search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    ஸ்ட்ராபெர்ரி கஸ்டட் ஜெல்லி கேக்
    X

    ஸ்ட்ராபெர்ரி கஸ்டட் ஜெல்லி கேக்

    • பண்டிகை அல்லது பார்ட்டி நேரங்களில் செய்து அசத்துங்கள்.
    • சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

    பொதுவாகவே அனைவருக்கும் மாலை நேரத்தில் ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற ஆசை அதிகமாவே இருக்கும். அதிலும் அதிகமானோர் மாலை நேரத்தில் அதிகமாக கேக் வாங்கி சாப்பிடுவார்கள். இந்த கேக் யாருக்கு தான் பிடிக்காது? வீட்டில் இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆகவே இதை இலகுவான முறையில் எப்படி விரைவாக செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

    தேவையான பொருட்கள்:

    ஸ்ட்ராபெர்ரி- இரண்டு கப் (இரண்டாக நறுக்கியது)

    வாழைப்பழம்- இரண்டு கப்

    கஸ்டட் பவுடர்- 3 ஸ்பூன்

    பால்- 1 லிட்டர்

    பிரட் துண்டுகள்- 6

    கண்டன்ஸ்டு மில்க்- ஒரு கப்

    ஜெலட்டின்

    வெனிலா எக்ஸ்ட்ராக்ட்- கால் டீஸ்பூன்

    செய்முறை:

    அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும். பின்னர் சிவப்பு நிறம் கொண்ட ஜெலட்டின் பவுடரை அதில் போட்டு கொதிக்க விட வேண்டும். எல்லாம் கரைந்து கொதித்தவுடன் தனியாக எடுத்து வைக்க வேண்டும்.

    அதன்பிறகு வேறு ஒரு அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்ச வேண்டும். பால் நன்றாக காய்ந்ததும் அதில் கஸ்டட் பவுடரை போட்டு கலக்க வேண்டும். பின்னர் அதில் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து கலக்க வேண்டும். பின்னர் அதில் வெனிலா எக்ஸ்ட்ராக்ட் ஊற்ற வேண்டும். அந்த கலவை க்ரீம் பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு தனியே எடுத்து வைக்க வேண்டும்.

    ஸ்ட்ராபெர்ரி மற்றும் வாழைப்பழங்களை வெட்டி ஒரு பவுலில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    இப்போது ஒரு வட்ட வடிவில் உள்ள கண்ணாடி பாத்திரம் அல்லது கேக் செய்ய பயன்படுத்தும் மோல்டில் முதலில் பிரட் துண்டுகளை வரிசையாக வைக்க வேண்டும். அதன் மேல் சிவப்பு நிற ஜெலட்டின் கலவையை அதன் மீது படுமாறு ஊற்ற வேண்டும். பிறகு ஸ்ட்ராபெர்ரி மற்றும் வாழைப்பழங்களை அதன்மீது தூவ வேண்டும்.

    அதன்பிறகு நாம் ஏற்கனவே செய்து வைத்துள்ள கஸ்டட் கலவையை அதில் எடுத்து ஊற்ற வேண்டும். எல்லா பக்கமும் ஒருசேர படுமாறு ஊற்ற வேண்டும். பின்னர் அதன் மேல் ஜெலட்டில் நீரை ஊற்ற வேண்டும். அதன்பிறகு மறுபடியும் ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழங்களை தூவ வேண்டும். இதனை ஃப்ரிட்ஜில் ஒரு மணிநேரம் வைக்க வேண்டும். (குறிப்பு- ஃப்ரீசரில் வைக்க கூடாது)

    அதன்பிறகு எடுத்து பரிமாறலாம். சுவையான ஸ்ட்ராபெர்ரி கஸ்டட் ஜெல்லி கேக் தயார். பண்டிகை அல்லது பார்ட்டி நேரங்களில் செய்து அசத்துங்கள்.

    Next Story
    ×