என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மட்டுமின்றி மார்பகத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டு வலி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
    • நமது உடலில் உள்ள செல்கள் ஸ்வாசிக்கும் வகையில் மென்மையான உள்ளாடைகளை அணிந்து உறங்க வேண்டும்.

    பெண்களில் பலரும் ஆடைகளை தேர்வு செய்ய கொடுக்கும் முக்கியத்துவத்தை உள்ளாடைகளை தேர்வு செய்யும் விஷயத்தில் கொடுப்பது இல்லை. இறுக்கமான, அளவில் மாறுதல் உள்ள உள்ளாடைகளை அணியும்போது பெண்கள் உடல் ரீதியாக பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அது மட்டுமின்றி மார்பகத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டு வலி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

    மார்பக பகுதி மிகவும் மென்மையான பகுதி என்பதால் இருக்கமான உள்ளாடை அணியும்போது மார்பகத்தின் கீழ் பகுதியில் எரிச்சல், நீர் கட்டி போன்ற விளைவுகள் ஏற்படலாம். அது மட்டுமின்றி பெண்களில் பலர் இருக்கமான உள்ளாடைகளை அணிந்துகொண்டு இரவில் உறங்குவார்கள்.


    அது மிகவும் தவறான செயல் மட்டுமின்றி ஆபத்தானதும் கூட. நமது உடலில் உள்ள செல்கள் ஸ்வாசிக்கும் வகையில் மென்மையான உள்ளாடைகளை அணிந்து உறங்க வேண்டும். உதாரணத்திற்கு ஸ்போட்ஸ் ப்ரா போன்ற வகையில் உள்ள உள்ளாடைகளை அணிந்து உறங்கலாம்.

    அப்போது நிம்மதியான தூக்கம் கிடைக்கும். மேலும், கோடை காலங்களில் இறுக்கமான ப்ரா அணிந்து தூங்கும்போது வியர்வை வெளியேறும் அளவு அதிகரித்து தோல் ரீதியான பிரச்சனைகள் ஏற்படலாம். அது மட்டுமின்றி, செயற்கை இழைகளால் உருவாக்கப்படும் பிராக்களை அணியும்போது இந்த பிரச்சினை அதிகரிக்கும் என்பதால் பெண்கள் காட்டன் பிராக்களை தேர்வு செய்வதுதான் மிகவும் சிறந்தது.

    • இளம்பெண்கள் ஹேர் கலரிங் செய்வதில் நாட்டமாக இருக்கிறார்கள்.
    • இளம் வயதினர் ஸ்டைலாகவும், அல்ட்ரா மாடர்னாகவும் காட்டுவதாக எண்ணுகிறார்கள்.

    அழகு நிலையங்களுக்கு அடிக்கடி அழக செல்வதில் விருப்பமுடைய இன்றைய இளம்பெண்களில் பலர், 'ஹேர் கலரிங்கிலும் மிகவும் நாட்டமாக இருக்கிறார்கள். இது தங்களை ஸ்டைலாகவும், அல்ட்ரா மாடர்ன் ஆகவும் காட்டுவதாக எண்ணுகிறார்கள். ஆனால் இவ்வாறு 'ஹேர் கலரிங்' செய்வது என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்? அதன் விவரம் வருமாறு...

    முடியின் வேர்களில் சேதம்:

    ஹேர் கலர்களில் அமோனியா, ஹைட்ரஜன் பெராக்சைடு போன்ற ரசாயனப்பொருட்கள் உள்ளன. இவைமுடியில் முழுமையாக ஊடுருவி நிறத்தை தக்கவைக்க உதவுகின்றன. இவை மட்டுமின்றி மேலும் பல வேதிப்பொருட்களை சேர்த்து தயாரிக்கப்பட்ட ஹேர் கலர்களை தொடர்ந்து நீங்கள் பயன்படுத்தும்போது, முடியில் இருக்கும் இயற்கையான எண்ணெய்ப் பசை முற்றிலும் அகன்றுவிடும். வறட்சி ஏற்படுதல், உடைதல். உதிர்ந்து போதல், முடியின் வேர்களில் சேதம் ஏற்படுவது போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படலாம்.

    ஒவ்வாமை:

    ரசாயனம் கலந்த இந்த ஹேர் கலர்களை தொடர்ந்து பயன்படுத்தும் போது உச்சந்தலையில் எரிச்சல் மற்றும் ஒவ்வாமை உள்ளிட்ட பல பிரச்சினைகள் வரலாம். சில நேரங்களில் படை நோய், கொப்புனங்கள் உள்ளிட்ட பல உபாதைகளையும் உண்டாக்கக்கூடும்.

    புற்றுநோய் அபாயம்:

    ஹேர் கலர்களில் காணப்படும் வேதி மூலப்பொருட்கள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இது வரையிலான ஆய்வுகளின் அடிப்படையில், ஹேர் கலர்களில் இருக்கும் ரசாயனத்தின் விளைவாக, சிறுநீர்ப்பை புற்றுநோய் உள்ளிட்ட சில வகை புற்றுநோய்கள் வர வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

    உளவியல்ரீதியான பிரச்சினைகள்:

    ஹேர் கலரிங் என்பது சிலருக்கு ஸ்டைல் என்றாலும் பலர் வெள்ளை முடியை கருப்பாக மாற்றவும், சிலர் தங்களின் தோற்றத்தை அழகாக காண்பிக்கவும் இதை பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவர்களின் நம்பிக்கையை ஹேர் கலரிங் பூர்த்தி செய்யவில்லை என்றாலோ, அல்லது, இந்த ஹேர் கலர் செய்த காரணத்தால் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்பட்டாலோ அவர்கள் மனதளவில் தளர்ச்சி அடைவதாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.அவர்கள் சகமனிதர்களுடன் இணைந்து இருக்க, பழக, தயக்கம் காண்பிக்கும் நிலை ஏற்படுகிறது.

