என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    அவல் வைத்து கிச்சடி, உப்புமா செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று அவலில் சூப்பரான ஸ்நாக்ஸ் மிக்சர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கெட்டியான அவல் - 500 கிராம்,
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
    இரண்டாக உடைத்த முந்திரி - 2 டீஸ்பூன்,
    காய்ந்த திராட்சை - 2 டேபிள்ஸ்பூன்,
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிது, உப்பு,
    எண்ணெய் - தேவைக்கு,
    வறுத்த வேர்க்கடலை - 50 கிராம்



    செய்முறை :

    கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் மிதமான சூட்டில் வைத்து சுத்தம் செய்த அவலை பொரித்தெடுத்து தனியே வைக்கவும்.

    அதே போல் கறிவேப்பிலை, முந்திரி, காய்ந்த திராட்சையை தனித்தனியே எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து தனியே வைக்கவும்.

    பொரித்த அவலுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு போட்டு நன்கு கலந்து, அதனுடன் தோல் நீக்கி வறுத்த வேர்க்கடலையைச் சேர்க்கவும்.

    பொரித்த முந்திரி, காய்ந்த திராட்சை, கறிவேப்பிலை அனைத்தையும் நன்றாக கலந்து பரிமாறவும்.

    சூப்பரான ஸ்நாக்ஸ் அவல் மிக்சர் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேழ்வரகில் இனிப்பு சேர்த்து அடை செய்தால் அருமையாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று கேழ்வரகு இனிப்பு அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 1 கப்,
    வெல்லம் அல்லது கருப்பட்டி - 3/4 கப்,
    தேங்காய்த்துருவல் - 1/4 கப்,
    ஏலக்காய்த்தூள் - சிறிது,
    பொடித்த முந்திரி - சிறிது,
    நெய் - தேவையான அளவு.



    செய்முறை :

    கருப்பட்டி அல்லது வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.

    வெல்லக்கரைசல் சற்று கெட்டியானதும், இத்துடன் தேங்காய்த்துருவல், கேழ்வரகு மாவு, ஏலக்காய்த்தூள், நெயில் வறுத்த முந்திரி சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

    வாழை இலையில் நெய் தடவி, மாவை சற்று கனமான அடைகளாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் நெய் விட்டு வேகவைத்து எடுத்து சூடாக பரிமாறவும்.

    சூப்பரான கேழ்வரகு இனிப்பு அடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிக்கனில் 65 செய்வது போல் முட்டையிலும் 65 செய்யலாம். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான முட்டை 65 செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    முட்டை - 3
    சோளமாவு - 2 மேஜைக்கரண்டி
    மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
    புட் கலர் - 1/4 தேக்கரண்டி
    தயிர் - 1 மேஜைக்கரண்டி
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு  



    செய்முறை :

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முட்டை வேக வைத்து ஓட்டை எடுத்து விட்டு நான்காக வெட்டி வைக்கவும்.
       
    ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சோளமாவு, மிளகாய் தூள், கொத்தமல்லி, புட்கலர், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, தயிர் சேர்த்து நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்.

    அதோடு வெட்டி வைத்துள்ள முட்டை துண்டுகளை சேர்த்து மஞ்சள் கரு கீழே விழாமல் மெதுவாக கலவை எல்லா இடங்களிலும் படும் படி சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
      
    ஊறிய பிறகு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊற வைத்த முட்டை துண்டுகளை போடவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் மெதுவாக திருப்பி போடவும்.

    இருபுறமும் வெந்ததும் எடுத்து டிஸ்யூ பேப்பரில் வைக்கவும். எண்ணெய் வடிந்த பின்னர் வேறு பாத்திரத்திற்கு மாற்றி விடவும்.

