என் மலர்
சமையல்
- துளசியை தீர்த்தமாகவும், பூஜை பொருட்களாக மட்டுமின்றி உணவாகவும் சாப்பிடலாம்.
- துளசி சாதம் செய்து குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கும் கொடுக்கலாம்.
துளசியை தீர்த்தமாகவும், பூஜை பொருட்களாக மட்டுமின்றி உணவாகவும் சாப்பிடலாம். சளி, இருமல் தொல்லை நீங்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நாம் அவர்களுக்கு துளசி சாதம் செய்து கொடுக்கலாம். அதை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.
தேவையானபொருட்கள்:
துளசி இலை-1/2 கப்
சாதம்-1 கப்
கடலை பருப்பு-1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு-1 ஸ்பூன்
கடுகு- சிறிதளவு
கறிவேப்பிலை- சிறிதளவு
எண்ணெய்-1 ஸ்பூன்
கொத்தமல்லி தழை சிறிதளவு
பச்சை மிளகாய்-2
வெங்காயம்-1
செய்முறை:
துளசி இலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து உளுத்தம்பருப்பு மற்றும் கடலைப்பருப்பு போட்டு வதக்கவும். பின்னர் வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு சிறிது வதங்கியதும் துளசி இலை, தேவையான அளவு உப்பு போட்டு 5 நிமிடம் வதக்கவும். பின்னர் சாதத்தை போட்டு சிறிது நேரம் கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும். இந்த சாதம் மிகவும் சத்தான ஆரோக்கியமான உணவாகும்.
- வீட்டில் அலுத்து போன சமையலுக்கு டா டா சொல்லுங்க.
- குடும்பத்தினருக்கும் ரொம்பவே பிடிக்கும்.
வீட்டில் அலுத்து போன சமையலுக்கு டா டா சொல்லுங்க. சப்பாத்தி செய்ற நேரத்தை விட கம்மியான நேரத்தில் சூப்பரான கார்லிக் பட்டர் குல்ச்சா செய்யலாம். கொஞ்சம் வித்தியாசமாகவும் இருக்கும். உங்கள் குடும்பத்தினருக்கும் ரொம்பவே பிடிக்கும். இதற்காக தனியாக பொருட்கள் எதுவும் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் வீட்டில் இருக்கும் தினசரி சமையல் பொருட்களே போதும் எளிதாக செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
மைதா - 1 கப்
ஓமம்- ஒரு சிட்டிகை
ஆரிகேனோ- ஒரு சிட்டிகை
பூண்டு- துருவியது 3 பல்
பால் - 1/2 கப்
சர்க்கரை - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 ஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/2 ஸ்பூன்
வெண்ணெய் - தேவைக்கேற்ப.
கொத்தமல்லி தழை
செய்முறை:
முதலில் குல்ச்சாவுக்கு மாவு தயார் செய்ய வேண்டும். ஒரு பாத்திரத்தில் துருவிய பூண்டு மற்றும் நறுக்கிய கொத்தமல்லி தழைகள், ஒரு சிட்டிகை ஓமம், ஆரிகேனோ, பால், சர்க்கரை, உப்பு ஒரு சிட்டிகை மற்றும் எண்ணெய், பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை 30 நிமிடம் காத்து புகாத அளவிற்கு துணிபோட்டு மூடி வைக்க வேண்டும். 15 நிமிடம் கழித்து மாவு நன்றாக ஊறியதும் அதனை உங்களுக்கு ஏற்ற அளவுக்கு எடுத்து உருட்டி, சப்பாத்தி போல தேய்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் தோசை தவாவை அடுப்பில் வைத்து சூடேற்றி குல்ச்சாவை போடவும். அதன் மீது வெண்ணெய் தடவி திருப்பி போடவும். இதேபோன்று அனைத்தையும் போட்டு எடுக்க வேண்டும். சூடான கிரேவியை சேர்த்து சாப்பிடும் போது சூப்பரா இருக்கும். இவ்ளோ தான் சிம்பிளான பட்டர் குல்ச்சா தயார். குடும்பத்திற்கு செய்து கொடுத்து சாப்பிட்டு மகிழுங்கள்.
