என் மலர்tooltip icon

    சமையல்

    • நிச்சயமாக அவர்கள் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.
    • கீரைகளை குழந்தைகள் நிச்சயமாக விரும்பி சாப்பிட மாட்டார்கள்.

    கீரையை பொரியல் செய்து கொடுத்தாலோ கடைந்து கொடுத்தாலோ குழந்தைகள் நிச்சயமாக விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால், இப்படி மொறு மொறுன்னு ஸ்நாக்ஸ் ஆக பக்கோடா செய்து கொடுத்துப் பாருங்கள். நிச்சயமாக அவர்கள் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். ஆரோக்கியம் நிறைந்த பொருட்களை இப்படித்தான் சுவையான ஸ்னாக்ஸ் ஆக மாற்றி கொடுக்க வேண்டும். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

    தேவையான பொருட்கள்:

    கடலை மாவு- ஒரு கப்

    அரிசி மாவு- அரை கப்

    வெங்காயம்- 3 (நறுக்கியது)

    முருங்கைக்கீரை- ஒரு கப்

    எண்ணெய்-

    உப்பு- தேவையான அளவு

    சோம்பு- 1/2 ஸ்பூன்

    மிளகாய் தூள்- ஒரு ஸ்பூன்

    பெருங்காயம்- 1/4 ஸ்பூன்

    பச்சை மிளகாய்- 2 (நறுக்கியது)

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் முருங்கைக்கீரையை நன்றாக கழுவிவிட்டு அதனை பொடியாக வெட்டி சேர்க்க வேண்டும். அதில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்தூள், சோம்பு, பச்சைமிளகாய் மற்றும் அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், உப்பு, தண்ணீர் சேர்த்து உதிரி உதிரியாக நன்றாக பிசைந்துகொள்ள வேண்டும்.

    அதன்பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து பொறித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய வைத்து அதில் சிறிது சிறிதாக போட்டு சிவக்க பொறித்து எடுக்க வேண்டும். சுவையான முருங்கைக்கீரை பக்கோடா தயார். ஈவ்னிங் காபி, டீயுடன் சூடாக பரிமாறலாம்.

    • சிறிதளவு சின்ன வெங்காயத்தை எண்ணெய்யில் வதக்கி குழம்பில் சேர்க்கலாம்.
    • சவ்சவ் காயில் இருக்கும் நீர்ச்சத்து காரம் மற்றும் உப்பை சமநிலைப்படுத்தும்.

    காரக்குழம்பு தயாரிக்கும்போது காரம் அல்லது உப்பு சுவை அதிகமாகிவிட்டால், சிறிதளவு சின்ன வெங்காயத்தை எண்ணெய்யில் வதக்கி குழம்பில் சேர்க்கலாம். தயிர் அல்லது தேங்காய்ப் பாலை குழம்பில் கலந்து சிறிது நேரம் கொதிக்க வைத்தாலும் காரம் கட்டுப்படும்.

    உருளைக்கிழங்கு அல்லது சவ்சவ் காயை பெரிய துண்டுகளாக வெட்டி குழம்பில் போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். உருளைக்கிழங்கு குழம்பில் உள்ள காரத்தையும், உப்பையும் உறிஞ்சிக்கொள்ளும். சவ்சவ் காயில் இருக்கும் நீர்ச்சத்து குழம்புடன் கலந்து காரம் மற்றும் உப்பை சமநிலைப்படுத்தும்.

    சாதம் வடிக்கும்போது உப்பு கூடினால், எலுமிச்சம் பழச்சாறு அல்லது ஆப்பிள் சிடர் வினிகரை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக கலக்கவும்.

    பிரியாணியில் உப்பு அல்லது காரம் கூடினால், வெங்காயத்தை பொடிதாக நறுக்கி எண்ணெய்யில் வறுத்து சேர்க்கவும். இது பிரியாணியில் உள்ள உப்பை கட்டுப்படுத்தும். காரத்தைக் குறைக்க உலர்ந்த திராட்சையை நெய்யில் வதக்கி சேர்க்கவும். வெல்லப்பாகு, நாட்டுச்சர்க்கரை, எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை சேர்த்து கலந்தாலும் பிரியாணியில் காரத்தை கட்டுப்படுத்த முடியும்.

    ரசத்தில் பளிப்பு கூடினால், ஒரு கடாயில் சீரகம், பூண்டு, வெங்காயத்தைப் போட்டு தாளித்து அதனுடன் பருப்பு வேகவைத்த தண்ணீர் சேர்க்கவும். இதை தயார் செய்து வைத்திருக்கும் ரசத்தில் ஊற்றி கலக்கவும், இப்போது ரசத்தில் உள்ள புளிப்புச் சுவை குறையும்.

    சட்னியில் காரம் அதிகமாக இருந்தால் கேரட், தக்காளி, பீட்ரூட் அல்லது சவ்சவ் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு காயை நன்றாக அரைத்து. எண்ணெய்யில் வதக்கி சேர்க்கவும். தேங்காய் சட்னியில் காரம் அல்லது உப்பு அதிகமானால், பொட்டுக்கடலை மாவை சிறிதளவு சேர்த்துக் கலக்கவும்.

