என் மலர்
சமையல்
- குழந்தைகள் இந்த காக்டெய்ல் சுவைகளை விரும்புவார்கள்.
- கிரீன் டீ ஐஸ்கிரீம் என்பது வழக்கத்திற்கு மாறானது.
சூடான கோடை நாட்களுக்கு இது ஒரு சிறந்த செய்முறையாகும், மேலும் குழந்தைகள் இந்த காக்டெய்ல் சுவைகளை விரும்புவார்கள். கிரீன் டீ ஐஸ்கிரீம் என்பது வழக்கத்திற்கு மாறானது. ஆனால் மிகவும் விரும்பத்தக்க சுவைகளில் ஒன்றாகும், இது ஐஸ்கிரீமுக்கு ஒரு அழகான மாற்று சுவையை உருவாக்குகிறது, அதே பழைய சலிப்பூட்டும் சுவையான வெண்ணிலா, சாக்லேட் மற்றும் ஸ்ட்ராபெரி ஆகியவற்றை நீக்குகிறது. க்ரீன் டீ ஐஸ்கிரீம் தயாரிப்பது எளிதானது மற்றும் கிரீன் டீ நறுமணமும் நன்மையும் கொண்டது.
தேவையான பொருட்கள்:
பால் (கொழுப்பு நீக்காதது) - 400 மி.லி.
பிரஷ் கிரீம் 300 மி.லி.
முட்டை - 6
கஸ்டர்டு சுகர்- 1/2 கப்
கிரீன் டீ தூள் - 20 கிராம்
செய்முறை:
அடிகனமான அகன்ற பாத்திரத்தில் பாலையும், பிரஷ் கிரீமையும் ஊற்றி மிதமான தீயில் கலக்க வேண்டும். அது லேசாக சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் கஸ்டர்டு சுகருடன். முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து கலக்க வேண்டும். பின்னர் அதனுடன் கிரின் டீ தூளை சேர்த்து கலக்க வேண்டும்.
அதன் பின்னர் இதில் கொஞ்சம் கொஞ்சமாக காய்ச்சி எடுத்து வைத்துள்ள பாலை ஊற்றி நன்றாக அடித்துக் கலக்க வேண்டும். இந்த கலவையை வடிகட்டிக்கொள்ளுங்கள். இதை அடிகனமான வாய் அகன்ற பாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயில் கிளறுங்கள்.
கலவை கெட்டியாகத் தொடங்கியதும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற வையுங்கள். பின்பு அதை ஒரு பவுலில் ஊற்றி குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து வெளியே எடுத்து மிக்சி ஜாரில் போட்டு அடித்துக்கொள்ள வேண்டும். பிறகு அதை மீண்டும் பவுலில் ஊற்றி குளிர்சாதனப் பெட்டியின் ஃபிரீசர் அறையில் வைக்க வேண்டும். 2 மணி நேரம் கழித்து வெளியே எடுத்துப் பரிமாறுங்கள். சுவையான கிரீன் டீ ஐஸ்கிரீம் தயார்.
- பழச்சாறுகளில் சுவையை அதிகரிக்க அதில் தேன் சேர்க்கலாம்.
- சமைத்த பின்னர் அதை பிரிட்ஜில் உள்ள பிரீசரில் வைக்கக்கூடாது.
* தோசைக்கு அரைக்கும்போது உளுந்துடன் கொஞ்சம் சாதத்தை சேர்த்து அரைத்தால் தோசை மிருதுவாக இருக்கும்.
* கோதுமை மாவுடன் சம அளவு பார்லி மாவு சேர்த்து சப்பாத்தி தயார் செய்தால் சப்பாத்தி மிகுந்த ருசியுடன் இருக்கும்.
* பருப்பை வேக வைக்கும்போது ஒரு ஸ்பூன் கடுகு எண்ணெய் சேர்த்து வேக வைத்தால் பருப்பு மிக விரைவில் வெந்து விடும்.
* சப்பாத்தி மாவுடன் சிறிதளவு சமையல் சோடாவை சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.
* உப்பை ஜாடியில் கொட்டும் போது ஒரு ஸ்பூன் மக்காச்சோள மாவைக் கலந்து வைத்தால் உப்பில் ஈரத்தன்மை உண்டாகாது.
* குருமாவுக்கு அரைக்கும் போது மற்ற மசாலா பொருட்களுடன் தக்காளியையும் சேர்த்து அரைத்தால் குருமா, குழம்பு பதமாக வரும்.
* சாம்பார், பருப்பு, கிழங்கு வகைகளில் செய்த உணவுகள் மற்றும் முட்டை உணவுகளை சமைத்த பின்னர் அதை பிரிட்ஜில் உள்ள பிரீசரில் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் அந்த குழம்பின் சுவை, தரம் மாறிவிடும்.
