என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    குழந்தைகளுக்கு பன்னீர் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பன்னீர், பாலக்கீரை சேர்த்து அருமையான பரோட்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மேல் மாவிற்கு…


    கோதுமை மாவு - 2 கப்,
    உப்பு - தேவைக்கு,
    பாலக் கீரை - 1 கட்டு,
    கோதுமை மாவு - 3 கப்,
    அரைத்த பச்சைமிளகாய் - 1/4 டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
    சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்,
    நெய் அல்லது வெண்ணெய், எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்.

    ஸ்டஃப்பிங்க்கு…

    துருவிய பன்னீர் - 1/4 கப்,
    நறுக்கிய பச்சைமிளகாய் - 3,
    கொத்தமல்லித்தழை - 4 டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு.

     

    செய்முறை :

    பாலக் கீரையை நன்றாக சுத்தம் செய்து வேகவைத்து அரைத்துக் கொள்ளவும்.

    இத்துடன் கோதுமை மாவு, உப்பு, மஞ்சள் தூள், சீரகத்தூள், அரைத்த பச்சைமிளகாய், எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன் சேர்த்து மிருதுவான சப்பாத்தி மாவாக பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

    கொத்தமல்லித்தழை, பன்னீர், பச்சைமிளகாய், உப்பு அனைத்தையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.

    மாவை சம அளவு உருண்டைகளாக உருட்டி, பூரி அளவிற்கு திரட்டி பன்னீர் கலவையை நடுவில் வைத்து நன்றாக மூடி கையால் தட்டி மெதுவாக திரட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு நெய் அல்லது வெண்ணெய் விட்டு இருபுறமும் நன்கு வெந்து பொன்னிறமாக வந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.

    சூப்பரான பன்னீர் பாலக் பரோட்டா ரெடி. 

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    சாம்பார், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த ஜீரா ஆலு. இன்று இதனை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - 200 டகிராம்,
    சீரகம் - 2 டீஸ்பூன்,
    மிளகு - 1 டீஸ்பூன்
    தனியா - 2 டீஸ்பூன்,
    உப்பு, எண்ணெய் அல்லது நெய் - தேவைக்கு,
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
    காய்ந்த மாங்காய் பொடி - 1 டீஸ்பூன்,
    சாட் மசாலாப் பொடி - 1/2 டீஸ்பூன்,
    கொத்தமல்லித்தழை - சிறிது.


     
    செய்முறை :

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெறும் கடாயில் சீரகம், மிளகு, தனியாவை வறுத்து ஆறியதும் பொடித்துக் கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

    கடாயில் நெய் ஊற்றி சூடானதும் சிறிது சீரகம் போட்டு தாளித்த பின்னர் உருளைக்கிழங்கை போட்டு வறுக்கவும்.

    உருளைக்கிழங்கு நன்கு மொறுமொறு என்று வந்தவுடன் உப்பு, மிளகாய்த்தூள், மாங்காய் பொடி, வறுத்து அரைத்த பொடி, சாட் மசாலாப் பொடி சேர்த்து வறுக்கவும்.

    அனைத்தும் சேர்ந்து சுருண்டு வந்ததும் இறக்கி கொத்தமல்லித்தழையை கலந்து பரிமாறவும்.

    சூப்பரான ஜீரா ஆலு ரெடி. 

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    நாண், தோசை, சாப்பாத்திக்கு தொட்டுகொள்ள அருமையாக இருக்கும் முட்டை புர்ஜி. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    பச்சை மிளகாய் - 4
    சோம்பு - சிறிதளவு
    வெண்ணெய் - சிறிதளவு
    உப்பு - சுவைக்கு
    முட்டை - 3 (வெள்ளைக்கரு மட்டும்)
    கரம் மசாலா தூள் - அரை ஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு வாணலியில் வெண்ணெய் போட்டு அது உருகியவுடன் சோம்பு போட்டு தாளித்த பின் அதில் ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கிய பின் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    இரண்டும் நன்றாக வதங்கிய பின் அதில் கரம் மசாலா தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.