    ஜூஸ் தயாரிக்கும்போது ஐஸ்கட்டியின் அளவு கூடினால், சுவை குறையும். அத்தகைய சமயத்தில் அதில் சிறிதளவு சிட்ரஸ் பழச்சாறு, சப்ஜா விதைகள், வெள்ளரி விதை அல்லது இளநீர் ஆகியவற்றை சேர்க்கலாம்.

    அசைவ சமையலில், இறைச்சி அதிகமாக வெந்து விட்டால், ஆலிவ் எண்ணெய், இனிப்பு மற்றும் காரம் கலந்த சாஸ் சேர்த்து நன்றாக கிளறி பரிமாறலாம். உணவை எப்போதும் மிதமான சூட்டில் வைத்திருந்தால் இறைச்சி மென்மையாகவே இருக்கும். அசைவ உணவுகளை சமைத்த உடனே ஹாட் பேக்கில் போட்டு வைக்கலாம். இறைச்சியை மீண்டும் மீண்டும் சூடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது.

    ஊத்தப்பம் தயாரிக்கும்போது சுற்றிலும் எண்ணெய் ஊற்றியதும் உடனே ஒரு முடிபோட்டு மூடவும், சில வினாடிகளுக்குப் பின்னர் முடியை எடுத்து பார்த்தால் இரண்டு புறமும் சீராக வெந்திருப்பதோடு. ஊத்தப்பம் மிருதுவாகவும் இருக்கும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மனிதன் உயிர் வாழ அடிப்படை தேவைகளில் ஒன்று உணவு.
    • உணவு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே உலக நாடுகளின் விருப்பமாகும்.

    "தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்று பாராதியார் உணவின் முக்கியத்துவத்தை பற்றி கூறியுள்ளார். மனிதன் உயிர் வாழ அடிப்படை தேவைகளில் ஒன்று உணவு. இந்த உணவு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே உலக நாடுகளின் விருப்பமாகும்.

    உணவின் பாதுகாப்பையும், பசி, பட்டினியை போக்கவும் 1945-ம் ஆண்டு அக்டோபர் 16-ந்தேதி ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த நாளை நினைவு கூரும் விதமாக 1981-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16-ந் தேதியை உலக உணவு நாளாக கொண்டாடப்படுகிறது.

    உணவு உற்பத்திக்கு முக்கியமான விவசாயிகள், உணவு பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் தொழிலாளர்கள் என இதில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாகவும் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

    • வீட்டில் உள்ள அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
    • வெல்லம் சேர்த்து அதிகமானோர் குழி பணியாரம் செய்வார்கள்.

    குளிர்காலம், மழைக்காலம் போன்ற காலங்களில் மாலை நேரங்களில் காபி, டீயுடன் சூடாக ஒரு ஸ்னாக்ஸ் செய்து கொடுத்தால் வீட்டில் உள்ள அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் இன்று நாம் சூப்பரான ஒரு மாலைநேர சிற்றுண்டி ரெசிபியை தான் காண உள்ளோம். வெல்லம் சேர்த்து அதிகமானோர் குழி பணியாரம் செய்வார்கள். ஆனால் இன்று நாம் காரசாரமான குழி பணியாரத்தை எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்

    தேவையான பொருட்கள்:

    இட்லி மாவு - 1 கப்

    வெங்காயம்- 1 (பொடிதாக நறுக்கியது)

    கேரட்- 1 (துருவியது)

    கொத்தமல்லித்தழை- 1 (பொடிதாக நறுக்கியது)

    பச்சை மிளகாய்- 1 டீஸ்பூன் (பொடிதாக நறுக்கியது)

    கறிவேப்பிலை- 1 டீஸ்பூன் (பொடிதாக நறுக்கியது)

    கடலைப்பருப்பு- 1 டீஸ்பூன்

    உளுந்து - 1 டீஸ்பூன்

    உப்பு- தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    கடுகு- 1 டீஸ்பூன்

    சீரகம் - 1 டீஸ்பூன்

    பெருங்காயப்பொடி- 1 டீஸ்பூன்

    மஞ்சள்தூள்- டீஸ்பூன்

    செய்முறை:

    அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். பின்னர் அதில் கடுகு, உளுந்தப்பருப்பு, சீரகம், கடலைப்பருப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு தாளிக்க வேண்டும். அதன்பிறகு அதில் கறிவேப்பிலை, நறுக்கிய பச்சைமிளகாய், வெங்காயம் போன்றவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு வதக்க வேண்டும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் கேரட் துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை சேர்த்து கிளற வேண்டும். பின்னர் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கிளறி இறக்க வேண்டும். இந்த கலவை ஆறியதும் இட்லி மாவுடன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

    அடுப்பில் குழிப்பணியாரக் கல்லை வைத்து சூடானதும். அதன் ஒவ்வொரு குழியிலும் ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்ற வேண்டும். ஒவ்வொரு குழியிலும் முக்கால் அளவுக்கு மாவை ஊற்றி. இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேகவைத்து திருப்பி போட்டு எடுக்க வேண்டும். இப்போது சுவையான "மசாலா குழிப்பணியாரம் தயார். இதை காரசட்னி, புதினா சட்னியுடன் சேர்த்து சுவைக்கலாம்.

