என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
    • இன்று காலை நேரடி இலவச தரிசனத்துக்கு 24 மணி நேரமானது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாதம் முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    கடந்த வாரம் முழுவதும் கடும் வெயில் நிலவியது. இதனால் திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் வெயிலில் தாக்கத்தால் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்ட போதிலும் பக்தர்களின் கூட்டம் குறையாமல் அதிகரித்து காணப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை முதல் திருப்பதியில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் லேசான மழை தொடங்கி இரவு முதல் பலத்த மழை வருகிறது.

    நேற்று 86 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர். வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ்சில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்து இருந்தனர்.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மழையில் நனைந்தபடி அவதி அடைந்தனர்.

    கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 86,181 பேர் தரிசனம் செய்தனர். 30,654 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.59 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    இன்று காலை நேரடி இலவச தரிசனத்துக்கு 24 மணி நேரமானது.

    • தினமும் மது குடித்துவிட்டு வந்து சுனிதாவிடம் தகராறு செய்தார்.
    • நல்லப்ப ரெட்டி மீது ரமேஷ் ரெட்டிக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம் வெமுலா பள்ளியை சேர்ந்தவர் நல்லப்ப ரெட்டி (வயது 47). இவரது மனைவி கிருஷ்ணவேணி. இருவரும் தனியார் கிரானைட் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர்.

    கிருஷ்ணவேணியின் தங்கை சுனிதாவுக்கும், நந்தியாலா மாவட்டம் ராவணூரை சேர்ந்த ரமேஷ் ரெட்டிக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு ரமேஷ் ரெட்டி மதுப்பழக்கத்திற்கு ஆளானார்.

    இதனால் ரமேஷ் ரெட்டியையும், சுனிதாவையும், நல்லப்பரெட்டி தான் வேலை செய்யும் கிரானைட் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்த்து, தங்களுடனே தங்க வைத்துக் கொண்டார்.

    ரமேஷ் ரெட்டி மதுப்பழக்கத்திற்கு ஆளானது மட்டும் இன்றி, தான் சம்பாதிக்கும் பணத்தை சூதாட்டத்திலும் இழந்து வந்தார்.

    தினமும் மது குடித்துவிட்டு வந்து சுனிதாவிடம் தகராறு செய்தார். மதுப்பழக்கத்தை கைவிடும் படி நல்லப்ப ரெட்டி, ரமேஷ் ரெட்டியிடம் வற்புறுத்தி வந்தார்.

    இதனால் நல்லப்ப ரெட்டி மீது ரமேஷ் ரெட்டிக்கு ஆத்திரம் ஏற்பட்டது. நேற்று இரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வெளியே கட்டிலில் தூங்கிக்கொண்டு இருந்தனர்.

    அப்போது மதுபோதையில் பெட்ரோல் கேனுடன் வீட்டுக்கு வந்த ரமேஷ் ரெட்டி அங்கு தூங்கிக்கொண்டு இருந்த நல்லப்ப ரெட்டி, அவரது மனைவி கிருஷ்ணவேணி, மகள் பூஜிதா ஆகியோர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதில் 3 பேரின் உடல்களும் தீப்பற்றி எரிய தொடங்கியது. 3 பேரும் அலறியபடி ஓடினர்.

    அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து சிகிச்சைக்காக கர்னூல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நல்லப்பரெட்டி பரிதாபமாக இறந்தார். மேலும் கிருஷ்ணவேணி, பூஜிதா ஆகியோர் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷ் ரெட்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முப்பல்லா கிராமத்தில் தெரு நாய்கள் அதிக அளவில் உள்ளன.
    • பணியில் அலட்சியம் காட்டியதாக கிராம பஞ்சாயத்து செயலாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் பல நாடு மாவட்டம் முப்பல்லா கிராமத்தில் தெரு நாய்கள் அதிக அளவில் உள்ளன. இந்த நாய்களால் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    இதற்கு தீர்வு காண கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். நாய் தொல்லை தடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

    பஞ்சாயத்து ஊழியர்கள் கிராமங்களில் உள்ள நாய்களை பிடித்து கூண்டுகளில் அடைத்தனர். 100-க்கும் ஏற்பட்ட நாய்கள் பிடிக்கப்பட்டன.

