என் மலர்
சமையல்
- பச்சரிசி தோசைக்கு இரண்டு ஓம இலையை சேர்த்து அரைத்தால் சுவையும், மணமும் கூடும்.
- அவரைக்காயை உணவில் கூடுதலாகச் சேர்த்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.
* தேங்காய் பால் எடுக்கும்போது சிறிதளவு சமையல் உப்பை சேர்த்தால் பால் கூடுதலாக கிடைக்கும்.
* பஜ்ஜி, பூரிக்கு மாவு பிசையும்போது அதில் ஒரு டீஸ்பூன் சூடான எண்ணெய்யை சேர்த்து மாவு பிசைந்தால் எண்ணெய் அதிகம் உறிஞ்சாது.
* காய்கறிகளை வேகவைக்கும்போது, அவை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்தால் போதும். அதிக தண்ணீர் சேர்ப்பது எரி பொருள் செலவை அதிகப் படுத்தும்.
* சேனைக்கிழங்கை வறுவல் செய்யும் முன்பு அதனை வேக வைத்து எடுத்தால் சுவையாக இருக்கும்.
* தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்து சமைத்தால் ருசியாக இருக்கும்.
* கோதுமை மாவுடன் இளநீரை ஊற்றி பிசைந்தால் சப்பாத்தி ருசியாக இருக்கும்.
* வெண்ணெய்யை காய்ச்சி இறக்கும்போது அரை டீஸ்பூன் வெந்தயம் சேர்த்தால் நெய் மணக்கும்.
* பச்சரிசி தோசைக்கு இரண்டு ஓம இலையை சேர்த்து அரைத்தால் சுவையும், மணமும் கூடும்.
* குளோப் ஜாமூன் மாவுடன் சிறி தளவு நெய் சேர்த்து பிசைந்தால் ஜாமூன் மிருதுவாக இருக்கும்.
* அவரைக்காயை உணவில் கூடுதலாகச் சேர்த்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.
* எந்த கீரையை சமைத்தாலும் தேங்காய் எண்ணெய்யில் தாளித்தால் சுவையும், மணமும் கூடும்.
* பொங்கல் செய்யும்போது தண்ணீருடன் நெய் அல்லது டால்டா சேர்த்தால் பாத்திரத்தில் பொங்கல் ஒட்டாது.
- பண்டிகை அல்லது பார்ட்டி நேரங்களில் செய்து அசத்துங்கள்.
- சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
பொதுவாகவே அனைவருக்கும் மாலை நேரத்தில் ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற ஆசை அதிகமாவே இருக்கும். அதிலும் அதிகமானோர் மாலை நேரத்தில் அதிகமாக கேக் வாங்கி சாப்பிடுவார்கள். இந்த கேக் யாருக்கு தான் பிடிக்காது? வீட்டில் இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆகவே இதை இலகுவான முறையில் எப்படி விரைவாக செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
ஸ்ட்ராபெர்ரி- இரண்டு கப் (இரண்டாக நறுக்கியது)
வாழைப்பழம்- இரண்டு கப்
கஸ்டட் பவுடர்- 3 ஸ்பூன்
பால்- 1 லிட்டர்
பிரட் துண்டுகள்- 6
கண்டன்ஸ்டு மில்க்- ஒரு கப்
ஜெலட்டின்
வெனிலா எக்ஸ்ட்ராக்ட்- கால் டீஸ்பூன்
செய்முறை:
அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும். பின்னர் சிவப்பு நிறம் கொண்ட ஜெலட்டின் பவுடரை அதில் போட்டு கொதிக்க விட வேண்டும். எல்லாம் கரைந்து கொதித்தவுடன் தனியாக எடுத்து வைக்க வேண்டும்.
அதன்பிறகு வேறு ஒரு அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்ச வேண்டும். பால் நன்றாக காய்ந்ததும் அதில் கஸ்டட் பவுடரை போட்டு கலக்க வேண்டும். பின்னர் அதில் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து கலக்க வேண்டும். பின்னர் அதில் வெனிலா எக்ஸ்ட்ராக்ட் ஊற்ற வேண்டும். அந்த கலவை க்ரீம் பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு தனியே எடுத்து வைக்க வேண்டும்.
