search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Beverage"

    • ரோஜா கீரை ஐஸ்கிரீம் அல்லது யோகர்ட்டுடன் பரிமாறலாம்.
    • கோடைகாலத்தில் குடிப்பதற்கு மிகவும் பொருத்தமானது.

    ரோஜா கீர் என்பது ஒரு பாரம்பரிய இந்திய பானம், இது ரோஜா இதழ்கள், பால் மற்றும் சர்க்கரை ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது இனிமையான மற்றும் சுவையான பானமாகும், இது கோடைகாலத்தில் குடிப்பதற்கு மிகவும் பொருத்தமானது.

    ரோஜா கீரை நீங்கள் பல வழிகளில் பரிமாறலாம். நீங்கள் அதை தனியாக பரிமாறலாம் அல்லது இனிப்புகளுடன் பரிமாறலாம். நீங்கள் அதை ஐஸ்கிரீம் அல்லது யோகர்ட்டுடன் பரிமாறலாம் அல்லது அதை கேக்குகள் அல்லது டேனிஸ் ஆகியவற்றில் ஊற்றி பரிமாறலாம்.

    தேவையான பொருட்கள்:

    பால் - 2 கப்

    அரிசி - 1/2 கப்

    ரோஸ் வாட்டர் - 3 சொட்டு

    சர்க்கரை - 1/4 கப்

    ஏலக்காய் தூள் - சிறிதளவு

    உலர்ந்த ரோஜா இதழ்கள் - சிறிதளவு

    நறுக்கிய பாதாம் பருப்பு - சிறிதளவு

    நறுக்கிய முந்திரி - சிறிதளவு

    உலர் திராட்சை - சிறிதளவு

    செய்முறை:

    முதலில் அரிசியை 20 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்னர், ஒரு அடிகடிமான பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். இப்போது அரிசியை நன்றாக கழுவி கொதிக்கும் பாலில் சேர்த்துக் கொள்ளவும். மிதமான தீயில் அரிசி பாலில் குழையும் வரை வேக வைக்க வேண்டும்.

    அரிசி பாதிக்குமேல் வெந்ததும் உலர்ந்த ரோஜா இதழ்கள் மற்றும் ஏலக்காய் தூளை சேர்க்க வேண்டும். அரிசி முழுவதுமாக வெந்த பிறகு அதில் பொடித்த சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறவும்.

    சிறிது நேரம் கழித்து அடுப்பை அணைத்துவிடுங்கள். அதை மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி அதன் மீது நறுக்கிய பாதாம், முந்திரி, மற்றும் திராட்சையை தூவி விடவும். தித்திப்பான ரோஸ் கீர் தயார். சுடாகவும் பரிமாறலாம் அல்லது ப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்றும் பரிமாறலாம்.

    ×