- பன் ரெசிபியை, உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.
- ஓவன் இல்லாமல் மிகவும் எளிதாக நம்முடைய வீட்டிலேயே செய்யலாம்.
டீக்கடைகளில் விற்கப்படும் பன்களை ஓவன் இல்லாமல் மிகவும் எளிதாக நம்முடைய வீட்டிலேயே செய்யலாம். பொதுவாகவே குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இந்த சாஃப்டான பன், நம்முடைய வீட்டில் செய்தால் அம்மாக்களுக்கு அது மிகப் பெரிய சந்தோசத்தை கொடுக்கும். உங்கள் குழந்தைகளுக்கு நீங்களும், உங்கள் கையாலேயே பன் செய்து தர வேண்டும் என்ற ஆசை இருக்கா? இந்த குறிப்பை முழுமையாக படித்து, இன்னைக்கு ஈவ்னிங் இந்த பன் ரெசிபியை, உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.
தேவையான பொருட்கள்
மைதா- 1/2 கிலோ
சர்க்கரை- ஒரு ஸ்பூன்,
உப்பு- ஒரு சிட்டிகை
முட்டை- 1
பால்-200 கிராம்
ஈஸ்ட்- 1/2 ஸ்பூன்
வெண்ணெய்- 2 ஸ்பூன்
செய்முறை:
ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் முதலில் ஈஸ்டை சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு கரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் உப்பு, சர்க்கரை சேர்த்து நன்றாக கரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு முட்டைடை அதனுடன் சேர்த்து நன்றாக அடித்து கலக்கவும்.
இந்த கலவையுடன் பால் சேர்க்க வேண்டும். இதில் மைதா மாவு சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக பால் விட்டு பிசைந்து அரைமணிநேரம் மூடிபோட்டு ஊற வைக்க வேண்டும். அரைமணிநேரம் கழித்து திறந்து பார்த்தால் பிசைந்து வைத்த மாவுக்கலவை உப்பலாக இருக்கும்.
இந்த மாவுக்கலவையை மீண்டும் ஒருமுறை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். அதனை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மாவு உருண்டைகளை ஒரு தட்டில் வெண்ணெய் தடவி அதில் வரிசையாக இடைவெளி விட்டு அடுக்கிக்கொள்ள வேண்டும்.
இப்போது அடுப்பில் ஒரு அடி கனமாக பாத்திரம் வைத்து அதனுள் ஒரு ஸ்டாண்ட் வைத்து அதனை 10 நிமிடத்திற்கு ஃப்ரீஹீட் செய்ய வேண்டும். 10 நிமிடம் கழித்து நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள பன் உருண்டைகளை எடுத்து அதனுள் வைத்து ஆவி வெளியே போகாத அளவுக்கு 25 நிமிடம் மூடிபோட்டு மூட வேண்டும். 25 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் சுவையான டீக்கடை பன் தயார். இதன் மேல் வெண்ணெய் தடவி சூடு ஆறியதும் பரிமாறலாம்.
- கிருஷ்ணருக்கு பிடித்தமானவற்றில் அவலும் ஒன்று.
- அவல், பொட்டுக்கடலை இரண்டையும் வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும்.