* ஒரு முறை பிரீசரில் வைத்து எடுத்த உணவை சமைத்த பின்னர் மீண்டும் பிரீசரில் வைத்தால் கெட்டு விடும்.
* சமைத்த உணவு அதிகமாக இருந்தால் அதை தனித்தனியாக பிரித்து பிரீசரில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சூடுபடுத்தி சாப்பிடலாம்.
* பிரிட்ஜில் உணவுப் பொருட்களை வைக்கும்போது, சின்ன டப்பாக்களை பயன்படுத்தினால் இடம் அடைக்காமல் இருக்கும்.
* பப்பாளித் துண்டுகளை சர்க்கரை பாகில் நாள் கணக்கில் வைத்து விட்டு பின்பு அதை எடுத்து கேக், பன் போன்றவைகளில் சேர்த்து புருட்டி தயாரிக்கலாம்.
* பழச்சாறுகளில் சுவையை அதிகரிக்க அதில் தேன் சேர்க்கலாம்.
* ஜாம் தயாரிப்பதற்கு நன்றாகப் பழுத்த பழங்களை உபயோகிக்க வேண்டும். நன்றாக பழுத்த பழங்களை பயன்படுத்தாமலோ, பழக்கூழை நன்றாக கொதிக்க விடாமலோ ஜாம் தயாரித்தால் அது புளிப்புத் தன்மையாகிவிடும்.
* ஜாம் தயாரிக்கும்போது சரியான அளவில் சர்க்கரை சேர்க்க வேண்டும். சர்க்கரை அளவு குறைவாக இருந்தால் நிறமும், ருசியும் குறைந்து விடும். சர்க்கரை அளவு அதிகரித்து விட்டால் ஜாம் கெட்டியாகிவிடும்.
* அரிசியுடன் மஞ்சள் துண்டு, காய்ந்த வேப்பிலை அல்லது பூண்டு பற்களை கலந்து வைத்தால் அரிசியில் வண்டு வராது.
* கீரை பசுமை மாறாமல் இருக்க காகிதத்தில் சுற்றி வைக்கலாம்.
* பச்சைப் பட்டாணியை வேகவைக்கும்போது அதில் 1 ஸ்பூன் சர்க்கரையை சேர்த்தால் பட்டாணியின் நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்.
- நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உணவுப்பழக்கம் மாறுபடுகிறது.
- இனிப்பு வகைகளை ருசிப்பதற்குத்தான் பலரும் விரும்புவார்கள்.
நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உணவுப்பழக்கம் மாறுபடுகிறது. காரசாரமான உணவுகளை விட நாவிற்கு தித்திப்பூட்டும் இனிப்பு வகைகளை ருசிப்பதற்குத்தான் பலரும் விரும்புவார்கள். தென்னிந்தியாவில் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகள் நாட்டின் மற்ற பகுதியில் வசிப்பவர்களும் சுவைக்க தூண்டும் அளவிற்கு ருசி மிகுந்தவை. அவற்றுள் சில உங்கள் பார்வைக்கு...
கொழுக்கட்டை:
அரிசி மாவு, வெல்லம், தேங்காய் கலந்து நீராவில் வேகவைக்கப்படும் இது அனைத்து தரப்பினரும் விரும்பும் இனிப்பு பலகாரமாக உள்ளது. கொழுக்கட்டையில் பல வகைகள் இருக்கின்றன. இனிப்பு மட்டுமின்றி காரமாகவும் இதனை தயார் செய்து ருசிக்கலாம்.
மைசூர் பாக்:
கர்நாடக மாநிலம் மைசூருவில் தயாராகும் இது அதன் பெயரையும் தாங்கி நிற்கிறது. உளுந்தம் பருப்பு, நெய், சர்க்கரை போன்றவற்றை கொண்டு தயாரிக்கப்படும் இது நாவில் பட்டவுடன் கரைந்துவிடும் தன்மையுடையது. கர்நாடகா மட்டுமின்றி உலகமெங்கும் வாழும் இந்தியர்கள் அறிந்திருக்கும் இனிப்பு வகைகளுள் ஒன்றாக விளங்குகிறது. அரசர் காலத்தில் இருந்தே அதன் தரம், ருசி மாறாமல் இன்றளவும் சுவைக்கப்படுகிறது.
உன்னியப்பம்:
கேரளாவில் பிரபலமான இனிப்பு வகையாக விளங்குகிறது. அரிசி மாவு, வாழைப்பழம், வெல்லம், வறுத்த எள், தேங்காய் துண்டுகள், ஏலக்காய் பொடி போன்றவை கொண்டு தயாரிக்கப்படும் இது ஒவ்வொரு வீடுகளிலும் ருசிக்கப்படும் சிற்றுண்டியாக விளங்குகிறது. மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கு பரிமாறப்படும் இனிப்பு வகையாக கருதப்படுகிறது.
