என் மலர்tooltip icon

    சமையல்

    • பிரிமிக்ஸ் மாவு தயாரிப்பை பகுதி நேர சுயதொழிலாகவும் செய்யலாம்.
    • இயற்கையான முறையில் வீட்டிலேயே தயாரிப்பதால் இது ஆரோக்கியம்.

    சமையல் அறையில் பெண்களின் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் இட்லி. பணியாரம், வடை ஆகிய மூன்று ரெசிபிகள் தயாரிப்பதற்கும் ஒரே மாவை உபயோகிக்க முடியும். எந்தவிதமான ரசாயனமும் கலக்காமல் இயற்கையான முறையில் வீட்டிலேயே தயாரிப்பதால் இது ஆரோக்கியத்துக்கும் தீங்கு ஏற்படுத்தாது, இல்லத்தரசிகள் இந்த பிரிமிக்ஸ் மாவு தயாரிப்பை பகுதி நேர சுயதொழிலாகவும் செய்யலாம். அது பற்றிய தகவல்களை இங்கே தெரிந்துகொள்வோம்.

    தேவையான பொருட்கள்:

    ரவை - 3 கப்

    நெய் - 1 டேபிள் ஸ்பூன்

    கடுகு - 2 ஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - 2 டேபிள் டீஸ்பூன்

    கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    முந்திரி- 20

    பச்சை மிளகாய் - 4

    கறிவேப்பிலை சிறிதளவு

    செய்முறை:

    அடிகனமான அகன்ற வாணலியில் ரவையை போட்டு மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பின்பு அதை ஒரு அகலமான தட்டில் மாற்றி ஆற வைக்கவும். அதே வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு வறுக்கவும். பின்னர் அதனுடன் சிறு துண்டுகளாக நறுக்கிய முந்திரி, பொடிதாக நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றையும் போட்டு வறுக்கவும். பின்னர் உலர்ந்த கறிவேப் பிலை, உப்பு சேர்த்து ஆறவைக்கவும்.

    இந்த கலவையை ரவையுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது பிரிமிக்ஸ் மாவு தயார். இந்த மாவைக் கொண்டு இட்லி, பணியாரம், வடை ஆகிய ரெசிபிகளை செய்து அசத்தலாம். இதனை காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு வைத்தால் தேவைப்படும்போது விருப்பமான ரெசிபிகளை சில நிமிடங்களில் தயார் செய்து விடலாம். இந்த மாவை பிரிட்ஜில் வைத்து மூன்று வாரங்கள் வரை பயன்படுத்தலாம்.

    உபயோகிக்கும் முறை:

    இரண்டு கப் பிரீமிக்ஸ் மாவுடன் ஒன்றரை கப் தயிர் கலந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும். பின்னர் மாவை ஒருமுறை நன்றாகக் கிளறி அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலக்கவும்.

    இட்லி தயாரிக்க:

    எண்ணெய் தடவிய இட்லி தட்டில் மாவை ஊற்றி 12 நிமிடங்களுக்கு ஆவியில் வேகவைக்கவும். இப்போது சுவையான ரவா இட்லி ரெடி.

    குழிப்பணியாரம் தயாரிக்க:

    அடுப்பில் குழிப்பணியார சட்டியை வைத்து அதன் குழிகளில் அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றவும், அது சூடானதும் டீஸ்பூன் மூலம் மாவை ஒவ்வொரு குழியிலும் முக்கால் பங்கு அளவிற்கு ஊற்றி வேக வைக்கவும். ஒரு பக்கம் பொன்னிறமாக வெந்ததும் மறுபக்கம் திருப்பி விட்டு வேகவைத்து எடுத்தால் சுவையான குழிப்பணியாரம் தயார்.

    வடை தயாரிக்க:

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். தயாரித்து வைத்திருக்கும் மாவை வடையாக தட்டிப்போட்டு பொன்னிறமாக சுட்டு எடுக்கவும். இதனுடன் தேங்காய் சட்னி, காரச்சட்னி, சாம்பார் ஆகியவற்றை சேர்த்து சாப்பிடலாம்.

    சந்தைப்படுத்தும் முறை:

    உணவுப் பொருட்களை முறையாக சந்தைப்படுத்தும் போது அதற்கு தேவையான சான்றிதழ்களை வாங்க வேண்டியது அவசியம், பிராண்டு பெயருடன் அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட், மளிகை கடை ஆகியவற்றில் விற்பனை செய்யலாம். பொருட்காட்சிகளிலும் உங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தலாம்.

    • அரிசி மாவு, பச்சை மிளகாய் விழுது கலந்து கிளறினால் வடகம் சுலபமாக பிழியலாம்.
    • வெண்ணெய், பால் கலந்து அரிசி மாவை கிளறினால் கொழுக்கட்டை உடைந்து வராது.

