என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "falafel"

    • ஒரு நேர்த்தியான உணவு வகைகளை கொண்டது.
    • மத்திய கிழக்கு நாடுகளில் விற்கப்படும் துரித உணவு

    லெபனான் உணவு, மசாலா, சர்க்கரை மற்றும் எல்லாவற்றிலும் இனிமையானது. லெபனான் வரலாறு முழுவதும் பல நாகரிகங்களின் மையமாக உள்ளது. அவை ஒவ்வொன்றும் அதன் சொந்த சமையல் குறிப்புகளையும் உணவை தயாரிப்பதற்கான தனித்துவமான வழியையும் கொண்டு வந்துள்ளன, சுவையான உணவுகள் நிறைந்த ஒரு நேர்த்தியான உணவு வகைகளை கொண்டது.

    இப்போது  சுவையான லெபனான் ஸ்பெஷல் உணவான ஃபலாஃபெல் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். இதை தஹினி சாஸ்சுடன் சாப்பிட மிகவும் சூப்பராக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    வெள்ளை கொண்டைக்கரலை- 200 கிராம்

    கொத்தமல்லி தலை- ஒரு கப்

    பச்சைமிளகாட்-4

    பூண்டு- 4

    வெங்காயம்- 2

    உப்பு- தேவையான அளவு

    வெள்ளை எள்ளு- 3- ஸ்பூன்

    சீரகத்தூள்- 1 ஸ்பூன்

    செய்முறை:

    கொண்டை கடலையை முதல் நாள் இரவே ஊறவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு மிக்சி ஜாரில் ஊறவைத்த கொண்டைக்கடலை, அதனுடன் கொத்தமல்லி தலை, பச்சைமிளகாய், வெங்காயம், பூண்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் சீரகத்தூள், வெள்ளை எள் சேர்த்து நன்றாக பிசறி அதனை சிறிய உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து பொறிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் உருட்டிய ஃபலாஃபெல் உருண்டைகளை சூடனா எண்ணெய்யில் பொறித்து எடுக்க வேண்டும். சுவையான ஃபலாஃபெல் தயார்.

    தொட்டுக்கொள்ள தஹினி சாஸ்

    வெள்ளை எள்ளை சுடுதண்ணீரில் போட்டு 10 நிமிடம் கழித்து பேஸ்ட் மாதிரி அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டுடன் 2 ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் சீரகத்தூள், துருவிய பூண்டு, உப்பு, சிறிதளவு கொத்தமல்லி தலை சேர்த்து கலந்தால் தஹினி சாஸ் தயார்.

    இது லெபனான் மற்றும் எகிப்து, இஸ்ரேல் மற்றும் சிரியா போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள தெரு முனைகளில் விற்கப்படும் பிரபலமான துரித உணவு ஆகும். சைவ உணவு உண்பவர்கள் ஃபோலேட், புரதம் மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை விரும்புகிறார்கள்.

    ×