என் மலர்
சமையல்
- ஒரு கைப்பிடி ஓட்சை பொடித்து போடுங்கள். குருமா கெட்டியாகிவிடும்.
- தோசைமாவில் நல்லெண்ணெய் கலந்து ஊற்றினால் தோசை மிருதுவாக இருக்கும்.
* வெங்காய பக்கோடாவுக்கு அரை டீஸ்பூன் சோம்பு, கறிவேப்பிலை சிறிது சேர்த்து செய்தால் வாசனை, சுவை சூப்பராக இருக்கும்.
* காய்ந்த மணத்தக்காளி, சுண்டைக்காய் வற்றலில் உப்பு அதிகமாகிவிட்டால் வற்றல் மூழ்கும் வரை நீர் ஊற்றி ஒரு நிமிடம் அப்படியே வைத்துவிட்டு வடிகட்டவும். பின்பு உலர வைத்தால் உப்பின் வீரியம் குறைந்துவிடும்.
* முள்ளங்கி இலையை எண்ணெய் ஊற்றி வதக்கி, காய்ந்த மிளகாய், உளுந்து, பெருங்காயம், உப்பு சேர்த்து வறுத்து துவையல் செய்தால் சுவையாக இருக்கும்.
* குருமா நீர்த்துவிட்டால், அதில் ஒரு கைப்பிடி ஓட்ஸை பொடித்து போடுங்கள். குருமா கெட்டியாகிவிடும்.
* கொத்தமல்லி காம்பை புளியுடன் சேர்த்து வெயிலில் காயவைத்து லேசாக இடித்து எடுத்துக்கொள்ளவும். கொத்தமல்லித்தழை கிடைக்காத நேரத்தில் இதை கொண்டு ரசம் வைக்கலாம்.
* முளைக்கட்டிய பச்சை பயிறை நைசாக அரைத்து கோதுமை மாவுடன் சேர்த்து பிசைந்து செய்யப்படும் சப்பாத்தி மிகவும் சத்துடன், சுவையாகவும் இருக்கும்.
* உளுந்தம் பருப்பு வடை செய்வதற்கு மாவு அரைக்கும்போது, அதனுடன் சிறிது துவரம் பருப்பை சேர்த்து அரைத்தால் வடை மிருதுவாகவும், சுவையுடனும் இருக்கும்.
* பருப்புப்பொடி அரைக்கும்போது 2 டீஸ்பூன் ஓமம் சேர்த்து அரைத்தால் மணத்துடன் சுவையாகவும் இருக்கும். உடலுக்கும் நலம் சேர்க்கும்.
* தோசை மாவில் நான்கைந்து டீஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து ஊற்றினால் தோசை மிருதுவாக இருக்கும்.
* தோசைக்கல்லில் சிறிது பெருங்காயத்தூளை பரவலாக தூவி துடைத்துவிட்டு மாவை ஊற்றினால் கல்லில் ஒட்டாமல் தோசை வார்க்கலாம்.
* வெண்ணெய்யில் சிறிது பால் விட்டு நன்றாக குழைத்து பிரெட் துண்டுகளின் மேல் தடவுவது நல்லது. எல்லா பக்கமும் சுபலமாக படர்வதற்கு வழிவகை செய்யும்.
* குலோப் ஜாமூன் மாவை பிசைந்து உருட்டிய பின்பு சிறிய ஊசியால் ஓட்டை இட்டு பொரித்து எடுத்தால் மாவு உள்ளே நன்றாக வெந்து இருக்கும்.
* பச்சைக் காய்கறிகளில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து வேக வைத்தால் காய்கறிகளின் இயற்கை நிறம் மாறாது.
* சேனைக்கிழங்கு நறுக்கும்போது கையில் நல்லெண்ணெய் தடவிவிட்டு நறுக்கினால் கையில் அரிப்பு ஏற்படாது.
- ஒரு மாதம் வரை கூட கெட்டுப்போகாது.
- பாதாம் அல்லது பிஸ்தா பருப்பு வைத்து அலங்கரிக்கலாம்.
சின்ன வயசுல பக்கத்துல பெட்டி கடையில எல்லாம் கிடைக்கும் ஸ்வீட் தான் இது. பொட்டுக்கடலை கேக் ரெசிபி. ஒரு 10 நிமிடத்தில் இன்ஸ்டண்ட்டாக செய்து முடித்துவிடலாம். எப்படி செய்வது என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம். உங்க வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து சுலபமாக இந்த ஸ்வீட் ரெசிபியை செய்யலாம். இந்த ஸ்பீட் செய்து காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால் 1 மாதம் வரை கூட கெட்டுப்போகாது. சரி சரி அந்த சூப்பர் ரெசிபியை நேரத்தைக் கடத்தாமல் இப்போதே பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
பொட்டுக்கடலை- ஒரு கப்
சர்க்கரை- ஒரு கப்
ஏலக்காய் பொடி- ஒரு ஸ்பூன்
நெய் – 1/4 கப்
முந்திரி- அலங்கரிக்க மட்டும்
செய்முறை
முதலில் மிக்சி ஜாரில் பொட்டுக்கடலையையும் சர்க்கரையையும் ஏலக்காயையும் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவேண்டும்.