    பொதுவாகவே சமைக்கும் அனைவருக்கும் பிடித்த மாதிரி சமைக்க வேண்டும் என்பது தான் இல்லத்தரசிகளின் பெரிய ஆசை. இதற்காக புதிய புதிய வகைகளில் சமையல்களை செய்வார்கள் அப்படி சமையலில் அசத்த சில சூப்பரான டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

    * கடலை மாவை சூடான நெய்யில் கரைத்து, பின்பு சர்க்கரை பாகில் கலந்து மைசூர் பாகு செய்தால், அது மிருதுவாகவும், மென்மையாகவும் இருக்கும். மைசூர் பாகு செய்யும்போது நெய்யும் அதிகம் ஊற்றி கிளற வேண்டியது இருக்காது.

    * பாசி பருப்பை வேகவைத்து அதில் அரிசி மாவு கலந்து தேன் குழல் செய்தால் சுவையாக இருக்கும்.

    * காய்கறிகள் வேக வைத்த தண்ணீரை வடிகட்டிக்கொள்ளவும். அதனை பயன்படுத்தி அவியல் செய்தால் காய்கறிகள் கறுப்பு நிறமாக மாறாது. பொரியலும் பளிச்சென்றும், ருசியாகவும் இருக்கும். (தண்ணீர் கொஞ்சமாக ஊற்றி வேக வைக்கவும்)

    * கேசரிக்கு நெய் ஊற்றி ரவையை வறுக்கும்போது அதில் சிறிதளவு சுடுதண்ணீர் ஊற்றவும். அதனுடன் கேசரி பொடியை சேர்த்தால் துளி கூட கட்டி பிடிக்காது.

    * ஜவ்வரிசியை வேகவைத்து அந்த தண்ணீரில் உப்பு, அரிசி மாவு, பச்சை மிளகாய் விழுது கலந்து கிளறினால் வடாகம் சுலபமாக பிழியலாம்.

    * அடைக்கு தேவையான பருப்பு, மிளகாயை மிக்சியில் அரைத்து வைத்துக்கொண்டால் உடனடியாக உப்பு கலந்து அடை செய்யலாம்.

    * கொழுக்கட்டைக்கு தண்ணீர் கொதிக்கும்போது, ஒரு ஸ்பூன் வெண்ணெய், ஒரு ஸ்பூன் பால் கலந்து பின்பு அரிசி மாவை போட்டு கிளறினால் கொழுக்கட்டை உடைந்து வராமல் இருக்கும்.

    • ஸ்பெஷலான மற்றும் சத்தான கொழுக்கட்டைகள் செய்வது எப்படி.
    • சத்தான கொழுக்கட்டை உணவுகளுடன் சிறப்புமிக்க விநாயகர் சதுர்த்தியை இனிப்பாக கொண்டாடுங்கள்.

    விநாயகர் சதுர்த்தி என்றாலே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரின் நினைவுக்கு வருவது கொழுக்கட்டைதான். அந்த வகையில் ஸ்பெஷலான மற்றும் சத்தான கொழுக்கட்டைகள் செய்வது எப்படி என இப்போது பார்க்கலாம்.

    டிரை ஃப்ரூட்ஸ் கொழுக்கட்டை

    தேவையானவை:

    அரிசி மாவு - ஒரு கப்,

    பேரீச்சம்பழம் (விதை நீக்கியது) - 10,

    முந்திரி, பாதாம், பிஸ்தா - தலா 10,

    திராட்சை, வெல்லம் - தலா 50 கிராம்,

    பொட்டுக்கடலை - 4 டீஸ்பூன்,

    எண்ணெய் - 2 டீஸ்பூன்,

    உப்பு - ஒரு சிட்டிகை.

    செய்முறை:

    கடாயில் தண்ணீர்,உப்பு, சிறிதளவு எண்ணெய் சேர்த்து கொதிக்கவிட்டு அதில் அரிசி மாவு தூவி கெட்டியாக கிளறி எடுக்கவும். இதுதான் மேல் மாவு.

    முந்திரி, பாதாம், பிஸ்தா, பொட்டுக்கடலையை மிக்சியில் கொரகொரப்பாக தூள் செய்து எடுக்கவும். பேரீச்சம்பழம், திராட்சை, வெல்லம் சேர்த்து அரைத்து, பருப்பு தூள்களை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்தால் பூரணம் தயார்.