    முட்டை நன்றாக வெந்து பூ போல உதிரியாக வந்ததும் அதில் கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும்.

    சுவையான முட்டை புர்ஜி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    சூடான சாதம், தயிர், சாம்பார் சாதம், சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் பச்சைப் பட்டாணி மசாலா. இன்று இந்த மசாலாவை செய்வது எப்படி என்று பார்க்கவும்.
    தேவையான பொருட்கள் :

    பச்சைப் பட்டாணி - 1 கப்,
    வெங்காயம் - 1,
    தக்காளி - 1,
    பச்சை மிளகாய் - 3,
    இஞ்சி-பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 1,
    தனியா தூள் - 1 டீஸ்பூன்,
    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்,
    கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
    உப்பு, தேங்காய் எண்ணெய், கடுகு - தேவைக்கு,
    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது.



    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் 1 விசில் வரும் வரை பட்டாணியை வேக விடவும்.

    கடாயை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கியவுடன் தக்காளி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், தனியா தூள் சேர்த்து வதக்கவும்.

    பிறகு பட்டாணி சேர்த்து தண்ணீர் விட்டு வேகவிடவும்.

    திக்கான பதம் வந்தவுடன் கடைசியாக கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.

    சூப்பரான பச்சைப் பட்டாணி மசாலா ரெடி.

    இதை சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    நாண், புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கு கொள்ள குடைமிளகாய் பன்னீர் பிரை அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பன்னீர் - 200 கிராம்,
    குடைமிளகாய் - 100 கிராம்,
    வெண்ணெய் - 50 கிராம்,
    பெரிய வெங்காயம் - 2,
    புதினா விழுது - 2 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிது,
    இஞ்சி விழுது - 1 டீஸ்பூன்,
    பாதாம் - 100 கிராம்,
    தனியாத்தூள் - 1 டீஸ்பூன்,
    பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
    உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கு.

     

    செய்முறை :

    பன்னீரை சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்

    பாதாமை 6 மணி நேரம் ஊறவைத்து தோல் நீக்காமல் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

    பன்னீரை இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்.

    கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் தனியாத்தூள் சேர்க்கவும்.

    பின்பு பாதாம் விழுதைச் சேர்த்துக் கிளறி, வெந்த பன்னீர் துண்டுகள், புதினா விழுதை சேர்த்து கிளறவும்.

    இத்துடன் மிளகுத்தூள், உப்பு, நறுக்கிய கறிவேப்பிலையைச் சேர்த்து கலந்து வறுவலாக வந்ததும் இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான குடைமிளகாய் பன்னீர் பிரை ரெடி. 

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    தயிர், சாம்பார் சாதத்திற்கு அருமையாக இருக்கும் இந்த கத்தரிக்காய் பிரை. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கத்தரிக்காய் - 1/4 கிலோ,
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்,
    மிளகு தூள் - அரை டீஸ்பூன்
    உப்பு, கறிவேப்பிலை, எண்ணெய் - தேவைக்கு,
    கடுகு - தாளிக்க.

     

    செய்முறை :

    கத்தரிக்காயை நன்றாக கழுவி நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து தாளித்த பின்னர் கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும்.

    கத்தரிக்காய் பாதியளவு வெந்தவுடன் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து நன்கு வேகும்வரை மிதமான தீயில் வதக்கவும். 

    வெந்ததும் கறிவேப்பிலை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான கத்தரிக்காய் பிரை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    வட மாநிலங்களில் வெந்தயக்கீரை பிரியாணி மிகவும் பிரபலம். இன்று எளிய முறையில் வெந்தயக்கீரை பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெந்தயக்கீரை - 1,
    பிரியாணி அரிசி - 1/2 கிலோ,
    தேங்காய்ப்பால் - 1 கப்,
    சின்ன வெங்காயம் - 10,
    தக்காளி - 2,
    கறிவேப்பிலை - 10,
    தேங்காய் எண்ணெய் - தேவைக்கு,
    கிராம்பு, ஏலக்காய், பட்டை - தலா 2,
    பூண்டு - 10,
    வரமிளகாய் - 2,
    கொத்தமல்லி பவுடர் - 1½ டீஸ்பூன்



    செய்முறை :

    வெந்தயக்கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    பூண்டு, வரமிளகாய், தனியா தூள் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

    தக்காளியை அரைத்து கொள்ளவும்.

    சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி சூடானதும் வெந்தய கீரையை போட்டு வதக்கி வைத்துக்கொள்ளவும்.

    குக்கரில் நெய், தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கிராம்பு, ஏலக்காய், பட்டை சேர்த்து தாளித்த பின்னர் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்த மசாலாவை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் வதக்கிய வெந்தயக்கீரை, அரிசி சேர்த்து தேவையான அளவு தேங்காய்ப்பால் ஊற்றி ஒரு விசில் வரும் வரை வைத்திருந்து இறக்கவும். .

    இப்போது சூப்பரான கமகமக்கும் ஆரோக்கியமான வெந்தயக்கீரை பிரியாணி தயார்.

    இதனுடன் தயிர் பச்சடி சேர்த்து பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    முள்ளங்கியில் நீர்சத்து அதிகளவில் உள்ளது. கோடைகாலத்தில் முள்ளங்கிளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு குளிர்ச்சியை தரும்.
    தேவையான பொருட்கள்

    முள்ளங்கி - 1,
    வெங்காயம் - 1,
    பச்சை மிளகாய் - 1,
    காய்ந்த மிளகாய் - 1,
    பயத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்,
    தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்,
    வறுத்த வேர்கடலை உடைத்தது - 1 டேபிள் ஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு,

    தாளிக்க

    கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, எண்ணெய் - தேவைக்கு.



    செய்முறை :

    பயத்தம்பருப்பை நன்றாக கழுவி ஊற வைத்து கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முள்ளங்கியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய் போட்டு தாளித்த பின்னர் பச்சைமிளகாய், வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    அடுத்து அதில் ஊறிய பயத்தம்பருப்பு, முள்ளங்கி, உப்பு சேர்த்து வதக்கவும்.

    முள்ளங்கி வேக சிறிது தண்ணீர் தெளித்து மூடிவைத்து மிதமான தீயில் வேக வைக்கவும்.

    முள்ளங்கி வெந்ததும் தேங்காய்த்துருவல், வேர்க்கடலை போட்டு பிரட்டி பரிமாறவும்.

    சூப்பரான சத்தான முள்ளங்கி பொரியல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்கை வைத்து அருமையான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பாஸ்மதி அரிசி - 1 கப்,
    உருளைக்கிழங்கு - 2,
    வெங்காயம் 2,
    தக்காளி - 2,
    பச்சை மிளகாய் - 2,
    கொத்தமல்லி, புதினா -  1/4 கப்,  
    சீரகம் - 1/2 டீஸ்பூன்,
    பட்டை - 2, கிராம்பு - 3,
    ஏலக்காய் - 3,
    அன்னாசி பூ - 1,
    பிரியாணி இலை - 1,
    கரம் மசாலா - 1 டீஸ்பூன்,
    இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்,
    எண்ணெய், நெய் - 1/4 கப்,
    உப்பு - தேவைக்கு.



    செய்முறை :

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.

    உருளைக்கிழங்கை தோல் நீக்கி சதுரமான துண்டுகளாக வெட்டிகொள்ளவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், அன்னாசி பூ, பிரியாணி இலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    அடுத்து அதில் உருளைக்கிழங்கு சேர்த்து தேவையான அளவு தண்ணீர், கரம் மசாலா, கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை போட்டு கொதி வந்தவுடன் அரிசியை சேர்த்து மிதமான சூட்டில் 15 நிமிடம் வைத்து இறக்கவும்.

    இப்பொழுது கமகமக்கும் சுவையான உருளைக்கிழங்கு பிரியாணி தயார்.