அரைத்த இந்த மாவை இரண்டு முறை நன்றாக சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். மாவு நறநறவென இருந்தால் ஸ்வீட் ரெசிபி நறநறப்பாக வந்துவிடும். பொட்டுக்கடலை எந்த கப்பில் அளக்கிறீர்களோ அதே கப்பில் சர்க்கரையையும் அளந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் தேவைப்பட்டால் பால் பவுடர் கூட சேர்த்து செய்யலாம். சுவை கூடுதலாக இருக்கும்.
அரைத்த சலித்த இந்த பொடியை ஒரு அகலமான பவுலில் போட்டு 1/4 கப் அளவு நெய்யை இதோடு சேர்த்து நன்றாக பிசைந்து கொண்டே இருக்க வேண்டும். ஐந்தில் இருந்து ஏழு நிமிடங்கள் அழுத்தம் கொடுத்து பிசைந்தால் போதும்.
மாவு நன்றாக ஒட்டி பிடித்து பால்கோவா, குலோப் ஜாமுன் மாவு போல நமக்கு கிடைக்கும். அந்த மாவை சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து கையில் கேக் போல தட்டி உங்களுடைய வீட்டில் பால்பேடா அச்சு இருந்தால் அதில் இந்த பொட்டுக்கடலை மாவை வைத்து பேடா போல ஷேப்பில் மாற்றியும் செய்து கொள்ளலாம். அதன் நடுவே பாதாம் அல்லது பிஸ்தா பருப்பு வைத்து அலங்கரிக்கலாம்.
சிறிய சிறிய அளவு மூடியில் இந்த மாவை வட்ட வடிவத்தில் வெட்டி, கத்தியை வைத்து நான்கு கோடு போட்டு கூட குழந்தைகளுக்கு அழகாக கொடுக்கலாம். அது நம்முடைய விருப்பம் தான்.
- டயட் ஃபாளோ பண்றவங்க இதை கண்டிப்பாக உங்களது லிஸ்டில் சேர்க்கலாம்.
- கொலஸ்ட்ரால் சேமிப்பைத் தவிர்க்கும்.
ஓட்சில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட், ரத்த நாளங்களில் கொலஸ்ட்ரால் சேமிப்பைத் தவிர்க்கும். கொழுப்பு சேர்ந்தவர்களுக்கு அதைக் குறைப்பதற்கு கோதுமை ரவை ஒரு வரப்பிரசாதமாகும். இன்றைக்கு ஒரு ஹெல்த்தியான ஓட்ஸ் இட்லி மிருதுவாகவும், பஞ்சுபோலவும் சுவையாக எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
ஓட்ஸ்- ஒரு கப்
கோதுமை ரவை- ஒரு கப்
தயிர்- ஒரு கப்
கடலைபருப்பு- ஒரு ஸ்பூன்
பச்சைமிளகாய்- 1 (நறுக்கியது)
கடுகு- கால் டீஸ்பூன்
சிரகம்- கால் டீஸ்புன்
உளுந்தப்பருப்பு- கால் டீஸ்பூன்
கேரட்- 1 துருவியது
முந்திரி- 2 ஸ்பூன்
இஞ்சி- கால் ஸ்பூன்
சோடா உப்பு
செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து மிதமான தீயில் ஓட்சை போட்டு வறுக்க வேண்டும். அதில் கோதுமை ரவையையும் சேர்த்து வறுத்து எடுத்து வேறு ஒரு பிளேட்டிற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
அதன்பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம், உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். இதில் நறுக்கிய பச்சைமிளகாய், கேரட், இஞ்சி, முந்திரி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள ஓட்ஸ், கோதுமை ரவையை இதில் சேர்க்க வேண்டும். அதில் தயிர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் சோடா உப்பு சேர்த்து 30 நிமிடங்கள் மூடி போட்டு வைக்க வேண்டும். அதன்பிறகு இந்த கலவையை இட்லி பாத்திரத்தில் ஊற்றி வேகவைத்து எடுத்தால் ஓட்ஸ் இட்லி தயார்.
- ஆரோக்கியமான நொறுக்குத் தீனியாக கொடுக்கலாம்.
- மெல்லியதாக நறுக்கிய பாதாமை அலங்காரமாக தூவலாம்.