ஒப்பாட்டு:
கர்நாடகாவில் தயாரிக்கப்படும் இது பூரான் போளி என்றும் அழைக்கப்படுகிறது. கடலைப்பருப்பு, வெல்லம், தேங்காய் துருவல் போன்றவற்றின் கலவையில் இது உருவாகிறது. போளி வகையிலேயே மாறுபட்ட சுவை கொண்டது. இதனை இனிப்பு பிரெட் என்றும் அழைப்பார்கள். பெரும்பாலும் திரு விழாக்கள், வீட்டு விசேஷங்கள் உள்ளிட்ட சிறப்பு நிகழ்வுகளின்போது இது பரிமாறப்படுகிறது.
ஜாங்கிரி:
உளுந்தம் பருப்பில் இருந்து தயாரிக்கப்படும் இனிப்பு வகை இது. அதனை நன்றாக வறுத்து பொடித்து சர்க்கரை பாகில் ஊறவைத்து தயாரிக்கப்படுகிறது. மெல்லிய இழைகளாக அச்சுக்களில் வார்க்கப்படும் இது ஆரஞ்சு நிற சாயலில் காட்சி அளிக்கும். தித்திக்கும் இனிப்பு பண்டங்களை விரும்புபவர்கள் ஜாங்கிரியை தவிர்க்கமாட்டார்கள்.
கடலை மிட்டாய்:
தமிழ்நாட்டின் பிரபலமான தின்பண்டமாக விளங்கும் கடலை மிட்டாய், வறுத்த வேர்க் கடலை, வெல்லம் சேர்த்து செய்யப்படுகிறது. மொறுமொறுப்பான, மிதமான இனிப்பு சுவை கொண்டது.
கேசரி:
ரவை, நெய், சர்க்கரை மற்றும் தண்ணீர் கலந்து தயாரிக்கப்படும் இந்த இனிப்பு வகையை குழந்தைகள் உள்பட அனைத்து தரப்பினரும் ருசிப்பார்கள்.
பூதரெகுலு:
ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இது, அரிசி மாவு, நெய் மற்றும் சர்க்கரை கலந்து தயாரிக்கப்படுகிறது. காகித இழை போல் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும். அதில் உலர் பழங்களும் சேர்க்கப்படும். உலர் பழங்கள் சேர்க்கப்படுவதால் இது சத்தான இனிப்பு பொருளாக அறியப்படுகிறது.
- மலாய் சிக்கன் கிரேவியை குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள்.
- இதன் சுவை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
மலாய் சிக்கன் கிரேவியை குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள். இதில் காரம் குறைவாக இருப்பதனாலும் இதனுடன் தயிர் மற்றும் ஃப்ரஷ்கிரீம் சேர்ப்பதினாலும் இதன் சுவை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். சிக்கனை வைத்து குழம்பு, வறுவல், தொக்கு, கடாய் சிக்கன், பெப்பர் சிக்கன், மசாலா சிக்கன் என்று பல வகையான உணவு வகைகளை சமைக்கலாம். வித்தியாசமான சுவையில் இருக்கும் மலாய் சிக்கனை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் – 500 கிராம் (எலும்பு நீக்கியது)
தயிர் – 5 ஸ்பூன்
கறி மசாலாப் பொடி – 2 ஸ்பூன்
பூண்டு பெரியது – 2
இஞ்சித் துண்டு – 1
வெங்காயம் – 4
மிளகுத் தூள் – 2 ஸ்பூன்
சீரக தூள் – 2 ஸ்பூன்
தனியா தூள்– 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
வெண்ணெய் – 2 ஸ்பூன்
பிரெஷ் கிரீம் – 3 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
அரைப்பதற்கு:
தேங்காய்- ஒரு கப்
சோம்பு- ஒரு ஸ்பூன்
முந்திரி- 10
கசகசா- ஒரு ஸ்பூன்
செய்முறை:
முதலில் பூண்டு, இஞ்சி மற்றும் வெங்காயத்தை தனித்தனியாக விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மிதமான தீயில் அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சிறிது வெண்ணெய் சேர்க்கவும், அது உருகியதும் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். லேசாக வதங்கியதும் அதனுடன் வெங்காய விழுதை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் அளவுக்கு வதக்க வேண்டும்.
பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள கோழி இறைச்சியை அதில் சேர்க்க வேண்டும். இறைச்சி சற்று வதங்கியதும் அதனுடன் தேங்காய், முந்திரி, சோம்பு, கசகசா சேர்த்து அரைத்து வைத்த விழுதை சேர்க்க வேண்டும். அதன்பிறகு தயிர், மிளகு தூள், சீரகத்தூள், கறி மசாலாத் தூள், தனியாத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு வாணலியை 10 நிமிடங்கள் மூடி தண்ணீர் சேர்க்காமல் வேக வைக்கவும்.