ஸ்ட்ராபெர்ரி மற்றும் வாழைப்பழங்களை வெட்டி ஒரு பவுலில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு வட்ட வடிவில் உள்ள கண்ணாடி பாத்திரம் அல்லது கேக் செய்ய பயன்படுத்தும் மோல்டில் முதலில் பிரட் துண்டுகளை வரிசையாக வைக்க வேண்டும். அதன் மேல் சிவப்பு நிற ஜெலட்டின் கலவையை அதன் மீது படுமாறு ஊற்ற வேண்டும். பிறகு ஸ்ட்ராபெர்ரி மற்றும் வாழைப்பழங்களை அதன்மீது தூவ வேண்டும்.
அதன்பிறகு நாம் ஏற்கனவே செய்து வைத்துள்ள கஸ்டட் கலவையை அதில் எடுத்து ஊற்ற வேண்டும். எல்லா பக்கமும் ஒருசேர படுமாறு ஊற்ற வேண்டும். பின்னர் அதன் மேல் ஜெலட்டில் நீரை ஊற்ற வேண்டும். அதன்பிறகு மறுபடியும் ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழங்களை தூவ வேண்டும். இதனை ஃப்ரிட்ஜில் ஒரு மணிநேரம் வைக்க வேண்டும். (குறிப்பு- ஃப்ரீசரில் வைக்க கூடாது)
அதன்பிறகு எடுத்து பரிமாறலாம். சுவையான ஸ்ட்ராபெர்ரி கஸ்டட் ஜெல்லி கேக் தயார். பண்டிகை அல்லது பார்ட்டி நேரங்களில் செய்து அசத்துங்கள்.
- முந்திரி கொத்தில் பல்வேறு சத்துக்கள் இருக்கின்றன.
- முந்திரி கொத்து அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு பண்டம்
பிரசித்திபெற்ற இனிப்புகளில் ஒன்று தான் முந்திரிகொத்து. பாசிபருப்பை கொண்டு செய்யக்கூடிய இந்த இனிப்பு பண்டம் மிகவும் சுவையாக இருக்கும். இதனால் அனைவராலும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு இனிப்பு பண்டமாக முந்திரி கொத்து விளங்குகிறது.
முந்திரி கொத்தில் பல்வேறு சத்துக்கள் இருக்கின்றன. அவற்றை உண்பதால் நமது உடலுக்கு தேவையான பல சத்துக்கள் கிடைக்கின்றன. அந்தவகையில் முந்திரி கொத்து அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு பண்டமாக திகழ்கிறது.
பண்டிகை நாட்களில் இந்த முந்திரி கொத்து ரெசிபியை நிறைய பேர் வீடுகளில் செய்வார்கள். சாதாரணமாக இருக்கும் நாட்களில், ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் தேவை என்றால் கூட இதை செய்து டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளலாம். 15 நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாது.
தேவையான பொருட்கள்:
பச்சைபயறு- ஒரு கப்
ஏலக்காய் - 5
தேங்காய் துருவல்- ஒரு கப்
எள்ளு- 2 ஸ்பூன்
வெல்லம்- ஒருகப்
மேல்மாவிற்கு:
அரிசி மாவு- ஒரு கப்
கான்பிளவர் மாவு - ஒரு ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
செய்முறை
அடுப்பில் ஒரு கடாயை வைத்து, பச்சை பயிறு போட்டு வறுக்க வேண்டும். பச்சை பயிறு நிறம் மாறி பொன்னிறம் வரும் வரை வறுபட்டு வர வேண்டும். கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். வருபட்ட பச்சைப் பயிரை ஒரு தட்டில் மாற்றி நன்றாக ஆர வைக்க வேண்டும். ஆறிய பின்பு இந்த பச்சை பயிரை மிக்சி ஜாரில் போட்டு கூடவே மூன்று ஏலக்காய்களை போட்டு, கொரகொரப்பாக அரைத்து தனியாக ஒரு கிண்ணத்தில் கொட்டிக் கொள்ள வேண்டும். பச்சை பயிறு 90 சதவிகிதம் அரைபட்டால் போதும்.
அடுத்து அதே கடாயில் ஒரு கப் அளவு தேங்காய் துருவல், எள்ளு போட்டு பிரவுன் கலர் வரும் அளவிற்கு கைவிடாமல் வறுக்க வேண்டும். தேங்காய் நன்றாக வறுபடவில்லை என்றால், தயார் செய்த முந்திரிக்கொத்து சீக்கிரம் கெட்டுப் போய்விடும்.
பின்னர் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள பச்சைபயறு பொடியை அதோடு கொட்டி, தேங்காய், எள் கொட்டி கலந்து கொள்ளுங்கள். இப்போது ஒரு பவுலின் வறுத்து அரைத்த பச்சை பயிறு, தேங்காய், எள்ளு சேர்த்த கலவை தயாராக உள்ளது.