பருப்பு வகையை சேர்ந்த வைட்டமின்கள் தாதுக்கள், ஒமேகா கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து என பல்வேறு சத்துக்களை கொண்டது. குழந்தைகளுக்கு இதை ஆரோக்கியமான நொறுக்குத் தீனியாக கொடுக்கலாம். அந்த வகையில் வால்நட் பருப்பைக்கொண்டு சுவையான பர்பி செய்யும் முறையை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
வால்நட் பருப்பு- 2கப்
நெய் 6 டீஸ்பூன்
வெல்லம் 2 கப் (பொடித்தது)
சுக்கு பொடி -1 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி 1 டீஸ்பூன்
செய்முறை:
வால்நட் பருப்புகளை ஒன்றிரண்டாக நறுக்கிக் கொள்ளவும், அகலமான நான்-ஸ்டிக் கடாயில் 2 டீஸ்பூன் நெய்யை ஊற்றவும். அது உருகியதும் வால்நட்டை அதில் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். பின்பு அதை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கால் கப் அளவு தண்ணீர் ஊற்றி, அதில் பொடித்த வெல்லத்தைப் போட்டு மிதமான தீயில் பாகு தயாரிக்கவும். பின்பு அதனுடன் ஏலக்காய் பொடி. சுக்கு பொடி மற்றும் வறுத்த வால்நட் பருப்புகளை போட்டு கலக்கவும். இப்போது அதில் சிறிது சிறிதாக நெய் ஊற்றி நன்றாகக் கிளறி இறக்கவும்.
நெய் தடவிய தட்டில் இந்தக் கலவை யைப் போட்டு, சமமாக பரப்பி வைக்கவும். அது சற்றே ஆறிய பின்பு உங்களுக்கு விருப்பமான வடிவில் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். இப்போது ஆரோக்கியமான 4 'வால்நட் பர்பி தயார். அதன் மேலே நெய்யில் வறுத்த வெள்ளை எள். மெல்லியதாக நறுக்கிய பாதாம் போன்றவற்றை அலங்காரமாக தூவலாம்.
- தோசை வார்க்கும்போது மாவில் சிறிது கடலை மாவு சேர்த்துக்கொள்ளலாம்.
- சாதம் வடித்த தண்ணீரில் சூப் செய்தால் சுவையாக இருக்கும்.
இல்லத்தரசிகளின் மிகப்பெரிய ஆசைகளின் ஒன்று, தினமும் தனது கணவர், பிள்ளைகளுக்கு வகைவகையான ருசிகளில், உணவு வகைகளை சமைத்து தருவதாக தான் இருக்கிறது. சின்னச்சின்ன விஷயங்கள் கூட உங்கள் சமையலை மிகச்சிறப்பாக்கிவிடும். இல்லத்தரசிகளுக்கு உதவியாக இருக்க சில் சமையல் டிப்ஸ் உங்களுக்காக...
* தேங்காய் சட்னி அரைக்கும்போது மல்லி தழையை சிறிது வதக்கி சேர்த்தால் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.
* உளுந்து வடை மொறுமொறுவென்றும், மிருதுவாகவும் இருக்க வேண்டுமா? உளுந்து அரைக்கும்போது அதில் வேகவைத்த உருளைக்கிழங்கு போட்டு அரைத்தால் போடும். உளுந்து வடை மிருதுவாக இருப்பதோடு எண்ணெய்யும் அதிகம் உறிஞ்சாது.
* மணத்தக்காளி கீரையை சமைத்தால் சிறிது கசப்பு தெரியும். அது தெரியாமல் இருக்க, கீரையோடு சிறிது பீட்ரூட் துண்டை சேர்த்து பொரியல், துவையல் செய்யலாம். கசப்பு தெரியாமல் இருப்பதோடு சுவையும் கூடும்.
* வீட்டில் காய்கறி சூப் செய்யும்போது தண்ணீர் ஊற்றி காய்கறிகளை வேக வைப்பதை விட, சாதம் வடித்த தண்ணீர் ஊற்றி சூப் தயாரித்தால் சுவையாக இருக்கும். சத்தும் மிகுந்திருக்கும்.
* சர்க்கரை பொங்கல் தயாரிக்கும்போது வெல்லத்தை அப்படியே போட்டால் கரைவதற்கு நேரம் கூடுதலாகும். பாத்திரத்தின் அடியிலும் பிடிக்கும். அதனை தவிர்க்க வெல்லத்தை காய்கறி சீவும் உபகரணத்தில் சீவி, சேர்த்தால் சீக்கிரம் கரைந்துவிடும். அடியிலும் பிடிக்காது.
* முட்டை வேக வைக்கும் பாத்திரத்தில் ஒருவித வாடை வீசும். அதில் சிறிது சாதம் வடித்த தண்ணீரை ஊற்றி, ஊறவைத்துவிட்டு கழுவலாம். வாடை நீங்கிவிடும்.
* தோசை வார்க்கும்போது மாவில் சிறிது கடலை மாவு சேர்த்துக்கொள்ளலாம். அப்படி கடலை மாலை கலக்கி வார்த்தால் தோசை மொறுமொறுவென்றும், நிறமாகவும் இருக்கும்.
* சிக்கன் 65 தயார் செய்யும்போது எல்லா மசாலா கலவையையும் போட்டு ஊற வைத்து பொறிப்பதற்கு முன்பு சோளமாவை சேர்த்தால் பிசுபிசுப்பு இல்லாமல் மொறுமொறுவென்று இருக்கும்.
- சமையல் கலை, கடல் போன்றது.
- இந்தியாவில் மட்டும், 30-க்கும் மேற்பட்ட சமையல் கலைகள் இருக்கின்றன.