    சுவையான முட்டை 65 ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாதம், தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் நண்டு குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நண்டு - அரை கிலோ
    வெங்காயம் - 4
    தக்காளி - 2
    பச்சை மிளகாய் - 5
    தேங்காய் - அரை முடி
    மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
    கடுகு, பட்டை, சோம்பு, கசகசா, மிளகு தூள் - தேவையான அளவு



    செய்முறை :

    நண்டை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள்.

    வெங்காயம் நன்றாக வதங்கியம் தக்காளி, பச்சை, மிளகாய் சேர்த்து வதக்கி ஆற வைத்து மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    தேங்காய், சோம்பு, கசகசா மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, லவங்கம், கடுகு சேர்த்துத் தாளித்த பின்னர் அரை டீஸ்பூன் சோம்பு, சிறிது மிளகு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு தாளித்த பின்னர் நண்டை அதில் கொட்டிக் கிளறுங்கள்.

    ஐந்து நிமிடம் கழித்து அரைத்துவைத்த வெங்காய தக்காளி விழுதைச் சேர்த்து, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் அரை டம்ளர் தண்ணீர்  ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும்.

    பச்சை வாசனை போகும்வரை கொதிக்கவிடுங்கள். குழம்பு நன்றாகக் கொதித்ததும் தேங்காய் விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிய பின்னர் கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்குங்கள்.

    நண்டு குருமா ரெடி.

    குறிப்பு - தேங்காய் பாலும் சேர்க்கலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சூடான சாதத்துடன் சாப்பிட கனவா மீன் (கடம்பா மீன்) தொக்கு சூப்பராக இருக்கும். இன்று இந்த கனவா மீன் தொக்கை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கனவா மீன் - அரை கிலோ
    மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    தனியாத் தூள் - அரை டீஸ்பூன்
    மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    தாளிக்க:

    கடுகு, சீரகம், சோம்பு, பட்டை, கறிவேப்பிலை - சிறிதளவு



    செய்முறை :

    கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கனவா மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சோம்பு, பட்டை, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளி சேர்தது வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் மிளகாய்த் தூள், தனியாத் தூள், மிளகுத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து தக்காளி நன்றாக குழைய வதக்கவும்.

    அடுத்து அதில் சுத்தம்செய்த கனவா மீனைக் கொட்டி வதக்குங்கள். சிறிது நேரம் மூடி போட்டு வேகவிடவும்.

    உப்பை சேர்த்து கிளறி அடுப்பை சிம்மில் வையுங்கள்.

    அனைத்தும் நன்றாகச் சேர்ந்து தொக்கு பதம் வந்தவுடன் கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்குங்கள்.

    சூப்பரான கனவா மீன் தொக்கு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலையில் செய்த சாதம் மீந்து விட்டால் அதை வைத்து மாலையில் பக்கோடா செய்யலாம். இந்த பக்கோடா செய்வது மிகவும் எளிமையானது. சுவை அருமையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    சாதம் - 2 கப்
    கடலைமாவு - 1 கப்
    வெங்காயம் - 1
    இஞ்சி .- 1 துண்டு
    பச்சைமிளகாய் - 2
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    கறிவேப்பிலை - 1 கொத்து
    உப்பு, எண்ணெய் - தேவையானது



    செய்முறை :

    வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    ஒரு அகண்ட பாத்திரத்தில் வடித்த சாதத்தை போட்டு நன்றாக குழைத்து கொள்ளவும்.

    அதனுடன் கடலைமாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, தேவையான உப்பு, காய வைத்த எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி எல்லாவற்றையும் சேர்த்து நன்கு பிசையவேண்டும்.

    அடுப்பில் கடாயில் எண்ணெய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை பக்கோடாவுக்கு போடுவது போல் கிள்ளி போட்டு சிவந்ததும் எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான ரைஸ் பக்கோடா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, நாண், தோசைக்கு தொட்டுக்கொள்ள பன்னீர் கிரேவி அருமையாக இருக்கும். இன்று ஆந்திரா ஸ்டைல் பன்னீர் கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பன்னீர் - 250 கிராம்,
    வெங்காயம் - 2,
    மிளகாய் வற்றல் - 2
    பச்சை மிளகாய் - 2,
    இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்,
    எலுமிச்சை சாறு - 2 டேபிள்ஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்,
    கடுகு, வெந்தயம் - தலா கால் டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    எள் - ஒரு டீஸ்பூன்,
    எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.