    கையில் எண்ணெய் தடவிக் கொண்டு மேல் மாவில் சிறிது எடுத்து உருட்டி, கிண்ணம் போல் செய்து, ஒரு டீஸ்பூன் பூரணத்தை அதில் வைத்து மூடி, வேண்டிய வடிவம் கொடுக்கவும், அப்படியே ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

    ஸ்பிரவுட் கொழுக்கட்டை

    தேவையானவை:

    முளைகட்டிய பயறு - ஒரு கப்,

    பச்சை மிளகாய்- 3 (நறுக்கவும்),

    தேங்காய் துருவல் - கால் கப்,

    அரிசி மாவு - ஒரு கப்,

    கறிவேப்பிலை - சிறிதளவு,

    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,

    எண்ணெய் - 4 டீஸ்பூன்,

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து முளைகட்டிய பயறு, உப்பு, பச்சை மிளகாய் துண்டுகள் சேர்த்து தண்ணீர் தெளித்து வேகவிடவும்.

    பயறு வெந்ததும் தேங்காய் துருவலை கலந்து எடுக்கவும்.கடாயில் தண்ணீர் விட்டு சூடாக்கி, உப்பு, எண்ணெய் சேர்த்து, கொதித்து வரும்போது அரிசி மாவை சேர்த்து கெட்டியாக கிளறி எடுக்கவும்.

    ஆறியதும் நன்கு பிசைந்து கொள்ளவும். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு மாவில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி, சின்ன கிண்ணம் போல் செய்து, பயறு கலவையை உள்ளே வைத்து மூடவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுத்தால் ஸ்பிரவுட் கொழுக்கட்டை தயார்.

    தினை மாவு பனைவெல்ல கொழுக்கட்டை

    தேவையானவை:

    தினை மாவு (சூப்பர் மார்க்கெட், காதி கடைகளில் கிடைக்கும்),

    பனைவெல்லம் - தலா ஒரு கப்,

    தேங்காய் துண்டுகள் - அரை கப்,

    ஏலக்காய்த்தூள், சுக்குப் பொடி - தலா அரை டீஸ்பூன்,

    எண்ணெய் - 2 டீஸ்பூன்,

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    தினை மாவை வெறும் கடாயில் வறுத்து உப்பு, சிறிதளவு எண்ணெய் விட்டு கலந்து, கொதி நீர் தெளித்து பிசிறி மூடி வைக்கவும். இதை 10 நிமிடம் ஊறவிடவும்.

    பனைவெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டி எடுக்கவும். இத்துடன் சுக்குப் பொடி, ஏலக்காய்த்தூள், தேங்காய் துண்டுகள் சேர்த்து

    சுடவைத்து, கொதித்து வரும்போது பிசிறி வைத்த மாவை கொட்டி கலக்கவும். கெட்டியாக வந்ததும் இறக்கவும். கையில் எண்ணெய் தடவி, மாவை சிறு சிறு உருண்டைகளாக செய்யவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

    இத்தகைய சத்தான கொழுக்கட்டை உணவுகளுடன் சிறப்புமிக்க விநாயகர் சதுர்த்தியை இனிப்பாக கொண்டாடுங்கள்.

    • கொழுக்கட்டையின் மேலே இருக்கும் மாவுப் பொருள் தான் அண்டம்.
    • இனிப்பான பூரணம் தான் பிரம்மம்.

    விநாயகர் சதுர்த்தி என்றாலே உடனே நம் நினைவுக்கு வருவது மோதகம் கொழுக்கட்டை தான். வெளியே தூய வெள்ளை நிறத்தில் லேசான உவர்ப்புச் சுவையுடன், உள்ளே பொன்னிறத்தில் நாவை ஊற வைக்கும் பூரணத்தை வைத்து செய்யப்படும் மோதக கொழுக்கட்டையிலும் ஒரு தத்துவம் இருக்கிறது.

    அதாவது கொழுக்கட்டையின் மேலே இருக்கும் மாவுப் பொருள் தான் அண்டம். இனிப்பான பூரணம் தான் பிரம்மம். உலக வாழ்க்கை பற்றற்று கடந்து சென்றால் இனிப்பான கடவுளை அடையலாம் என்ற தத்துவத்தை விளக்குவதற்காக இந்த கொழுக்கடை விநாயகர் சதுர்த்தியில் வைக்கப்படுகிறது. அந்தவகையில் சுவையான மோதக கொழுக்கட்டை எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பச்சரிசி – 200 கிராம்,

    புழுங்கல் அரிசி – 200 கிராம்,

    வெல்லம் – 100 கிராம்,

    ஏலக்காய் – 3 எண்ணம்,

    தேங்காய் – ½ மூடி,

    உப்பு – ¼ டீஸ்பூன்.

    செய்முறை:

    முதலில் பச்சரிசி, புழுங்கல் அரிசி இரண்டையும் நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். பின் தண்ணீரை வடித்துவிட்டு ஒரு உலர்ந்த துணியில் போடவும்.