சமையல் கலை, கடல் போன்றது. கண்டங்கள், நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்கள், ஏன் ஊருக்கு ஊர் கூட சமையல் கலை வித்தியாசப்படும். நம் இந்தியாவில் மட்டும், 30-க்கும் மேற்பட்ட பிரபலமான சமையல் கலைகள் இருக்கின்றன. ஆனால், நம்மை பொறுத்தவரை, வட இந்தியா, தென் இந்தியா... என இரண்டு வகைப்பாட்டிற்குள் மொத்த உணவு கலாசாரத்தையும் கொண்டு வந்துவிடுகிறோம். தந்தூரி ரொட்டி, பன்னீர் பட்டர் மசாலா, ரொட்டி... இப்படியாக ஒருசில உணவுகளை மட்டுமே வட இந்திய உணவுகளாக நாம் தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் வட இந்தியாவில், குஜராத்தில், சூப்பரான, சுவையான உணவு வகைகள் சமைக்கப்படுகின்றன. அவை ஒவ்வொன்றும் தனித்துவமானவை.
குஜராத் மக்களின் சமையல் கலையானது, காலநிலைக்கு ஏற்ப மாறுபடக்கூடியதாக இருக்கும். வெயில் காலம், மழைக்காலம், பனிக்காலம்... என தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப உணவு வகைகளை சமைத்து சாப்பிடுவார்கள். குஜராத்தில், ஓமப்பொடி போன்ற மிச்சர் வகையிலான லேசான உணவுதான் பலரின் காலை உணவாக இருக்கும். ஆனால் மதிய வேளையில் ரொட்டி, சாதம், மோர், பலவிதமான காய்கறி கூட்டுகள், அப்பளம், இனிப்பு வகைகள் என சாப்பிடும் அளவு அதிகமாக இருக்கும். இரவிலும் கட்டுப்பாடின்றி விரும்பியதை சாப்பிடுவார்கள்.
பெரும்பாலும் சைவ உணவுகளே, குஜராத்தி சமையல் கலையில் அதிகம். குறிப்பாக, எல்லா உணவிலும் இனிப்பு சுவை கொஞ்சம் தூக்கலாக இருக்கும். இந்த உணவுத் திருவிழாவில், ஒவ்வொரு நாளும் 35 உணவுகள் சமைத்து பரிமாறப்படுகிறது. தேங்காய் மோர், தீயில் சுட்ட மாங்காயில் தயாரான பானம் ஆகியவை வரவேற்பு பானங்களாக பரிமாறப்பட, பச்சை பட்டாணி கோக்ரா (மடிப்பு பணியாரம்), தூதி நா முதியா (கோதுமை மாவில் தயாராவது), சுருள் வடிவ கந்தவி மற்றும் பத்ரா ஆகியவை சுவைக்கப்படுகிறது.


இவற்றுடன் பேரீச்சை புளி சட்னி, ராஜ்காட் சட்னி, பப்பாளி மற்றும் மிளகாய் சட்னி போன்றவையும் பரிமாறப்பட்டன. இவை மட்டுமா...? உந்தியூ, துவார் கிச்சடி, சோட்டூ பட், பஜ்ரா ரோட்லா (ரொட்டி வகை), நெய் பூரி புல்கா, தெப்லா ரொட்டி, சாப்ரான் உலர் பழ ஸ்ரீகந்த், சர்மா லட்டு, மகாஸ், சுடர்பெனி (இடியாப்பம் போலவே நூலிழைபோல் தயாரிக்கப்படும் இனிப்பு வகை), குல்பி, ஜிலேபி, 3 விதமான அப்பளங்கள், 10 வகையான ஊறுகாய் வகைகள் என ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விதமான உணவுகள் பரிமாறப்படுகின்றன. குஜராத்தி மக்களின் உணவு பழக்கவழக்கத்தில் ஊறுகாய்க்கு தனி இடம் உண்டு.
குஜராத் மக்களின் வீடுகளில், 4 அல்லது 5 சுவைகளில் ஊறுகாய் இருக்கும். அவை அனைத்துமே, வீடுகளிலேயே தயாரிக்கப்பட்டதாக இருக்கும். இன்று, குஜராத்தி மக்கள் தங்கள் வீடுகளில் ஊறுகாய் தயாரிப்பதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர். வீடுகளிலேயே ஊறுகாய் தயாரிக்கும்போது, உப்பு, காரம் போன்றவை எல்லாம் அளவாக இருக்கும். அதுவே கடை ஊறுகாய் என்றால், அளவுகள் தாறுமாறாக இருக்கும். அது சில உடல் கோளாறுகளுக்கு வழிவகுக்கலாம்.
இதில் உந்தியூ என குறிப்பிடப்படும் உணவு, மிகவும் சிறப்பானது. தமிழகத்தில் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுவது போல, குஜராத்தில் ஜனவரி மாதத்தில் பட்டம் விடும் திருவிழா கொண்டாடப்படும். அதில் ஏழை-பணக்காரர்கள் வித்தியாசமின்றி, எல்லா மக்களும் பட்டம் விடுவார்கள்.
