டு கதறி துடித்தனர். அவர்களது சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர்.
இது குறித்து எஸ்.ஆர். நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் பிணத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர்களின் மகன், மகள் ஆதரவின்றி தவித்து வருகின்றனர்.
- மொத்தம் 2,232 சுலோகங்கள் 649 நாட்கள் பாராயணம் செய்யப்பட்டது.
- ஒவ்வொரு வசனமும் ஒரு மந்திரம்.
மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டி 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 25-ந்தேதி திருமலையில் ஏழுமலையான் கோவில் எதிரே உள்ள நாத நீராஞ்சன மண்டபத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தால் பாலகாண்ட பாராயண நிகழ்ச்சி தொடங்கியது. அந்த நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவடைந்தது.
புகழ்பெற்ற சமஸ்கிருத அறிஞரும், தேசிய சமஸ்கிருத பல்கலைகழகத்தின் பேராசிரியருமான பிரவா ராமகிருஷ்ண சோமயாஜி பங்கேற்று பாலகாண்டத்தில் உள்ள சுலோகங்களை விளக்க உதாரணங்களுடன் ஏறக்குறைய 2 ஆண்டுகளாக விளக்கி உலக பார்வையாளர்கள், பக்தர்களை வியக்க வைத்தார்.
பாலகாண்டத்தின் 77 அத்தியாயங்களில் இருந்து மொத்தம் 2,232 சுலோகங்கள் 649 நாட்கள் பாராயணம் செய்யப்பட்டதாக, திருமலை தர்மகிரி வேத விஞ்ஞான பீடத்தின் முதல்வர் குப்பா சிவசுப்பிரமணிய அவதானி கூறினார்.
அவர் மேலும் பேசியதாவது:-
உலக நலன் கருதி திருப்பதி தேவஸ்தானம் நடத்தும் பாராயண யாகத்தின் ஒரு பகுதியாக மந்திரம் பாராயணம் தொடங்கியது. அதில் உள்ள ஒவ்வொரு வசனமும் ஒரு மந்திரம். பாலகாண்டத்தின் மொத்த 77 சர்க்கங்களில் 649 நாட்களுக்கு 2,232 சுலோகங்கள் சொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு வசனமும் அர்த்தத்துடன் உள்ளது. அதைச் சமுதாயத்துக்குப் பொருத்தி பண்டிதர்கள் கருத்துரை வழங்கி உள்ளனர்.
பேடி ஆஞ்சநேயர் சன்னதியில் ராம அவதாரமான வெங்கடேஸ்வரசாமி சன்னதியில் நாதநீராஞ்சன மண்டபத்தில் பாலகாண்ட பாராயணம் செய்வது மிகப் பெரிய விஷயம். வால்மீகி மகரிஷியிடம் ராம நாமஸ்மரணம் எங்கு நடந்தாலும் அங்கே அனுமன் இருப்பார். வால்மீகி மகரிஷி குருவாக மாறி ராமாயணத்தை உலகுக்கு வழங்கினார்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அறிஞர்கள் சேஷாச்சாரியுலு, மாருதி ஆகிேயார் மற்ற அறிஞர்களுடன் சேர்ந்து நேற்று 74-77 சர்க்கங்களில் இருந்து 166 சுலோகங்களை ஓதினார்கள்.
எஸ்.வி.இசை மற்றும் நடனக் கல்லூரியின் இசை விரிவுரையாளர் வந்தனா நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ராம ஜெயராம சிருங்கார ராமரை வழங்கினார். முடிவில் தனது குழுவினருடன் பஜரே ரகுவீரத்தை மெல்லிசையாக வழங்கினார்.
அதைத்தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) தர்மகிரி வேத விஞ்ஞான பீடத்தில் 67 அறிஞர்களுடன் சம்பூர்ண அகண்ட சுந்தர காண்ட பாராயணம் காலை 6 மணியில் இருந்து இரவு 11 மணி வரை தொடர்ந்து கிட்டத்தட்ட 18 மணி நேரம் நடக்கிறது.
இந்த நிகழ்ச்சி எஸ்.வி.பி.சி. பக்தி சேனலில் தலைமை நிர்வாக அதிகாரி சண்முகக்குமார் மேற்பார்வையில் உலக பக்தர்களுக்காக நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.