    10 நிமிடங்கள் கழித்து எடுத்து மிக்சியில் நன்றாக இடித்துக் கொள்ள வேண்டும். பின் அடிகனமான பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து வறுத்தெடுக்கவும். மாவானது ஈரப்பதம் நீங்கி உலர்ந்தவுடன் வேறு ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆற விடவும். பின்னர் வறுத்த மாவினை சல்லடையில் போட்டு சலிக்கவும். இப்போது கொழுக்கட்டை தயாரிக்க மாவு தயார்.

    பின்னர் தேங்காயை துருவி, வெல்லத்தை பொடியாக தட்டிக் கொள்ளவும். பாசிப்பயிற்றை வேகவைத்து ஏலக்காயை தூளாக்கிக் கொள்ளவும். தேங்காய் துருவல், வெல்லம், மசித்த பாசிப்பயிறு, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் கொட்டி ஒருசேர கலக்கவும். இப்போது பூரணக் கலவை தயார்.

    இப்போது கொழுக்கட்டை மாவில் உப்பினைக் கலந்து சூடான தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறி, மாவினை சப்பாத்தி மாவு பதத்திற்கு திரட்ட வேண்டும். அதில் இருந்து எலுமிச்சை அளவு மாவினை எடுத்து உருட்டி கிண்ண வடிவில் செய்யவும். அதில் சிறிதளவு பூரணக் கலவையை இட்டு மூடி உருண்டையாக திரட்டவும். அப்படி இல்லையென்றால் கொழுக்கட்டை அச்சில் மாவு மற்றும் பூரணத்தை வைத்து எடுக்கவும்.

    கொழுக்கட்டைகளை திரட்டும்போது பூரணக் கலவை வெளியே வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளவும். இவ்வாறாக எல்லா மாவினையும் கொழுக்கட்டைகளாக தயார் செய்யவும். பின்னர் குக்கர் அல்லது இட்லி பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சூடானவுடன் அதில் கொழுகட்டைகளை போட்டு ஆவி வர நன்கு வேக வைக்க வேண்டும். சுவையான விநாயகர் சதுர்த்தி மோதக கொழுக்கட்டை தயார்.

    • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர்.
    • வெண்ணெய் தடவிய தட்டில் போட்டு, ஆறவிடவும்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் சுவையான பனானா கேக் ரெசிபி எப்படி எளிதாக சமைக்கலாம் என்பதை பார்க்கலாம் வாங்க.

    தேவையான பொருட்கள்:

    வாழைப்பழம்- 3 அரைத்துக்கொள்ள வேண்டும்

    மைதா- 2 கப்

    சர்க்கரை- 2 கப்

    சிட்ரிக் ஆசிட்- கால் டீஸ்பூன்

    உப்பு- ஒரு சிட்டிகை

    வெண்ணெய் - 125 கிராம்

    வெனிலா எசன்ஸ் சில துளிகள்

    செய்முறை:

    ஒரு அடி கனமான பாத்திரத்தில் அரைத்து கூழாக்கிய வாழைப்பழம், சர்க்கரை, சிட்ரிக் ஆசிட், வெண்ணெய், உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

    அந்த கலவையுடன் மைதா மாவினை சலித்து சிறிது சிறிதாக கெட்டியில்லாமல் கலந்துகொள்ள வேண்டும். கெட்டியாக இருந்தால் சிறிதளவு பால் சேர்த்துக்கொள்ளலாம்.

    அதன்பிறகு ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதனுள் ஒரு ஸ்டாண்ட் வைத்து 10 நிமிடத்திற்கு ஃப்ரீஹீட் செய்ய வேண்டும். அதன்பிறகு பனானா கேக் கலவையை கேக் மோல்டில் ஊற்றி அதனுள் வைக்க வேண்டும். 25 நிமிடத்திற்கு வேக வைக்க வேண்டும்.

    25 நிமிடங்கள் கழித்து திறந்து பார்க்க வேண்டும். சுவையான பனானா கேக் ரெசிபி தயார். சூடு ஆறியதும் கேக்கை வெட்டி பரிமாறலாம்.

    • பச்சைமிளகாய் சாஸ் போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.
    • உருளைக்கிழங்கை வேகவைத்து சதுரமாக நறுக்கி கொள்ளவும்.

