search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kanava Fish Thokku"

    சூடான சாதத்துடன் சாப்பிட கனவா மீன் (கடம்பா மீன்) தொக்கு சூப்பராக இருக்கும். இன்று இந்த கனவா மீன் தொக்கை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கனவா மீன் - அரை கிலோ
    மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    தனியாத் தூள் - அரை டீஸ்பூன்
    மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    தாளிக்க:

    கடுகு, சீரகம், சோம்பு, பட்டை, கறிவேப்பிலை - சிறிதளவு



    செய்முறை :

    கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கனவா மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சோம்பு, பட்டை, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளி சேர்தது வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் மிளகாய்த் தூள், தனியாத் தூள், மிளகுத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து தக்காளி நன்றாக குழைய வதக்கவும்.

    அடுத்து அதில் சுத்தம்செய்த கனவா மீனைக் கொட்டி வதக்குங்கள். சிறிது நேரம் மூடி போட்டு வேகவிடவும்.

    உப்பை சேர்த்து கிளறி அடுப்பை சிம்மில் வையுங்கள்.

    அனைத்தும் நன்றாகச் சேர்ந்து தொக்கு பதம் வந்தவுடன் கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்குங்கள்.

    சூப்பரான கனவா மீன் தொக்கு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×