என் மலர்tooltip icon

    இந்தியா

    கோடை வெயிலில் பயணிகள் தாகம் தீர்க்க ஆட்டோவில் இலவச குடிநீர் வழங்கும் டிரைவர்
    X

    கோடை வெயிலில் பயணிகள் தாகம் தீர்க்க ஆட்டோவில் இலவச குடிநீர் வழங்கும் டிரைவர்

    • கோடை காலம் முடிந்து பள்ளிகள் திறக்கும் வரை இந்த சேவையை செய்ய உள்ளேன்.
    • ஆட்டோ குடிநீர் மூலம் பயனடையும் பொதுமக்கள் அவரை பாராட்டி செல்கின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், மர்ரிபாலம், அக்குவானிபாலத்தை சேர்ந்தவர் துர்கா பிரசாத் (வயது 30). இவரது பெற்றோர் தின கூலிகளாக வேலை செய்து வந்தனர்.

    தந்தை இறந்து விட்டதால் தாய் பூ வியாபாரம் செய்து வருகிறார். துர்கா பிரசாத் புதியதாக ஆட்டோ ஒன்றை வாங்கி ஓட்டி வருகிறார்.

    தற்போது ஆந்திராவில் வெயில் கொளுத்தி வருவதால் பயணிகளின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க தனது ஆட்டோவில் பயணிகளின் இருக்கைக்கு பின்னர் 2 குடிநீர் கேன்களை பொருத்தி தண்ணீர் நிரப்பி வைத்துள்ளார்.

    ஆட்டோவில் செல்லும் பயணிகள் நடந்து செல்பவர்கள் தொழிலாளர்கள் யார் வேண்டுமென்றாலும் துர்கா பிரசாத்தின் ஆட்டோவில் பொருத்தப்பட்டுள்ள குடிநீர் பிடித்துக் குடித்துக் கொள்ளலாம்.

    இது குறித்து துர்கா பிரசாத் கூறுகையில், குடிநீர் கேன் பொருத்துவதற்காக ஆட்டோவில் இருந்த பயணிகள் சீட்டை கழற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இதனால் அதிக அளவு பயணிகளை ஏற்றி செல்ல முடியாவில்லை வருமான இழப்பு குறித்து கவலைப்படவில்லை தினமும் 10 குடிநீர் கேன்கள் செலவாகிறது. ஆட்டோவில் சம்பாதிக்கும் பணத்தில் செலவு செய்து சமாளிக்கிறேன்.

    கோடை காலம் முடிந்து பள்ளிகள் திறக்கும் வரை இந்த சேவையை செய்ய உள்ளேன். கடவுள் எனக்கு இந்த பொன்னான வாய்ப்பை வழங்கி உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் நான் ஏன் ஏழைகளுக்கு சேவை செய்யக்கூடாது என ஆச்சரியத்துடன் கேட்டார்.

    ஆட்டோ குடிநீர் மூலம் பயனடையும் பொதுமக்கள் அவரை பாராட்டி செல்கின்றனர்.

    Next Story
    ×