    தேவையான பொருட்கள்

    மைதா - 1 கப்

    கோதுமை மாவு - 1 கப்

    அரிசி மாவு - 1 கப்

    உப்பு- தேவையான அளவு

    எண்ணெய் - தேவைக்கு

    ரவை - 1/4 கப்

    தக்காளி - 2 கப்

    வெங்காயம் - 2

    குடைமிளகாய் - 2 டேபிள்ஸ்பூன்

    முந்திரிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்

    துருவிய சீஸ் - 1 கப்

    உதிர்த்து வேகவைத்த ஸ்வீட் கார்ன் - 2 டேபிள்ஸ்பூன்

    வெண்ணெய் - சிறிது

    கொத்தமல்லித்தழை - சிறிதளவு

    மிளகு தூள் - 1 டீஸ்பூன்

    உருளைக்கிழங்கு - 250 கிராம்

    பச்சைமிளகாய் சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்

    செய்முறை:

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து சதுரமாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, மைதா மாவு, ரவை உப்பு, மிளகுத்தூள், தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து அரை மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.

    மற்றொரு பாத்திரத்தில் தக்காளி, வெங்காயம், ஸ்வீட் கார்ன், முந்திரி, குடைமிளகாய், உருளைக்கிழங்கு துண்டுகள், உப்பு, வெண்ணெய், பச்சைமிளகாய் சாஸ் போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.

    தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவை கனமான தோசையாக ஊற்றி, அதன் மீது கலந்த கலவையை பரப்பி, அதன் மேல் கொத்தமல்லித்தழை, சீஸ் துருவல் தூவி, சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடிவைத்து வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.

    • மட்டன் 4 முதல் 5 நிமிடம்வரை மிதமான தீயில் வைத்து வேகவிடவும்.
    • கொத்தமல்லி புதினா இலைகள் சேர்த்து தண்ணீர் வற்றும்வரை நன்கு வதக்க வேண்டும்.

    தேவையான பொருட்கள்:

    சமோசா சீட்- 7 நம்பர்

    மட்டன் 250 கிராம்

    பச்சைமிளகாய்- 1 பொடிதாக நறுக்கியது

    தனியா விதை- 1 டீஸ்பூன்

    கரம்மசாலா தூள்- கால் டீஸ்பூன்

    கொத்தமல்லி தூள்- கால் டீஸ்பூன்

    மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்

    உப்பு- தேவையான அளவு

    இஞ்சிபூண்டு விழுது- ஒரு ஸ்பூன்

    வெங்காயம்- 3 (பொடியாக நறுக்கியது)

    செய்முறை:

    ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்க வேண்டும். அதன் பச்சை வாசனை போன பிறகு அதில் 3 அல்லது 4 நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்க வேண்டும். நன்றாக வதங்கிய பிறகு 250 கிராம் மட்டன் கொத்துக்கறி சேர்க்க வேண்டும். மட்டன் 4 முதல் 5 நிமிடம்வரை மிதமான தீயில் வைத்து வேகவிடவும். சிறிதளவு மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், உப்பு , கரம்மசாலா தூள், பொடியாக நறுக்கிய மிளகாய் சேர்த்து அனைத்து பொருட்களும் நன்றாக வதக்க வேண்டும். அதனுடன் சிறிதளவு தண்ணீர் தெளித்து வேக வைக்க வேண்டும்.

    அதன்பிறகு நறுக்கிய கொத்தமல்லி, புதினா இலைகள் சேர்த்து தண்ணீர் வற்றும்வரை நன்கு வதக்க வேண்டும். அடுப்பை அணைத்து விட்டு இந்த மசாலா கலவையை நன்கு ஆற விட வேண்டும்.

    அடுத்து சமோசா சீட்டை எடுத்து கோன் வடிவில் சுருட்டி அதில் மசாலா கலவையை நிரப்பி மூடி விட வேண்டும். அதன்பிறகு ஒரு கடாயில் எண்ணெயைக் காயவைத்து செய்து வைத்துள்ள சமோசாக்களை பொன்நிறமாகும் வரை நன்கு வறுத்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான மொறுமொறுப்பான மட்டன் கீமா சமோசா தயார்.

    • அன்னாச்சிப் பழக் கூழுடன் சர்க்கரை சேர்த்து கெட்டியாகும் வரை கிளரவும்.
    • தண்ணீர் நன்கு வற்றும் வரையும் 5 அல்லது 8 நிமிடங்கள் வரை வேகவைக்க வேண்டும்.