    இவை எல்லாவற்றையும் தாண்டி, ஓரிரு முறை ஆசைக்காக ஹேர் கலரிங் செய்து பார்க்கிறேனே என்று கூறுபவர்கள், கீழ்க்கண்ட விஷயங்களை பின்பற்றுங்கள். ஹேர் கலர் செய்வதற்கு முன்பு முதலில் பேட்ச் டெஸ்ட் செய்துகொள்ளுங்கள்.

    * ஹேர் கலர் பயன்பாடு பற்றிய வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றுங்கள்.

    * தலைமுடி இயற்கையான வகையில் ஊட்டச்சத்தைப் பெற தேவையானவற்றை அடிக்கடி செய்யுங்கள்.

    * ஹேர் கலரிங் செய்யும்போது நீண்ட இடைவெளி விடுவதை கவனத்தில் கொள்ளுங்கள்.

    இவற்றை முழுமையாகப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை மட்டும் அல்ல, உடல் மற்றும் உளவியல் நலத்தையும் காத்துக் கொள்ளலாம் என்பது மருத்துவர்களின் கருத்தாக உள்ளது

    • சோளத்தில் அதிக அளவில் நார்ச்சத்து, புரதச்சத்து போன்றவை உள்ளன.
    • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

    பொதுவாக அடை என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். நீங்கள் வீட்டில் பலவகையான அடை செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். அதாவது அரிசி அடை, கார அடை, கம்பு அடை போன்ற பலவகையான அடை செய்து இருப்பீர்கள்.

    ஆனால் சிவப்பு சோள அடை செய்து இருக்கிறீர்களா. ஆமாங்க சோளத்திலும் அடை செய்யலாம். சோளத்தில் அதிக அளவில் நார்ச்சத்து, புரதச்சத்து போன்றவை உள்ளன. இவற்றை நாம் உணவாக உண்ணும் போது நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன. சிவப்பு சோளத்தை வைத்து எப்படி அடை செய்வது என்று இப்பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க.

    தேவையான பொருட்கள்:

    சிவப்பு சோளம்- அரை கப்

    துவரம் பருப்பு- கால் கப்

    உளுந்தம்பருப்பு- 2 ஸ்பூன்

    பெருங்காயம்- கால் டீஸ்பூன்

    காய்ந்த மிளகாய்- 4

    பெரிய வெங்காயம் -1

    சீரகம்- அரை ஸ்பூன்

    நல்லெண்ணெய்- தேவைக்கேற்ப

    கறிவேப்பிலை- சிறிது

    உப்பு- தேவைக்கேற்ப

    செய்முறை:

    சிவப்பு சோளம் மற்றும் பருப்பு வகைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி, 3 மணிநேரம் ஊறவைக்கவும்.

    வெங்காயம், கறி வேப்பிலையைப் பொடியாக நறுக்கி வைக்கவும். ஊற வைத்தவற்றை தண் ணீர் வடித்து, காய்ந்த மிளகாய், பெருங்காயம்,உப்பு சேர்த்து கொஞ்சம் கொர கொரப்பாக மிக்சியில் அரைக்கவும்.

    அரைத்த மாவுடன் சீரகம், மஞ்சள் தூள், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும். கரைத்து வைத்தி ருக்கும் மாவை மெல்லிய அடைகளாக வார்க்கவும். அதன் மீது எண்ணெய் விட்டு புரட்டி, வெந்ததும் எடுக்கவும். சுவையான சிவப்பு சோள அடையை இப்போது நீங்கள் ருசிக்கலாம்.

    • பெண்களுக்கு கருமுட்டை சேகரிப்பு முறை வரப்பிரசாதமாக உள்ளது.
    • கருமுட்டை குறிப்பிட்ட வெப்பநிலையில் உறைய வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.

    கரு முட்டைகளை உறையவைப்பது என்றால் என்ன?

    கரு உறைய வைத்தல் என்பது அதி நவீன தொழில்நுட்பங்களால் மருத்துவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவ முறை ஆகும். இதில் 2 முறைகள் பராமரிக்கப்படுகிறது. ஒன்று பெண்ணின் உடலில் இருந்து கருமுட்டைகளை எடுத்து சேமித்து வைக்கும் முறை.

    மற்றொன்று கருமுட்டைகளை விந்தணுவுடன் சேர்த்து கருவாக உறுமாறி 3 அல்லது 5 நாட்களுக்கு பிறகு எம்ரியோ ஃப்ரீசிங் அதாவது கரு உறைய வைத்தல் முறை மருத்துவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று.

    இந்த முறையில் கருமுட்டைகளை மட்டுமே எடுத்து சேமித்து வைக்கும் போது அது தரமான முட்டைகள் தானா என்ற உத்திரவாதம் அளிக்க முடியாது. சில நேரங்களில் கருக்கலைந்துபோக வாய்ப்புகள் அதிகம். எனவே தான் இந்த கருமுட்டைகளை எம்ரியோவாக மாற்றி தான் சேமித்து வைப்பது தான் நல்லது.

    அப்படி உருமாற்றி உள்ள கருவை திரவ நைட்ரஜை பயன்படுத்தி குடுவைக்குள் செலுத்தி குறிப்பிட்ட வெப்பநிலையில் பல வருடங்களுக்கு சேமித்து வைக்கப்படுகிறது. இதனை தேவைப்படும் போது எடுத்து பெண்ணின் கருப்பையில் செலுத்தி குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்.