    • பாரம்பரிய உணவாக இடம் பிடிப்பது சர்க்கரைப் பொங்கல்.
    • சர்க்கரைப் பொங்கலில் சத்துக்களும் நிறைந்துள்ளன.

    தென்னிந்த பண்டிகைகளில் பாரம்பரிய உணவாக இடம் பிடிப்பது சர்க்கரைப் பொங்கல். இது பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம். நெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படுகிறது. சுவையைப் போலவே சர்க்கரைப் பொங்கலில் சத்துக்களும் நிறைந்துள்ளன.

    சர்க்கரைப் பொங்கலில் இருக்கும் சத்துக்கள், தசைகளுக்கு ஆற்றலை அளித்து அவற்றை வலிமைப்படுத்தும். ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும். வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். சர்க்கரை பொங்கலில் சேர்க்கப்படும் உணவுப்பொருட்களில் இருக்கும் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி ஆக்சிடன்டுகள், ஆரோக்கியமான கொழுப்பு ஆகியவை உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

    குளூட்டன் இல்லாத பச்சரிசி, ஒவ்வாமை ஏற்படுத்தாத உணவுப்பொருளாகும். இதில் இருக்கும் ரசாயன மூலக்கூறுகள் சிறு மூளையின் இயக்கத்தை தூண்டக்கூடியவை. அரிசியில் இருக்கும் கார்போஹைட்ரேட் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும்.

    பச்சரிசியில் கால்சியம், மெக்னீசியம். பாஸ்பரஸ், பொட்டாசியம். இரும்புச்சத்து, செலினியம், வைட்டமின் ஏ. பி ஆகிய சத்துக்கள் உள்ளன. பாசிப்பருப்பில், புரதச்சத்து அதிக அளவில் உள்ளது, இது உடலை குளிர்ச்சிப்படுத்தும், இதில் இருக்கும் பொட்டாசியம், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மேலும் மெக்னீசியம், இரும்பு மற்றும் தாமிரம் போன்ற சத்துக்களும் பாசிப்பருப்பில் உள்ளது. இவை அனைத்தும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்.

    இனிப்பு சுவைக்காக சேர்க்கப்படும் வெல்லத்தில் வைட்மின்களும், தாதுக்களும் நிறைந்துள்ளன. அவை சருமம் உள்பட உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஊட்டமளிக்கும். வெல்லம் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கும். உடல் எடையைக் குறைக்க உதவும். இதில் இருக்கும் இரும்புச்சத்து பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகையை போக்கும்.

    சர்க்கரைப் பொங்கலில் சேர்க்கப்படும் நெய்யில் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு உள்ளது. வைட்டமின் ஏ. ஈ போன்ற சத்துக்களும் அடங்கி உள்ளன. இவை அனைத்தும் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும் உறுதுணையாக இருக்கும். முந்திரி, திராட்சை போன்றவற்றில் இருக்கும் சத்துக்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடியவை.

    பண்டிகை தினத்தில் விரதத்தை முடித்தவர்கள் சர்க்கரை பொங்கலை சாப்பிடும்போது அவர்களுக்கு உடனடியாக ஆற்றல் கிடைக்கும். சர்க்கரைப் பொங்கலில் வாசத்திற்காக சேர்க்கப்படும் ஏலக்காயில் புரதம், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற முக்கிய சத்துக்கள் நிறைந்துள்ளன.

    அதனால் தான் ஒவ்வொரு விசேஷத் திலும் சர்க்கரைப் பொங்கல் பிரதான உணவாக இருக்கிறது. கோவில்களில் நெய்வேத்தியம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.

    • மாவை 8 மணி நேரத்துக்கு புளிக்க வைக்க வேண்டும்.
    • டம்ளர்களின் உள்பகுதி முழுவதும் நெய் அல்லது நல்லெண்ணெய் தடவ வேண்டும்.

    தேவையான பொருட்கள்:

    இட்லி அரிசி - 4 டம்ளர்

    உளுந்து - 1 டம்ளர்

    வெந்தயம்-1 டீஸ்பூன்

    அவல்-1/2 டம்ளர்

    ஐஸ்கிரீம் குச்சிகள் - தேவையான அளவு

    செய்முறை:

    இட்லி அரிசியையும், அவலையும் நன்றாக சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் ஒன்றாக கொட்டி, தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் சுத்தம் செய்த உளுந்து மற்றும் வெந்தயத்தை போட்டு தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

    பின்னர் அரிசி மற்றும் அவலை முதலில் இட்லி மாவு பதத்துக்கு அரைத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு உளுந்தையும், வெந்தயத்தையும் அரைக்க வேண்டும். இப்போது இரண்டு மாவையும் நன்றாகக் கலந்து ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றி வைக்க வேண்டும்.