இந்த மூன்று பொருட்களையும் ஒரு கரண்டியை போட்டு கலந்து அப்படியே வைத்து விடுங்கள். இதில் வெல்லப்பாகு கரைசலை ஊற்றி பிசைய வேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து வெல்லம் போட்டு, கால் கப் அளவு தண்ணீர் ஊற்றி வெல்லத்தை கரைத்து, வெல்லம் லேசாக பிசுபிசுப்பு பக்குவம் வந்ததும் இந்த வெல்லம் சூடாக இருக்கும்போதே பச்சை பயிறு தேங்காய் துருவல் கலவையில் ஊற்றி ஒரு கரண்டியை வைத்து கலக்க வேண்டும்.
ஓரளவுக்கு கை பொறுக்கும் சூடு வந்தவுடன் சிறிய சிறிய உருண்டைகளாக தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஆறிவிட்டால் இது உருண்டை பிடிக்க வராது. இப்போது இந்த உருண்டைகளை ஒரு தட்டில் வைத்து அப்படியே ஆற வைத்து விட்டால், உருண்டைகள் எல்லாம் உடையாமல் கமர்கட்டு போல கட்டி பிடித்து வரும்.
இப்போது முந்திரி கொத்துக்கு, மேல் மாவு தயார் செய்ய வேண்டும். ஒரு அகலமான பவுலில் அரிசி மாவு 1 கப், கான்பிளவர் மாவு அல்லது மைதா மாவு உங்கள் வீட்டில் எது இருக்கிறது அது 2 ஸ்பூன் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், போட்டு எல்லா பொருட்களையும் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மாவை கரைக்க வேண்டும்.
மாவு கொஞ்சம் கட்டி பதத்தில் தான் இருக்க வேண்டும். ரொம்பவும் தண்ணீராக கரைத்து விடக்கூடாது. இப்போது தயார் செய்து வைத்திருக்கும் பாசிப்பயறு உருண்டைகள் இருக்கிறது அல்லவா, அதில் மூன்றை ஒன்றாக எடுத்து இந்த மாவில் தோய்த்து சுட சுட எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். அதனால் தான் இதன் பெயரே முந்திரிக்கொத்து. தயார் செய்து வைத்திருக்கும்
உருண்டைகளை கொத்தாக எடுத்து தான் மாவில் போட வேண்டும். உங்களுக்கு மூன்று உருண்டைகளை ஒன்றாக எடுத்துப் போட முடியவில்லை என்றால் இரண்டு உருண்டைகளாக மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். அவ்வளவு தான். பாரம்பரிய சுவையில் முந்திரிக்கொத்து தயார்.
- எல்லா வயது ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஏற்றது.
- உடற்பயிற்சிக்கு பிறகு இந்த ஸ்மூத்தியை குடிக்கலாம்.
இந்த ஸ்மூத்தி எல்லா வயது ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஏற்றது. ஸ்மூத்தியில் சரியான பொருட்களை சேர்ப்பதன் மூலம் உடல் பருமனையும் குறைக்கலாம்.
இந்த கொழுப்புகளற்ற ஸ்மூத்தியை சுலபமாக வீட்டிலேயே தயார் செய்து குடிக்க முடியும். தன்னுடைய தினசரி உடற்பயிற்சிக்கு பிறகு இந்த ஸ்மூத்தியை குடிக்கலாம். அல்லது காலை உணவாக உங்களது டயட் லிஸ்டிலும் சேர்த்துக்கொள்ளலாம். உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான ஸ்மூத்தியுடன் உங்களுடைய நாளை தொடங்கினால் அன்றைய நாள் முழுவதும் ஆற்றலுடனும் புத்துணர்ச்சியாகவும் செயல்படலாம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த ஸ்மூத்தியை ட்ரை செய்து பாருங்கள். உங்களது பயனுள்ளதாக இருக்கும்
தேவையான பொருட்கள்
வாழைப்பழம்-1
பேரிச்சை-2
வேர்க்கடலை- 3 ஸ்பூன்
பால்- 100 மி.லி
தேன்- ஒரு ஸ்பூன்
காபி தூள்- ஒரு சிட்டிகை
செய்முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றன்பின் ஒன்றாக மிக்சி ஜாரில் போட்டு அதில் பால் மற்றும் ஐஸ்கியூப் சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும். இதனை ஒரு டம்ளரில் ஊற்றி பரிமாறலாம். தினமும் காலை அல்லது இரவு உணவாக சாப்பிட்டு வர உடல் எடை குறைய வாய்ப்புகள் அதிகம்.