    பொதுவாகவே குழந்தைகளை தாமதமாக பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புபவர்கள் பெண்ணின் கருமுட்டையை, மருத்துவ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உறைய வைக்கலாம். அறிவியல்பூர்வமான 'ஊசைட் கிரையோபிரிசர்வேஷன்' என்பது இதன் பெயர். இதனை கருமுட்டைகளை உறைய வைக்கும் முறை என்று குறிப்பிடப்படுகிறது.

    இதில் முட்டைகளை உறையவைக்க, ஒரு பெண்ணுக்கு மருந்துகள் செலுத்தப்பட்டு அவருடைய ஓவரீஸ் தூண்டி விடப்படும். இதன் மூலமாக குறிப்பிட்ட அளவிலான முட்டைகள் ஒரு பெண்ணின் கருப்பையில் உருவாகும். அவை கருப்பையில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு, குறிப்பிட்ட வெப்பநிலையில் உறைய வைக்கப்பட்டு, பாதுகாக்கப்படும்.

    ஒரு பெண்ணோ அல்லது ஒரு தம்பதியோ இப்போது எனக்கு குழந்தை வேண்டாம், நான் தேவைப்படும் பொழுது இந்த கருமுட்டையை பயன்படுத்தி குழந்தை பெற்றுக் கொள்கிறேன் என்று கூறுபவர்கள் அவர்கள் விரும்பும் பொழுது உறைய வைக்கப்பட்ட கருமுட்டையை பயன்படுத்தி குழந்தை பெற இந்த முறை உதவியாக இருக்கும்.

    எனவேதான் பல நடிகைகளும் தங்களுடைய 30 வயதில் கருமுட்டைகளை உறைய வைக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளில் ஏராளமான இளம்பெண்கள் தமக்கு வசதியான காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக கருமுட்டைகளை உறைகுளிர் பெட்டிகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள்.

     

    கரு முட்டைகளை எப்படி உறையவைப்பது?

    மாதவிடாய் காலத்தின்போது, பொதுவாக ஒரு கரு முட்டை உருவாவதுண்டு. பல கரு முட்டைகள் உருவாவதற்கு பெண்களுக்கு ஊசி வழியாக சுரப்பிநீர் செலுத்தப்படும்.

    கரு முட்டைகளை அகற்ற, அல்ட்ரா சவுண்டு கருவியைக் கொண்டு சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

    தரம் மிகுந்த கரு முட்டைகளைப் பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்க, அந்த நடைமுறை பல முறை தொடரலாம். அதன்பிறகு கரு முட்டைகள் பின்னர் உறையவைக்கப்படும்.

    நடைமுறையில் சில பக்கவிளைவுகளும் ஏற்படலாம்.

    யாரெல்லாம் எக் ஃப்ரீசிங் முறையை பயன்படுத்தலாம்.

     இப்போது மக்கள் பல்வேறு காரணங்களுக்காக "எக் ஃப்ரீசிங்" எனப்படும் கருமுட்டை உறையவைத்தல் முறையை விரும்புகின்றனர்.

    உடல் ரீதியான பிரச்சனைகளுக்கு மருத்துவ சிகிச்சை எடுத்து வரும் பெண்களுக்கும், உடல் நலத்தில் ஏதேனும் குறைபாடோ அல்லது இளம்வயது வாழ்க்கையை நன்றாக அனுபவித்துவிட்டு நடுத்தர வயதில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண்களுக்கு கருமுட்டை சேகரிப்பு முறை வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

    சேமித்து வைக்கப்படும் இந்த கருமுட்டை இயற்கையாக உருவாகும் கருமுட்டையை போலவே அதே தரத்துடன் இருக்கும் எனவும், 10 வருடங்கள் வரை இதனை சேமித்து வைக்க முடியும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    பெண்ணிற்கு புற்றுநோயோ அல்லது புற்று நோய்க்கான சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த கருமுட்டை உறைய வைக்கும் முறையில் முறையில் தன்னுடைய கருமுட்டையை சேமித்து வைக்கலாம்.

    ஏனெனில் புற்று நோய்க்காக அளிக்கப்படும் சிகிச்சை முறைகளில் கீமோதெரபி மற்றும் ரேடியோ தெரபி ஆகிய சிகிச்சை முறைகள் பெண்ணின் கருப்பையில் பாதிப்பை ஏற்படுத்தலாம் அல்லது அவர்கள் கருத்தரிப்பதில் ஏதேனும் பிரச்சினையை உண்டாக்கலாம்.

    எனவே புற்று நோய்க்கான சிகிச்சை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே அந்த பெண்ணினுடைய கருப்பையில் இருந்து கருமுட்டையை எடுத்து, ஆய்வகத்தில் சேமித்து வைத்து விட வேண்டும்.

    எதிர்காலத்தில் புற்று நோய்க்கான சிகிச்சை முடிந்த பின்பு அல்லது தாம் விரும்பும் நேரத்திலும் கருமுட்டையை கருத்தரிக்க வைத்து குழந்தை பெற்று கொள்ள முடியும்.

    கருத்தரிக்க விரும்பும் பெண் ஐவிஎஃப் எனப்படும் முறையில் குழந்தை பெற விரும்பினால், இந்த கருமுட்டை உறைய வைத்து சேமிக்கும் முறையைபயன்படுத்தி கொள்ளலாம்.

    தன்னுடைய ஆண் துணையிடம் சரியான அளவிலோ அல்லது தரமான உயிரணுக்கள் இல்லை என்றாலோ பெண்ணின் கருப்பையில் இருந்து கருமுட்டையை சேமித்து வைத்துக்கொண்டு பிறகு ஆய்வகத்தில் பரிசோதனை செய்து தரமுள்ள உயிரணுக்களை கருமுட்டையில் செலுத்தி குழந்தை பெற்று கொள்ள முடியும்.

    கருத்தரிக்க வைக்கப்பட்ட முட்டையை மீண்டும் பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தி இயற்கையான முறையில் குழந்தை பெற வைக்க முடியும்.

