search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    இந்த வார சமையல் டிப்ஸ் உங்களுக்காக...
    X

    இந்த வார சமையல் டிப்ஸ் உங்களுக்காக...

    • தோசை வார்க்கும்போது மாவில் சிறிது கடலை மாவு சேர்த்துக்கொள்ளலாம்.
    • சாதம் வடித்த தண்ணீரில் சூப் செய்தால் சுவையாக இருக்கும்.

    இல்லத்தரசிகளின் மிகப்பெரிய ஆசைகளின் ஒன்று, தினமும் தனது கணவர், பிள்ளைகளுக்கு வகைவகையான ருசிகளில், உணவு வகைகளை சமைத்து தருவதாக தான் இருக்கிறது. சின்னச்சின்ன விஷயங்கள் கூட உங்கள் சமையலை மிகச்சிறப்பாக்கிவிடும். இல்லத்தரசிகளுக்கு உதவியாக இருக்க சில் சமையல் டிப்ஸ் உங்களுக்காக...

    * தேங்காய் சட்னி அரைக்கும்போது மல்லி தழையை சிறிது வதக்கி சேர்த்தால் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

    * உளுந்து வடை மொறுமொறுவென்றும், மிருதுவாகவும் இருக்க வேண்டுமா? உளுந்து அரைக்கும்போது அதில் வேகவைத்த உருளைக்கிழங்கு போட்டு அரைத்தால் போடும். உளுந்து வடை மிருதுவாக இருப்பதோடு எண்ணெய்யும் அதிகம் உறிஞ்சாது.

    * மணத்தக்காளி கீரையை சமைத்தால் சிறிது கசப்பு தெரியும். அது தெரியாமல் இருக்க, கீரையோடு சிறிது பீட்ரூட் துண்டை சேர்த்து பொரியல், துவையல் செய்யலாம். கசப்பு தெரியாமல் இருப்பதோடு சுவையும் கூடும்.

    * வீட்டில் காய்கறி சூப் செய்யும்போது தண்ணீர் ஊற்றி காய்கறிகளை வேக வைப்பதை விட, சாதம் வடித்த தண்ணீர் ஊற்றி சூப் தயாரித்தால் சுவையாக இருக்கும். சத்தும் மிகுந்திருக்கும்.

    * சர்க்கரை பொங்கல் தயாரிக்கும்போது வெல்லத்தை அப்படியே போட்டால் கரைவதற்கு நேரம் கூடுதலாகும். பாத்திரத்தின் அடியிலும் பிடிக்கும். அதனை தவிர்க்க வெல்லத்தை காய்கறி சீவும் உபகரணத்தில் சீவி, சேர்த்தால் சீக்கிரம் கரைந்துவிடும். அடியிலும் பிடிக்காது.

    * முட்டை வேக வைக்கும் பாத்திரத்தில் ஒருவித வாடை வீசும். அதில் சிறிது சாதம் வடித்த தண்ணீரை ஊற்றி, ஊறவைத்துவிட்டு கழுவலாம். வாடை நீங்கிவிடும்.

    * தோசை வார்க்கும்போது மாவில் சிறிது கடலை மாவு சேர்த்துக்கொள்ளலாம். அப்படி கடலை மாலை கலக்கி வார்த்தால் தோசை மொறுமொறுவென்றும், நிறமாகவும் இருக்கும்.

    * சிக்கன் 65 தயார் செய்யும்போது எல்லா மசாலா கலவையையும் போட்டு ஊற வைத்து பொறிப்பதற்கு முன்பு சோளமாவை சேர்த்தால் பிசுபிசுப்பு இல்லாமல் மொறுமொறுவென்று இருக்கும்.

    Next Story
    ×