    இந்த கலவையை 8 மணி நேரத்துக்கு புளிக்க வைக்க வேண்டும். பின்னர் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். சிறு சிறு டம்ளர்களின் உள்பகுதி முழுவதும் நெய் அல்லது நல்லெண்ணெய் தடவ வேண்டும். இட்லி மாவை டம்ளரின் முக்கால் அளவிற்கு மட்டும் ஊற்றி, நடுவில் ஐஸ்கிரீம் குச்சிகளை சொருக வேண்டும். இவற்றை இட்லி வேகவைப்பது போல நீராவியில் வேகவைத்து எடுக்க வேண்டும். இது ஆறிய பிறகு டம்ளரில் இருந்து மெதுவாக வெளியே எடுக்கவும். இப்போது 'குல்பி இட்லி` தயார். சட்னி, குருமா அல்லது சாம்பார் ஆகியவற்றை சிறு சிறு கிண்ணங்களில் ஊற்றி அழகான

    தட்டில் வைத்து சூடாக பரிமாறவும். இதேபோம்று மசாலா குல்பி இட்லி, காஞ்சீபுரம் குல்பி இட்லியும் விதவிதமாக தயார் செய்யலாம். நீங்களும் செய்து அசத்துங்கள்.

    • வெங்காயம் கெடாமல் இருக்க வெயிலில் உலர்த்தி இருக்க வேண்டும்.
    • புளியை போட்டு வைத்தால் கடலை எண்ணெய் கெட்டுப்போகாமல் இருக்கும்.

    1. சப்பாத்திக்கு மாவு பிசையும் போது தண்ணீருக்குப் பதிலாக பாலை பயன்படுத்தினால், சப்பாத்தி மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.

    2. சில நேரம் பருப்புகள் வேகாமல் இருக்கும். அப்போது சிறிது நெய்யை சேர்த்து பாருங்கள். எந்த வேகாத பருப்பும் நன்கு வெந்து விடும்.

    3. குழம்பிலோ, சட்னியிலோ உப்பு அதிகமாகி விட்டால், உருளைக்கிழங்கை பாதியாக வெட்டி அதில் போட்டால் போதும். அதிக உப்பு உடனே உறிஞ்சப்பட்டு விடும்.

    4. அடை, இடியாப்பம், இட்லி, வடை, பஜ்ஜி, போண்டா ஆகியவற்றின் மாவில் கற்பூரவல்லி இலைகளை சிறிதளவு போட்டு அரைத்து சேர்த்தால் வாசனையாக இருக்கும். சாப்பிட்ட உடனே ஜீரணமாகிவிடும்.

    5. ஒரே பாத்திரத்தில் கேக், பிஸ்கட்டுகளை போட்டு மூடி வைத்தால் பிஸ்கட்டுகள் நமத்து போய்விடும். அவற்றை தனித்தனியாகத்தான் வைக்க வேண்டும்.

    6. வடை, போண்டா, பஜ்ஜி செய்யும் போது, மாவை பிரிட்ஜில் சிறிது நேரம் வைத்திருந்து விட்டு பிறகு செய்தால் அவற்றை சுடுவது மிக எளிதாக இருக்கும்.

    7. கடலை எண்ணெய் கெட்டுப்போகாமல் இருக்க சிறிதளவு புளியை அதில் போட்டு வைத்தால் போதும். நீண்ட நாட்கள் எண்ணெய் கெடாமல் இருக்கும்.

    8. உருளைக் கிழங்கு தோலிலும் சத்து உள்ளது. எனவே சமைக்கும் போது வீணாக தோலை நீக்காமல் அப்படியே சமைத்து சாப்பிடுவது உடம்புக்கு நல்லது.

    9. சேனைக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்றவை அரிக்கும் தன்மை கொண்டவை. அவற்றை வாங்கியதும் உடனே சமைக்காமல் ஒரு வாரம் வைத்திருந்து அதன்பின் சமைத்து சாப்பிட்டால் அரிப்பு தெரியாது.

    10. முட்டைகள் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கணுமா? ரொம்ப சிம்பிள். முட்டைகளின் மீது சமையல் எண்ணெய்யை தடவி வைத்தால் போதும்.

    11. பருப்புகளை மழை நீரில் வேக வைத்தால் சூப்பர் பாஸ்ட்டாக ஒரே கொதியில் வெந்து விடும். ருசிக்கும் குறை இருக்காது!

    12. ஒரு மாதம் வரை வெங்காயம் கெடாமல் இருக்க, அதை வாங்கியதும் உடனே வெயிலில் நன்றாக உலர்த்தி எடுத்து வைத்தால் போதும்.