    மருத்துவ காரணங்கள் மட்டுமின்றி வாழ்வியல் ரீதியாகவும் பிற சமூக காரணங்களுக்காகவும் சிலர் கருமுட்டையை சேமித்து வைத்து விரும்புவர்.

    உதாரணத்திற்கு தன்னுடைய தொழிலில் நன்றாக முன்னேற்றம் அடைந்த பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என நினைப்பவர்களும், இளம் வயது வாழ்க்கை நன்றாக அனுபவித்து பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என நினைப்பவர்களும் அல்லது வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வந்த பிறகு நிதி ரீதியாக வலிமையான நிலையை அடைந்த பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என நினைப்பவர்களுக்கும் இந்த கருமுட்டையை சேமித்து வைக்கும் முறையை பின்பற்றலாம்.

    அவர்களின் கருப்பையில் இருந்து சேமித்து வைக்கப்படும் கருமுட்டை பின்வரும் காலங்களில் அவர்கள் விரும்பும் நேரத்தில் கருவூட்டல் செய்யப்பட்டு, அந்த பெண் விரும்பினால் மீண்டும் அவர்களுடைய கருப்பைக்குள்ளேயே செலுத்தி குழந்தை பெற்று கொள்ள முடியும்.

    பெண்ணின் கருவணுவகத்தில் இருந்து ஒரு கரு முட்டையை எடுத்து, அவளுடைய கணவனின் விந்தணுவை நுண்அறுவை முறையில் அந்த கரு முட்டைக்குள் புகுத்தி அதை சினைப்படுத்தும் உத்தி பல ஆண்டுகளாகவே கையாளப்பட்டுவருகிறது.

    அந்த கருவை ஒரு சோதனைக் குழாயில் சில நாட்களுக்கு வளரவிட்ட பின், அதை அதே பெண்ணின் கருப்பைக்குள் பதித்துவிட்டால், பத்து மாதம் கழித்து முழுக் குழந்தையாக வெளிப்படும்.

    பெண்களில் இருந்து பெறப்படும் கருமுட்டையானது அவர்களின் வயது மற்றும் உடல் நிலையை பொறுத்து கருமுட்டையின் தரமும் மாறுபடும். எனவே இப்படி கருமுட்டை சேகரிக்க விரும்பும் பெண்கள் இளம் வயதிலேயே கருமுட்டையை உறைய வைத்து சேமித்து வைக்க வேண்டும்.

    • சப்பாத்தி, தோசை ஆகியவற்றிற்கு நல்ல காமினேசன்.
    • குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    சப்பாத்தி, தோசை ஆகியவற்றிற்கு நல்ல காமினேசன் இந்த மலாய் கார்ன் க்ரேவி. ஸ்வீட்கார்ன் விரும்பி சாப்பிடுபவர்கள் இதை டிரை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்:

    ஸ்வீட்கார்ன் - ஒரு கப்

    வெங்காயம் - 1

    தக்காளி - 2

    பூண்டு, இஞ்சி - 50 கிராம்

    ஏலக்காய், பட்டை, கிராம் - தலா 1

    சீரகம் - ஒரு டீ ஸ்பூன்,

    குடை மிளகாய் - 1

    பச்சை மிளகாய் - 2

    கருவேப்பிலை -சிறிதளவு

    கரம் மசாலா - 1 டீ ஸ்பூன்

    ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு கப்

    மெத்தி இலைகள் - ஒரு டீ ஸ்பூன்

    செய்முறை

    ஸ்வீட்கார்னை வேக வைத்து எடுத்துகொள்ள வேண்டும். வெங்காயத்தை பொடியாக நறுக்க வேண்டும். குடை மிளகாயை நறுக்கவும்.

    ஒரு கடாயில் வெண்ணெய் அல்லது எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய், சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இதோடு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

    வெங்காயம் வதங்கியதும் குடை மிளகாய் சேர்த்து அது வேகும் வரை வதக்க வேண்டும். இதற்கிடையில், மிக்சியில், தக்காளி, பூண்டு, இஞ்சி, கிராம்பு எல்லாவற்றையும் நன்றாக அரைக்க வேண்டும். இதோடு, முந்திரி மற்றும் சிறதளவு ஸ்வீட்கார்ன் சேர்த்தும் அரைக்கவும். அரைத்த விழுதை கடாயில் கொட்டி, அதோடு மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள் உள்ளிட்டவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

    மசாலா நன்றாக வதங்கியதும், அதில் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து, வேக வைத்த கார்னை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பிறகு, கசூரி மேத்தி இலை, கொத்தமல்லி இழை தூவினால் க்ரீமி கார்ன் மசாலா தயார். இதை தோசை, சப்பாத்தி, சாதம் என உங்கள் விருப்பப்படி தொட்டுகொள்ள பயன்படுத்தலாம். நன்றாக இருக்கும்.

    • கோடை காலம் என்றாலே மாம்பழ சீசன்தான்.
    • எல்லோருக்கும் உடனே நினைவில் வருவது ஊறுகாய் தான்.

    கோடை காலம் என்றாலே மாம்பழ சீசன்தான். மாங்காய் என்ற பெயரைக் கேட்டாலே நாவில் எச்சில் ஊரும். அது மாங்காயின் குணம்."மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும்" குணம்."மாதா பழமொழி. உணவில் பல விதமாக மாங்காயை பயன்படுத்தலாம்.