நாளை (புதன்கிழமை) காலை 7 மணியில் இருந்து காலை 8 மணி வரை அயோத்தியா காண்டம் நாத நீராஞ்சன மண்டபத்தில் நடக்கிறது. இதிகாசமான ராமாயணத்தின் இந்தப் பகுதியில் அதிகபட்ச சுலோகங்களின் எண்ணிக்கை 4308 ஆக உள்ளது.
- கோடை விடுமுறையையொட்டி பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.
- இலவச தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைகள் மற்றும் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வெவ்வேறு தேதிகளில் வெளியிடப்படுகிறது.
முன்கூட்டியே இது குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டிய நிலை உள்ளது. இதனால் பக்தர்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது.
ஆனாலும் சிறப்பு தரிசன டிக்கெட் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களில் முன்பதிவு செய்து விடுகின்றனர்.
இந்த நிலையில் மாதந்தோறும் குறிப்பிட்ட தேதிகளில் ஆர்ஜித சேவை மற்றும் ரூ.300 கட்டண டிக்கெட்டுகளை வெளியிட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
ஒவ்வொரு மாதமும் 18 முதல் 20-ந் தேதிக்குள் சுப்ரபாதம் தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். பொது ஆர்ஜித சேவைக்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் 21-ந் தேதி வெளியிடப்படும்.
மாதந்தோறும் 24-ந் தேதி ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறையையொட்டி பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. தினமும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பக்தர்களுக்கு நேர ஒதுக்கீடு இலவச தரிசனம் டிக்கெட் வழங்கப்படுகிறது. நடைபாதையாக செல்லும் பக்தர்களுக்கு 1240-வது படிக்கட்டில் சாமி தரிசனம் செய்ய இலவச டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 70,366 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 38,653 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ.4.32 கோடி உண்டியல் காணிக்கை வசூல் ஆனது.
இலவச தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து தனியார் தன்னார்வ அமைப்பு ஒன்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- போலீசார் போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து 5 ஆசிரியர்களை கைது செய்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி பகுதியில் உள்ள பழங்குடியின மாணவிகளிடையே நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து தனியார் தன்னார்வ அமைப்பு ஒன்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது தன்னார்வலர்கள் அங்குள்ள மாணவிகளிடம் இதுபோன்ற சம்பவம் ஏதாவது உங்களுக்கு நிகழ்ந்து உள்ளதா என கேட்டனர்.
அப்போது மலைக்கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 9 மற்றும் 10-ம் வகுப்பில் படிக்கும் மாணவிகள் தங்களுக்கு பாலியல் தொல்லை நடந்ததாக தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து புகார் எழுதி அவர்கள் வைத்திருந்த பெட்டியில் போட்டனர்.
மாணவிகள் தங்களிடம் 5 ஆசிரியர்கள் தவறாக நடந்து கொண்டதாக தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து தன்னார்வலர்கள் மாவட்ட கல்வி அதிகாரி சலீம் பாஷாவுக்கு தெரிவித்தனர். அவரது உத்தரவின் பேரில் மண்டல கல்வி அலுவலர், பெண் குழந்தைகள் மேம்பாட்டு அதிகாரிகள் ஆகியோர் பள்ளியில் விசாரணை நடத்தினர்.
இதில் பள்ளி வகுப்பறையில் 5 ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.
விசாரணையில் பாலியல் தொல்லை உறுதி செய்யப்பட்டது. இது குறித்து கல்வி அதிகாரிகள் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து 5 ஆசிரியர்களை கைது செய்தனர். அவர்களை ஜெயிலில் அடைத்தனர்.
- நந்தினி அதே கிராமத்தில் தன்னார்வலராக வேலை செய்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.
- குழந்தை சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், சத்ய சாயி மாவட்டம், கொண்டம்பள்ளி ஹரிபுரத்தை சேர்ந்தவர் ரமணா, இவரது மனைவி நந்தினி. தம்பதியின் மகன்கள் அன்விஷ் ரெட்டி, தன்விஷ் (வயது 2).