அந்த கொண்டாட்டத்தின்போது, `உந்தியூ' உணவுதான் சமைக்கப்படும், எல்லோராலும் சுவைக்கப்படும். எல்லா காய்கறிகளையும், மசாலா பொருட்களுடன் நன்றாக வேகவைத்து பரிமாறப்படும் `உந்தியூ' மிகவும் சத்தான உணவாக கருதப்படுகிறது. இப்படி, ஒவ்வொரு குஜராத்தி உணவிற்கு பின்னாலும், பலவிதமான சுவாரசிய பின்னணிகள்உண்டு.
- கம்புவை சேர்த்து வறுத்து எடுக்க வேண்டும்.
- ஒரு காற்றுப்புகாத பாத்திரத்தில் போட்டு வைத்துக்கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
சோளம்- (வெள்ளை சோளம்) 200 கிராம்
கம்பு- 200 கிராம்
பாசி பயறு- 200 கிராம்
அரிசி- 100 கிராம்
சீரகம்- கால் டீஸ்பூன்
எள்- ஒரு டீஸ்பூன்
கேரட்- 1
பீன்ஸ்-3
பட்டானி- ஒரு கைப்புடி
மிளகாய்தூள்- ஒரு ஸ்பூன்
செய்முறை
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் வெள்ளை சோளத்தை போட்டு மனம் வரும்வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு கம்புவை சேர்த்து வறுத்து எடுக்க வேண்டும். அரிசியையும் இதேபோல பொரியும் வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பாசிபயறையும் வறுத்து எடுக்க வேண்டும்.
வறுத்த அனைத்தையும் சேர்த்து தட்டில் கொட்டி ஆறவைத்து அதனை ஒரு மிக்சி ஜாரில் போட்டு நைசாக இல்லாமல் ரவை பதத்துக்கு அரைத்துக்கொள்ள வேண்டும். இதனை ஒரு காற்றுப்புகாத பாத்திரத்தில் போட்டு வைத்துக்கொள்ளலாம்.
இந்த மாவினை ஒரு கப் எடுத்துகொள்ள வேண்டும். அடுப்பில் வாணலியை அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கால் டீஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் எள் போட வேண்டும். இதில் ஒரு கொத்து கறிவேப்பிலை, இஞ்சி ஒரு துண்டு துருவிவிட்டு சேர்க்க வேண்டும்.
இந்த தாலிப்பை பச்சைவாடை போகிற வரை வதக்கிய பிறகு இதில் நறுக்கி வைத்து பீன்ஸ், கேரட், பட்டானி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வதங்கும்போதே இதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர் 3 கப் சூடான தண்ணீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் கொதித்து வரும்போது அதில் நாம் ஏற்கனவே பொடித்து வைத்துள்ள பொடியை இதில் சேர்க்க வேண்டும். அதனை கிளறி இதில் 10 நிமிடம் மூடி போட்டு வேக வைக்க வேண்டும். 10 நிமிடம் கழித்து திறந்து பாத்திரத்தில் ஒட்டாதவாறு கிளறி அதில் கால் டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கிளறி விட வேண்டும். அதன்பிறகு இறக்கி வைத்து கறிவேப்பிலை மல்லிதலை சேர்த்து பரிமாறலாம்.
- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கொடுக்கலாம்.
- உடல் எடையை குறைக்க உதவுகிறது.
தேவையான பொருட்கள்:
வரகு அரிசி- 50 கிராம்
பாசிபருப்பு- 25 கிராம்
வெந்தயம்- கால் டீஸ்பூன்
சீரகம்- கால் டீஸ்பூன்
சின்ன வெங்காயம்- ஒரு கப்
பட்டை- ஒரு துண்டு
பிரிஞ்சு இலை- 1
பூண்டு- 4 பல்
செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் வரகு அரசி மற்றும் பாசிப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு இந்த இரண்டையும் நன்றாக கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும்.
மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் நெய் ஊற்ற வேண்டும். இதில் வெந்தயம், சீரகம், சேர்த்து பொரிந்ததும் அதில் பட்டை, பிரிஞ்சு இலை, பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்க வேண்டும். அதனுடன் ஏற்கனவே களைந்து வைத்துள்ள அரிசியையும், பருப்பையும் சேர்க்க வேண்டும்.
மேலும் கஞ்சி என்பதால் இதற்கு இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து மூடி போட்டு வேக வைக்க வேண்டும். கஞ்சி நன்றாக வந்ததும் இதில் கொத்தமல்லி தலை, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கிளறி இறக்கினால் உடல் எடையை குறைக்கக்கூடிய வரகு அரிசி கஞ்சி தயார்.
இந்த மாதிரி நாம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் கெட்ட நீரினை வெளியேற்ற உதவும். இதை உங்களது டயட்டிலும் சேர்த்துக்கொள்ளலாம். அதிகநேரம் பசிக்காது. பசியை அதிக நேரம் தாங்கும். உடல் எடையை குறைக்கவும் இந்த கஞ்சி பயன்படுகிறது.
இதே செய்முறையில் நீங்கள் காய்கறிகளை சேர்த்தும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் செய்து கொடுக்கலாம்.
- உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும்
- அஜூரணக்கோளாறு சரியாகும்.
தேவையான பொருட்கள்
பச்சை சுண்டைக்காய் – ஒரு கப்
சீரகம்- ஒரு ஸ்பூன்
கடலைபருப்பு- 3 ஸ்பூன்
கருவேப்பிலை – இரண்டு கொத்து
வரமிளகாய் – ஆறு
புளி – நெல்லிக்காய் அளவு
இஞ்சி – இரண்டு இன்ச்
எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க: நல்லெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்
உளுந்து – அரை ஸ்பூன்
செய்முறை:
முதலில் பச்சை சுண்டைக்காய்களை இரண்டாக வெட்டி நன்றாக தண்ணீரில் கழுவி எடுத்து வைக்க வேண்டும். பின்னர் அடுப்பை பற்றவைத்து அதில் ஒரு வாணலியை வைத்து இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பச்சை சுண்டைக்காயை போட்டு நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதன்பிறகு மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து இரண்டு கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு, சீரகம், கருவேப்பிலை, புளி, ரெண்டு இன்ச் இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் சேர்த்து நன்கு சுருள வதக்க வேண்டும். அப்போது தான் இஞ்சியின் காரம் அதிகமாக இருக்காது. இஞ்சி சுருள வதங்கியதும் வரமிளகாய்களை காம்பு நீக்கி இரண்டாக உடைத்து சேர்த்து லேசாக வறுக்க வேண்டும். இவற்றை தனியாக எடுத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் அதே எண்ணெயில் ஏற்கனவே வதக்கி வைத்துள்ள பச்சை சுண்டைகாய்களை சேர்த்து நன்கு வதக்குங்கள். வதக்கும் பொழுது நிறம் மாற ஆரம்பிக்கும். பச்சை நிறமாக இருந்து, வெள்ளையாக மாற ஆரம்பிக்கும். அதுவரை நன்கு வதக்குங்கள். அப்போது தான் சுண்டைக்காயின் கசப்பு தெரியாது.
பின்னர் ஒரு மிக்சி ஜாரில் வதக்கிய சுண்டைக்காய், தேவையான அளவிற்கு உப்பு ஆகியவற்றை சேர்த்து நைசாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதற்கு ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தப்பருப்பு சேர்த்து சிறு தாளிப்பு கொடுக்க வேண்டும்.
இதனை சூடான சாதத்தில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி இந்த சுண்டைக்காய் துவையலை சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும், அஜூரணக்கோளாறு சரியாகும். வயிற்றில் உள்ள புழுக்கள் அழியும்.
- பட்டுப்புடவைகளை அலமாரியில் மடித்தே வைத்திருப்போம்.
- கிச்சனில் இரவில் சிங்க் பகுதியில் நிறைய கரப்பான் பூச்சிகள் ஆக்கிரமிக்கும்.
வீட்டில் பெண்கள் தான் அதிகளவு வீட்டு வேலைகளை செய்கின்றனர். அந்த வகையில் பெண்களுக்கு பயனுள்ளதாக இருக்கக்கூடிய அற்புதமான குறிப்புகள். வாங்க பார்க்கலாம்....
* ஃபிரிட்ஜில் உள்ள ஃப்ரீசர் பெட்டியில் ஆங்காங்கே ஐஸ்கட்டிகள் உறந்தபடி இருக்கும். இதனை தவிர்ப்பதற்காக ஃப்ரீசர் பெட்டியில் பொடி உப்புகளை லேசாக தூவினாற் போல் போட்டு வைத்தால் ஐஸ்கட்டி உருவாகாமல் இருக்கும்.
* பட்டுப்புடவைகளை அலமாரியில் மடித்தே வைத்திருப்போம். அந்த மடிப்பு உள்ள பகுதிகள் நாளடைவில் கிழிந்துவிட வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமில்லாமல் பட்டுப்புடவைகளை அப்படியே வைத்திருப்பதால் ஒரு நாற்றம் எடுக்கம். அதனை தடுப்பதற்காக ஒரு பேப்பரில் ஒரு ஸ்பூன் அரிசி மற்றும் 1/4 ஸ்பூன் ஜவ்வாது பொடி இவற்றை ஒன்றாக கலந்து பேப்பரை மடித்து புடவைகளுக்கு மத்தியில் வைக்க வேண்டும். இதனால் நாற்றம் எடுக்காது.
* சிலருக்கு தலைக்கு குளித்துவிட்டு வந்த போது முடி வறண்டு போனது மாதிரி இருக்கும். எவ்வளவு தான் கண்டிஷனர் அல்லது சீரம் தேய்த்தாகும் வறண்டு காணப்படும் அதை தவிர்ப்பதற்காக நீங்கள் பயன்படுத்தும் சீப்பை எடுத்து ஒரு பிளேட்டை எடுத்து அதில் ஒரு டம்ளர் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் சீப்பை வைத்து எடுத்து அதனை குளித்துவிட்டு வந்த தலைமுடி காய்ந்தவுடன் அந்த சீப்பை பயன்படுத்தி தலையை சீவினால் முடிகொட்டுதல், முடி வறட்சியாக காணப்படுவதில் இருந்து தடுக்கலாம்.