    மாங்காய் என்றாலே எல்லோருக்கும் உடனே நினைவில் வருவது ஊறுகாய் தான். அந்த வகையில் சுவையான வெங்காயம்-மாங்காய் தொக்கு எப்படி செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    வெங்காயம் - அரை கிலோ

    மாங்காய் - பெரியது 1

    கடுகு - தேவையான அளவு

    வெந்தயம் - அரை ஸ்பூன்

    மிளகாய் தூள் - இரண்டு டேபிள் ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    கறிவேப்பிலை - சிறிதளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    அரை கிலோ பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி அதை காய் சீவலைக் கொண்டு துருவிக் கொள்ள வேண்டும். புளிப்பான ஒரு பெரிய சைஸ் மாங்காயின் தோலை நீக்கி, இதையும் துருவி எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு, ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயம் சேர்த்து வறுத்து எடுத்து இதை இடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இப்போது அதே கடாயில் மூன்று டேபிள் ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் சேர்த்து கடுகு கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும், இதனுடன் துருவிய வெங்காயை சேர்த்து அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கி கொள்ள வேண்டும். இதனுடன் துருவிய மாங்காயையும் சேர்க்க வேண்டும்.

    இதை நன்றாக கிளறி விட்டு இரண்டு நிமிடம் மூடி போட்டு வேக வைக்க வேண்டும். இதனுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு மிளகாய் தூள், கடுகு வெந்தயப் பொடியை இதனுடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை நன்றாக கலந்து விட வேண்டும்.

    இதன் பச்சை வாசனை போய் எண்ணெய் பிரிந்து வரும் அளவுக்கு இதை வேக வைக்க வேண்டும். மூடி போட்டு வேக வைத்தால் இரண்டு நிமிடத்தில் வெந்து விடும்.

    இதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு நாட்டு சர்க்கரை அல்லது பொடித்த வெல்லம் சேர்த்து கலந்து விட்டு அடுப்பை அணைத்து விட வேண்டும். இட்லி, தோசை, சப்பாத்தியுன் வைத்து சாப்பிட இந்த டிஷ் மிகவும் நன்றாக இருக்கும்.

    • வயது தொடர்பான சரிவுகள் கர்ப்பம் தரிப்பது மிகவும் சவாலானது.
    • வயதாகும்போது, ​​குறைவான முட்டைகள் கிடைக்கின்றன.

    கருமுட்டை தரம் குறைதல்

    முட்டையின் தரத்தில் வயது தொடர்பான சரிவுகள் கர்ப்பம் தரிப்பது மிகவும் சவாலானது மற்றும் கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்கும். குறைவான முட்டைகள் கிடைக்கும். பெண்களுக்கு பிறக்கும் போது குறைந்த அளவு முட்டைகள் உள்ளன, மேலும் அவர்கள் வயதாகும்போது, குறைவான முட்டைகள் கிடைக்கின்றன, இது இயற்கையாக கர்ப்பம் தரிக்க கடினமாக இருக்கலாம்.

    ஹார்மோன் மாற்றம்

    வயது தொடர்பான ஹார்மோன் மாற்றங்கள் அண்டவிடுப்பைக் குறைத்து, கர்ப்பம் தரிப்பது மிகவும் சவாலானதாக இருக்கும்.

    உடல்நலப் பிரச்சினைகள்

    நார்த்திசுக்கட்டிகள், பிசிஓஎஸ் மற்றும் எண்டோமெட்ரியோசிஸ் ஆகியவை கருவுறுதலை பாதிக்கும் மற்றும் கர்ப்பம் தரிக்க மிகவும் சவாலான சில மருத்துவ பிரச்சனைகளாகும்.

    கர்ப்பத்தில் சிக்கல்

    முன்கூட்டிய பிரசவம், கர்ப்பகால நீரிழிவு மற்றும் ப்ரீக்ளாம்ப்சியா ஆகியவை 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களை அதிகம் பாதிக்கும் கர்ப்ப பிரச்சினைகளில் அடங்கும்.

    குரோமோசோம் அசாதாரணங்கள்

    40 வயதுக்கு மேற்பட்ட பெண்ணுக்கு பிறக்கும் குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம் போன்ற மரபணுக் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

    கருவுறுதல் சிகிச்சையின் செயல்திறன் குறைந்தது. ஐ.வி.எப் போன்ற கருவுறாமை சிகிச்சைகள் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு வேலை செய்யாமல் போகலாம், இது கர்ப்பம் தரிப்பது மிகவும் சவாலானதாக இருக்கும்.

    40 வயதிற்கு மேற்பட்ட கருத்தரிப்பதில் சிக்கல் உள்ள பெண்கள் தங்கள் மருத்துவர் மற்றும் இனப்பெருக்க நிபுணரிடம் தங்கள் விருப்பங்கள் மற்றும் அவர்கள் சந்திக்கும் சாத்தியமான சிரமங்கள் பற்றி பேசுவது மிகவும் முக்கியம்.

    • பெண்ணின் வயதுக்கு ஏற்ப கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் குறையும்.
    • ஆரோக்கியமான கர்ப்பத்தைத் தாங்கும் வாய்ப்புகள் குறையும்.

    40 வயதிற்குப் பிறகு கர்ப்பமாக இருக்க சிறந்த வழிகள்?.

    பல பெண்களுக்கு, 40 வயதிற்குப் பிறகு ஒரு குடும்பத்தைத் தொடங்கும் எண்ணம் அச்சுறுத்தலாகவும் சவாலாகவும் இருக்கும். 40 வயதிற்கு பிறகும் கருத்தரிக்க முடியும் என்றாலும், ஒரு பெண்ணின் வயதுக்கு ஏற்ப கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் இயற்கையாகவே குறையும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    40 வயதிற்குப் பிறகு கருவுறுதலை பாதிக்கும் பல்வேறு காரணம் மற்றும் கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி ஆராய்வோம். 40 வயதிற்குப் பிறகு கர்ப்பத்துடன் தொடர்புடைய அபாயங்கள் மற்றும் பரிசீலனைகளைப் பற்றியும், இதன்மூலம் நீங்கள் வாழ்க்கையில் ஒரு குடும்பத்தைத் தொடங்குவது பற்றி தகவலறிந்த முடிவை எடுக்கலாம்.