நந்தினி அதே கிராமத்தில் தன்னார்வலராக வேலை செய்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
வாழ்க்கையில் விரக்தி அடைந்த நந்தினி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
தான் மட்டும் தற்கொலை செய்து கொண்டால் குழந்தைகள் அனாதையாகிவிடும் என்று எண்ணிய நந்தினி தனது 2 மகன்களுடன் ஊருக்கு வெளியே உள்ள கிணற்றிற்கு சென்றார்.
தனது 2 வயது மகன் தன் விஷ்சை கிணற்றில் தூக்கி வீசினார். கிணற்றில் வீசப்பட்ட குழந்தை தண்ணீரில் மூழ்கிய படி உயிருக்கு போராடியது இதனை கண்ட நந்தினி தற்கொலை செய்து கொள்வதற்கு பயந்து கத்தி கூச்சலிட்டார்.
அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து தண்ணீரில் தத்தளித்த குழந்தையை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். சிகிச்சைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் குழந்தை சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜஹாங்கீருக்கு திருமணம் ஆனது முதல் மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டது.
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கனிஷ் பேகம் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் நம் பள்ளியை சேர்ந்தவர் ஜஹாங்கீர். ஆட்டோ டிரைவர். அவரது மனைவி கனிஷ் பேகம் (வயது 40) கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.
ஜஹாங்கீருக்கு திருமணம் ஆனது முதல் மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால் மனைவியை வீட்டிலேயே அடைத்து வைத்தார்.
இந்நிலையில் கடந்த 12 நாட்களுக்கு முன்பு நம் பள்ளியில் இருந்து லங்கர் ஹவுஸ், பாக்தாத் காலனிக்கு குடி பெயர்ந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து ஆட்டோ ஓட்ட சென்ற ஜஹாங்கீர் மீண்டும் இரவு வீட்டிற்கு வந்தார்.
அப்போது மனைவியுடன் தகராறு செய்தார். கனிஸ் பேகத்தை சரமாரியாக தாக்கினார். அவரிடம் இருந்து தப்பிய கனிஷ் பேகம் தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு எம்.டி.காலணியில் உள்ள தனது மூத்த சகோதரர் வீட்டிற்கு சென்றார்.
நேற்று முன்தினம் அங்கு சென்ற ஜஹாங்கீர், மனைவியை சமாதானம் செய்தார். குழந்தைகளை அங்கேயே விட்டுவிட்டு மனைவியை மட்டும் தனது வீட்டிற்கு அழைத்து வந்தார்.
வீட்டிற்கு வந்த பிறகு கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஜஹாங்கீர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து மனைவியின் கழுத்தை அறுத்தார்.
இதில் கனிஸ் பேகம் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
கத்தியில் ரத்தம் சொட்ட சொட்ட ஜஹாங்கீர் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். அவரை கைது செய்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கனிஷ் பேகம் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மனைவியின் மீது கொண்ட சந்தேகத்தால் 20 ஆண்டுகளாக வீட்டில் அடைத்து வைத்து கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பங்களாவை அகற்றுவதற்காக ஆந்திர அரசு நோட்டீஸ் அனுப்பியது.
- ஆற்றின் 100 மீட்டருக்குள் நீச்சல் குளம் மற்றும் ஹெலிபேட் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கிருஷ்ணா நதிக்கரையில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு சொந்தமான பரந்து விரிந்த பங்களா உள்ளது.
பங்களாவை அகற்றுவதற்காக ஆந்திர அரசு நோட்டீஸ் அனுப்பியது.
மண்டல மேம்பாட்டு ஆணையம், பங்களா சுவரில் நோட்டீசை ஒட்டியது. பங்களாவை ஒட்டி கட்டப்பட்ட பிரஜா வேதிகா என்ற மாநாட்டு அரங்கை அதிகாரிகள் இடிக்கத் தொடங்கியுள்ளனர்.
சந்திரபாபு நாயுடு தங்கியிருந்த பங்களா, கிருஷ்ணா நதிக்கரையில் 6 ஏக்கர் நிலப்பரப்பில் "எந்தவித சட்டபூர்வ அனுமதியும் இல்லாமல், விதிகள் மற்றும் விதிமுறைகளை முற்றிலும் மீறும் வகையில் கட்டப்பட்டது" என்று நோட்டீசில் கூறியுள்ளது.