    • எலிக்கு புதினா வாசனை பிடிக்காது.
    • பூண்டு பேஸ்ட் கலந்த தண்ணீரை தெளித்தால் கரப்பான் பூச்சிகள் வராது.

    * எலிக்கு புதினா வாசனை பிடிக்காது. எனவே புதினாவையோ அல்லது புதினா எண்ணெயையோ வைத்தால் அது வராது.

    * கரப்பான் பூச்சி வரும் இடங்களில் மிள்குத்தூள், வெங்காய் பேஸ்ட் அல்லது பூண்டு பேஸ்ட் கலந்த தண்ணீரை தெளித்தால் கரப்பான் பூச்சிகள் வராது.

    * ஈக்களின் தொல்லைகள் நீங்க வீட்டை துடைக்கும் போது அதில் சிறிதளவு உப்பு சேர்த்து துடைத்தால் ஈக்களின் தொல்லை இருக்காது.

    * எறும்புகள் அதிகம் கிச்சனில் தொல்லை கொடுக்கிறதா? ஒரு டம்ளர் நீரில் 2 ஸ்பூன் உப்பு கலந்து எறும்பு உள்ள இடங்களில் தெளித்தால் எறும்புகள் வராது. அதேபோல் பெருங்காயத்தை தூவிவிட்டாலும் எறும்புத்தொல்லை இருக்காது.

    * சில சமயம் வெல்லத்தை துருவ வேண்டும் என்றால், காய்கறித் துருவலில் வைத்து துருவினால் சிரமம் இல்லாமல், சீக்கிரமே வெல்ல தூள் நமக்கு கிடைக்கும்.

    * வெயில் காலத்தில் தயிர் சீக்கிரம் புளித்து போய்விடும். அப்படி, தயிர் புளிக்காமல் இருக்க அதில் நசுக்கிய இஞ்சி, ஒரு துண்டு தேங்காய் பத்தை இரண்டையும் தயிரில் போட்டு வைத்தால் தயிர் சீக்கிரம் புளித்து போகாது.

    * அதேபோல், நெய் ரொம்ப நாளைக்கு கெட்டுப் போகாமல் இருக்க, நெய்யில் ஒரு சிறிய துண்டு வெல்லக்கட்டியை போட்டு வைத்தால் போதும்.

    * அதுபோன்று, நீங்கள் வெங்காயம் நறுக்கும் போது, கத்தியை லேசாக சூடு செய்துவிட்டு அதன் பின்பு வெங்காயம் நறுக்கினால் கண்களில் தண்ணீர் வராது.

    * சில சமயம் நாம் வைத்திருக்கும் தோசை மாவில் தோசை சரியாகவே வராது. அதேபோன்று, தோசை மாவு கொஞ்சம் தான் இருக்கிறது என்றால் அதில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து கலக்கி அந்த மாவில் தோசை வார்த்து பாருங்கள். கல்லில் தோசை ஒட்டாமலும் வரும். அதே சமயம் தோசையில், புளிப்பு தெரியாமலும் இருக்கும்.

    • சப்பாத்தியை வைத்து சூப்பரா ஒரு லட்டு செய்யலாம்.
    • நட்ஸ் வகைகளையும் நெய்யில் வறுத்து சேர்த்துக் கொள்ளலாம்.

    நம்முடைய பிரதான உணவுகளாக இட்லி, தோசையுடன் சேர்ந்து சப்பாத்தியும் முதன்மை உணவாக மாறிவிட்டது. இந்த சப்பாத்தியை வைத்து சூப்பரா ஒரு லட்டு செய்ய முடியும். செய்து சாப்பிட்டு பார்க்கலாமா? வாங்க பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்:

    சப்பாத்தி - 6

    நெய் - 4 ஸ்பூன்,

    பால் - 4 ஸ்பூன்,

    பால் பவுடர் - 3 ஸ்பூன்,

    நாட்டுச் சர்க்கரை - கால் கப்,

    ஏலக்காய் பொடி - அரை ஸ்பூன்,

    செய்முறை:

    முதலில் சப்பாத்தியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் சேர்த்து பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் 2 ஸ்பூன் நெய்யை சேர்த்து அதில் பொடித்த சப்பாத்தியை சேர்த்து வதக்க வேண்டும். இதில் எடுத்து வைத்திருக்கும் பாலை தெளித்து கொஞ்சம் ஈரமாக்கிக் கொள்ள வேண்டும்.

    அடுத்ததாக பால் பவுடரையும், நாட்டுச் சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடி ஆகியவற்றையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கி வையுங்கள். இதோடு நீங்கள் நட்ஸ் வகைகளையும் நெய்யில் வறுத்து சேர்த்துக் கொள்ளலாம். மீதமுள்ள நெய்யையும் சூடாக்கி இந்த கலவையில் சேர்த்து கை பொறுக்கும் சூட்டில் சிறு சிறு உருண்டைகளாக பிடித்தால் சுவையான சப்பாத்தி லட்டு ரெடி.

