என் மலர்tooltip icon

    சமையல்

    ரிச்சான சீஸ் கார்ன் பிரெட் டோஸ்ட்
    X

    ரிச்சான சீஸ் கார்ன் பிரெட் டோஸ்ட்

    • மழைக்காலத்தில் சுட சுட மொறு மொறுவென்று செய்து கொடுங்கள்.
    • சத்தமில்லாமல் அனைத்தையும் சாப்பிட்டு முடித்து விடுவார்கள்.

    இந்த மழைக்காலத்தில் சுட சுட மொறு மொறுவென்று செய்து கொடுங்கள். சத்தமில்லாமல் அனைத்தையும் சாப்பிட்டு முடித்து விட்டு மறுமுறை கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். வாங்க! இதனை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    பள்ளி முடித்து பசியோடு வரும் குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பி சாப்பிடும் சூப்பரான ஒரு ரெசிபியை பார்க்கலாம். குழந்தைகளுக்கு பிடித்த உணவு வகைகளில் கார்னும் ஒன்று. மேலும் அது பல ஆரோக்கிய நலனையும் தருகிறது. அப்படிப்பட்ட கார்ன் மற்றும் சீஸ் வைத்து அட்டகாசமான சுவையில் சீஸ் கார்ன் பிரெட் டோஸ்ட் வீட்டில் சுலபமாக எப்படி செய்வது என்று இந்த பதின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

    தேவையான பொருட்கள்

    பிரெட் துண்டுகள்- 10

    சுவீட் கார்ன் -ஒரு கப் (வேகவைத்தது)

    சீஸ்- ஒரு கப் (துருவியது)

    சில்லிபிலேக்ஸ்- ஒரு ஸ்பூன்

    சீசனிங்- ஒரு ஸ்பூன்

    மிளகுத்தூள்

    கொத்தமல்லி தலை- ஒரு கப்பிடி

    டொமேட்டோ சாஸ்- தேவையான அளவு

    மயோனிஸ்- தேவையான அளவு

    செய்முறை:

    பிரெட் துண்டுகளை அதன் ஓரங்களை நீக்கிவிட்டு அதனை வட்ட மூடிகளை கொண்டு வட்டமான வடிவில் வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை ஒரு பிளேட்டில் வரிசையாக அடுக்கிக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு ஒரு சிறிய பவுலில் துருவிய சீஸ், வேகவைத்த கார்ன், சில்லிபிளேக்ஸ், சீசனிங், மிளகுத்தூள், கொத்தமல்லி தலைகள் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    இப்போது வட்டமாக வெட்டி வைத்துள்ள பிரெட் துண்டுகளை எடுத்து அதில் முதலில் டொமேட்டோ சாஸ் தடவ வேண்டும் அதன்பிறகு அதற்கு மேலே மயோனிஸ் தடவ வேண்டும். அதற்கு பிறகு நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள சீஸ் கார்ன் கலவையை எடுத்து பிரெட்டில் வைக்க வேண்டும்.

    பின்னர் தோசை தவாவை அடுப்பில் வைத்து காய்ந்ததும் அதில் வெண்ணெய் தடவி பிரெட் துண்டுகளை வைத்து 10 நிமிடத்திற்கு மூடி போட்டு டோஸ்ட் செய்ய வேண்டும். 10 நிமிடம் கழித்து எடுத்தால் சுவையான, ரிச்சான சீஸ் கார்ன் பிரெட் டோஸ்ட் தயார். சூடாக பரிமாறவும்.

    Next Story
    ×