    போதிய விழிப்புணர்வு இல்லாததால் இந்த நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசிக்கு பதிலாக தவறான ஊசி போட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் பஞ்சாயத்து ஊழியர்களால் பிடிக்கப்பட்டு ஊசி போடப்பட்ட 100-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் இறந்தன.

    இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. கலெக்டர் உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

    இதனையடுத்து பணியில் அலட்சியம் காட்டியதாக கிராம பஞ்சாயத்து செயலாளர் ஹேமாவதி சஸ்பெண்டு செய்யப்பட்டார். மேலும் 3 அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

    • மர்ம நபர் 4-வது நுழைவுவாயில் வழியாக தப்பி சென்றுவிட்டார்.
    • போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்தவர் ஸ்ரவந்தி. இவர் அந்த மாநில அரசு சமூக நலத்துறையில் பணியாற்றி வருகிறார். நேற்று செகந்திராபாத்திலிருந்து திருப்பதி செல்வதற்கு புறப்பட்டு வந்தார்.

    செகந்திராபாத் ரெயில் நிலையத்தில் பிளாட்பாரம் 1-ல் அவர் திருப்பதி செல்லும் வந்தே பாரத் ரெயிலுக்காக காத்திருந்தார்.

    வந்தே பாரத் ரெயில் வந்து நின்றதும் அதில் இருந்து ஏராளமான பயணிகள் இறங்கி கொண்டிருந்தனர்.

    ஸ்ரவந்தி கூட்டத்திற்கு நடுவே ரெயிலில் ஏற முயன்றார். அப்போது மர்ம நபர் ஒருவர் அவர் வைத்திருந்த பையை பறித்துக் கொண்டு ஓடினார்.

    இதனால் அதிர்ச்சடைந்த ஸ்ரவந்தி அலறி கூச்சலிட்டார்.

    அதற்குள் மர்ம நபர் 4-வது நுழைவுவாயில் வழியாக தப்பி சென்று விட்டார்.

    ஸ்ரவந்தி வைத்திருந்த பையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை போனது.

    இதுகுறித்த செகந்திராபாத் ரெயில்வே போலீசில் புகார் அளித்தார்.

    அதில் தனது பையில் வைத்திருந்த வைர நெக்லஸ் உட்பட ரூ.60 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை போனதாக தெரிவித்துள்ளார்.

    போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். ரெயில்களில் ஏறும்போது பயணிகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என போலீசார் தெரிவித்தனர்.

    • செப்டம்பர் 18-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை சலகட்லா பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.
    • நவராத்திரி பிரம்மோற்சவம் அக்டோபர் 15-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடத்தப்படுகிறது.

    இந்த ஆண்டு அதிக அமாவாசையை முன்னிட்டு 2 பிரம்மோற்சவ விழாக்கள் நடைபெற உள்ளது. செப்டம்பர் 18-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை சலகட்லா பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.

    இதேபோல் நவராத்திரி பிரம்மோற்சவம் வழக்கம்போல அக்டோபர் மாதம் 15-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    2 பிரம்மோற்சவங்களுக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. பொதுவாக பிரம்மோற்சவத்தின் முதல் நாள் கொடியேற்றம் நடைபெறும். இந்த கொடியேற்றம் என்பது சாமியின் வாகனமான கருடன் உருவம் கொண்ட கொடியேற்றம் ஆகும்.

    கொடிமரத்தை அடைந்த கருடன், மலையிலுள்ள அனைத்து தெய்வங்களையும் தன் குருவின் பிரம்மோற்சவத்திற்கு வருமாறு அழைப்பார்.

    ஆனால் சலகட்லா பிரம்மோற்சவங்களில் இந்தக் கொடியேற்றம் நடைபெறுவதில்லை.முதல் நாள் கொடியேற்றத்திற்கு பதிலாக தங்க ரதத்தில் சாமி வலம் வருகிறார்.

    மேலும் பிரம்மோற்சவத்தின் 6-ம் நாள் மாலையில் புஷ்ப விமானத்திற்கு பதிலாக தங்க ரதத்தில் ஊர்வலம் நடக்கும். 8-ம் நாள் காலை தங்க தேர் திருவிழாவிற்கு பதிலாக சாதாரண தேரில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    இப்படி சில வித்தியாசங்களைத் தவிர சலகட்லா பிரம்மோற்சவத்திற்கும், சாதாரண பிரம்மோற்சவத்திக்கும் எந்த வித்தியாசம் இல்லை என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று காலத்தில் இதேபோல் 2 பிரம்மோற்சவங்கள் தனித்தனியாக நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    திருப்பதியில் நேற்று 87,762 பேர் தரிசனம் செய்தனர். 43,753 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

    ரூ. 3.61 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. சாமி தரிசனத்திற்கு 24 மணி நேரமாகிறது.