    • நாவில் வைத்த உடனேயே கரைந்து போய்விடும்.
    • பத்து நிமிடத்தில் ஈசியா செஞ்சிடலாம்.

    இனிப்பு வகைகளில் அல்வா என்றாலே எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் வாயில் வைத்தவுடன் நாவில் கரைந்து விடும் அல்வாவிற்கு தனி மவுசு தான். இதனால் தான் இருட்டுக் கடை அல்வா, திருநெல்வேலி அல்வா என்று விதவிதமாக அல்வாக்கள் பிரசித்தி பெற்றது. எவ்வளவோ பொருட்களை வைத்து நாம் அல்வாவை செய்து இருப்போம். ஆனால் வெறும் பாசி பருப்பு மட்டும் வைத்து எப்படி அல்வா செய்வது? இதை செய்ய பத்து நிமிடம் போதுமானது. 100 கிராம் பாசிப்பருப்பு இருந்தால் போதும், கடகடன்னு செஞ்சி, கமகமன்னு சாப்பிடலாம். அது எப்படி செய்வது? என்பதை பார்க்கலாம் வாங்க.

    உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் பாசிப்பருப்பு, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்:

    பாசிபருப்பு – 100 கிராம்

    சர்க்கரை – 100 கிராம்

    பால் பவுடர் அல்லது பால் – 1/2 கப்

    முந்திரி பருப்பு – 10

    பாதாம் பருப்பு – 5

    பிஸ்தா பருப்பு – 5

    நெய் – தேவையான அளவிற்கு

    செய்முறை

    பாசிப்பருப்பு அல்வா செய்வதற்கு பால் பவுடர் இல்லை என்றால் பால் சேர்த்துக் கொள்ளலாம். முதலில் பாசிப்பருப்பை நன்கு கழுவி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் தண்ணீரை வடிகட்டி விட்டு உலர்த்திக் கொள்ள வேண்டும். உணர்த்திய இந்த பாசிப்பருப்பை ஒரு டீஸ்பூன் நெய் விட்டு ஐந்து நிமிடம் சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஆறியதும் மிக்சியில் நன்றாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    ரவை அளவை விட சிறியதாக கொரகொரவென்று அரைத்தால் போதும். சர்க்கரையை மிக்சியில் சுற்றி நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். எந்த அளவிற்கு பாசிப்பருப்பை சேர்க்கிறோமோ அதே அளவிற்கு சர்க்கரையும் சேர்க்க வேண்டும். அதற்கு அளவை ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். அரைத்து வைத்த பாசிப்பருப்பு மாவுடன், அரைத்து வைத்த சர்க்கரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் அரை கப் அளவிற்கு பால் பவுடரை சேர்த்துக் கொள்ள வேண்டும். பால் பவுடர் இல்லாதவர்கள் அதனை தவிர்த்து விடுங்கள்.

    பின்னர் உடைத்து வைத்துள்ள நட்ஸ் வகைகளை பொடிப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் ஒரு அடி கனமான பாத்திரத்தை வைத்து சூடேறியதும், இரண்டு தேக்கரண்டி அளவிற்கு நெய் சேர்க்க வேண்டும். அதில் அரைத்து வைத்துள்ள பாசிப்பருப்பு மாவை சேர்த்து குறைந்த தீயில் வைத்து இடைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். மாவு கெட்டியானதும் பால் பவுடர் அல்லது பால் சேர்க்க வேண்டும். இரண்டு கப் மாவிற்கு, இரண்டரை கப் தண்ணீர் சேர்த்தால் போதுமானது. பின்னர் அதில் பொடித்து வைத்துள்ள சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். அதில் உடைத்து வைத்துள்ள நட்ஸ்களை சேர்க்க வேண்டும். பின்னர் வாசனைக்காக சிறிதி ஏலக்காய் தூள் சேர்த்து சிறிது நேரம் கிண்டி விட்டு மூடி வைத்து விடலாம்.

    அடுப்பை குறைந்த தீயில் வைத்து இருப்பது அவசியம். ஒரு 5 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் நெய் தெளிந்து, அல்வா பதத்திற்கு நிறம் மாறி பாசிப்பருப்பு நன்றாக வெந்து வந்திருக்கும். பத்து நிமிடத்தில் ஈசியா செஞ்சிடலாம். சுட சுட சாப்பிடும் பொழுது அவ்வளவு அட்டகாசமாக இருக்கும். நாவில் வைத்த உடனேயே கரைந்து போய்விடும். உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த அல்வாவை அடிக்கடி வீட்டில் செய்து எல்லோருக்கும் கொடுத்து, நீங்களும் சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருக்கலாம்.

    • உபசரிப்பு என்பது உதட்டளவில் இல்லாமல் மனதளவில் நிறைந்திருக்க வேண்டும்.
    • ஆறு சுவைகளுமே மனிதனுக்கு அன்றாடம் தேவைப்படுகின்ற சுவைகளாகும்.