பின்னர் அதில் பிரெஷ் கிரீம், பச்சை மிளகாய் மற்றும் வெண்ணெய் சேர்த்து 5 நிமிடங்கள் மிதமான தீயில் வேக வைக்கவும். இப்பொழுது வித்தியாசமான சுவையில் மலாய் சிக்கன் ரெடி.
- அஜீரணக்கோளாறுகளை விரட்டியடிக்கும் தன்மை பெருங்காயத்துக்கு உண்டு.
- வாயு பிடிப்பு நீங்க வெதுவெதுப்பான நீரில் பெருங்காயத்தூள் கலந்து குடிக்கலாம்.
பெருங்காய பொடியை கடைகளில் வாங்கி பயன்படுத்தாமல் வீட்டில் தயாரித்து பயன்படுத்துவதன் மூலம் அதன் வாசனை வலுவாக இருப்பதை பார்க்கலாம். பெருங்காயத்தூள் என்று வாங்கும் சில தயாரிப்புகள் கலப்படமாக இருக்கலாம். நறுமணம் குறைந்து இருக்கலாம். வீட்டில் பெருங்காயத்தூள் தயாரித்து பயன்படுத்தும் போது அதன் நறுமணம் நன்றாக இருக்கும்.
கலப்படமில்லாத ஆரோக்கியமான தயாரிப்பை வீட்டிலேயே செய்ய முடியும் என்னும் போது செய்முறையை கற்றுகொள்வது ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பெருங்காய பொடியை வீட்டில் எப்படி தயாரிப்பது என்பதை இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கட்டி பெருங்காயம் - 100 கிராம் ( நாட்டு மருந்துகடை அல்லது மளிகை கடைகளில் கிடைக்கும்)
உப்பு - கால் டீஸ்பூன்
செய்முறை:
பாக்கெட்டில் வாங்க கூடிய இந்த கட்டி பெருங்காயம் சில நேரங்களில் மென்மையாக இருக்கும். சில நேரங்களில் கடினமாக இருக்கும். இதை பிரிப்பது கடினமாக இருக்கும். மென்மையாக இருந்தால் சிறு சிறு பகுதியாக பிரித்து வையுங்கள். கடினமாக இருந்தால் உரலில் இட்டு துண்டுகளாக இடித்துக் கொள்ளுங்கள்.
இரும்பு வாணலில் மிதமான தீயில் இதை வைத்து லேசாக வறுத்து பெருங்காயம் பொரிந்து நிறம் மாறும். லேசான மஞ்சள் நிறமாக, அதன் மேல் வெள்ளை புள்ளிகளாய் (நன்றாக பொரிய வேண்டும்) வரும் போது அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
பெருங்காயத்தை கட்டியாக அப்படியே வாணலியில் சேர்த்தும் சூடு செய்யலாம். பிறகு இறக்கி அதை துண்டுகளாக பிரிக்கலாம். நன்றாக பொரிந்த காயத்துண்டுகளை இப்போது இறக்கி ஆறவையுங்கள். வாணலியில் உப்பு சேர்த்து லேசாக வறுக்கவும்.
பிறகு இந்த பெருங்காயத் துண்டுகளை சேர்த்து அடுப்பை அணைத்து விடுங்கள். அதன்பிறகு மிக்சியில் நைசாக அரைத்து பொடியாக்கி காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்து பயன்படுத்தலாம்.
பெருங்காயத்தின் பயன்கள்:
மசாலாக்கள் நிறைந்த உணவுகள் அனைத்திலும் பெருங்காயம் சிட்டிகை சேர்ப்பது மணத்தை அதிகரிக்க செய்யும். பெருங்காயம் கடவுளின் அமிர்தம் என்று அழைக்கப்படுகிறது. உண்மையில் இவை உணவை அமிர்தமாக்கும் வல்லமை கொண்டவை. ஆரோக்கியம் அளிப்பவை.
அஜீரணக்கோளாறுகளை விரட்டியடிக்கும் தன்மை பெருங்காயத்துக்கு உண்டு. வாயுவை உண்டாக்கும் உணவுகளில் கண்டிப்பாக பெருங்காயம் சேர்க்க வேண்டும். வாயு பிடிப்பு நீங்க வெதுவெதுப்பான நீரில் பெருங்காயத்தூள் கலந்து குடிக்கலாம். உடனே நிவாரணம் கிடைக்கும்.
