என் மலர்
கிச்சன் கில்லாடிகள்
மாங்காயில் ஊறுகாய், பச்சடி, தொக்கு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மாங்காயில் எளிய முறையில் சூப்பரான புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
உதிராக வடித்த சாதம் - 3 கப்,
கிளி மூக்கு மாங்காய் (சிறிய சைஸ்), - ஒன்று,
பச்சைப் பட்டாணி - கால் கப்,
வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று,
முந்திரித் துண்டுகள் - ஒரு டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - ஒரு டேபிள்ஸ்பூன்,
பட்டை - சிறு துண்டு,
ஏலக்காய், கிராம்பு - தலா ஒன்று,
சோம்பு - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
மாங்காயை தோல் சீவி பொடியாக நறுக்கவும்.
கேரட், வெங்காயம் பச்சை மிளகாயை ஆகியவற்றையும் பொடியாக நறுக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து சிறிதளவு எண்ணெயை காயவிட்டு… பட்டை, கிராம்பு, உடைத்த ஏலக்காய், சோம்பு சேர்த்து சிவக்க வறுக்கவும்.
இத்துடன் பட்டாணி, பச்சை மிளகாய், மாங்காய் மற்றும் காய்கறிகளைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
காய்கள் வெந்ததும் அடுப்பை தணித்து சாதத்தை சேர்த்து, உப்பு போட்டு கிளறவும்.

பிறகு மீதமுள்ள எண்ணெயை ஊற்றி, கொத்தமல்லியை சேர்த்துக் கிளறி, முந்திரித் துண்டுகளை மேலாக தூவி இறக்கி பரிமாறவும்.
இதையும் படிங்க.. சத்தான சிறுதானிய வெஜ் நூடுல்ஸ்
மாலை நேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த சிக்கன் போண்டா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் கைமா - கால் கிலோ,
சின்ன வெங்காயம் - 50 கிராம்,
போண்டா மாவு - 250 கிராம்,
சிக்கன் மசாலா - 3 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள் - அரை டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
பூண்டு - 5 பல்,
கறிவேப்பிலை - 2 ஆர்க்கு,
சோம்பு - ஒரு டேபிள்ஸ்பூன்,
மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன்,
தேங்காய்த் துருவல் - ஒரு கைப்பிடி அளவு,
பொட்டுக்கடலை - 50 கிராம்,
இஞ்சி - 2 சிறிய துண்டு,
கொத்தமல்லித் தழை - சிறிதளவு.
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
சின்ன வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
எலும்பில்லா சிக்கனை கொத்தி வாங்கவும். அதை நன்றாகக் கழுவி தண்ணீர் இல்லாமல் ஒரு கிண்ணத்தில் போடவும்.
அத்துடன் சின்ன வெங்காயம், பொட்டுக்கடலை, காய்ந்த மிளகாய், சோம்பு, மஞ்சள்தூள், பூண்டு, இஞ்சி, மிளகு, சிக்கன் மசாலா, உப்பு, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய கொத்தமல்லித்தழை, அரைத்த சிக்கன் கலவையைப் போட்டு நன்றாக வதக்கவும்.
முக்கால் பாகம் வெந்ததும், ஆறவிட்டு உருண்டைகளாக உருட்டவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
போண்டா மாவைக் கரைத்து, அதில் சிக்கன் உருண்டைகளை மாவில் தோய்த்து எடுத்து, எண்ணெயில் (மிதமான சூட்டில்) பொரித்து எடுக்கவும்.
அரைத்து வெந்த சிக்கன் பஞ்சு போல் மிருதுவாக இருப்பதால், சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