    தேவையான பொருட்கள்:

    அன்னாசிபழம்- 1

    சர்க்கரை- ஒரு கப்

    எலுமிச்சை- அரை துண்டு

    செய்முறை:

    அன்னாசி பழத்தினை அதன் தோலினை நீக்கிவிட்டு பழத்தைத் துண்டு துண்டாக நறுக்கி அதனை ஒன்றிரண்டாக அரைக்க வேண்டும். அரைத்த அன்னாச்சிப் பழக் கூழுடன் சர்க்கரை சேர்த்து கெட்டியாகும் வரை நன்கு 10 முதல் 15 நிமிடங்கள் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

    அன்னாச்சிப் பழ சிரப் கெட்டியாக ஆரம்பிக்கும், தண்ணீர் நன்கு வற்றும் வரையும் 5 அல்லது 8 நிமிடங்கள் வரை வேகவைக்க வேண்டும். நன்கு கெட்டியானதும் அடுப்பை அணைத்து விட்டு, அதில் சிறிது எலுமிச்சை சாற்றை சேர்க்க வேண்டும். எலுமிச்சை சாறு சேர்ப்பதால் அதில் சேர்க்கப்படும் சர்க்கரை உறையாமல் இருக்கும். பின்பு ஆறியதும் கண்ணாடி பாட்டிலில் அடைத்து அதனை ஃப்ரிட்ஜில் வைத்து தேவையான நேரங்களில் சப்பாத்தி, தோசை, பிரட் ஆகியவற்றிற்கு சேர்த்து சாப்பிடலாம்.

    • பால் குடிப்பது என்பது பல குழந்தைகளுக்குப் பிடிக்காத ஒன்று.
    • இந்த பால் கேக் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.

    தினமும் மாலையில் ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி செய்து சாப்பிட வேண்டும் என ஆசைப்படுவீர்கள். குழந்தைகள் பலருக்கும் தினமும் ஒரே ஸ்நாக்ஸ் சாப்பிடுவதற்கு பிடிக்காது. பால் குடிப்பது என்பது பல குழந்தைகளுக்குப் பிடிக்காத ஒன்று. ஆனால் அதில் அதிகப்படியான சத்துகள் நிறைந்துள்ளது.

    இந்த பால் கேக் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடக் கூடிய ஒரு ரெசிபியாக இருக்கும். இந்த பதிவில் மாலையில் ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபியாக பால் கேக் செய்வது எப்படி என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

    தேவையான பொருள்கள்

    சர்க்கரை- 6 டேபிள் ஸ்பூன்

    வெண்ணிலா எசன்ஸ் – 3 டீஸ்பூன்

    பால் – 2 கப்

    முட்டை – 4

    செய்முறை:

    முதலில் ஒரு பாத்திரத்தில் நான்கு முட்டைகளையும் உடைத்து சேர்த்து நன்றாக அடித்து கலக்க வேண்டும். மற்றொரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து அதில் மூன்று டேபிள் ஸ்பூன் அளவிற்கு சர்க்கரை சேர்த்து கொள்ளவும். அதில் இரண்டு டம்ளர் அளவிற்குத் தண்ணீர் சேர்த்து நன்றாக சர்க்கரை கரையும் வரை கிளறவும். சர்க்கரை பாகு நன்கு கரைந்து நிறம் மாறி வரவேண்டும். அதனை கேக் செய்யும் பாத்திரத்தில் ஊற்றி வைக்க வேண்டும்.

    அதன்பிறகு மற்றொரு பாத்திரத்தை எடுத்து அதில் கலக்கிய முட்டை மற்றும் இரண்டு கப் அளவிற்குப் பால் சேர்க்க வேண்டும். அதில் மூன்று டீஸ்பூன் அளவிற்கு வெண்ணிலா எசன்ஸ் மற்றும் மூன்று டேபிள் ஸ்பூன் அளவிற்கு சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

    இந்த கலவையை நாம் ஏற்கனவே செய்து வைத்துள்ள சர்க்கரை பாகு கலவையில் சேர்த்து இதனை ஒரு இட்லி பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து தண்ணீர் சேர்த்து அதில் நாம் கலக்கிய கலவை உள்ள பாத்திரத்தை எடுத்து அதில் வைத்து மூடி போட்டு வேக விட வேண்டும். இதை 10 முதல் 20 நிமிடங்கள் வேக விட்டு எடுத்தால் பால் கேக் தயார்.

    இதை குழந்தைகளுக்கு கொடுத்தால் சாப்பிட்ட பின், மீண்டும் மீண்டும் வேண்டும் எனக் கேட்கும் அளவிற்குச் சுவையாக இருக்கும். பால் மற்றும் முட்டையில் அதிகமாக சத்துகள் உள்ளதால் குழந்தைகள் அதிகமாக சாப்பிடலாம்.

    • ரோஜா கீரை ஐஸ்கிரீம் அல்லது யோகர்ட்டுடன் பரிமாறலாம்.
    • கோடைகாலத்தில் குடிப்பதற்கு மிகவும் பொருத்தமானது.

    ரோஜா கீர் என்பது ஒரு பாரம்பரிய இந்திய பானம், இது ரோஜா இதழ்கள், பால் மற்றும் சர்க்கரை ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது இனிமையான மற்றும் சுவையான பானமாகும், இது கோடைகாலத்தில் குடிப்பதற்கு மிகவும் பொருத்தமானது.