- மழைக்காலத்தில் சுட சுட மொறு மொறுவென்று செய்து கொடுங்கள்.
- சத்தமில்லாமல் அனைத்தையும் சாப்பிட்டு முடித்து விடுவார்கள்.
இந்த மழைக்காலத்தில் சுட சுட மொறு மொறுவென்று செய்து கொடுங்கள். சத்தமில்லாமல் அனைத்தையும் சாப்பிட்டு முடித்து விட்டு மறுமுறை கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். வாங்க! இதனை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
பள்ளி முடித்து பசியோடு வரும் குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பி சாப்பிடும் சூப்பரான ஒரு ரெசிபியை பார்க்கலாம். குழந்தைகளுக்கு பிடித்த உணவு வகைகளில் கார்னும் ஒன்று. மேலும் அது பல ஆரோக்கிய நலனையும் தருகிறது. அப்படிப்பட்ட கார்ன் மற்றும் சீஸ் வைத்து அட்டகாசமான சுவையில் சீஸ் கார்ன் பிரெட் டோஸ்ட் வீட்டில் சுலபமாக எப்படி செய்வது என்று இந்த பதின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
பிரெட் துண்டுகள்- 10
சுவீட் கார்ன் -ஒரு கப் (வேகவைத்தது)
சீஸ்- ஒரு கப் (துருவியது)
சில்லிபிலேக்ஸ்- ஒரு ஸ்பூன்
சீசனிங்- ஒரு ஸ்பூன்
மிளகுத்தூள்
கொத்தமல்லி தலை- ஒரு கப்பிடி
டொமேட்டோ சாஸ்- தேவையான அளவு
மயோனிஸ்- தேவையான அளவு
செய்முறை:
பிரெட் துண்டுகளை அதன் ஓரங்களை நீக்கிவிட்டு அதனை வட்ட மூடிகளை கொண்டு வட்டமான வடிவில் வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை ஒரு பிளேட்டில் வரிசையாக அடுக்கிக்கொள்ள வேண்டும்.
அதன்பிறகு ஒரு சிறிய பவுலில் துருவிய சீஸ், வேகவைத்த கார்ன், சில்லிபிளேக்ஸ், சீசனிங், மிளகுத்தூள், கொத்தமல்லி தலைகள் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது வட்டமாக வெட்டி வைத்துள்ள பிரெட் துண்டுகளை எடுத்து அதில் முதலில் டொமேட்டோ சாஸ் தடவ வேண்டும் அதன்பிறகு அதற்கு மேலே மயோனிஸ் தடவ வேண்டும். அதற்கு பிறகு நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள சீஸ் கார்ன் கலவையை எடுத்து பிரெட்டில் வைக்க வேண்டும்.
பின்னர் தோசை தவாவை அடுப்பில் வைத்து காய்ந்ததும் அதில் வெண்ணெய் தடவி பிரெட் துண்டுகளை வைத்து 10 நிமிடத்திற்கு மூடி போட்டு டோஸ்ட் செய்ய வேண்டும். 10 நிமிடம் கழித்து எடுத்தால் சுவையான, ரிச்சான சீஸ் கார்ன் பிரெட் டோஸ்ட் தயார். சூடாக பரிமாறவும்.
- செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும்.
- காளான் மிளகு சாதத்தை முயற்சி செய்துபாருங்கள்
தினமும் மதிய வேளையில் ஒரே மாதிரியான சமையல் செய்து போர் அடித்திருந்தால், இந்த காளான் மிளகு சாதத்தை முயற்சி செய்யுங்கள். இன்னும் சூப்பராக இருப்பதுடன், செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்
காளான்- ஒருகப்
சோம்பு- ஒரு ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது- கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை- சிறிதளவு
பச்சைமிளகாய்- 4
வெங்காயம்- 2 (நறுக்கியது)
மிளகுத்தூள்- ஒரு ஸ்பூன்
தனியா தூள்- ஒரு ஸ்பூன்
கரம் மசாலாதூள்- ஒரு ஸ்பூன்
செய்முறை
அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் அதில் ஒரு குழிக்கர்ண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சோம்பு, வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்க வேண்டும். பின்னர் இஞ்சிபூண்டு விழுந்து சேர்த்து பச்சை வாசனை போகும் அளவுக்கு வதக்க வேண்டும்.