    அரைக்க:

    வேர்க்கடலை, தேங்காய்த் துருவல் - தலா 4 டேபிள்ஸ்பூன்,
    தயிர் - 2 டேபிள்ஸ்பூன்,
    தனியா, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன்,
    பட்டை - சிறிய துண்டு,
    கிராம்பு, ஏலக்காய் - தலா 3.



    செய்முறை:

    அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பன்னீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர்… நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது, அரைத்த மசாலா, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மேலும் வதக்கவும்.

    சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

    எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

    இப்போது பன்னீரை சேர்த்து மிதமான தீயில் சமைக்கவும்.

    பச்சை வாசனை போனதும், நெயில் எள் தாளித்து சேர்த்து, இறக்கிப் பரிமாறவும்.

    சூப்பரான ஆந்திரா ஸ்டைல் பன்னீர் கிரேவி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பல்வேறு வகையான பக்கோடா செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கோதுமை மாவில் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 2 கப்,
    கடலை மாவு - ஒரு கப்,
    அரிசி மாவு - அரை கப்,
    வெங்காயம் - ஒன்று,
    பச்சை மிளகாய் - 6,
    இஞ்சி - சிறு துண்டு,
    சமையல் சோடா - ஒரு சிட்டிகை,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சியை தோல் சீவி, துருவிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, கடலை மாவு, அரிசி மாவு போட்டு நன்றாக கலந்த அதனுடன் கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி துருவல், கொத்தமல்லி, உப்பு, சமையல்சோடா சேர்த்துக் கலந்து, லேசாக தண்ணீர் தெளித்து, பகோடா மாவு போல பிசிறி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசிறிய மாவை எடுத்து கிள்ளிப் போட்டு, பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான கோதுமை கோதுமை பக்கோடா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு மதியம் பள்ளிக்கு கொடுத்தனுப்ப சுவையான வித்தியாசமான உணவு செய்து கொடுக்க விரும்பினால் உருளைக்கிழங்கு மசாலா சப்பாத்தி ரோல் செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெங்காயம் - 2
    சீரகம் - கால் டீஸ்பூன்
    கோதுமை மாவு - 2 கப்
    மஞ்சள் தூள் -  கால் சிட்டிகை,
    மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
    உப்பு, எண்ணெய், நெய் - தேவையான அளவு
    கேரட் - 1
    குடைமிளகாய் - 1
    ப.மிளகாய் - 2
    கொத்தமல்லி - சிறிதளவு
    உருளைக்கிழங்கு - 2



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லி, கேரட், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    கோதுமை மாவில் சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர், நறுக்கிய வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் பின் கேரட், குடைமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

    பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

    இப்போது மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு மசாலா உருளைக்கிழங்குடன் சேரும் வரை வதக்கி இறக்க வேண்டும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை சப்பாத்திகளாக தேய்த்து தோசை கல்லில் போட்டு நெய் சேர்த்து, முன்னும் பின்னும் பொன்னிறமாக சுட்டு எடுக்க வேண்டும்.

    இறுதியில் இந்த சப்பாத்திகளின் மேல் உருளைக்கிழங்கு மசாலாவை தேய்த்து அதனை சுருட்டி பரிமாற வேண்டும். வேண்டுமெனில் உருளைக்கிழங்கு மசாலா வைத்த பின், அதன் மேல் தக்காளி சாஸ் ஊற்றி சுருட்டி பரிமாறலாம்.