சூப்பரான சிக்கன் போண்டா ரெடி.
இதையும் படிங்க... தொற்றுநோய்கள் வராமல் பாதுகாக்கும் அஸ்வகந்தா தேநீர்
ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் ருசியான உணவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அந்த வகையில் இன்று எரிசேரி ரெசிபிவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சேனைக்கிழங்கு - 100 கிராம்
நேந்திரங்காய் - ஒன்று
கறிவேப்பிலை - தேவைக்கு
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
தேங்காய் எண்ணெய் - 100 கிராம்
தேங்காய் துருவல் - ஒரு கப்
சீரகம் - ஒரு தேக்கரண்டி
நெய் - 25 கிராம்
கடுகு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - தேவைக்கு
செய்முறை:
சேனையையும், நேந்திரங்காயையும் துண்டுகளாக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய காய்கறிகளை போட்டு கறிவேப்பிலை, மிளகு தூள், உப்பு, தேங்காய் எண்ணெய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவையுங்கள்.
கால் கப் தேங்காய் துருவலில் சீரகம் சேர்த்து அரைத்து அதை வேகவைத்த காய்கறியில் சேருங்கள்.
மீதமுள்ள தேங்காய் துருவலை நன்றாக அரைத்து, எண்ணெயை சூடாக்கி அதில் கொட்டி வறுத்து பிரவுன் நிறமாகும்போது எடுத்து குழம்பில் சேருங்கள்.

நெய்யை சூடாக்கி கடுகு, கறிவேப்பிலை தாளித்து குழம்பில் கலந்து பரிமாறலாம்.
இதையும் படிங்க... திருவோணம் ஸ்பெஷல்: ஓலன்
ஓணம் பண்டிகையில் நடக்கும் ஓணம் சத்யா விருந்தில் பல்வேறு சுவையான மற்றும் வித்தியாசமான ரெசிபிக்கள் சமைக்கப்படும். அதில் ஒன்று தான் ஓலன் ரெசிபி.
தேவையான பொருட்கள்:
நீர் பூசணி/வெள்ளை பூசணி - 1 1/2 கப்
தட்டைப்பயறு - 1-2 கப்
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
மிகவும் நீர் போன்ற தேங்காய் பால் - 1 கப்
கெட்டியான தேங்காய் பால் - 1 கப்
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய் எண்ணெய் - 1 டீபூன் *
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் நீர் பூசணிக்காயின் தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
பின் தட்டை பயறை நீரில் ஒரு 8 மணிநேரம் ஊற வைத்துக் கொண்டு, பின் அதை குக்கரில் போட்டு, சிறிது நீர் ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் அரை கப் நீர் ஊற்றி, அத்துடன் ஒரு கப் நீர் போன்றுள்ள தேங்காய் பால் ஊற்றி, அதோடு நீர் பூசணிக்காய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அடுப்பில் வைத்து, காயை நன்கு வேக வைக்க வேண்டும்.
நீர் பூசணி நன்கு வெந்ததும், அத்துடன் வேக வைத்துள்ள தட்டை பயறை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, பின் கெட்டி தேங்காய் பாலை ஊற்றி, கொதிக்க ஆரம்பிக்கும் முன்பே அடுப்பை அணைத்து விட வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதில் ஊற்றினால், ஓணம் சத்யா ஸ்பெஷல் ஓலன் தயார்.
குறிப்பு:
நீர் பூசணிக்காய் மற்றும் தட்டைப் பயறு நன்கு மென்மையாக வெந்திருந்தால் தான், அது தேங்காய் பாலை நன்கு உறிஞ்சியிருக்கும்.
கெட்டியான தேங்காய் பால் சேர்த்த பின் நீண்ட நேரம் அடுப்பில் வைத்திருக்கக்கூடாது. இல்லாவிட்டால், அது திரிய ஆரம்பித்துவிடும்.
சமைத்து முடித்த பின் குறைந்தது அரை மணிநேரம் கழித்து சாப்பிட பரிமாறினால் தான், தேங்காய் பாலுடன் காய்கறிகள் நன்கு ஊறி இருக்கும்.
ஓலன் ரெசிபிக்கு நீர் பூசணியுடன், மஞ்சள் பூசணியையும் சேர்த்துக் கொள்ளலாம்.