வாழைப்பழத்தை தோல் உரித்து பழத்தின் மேல் பெருங்காய பொடியை வைத்து பல்லில் படாமல் விழுங்கினால் வாயு கழியும் என்பார்கள் வீட்டு பெரியவர்கள். மோரில் பெருங்காயம் சேர்த்தும் குடிக்கலாம். அன்றாட உணவு முறையில் ஏதாவது ஒரு வகையில் பெருங்காயம் சேர்ப்பது ஆரோக்கியமான செரிமானத்துக்கு உதவும்.
- முட்டையை வைத்து இதுபோல சுக்கா செய்து சாப்பிடலாம்.
- எதையும் மிச்சம் வைக்காமல் விரும்பி சாப்பிடுவாங்க.
ஞாயிற்றுக்கிழமைகளில் பலரின் வீடுகளிலும் சிக்கன் அல்லது மட்டனை கொண்டு சுக்கா செய்வார்கள். ஆனால் வார நாட்களில் சுக்கா சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்தால், முட்டையை வைத்து இதுபோல சுக்கா செய்து சாப்பிடலாம். முட்டையை வைத்து பல விதமான ரெசிபிகளை செய்யலாம். ஆனால் ஒரு சிலருக்கு வேக வைத்த முட்டை பிடிப்பதில்லை. குறிப்பாக முட்டையின் மஞ்சள் கருவை குழந்தைகள் முதல் ஒரு சில பெரியவர்கள் வரை பலரும் ஒதுக்கி விடுகிறார்கள். முட்டையுடன் மசாலாக்களை சேர்த்து சமைத்து கொடுத்துப் பாருங்கள் எதையும் மிச்சம் வைக்காமல் விரும்பி சாப்பிடுவாங்க.
தேவையான பொருட்கள்
கடுகு- கால் டீஸ்பூன்
சோம்பு- கால் டீஸ்பூன்
முட்டை- 5
மிளகாய்தூள்- ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள்- ஒரு ஸ்பூன்
சாம்பார் வெங்காயம்- ஒரு கப் (நறுக்கியது)
இஞ்சிபூண்டு பேஸ்ட்- கால் டீஸ்பூன்
தயிர்- ஒரு ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 5 முட்டைகளை உடைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் மஞ்சள்தூள், மிளகாய்தூள், கரம் மசாலாத்தூள், மல்லித்தூள், மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றை உடைத்து வைத்துள்ள முட்டை கலவையில் சேர்க்க வேண்டும். இதனை நன்றாக அடித்து கலக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
மற்றொரு புறம் ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி அதனுள் ஒரு ஸ்டாண்ட் வைத்து தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்ததும் முட்டை கலவையை ஒரு தட்டில் ஊற்றி அதனுள் வைத்து ஆவியில் 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின்னர் வேகவைத்த முட்டையை எடுத்து சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.
அதன்பிறகு அடுப்பில் இரு வாணலியை வைத்து காய்ந்ததும் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு காய்ந்த மிளகாய் தாளித்து அதில் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். அதில் சிறிதளவு இஞ்சுபூண்டு விழுந்து சேர்க்க வேண்டும். பச்சை வாடை போன பிறகு அதில் மிளகாய்தூள், மஞ்சள் தூள், மிளகு, சீரகம் தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இதில் ஒரு ஸ்பூன் கெட்டி தயிர் சேர்த்து வதக்கி அதில் வெட்டி வைத்துள்ள முட்டைகளை அதில் சேர்த்து கிளறி இறக்கினால், முட்டை சுக்கா தயார்.
- எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் வைத்து சாப்பிடலாம்.
- பெரியோர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
இந்த உருளைக்கிழங்கு முறுக்கு குழந்தைகள் மட்டுமின்றி, பெரியோர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இந்த முறுக்கை செய்து, ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால், எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் வைத்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு- 2 கப்
உளுந்து 2 கப்
வெண்ணெய் 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உருளைக்கிழங்கு- 2
உப்பு தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் தேவையான அளவு
செய்முறை:
ஒரு டீஸ்பூன் மிளகை உரலில் போட்டு பாதியாக உடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். உளுந்தை மிதமான தீயில் சிவக்க வறுக்கவும், அது ஆறிய பின்னர் உலர்ந்த மாவாக அரைத்துக்கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கை வேக வைத்து உரித்துக்கொள்ள வேண்டும்,
பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசி மாவு, உளுந்து மாவு, வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, சீரகம், மிளகு, உப்பு, உருக்கிய வெண்ணெய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்துக்கொள்ள வேண்டும்.
அதன்பிறகு அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் முறுக்கு அச்சின் உட்புறம் நெய் அல்லது எண்ணெய் தடவி பிசைந்து வைத்திருக்கும் மாவை அதில் போட்டு, முறுக்காக பிழிந்து எண்ணெய்யில் போட்டு சிவக்கும் அளவிற்கு பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான "உருளைக் கிழங்கு முறுக்கு' தயார்.
