search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    கிரீன் டீ ஐஸ்கிரீம்
    X

    கிரீன் டீ ஐஸ்கிரீம்

    • குழந்தைகள் இந்த காக்டெய்ல் சுவைகளை விரும்புவார்கள்.
    • கிரீன் டீ ஐஸ்கிரீம் என்பது வழக்கத்திற்கு மாறானது.

    சூடான கோடை நாட்களுக்கு இது ஒரு சிறந்த செய்முறையாகும், மேலும் குழந்தைகள் இந்த காக்டெய்ல் சுவைகளை விரும்புவார்கள். கிரீன் டீ ஐஸ்கிரீம் என்பது வழக்கத்திற்கு மாறானது. ஆனால் மிகவும் விரும்பத்தக்க சுவைகளில் ஒன்றாகும், இது ஐஸ்கிரீமுக்கு ஒரு அழகான மாற்று சுவையை உருவாக்குகிறது, அதே பழைய சலிப்பூட்டும் சுவையான வெண்ணிலா, சாக்லேட் மற்றும் ஸ்ட்ராபெரி ஆகியவற்றை நீக்குகிறது. க்ரீன் டீ ஐஸ்கிரீம் தயாரிப்பது எளிதானது மற்றும் கிரீன் டீ நறுமணமும் நன்மையும் கொண்டது.

    தேவையான பொருட்கள்:

    பால் (கொழுப்பு நீக்காதது) - 400 மி.லி.

    பிரஷ் கிரீம் 300 மி.லி.

    முட்டை - 6

    கஸ்டர்டு சுகர்- 1/2 கப்

    கிரீன் டீ தூள் - 20 கிராம்

    செய்முறை:

    அடிகனமான அகன்ற பாத்திரத்தில் பாலையும், பிரஷ் கிரீமையும் ஊற்றி மிதமான தீயில் கலக்க வேண்டும். அது லேசாக சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் கஸ்டர்டு சுகருடன். முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து கலக்க வேண்டும். பின்னர் அதனுடன் கிரின் டீ தூளை சேர்த்து கலக்க வேண்டும்.

    அதன் பின்னர் இதில் கொஞ்சம் கொஞ்சமாக காய்ச்சி எடுத்து வைத்துள்ள பாலை ஊற்றி நன்றாக அடித்துக் கலக்க வேண்டும். இந்த கலவையை வடிகட்டிக்கொள்ளுங்கள். இதை அடிகனமான வாய் அகன்ற பாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயில் கிளறுங்கள்.

    கலவை கெட்டியாகத் தொடங்கியதும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற வையுங்கள். பின்பு அதை ஒரு பவுலில் ஊற்றி குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து வெளியே எடுத்து மிக்சி ஜாரில் போட்டு அடித்துக்கொள்ள வேண்டும். பிறகு அதை மீண்டும் பவுலில் ஊற்றி குளிர்சாதனப் பெட்டியின் ஃபிரீசர் அறையில் வைக்க வேண்டும். 2 மணி நேரம் கழித்து வெளியே எடுத்துப் பரிமாறுங்கள். சுவையான கிரீன் டீ ஐஸ்கிரீம் தயார்.

    Next Story
    ×