என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆந்திரா புளி சட்னி"

    • ஆந்திரா புளி சட்னி தனித்துவ சுவை கொண்ட உணவாகும்.
    • எந்த உணவுக்கும் தொட்டுக்கொள்ளலாம்.

    தென்னிந்திய உணவுகளில் ஆந்திரா புளி சட்னி தனித்துவ சுவை கொண்ட உணவாகும். எந்த உணவுக்கும் தொட்டுக்கொள்ளலாம். அரைத்த வேர்க்கடலை விழுதில் தண்ணீர் கொஞ்சம் ஊற்றினால் இட்லி , தோசைக்கு தொட்டுக்கொள்ளலாம். ஆந்திரா ஸ்டைலில் காரசாரமான சட்னி எப்படி அரைப்பது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    எள்ளு- 3 ஸ்பூன்

    வேர்க்கடலை- ஒருகப்

    கடலை எண்ணெய்- தேவையான அளவு

    சின்னவெங்காயம்- 10

    பச்சைமிளகாய்-10

    புளி- தேவையான அளவு

    பூண்டு- 4

    தக்காளி- 1

    தேங்காய்- ஒரு கப்

    செய்முறை

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து காய்ந்ததும் அதில் எள்ளை போட்டு வெடித்ததும் அதில் ஒரு கரண்டி கடலை எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் பச்சைமிளகாய், வெங்காயம், பூண்டு, புளி, வேர்க்கடலை, தக்காளி இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு அதனுடன் தேங்காய் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் இதனை மிக்சி ஜாருக்கு மாற்றி அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து எடுத்தால் ஆந்திரா ஸ்டைல் புளி சட்னி தயார்.இதனை கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்து பயன்படுத்தலாம்.

    ×