என் மலர்
நீங்கள் தேடியது "வால்நட் பர்பி"
- ஆரோக்கியமான நொறுக்குத் தீனியாக கொடுக்கலாம்.
- மெல்லியதாக நறுக்கிய பாதாமை அலங்காரமாக தூவலாம்.
பருப்பு வகையை சேர்ந்த வைட்டமின்கள் தாதுக்கள், ஒமேகா கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து என பல்வேறு சத்துக்களை கொண்டது. குழந்தைகளுக்கு இதை ஆரோக்கியமான நொறுக்குத் தீனியாக கொடுக்கலாம். அந்த வகையில் வால்நட் பருப்பைக்கொண்டு சுவையான பர்பி செய்யும் முறையை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
வால்நட் பருப்பு- 2கப்
நெய் 6 டீஸ்பூன்
வெல்லம் 2 கப் (பொடித்தது)
சுக்கு பொடி -1 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி 1 டீஸ்பூன்
செய்முறை:
வால்நட் பருப்புகளை ஒன்றிரண்டாக நறுக்கிக் கொள்ளவும், அகலமான நான்-ஸ்டிக் கடாயில் 2 டீஸ்பூன் நெய்யை ஊற்றவும். அது உருகியதும் வால்நட்டை அதில் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். பின்பு அதை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கால் கப் அளவு தண்ணீர் ஊற்றி, அதில் பொடித்த வெல்லத்தைப் போட்டு மிதமான தீயில் பாகு தயாரிக்கவும். பின்பு அதனுடன் ஏலக்காய் பொடி. சுக்கு பொடி மற்றும் வறுத்த வால்நட் பருப்புகளை போட்டு கலக்கவும். இப்போது அதில் சிறிது சிறிதாக நெய் ஊற்றி நன்றாகக் கிளறி இறக்கவும்.
நெய் தடவிய தட்டில் இந்தக் கலவை யைப் போட்டு, சமமாக பரப்பி வைக்கவும். அது சற்றே ஆறிய பின்பு உங்களுக்கு விருப்பமான வடிவில் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். இப்போது ஆரோக்கியமான 4 'வால்நட் பர்பி தயார். அதன் மேலே நெய்யில் வறுத்த வெள்ளை எள். மெல்லியதாக நறுக்கிய பாதாம் போன்றவற்றை அலங்காரமாக தூவலாம்.