    ரோஜா கீரை நீங்கள் பல வழிகளில் பரிமாறலாம். நீங்கள் அதை தனியாக பரிமாறலாம் அல்லது இனிப்புகளுடன் பரிமாறலாம். நீங்கள் அதை ஐஸ்கிரீம் அல்லது யோகர்ட்டுடன் பரிமாறலாம் அல்லது அதை கேக்குகள் அல்லது டேனிஸ் ஆகியவற்றில் ஊற்றி பரிமாறலாம்.

    தேவையான பொருட்கள்:

    பால் - 2 கப்

    அரிசி - 1/2 கப்

    ரோஸ் வாட்டர் - 3 சொட்டு

    சர்க்கரை - 1/4 கப்

    ஏலக்காய் தூள் - சிறிதளவு

    உலர்ந்த ரோஜா இதழ்கள் - சிறிதளவு

    நறுக்கிய பாதாம் பருப்பு - சிறிதளவு

    நறுக்கிய முந்திரி - சிறிதளவு

    உலர் திராட்சை - சிறிதளவு

    செய்முறை:

    முதலில் அரிசியை 20 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்னர், ஒரு அடிகடிமான பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். இப்போது அரிசியை நன்றாக கழுவி கொதிக்கும் பாலில் சேர்த்துக் கொள்ளவும். மிதமான தீயில் அரிசி பாலில் குழையும் வரை வேக வைக்க வேண்டும்.

    அரிசி பாதிக்குமேல் வெந்ததும் உலர்ந்த ரோஜா இதழ்கள் மற்றும் ஏலக்காய் தூளை சேர்க்க வேண்டும். அரிசி முழுவதுமாக வெந்த பிறகு அதில் பொடித்த சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறவும்.

    சிறிது நேரம் கழித்து அடுப்பை அணைத்துவிடுங்கள். அதை மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி அதன் மீது நறுக்கிய பாதாம், முந்திரி, மற்றும் திராட்சையை தூவி விடவும். தித்திப்பான ரோஸ் கீர் தயார். சுடாகவும் பரிமாறலாம் அல்லது ப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்றும் பரிமாறலாம்.

    • சிறிது நெய் விட்டு சாப்பிட்டால் உப்புமா ருசியாக இருக்கும்.
    • கார்ன் பிளவர் மாவு கலந்து லேசான ஈரப்பதத்துடன் வறுத்தெடுத்தால் கோவக்காய் சுவையாக இருக்கும்.

    * சாம்பார், ரசம், காரக்குழம்பு போன்றவைகளை தயார் செய்யும்போது அடுப்பில் இருந்து இறக்கி வைக்கும் தருவாயில் அரை டீஸ்பூன் வெல்லம் கலந்தால் சுவை கூடும்.

    * கடலைப்பருப்பு, உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய் போன்றவற்றை நறுக்கிவிட்டு அதனுடன் அரை டீஸ்பூன் ரவையும் கலந்து வடை சுட்டால் மொறுமொறுவென்றும் சுவையாகவும் இருக்கும்.

    * எண்ணெய், கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து அதில் நறுக்கிய முட்டைக்கோஸை போட்டு வதக்கவும். பின்பு அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீரே இல்லாமல் மிதமான தீயில் 5 நிமிடம் மூடி வைத்துவிட்டு இறக்கினால் முட்டைக்கோஸ் பொரியல் சுவையாக இருக்கும்.

    * உப்புமா தயார் செய்யும்போது ரவையை பொன்னிறமாக வறுத்து, பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானவுடன் கடுகு, உளுந்தம் பருப்பு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்பு 1-க்கு 3 மடங்கு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு, கொதித்தவுடன் வறுத்த மாவை கொட்டி கிளறி, அது வெந்தவுடன் இறக்கவும். அதில் சிறிது நெய் விட்டு சாப்பிட்டால் உப்புமா ருசியாக இருக்கும்.

    * புளிக்குழம்பு தயார் செய்யும்போது முதலில் தேவையான அளவு தனியா, வர மிளகாய், வெந்தயம் போன்றவற்றை பொன்னிறமாக வறுக்கவும். அந்த கலவையை மிக்சியில் அரைக்கவும். பின்னர் வாணெலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, சிறிதளவு கடலைப்பருப்பு போட்டு தாளிக்கவும். அதில் புளிக்கரைசலை ஊற்றி கிளறவும். பின்பு மிக்சியில் அரைத்த கலவையை கொட்டி உப்பு, மஞ்சள் சேர்த்துவிட்டு குழம்பு கொதிக்கவும் இறக்கவும். அதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் வாசனை கமகமக்கும்.

