search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "HomeMade Recieps"

    குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்கை வைத்து சூப்பரான வெரைட்டி சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - ஒரு கப்,
    உருளைக்கிழங்கு - 2,
    மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன்,
    தனியாதூள் - ஒரு டீஸ்பூன்,
    கரம் மசாலாதூள் - அரை டீஸ்பூன்,
    சீரகத்தூள் - அரை டீஸ்பூன்,
    மாங்காய் தூள் - அரை டீஸ்பூன்,
    நெய் - 2 டீஸ்பூன்,
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்.
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு



    செய்முறை:

    அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை தோல் சீவி பொடியாக நறுக்குங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உருளைக்கிழங்கை போட்டு வதக்கவும்.

    உருளைக்கிழங்கு பாதியளவு வெந்ததும் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்குங்கள்.

    உருளைக்கிழங்கு வெந்ததும் கரம் மசாலாதூள், தனியாதூள், மிளகாய்தூள், சீரகத்தூள், மாங்காய் தூள் சேர்த்து நன்கு வதக்கி நெய், சாதம், கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.

    சூப்பரான உருளை மசாலா ரைஸ் ரெடி.

    குழந்தைகளுக்கு இதன் ருசி மிகவும் பிடிக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேழ்வரகில் இனிப்பு சேர்த்து அடை செய்தால் அருமையாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று கேழ்வரகு இனிப்பு அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 1 கப்,
    வெல்லம் அல்லது கருப்பட்டி - 3/4 கப்,
    தேங்காய்த்துருவல் - 1/4 கப்,
    ஏலக்காய்த்தூள் - சிறிது,
    பொடித்த முந்திரி - சிறிது,
    நெய் - தேவையான அளவு.



    செய்முறை :

    கருப்பட்டி அல்லது வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.

    வெல்லக்கரைசல் சற்று கெட்டியானதும், இத்துடன் தேங்காய்த்துருவல், கேழ்வரகு மாவு, ஏலக்காய்த்தூள், நெயில் வறுத்த முந்திரி சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

    வாழை இலையில் நெய் தடவி, மாவை சற்று கனமான அடைகளாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் நெய் விட்டு வேகவைத்து எடுத்து சூடாக பரிமாறவும்.

    சூப்பரான கேழ்வரகு இனிப்பு அடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×