என் மலர்tooltip icon

    இந்தியா

    ஷேர் ஆட்டோ- தனியார் பேருந்து மோதி விபத்து: 6 பெண்கள் உடல் நசுங்கி உயிரிழப்பு
    X

    ஷேர் ஆட்டோ- தனியார் பேருந்து மோதி விபத்து: 6 பெண்கள் உடல் நசுங்கி உயிரிழப்பு

    • சாலை விபத்தில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
    • சாலை விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே தல்லாரேவு பைபாஸ் சாலையில் ஷேர் ஆட்டோவும், தனியார் பேருந்தும் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் 6 பெண்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், சாலை விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×