வெண்டைக்காயில் உடலுக்கு தேவையான சத்துக்கள் இருப்பதோடு உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தினமும் வெண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நன்கு செயல்பட தொடங்கும்.
தேவையான பொருட்கள் :
உதிரியாக வடித்த சாதம் - 1 1/2 கப்
வெண்டைக்காய் - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
கெட்டியான புளிக்கரைசல் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
முந்திரி பருப்பு - 10
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை :
வெங்காயம், வெண்டைக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயத்தை இட்டு பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் வெண்டைக்காய், உப்பு சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடங்கள் வதக்கவும்.
அடுத்து அதில் மஞ்சள்தூள், கறிவேப்பிலை, பட்டை பொடி, மிளகுத்தூள், உப்பு, கெட்டியான புளிக்கரைசல் சேர்த்து வெண்டைக்காயை நன்றாக கிளறி விட்டு வேக வைக்கவும்.
மற்றொரு கடாயை எடுத்து 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கடலை பருப்பு, முந்திரி இட்டு பொரிந்ததும் அதில் வெண்டைக்காயை கலவையைச் சேர்க்கவும்.
அதனுடன், வேக வைத்த சாதத்தை சேர்த்து நன்றாக கலக்கவும்.
குறைவான தீயில் 5 நிமிடங்கள் கிளறி விட்டு உப்பு சரிபார்த்து அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறவும்.
சூப்பரான வெண்டைக்காய் சாதம் ரெடி!

சுண்ட வத்தல் சாதப்பொடியை சாதம், நெய்யுடன் சேர்த்து சாப்பிடும் போது அருமையாக இருக்கும். இன்று இந்த பொடியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சுண்ட வத்தல் - 50 கிராம்
மணத்தக்காளி வத்தல் - 25 கிராம்
உளுத்தம் பருப்பு - 50 கிராம்
மோர் மிளகாய் அல்லது சிவப்பு மிளகாய் - 5
மிளகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு பிடி
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
உப்பு - சிறிது ஏற்கனவே வத்தலில் உப்பு சுவை இருப்பதால் குறைத்து சேர்க்கவும்.
செய்முறை:
வாணலியை சூடு படுத்தி இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு வத்தல் வகையை ஒன்றொன்றாக போட்டு வாசனை வரும் வரை வறுத்தெடுத்துக்கொள்ளவும்.
பிறகு, அதே எண்ணெயில் மிளகாய் மிளகு, சீரகம் போட்டு வறுக்கவும்.
இறுதியாக கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயத்தை போட்டு வறுத்தெடுக்கவும்.
ஆறியதும் மிக்சியில் சேர்த்து மென்மையான பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
சூடான சாதத்தோடு நெய் சேர்த்து கலந்து சாப்பிடவும்.

ஆட்டு மூளையில் கொழுப்பு ரொம்ப ரொம்ப குறைவு. அதில் உள்ள பாஸ்பரஸ் கிட்னியில் உள்ள கசடுகளை சுத்தம் பண்ணுவதால் உடலுக்கு இது மிகவும் நல்லது.
தேவையான பொருள்கள்:
ஆட்டு மூளை - 2
மிளகாய்தூள் - 1-1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
வெங்காயம் - 1/2 கப்
சோம்பு - 1/2 ஸ்பூன்
எண்ணய் - 3 ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஆட்டு மூளை மேல் பகுதியை தண்ணீரில் மெதுவாக கழுவி ஒரு கப் தண்ணீர் விட்டு மூடி வேகவிடவும். அடிக்கடி மூளையைப் புரட்டி போடவேண்டும். இல்லாவிட்டால் அடியில் பிடித்து விடும். மூளை நன்றாக வெந்தபின் இறக்கி ஆறவைத்து துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அதோடு மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பை கலந்து மெதுவாக குலுக்கி வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் மசாலா கலந்த மூளையை சேர்த்து மிகவும் மெதுவாக கிளறவேண்டும்.
நன்றாக சிவந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பறிமாறலாம்.
சூப்பரான ஆட்டு மூளை மசாலா ரெடி.

உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல. உடல் அழகைப் பராமரிக்கவும் கேரட் உதவும். தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் முகம் பளபளப்பாகும்.
தேவையானப் பொருள்கள்:
கேரட் - 1
சின்ன வெங்காயம் - 5
பச்சை மிளகாய் - 1
மஞ்சள் தூள் - சிறிது
முட்டை - 2
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
கடலை பருப்பு
கறிவேப்பிலை
செய்முறை :
வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.
கேரட்டை துருவி கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பிறகு கேரட், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
கேரட் வதங்கியதும் அதில் முட்டையை உடைத்து ஊற்றிக் கிளறிவிடவும்.
இரண்டும் நன்றாக வெந்து பூப்போல் உதிரியாக வந்ததும் இறக்கவும்.
இப்போது சுவையான கேரட் - முட்டை பொரியல் ரெடி.
இது எல்லா வகையான சாதத்திற்கும் நன்றாக இருக்கும்.

பொதுவாக முட்டை குழம்பு என்றால், மசாலா அரைத்து கொதிக்க வைத்து அதில் வேக வைத்த முட்டையை போட்டு கொதிக்க வைத்து இறங்குவார்கள். ஆனால் இன்று நாம் செய்யப்போகும் குழம்பு சற்று வித்தியாசமானது.
தேவையான பொருட்கள் :
நாட்டுக்கோழி முட்டை - 6
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மல்லித்தூள் - 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு - தாளிக்க
அரைக்க
தேங்காய் - அரை மூடி
பொட்டுக்கடலை - 2 ஸ்பூன்
செய்முறை
முதலில், தேங்காயைத் துருவி பொட்டுக்கடலையுடன் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாய் அகலமான பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றி, சூடானதும் அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம். ப.மிளகாயை போட்டு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்குங்கள்.
அதன் பின் தக்காளியும் சிறிது உப்பும் சேர்த்து தக்காளி குழையும் வரை வதக்கி மிளகாய்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்குங்கள்.
மசாலா பச்சை வாசனை போனவுடன் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் கரைசலை ஊற்றி சிறிது நீர் சேர்த்து உப்பை சரிபாருங்கள்.
குழம்பு பச்சை வாசனை போனவுடன் முட்டைகளை ஒவ்வொன்றாக உடைத்து, அவை மோதிக்கொள்ளாமல் இடைவெளி விட்டு குழம்பில் ஊற்றுங்கள். ஐந்து நிமிடத்தில் முட்டைகள் வெந்து மேலே வரும்போது அடுப்பை அனைத்துவிட்டால் முட்டைகுழம்பு தயார்.

காளானில் மிக அதிகமான புரதச்சத்து உள்ளதால் இது குழந்தைகளுக்கு உகந்த உணவு. சுவையிலும் இந்த வடை வித்தியாசமாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பட்டன் காளான் - 250 கிராம்
சோம்பு - 1 டீஸ்பூன்
தேங்காய் துருவியது - 5 ஸ்பூன்
பொட்டுக்கடலை மாவு - 100 கிராம்
கடலை மாவு - 50 கிராம்
பிரட் - 2 ஸ்லைஸ் (பிரட்டை உதிர்த்துக் கொள்ளவும்)
கொத்தமல்லி - சிறிதளவு
மிளகாய் தூள் - சுவைக்கேற்ப
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய்- பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
காளானை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய காளானை போட்டு அதனுடன் சோம்பு, தேங்காய் துருவல், பொட்டுக்கடலை மாவு, கடலை மாவு, கொத்தமல்லி மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு வடை மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
தேவைப்பட்டால் கடலை மாவு சேர்த்து கொள்ளவும்.
கடைசியாக பிரட் தூள் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாக தட்டி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.
சூப்பரான காளான் வடை ரெடி.

மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு இந்த சாண்ட்விச் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த பாம்பே சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பிரெட் ஸ்லைஸ் - 8,
உப்பு சேர்த்த வெண்ணெய் - தேவைக்கேற்ப,
பீட்ரூட் - ஒன்று,
உருளைக்கிழங்கு - ஒன்று,
தக்காளி - ஒன்று,
வெங்காயம் - ஒன்று,
வெள்ளரிக்காய் - ஒன்று,
சாட் மசாலாத்தூள் - சிறிதளவு,
டொமேட்டோ கெட்சப், கிரீன் சட்னி - தேவையான அளவு.
செய்முறை:
4 பச்சை மிளகாய், இஞ்சி ஒரு இன்ச் துண்டு (தோல் சீவவும்), புதினா, கொத்தமல்லித்தழை தலா ஒரு கைப்பிடி அளவு, தேவையான அளவு உப்பு, எலுமிச்சைச்சாறு ஆகியவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்தால் கிரீன் சட்னி தயார்.
உருளைக்கிழங்கை இரண்டாக நறுக்கி குக்கரில் நான்கு விசில் வரும் வரை வேகவைக்கவும்.
பீட்ரூட்டையும் இரண்டாக நறுக்கி குக்கரில் நான்கு விசில் வரும் வரை வேகவைக்கவும்.
பிறகு இரண்டையும் தோலுரித்து ஸ்லைஸ்களாக நறுக்கிக்கொள்ளவும்.
வெள்ளரிக்காய், தக்காளியை ஸ்லைஸ்களாக நறுக்கிக்கொள்ளவும்.
வெங்காயத்தைத் தோலுரித்து சிறிய வட்டங்களாக நறுக்கவும்.
ஒரு பிரெட் ஸ்லைஸில் வெண்ணெய் தடவவும்.
மற்றொரு பிரெட் ஸ்லைஸில் கிரீன் சட்னி தடவவும்.
கிரீன் சட்னி தடவிய பிரெட் ஸ்லைஸை ஒரு தட்டில் வைத்து கிரீன் சட்னியின் மேல் 2 உருளைக்கிழங்கு துண்டுகள், 2 பீட்ரூட் துண்டுகள் வைக்கவும்.
இதன் மேல் சில தக்காளி, வெங்காயம், வெள்ளரித் துண்டுகளை வைக்கவும்.
காய்கறிகளின் மேல் சிறிதளவு டொமேட்டோ கெட்சப் தெளித்து, சாட் மசாலாத்தூள் தூவி, வெண்ணெய் தடவிய பிரெட் ஸ்லைஸால் மூடவும்.
மற்ற பிரெட் ஸ்லைஸ்களிலும் இதேபோல் சாண்ட்விச் செய்துகொள்ளவும்.
ஒவ்வொரு சாண்ட்விச்சையும் நான்கு துண்டுகளாக நறுக்கிப் பரிமாறவும்.
சூப்பரான பாம்பே சாண்ட்விச் ரெடி.

இட்லி, தோசை, சாதம், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த சிக்கன் மிளகு குழம்பு. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
மிளகு - 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
தனியா தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
வெங்காயம் - 1
வெண்ணெய் - 100 கிராம்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பின் மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் இவற்றுடன் மிளகை நன்றாக தூள் செய்து கலந்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.
சிக்கனை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
சிக்கன் கொதித்துகொண்டிருக்கும் போது அதில் கலந்துவைத்துள்ள மசாலாவையும், உப்பையும் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.
மற்றொரு அடுப்பில் கடாயை வைத்து நெய் ஊற்றி, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
அடுத்து அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனவுடன் அதில் கொதிக்கும் குழம்பில் சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.
கடைசியாக சிறிது மிளகுத்தூள், கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.
சூப்பரான சிக்கன் மிளகு குழம்பு ரெடி.