அதன்பிறகு மஞ்சள்தூள், காளான், தனியா தூள், கரம்மசாலா தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து வதக்க வேண்டும் மசாலா பச்சை வாசனை போனபிறகு அதில் ஏற்கனவே வேகவைத்து எடுத்துள்ள சாதத்தினை அதனுடன் சேர்த்து கிளற வேண்டும். காளான் மசாலாவுடன் சாதம் ஒன்றாக கலந்து வரும் வரை கிளற வேண்டும். இறக்கும் போது கொத்தமல்லி தலை போட்டு இறக்க வேண்டும்.
- ஒரு நேர்த்தியான உணவு வகைகளை கொண்டது.
- மத்திய கிழக்கு நாடுகளில் விற்கப்படும் துரித உணவு
லெபனான் உணவு, மசாலா, சர்க்கரை மற்றும் எல்லாவற்றிலும் இனிமையானது. லெபனான் வரலாறு முழுவதும் பல நாகரிகங்களின் மையமாக உள்ளது. அவை ஒவ்வொன்றும் அதன் சொந்த சமையல் குறிப்புகளையும் உணவை தயாரிப்பதற்கான தனித்துவமான வழியையும் கொண்டு வந்துள்ளன, சுவையான உணவுகள் நிறைந்த ஒரு நேர்த்தியான உணவு வகைகளை கொண்டது.
இப்போது சுவையான லெபனான் ஸ்பெஷல் உணவான ஃபலாஃபெல் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். இதை தஹினி சாஸ்சுடன் சாப்பிட மிகவும் சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
வெள்ளை கொண்டைக்கரலை- 200 கிராம்
கொத்தமல்லி தலை- ஒரு கப்
பச்சைமிளகாட்-4
பூண்டு- 4
வெங்காயம்- 2
உப்பு- தேவையான அளவு
வெள்ளை எள்ளு- 3- ஸ்பூன்
சீரகத்தூள்- 1 ஸ்பூன்
செய்முறை:
கொண்டை கடலையை முதல் நாள் இரவே ஊறவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு மிக்சி ஜாரில் ஊறவைத்த கொண்டைக்கடலை, அதனுடன் கொத்தமல்லி தலை, பச்சைமிளகாய், வெங்காயம், பூண்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் சீரகத்தூள், வெள்ளை எள் சேர்த்து நன்றாக பிசறி அதனை சிறிய உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதன்பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து பொறிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் உருட்டிய ஃபலாஃபெல் உருண்டைகளை சூடனா எண்ணெய்யில் பொறித்து எடுக்க வேண்டும். சுவையான ஃபலாஃபெல் தயார்.
தொட்டுக்கொள்ள தஹினி சாஸ்
வெள்ளை எள்ளை சுடுதண்ணீரில் போட்டு 10 நிமிடம் கழித்து பேஸ்ட் மாதிரி அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டுடன் 2 ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் சீரகத்தூள், துருவிய பூண்டு, உப்பு, சிறிதளவு கொத்தமல்லி தலை சேர்த்து கலந்தால் தஹினி சாஸ் தயார்.
இது லெபனான் மற்றும் எகிப்து, இஸ்ரேல் மற்றும் சிரியா போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள தெரு முனைகளில் விற்கப்படும் பிரபலமான துரித உணவு ஆகும். சைவ உணவு உண்பவர்கள் ஃபோலேட், புரதம் மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை விரும்புகிறார்கள்.
- ஆந்திரா புளி சட்னி தனித்துவ சுவை கொண்ட உணவாகும்.
- எந்த உணவுக்கும் தொட்டுக்கொள்ளலாம்.
தென்னிந்திய உணவுகளில் ஆந்திரா புளி சட்னி தனித்துவ சுவை கொண்ட உணவாகும். எந்த உணவுக்கும் தொட்டுக்கொள்ளலாம். அரைத்த வேர்க்கடலை விழுதில் தண்ணீர் கொஞ்சம் ஊற்றினால் இட்லி , தோசைக்கு தொட்டுக்கொள்ளலாம். ஆந்திரா ஸ்டைலில் காரசாரமான சட்னி எப்படி அரைப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
எள்ளு- 3 ஸ்பூன்
வேர்க்கடலை- ஒருகப்
கடலை எண்ணெய்- தேவையான அளவு
சின்னவெங்காயம்- 10
பச்சைமிளகாய்-10
புளி- தேவையான அளவு
பூண்டு- 4
தக்காளி- 1
தேங்காய்- ஒரு கப்
செய்முறை
ஒரு கடாயை அடுப்பில் வைத்து காய்ந்ததும் அதில் எள்ளை போட்டு வெடித்ததும் அதில் ஒரு கரண்டி கடலை எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் பச்சைமிளகாய், வெங்காயம், பூண்டு, புளி, வேர்க்கடலை, தக்காளி இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு அதனுடன் தேங்காய் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் இதனை மிக்சி ஜாருக்கு மாற்றி அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து எடுத்தால் ஆந்திரா ஸ்டைல் புளி சட்னி தயார்.இதனை கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்து பயன்படுத்தலாம்.
- தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கணிசமாக குறையும்.
- குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்
ஆரோக்கியம் நிறைந்துள்ள 'முளைக்கட்டிய கோதுமை தோசை' ஒரு வாரம் இதை சாப்பிட்டா குண்டா இருக்கிறவங்க ஒல்லி ஆகிடலாம்! குழந்தைகள் நான்றாக சாப்பிடுவதில்லை. அவர்களுக்கு சத்துள்ள உணவுகளை சமைத்துக்கொடுக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் இந்த முளைகட்டிய கோதுமை தோசை செய்து கொடுத்துபாருங்கள் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.
எந்த ஒரு தானியமாக இருந்தாலும் அதை அப்படியே பயன்படுத்துவதை விட சிறிது முளை கட்டிய பிறகு பயன்படுத்தினால் அதிக சத்துக்கள் நமக்கு கிடைக்கும். சாதாரணமாகவே கோதுமை தோசை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கணிசமாகக் குறைந்து விடும். சத்துள்ள முளைகட்டிய கோதுமை தோசை எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
தேவையான பொருட்கள்
கோதுமை- 1/4 கிலோ
கருப்பு உளுந்து- 50 கிராம்
வெந்தயம்- 1/4 டீஸ்பூன்
செய்முறை:
நீங்கள் ஒருமுறை கோதுமையை முளைகட்ட செய்து ப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால் போதும். ஒரு வாரம் வரை அது கெட்டுப்போகாது அப்படியே ப்ரஷ்ஷாக இருக்கும். தேவையான பொழுது எடுத்து சட்டுனு தோசை செய்து சாப்பிடலாம். முதலில் ஒரு டம்ளர் அளவிற்கு கோதுமையை அளந்து எடுத்துக் கொள்ளுங்கள். அதை தண்ணீர் ஊற்றி ஒரு முறை அல்லது இரு முறை கழுவி விட்டு பின்னர் மீண்டும் கோதுமை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். இதை நீங்கள் இரவே ஊற வைக்க வேண்டும். அப்பொழுது தான் மறுநாள் காலை வரை நன்கு ஊறி இருக்கும்.
காலையில் எழுந்து கோதுமையில் இருக்கும் தண்ணீரை வடிகட்டிவிட்டு கோதுமையை மட்டும் ஒரு காட்டன் வெள்ளை துணியில் போட்டு கட்டி வைத்து விடுங்கள். எட்டு மணி நேரத்திற்கு அது அப்படியே இருக்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் எடுத்து பார்த்தால் அது முளை கட்டி இருக்கும். கோதுமையை முளை கட்டிய பிறகு எடுத்து ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம். அல்லது தேவையான பொழுது செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
இப்போது அரை டம்ளர் அளவிற்கு கருப்பு முழுஉளுந்து மற்றும் அரை டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஓரிரு முறை நன்கு கழுவி சுத்தம் செய்த பின்பு தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். உளுந்து நன்கு ஊறினால் தான் உபரியாக நமக்கு மாவு கிடைக்கும். மூன்று மணி நேரத்திற்கு பிறகு தண்ணீரை வடிகட்டி உளுந்து மற்றும் வெந்தயத்தை ஒரு மிக்சி ஜாரில் சேர்க்க வேண்டும்.
இதனுடன் நீங்கள் முளை கட்டி வைத்துள்ள கோதுமையை சேர்க்க வேண்டும். தேவையான அளவிற்கு தண்ணீர் கொஞ்சமாக சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கெட்டியாக மிக்சியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த மாவுடன் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். கையால் கலந்தால் சீக்கிரம் மாவு புளிக்கும். குறைந்தபட்சம் 5 மணி நேரம் ஊற வைத்தால் சரியாக இருக்கும்.