கிருஷ்ணருக்கு பிடித்தமானவற்றில் அவலும் ஒன்று. பகவான் கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமான அவல் மற்றும் நெய் ஆகியவற்றை பயன்படுத்தி எப்படி எளிதான முறையில் சவையான அவல் லட்டு செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
அவல்-1 கப்
பொட்டுக்கடலை (உடைத்தக்கடலை)- ½ கப்
முந்திரி- 6
திராட்சை- 6
ஏலக்காய் தூள்- ஒரு ஸ்பூன்
பால்- அரை கப்
சர்க்கரை- 1 கப்
நெய்- 100 கிராம்
தேங்காய் துருவல்- 2 கப்
செய்முறை
அவல், பொட்டுக்கடலை இரண்டையும் சுத்தம் செய்து தனித்தனியே வெறுமனே வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி, தேங்காய் துருவல், காய்ந்த திராட்சையை வறுத்து பொடித்துக் கொள்ளவும். சர்க்கரையையும் பொடித்து வைத்துக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் எல்லாவபொருட்களையும் ஒவ்வொன்றாக போட்டு ஏலப்பொடி, பால், நெய் சேர்த்து நன்கு கிளறி தேவையான அளவில் லட்டுக்களை செய்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் கிருஷ்ணருக்கு பிடித்த அவல் லட்டுக்கள் தயார்.
- கிருஷ்ண சீடை நினைத்தாலே எச்சில் ஊறவைக்கும் மிகவும் ருசியான உணவாகும்.
- சீடை , முறுக்கு மற்றும் பால் வகைகள் பிரதான பலகாரங்களாக இருக்கும்.
கிருஷ்ண ஜெயந்தி நாளில் கிருஷ்ணருக்கு விருப்பமான உணவுகள் வைத்து படைக்கப்படும். அதில் இனிப்பு சீடை, முறுக்கு மற்றும் பால் வகைகள் பிரதான பலகாரங்களாக இருக்கும். அதில் மிகமுக்கிய பலகாரமான சீடை எப்படி செய்வது என பார்க்கலாம். கிருஷ்ண சீடை நினைத்தாலே எச்சில் ஊறவைக்கும் மிகவும் ருசியான உணவாகும்.
தேவையான பொருட்கள்
அரிசி மாவு- ஒரு கப்
வெல்லம் - 100 கிராம்
எண்ணை - ஒரு கப்
ஏலக்காய் பொடி- சிறிது
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
வெள்ளை எள் - ஒரு தேக்கரண்டி
செய்முறை
உளுத்தம் பருப்பு வெறும் கடாயில் வறுத்து அதனை மிக்சியில் போட்டு தூளாக்கிக் கொள்ளவும். கடாயில் அரிசி மாவை லேசாக வறுத்துக் கொள்ளவும். மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு சிறிய டம்ளர் தண்ணீர் ஊற்றி வெல்லத்தை போட்டு காய்ச்சவும். இதில் ஏலக்காய் பொடியை சேர்க்கவும். பாகு பதம் அல்லாமல் வெல்லம் நன்கு கரைந்திருந்தாலே போதும் இறக்கி விடலாம். ஒரு வாய் அகண்ட பாத்திரத்தில் அரிசி போட்டு அதில் வெல்லத்தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றிக் கிளறவும். அதில் எள் மற்றும் உளுத்தம் மாவையும் சேர்த்து கிளறி சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளவும். அதன் பின்னர் வாணலியில் எண்ணை ஊற்றி சூடாக்கி, உருட்டி வைத்துள்ள உருண்டைகளை போட்டு பிரித்து எடுக்கலாம். இதுதான் கிருஷ்ண சீடை.
- நெய் பிஸ்கட் என்றால் எல்லோருக்குமே மிகவும் பிடிக்கும்.
- ஆரோக்கியமானதாக இருக்கும்.
பேக்கரிகளிலும், டீக்கடைகளிலும் விற்கும் நெய் பிஸ்கட் என்றால் எல்லோருக்குமே மிகவும் பிடிக்கும். அந்த நெய் பிஸ்கட்டை நம் வீட்டிலேயே கூட செய்யலாம். ஓவன் தேவையே இல்லை. சுலபமாக, நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து, பிஸ்கட் எப்படி தயாரிப்பது என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகிறோம். எந்த ஒரு பிரிசர்வேட்டிங்கும் சேர்க்காமல், ஆரோக்கியமான இந்த பிஸ்கட்டை உங்கள் கையாலேயே செய்து, உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்கள்! கட்டாயம் ஆரோக்கியமானதாக இருக்கும். நெய் பிஸ்கட் வீட்டிலேயே எப்படி செய்வது? பார்த்து விடலாமா!