    • பிரியாணி குறித்து வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி வைரலானதால் நேரமாக நேரமாக கூட்டம் அதிகரித்தது.
    • ஒரு சிலர் ஓட்டலுக்குள் முண்டியடித்து சென்று ஒரு ரூபாய் நாணயத்தை கொடுக்காமலேயே கடைக்காரரிடம் இருந்து பிரியாணியை பறித்து சென்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், கரீம் நகரில் புதிய ஓட்டல் நேற்று திறக்கப்பட்டது.

    திறப்பு விழாவை முன்னிட்டு மதியம் 2-30 மணிக்கு மேல் ஒரு ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்படும் என்றும் பிரியாணி வாங்க வருபவர்கள் ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என ஓட்டல் நிர்வாகம் விளம்பரம் செய்து இருந்தது.

    மேலும் ஒரு நபருக்கு ஒரு பிரியாணி மட்டுமே வழங்கப்படும் என நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தன. விளம்பரத்தை கண்ட சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பிரியாணியை வாங்கி சாப்பிட்டே தீர வேண்டும் என எண்ணினர்.

    சுட்டெரிக்கும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஓட்டல் முன்பு உள்ள சாலையில் ஏராளமானோர் திரண்டு நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    ஒரு ரூபாய் பிரியாணி குறித்து வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி வைரலானதால் நேரமாக நேரமாக கூட்டம் அதிகரித்தது.

    பிரியாணி வாங்க வாகனங்களில் வந்தவர்கள் வாகனங்களை நிறுத்த இடம் இல்லாததால் முக்கிய சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி விட்டு சென்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பிரியாணி வழங்க தொடங்கியபோது எப்படியும் பிரியாணி வாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் வாலிபர்கள் ஒருவருடன் ஒருவர் முண்டியடித்து செல்ல முயன்றனர். அப்போது அவர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    ஒரு சிலர் ஓட்டலுக்குள் முண்டியடித்து சென்று ஒரு ரூபாய் நாணயத்தை கொடுக்காமலேயே கடைக்காரரிடம் இருந்து பிரியாணியை பறித்து சென்றனர்.

    நிலைமை கட்டுக்குள் அடங்காமல் போகவே ஓட்டல் உரிமையாளர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்றனர்.

    போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் போலீசார் ஓட்டலை தற்காலிகமாக இழுத்து மூடினர்.

    இதையடுத்து வரிசையில் காத்திருந்தவர்கள் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.

    • ஸ்லூஷி குளிர்பானம் நொறுக்கப்பட்ட பனிக்கட்டிகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
    • ஸ்லூஷி குளிர்பானத்தை நான் முதன் முதலில் இங்கிலாந்தில் பருகினேன்.

    திருப்பதி:

    வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் இருந்து தப்பித்துக்கொள்ள பொதுமக்கள் அனைவரும் குளிர்பானங்களை தேடித்தேடி பருகுகின்றனர்.

    கரும்புச்சாறு, இளநீர் என்றென்றும் நமக்கு இளைப்பாறுதலை தரும் என்றாலும் எல்லோரையும் ஈர்க்கும் வகையில் புதிய ரக பானங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

    மதுரை ஜில் ஜில் ஜிகர்தண்டா, பொள்ளாச்சி இளநீர், நன்னாரி சர்பத், கோலி சோடா என சாலையோரங்களில் குளிர்பானங்கள் விற்பனை களை கட்டுகிறது.

    இது ஒரு புறம் இருக்க தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தற்போது ஸ்லூஷி என்ற ஒரு வகையான குளிர்பானத்தை பொதுமக்கள் அதிகமாக விரும்பி குடிக்கின்றனர்.

    பெரிய மால் முதல் சாலையோர கடைகள் சிறிய ஓட்டல்கள் என ஐதராபாத் நகரில் வேகமாக இந்த குளிர்பானம் பிரபலம் அடைந்து வருகிறது.

    இதனை அங்குள்ள மக்கள் ஸ்லர்பி என்றும் அழைக்கிறார்கள்.