முளைகட்டிய கோதுமை தோசை மாவு இப்பொழுது தயாராகி இருக்கும். அடுப்பை பற்ற வைத்து அதில் தோசைக்கல்லை காய விட்டு தோசை வார்த்தால் பேப்பர் தோசை போல சாஃப்டாக சூப்பராக தோசை வரும். சத்துள்ள இந்த முளைகட்டிய கோதுமை தோசை தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டால் எவ்வளவு குண்டாக இருப்பவர்களும், சற்று ஒல்லியாக விடுவார்கள். அதன் பிறகு நீங்கள் டயட் மெயின்டெயின் செய்து கொள்ளலாம்.
- சுத்தம் செய்த பிறகு இரும்பு பாத்திரங்களை வெயிலில் உலர்த்துவதும் அவசியம்.
- புளிப்பானது பாத்திரத்தில் படிந்து விரைவாக துருப்பிடிக்கச் செய்யும்.
சிறு வயதிலேயே நரைமுடி பிரச்சினை, கருப்பை நீர்க்கட்டி, தைராய்டு சுரப்பியில் கோளாறு என தற்போதைய இளைய தலைமுறை பல பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இதற்கு ஹீமோகுளோபின் போன்ற மைக்ரோ நியூட்ரியன்ட்களின் குறைபாடும் ஒரு காரணமாகும்.
இரும்பு பாத்திரங்களில் உணவு சமைப்பது, இதுபோன்ற நுண்ஊட்டச்சத்துக்கள் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கும், உடலில் ஆக்சிஜன் மற்றும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதற்குமான எளிய வழியாகும்.
அதேசமயம், இரும்பால் ஆன பாத்திரங்களை பாதுகாப்பான முறையில் பராமரிப்பது சற்றே சவாலான விஷயமாகும். இரும்பு பாத்திரங்களை அதிகநேரம் தண்ணீரில் வைப்பதை தவிர்க்க வேண்டும். சமைக்கும்போது உணவுப் பொருட்கள் இரும்பு பாத்திரத்தில் அடிப்பிடித்து இருந்தால். அவற்றை 15 நிமிடங்களுக்கு மிதமான சுடுநீரில் ஊற வைத்து தேய்த்தாலே சுத்தமாகிவிடும்.
இரும்பு பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு முடிந்தவரை இளம் சூடான நீரையே பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் அவை துருப்பிடிப்பதை தடுக்க முடியும். சுத்தம் செய்த பிறகு இரும்பு பாத்திரங்களை வெயிலில் உலர்த்துவதும் அவசியமானதாகும்.
புதிதாக வாங்கிய இரும்பு பாத்திரங்களை நேரடியாக சமையலுக்கு பயன்படுத்துவது சற்றே சிரமமானது. அதில் நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், ஆலிவ் எண்ணெய், செக்கு எண்ணெய் ஆகியவற்றில் ஏதாவது ஒரு எண்ணெய்யை நன்றாக பூசவும். பின்பு அதை அடுப்பில் வைத்து, ஒரு கைப்பிடி அளவு நறுக்கிய வெங்காயத்தை போட்டு மிதமான தீயில் வதக்க வேண்டும். 20 முதல் 40 நிமிடங்களுக்கு, வெங்காயம் கருகும் வரை வைத்திருந்து பின்னர் அடுப்பை அணைக்கவும்.
அதன்பிறகு பாத்திரத்தை கழுவி சுத்தம் செய்து வெயிலில் காய வைக்கவும். பின்பு அந்த இரும்பு பாத்திரத்தை எளிதாக சமையல் செய்ய பயன்படுத்த முடியும்.
புதிதாக வாங்கிய இரும்பு பாத்திரத்தில் தக்காளி. ஆப்பிள் சாஸ். புளி, வினிகர், ஒயின், எலுமிச்சை போன்ற புளிப்பு சுவை நிறைந்த உணவுகளை சமைப்பதை தவிர்க்க வேண்டும். புளிப்பானது பாத்திரத்தில் படிந்து அதை விரைவாக துருப்பிடிக்கச் செய்யும். ஆகையால் வாங்கிய ஒரு மாதம் வரை புளிப்பு உணவுகளை தவிர்த்து மற்ற உணவுகளை சமைக்கலாம்.
இரும்பு பாத்திரத்தை துடைத்து வைக்கும்போது அதில் சிறிது எண்ணெய் பூசி வைப்பது நல்லது. இதை உணர்த்தும் வகையிலேயே இரும்பு தோசைக்கல்லை அடிக்கடி தேய்த்து கழுவக்கூடாது என்று கூறுவார்கள்.
- ஸ்ட்ராபெர்ரி எல்லோருக்கும் பிடித்த பழம்.
- வைட்டமின் சி நிறைந்த இது குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும்.