- அருமையான தேநீர் நேர சிற்றுண்டி.
- இந்த முறுக்கு செய்ய சில துண்டுகள் போதும்.
அருமையான தேநீர் நேர சிற்றுண்டி. இந்த முறுக்கு செய்ய சில துண்டுகள் போதும், எனவே நீங்கள் மரவள்ளிக்கிழங்கு சமைக்கும் போது, சிறிது சேமித்து இந்த முறுக்கை முயற்சிக்கவும். மரவள்ளிக்கிழங்கை, கப்பா, குச்சி கிழங்கு என்றும் அழைக்கப்படுகிறது.
தேவையான பொருட்கள்:
மரவள்ளிக்கிழங்கு - 1/2 கிலோ
பச்சரிசி மாவு - 1/4 கிலோ
இஞ்சி - 1 அங்குல துண்டு
பச்சை மிளகாய் - 10
ஓமம் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
வெண்ணெய் - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
இஞ்சி, பச்சை மிளகாய், ஓமம் இம்மூன்றையும் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும். மரவள்ளிக்கிழங்கை வேகவைத்து மேல் தோலை நீக்கிவிட்டு துருவிக்கொள்ள வேண்டும். ஒரு அகலமான பாத்திரத்தில் மரவள்ளிக்கிழங்கு, அரிசி மாவு, அரைத்த விழுது உப்பு, வெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசைய வேண்டும்.
அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய்யை ஊற்றி சூடுபடுத்த வேண்டும். அதன்பிறகு முறுக்கு அச்சில் எண்ணெய் பூசி அதில் மாவைப்போட்டு முறுக்குகளாகப் பிழிந்து சிவக்கும் அளவுக்கு பொரித்து எடுக்க வேண்டும். இப்போது மொறுமொறுப்பான மரவள்ளிக்கிழங்கு முறுக்கு தயார்.
குறிப்பு: கிழங்குகளை பயன்படுத்தி முறுக்கு தயாரிக்கும்போது. மாவு பிசைவதற்கு வெந்நீர் பயன்படுத்தலாம். இதனால் மாவு மென்மையாக இருப்பதுடன், எளிதில் பிசையவும் முடியும்.
- காரமாக பிரியாணி சாப்பிட விரும்புபவர்களுக்கு திண்டுக்கல் பிரியாணி.
- கேரளாவின் மலபார் பகுதியில் பிரபலமானது மலபார்பிரியாணி.
தென்னிந்தியாவில் மாறுபட்ட, சுவையான பல உணவு வகைகள் பரிமாறப்படுகின்றன. அவற்றுள் பலரும் விரும்பி சாப்பிடும் பிரியாணி வகைகள் அந்தந்த பிராந்தியத்திற்கு ஏற்ப மாறுபட்ட சுவையுடன் தயாரிக்கப்படுகின்றன. அப்படி தென்னிந்தியாவில் பிரபலமாக ருசிக்கப்படும் பிரியாணி வகைகள் உங்கள் பார்வைக்கு....
திண்டுக்கல் பிரியாணி:
காரமாக பிரியாணி சாப்பிட விரும்புபவர்களுக்கு திண்டுக்கல் பிரியாணி கூடுதல் சுவை சேர்க்கும். ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி துண்டுகளில் தயாரிக்கப்படுகிறது. சீரக சம்பா அரிசிதான் இந்த பிரியாணியை தனித்துவமாக்குகிறது. அதில் சேர்க்கப்படும் மசாலா பொருட்களும் பிரியாணியை ருசிக்க தூண்டும்.
மலபார் பிரியாணி:
இந்த பிரியாணி கேரளாவின் மலபார் பகுதியில் பிரபலமானது. இது பெரும்பாலும் சீரகச்சம்பா அரிசி என்று அழைக்கப்படும் மணம் வீசும் தானிய வகையை சேர்ந்த அரிசியில் தயாரிக்கப்படுகிறது. பிரியாணி மசாலா பொருட்களுடன் தேங்காயும் சேர்க்கப்படுவது இதன் சுவையை மெருகூட்டுகிறது.
செட்டிநாடு பிரியாணி:
தமிழ்நாட்டின் செட்டிநாடு பகுதியில் தயாரிக்கப்படும் இந்த பிரியாணி நாவில் உமிழ்நீர் சுரக்க வைக்கும் அளவுக்கு ருசி மிகுந்தது. கோழி, ஆட்டு இறைச்சியுடன் மிளகு மற்றும் மசாலாப் பொருட்கள் சேர்க்கப்படுகிறது. மிளகுதான் இந்த பிரியாணிக்கு தனித்துவ அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது.
