என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ட்ராபெர்ரி ஜாம்"

    • ஸ்ட்ராபெர்ரி எல்லோருக்கும் பிடித்த பழம்.
    • வைட்டமின் சி நிறைந்த இது குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும்.

    ஸ்ட்ராபெர்ரி எல்லோருக்கும் பிடித்த பழம். வைட்டமின் சி நிறைந்த இது குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் ஜாமாக தயாரித்து கொடுத்தால் இன்னும் விரும்பி சாப்பிடுவார்கள். அதை எப்படி தயரிப்பது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    ஸ்ட்ராபெர்ரி பழங்கள் (பொடிதாக நறுக்கியது) - 5 கப்

    சர்க்கரை - 2 கப்

    எலுமிச்சம் பழச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    அடிகனமாக இருக்கும் பாத்திரத்தில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள், சர்க்கரை, எலுமிச்சம் பழச்சாறு இவை மூன்றையும் ஒன்றாகக் கலந்து அடுப்பில் வைத்து கிளறுங்கள். சர்க்கரை கரையத் தொடங்கியவுடன் அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளற வேண்டும். அடிப்பிடிக்காதவாறு இந்த கலவையை அவ்வப்போது கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். ஸ்ட்ராபெர்ரி பழங்களில் இருந்து சாறு வெளியேறி, அதிலேயே அவை நன்றாக வேகத் தொடங்கும். 30 முதல் 40 நிமிடங்கள் கழித்து கலவை நன்றாக கெட்டியாகி இருக்கும்.

    ஒரு ஸ்பூன் கொண்டு அதில் இருந்து சிறிது எடுத்து, ஒரு தட்டில் வையுங்கள். கலவையில் இருந்து தண்ணீர் பிரிந்து வராமல் கெட்டியாக இருந்தால், ஜாம் சரியான பதத்தில் இருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம். பின்பு அடுப்பை அணைக்கலாம். ஜாம் நன்றாக ஆறியதும். சுத்தமான காற்றுபுகாத கண்ணாடி பாட்டிலில் போட்டு பத்திரப்படுத்துங்கள். இந்த ஜாம் 6 மாதங்கள் வரை கெட்டுப்போகாது.

    ×