    இந்த ஸ்லூஷி குளிர்பானம் நொறுக்கப்பட்ட பனிக்கட்டிகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதனை பல்வேறு வண்ணங்களில் தயார் செய்து விற்பனை செய்கின்றனர்.

    ஐதராபாத்திற்கு வரும் வட மாநிலத்தவர்கள் இதனை அதிக அளவில் சாப்பிடுவதால் நகர பகுதிகளில் இதன் விற்பனை களைகட்டி உள்ளது.

    இதனை தொடர்ந்து அதிகளவில் தயார் செய்து வருகிறோம் என அங்குள்ள வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுபற்றி ஐதராபாத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில்:-

    ஸ்லூஷி குளிர்பானத்தை நான் முதன் முதலில் இங்கிலாந்தில் பருகினேன். அதை இங்கே பார்த்ததும் நான் ஆச்சரியப்பட்டேன்.

    இது ஐஸ் சாப்பிடுவது போல் உள்ளது. சிறு வயதில் ஐஸ் சாப்பிட்ட ஒரு ஏக்க உணர்வை தருகிறது. இது சிறந்த சுவையுடையது. மேலும் உடலில் குளிர்ச்சியின் வேகத்தையும் அதிகரிக்கிறது என்றார்.

    • சவ ஊர்வலத்தில் வந்தவர்கள் பிணத்தை கீழே போட்டு விட்டு ஓடினர்.
    • சம்பவம் குறித்து குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், குப்பம், தம்பி கானி பள்ளியை சேர்ந்தவர் ராணியம்மா (வயது 68). உடல்நல குறைவால் நேற்று முன்தினம் இறந்தார்.

    அவரது இறுதி சடங்குகள் நேற்று நடந்தன. பின்னர் அவரது உறவினர்கள் ராணியம்மாவின் உடலை அலங்கரிக்கப்பட்ட பாடையில் வைத்து தூக்கிச் சென்றனர்.

    சவ ஊர்வலத்தில் திரளானோர் கலந்து கொண்டு சென்றனர். சுடுகாடு அருகே சென்றபோது அந்த வழியாக மின்கம்பிகள் கைக்கு எட்டும் தூரத்தில் தொங்கிக்கொண்டு இருந்தன.

    இதனை கவனிக்காமல் உடலை தூக்கிச் சென்றபோது பல்லக்கு மின் கம்பியில் உரசி கம்பிகள் அறுந்து விழுந்தன.

    இதில் மின்சாரம் தாக்கி முனப்பா (45), ரவீந்திரன் (37), திருப்பதி (52) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். பிரகாஷ் என்பவர் படுகாயம் அடைந்தார்.

    சவ ஊர்வலத்தில் வந்தவர்கள் பிணத்தை கீழே போட்டு விட்டு ஓடினர். இது குறித்து உடனடியாக குப்பம் போலீஸ் நிலையத்திற்கும் மின்வாரிய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.

    மின்வாரிய அதிகாரிகள் அப்பகுதியில் மின்சாரத்தை நிறுத்தினர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவர்களின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குப்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மின்சாரம் தாக்கி 3 பேர் இறந்த சம்பவத்திற்கு குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    மேலும் இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணமும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    • கோவிலுக்கு அருகில் உள்ள போட்டோ பிரேம் கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து.
    • தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவில் அருகே உள்ள கடையில் இன்று பிற்பகலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

    தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார மற்றும் தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இதுதொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், கோவிலுக்கு அருகில் உள்ள போட்டோ பிரேம் கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக திருப்பதி காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆடிட்டர் வெங்கடேஸ்வரராவ் தன்னிடம் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு கடத்தல்காரர்கள் கூறிய இடத்திற்கு சென்றார்.
    • கடத்தல்காரர்கள் ரூ.50 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு 3 பேரையும் விடுவித்தனர்.

    திருமலை:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் எம்.வி.வி.சத்தியநாராயணா. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மக்களவை எம்.பி.யாக உள்ளார்.

    இவர் ஐதராபாத் சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு சில மர்ம நபர்கள் எம்.பி.யின் மகன் சரத் (35) என்பவரை கடத்தி சென்றனர்.

    அதன் பின்னர் எம்.பி.யின் மனைவி ஜோதிக்கு. போன் செய்து உங்கள் மகனை கடத்தியுள்ளோம் உடனடியாக தங்கள் இருப்பிடத்துக்கு ரூ.50 கோடி பணத்துடன் வரும்படி செல்போனில் தகவல் அனுப்பி வைத்தனர்.