தேவையான பொருட்கள்
நெய்-200 கிராம்
மைதா-400 கிராம்
சர்க்கரை-200 கிராம்
பேக்கிங் சோடா- ஒரு சிட்டிகை
பேக்கிங் பவுடர்- அரை டீஸ்பூன்
ரீபைண்ட் ஆயில்- ஒரு ஸ்பூன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து அதனை கீரிமியான அளவுக்கு நன்றாக் பீட் செய்து கொள்ள வேண்டும். அதனுடன் பொடித்த சர்க்கரை சேர்த்து மீண்டும் கிரீம் அளவுக்கு பீட் செய்துகொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் மைதா மற்றும் ஒரு சிட்டிகை உப்பு, வாசனை இல்லாத ரீபைண்ட் ஆயில், பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் சேர்த்து அதனை நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்து அதனை ஒரு அரைமணிநேரத்திற்கு மூடி போட்டு தனியே எடுத்து வைக்க வேண்டும்.
அரைமணிநேரத்திற்கு பிறகு அந்த மாவினை எடுத்து அதில் சிறிதளவு நெய் சேர்த்து மறுபடியும் பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை உருண்டைகளாக உருட்டி தட்டி பிஸ்கெட் வடிவத்திற்கு வட்டமாக தட்டி எடுத்து அதனை ஒரு பிளேட்டி வைக்க வேண்டும்.
அதன்பிறகு அடுப்பில் ஒரு அடி கனமான பாத்திரத்தை வைத்து உள்ளே ஒரு ஸ்டாண்ட் வைத்து ஃப்ரீஹீட் செய்ய வேண்டும். ஃப்ரீஹீட் ஆனதும் அதில் பிஸ்கெட்டுகளை வைத்து 25 நிமிடம் வேகவைத்து எடுத்தால் சுவையான நெய் பிஸ்கெட் தயார்.
பிஸ்கட்டை அடுப்பில் இருந்து எடுத்ததும், சூடாக இருக்கும் போது, சாஃப்ட்டாக தான் இருக்கும். பிஸ்கட் நன்றாக ஆறிய பின்பு சுவைத்துப் பாருங்கள். கடைகளில் வாங்கிய சுவையை விட, உங்கள் கைகளால் நீங்களே செய்த இந்த பிஸ்கட்டின் ருசி அதிகமாகத்தான் இருக்கும்.
- பனீர் ஃபர்பியை பார்த்ததும் அதை வேண்டாம் என்று யாரும் சொல்லவே மாட்டார்கள்
- எல்லா பண்டிகை நாட்களிலும் இந்த சுவீட் இல்லாமல் முழுமை பெறாது.
தேவையான பொருட்கள்
பனீர்-200 கிராம்
சர்க்கரை-200 கிராம்
முந்திரி, பாதாம்- ஒருகப்
பால்-1/2 லிட்டர்
பால்பவுடர்-100 கிராம்
செய்முறை
ஒரு மிக்சி ஜாரில் பனீரை போட்டு ஒரு முறைபொடித்து எடுத்துக்கொள்ளவேண்டும். அதன்பிறகு முந்திரியையும், பாதாம் பருப்பையும் ஒரு பிளேட்டில் துருவி எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு அடுப்பில் காடாயை வைத்து காய்ந்ததும் அதில் 100 கிராம் பால்பவுடர் போட்டு அதில் காய்ச்சி ஆறவைத்த பாலை சேர்க்க வேண்டும். அதில் சர்க்கரை மற்றும் அரைத்து வைத்த பனீர், துருவிய பாதாம், முந்திரி கலவை ஆகியவற்றை சேர்த்து கெட்டி இல்லமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அந்த கலவையை சிறிது கெட்டிபதம் வந்ததும் அதில் ஒரு ஸ்பூன் நெய்சேர்த்து கிளறி இறக்கவும்.