    தமிழர்களின் பண்பாடுகள் எல்லாம் தலைசிறந்த விருந்தோம்பல் என்பதும் ஒன்று. உபசரிப்பு என்பது உதட்டளவில் இல்லாமல் மனதளவில் நிறைந்திருக்க வேண்டும். விருந்தளிக்கும் பொழுது சிறப்பாக எல்லா சுவைகளும் கலந்த விதத்தில் தலை வாழை இலைபோட்டு புன்னகையோடு விருந்தளித்தால் அறுசுவை உணவோடு அற்புதமான சாப்பாடு என்று சொல்வார்கள்.

    அந்த ஆறு சுவைகளுமே மனிதனுக்கு அன்றாடம் தேவைப்படுகின்ற சுவைகளாகும். இந்த ஆறு சுவைகளையும் யார் ஒருவர் உட்கொண்டு வந்தாலும் உடலில் நோய்க்கான அறிகுறிகளே இருக்க முடியாது. ஆறுசுவையும் ஒரே காலத்தில் ஒரு சேரக்கிடைப்பது என்பது அரிது. எனவே அதற்கான காலங்கள் வரும் பொழுது அவற்றை நாம் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமாகும்.

    ஒவ்வொரு மனிதனும் உடல் நலத்தை பேணுவதற்கு அத்தியாவசியத்தேவை நல்ல சத்துள்ள உணவாகும். இனிப்பு, உப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, துவர்ப்பு என்னும் அறுசுவைகளும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவை. இவற்றை தேவைக்கேற்ப சாப்பிட்டால் தேகநலன் சீராகும்.

    வருடத்தின் முதல் நாள், மாதத்தின் முதல் நாட்களில் முக்கியமாக சதுர்த்தி, பொங்கல் விழா எனப்படும் முக்கிய நாட்களில் பிள்ளையாருக்கு சர்க்கரைப் பொங்கல் வைப்பது வழக்கம். அதில் வெல்லத்தை சேர்த்து இனிப்பு சுவையை கூட்டிக் கொள்கின்றோம். அதேபோல மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு அன்று நமது இல்லத்தில் ஐஸ்வர்யம் பெருகுவதற்காக உப்பு வாங்குவது வழக்கம். அதை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தி வருகின்றோம்.

    நமது உடம்பில் உள்ள எலும்பு, நரம்புகளுக்கு கால்சியம் சத்து தேவை. அதை சோடியம் குளோரைடு என்னும் உப்பின் மூலமாகப் பெறுகின்றோம்.

    வருடப்பிறப்பு அன்று எல்லா சுவைகளும் கலந்த உணவை நம் முன்னோர்கள் வைப்பது வழக்கம். இனிப்பு, உப்பு, கசப்பு. கார்ப்பு. துவர்ப்பு, புளிப்பு ஆகிய ஆறுசுவைக்கும் ஏற்ப சாம்பார். கூட்டு. பொரியல். அப்பளம், பாயசம், வேப்பம்பூ பச்சடி, மாங்காய் இனிப்பு பச்சடி, வாழைப்பூ வடை என்றெல்லாம் வைத்து உணவு பரிமாறிய பிறகு வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு வைத்து விருந்தினரை கவனிப்பது வழக்கம். பாக்கில் துவர்ப்பு சத்தும் வெற்றிலை ஜீரண சக்தியையும், சுண்ணாம்பு கால்சியம் சத்தையும் கொடுக்கின்றது.

    பொதுவாக வாழ்க்கை என்பது இன்பமும். துன்பமும், நன்மையும். தீமையும் கலந்து வருவதுதான். எந்த விழாவிற்கு சென்றாலும் முதலில் இனிப்புத் தான் கொடுப்பர். பிறந்தநாள் என்றாலும் திருமண நாள் என்றாலும், திருமணத்தில் தாலிகட்டும் நேரத்திலும் இனிப்பு வழங்குவதுதான் வழக்கம். இவ்வாறு விழா நாட்களில் இனிப்பை உட்கொண்டாலும் மற்ற நாட்களில் பிறகவைகளும் நமக்குத் தேவை. எப்படித்தான் இனிப்பு சுவை இருந்தாலும் கசப்பு சுவையும் நம் உடலுக்கு அவசியம் தேவை.

    இன்பத்தை பார்க்கும் நாம் துன்பத் தையும் சமமாகப் பார்க்க வேண்டும். உதாரணமாக கரும்பு இனிப்பின் இருப்பிடம். வேம்பு கசப்பின் இருப்பிட மாகும். இதனால் தான் வருடப் பிறப்பன்று கசப்பாக இருந்தாலும் வேப்பம்பூ பச்சடியை சேர்க்கின்றோம்.