கான்கிரீட் கட்டமைப்பைத் தவிர, ஆற்றின் 100 மீட்டருக்குள் நீச்சல் குளம் மற்றும் ஹெலிபேட் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. மேலும், 10 தற்காலிக கொட்டகைகள் ஆணையத்தின் அனுமதியின்றி எழுப்பப்பட்டுள்ளன.
இந்த கட்டமைப்புகள் முழுமையாக அகற்றப்பட வேண்டும்," என்று தெரிவித்துள்ளனர்.
நோட்டீசின் நகல், கட்டிடம் அமைந்துள்ள உண்டவல்லி ஊராட்சி செயலர் மற்றும் குண்டூர் மாவட்ட பஞ்சாயத்து அலுவலரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. அல்லா ராமகிருஷ்ண ரெட்டி புகார் அளித்தார். அதில் அமராவதி தலைநகர் மாஸ்டர் பிளான் மற்றும் அமராவதி உள்வட்ட சாலையை சீரமைத்ததில் முறைகேடு நடந்ததாக கூறியுள்ளார்.
அதன் அடிப்படையில் கிரிமினல் நம்பிக்கை மீறல், ஏமாற்றுதல் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
- பிரதான கோபுரம் 51 அடியும், கலசங்கள் பஞ்சலோகத்தில் செய்யப்பட்டு பொருத்தப்பட்டு உள்ளன.
- கல்தூண்களில் பழங்கால வேலைப்பாடுகளுடன் கோவில் கட்டப்பட்டு உள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், அமடல வலசையை சேர்ந்தவர் கிருஷ்ணா ராவ். இவரது மனைவி அனுசுயா தேவி. மகன் சரவணகுமார். இவர் ஐதராபாத்தில் தொழில் செய்து வருகிறார்.
அனுசுயா தேவி தனது மகனை பாசத்துடன் வளர்த்தார். மேலும் தனது மகன் படிக்க கடுமையாக உழைத்தார். சரவணகுமாருக்கு தாய் அனுசுயா தேவி மீது அளவு கடந்த பாசம் உள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு அனுசுயாதேவி உடல்நல குறைவு காரணமாக இறந்தார். தாய் இறந்தது முதல் சோகத்தில் ஆழ்ந்த சரவணகுமார் தன் தாயின் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்த ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணினார். அதன்படி தாய்க்கு சொந்த ஊரில் கோவில் கட்ட முடிவு செய்தார்.
கட்டிட கலை நிபுணர் பாலகம் சஞ்சீவி, தமிழகத்தை சேர்ந்த சிற்பி பாண்டிதுரை, ஒடிசாவை சேர்ந்த கைவினைக் கலைஞர் சுரேஷ் ஆகியோருடன் தாய்க்கு ரூ.10 கோடி செலவில் பிரமாண்ட அளவில் கோவில் கட்டினார்.
பிரதான கோபுரம் 51 அடியும், கலசங்கள் பஞ்சலோகத்தில் செய்யப்பட்டு பொருத்தப்பட்டு உள்ளன. கல்தூண்களில் பழங்கால வேலைப்பாடுகளுடன் கோவில் கட்டப்பட்டு உள்ளது.
அம்மாவின் அன்பின் மகத்துவத்தை விளக்கும் வகையில் கோவிலில் படங்களுடன் வாசகங்கள் எழுதப்பட்டு உள்ளன.
அன்னையர் தினமான நேற்று கோவில் கருவறையில் தனது தாயின் சிலையை பிரதிஷ்டை செய்து கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்தார்.
சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானவர் கோவிலுக்கு சென்றனர்.
தாய்க்கு ரூ.10 கோடியில் கோவில் கட்டிய சரவணக்குமாரை பாராட்டி சென்றனர்.
- உயிரிழந்த 6 பேரும் ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
- விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றன.
ஆந்திரா மாநிலம் அனந்தபுரம் அருகே கார்- லாரி நேருக்கு நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருப்பதி மலைக்கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்த 6 பேரும் ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றன.
- சாலை விபத்தில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
- சாலை விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே தல்லாரேவு பைபாஸ் சாலையில் ஷேர் ஆட்டோவும், தனியார் பேருந்தும் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 6 பெண்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், சாலை விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