இந்த கலவையை ஒரு நெய் தடவிய பிளேட்டில் கொட்டி நன்றாக ஆறியதும் துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். சுவையான பனீர் ஃபர்பி தயார். இந்த ஸ்வீட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.
- தேங்காய்ப்பாலை ஊற்றி மிதமான தீயில் கலக்க வேண்டும்.
- தேங்காய்பாலை அதிகநேரம் கொதிக்கவிடக்கூடாது.
தேவையான பொருட்கள்
மிளகு- ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
வெந்தயம்- ஒரு டீஸ்பூன்
தேங்காய்ப்பால் - அரை வீட்டர்
நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு- ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -
டீஸ்பூன்
இஞ்சி- இரு டீஸ்பூன் (துருவியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது
வெல்லம் - 2 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதாவு
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் அதில் மிளகு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு மிதமான தீயில் சிவக்க வறுக்க வேண்டும். அது ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்துக்கொள்ள வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். பின்னர் இதில் கடுகு சீரகம், பெருங்காயம் போட்டு தாளிக்கவும். அதில் இஞ்சி, தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர் அந்த கலவையில் தேங்காய்ப்பாலை ஊற்றி மிதமான தீயில் கலக்க வேண்டும். அது நுரை வந்து லேசாக கொதிக்க ஆரம்பித்ததும் அதில் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித்தழை தூவி அடுப்பில் இருந்து இறக்க வேண்டும். சுவையான தேங்காய்பால் ரசம் தயார்.
- இரும்புச்சத்து நிறைந்த முருங்கைக்கீரை குழம்பு.
- முருங்கைக்கீரை சாம்பார், பொரியல், என்று விதவிதமாக செய்து சாப்பிடலாம்.
முருங்கைக்கீரையை வைத்து முருங்கைக்கீரை கடையல், முருங்கைக்கீரை சாம்பார், பொரியல், என்று விதவிதமாக செய்து சாப்பிடலாம். எப்படி சாப்பிட்டாலும் உடலுக்கு ஆரோக்கியம் தான். ஆனால் நாவிற்கு ருசியாக செய்து கொடுத்தால் தானே நம் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடுவார்கள். ஒருமுறை முருங்கைக்கீரையில் இப்படி குழம்பு வைத்து சுடச்சுட சாதத்தில் இந்த குழம்பை போட்டு கொஞ்சமாக நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டு பாருங்கள். அற்புதமான ருசி. சொல்லும்போதே மணக்க மணக்க வாசம் வீசுது.
தேவையான பொருட்கள்
மசாலா அரைக்க:
மிளகு - 2 டீஸ்பூள்
சீரகம் - 2 டீஸ்பூன்
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
காய்ந்த மிளகாய்
கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூஸ்
குழம்பு தயாரிக்க:
பாசிப்பருப்பு - 100 கிராம்
முருங்கைக்காய் -1
கத்தரிக்காய் - 3
முருங்கைக்கீரை - இரண்டு கைப்பிடி அளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு- ஒரு டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்
பெருங்காயப்பொடி - 2 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் அதில் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு மிதமான தீயில் சிவக்க வறுத்து ஆற வைக்க வேண்டும். பின்பு இவற்றுடன் தேங்காய் சேர்த்து மிக்சியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பசைபோல அரைத்துக் கொள்ள வேண்டும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, தண்ணீர் ஊற்றி பாசிப்பருப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். பாதி அளவு வெந்ததும் அதனுடன் முருங்கைக்காய், சுத்தரிக்காய் ஆகியவற்றை சேர்த்து வேக வைக்க வேண்டும். அவை முக்கால் பதத்துக்கு வெந்ததும், முருங்கைக்கீரையை அதனுடன் சேர்த்து வேகவைக்க வேண்டும். பின்பு அதில் அரைத்து வைத்திருக்கும் மசாலா, மஞ்சள்தூள், உப்பு சேர்ந்து கலந்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் கொத்தமல்லித் தழையை அதன்மேலே தூவ வேண்டும்.