* நம்முடைய வீட்டில் உள்ள கிச்சனில் இரவில் சிங்க் பகுதியில் நிறைய கரப்பான் பூச்சிகள் ஆக்கிரமிக்கும். நாம் எவ்வளவுதான் கிச்சனை சுத்தமாக வைத்திருந்தாலும் சிங்க் வழியாக கரப்பான் பூச்சி தொல்லைகள் தான் இருக்கத்தான் செய்கிறது. அப்போது வெங்காய தோல் அல்லது எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி சிங்க் பகுதிகளை இரவில் நன்றாக தேய்த்து விட்டாலும் கரப்பான் பூச்சி தொல்லை இருக்காது.
* நாம் தினமும் பயன்படுத்தும் மிக்சி ஜாரினை எவ்வளவு தான் சுத்தமாக கழுவி வைத்தாலும் அதில் சின்ன துகள்கள் அதில் ஒட்டி தான் இருக்கும். எனவே இதனை சுத்தமாக வைத்திருக்க மிக்சி ஜாரில் காய்ந்த எலுமிச்சை தோல் துண்டுகளாக நறுக்கி சேர்க்க வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் வாஷிங் லிக்யூட் மற்றும் ஒரு ஸ்பூன் உப்பு ஆகியவற்றை சேர்த்து அடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். மிக்சி ஜார் சுத்தமாக இருக்கும். இந்த கலவையை கீழே ஊற்றாமல் இதனை பாத்திரம் கழுவதற்கும் இந்த லிக்யூடை பயன்படுத்திக் கொள்ளலாம்.
* குக்கரில் சிலநேரம் நாம் பருப்பு வேக வைக்கும்போதோ அல்லது சாதம் வைக்கும் போதோ வெளியே பொங்கி வழியும் இதனை தடுப்பதற்கு குக்கரில் ரப்பர் போடும் இடத்தில் சிறய பிரஷ் கொண்டு சிறிதளவு எண்ணெய் தடவி விட்டு குக்கரை மூடி அடுப்பில் வைத்தால் பொங்கி வெளியே வராது.
* உங்களது வீட்டில் அதிக பல்லி தொந்தரவுகள் இருக்கிறதா? அப்படி இருந்தால் ஒரு சிறிய கிண்ணத்தில் வெங்காயத்தை தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் ஒரு மூடி டெட்டாயில் ஊற்றி கலந்து பல்லி வரும் இடங்களில் ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி ஆங்காங்கே தெளித்து விட்டால் பல்லி தொந்தரவுகள் இருக்காது.
* நாம் வீட்டில் சாமி படங்களுக்கு போடப்படும் பூக்களை வெளியே தூக்கி போட்டு விடுவோம். இனி அதனை தூக்கி எறியாமல் நாம் தினமும் பயன்படுத்தும் பூக்களை நிழலில் காயவைத்து மிக்சியில் போட்டு பொடித்துக்கொள்ள வேண்டும். அதனை ஒரு பிளேட்டில் கொட்டி அதில் 3 ஸ்பூன் சந்தனப்பொடி, ஒரு ஸ்பூன் பச்சைகற்பூரம், அடுத்து ஏதாவது ஊதுபத்தி, அதாவது ஊதுபத்தியின் மேல் உள்ள துண்டுகளை உதிர்த்து போட்டு அதில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து நன்றாக பிசறி எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் ரோஸ்வாட்டர் கொண்டு பிசைந்து முக்கோண வடிவில் செய்துகொள்ள வேண்டும். இதனை காய வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். சாம்பிராணிக்கு பதிலாக இதனை தினமும் பயன்படுத்தலாம்.
* சிலருக்கு உடலி வியர்வை நாற்றம் அதிகமாக இருக்கும் அவர்கள் சருவத்தில் உள்ள கெட்ட அழுக்கு வாடைகள் மற்றும் வியர்வை நாற்றத்தில் இருந்து விடுபட ஒரு காட்டன் துணியில் எலுமிச்சை தோல்கள் 2 துண்டு, வேப்பிலை ஒரு கைப்பிடி, காய்ந்த வேப்பிலையாக கூட இருக்கலாம். இதனை ஒன்றாக ஒரு காட்டன் துணியில் போட்டு அதனை நன்றாக கட்டி நாம் குளிக்கும் தண்ணீர் பக்கெட்டில் போட்டுவிட்டு 10 நிமிடம் கழித்து அந்த தண்ணீரில் குளித்து வந்தால் தேவையற்ற வாசனைகள் வராது.
- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
- ஸ்கூல் ஸ்நாக்காகவும் கொடுத்துவிடலாம்.
காலை சிற்றுண்டியாக தினமும், இட்லி, தோசை, உப்புமா, என்று சாப்பிட்டு அலுத்து போனவர்களுக்கு இந்த வாழைப்பழம் பிரட் டோஸ்ட் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். செய்வதும் எளிதானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு இதனை ஸ்கூல் ஸ்நாக்காகவும் கொடுத்துவிடலாம் அல்லது ஈவ்னிங் ஸ்நாக்காகவும் செய்து கொடுத்து அசத்தலாம்.
