என் மலர்tooltip icon

    சமையல்

    காலையில் சத்தான உணவை சாப்பிட்டால் அன்றைய நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வேலை செய்யலாம். இன்று முட்டை, பிரெட் வைத்து ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கோதுமை பிரெட் - 4 ஸ்லைஸ்
    முட்டை - 3
    வெங்காயம் - 1
    கொத்தமல்லி - அரை கப்
    பச்சை மிளகாய் - 2
    மிளகாய்த் தூள் - அரை ஸ்பூன்
    பட்டர் - 2 டேபிள் ஸ்பூன்
    சாட் மசாலா - அரை ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    கோதுமை பிரெட் ஆம்லெட்

    செய்முறை:

    வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்துக் கொள்ளவும்.

    அத்துடன், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், சாட் மசாலா, உப்பு சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்றாக அடித்துக் கொள்ளவும்.

    தவா சூடானதும், வெண்ணெய் போட்டு உருக்கியதும் பிரெட் ஸ்லைசை அதன் மீது வைத்து இருபக்கவும் சூடு செய்து எடுக்கவும்.

    பின்னர், அதே தவாவில் மீண்டும் வெண்ணெய் போட்டு உருகியதும், தயாராக உள்ள முட்டை கலவையை அதன் மீது ஊற்றி பரப்பி வேகவிடவும்.
    முட்டை வெந்ததும், அதன் மீது பிரெட் ஸ்லைஸ் வைத்து நான்கு புறமும் மடித்து எடுக்கவும்.

    அவ்ளோதாங்க.. சுவையான சத்து நிறைந்த கோதுமை பிரெட் ஆம்லெட் ரெடி..!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மழை காலத்துக்கு இதமான சாப்ஸ் வகைகளை வீட்டிலேயே தயார் செய்து சுவைக்கலாம். முட்டை வைத்து சாப்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டை - 5
    ப.மிளகாய் - 3 (நறுக்கவும்)
    கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு
    சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
    பிரெட் தூள் - 1 கப்
    எண்ணெய், உப்பு - தேவைக்கு

    முட்டை சாப்ஸ்

    செய்முறை:

    கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முட்டைகளை நன்றாக வேகவைத்து ஓட்டை நீக்கி விட்டு நீளவாக்கில் இரண்டாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.

    அகன்ற பாத்திரத்தில் சோள மாவை கொட்டி அதனுடன் கொத்தமல்லி தழை, ப.மிளகாய், உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.

    பின்பு தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

    முட்டை துண்டுகளை சோள மாவு கலவையில் முக்கி பின்பு பிரெட் தூளில் புரட்டி வைத்துக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது கொதிக்க தொடங்கியதும் முட்டை கலவையை போட்டு பொரித்தெடுக்கவும்.

    சுவையான முட்டை சாப்ஸ் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வைல்டு ரைசில் குளுட்டன், சோடியம் இல்லை. உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் உள்ளவர்களுக்கு நல்லது. பிரவுன் அரிசியை விட இரண்டு மடங்கு புரதச்சத்து அதில் அதிகம்.
    தேவையான பொருட்கள்

    வேக வைத்த வைட்டு ரைஸ் (மலேசியன் அரிசி) - 1 கப்
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    குடை மிளகாய் - பாதி
    கொத்தமல்லி - சிறிதளவு
    எலுமிச்சை சாறு - சிறிதளவு
    உப்பு, மிளகு தூள் - தேவையான அளவு

    வைல்டு ரைஸ்

    செய்முறை

    வைல்டு அரிசியை வேக வைத்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை போட்டு அதனுடன் வேக வைத்த வைல்டு ரைஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    கடைசியாக உப்பு, மிளகு தூள், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பரிமாறவும்.

    சத்தான வைல்டு ரைஸ் சாலட் ரெடி.