சிறிய கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். பின்பு அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும், இதை தயாரித்து வைத்திருக்கும் குழம்பில் ஊற்றி கலக்கவும், இப்போது சுவையான "முருங்கைக்கீரை குழம்பு' தயார்.
- வித்தியாசமாக சில மசாலா பொருட்களை எல்லாம் சேர்த்து பூரி செய்யலாம்.
- தொட்டுக்கொள்ள ஒரு ரைத்தா இருந்தால் போதும்.
தேவையான பொருட்கள்:
கடலைபருப்பு-200 கிராம்
ரவை- 50 கிராம்
பூண்டு-3 பல்
இஞ்சி- ஒரு துண்டு
சீரகம்- 1/2 ஸ்பூன்
சோம்பு- 1/2 ஸ்பூன்
கஸ்தூரி- மேத்தி 1/2 ஸ்பூன்
முழு மிளகு- 5
கிராம்பு- 2
பெருங்காயம்- 1/4 ஸ்பூன்
மஞ்சள்தூள்- 1/4 ஸ்பூன்
ஓமம்- ஒரு சிட்டிகை
கோதுமை மாவு-200 கிராம்
எண்ணெய்- அரை லிட்டர்
உப்பு- சுவைக்கேற்ப
கொத்தமல்லிதழை-அலங்கரிக்க
பெரும்பாலும் நம் எல்லோர் வீட்டிலும் சாதாரணமாக கோதுமை மாவில், மைதா மாவில் பூரி செய்வது வழக்கம். அதேபோல கொஞ்சம் வித்தியாசமாக சில மசாலா பொருட்களை எல்லாம் சேர்த்து பூரி செய்யப் போகிறோம். வடமாநிலத்தவர்கள் விரும்பி சாப்பிடக்கூடிய கச்சோடி சுவையில் இந்த பூரி இருக்கும். இதற்கு தொட்டுக்கொள்ள ஒரு ரைத்தா இருந்தால் போதும். அது தயிர் பச்சடியாக கூட இருக்கலாம். வெள்ளரிக்காய், கேரட், வெங்காயம் போட்ட தயிர் பச்சடி எதுவாக இருந்தாலும் இதற்கு சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிட சூப்பராக இருக்கும்.
செய்முறை:
நமக்கு முதலில் 1/2 கப் அளவு கடலைப்பருப்பு தேவை. முந்தைய நாள் இரவே 1/2 கப் அளவு கடலைப்பருப்பை சுத்தமாக கழுவி விட்டு, நல்ல தண்ணீரை ஊற்றி ஊற வையுங்கள். 8 மணி நேரம் கடலை பருப்பு ஊறட்டும். மறுநாள் காலை மிக்சி ஜாரில் ஊற வைத்த கடலைப்பருப்பை தண்ணீரை வடித்து போடவும். இதோடு பூண்டு தோல் உரித்தது 3 பல், இஞ்சி 1 இன்ச் தோல் சீவியது, சீரகம் 1/2 ஸ்பூன், சோம்பு 1/2 ஸ்பூன், கஸ்தூரி மேத்தி 1/2 ஸ்பூன், முழு மிளகு 5, கிராம்பு 2, பெருங்காயம் 1/4 ஸ்பூன், மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், போட்டு நைசாக விழுதாக அரைக்க வேண்டும். கொஞ்சமாக தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். அரைத்த விழுதை ஒரு அகலமான பவுலில் மாற்றிக் கொள்ளுங்கள்.
இதோடு ௨ டேபிள் ஸ்பூன் ரவையை போட்டு நன்றாக கலந்து ஒரு பத்து நிமிடம் மூடி வைக்க வேண்டும். ரவை அரைத்த கடலைமாவில் நன்றாக ஊறிவிடும். பிறகு இதோடு கோதுமை மாவு 2 கப், தேவையான அளவு உப்பு, எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், ஓமம் சிறிதளவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சிறிதளவு போட்டு நன்றாக மாவை பிசைய வேண்டும். மாவு கட்டியாக பூரி மாவு பதத்தில் பிசைய வேண்டும்.