ஐதராபாத் பிரியாணி:
தென்னிந்தியர்கள் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்களை கவரும் இந்திய பிரியாணி வகைகளுள் ஒன்றாக ஐதராபாத் பிரியாணி அறியப்படுகிறது. இந்த பிரியாணி பாசுமதி அரிசியுடன் மென்மையான தன்மை கொண்டகோழி அல்லது ஆட்டிறைச்சி கொண்டு தயாரிக்கப்படுகிறது. மேலும் இதில் சேர்க்கப்படும் மசாலாப் பொருட்கள் நறுமணம் வீசி பிரியாணி பிரியர்களை சுண்டி இழுக்க வைக்கின்றன.
ஆம்பூர் பிரியாணி:
தமிழகத்தின் ஆம்பூரை பூர்வீகமாக கொண்ட இந்த பிரியாணி மிருதுவானது. சுவையிலும் தனித்துவமானது. நறுமண சுவை ஊட்டு வதற்காக சமைப்பதற்கு முன்பு இறைச்சி முதலியவற்றை நீண்ட நேரம் எண்ணெய், நறுமணப் பொருள்களின் கலவையில் ஊற வைக்கப்படுகிறது. 'தம்' முறையிலும் சமைத்து பரிமாறப்படுகிறது.
பட்கலி பிரியாணி:
இந்த பிரியாணி கர்நாடகாவின் கடலோர நகரமான பட்கலில் தயாரிக்கப்படுகிறது. பாஸ்மதி அரிசியுடன் நறுமணப் பொருட்கள் மற்றும் இறால், மீன் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுவது இதன் சிறப்பம்சம். மாறுபட்ட பிரியாணி சுவையை விரும்புபவர்களை பட்கலி பிரியாணி கவர்ந்திழுக்கும்.
தலச்சேரி பிரியாணி:
கேரளாவில் உள்ள தலச்சேரி என்ற நகரம், பிரியாணி தயாரிப்பிற்கு பெயர் பெற்றது. பாரம்பரிய பாஸ்மதி அரிசி அல்லாமல் சிறிய மற்றும் தடிமனாக கைமா அரிசி என்று அழைக்கப்படும் சிறப்பு வகை அரிசியில் சமைக்கப்படுகிறது. இது பிரியாணிக்கு தனித்துவ சுவையை ஏற்படுத்திக்கொடுக்கிறது.
- அத்தி, கிஸ்மிஸ் போன்றவற்றை பிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
- கடலை மாவுடன் பாதி அளவு பார்லி மாவு சேர்த்தால் பக்கோடா ருசிக்கும்.
சமையல் என்பது முழு மனத்துடன் ஈடுபாடு காட்டி செய்ய வேண்டிய ஒரு அருமையான கலை. இதில், பல்வேறு நுணுக்கங்கள் அடங்கியுள்ளன. சமையல் செய்வதை விட பயன்படுத்தப்படும் பொருட்கள் கெட்டுபோகாமல் பாதுகாப்பதும் நமது கடமைதான். இல்லத்தரசிகளுக்கு உதவியாக இருக்க சில சமையல் டிப்ஸ் உங்களுக்காக...
* முருங்கை பிஞ்சுகளை சிறு துண்டுகளாக நறுக்கி ரசத்தில் போட்டு கொதிக்க வைத்தால் ரசம் ருசியாக இருக்கும்.
* வாழை, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை துண்டுகளாக வெட்டி எலுமிச்சை சாறு கலந்து வைத்தால் நிறம் மாறாமல் இருக்கும்.
* அத்தி, கிஸ்மிஸ் போன்றவற்றை பிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
* அக்ரூட்டை முழுதாக சிறிது நேரம் வெந்நீரில் ஊற வைத்தால், எளிதாக உடைக்கலாம்.
* மோரில் பச்சை மிளகாய்க்கு பதில் சிறிது சுக்கை பொடித்து சேர்த்தால் சுவையாக இருக்கும்.
* கடலை மாவுடன் பாதி அளவு பார்லி மாவு சேர்த்தால் பக்கோடா ருசிக்கும்.
* தானியங்களை (பயறு வகைகள்) எட்டு மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து 'ஹாட் பேக்'கில் போட்டு மூடி வைத்தால் மறுநாள் முளைகட்டிய தானியம் தயார்.
* வடு மாங்காய் போட்டு சாறு மீந்து விட்டால் அதில் கொத்தவரங்காய், பாகற்காய் போன்றவற்றை ஊறப்போட்டு காய வைத்து வத்தலாக எண்ணெய்யில் பொரித்து உபயோகிக்கலாம்.
* கபாப் செய்யும்போது இரண்டு பிரெட் துண்டுகளை நனைத்து பிசைந்து போட்டால் கபாப் உடையாமல் இருக்கும். சாம்பார், கூட்டு நீர்த்துப் போனால் அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, இரண்டு புது பிரெட் துண்டுகளை போட்டு பத்து நிமிடம் ஊற வைத்து மசித்து விட வேண்டும். சாம்பார், கூட்டு கெட்டியாகி சுவையூட்டும்.