    * தோசைக்கல்லில் நறுக்கிய கோவக்காயை கொட்டி, அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வதக்கி, தேவையான அளவு மிளகாய் தூள், உப்பு, கார்ன் பிளவர் மாவு கலந்து லேசான ஈரப்பதத்துடன் வறுத்தெடுத்தால் கோவக்காய் சுவையாக இருக்கும்.

    * பாகற்காய் தொக்கு செய்யும்போது பாகற்காயுடன் சிறிதளவு புளிக்கரைசல் சேர்த்து, மிளகாய் தூள், உப்பு போட்டு கொதிக்க விடவும். நன்றாக சுண்டி வந்ததும் சிறிதளவு வெல்லம் சேர்த்தால் கசப்பு தெரியாது. சுவையாகவும் இருக்கும்.

    • நூடுல்சுடன் மீதமுள்ள ஸ்வீட் சில்லி சாசை சேர்த்து நன்றாக கலக்கவும்.
    • ரோல் செய்வதற்கு தேவையான அரிசி தாளை தனித்தனியாக பிரித்து எடுக்கவும்.

    தேவையான பொருட்கள்:

    வால்நட் (பொடிதாக நறுக்கியது) - 1 கப்

    ஆலிவ் எண்ணெய்- ஒரு ஸ்பூன்

    வெங்காயம் (பொடிதாக நறுக்கியது)- 1

    மாங்காய் சாஸ் - கப்

    ஸ்வீட் சில்லி சாஸ் - 4 டேபிள் ஸ்பூன்

    சோயா சாஸ் - டேபிள் ஸ்பூன்

    அரிசி நூடுல்ஸ் - 1 கப்

    அரிசி தாள்- 8 (கடைகளில் கிடைக்கும்)

    பீன்ஸ் கப்

    கேரட் (துருவியது) - 1 கப்

    புதினா மற்றும் கொத்தமல்லித்தழை பொடியாக

    நறுக்கியது) ஒரு கைப்பிடி

    செய்முறை:

    வானாலியை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் வால்நட்டை போட்டு மிதமான தீயில் நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும். அடிகனமான மற்றொரு வானாலியை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடு படுத்தவும். பின்பு அதில் வெங்காயத்தைப்போட்டு 10 நிமிடங்களுக்கு நன்றாக வதக்கவும். பிறகு அதனுடன் மாங்காய் சாஸ், ௨ டேபிள் ஸ்பூன் ஸ்வீட் சில்லி சாஸ், சோயா சாஸ் ஆகியவற்றை சேர்த்து மேலும் 2 நிமிடங்களுக்கு வதக்கவும்.

    இந்த கலவையை அடுப்பில் இருந்து இறக்கி அதனுடன் வறுத்த வால்நட்ஸை சேர்த்து கலக்கவும். ஒரு சிறிய பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும். அது கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் அரிசி நடுல்ஸை போட்டு அடுப்பை அணைக்கவும். இதை 5 முதல் 7 நிமிடங்கள் வரை அப்படியே வைக்கவும். பின்பு அந்த சூடான தண்ணீரை நன்றாக வடித்து, அதில் குளிர்ந்த தண்ணீர் ஊற்றி அலசவும். பின்னர் அந்த தண்ணீரையும் முழுவதுமாக வடிகட்டவும். நூடுல்சுடன் மீதமுள்ள ஸ்வீட் சில்லி சாசை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    இப்போது, ரோல் செய்வதற்கு தேவையான அரிசி தாளை தனித்தனியாக பிரித்து எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும். அதில் அரிசி தாள்களைப் போட்டு, 15 முதல் 30 வினாடிகள் வரை மூழ்கி இருக்குமாறு வைத்த பின்பு அவற்றை வெளியே எடுக்க வேண்டும்.

    இந்த தாள்களை ஒவ்வொன்றாக கட்டிங் போர்டில் சுருக்கம் இல்லாமல் பரப்பவும். தாளின் மையப்பகுதியில், ஒரு டேபிள் ஸ்பூன் நூடுல்ஸ் கலவையை வைக்கவும். அதன் மேல், 2 டேபிள் ஸ்பூன் வால்நட் வெங்காய கலவை, ஒரு டேபிள் ஸ்பூன் பீன்ஸ், கேரட் கலவையை வைத்து, புதினா மற்றும் கொத்தமல்லித்தழையை தூவவும். இப்போது அரிசி தாளை மெதுவாக சுருட்டவும். அதை நன்றாக அழுத்தினால் உருளை வடிவில் மாறும். இதை தயாரித்த உடனே பரிமாறவும். சுவையான தாய் சாலட் ரோல் தயார்.

    ×