    சுவையான உருளைக்கிழங்கு மசாலா சப்பாத்தி ரோல் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மீனை வைத்து ஹோட்டலில் செய்வதைப்போல் மஞ்சூரியன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    துண்டு மீன் - 1/2 கிலோ,
    சோளமாவு, மைதா - தலா 25 கிராம்,
    முட்டை - 1,
    கொத்தமல்லி - சிறிது,
    எண்ணெய், உப்பு - தேவைக்கு,
    வெங்காயம் - 2,
    பூண்டு - 6 பல்,
    இஞ்சி - 1 துண்டு,
    பச்சைமிளகாய் - 5,
    சோயா சாஸ், தக்காளி சாஸ், வெங்காயத்தாள் - தேவைக்கு.



    செய்முறை :


    கொத்தமல்லி, வெங்காயம், வெங்காயத்தாள், பூண்டு, இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் சோளமாவு, மைதா, முட்டை, உப்பு சேர்த்து ஒன்றாக கலந்து அதில் மீனை போட்டு சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்றாக கலந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.

    ஊற வைத்த மீனை சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து சூடானதும் வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, சோயா சாஸ், தக்காளி சாஸ், மீன்  சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும்.

    கடைசியாக அதில் கொத்தமல்லி, வெங்காயத்தாள் போட்டு சூடாக பரிமாறவும்.

    சூப்பரான மீன் மஞ்சூரியன் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சூப்பரான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் பட்டாணி கபாப் செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சைப் பட்டாணி - அரை கப்
    கடலைப்பருப்பு - அரை கப்
    புதினா, கொத்தமல்லி தழை - சிறிதளவு
    இஞ்சி - 1 துண்டு
    பூண்டு - தேவைக்கு
    மைதா மாவு - 1 டேபிள்ஸ்பூன்
    எலுமிச்சை சாறு - சிறிதளவு
    ரொட்டித்தூள் - சிறிதளவு
    எண்ணெய், உப்பு - தேவைக்கு



    செய்முறை:

    கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடலைப்பருப்பு, பச்சைப் பட்டாணி இரண்டையும் தனியாக வேக வைத்து மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் இஞ்சி, புதினா, கொத்தமல்லி தழை, பூண்டு ஆகியவற்றுடன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    பின்னர் அதனுடன் பட்டாணி, கடலைப் பருப்பு விழுது, மைதா, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

    பின்னர் அந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ரொட்டி தூளில் பிரட்டி கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து ருசிக்கலாம்.

    சூப்பரான ஸ்நாக்ஸ் பட்டாணி கபாப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் சுவையான, சத்துக்கள் நிறைந்த பன்னீர் கீர் எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    துருவிய பன்னீர் - 1/2 கப்
    சுண்டக்காய்ச்சிய பால் - 3/4 கப்
    பால் - 1/2 லிட்டர்
    உலர்ந்த திராட்சை - தேவையான அளவு
    பாதாம் பருப்பு -  தேவையான அளவு
    ஏலக்காய் பொடி - தேவையான அளவு
    குங்குமப்பூ - சிறிதளவு


    செய்முறை:

    அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் துருவிய பன்னீரை சேர்க்க வேண்டும். உடனே பாலையும் அதனுடன் சேர்க்கவும். 5-6 நிமிடங்கள் விடாமல் கிளறிக்கொண்டே கட்டியில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். இப்பொழுது சுண்டக்காய்ச்சிய கெட்டியான பாலை சேர்த்து 3-4 நிமிடங்கள் நன்றாக கிளறவும்.

    ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கிளறவும். இதனுடன் உலர்ந்த திராட்சை மற்றும் நறுக்கிய பாதாம் பருப்பை சேர்த்து கிளறவும். நன்றாக கிளறி அதை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.



    நறுக்கிய பாதாம் பருப்பு மற்றும் உலர்ந்த திராட்சை, குங்குமப்பூ அதன்மேல் தூவி அலங்கரிக்கவும். கொஞ்சம் குளிர வைத்து பரிமாறவும்.  சுவையான நாவிற்கு விருந்தளிக்கும் பன்னீர் கீர் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×