என் மலர்tooltip icon

    சமையல்

    இந்த வார சமையல் டிப்ஸ் உங்களுக்காக...
    X

    இந்த வார சமையல் டிப்ஸ் உங்களுக்காக...

    • பச்சரிசி தோசைக்கு இரண்டு ஓம இலையை சேர்த்து அரைத்தால் சுவையும், மணமும் கூடும்.
    • அவரைக்காயை உணவில் கூடுதலாகச் சேர்த்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.

    * தேங்காய் பால் எடுக்கும்போது சிறிதளவு சமையல் உப்பை சேர்த்தால் பால் கூடுதலாக கிடைக்கும்.

    * பஜ்ஜி, பூரிக்கு மாவு பிசையும்போது அதில் ஒரு டீஸ்பூன் சூடான எண்ணெய்யை சேர்த்து மாவு பிசைந்தால் எண்ணெய் அதிகம் உறிஞ்சாது.

    * காய்கறிகளை வேகவைக்கும்போது, அவை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்தால் போதும். அதிக தண்ணீர் சேர்ப்பது எரி பொருள் செலவை அதிகப் படுத்தும்.

    * சேனைக்கிழங்கை வறுவல் செய்யும் முன்பு அதனை வேக வைத்து எடுத்தால் சுவையாக இருக்கும்.

    * தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்து சமைத்தால் ருசியாக இருக்கும்.

    * கோதுமை மாவுடன் இளநீரை ஊற்றி பிசைந்தால் சப்பாத்தி ருசியாக இருக்கும்.

    * வெண்ணெய்யை காய்ச்சி இறக்கும்போது அரை டீஸ்பூன் வெந்தயம் சேர்த்தால் நெய் மணக்கும்.

    * பச்சரிசி தோசைக்கு இரண்டு ஓம இலையை சேர்த்து அரைத்தால் சுவையும், மணமும் கூடும்.

    * குளோப் ஜாமூன் மாவுடன் சிறி தளவு நெய் சேர்த்து பிசைந்தால் ஜாமூன் மிருதுவாக இருக்கும்.

    * அவரைக்காயை உணவில் கூடுதலாகச் சேர்த்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.

    * எந்த கீரையை சமைத்தாலும் தேங்காய் எண்ணெய்யில் தாளித்தால் சுவையும், மணமும் கூடும்.

    * பொங்கல் செய்யும்போது தண்ணீருடன் நெய் அல்லது டால்டா சேர்த்தால் பாத்திரத்தில் பொங்கல் ஒட்டாது.

    Next Story
    ×