தேவையான பொருட்கள்:
பிரட் துண்டுகள்- 1
வாழைப்பழம்- 2
முட்டை- 1
சர்க்கரை- 4 ஸ்ப்பூன்
தேங்காய்துருவல்- ஒரு கப்
செய்முறை:
வாழைப்பழங்களை தோலுரித்து அதனை வட்ட வடிவங்களாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு முட்டையை ஒரு பவுளில் உடைத்து ஊற்றி அதில் சிறிதளவு சர்க்கரை, 5 ஸ்பூன் பால் சேர்த்து நன்றாக அடித்து கலக்கி கொள்ள வேண்டும்.
வாணலியை அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் நெய்விட்டு காய்ந்ததும் அதில் வாழைப்பழ துண்டுகள் மற்றும் அதன்மேல் சர்க்கரை, தேங்காய் துருவல்களை தூவி பிரட்டி எடுக்க வேண்டும். இதனை தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதன்பிறகு பிரட் துண்டுகளை எடுத்து அதன் ஓரங்களை வெட்டி விட்டு அதனை சப்பாத்தி தேய்க்கும் கட்டையால் பிரட்டுகளை தட்டையாக தேய்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் நடுவே வாழைப்பழங்களை வைத்து ரோல் செய்ய வேண்டும். இவ்வாறு அனைத்து ரோல்களையும் செய்து அடுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் தோசை தவாவை அடுப்பில் வைத்து அதில் நெய் விட்டு காயந்ததும் இந்த பிரட் ரோல்களை எடுத்து முட்டை கலவையில் முன்னும் பின்னுமாக புரட்டி எடுத்து தோசை தவாவில் சேர்க்க வேண்டும். இதனை திருப்பி திருப்பி போட்டு டோஸ்ட் செய்து எடுக்க வேண்டும். அருமையான வாழைப்பழ பிரட் டோஸ்ட் தயார்.
- புட்டு ஒரு ஆரோக்கியமான உணவு.
- கோதுமை புட்டு, கேழ்வரகு புட்டு, சிவப்பரிசி புட்டு என பல வகைகள் உள்ளன.
புட்டு ஒரு ஆரோக்கியமான உணவு. இதில் கோதுமை புட்டு, கேழ்வரகு புட்டு, சிவப்பரிசி புட்டு என பல வகைகள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான புட்டு பிடிக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் ஆக சிப்ஸ் உள்ளிட்டவற்றை கொடுப்பதற்கு பதிலாக ஆவில் வேகவைத்து செய்யும் பலகாரங்கள் போன்றவற்றை செய்து கொடுக்கலாம். செட்டிநாடு ஸ்பெஷல் ரங்கூன் புட்டு எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க...
தேவையான பொருட்கள்
ரவை -ஒரு டம்ளர்
வெல்லம்-100 கிராம்
ஏலக்காய் -3
நெய்- தேவையான அளவு
தேங்காய்- அரை மூடி
திராட்சை-6
முந்திரி பருப்பு -15
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 100 கிராம் வெல்லத்தை போட்டு அது மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும். வெல்லம் முழுமையாக உருகியது அதை அடுப்பில் இருந்து இறக்கி ஆறியதும், அதை வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியில் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து அதில் முந்திரியை சேர்த்து வறுக்க வேண்டும். முந்திரி நிறம் மாற ஆரம்பிக்கும் போது அதில் திராட்சையை சேர்த்து வறுக்க வேண்டும். இவை இரண்டையும் வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது அதே வாணலியில் அரை மூடி தேங்காயை எடுத்து நன்றாக வறுக்க வேண்டும். தேங்காய் நெய்யில் பொன்னிறமாக மாறியதும், அதையும் வேறு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.
மீண்டும் அதே வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து அதில் ரவையை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து, ரவையை நன்றாக, அதே நேரத்தில் கருகிவிடாமல் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ரவை சிவக்க ஆரம்பிக்கும் போது அதில் ஏற்கனவே வடிகட்டி எடுத்து வைத்த வெல்லப்பாகை சேர்க்க வேண்டும். இப்போது அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விட வேண்டும். வெல்லம் முழுமையாக ரவையில் மிக்ஸ் ஆனதும், அதில் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு நன்றாக கிளறி விட வேண்டும். அதில் அரைஸ்பூன் ஏலக்காய் பவுடர் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
பின்னர் ஏற்கனவே வறுத்து வைத்த முந்திரி திராட்சை, தேங்காய் ஆகியவற்றை இதில் சேர்க்க வேண்டும். இப்போது அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூடி போட்டு 5 நிமிடம் வரை வேக விட வேண்டும். பின்னர் இதில் தேவையான அளவு நெய் சேர்த்து நன்றாக கிளறி விட்டால், சுவையாக ரங்கூன் புட்டு தயார்.