மாவு கொஞ்சம் லூசாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் இன்னும் கொஞ்சம் கோதுமை மாவை சேர்த்து பிசைந்து கொள்ளலாம். தவறொன்றும் கிடையாது. இந்த மாவை ஒரு ஈரத்துணி போட்டு மூடி வைக்க வேண்டும். பத்து நிமிடம் கழித்து மாவை சின்ன சின்ன உருண்டைகளாக தயார் செய்து கொள்ளவும். அவ்வளவுதான் வழக்கம் போல குட்டி குட்டி பூரிகளை கொஞ்சம் தடிமனாக திரட்டி வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் நன்றாக சூடானதும் பூரியை போட்டு பொறித்து எடுத்தால் ஆஹா இதன் வாசமும் சுவையும் வேற லெவல்ல இருக்கும். மிஸ் பண்ணாம டிரை பண்ணி பாருங்க.
- ரசத்தை நெய்யில் தாளித்தால் அதிக மணமாக இருக்கும்.
- அரிசி களைந்த தண்ணீரில் கிழங்குகளை வேக வைத்தால் சீக்கிரமாக வெந்துவிடும்.
* பாயசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரீச்சம் பழத்தை நறுக்கி சேர்க்கலாம்.
* சாம்பார், கூட்டு செய்யும்போது தேங்காய் துருவலுடன் சிறிது கசகசாவை அரைத்து சேர்த்தால் சுவையாக இருக்கும். உடலுக்கும் நல்லது.
* மோர்க்குழம்பு செய்யும்போது மிளகாயை நன்றாக வதக்கி அரைத்து சேர்த்தால் குழம்பு நல்ல நிறமாக காட்சி அளிக்கும். ருசியாகவும் இருக்கும்.
* பாகற்காய் குழம்பில் கேரட் ஒன்றை துண்டுகளாக நறுக்கிப்போட்டால், கசப்புத்தன்மை அதிகம் இருக்காது.
* அரிசி களைந்த தண்ணீரில் கிழங்குகளை வேக வைத்தால் சீக்கிரமாக வெந்துவிடும்.
* ரசம் கொதிக்கும்போது அதில் புதினா இலைகளை சேர்த்து கொதிக்க வைத்தால் ரசம் மணமாக இருக்கும்.
* துவரம் பருப்பை வேக வைக்கும்போது ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்தால், பருப்பு சீக்கிரம் வெந்துவிடும்.
* ரசத்தை நெய்யில் தாளித்தால் அதிக மணமாக இருக்கும்.
* சர்க்கரை இருக்கும் டப்பாவில் இரண்டு, மூன்று லவங்கத்தை போட்டு வைத்தால் எறும்புகள் வராது.
* எலுமிச்சை சாதம் தயார் செய்யும்போது சாதம் சூடாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் கசப்புத்தன்மை கூடும்.
* பாலை நன்கு கொதிக்க காய்ச்சி பயன்படுத்த வேண்டும். அதாவது சுண்டக் காய்ச்ச வேண்டும். அதுதான் சரியானது.
* தேங்காய்க்கு பதிலாக சர்க்கரை வள்ளிக்கிழங்கை கொரகொரப்பாக அரைத்து குருமாவில் சேர்த்து சமைத்தால் சுவை புதுமையாக இருக்கும்.
* கீரை சமைக்கும்போது ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து சமைத்தால் கீரை பச்சை நிறம் மாறாமல் ருசியாகவும் இருக்கும்.
* தயிர் புளிக்கின்ற நிலை வரும்போது, அதில் ஒரு துண்டு தேங்காயை போட்டு வைத்தால் தயிர் அதிகமாக புளிக்காது.
* முட்டை கெட்டுப் போகாமல் இருக்க முட்டையின் மீது லேசாக எண்ணெய் தடவி வைத்தால் முட்டை விரைவில் கெட்டுப் போகாமல் இருக்கும்.
