search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "green gourd wash"

    • உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும்
    • அஜூரணக்கோளாறு சரியாகும்.

    தேவையான பொருட்கள்

    பச்சை சுண்டைக்காய் – ஒரு கப்

    சீரகம்- ஒரு ஸ்பூன்

    கடலைபருப்பு- 3 ஸ்பூன்

    கருவேப்பிலை – இரண்டு கொத்து

    வரமிளகாய் – ஆறு

    புளி – நெல்லிக்காய் அளவு

    இஞ்சி – இரண்டு இன்ச்

    எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்

    உப்பு – தேவையான அளவு

    தாளிக்க: நல்லெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

    கடுகு – அரை ஸ்பூன்

    உளுந்து – அரை ஸ்பூன்

    செய்முறை:

    முதலில் பச்சை சுண்டைக்காய்களை இரண்டாக வெட்டி நன்றாக தண்ணீரில் கழுவி எடுத்து வைக்க வேண்டும். பின்னர் அடுப்பை பற்றவைத்து அதில் ஒரு வாணலியை வைத்து இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பச்சை சுண்டைக்காயை போட்டு நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து இரண்டு கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு, சீரகம், கருவேப்பிலை, புளி, ரெண்டு இன்ச் இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் சேர்த்து நன்கு சுருள வதக்க வேண்டும். அப்போது தான் இஞ்சியின் காரம் அதிகமாக இருக்காது. இஞ்சி சுருள வதங்கியதும் வரமிளகாய்களை காம்பு நீக்கி இரண்டாக உடைத்து சேர்த்து லேசாக வறுக்க வேண்டும். இவற்றை தனியாக எடுத்துக் கொள்ளுங்கள்.

    பின்னர் அதே எண்ணெயில் ஏற்கனவே வதக்கி வைத்துள்ள பச்சை சுண்டைகாய்களை சேர்த்து நன்கு வதக்குங்கள். வதக்கும் பொழுது நிறம் மாற ஆரம்பிக்கும். பச்சை நிறமாக இருந்து, வெள்ளையாக மாற ஆரம்பிக்கும். அதுவரை நன்கு வதக்குங்கள். அப்போது தான் சுண்டைக்காயின் கசப்பு தெரியாது.

    பின்னர் ஒரு மிக்சி ஜாரில் வதக்கிய சுண்டைக்காய், தேவையான அளவிற்கு உப்பு ஆகியவற்றை சேர்த்து நைசாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதற்கு ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தப்பருப்பு சேர்த்து சிறு தாளிப்பு கொடுக்க வேண்டும்.

    இதனை சூடான சாதத்தில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி இந்த சுண்டைக்காய் துவையலை சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும், அஜூரணக்கோளாறு சரியாகும். வயிற்றில் உள்ள புழுக்கள் அழியும்.

    ×