    40 வயதிற்குப் பிறகும் இயற்கையாகவே கருத்தரிக்க முடியும், ஆனால் ஒரு பெண் வயதாகும்போது, கருவுறுதல் மற்றும் ஆரோக்கியமான கர்ப்பத்தைத் தாங்கும் வாய்ப்புகள் குறையும். 40 வயதிற்குப் பிறகு கருவுறுதலை பாதிக்கும் காரணிகள்.

    கருப்பை செயல்பாடு குறைதல்

    பெண்களின் முட்டைகளின் அளவு மற்றும் தரம் குறைவதால், வயதாகும்போது இயற்கையாக கருத்தரிப்பது மிகவும் சவாலானது.

    ஹார்மோன் மாற்றங்கள்

    வயது தொடர்பான ஹார்மோன் மாற்றங்களால் அண்டவிடுப்பைக் குறைத்து, கர்ப்பம் தரிப்பது மிகவும் சவாலானதாக இருக்கும்.

    மருத்துவ நிலைகள்

    எண்டோமெட்ரியோசிஸ், பிசிஓஎஸ் மற்றும் ஃபைப்ராய்டுகள் உள்ளிட்ட பல மருத்துவக் கோளாறுகளால் கருவுறுதல் பாதிக்கப்படலாம்.

    வாழ்க்கை முறை

    புகைபிடித்தல், அளவுக்கு அதிகமாக குடிப்பழக்கம் மற்றும் உட்கார்ந்த வாழ்க்கை முறை ஆகியவை கருவுறுதலை பாதிக்கும் மற்றும் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.

    ஆண் துணையின் வயது

    சந்ததியினருக்கு சில மரபணு பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகரித்து, வயதான தந்தையின் கருவுறுதலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

    பல கருச்சிதைவுகள் அல்லது பிற கர்ப்ப கஷ்டங்கள் 40 வயதிற்குப் பிறகு பெண்கள் கர்ப்பமாக இருப்பதை மிகவும் கடினமாக்கலாம்.

    40 வயதிற்குப் பிறகும் இயற்கையான கருத்தரித்தல் சாத்தியம் என்றாலும், பெண்கள் தங்கள் கருவுறுதல் விருப்பங்களைப் பற்றி தங்கள் மருத்துவரிடம் பேசுவதும், தேவைப்பட்டால், செயற்கை கருத்தரித்தல் போன்ற உதவி இனப்பெருக்க தொழில்நுட்பங்களைப் பெறுவதும் முக்கியம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குழந்தைகளுடன் செலவிடுவதற்கு நேரம் ஒதுக்க வேண்டும்.
    • பெற்றோரின் சரியான வழிகாட்டுதல்தான் அவர்களின் தனித்திறனை வளர்க்க உதவும்.

    குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் பெற்றோர் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். பெற்றோரின் சரியான வழிகாட்டுதல்தான் குழந்தைகளின் தனித்திறனை வளர்க்க உதவும். வேலை, குடும்ப பொறுப்புகள் என எத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியில் இருந்தாலும் குழந்தைகளுடன் செலவிடுவதற்கு நேரம் ஒதுக்க வேண்டும்.

    ஒவ்வொரு காலகட்டத்திலும் குழந்தைகளை உடன் இருந்து வழிநடத்தி செல்வது அவர்களை சரியான வளர்ச்சி பாதையில் பயணிக்க வழிவகை செய்யும். அவர்களின் சிந்தனைகள், செயல்திறன்களை மேம்படுத்த உதவும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:

    அறிவாற்றல் வளர்ச்சி

    குழந்தைகள் வளரும்போது அவர்களின் அறிவாற்றல் வளர்ச்சி அடையும். பெற்றோர்களின் நடவடிக்கைகளை பார்த்தே பிள்ளைகள் வளர்வார்கள் என்பதால் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டியது முக்கியமானது. பெற்றோரின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தால் அதனை பின்பற்றி பிள்ளைகளும் சிறந்த மனிதர்களாக உருவாகுவார்கள்.

    எதிர்கொள்ளும் சமூக சிக்கல்களை தீர்க்கும் திறன்களை மேம்படுத்திக்கொள்வார்கள். எல்லா சூழ்நிலைகளையும் சிறப்பாக கையாளுதல், ஒழுக்கம், நேர மேலாண்மை போன்ற நடைமுறைகள் மூலம் தங்கள் தகுதியை வளர்த்துக்கொள்வார்கள்.

    உடல் வளர்ச்சி

    ஆரோக்கியமாக இருப்பது, உடற்பயிற்சி செய்வது, சரியான உணவுகளை உட்கொள்வது என பெற்றோரிடமிருந்து கிடைக்கும் சரியான வழிகாட்டுதல்கள் குழந்தைகளின் உடல் வளர்ச்சியை மேம்படுத்த உதவும். இந்த விஷயத்தில் பெற்றோரைதான் பிள்ளைகள் ரோல்மாடலாக கருதுகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

     மன வளர்ச்சி

    குழந்தைகள் புதுமையாக கற்றுக்கொள்ள பெற்றோர்களின் செயல்பாடுகள் உதவுகின்றன. தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம், ஒழுக்கநெறிகளை தவறாமல் பின்பற்றவது, பிறருடைய கருத்துக்களுக்கு செவி சாய்ப்பது, ஆட்சேபனை இருப்பின் மனம் நோகாதபடி விளக்கி புரியவைக்கும் விதம் போன்ற விஷயங்களை பெற்றோரை பார்த்துத்தான் கற்றுக்கொள்கிறார்கள். அதற்கேற்ற மனப்பக்குவம் கொண்டவர்களாக மாறிவிடுகிறார்கள்.