* மெதுவடை மொறு மொறு என்று இருக்க, உளுத்தம் பருப்புடன் சிறிதளவு பச்சரிசி சேர்த்து ஊற வைத்து அரைத்தால் மெதுவடை மொறுமொறுப்பாக இருக்கும்.
- இதன் சுவை வாயில் வைத்ததும் கரைந்துவிடும்.
- வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே மிகவும் எளியமுறையில் செய்துவிடலாம்.
தேவையான பொருட்கள்:
பாசிபருப்பு- 200 கிராம்
ரவை- 100 கிராம்
வெல்லம்-500 கிராம்
தேங்காய்-அரை கப்
ஏலக்காய்தூள்- ஒரு ஸ்பூன்
நெய்- 100 கிராம்
முந்திரி- அலங்கரிக்க
செய்முறை:
செட்டிநாடு ஸ்பெஷல் உக்காரை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே மிகவும் எளியமுறையில் செய்துவிடலாம். இதன் சுவை வாயில் வைத்ததும் கரைந்துவிடும் அளவுக்கு இனிப்பு சுவையுடன் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைஅனைவரும் மிகவும் விரும்பி சப்பிடுவர்.
ஒரு காடாயில் வாணலிவைத்து காய்ந்ததும் 200 கிராம் பாசிபருப்பை சேர்த்து நன்றாக மணம் வரும் வரை வறுத்து எடுக்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து வறுக்க வேண்டும் கருகிவிடக்கூடாது. இதனை ஒரு குக்கரில் வைத்து அதற்கு தேவையான அளவு தண்ணீர் விட்டு கழுவி அந்த பருப்பை தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும். இப்போது வெல்லத்தை கரைத்து எடுத்துக்கொள்ளலாம். இதற்கு ஒரு அடிகனமான பாத்திரத்த்தை அடுப்பில் வைத்து வெல்லம் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு காய்ச்சி எடுக்க வேண்டும். ஒரு கப் பாசிபருப்புக்கு 3 கப் வெல்லம் என்ற அளவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இனிப்பு அதிகம் விரும்புபவர்கள் என்றால் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். பாகு கம்பிபதம் வர வேண்டாம். பாகு கரைந்து வந்தால் போதுமானது. வெல்லம் கரைந்து வந்தவுடன் இதனை ஒரு பாத்திரத்தில் தனியே எடுத்து வைக்க வேண்டும்.
அதன்பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 3 கரண்டி நெய் சேர்க்க வேண்டும். இந்த உக்காரைக்கு சுவை சேர்க்கக்கூடியது இந்த நெய்தான். நெய் காய்ந்ததும் அதில் அரை கப் ரவை சேர்க்க வேண்டும். ரவையை பொன்னிறமாக நன்றாக வறுக்க வேண்டும். பின்னர் இதில் துருவி வைத்த தேங்காய் சேர்க்க வேண்டும். இதுவும் நன்றாக வறுத்து எடுக்க வேண்டும். நன்றாக வறுத்து எடுத்துக்கொண்டால் கெட்டுப்போகாமல் இருக்கும்.
இந்த கலவையில் நாம் வேகவைத்துள்ள பாசிப்பருப்பு கலவையை சேர்க்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக கலந்துவிடவேண்டும். அப்போது ரவை நன்றாக் வெந்துவரும். அப்போது நாம் ஏற்கனவே எடுத்து வைத்துள்ள வெல்லக் கரைசலை வடிகட்டியில் வடித்து சேர்க்க வேண்டும். வெல்லப்பாகு சேர்த்தவுடன் இந்த கலவையை நன்றாக கைவிடாமல் கலந்துகொண்டே வர வேண்டும். இதனுடன் நெய் சேர்க்க வேண்டும். கடைசியில் இதனுடன் நெய்யில் வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நெய் பிரிந்து வரும் வரை கிளற வேண்டும். சுவையான செட்டிநாடு ஸ்பெஷல் உக்காரை தயார்.