    பலன்கள்

    வைல்டு ரைசில் குளுட்டன், சோடியம் இல்லை. உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் உள்ளவர்களுக்கு நல்லது. பிரவுன் அரிசியை விட இரண்டு மடங்கு புரதச்சத்து அதில் அதிகம். நார்ச்சத்து இருப்பதால் செரிமானமாவது எளிது. சமச்சீரான உணவை சாப்பிட்ட பலன் கிடைக்கும். வைட்டமின் ஏ, சி. இ நிறைந்துள்ளது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சளி, இருமல் தொல்லை இருப்பவர்கள் நண்டு செய்து சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும். இன்று தேங்காய் பால் சேர்த்த நண்டு மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள்:

    நண்டு - ஒரு கிலோ
    தேங்காய் பால் - மூன்று டம்ளர்
    வெங்காயம் - ஒன்று
    தக்காளி - ஒன்று
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சி - பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
    மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி
    எண்ணெய் - 50 மிலி
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    கறிவேப்பிலை - ஒரு கொத்து

    அரைக்க:

    தேங்காய் துருவல் - 6 தேக்கரண்டி
    முந்திரி - 5
    பூண்டு - 4
    மஞ்சள்தூள் - ஒன்றரை தேக்கரண்டி
    சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
    மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
    சோம்புத்தூள் - 1 தேக்கரண்டி
    மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி

    தேங்காய் பால் சேர்த்த நண்டு மசாலா

    செய்முறை

    நண்டை வெட்டி நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.

    அரைக்க கொடுத்துள்ள பொருள்களை நைசாக அரைத்து வைக்கவும்.

    கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் தேங்காய்ப் பால் ஊற்றி அதில் அரைத்த மசாலாவைக் கரைத்து தேவையான உப்பு போட்டு கலந்து கொள்ளவும்.

    அதில் பச்சை மிளகாயைக் கீறியும், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையை போடவும்.

    ஒரு அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடனாதும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக இஞ்சி - பூண்டு விழுதை போட்டு வதக்கவும். இஞ்சி - பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளியை போட்டு குழைய வதக்கவும்.

    அடுத்து அதில் மிளகாய்தூள், கறிவேப்பிலை போட்டு இரண்டு நிமிடங்கள் வதக்கிவிட்டு கரைத்து வைத்திருக்கும் மசாலா கலவையை ஊற்றி கொதிக்க விடவும்.

    அதன்பிறகு கழுவி வைத்திருக்கும் நண்டை மெதுவாக போட்டு கொதிக்கவிடவும். கொதிக்க ஆரம்பிக்கும்போது மூடி போட்டு அடுப்பை மிதமாகவே வைத்து இருபது நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

    நண்டு நன்றாக வெந்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பிலிருந்து இறக்கவும்.

    சுவையான தேங்காய் பால் சேர்த்த நண்டு மசாலா தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ப்ரோக்கோலி, பாதாமில் உள்ள சத்துக்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது. இன்று இது இரண்டையும் சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    வெஜிடபிள் ஸ்டாக் - 800 மில்லி லிட்டர்
    ப்ரோக்கோலி - பாதி
    பாதாம் - ஒரு கைப்பிடி
    ஸ்கிம்டு மில்க் -  250 மில்லி
    உப்பு, மிளகு - சுவைக்க

    ப்ரோக்கோலி பாதாம் சூப்

    செய்முறை

    சிறிதளவு பாதாமை தனியாக எடுத்து வைக்கவும். மீதி உள்ள பாதாமை 1 மணிநேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

    ப்ரோக்கோலியை சிறு துண்டுகளாக நறுக்கி 5 நிமிடங்கள் வேக வைத்து தனியாக எடுத்து வைக்கவும்.

    வேகவைத்த ப்ரோக்கோலியுடன் வெஜிடபிள் ஸ்டாக், ஊற வைத்த பாதாம், ஸ்கிம்டு மில்க், சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

    அத்துடன் உப்பு மற்றும் மிளகு சேர்க்கவும்.

