குடும்ப தகராறில் 2 வயது மகனை கிணற்றில் வீசி கொன்ற தாய்

நந்தினி அதே கிராமத்தில் தன்னார்வலராக வேலை செய்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.குழந்தை சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்ப தகராறில் 2 வயது மகனை கிணற்றில் வீசி கொன்ற தாய்
Published on

திருப்பதி:

ஆந்திர மாநிலம், சத்ய சாயி மாவட்டம், கொண்டம்பள்ளி ஹரிபுரத்தை சேர்ந்தவர் ரமணா, இவரது மனைவி நந்தினி. தம்பதியின் மகன்கள் அன்விஷ் ரெட்டி, தன்விஷ் (வயது 2).

நந்தினி அதே கிராமத்தில் தன்னார்வலராக வேலை செய்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

வாழ்க்கையில் விரக்தி அடைந்த நந்தினி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

தான் மட்டும் தற்கொலை செய்து கொண்டால் குழந்தைகள் அனாதையாகிவிடும் என்று எண்ணிய நந்தினி தனது 2 மகன்களுடன் ஊருக்கு வெளியே உள்ள கிணற்றிற்கு சென்றார்.

தனது 2 வயது மகன் தன் விஷ்சை கிணற்றில் தூக்கி வீசினார். கிணற்றில் வீசப்பட்ட குழந்தை தண்ணீரில் மூழ்கிய படி உயிருக்கு போராடியது இதனை கண்ட நந்தினி தற்கொலை செய்து கொள்வதற்கு பயந்து கத்தி கூச்சலிட்டார்.

அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து தண்ணீரில் தத்தளித்த குழந்தையை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். சிகிச்சைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் குழந்தை சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com