    ஒப்பீடு

    குழந்தை வளர்ச்சியில் தந்தையின் பங்கு மிக முக்கியமானது. எந்தவொரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் தந்தையின் செயல்பாட்டுடன் அதனை ஒப்பிட்டு பார்ப்பார்கள். குழந்தைகள் மனதில் எளிதில் எதிர்மறை சிந்தனைகள் குடிகொண்டு விடும்.

    தாங்கள் ஆசைப்படும் விஷயங்கள் தங்களுக்கு சாதகமாக அமையாவிட்டால் சட்டென்று மனதொடிந்து போய்விடுவார்கள்.

    பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டால் அவற்றை எப்படி கையாள்வது என்பதை பக்குவமாக குழந்தைகளுக்கு சொல்லி புரியவைக்க வேண்டும். நேர்மறையான அணுகுமுறையுடன் சிக்கல்களை எப்படி தீர்க்கலாம் என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும்.

    சின்ன சின்ன வீட்டு வேலைகளை செய்ய வைத்து குடும்ப பொறுப்புடன் செயல்படுவதற்கு அடித்தளமிட வேண்டும். குழந்தைகளின் தேவைகள் எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அவற்றைப் புரிந்துகொள்வதும், நிறைவேற்றுவதும் மிக முக்கியமானது.

    எல்லா நேரங்களிலும் அவர்களுக்கு பக்கபலமாக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்திக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் பெற்றோர் தங்களை நேசிக்கிறார்கள், அவர்களுக்கு நாம் நம்பிக்கைக்குரியவராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் குழந்தைகள் மனதில் வளரும். பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வார்கள்.

    • கருத்தரிப்பு நிகழவில்லை எனில் மலட்டுத்தன்மை என்று சொல்லப்படுகிறது.
    • இருவருக்கும் மலட்டுத்தன்மை பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    மலட்டுத்தன்மை என்பது கணவன் மனைவி இருவரும் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொண்டாலும் தொடர்ந்து ஒரு வருடங்கள் வரை கருத்தரிப்பு நிகழவில்லை எனில் அது கருவுறாமை அல்லது மலட்டுத்தன்மை என்று சொல்லப்படுகிறது.

    இந்த கருவுறாமை என்பது பெண்ணின் பிரச்சனை மட்டுமல்ல. ஆண்களும் மலட்டுத்தன்மையை கொண்டிருக்கலாம். ஆண்களுக்கும், பெண்களுக்கும் என இருவருக்குமே கருவுறுதல் அல்லது மலட்டுத்தன்மை பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    பெண் மலட்டுத்தன்மைக்கான காரணங்கள்

    ஒழுங்கற்ற மாதவிடாய்

    மாதவிடாய் இல்லாமல் போவது

    ஹார்மோன் பிரச்சனைகள்

    ஃப்லோபியன் குழாய் அடைப்பு

    செலியாக் நோய்

    சிறுநீரக நோய்

    எக்டோபிக் கர்ப்ப்பம்

    இடுப்பு அழற்சி நோய்

    பிட்யூட்டரி சுரப்பி கோளாறுகள்

    பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்

    சிக்கிள் செல் இரத்த சோகை

    எண்டோமெட்ரியோசிஸ் (கருப்பை நார்த்திசுக்கட்டிகள் மற்றும் பாலிப்கள்)

    தைராய்டு நோய்

    அதிக வயதை கொண்டிருத்தல்

    உடல் பருமன் அல்லது மிக குறைவான எடை கொண்டிருப்பது

    இனப்பெருக்க அமைப்பை சேதப்படுத்தும் சில பாலியல் பரவும் நோய்த்தொற்றுகள் இருப்பது.

    ஆண் மலட்டுத்தன்மைக்கான காரணங்கள்

    வெரிகோஸ் வெயின் பிரச்சனை (விரிவாக்கபட்ட நரம்புகள்)

    விந்தணுக்கள் வைத்திருக்கும் சாக்

    மரபணு கோளாறுகள் (சிஸ்டிக், ஃபைப்ரோசிஸ்)

    இறுக்கமான ஆடைகள் அணிவதால் விந்தணுக்கள் அதிக வெப்பத்தை சந்திதல்

    விந்தணுக்கள் குறைவாக இருப்பது (டெஸ்டோஸ்ட்ரான் அளவு குறைவது)

    முன் கூட்டிய விந்து வெளிபாடு

    விந்தணுக்களின் வடிவம், இயக்கம், அது உள் செல்லும் நேரம் போன்ற குறைபாடு

    மருத்துவ நிலைமகள் மற்றும் மருந்துகள் எடுத்துகொள்வது.

    • கேழ்வரகில் கால்சியம் சத்து அதிகம்.
    • எலும்புகளின் உறுதித்தன்மை அதிகரிக்கும்.

    கேழ்வரகில் கால்சியம் சத்து அதிகம். வாரம் இருமுறை, கேழ்வரகில் செய்த உணவுகளை சாப்பிட்டுவந்தால் பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மை அதிகரிக்கும். சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதை இனிப்பு உருண்டையாக செய்துகொடுக்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    கேழ்வரகு மாவு- 1 கப்

    நிலக்கடலை - 1/4

    தேங்காய்த்துருவல் - 1/2 கப்

    வெல்லம் (பொடித்தது) - 1/2 கப்

    ஏலக்காய்- ஒரு சிட்டிகை

    உப்பு - 1 சிட்டிகை

    செய்முறை:

    முதலில் கேழ்வரகு மாவை மிதமான தீயில் வறுத்து, ஒரு பாத்திரத்தில் ஆறவிடவும். பிறகு நிலக்கடலையை வறுத்து தோலை அகற்றிவிட்டு, மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி கரகரப்பாக திரித்து, ஆறவைத்த கேழ்வரகு மாவுடன் சேர்க்க வேண்டும். கூடவே தேங்காய் துருவலையும் சேர்க்க வேண்டும்.