* கோதுமை மாவில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கருவேப்பிலை சேர்த்து பக்கோடா செய்தால் ருசியாக இருக்கும்.
* எந்த வகை சூப்பாக இருந்தாலும் அதனுடன் இட்லியை உதிர்த்து எண்ணெய்யில் பொரித்துப் போட்டால் சுவையாக இருக்கும்.
* பொரிப்பதற்கு வைத்திருக்கும் எண்ணெய்யில் தண்ணீர் கலந்திருந்தால், ஒரு துண்டு வாழை இலையை போட்டு வைக்கலாம். எண்ணெய் வெடிப்பது குறையும்.
- பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கட்டி மற்றும் மார்பக கட்டியை கரைகிறது.
- சாமை அரிசி மலச்சிக்கலை போக்க வல்லது.
சாமை அரிசியில் இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் அதிகமாக உள்ளது, இது சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் கொண்டுவர முக்கிய பங்குவகிக்கிறது. சாமை அரிசி மலச்சிக்கலை போக்க வல்லது. சாமை அரிசி நமது உடல் வெப்பத்தை சமநிலைபடுத்துகிறது. பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கட்டி மற்றும் மார்பக கட்டியை கரைகிறது. மேலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் கொழுப்பு கட்டிகளையும் கரைக்கும் தன்மை சாமை அரிசிக்கு உள்ளது. இவ்வளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சாமை அரிசியை பயன்படுத்தி சாமை டிலைட் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சாமை - 200 கிராம்
பால் - அரை கப்
கடைந்த தயிர் - ஒரு கப்
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு.
கடுகு மற்றும் பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
எண்ணெய் - 2 டீஸ்பூன்.
துருவிய மாங்காய், கேரட் மற்றும் வெள்ளரி - ஒரு டேபிள் ஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் சாமை அரிசிடன் உப்பு, பெருங்காயத்தூள், பால் சேர்த்து வேக வைக்கவேண்டும். அதன்பிறகு வேகவைத்த சாமையை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஆறியதும் அதில் தயிர், வெண்ணெய் சேர்க்க வேண்டும். பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்தமிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அதனுடன் துருவிய மாங்காய், கேரட், வெள்ளரி மற்றும் கொத்தமல்லித்தழை தூவி எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து பரிமாறவும். சுவையான சாமை டிலைட் தயார்.
- இரவில் தயிர் சாப்பிடக் கூடாது.
- குளிர்ச்சியான தயிரை இரவில் சாப்பிட்டால் மூச்சிரைப்பு ஏற்படும்.
* சூடான சாதத்தில் தயிர் கலந்து கடுகு தாளித்து உப்பு கலந்து சாப்பிடுவது நல்லதல்ல.
* உடலை பலப்படுத்த விரும்புவோர் வேக வைத்த பச்சைப்பயிறு, நெல்லிக்காய் துவையலுடன் தயிர் சாப்பிடலாம்.
* உறை ஊற்றிய பின் தயிர் உறையாமல் இருந்தால் சாப்பிடக் கூடாது. இந்த தயிர் வயிற்றில் வேகமாக புளிக்கத் தொடங்கி பசியை குறைக்கும்.
* நன்கு புளித்த தயிர் ரத்தக் கொதிப்பு, பித்த வாயு, வயிறு கோளாறு உள்ளவர்களுக்கு ஏற்றதல்ல.
* இரவில் தயிர் சாப்பிடக் கூடாது. குளிர்ச்சியான தயிரை இரவில் சாப்பிட்டால் மூச்சிரைப்பு ஏற்படும்.
* இரவில் தொடர்ந்து தயிர் சாப்பிட்டால் ரத்த சோகை, ரத்தக் கொதிப்பு, காமாலை, தோல் நோய் ஏற்படும்.
* மண்சட்டியில் உள்ள தயிர் உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்தது. புதிதாக வாங்கிய மண் சட்டியில் பலமுறை தண்ணீர் ஊற்றி ஊற வைத்த பிறகே தயிரை ஊற்றி வைக்க வேண்டும்.
* தயிரை உப்பு மிளகிட்டு சாப்பிடலாம். சர்க்கரை, தேன், எசன்ஸ் வகைகளில் ஏதேனும் ஒன்றை கலந்தும் சாப்பிடலாம்.
* தயிரை உபயோகித்து தலை முடியை சீர்செய்யலாம். முடி மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
* கடலைமாவுடன் தயிரை குழைத்து பூசிவர பருக்கள் மறையும். முகம் பொலிவடையும்.