    இதனையடுத்து எம்.பி.யின் மனைவி ஜோதி (55) அங்கு சென்றார். அவரையும் கடத்தல்காரர்கள் பிடித்து வைத்துக்கொண்டனர்.

    பின்னர் எம்.பி. சத்யநாராயணாவின் ஆடிட்டர் கன்னமனேனி வெங்கடேஸ்வராவுக்கு மர்மநபர்கள் போன் செய்தனர். எம்.பி.மனைவி, மகன் கடத்தப்பட்டதை கூறி தங்கள் இடத்திற்கு ரூ.50 கோடி கொண்டு வருமாறு மிரட்டினர்.

    இதையடுத்து ஆடிட்டர் வெங்கடேஸ்வரராவ் தன்னிடம் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு கடத்தல்காரர்கள் கூறிய இடத்திற்கு சென்றார்.

    அதற்குள் இந்த கடத்தல் குறித்து அறிந்த எம்.பி. சத்தியநாராயணா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் டி.ஜி.பி. ராஜேந்திரநாத் தலைமையில் 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதற்கிடையே கடத்தல்காரர்கள் ரூ.50 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு 3 பேரையும் விடுவித்தனர்.

    இந்த கடத்தலுக்கு ரூ.50 கோடி பணம் கேட்டு பேரம் நடைபெற்றதை அறிந்த போலீசார் 3 பேரும் பாதுகாப்பாக உள்ளதை முதலில் உறுதி செய்து கொண்டனர்.

    பின்னர் விசாரணை நடத்தினர். அதில் அவர்களை கடத்தியது பிரபல ரவுடி ஹேமந்த் என்று தெரியவந்தது. கடத்தலில் ஈடுபட்ட ஹேமந்த் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சபானா கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரசவத்திற்காக அனந்தபுரம் கிம்ஸ் சவேரா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
    • சபானாவுக்கு டாக்டர் சில்பா சவுத்ரி தலைமையில் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டம் தர்மபுரம் பகுதியை சேர்ந்தவர் ஷபானா. இவருக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளன.

    நிறைமாத கர்ப்பிணியான சபானா கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரசவத்திற்காக அனந்தபுரம் கிம்ஸ் சவேரா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    சபானாவுக்கு டாக்டர் சில்பா சவுத்ரி தலைமையில் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்தனர். இதில் 5.2 கிலோ எடையுள்ள ஆண் குழந்தை பிறந்தது.

    தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    • ஆகஸ்ட் 27-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை பவித்ர உற்சவம் நடைபெற உள்ளது.
    • நேரடி இலவச தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெறக்கூடிய சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை, உள்ளிட்ட கட்டண சேவைகளுக்கான குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கும் பதிவுக்கு ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்படுகிறது.

    வருகிற 19-ந் தேதி காலை 10 மணி முதல் 21-ந் தேதி காலை 10 மணி வரை பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.

    21-ந் தேதி காலை 12 மணிக்கு எலக்ட்ரானிக் குலுக்கல் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களுக்கு செல்போன் அல்லது இமெயிலுக்கு தகவல் அனுப்பப்படும்.

    அதனை வைத்துக் கொண்டு பணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்.

    இதேபோன்று ஆகஸ்ட் மாதம் 27-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை வருடாந்திர பவித்ர உற்சவம் ஏழுமலையான் கோவிலில் நடைபெற உள்ளது.

    இதில் பங்கேற்பதற்கான டிக்கெட்டுகள் இந்த மாதம் 22-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    செப்டம்பர் 1-ந்தேதி முதல் 30-ந் தேதி வரையில் நடைபெறக்கூடிய கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைக்கான டிக்கெட்டுகள் இந்த மாதம் 22-ந் தேதி காலை 10 மணி முதல் தங்களுக்கு வேண்டிய சேவைகளை பக்தர்கள் முன்பதிவு செய்து டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

    செப்டம்பர் மாதம் அங்க பிரதட்சணம் செய்வதற்கான டிக்கெட்டுகள் இந்த மாதம் 23-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 70 ஆயிரத்து 896 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 37,546 பேர் முடிக்காணிக்கை செலுத்தினர். ரூ.4.07 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    நேரடி இலவச தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    ×