    தை மாதம் இனிப்புச்சுவை தரும் கரும்பினையும் உண்கின்றோம். ஆடி மாதத்தில் அம்பிக்கையைக் கொண்டாட வேப்பிலை எடுத்துச்செல்வர். கூழ் காய்ச்சிக் கொடுப்பதில் வேப்பிலை தூவுவர். வேம்பு என்பது ஒரு கிருமி நாசினி. சர்வரோக நிவாரணி என்று கூடச் சொல்ல லாம். இதைத்தவிர நீரழிவு, புற்றுநோய் தடுப்பு. அம்மை நோய் தடுப்பு, மற்றும் நம் உடலில் உருவாகும் நச்சுக் களை அழிப்பதற்கும் பயன்படுகின்றது.

    வீடுகளில் விருட்சங்களாக வைத்துக் கொள்ளக்கூடிய ஒரு தெய்வீக மூலிகை வேம்பாகும். கரும்பிற்கும், வேம்பிற்கும் உள்ள சுவை முற்றிலும் வேறுபட்டதாக இருந்தாலும் சுகத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில் இரண்டும் சமநிலை வகிக்கின்றது.

    உடம்பை வளர்த்தேன். உயிர் வளர்த்தேனே' என்று திருமூலர் கூறியுள்ளார். எனவே ஆரோக்கியத்தில் அக்கரை செலுத்தினால் தான் சீரோடும். சிறப்போடும் ஒவ்வொருவரும் வாழமுடியும். எனவே அன்றாட வாழ்வில் அறுசுவை உணவால் ஆரோக்கிய வாழ்வை நாம் பெறவாம்.

    • நூடுல்ஸ் ஒரு கவர்ச்சியான, சுவையான நறுமணம் மற்றும் சுவையான உணவாகும்.
    • சீன நூடுல்சை அடிப்படையாகக் கொண்டது.

    சிக்கன் ஹக்கா நூடுல்ஸ் ஒரு கவர்ச்சியான, சுவையான நறுமணம் மற்றும் சுவையான உணவாகும். இது சீன நூடுல்சை அடிப்படையாகக் கொண்டது. அதில் காய்கறிகளுடன் மிருதுவாக கிளறி வறுத்தெடுக்கப்படுகிறது. இதில் மென்மையான சிக்கன் துண்டுகளுடன் பரிமாறப்படுகிறது. ஒரு வண்ணமயமான உணவாகும். பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இருவரும் விரும்பும் வகையில் இருக்கும் இந்த சிக்கன் ஹக்கா நூடுல்ஸ். ஒரு ஆரோக்கியமான மற்றும் திருப்தியான உணவாகும்.

    தேவையான பொருட்கள்:

    கோழி- 1 கப் (வேகவைத்து சிறிய துண்டுகளாக்க வேண்டும்

    நூடுல்ஸ்- 150 கிராம்

    தண்ணீர்-4 கப்

    முட்டைக்கோஸ் -1/4 கப் (மெல்லியதாக நீளமாக நறுக்கியது)

    சின்ன வெங்காயம்- 1/4 கப் (பொடியாக நறுக்கியது)

    பீன்ஸ்- 1/4 கப் (நறுக்கியது)

    கேரட் - 1/4 கப் மெல்லிய (மெல்லியதாக நீளமாக நறுக்கியது)

    வெங்காயம்- 1 (நீளவாக்கில் நறுக்கியது)

    காய்ந்த மிளாகாய்- 1/2 டீஸ்பூன் (சில்லி ஃபிளேக்ஸ்)

    பூண்டு- ஒரு ஸ்பூன்

    வினிகர்- ஒரு ஸ்பூன்

    சோயா சாஸ்- ஒரு ஸ்பூன்

    பச்சை மிளகாய் சாஸ்- ஒரு ஸ்பூன்

    மிளகு தூள்-ஒரு ஸ்பூன்

    எண்ணெய்- 2 டீஸ்பூன்

    உப்பு- தேவையான அளவு

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் நூடுல்ஸ் சேர்க்க வேண்டும். அதில் சிறிதளவு உப்பு, எண்ணெய் சேர்க்க வேண்டும். 5 நிமிடத்திற்கு பிறகு நூடுல்சை ஒரு வடிகட்டிக்கு மாற்ற வேண்டும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து மிதமான தீயில் ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.

    கடாயில் சில்லி ஃபிளேக்ஸ், முட்டைக்கோஸ், பீன்ஸ் மற்றும் கேரட் போன்ற கய்கறிகளை சேர்த்து அதிக தீயில் 30 விநாடிகள் வதக்க வேண்டும். அதன்பிறகு வேகவைத்து சிறிதாக வெட்டி வைத்துள்ள கோழி இறைச்சியையும் அதில் சேர்த்து ஒரு நிமிடம் கிளற வேண்ம்.

    அதன்பிறகு வெங்காயம், சோயா சாஸ், பச்சை மிளகாய் சாஸ் மற்றும் வினிகர் ஆகியவற்றை வாணலியில் அதில் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். பின்னர் அதில் வேகவைத்த நூடுல்ஸ், உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இறக்குவதற்குமுன் வெங்காயத்தாள் சேர்த்து கிளறி சூடாக பரிமாறவும்.

    ×