    இதனுடன் தயிர் பச்சடி, குருமா மற்றும் உருளைக்கிழங்கு சில்லி சேர்த்து பரிமாறவும்.

    குறிப்பு: பிரியாணி செய்யும்பொழுது வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கினால் சுவை அதிகரிக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    வட இந்திய உணவான மலாய் பன்னீர் நாண், புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இந்த மலாய் பன்னீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பன்னீர் - 250 கிராம்
    சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    இஞ்சி பூண்டு விழுது - தலா 1 டீஸ்பூன்
    கிரீம் - 1/4 கப்
    வெண்ணெய் - 1/2 கப்
    மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
    லவங்கம் - 1/4 டீஸ்பூன்
    தனியாத்தூள் - 1/2 டீஸ்பூன்
    சீரகம் வறுத்துப் பொடித்தது - 1/2 டீஸ்பூன்
    பொடித்த பட்டை - சிறிய துண்டு
    பச்சை மிளகாய் - 3
    முந்திரி - 15 (விழுதாக அரைக்கவும்).



    செய்முறை :

    வெங்காயத்தையும், தக்காளியையும் தனித்தனியாக அரைத்து கொள்ளவும்.

    பன்னீரை துண்டுகளாக வெட்டி, கொதிக்கும் நீரில் சிறிது நேரம் போட்டு எடுத்து

    கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் போட்டு சூடானதும் அதில் சீரகம், பட்டை, லவங்கம் போட்டு தாளித்த பின்னர் அத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் பச்சை வாசனை போன பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    அடுத்து அதில் தனியாத்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சர்க்கரை, உப்பு சேர்த்து வதக்கவும்.

    எண்ணெய் பிரிந்து மேலே வந்ததும், முந்திரி விழுதையும் சேர்த்து கிரேவியாக வரும்போது பன்னீரை கிரேவியில் சேர்த்து ஒரே கொதி வந்ததும் இறக்கி கிரீம் சேர்த்து பரிமாறவும்..

    சூப்பரான மலாய் பன்னீர் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    மாலை நேரத்தில் காபி, டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும் சீஸ் மிளகாய் பஜ்ஜி. இன்று இந்த பஜ்ஜியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பஜ்ஜி மிளகாய் - 10,
    கடலைமாவு - 150 கிராம்,
    அரிசி மாவு - 50 கிராம்,
    ஓமம் - கால் சிட்டிகை,
    உப்பு - தேவையான அளவு,
    மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி ,
    சீஸ் ஸ்லைஸ் - 4 ,
    பொடித்த கார்ன்ஸ்ஃப்ளேக்ஸ் - 50 கிராம்,
    பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை,
    எண்ணெய் - தேவையான அளவு.



    செய்முறை

    ஒரு பாத்திரத்தல் கடலை மாவு, அரிசி மாவுடன் மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.

    பஜ்ஜி மிளகாயை நடுவில் கீறி, விதையை நீக்கிவிட்டு, சீஸை உள்ளே வைத்து மூடவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்திருக்கும் மாவில் பஜ்ஜி போல தோய்த்து பொடித்த கார்ன்ஸ்ஃப்ளேக்சில் தேய்த்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

    சூப்பரான சீஸ் மிளகாய் பஜ்ஜி ரெடி. 

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    கேழ்வரகு மாவில் கூழ், அடை, புட்டு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கேழ்வரகு மாவில் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 1 கப்,
    வேர்க்கடலை - 1/4 கப்,
    மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,
    முருங்கைக்கீரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை - தலா 1 கைப்பிடி,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.



    செய்முறை :


    முருங்கைக்கீரை, கொத்தமல்லியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, வேர்க்கடலை, மிளகாய்த்தூள், உப்பு, முருங்கைக்கீரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    கலந்த மாவில் சிறிது தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் மாவை எடுத்து பக்கோடாவாக கிள்ளி போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.

    சூப்பரான ஸ்நாக்ஸ் கேழ்வரகு முருங்கைக்கீரை பக்கோடா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    ×