    பின்னர் ஏலக்காயை பொடித்துப்போட்டு, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். சர்க்கரையை அரை கப் நீர் விட்டு அடுப்பில் வைத்து, கொதித்து சர்க்கரை கரைந்ததும் இறக்கி வடிகட்டி இந்த மாவுடன் ஊற்றவும். நன்றாக கிளறி சப்பாத்தி மாவு பக்குவத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் மாவினை உருண்டைகளாக உருட்டி, இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுக்க வேண்டும். மிகவும்சுவையான, சத்தான கேழ்வரகு உருண்டகளை குழந்தைகள் உள்பட அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோடைகாலத்தில் அதிக நீரைப் பருகுவது மிகவும் முக்கியம்.
    • புரோட்டீன் சத்து குறைவாக இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    கோடைகாலத்தில் அதிக நீரைப் பருகுவது மிகவும் முக்கியம். இதற்கு சில உணவுகளையும், நீர் பானங்களையும் உள் பருக வேண்டும். அதற்கு வெள்ளரி, தர்பூசணி, இளநீர் போன்றவற்றை அதிகமாக பருகுவது நல்லது. இதனால் சருமம் மங்காமல், செழுமை அடையும்.

    கோடைக் காலத்தில் புரோட்டீன் சத்து குறைவாக இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளான, வாழைத் தண்டு, கீரை முதலானவற்றை எடுத்துக்கொள்ளுதல் அவசியம். அதோடு அதிக அளவிலான தண்ணீர் குடிக்க வேண்டும். நீர்ச்சத்து குறைபாடு இன்றி உடலை பாதுகாக்க வேண்டும்.

    கோடைக் காலத்தில் சருமத்தில் நீர்த்தன்மை இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அதனால் கோடைகாலத்தில் அதிக தண்ணீர் பருகுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். வெயிலில் செல்வதால் தோல்களில் அலர்ஜி, உடலில் தடிப்புகள், முகத்தில் பருக்கள், உடல் முழுது வியர்க்குரு போன்றவை ஏற்படும். இவற்றை தடுக்க வேண்டியது அவசியமான ஒன்று.

     அழகு நிலையங்கள் செல்வதைத் தவிர்த்து வீட்டிலேயே அரிசி மாவு, கடலை மாவு, தயிர் முதலியவற்றைப் பயன்படுத்தி இயற்கை முறையில் உங்கள் முகம் மற்றும் உடலை பாதுகாத்துக் கொள்ளலாம்.

     வாரம் இமுறை வேப்பிலைகள் உடன் சிறிது கறிவேப்பிலையையும் சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து நீராடினால் தலைச்சூடு குறைந்து தலைமுடி குளிர்ச்சியாகவும் நறுமணத்துடன் காணப்படும்.

     அவ்வப்போது நெல்லிக்காயை, ஒரு துண்டு இஞ்சி, சிறிது வெல்லம் சேர்த்து அரைத்து சாறாக குடித்து வரவும் இதன் மூலம் ரத்தசோகை குறைந்து உடல் புத்துணர்ச்சி பெறும்.

    சோற்றுக் கற்றாழையை அவ்வப்போது முகம், கை, கால், கழுத்து ஆகிய பகுதிகளில் தடவி சற்று நேரம் கழித்து நீராடவும் உடல் குளிர்ச்சியாகவும் பொலிவும் காணப்படும்.

    கோடையில் விலை உயர்ந்த குளிர்பானங்களை வாங்குவதை தவிர்த்து தயிர் மோர் பயன்படுத்தலாம் அதில் வெந்தயம் சீரகம் சின்னவெங்காயம் சேர்த்து பயன்படுத்துவது நல்லது.

    இயற்கை பொருட்களான தேன் மற்றும் தயிர் இரண்டும் வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க பெரிதும் உதவுகிறது. அதேபோல் பாலாடையில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து முகத்திற்கு பூசி வந்தால் முகம் பளபளப்பாக மாறும்.

     ஒரு ஸ்பூன் தயிர், அரை ஸ்பூன் தேன் இரண்டையும் நன்றாகக் கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரால் கழுவினால் முகம் பட்டுப்போல பளப்பளப்பாக இருக்கும்.

    இதனை தொடர்ந்து செய்யும்போது வறண்ட சருமம் பளிச்சென்று ஆகிவிடும். மேலும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளையும், அழுக்குகளையும் மற்றும் இறந்த செல்களை நீக்கி பொலிவு பெறச் செய்கிறது. முகத்தில் சுருக்கங்களை நீக்குவதால் இளமையைத் தக்கவைக்கும்.

    கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் பருக்கள், கட்டிகள் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம். தேன் மற்றும் தயிர் இரண்டையும் சேர்த்து பயன்படுத்தும் போது சருமத்தில் உள்ள ஈரப்பதம் தக்க வைக்கப்படுகிறது. முகம் வறண்டு போகாமல் தடுக்க இவை உதவுகின்றன.

     மேலும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளிப் பழச்சாற்றை முகத்தில் தடவலாம். எலும்பிச்சைச் சாறு மற்றும் சர்க்கரையை இணைத்து முகத்தில் பயன்படுத்தினால் முகம் பொலிவு பெறும். தக்காளிப் பழத்தையும், சர்க்கரையையும் இணைத்து அதன் சாற்றை முகத்தில் தடவி வந்தால் முகம் பளப்பளவென மாற்றம் அடையும்.

    ×