ஸ்ட்ராபெர்ரி எல்லோருக்கும் பிடித்த பழம். வைட்டமின் சி நிறைந்த இது குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் ஜாமாக தயாரித்து கொடுத்தால் இன்னும் விரும்பி சாப்பிடுவார்கள். அதை எப்படி தயரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
ஸ்ட்ராபெர்ரி பழங்கள் (பொடிதாக நறுக்கியது) - 5 கப்
சர்க்கரை - 2 கப்
எலுமிச்சம் பழச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
அடிகனமாக இருக்கும் பாத்திரத்தில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள், சர்க்கரை, எலுமிச்சம் பழச்சாறு இவை மூன்றையும் ஒன்றாகக் கலந்து அடுப்பில் வைத்து கிளறுங்கள். சர்க்கரை கரையத் தொடங்கியவுடன் அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளற வேண்டும். அடிப்பிடிக்காதவாறு இந்த கலவையை அவ்வப்போது கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். ஸ்ட்ராபெர்ரி பழங்களில் இருந்து சாறு வெளியேறி, அதிலேயே அவை நன்றாக வேகத் தொடங்கும். 30 முதல் 40 நிமிடங்கள் கழித்து கலவை நன்றாக கெட்டியாகி இருக்கும்.
ஒரு ஸ்பூன் கொண்டு அதில் இருந்து சிறிது எடுத்து, ஒரு தட்டில் வையுங்கள். கலவையில் இருந்து தண்ணீர் பிரிந்து வராமல் கெட்டியாக இருந்தால், ஜாம் சரியான பதத்தில் இருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம். பின்பு அடுப்பை அணைக்கலாம். ஜாம் நன்றாக ஆறியதும். சுத்தமான காற்றுபுகாத கண்ணாடி பாட்டிலில் போட்டு பத்திரப்படுத்துங்கள். இந்த ஜாம் 6 மாதங்கள் வரை கெட்டுப்போகாது.
- குழந்தைகளுக்கு கேக் என்றால் மிகவும் பிடிக்கும்.
- ஸ்ட்ராபெர்ரி மபின் என்றால் சொல்லவே வேண்டாம் ஒரே குஷி தான்
குழந்தைகளுக்கு கேக் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் ஸ்ட்ராபெர்ரி மபின் என்றால் சொல்லவே வேண்டாம் குஷியாகி விடுவார்கள். நீங்கள் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக தரலாம் அல்லது காபி அல்லது டீ யுடன் பரிமாறலாம்.
தேவையான பொருட்கள்:
மைதா 125 கிராம்
பொடித்த சர்க்கரை - 100 கிராம்
கெட்டியான தயிர் -60 மி.லி
சமையல் எண்ணெய்- 60 மி.லி
பால்- 100 மி.லி
பேக்கிங் பவுடர்- 1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா- 2 டீஸ்பூன்
வெண்ணிலா எசன்ஸ்- 3 துளிகள்
ஸ்ட்ராபெர்ரி பழங்கள் (பொடிதாக நறுக்கியது)- 100 கிராம்
உப்பு- ஒரு சிட்டிகை
செய்முறை:
மைதா, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து சலித்து வையுங்கள். அகலமான பாத்திரத்தில் தயிர், பொடித்த சர்க்கரை, எண்ணெய் ஆகியவற்றை போட்டு நன்றாக அடித்து கலக்குங்கள். பின்பு அதில் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அதன்பிறகு அதில் மைதா கலவை மற்றும் உப்பு சேர்த்து கிளற வேண்டும். இப்போது இந்த கலவையில் பாலை சிறிது சிறி தாக ஊற்றி தோசை மாவு பதத்துக்கு தயார் செய்துகொள்ள வேண்டும்.
கடைசியாக ஸ்ட்ராபெர்ரி பழத்தை அதனுடன் சேர்த்து நன்றாகக் கலக்குங்கள். இந்த மாவை மபின் கப்புகளில் முக்கால் பங்கு அளவிற்கு மட்டும் ஊற்றுங்கள்.
ஓவனை சூடுபடுத்திய பின்பு (பிரிஹிட்) மபின்களை உள்ளே வைத்து 180 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 20 முதல் 25 நிமிடங்கள் வரை பேக்கிங் செய்து வெளியே எடுங்கள். இப்போது பொன் நிறத்தில் சுவையான ஸ்ட்ராபெர்ரி மபின்கள் தயார். இதை 10 நிமிடங்கள் கழித்து, ஆறிய பிறகு பரிமாறுங்கள்.