    ஒரு கடாயில் இதனை ஊற்றி, லேசாக சூடு படுத்தவும்.

    சிறிதளவு எடுத்து வைத்த பாதாமை வறுத்து கொரகொரப்பாக பொடி செய்து இதில் சேர்த்து சூடாக பரிமாறவும்.

    சூப்பரான ப்ரோக்கோலி பாதாம் சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சாக்லேட், ஸ்ட்ராபெர்ரி சேர்த்து சூப்பரான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    டார்க் சாக்லேட் - தேவையான அளவு
    ஒயிட் சாக்லேட் - தேவையான அளவு
    ஸ்ட்ராபெர்ரி - 15

    சாக்லேட் ஸ்ட்ராபெர்ரி

    செய்முறை

    முதலில் டார்க் சாக்லேட் மற்றும் ஒயிட் சாக்லேட்டை தனித்தனி பௌலில் போட்டு உருக்கி கொள்ள வேண்டும்.

    ஸ்ட்ராபெர்ரியை நன்கு கழுவி அதன் மேல் இருக்கும் இலைகளை நீக்கி விட வேண்டும். பின், ஸ்ட்ராபெர்ரியை உருக்கி வைத்த டார்க் சாக்லேட்டில் தொட்டு எடுத்து, பார்ச்மெண்ட் பேப்பரில் வைத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
     
    சில மணிநேரங்கள் கழித்து, ஒயிட் சாக்லேட் கொண்டு ஜிக்ஜாக் வடிவில் அலங்கரித்து பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ப்ரோக்கோலி, பாதாமில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இன்று ப்ரோக்கோலியுடன் பாதாம், காய்கறிகள் சேர்த்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    ப்ரோக்கோலி - 1
    கேரட் - 2
    சிகப்பு குடைமிளகாய் - 1
    முள்ளங்கி - 1
    வெங்காயம் - 1
    பாதாம் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    மிளகு தூள் - சிறிதளவு

    அலங்கரிக்க

    ஆலிவ் ஆயில் - 2 டீஸ்பூன்
    சோயா சாஸ் (coconut aminos or Tamari Soy Sauce) - 1 டீஸ்பூன்
    சைஸ் வினிகர் - அரை டீஸ்பூன்
    இஞ்சி - சிறிய துண்டு
    பூண்டு - 2 பல்

    ப்ரோக்கோலி

    செய்முறை

    ப்ரோக்கோலி நன்றாக கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கேரட், குடை மிளகாய், வெங்காயம், முள்ளங்கியை மெலிதாக நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    பாதாமை நீளவாக்கில் வெட்டிகொள்ளவும்.

    இஞ்சி, பூண்டை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அலங்கரிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

    ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்து கொதிக்க ஆரம்பித்ததும் ப்ரோக்கோலியை போட்டு 30 விநாடிகள் முதல் 1 நிமிடம் வரை வேக வைத்து தண்ணீரை வடித்து விட்டு குளிர்ந்த தண்ணீரில் போட்டு எடுத்து வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் வேக வைத்த ப்ரோக்கோலியை போட்டு அதனுடன் நறுக்கிய கேரட், குடை மிளகாய், மிளகு தூள், வெங்காயம், உப்பு, முள்ளங்கியை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

    அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள கலவையை போட்டு நன்றாக கலந்து கடைசியாக நறுக்கி வைத்துள்ள பாதாமை தூவி பரிமாறவும்.

    அருமையான ப்ரோக்கோலி வெஜிடபிள் சாலட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாதி, நாண், பூரிக்கு தொட்டு கொள்ள அருமையாக இருக்கும் சிக்கன் ப்ரோக்கோலி வறுவல். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பெருட்கள்:

    ப்ரோக்கோலி - ஒரு கப்
    இஞ்சி - ஒரு டீஸ்பூன்
    சிக்கன் - கால் கிலோ
    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
    சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
    கொரகொரப்பாக பொடித்த காய்ந்த மிளகாய் - 1 டீஸ்பூன்
    இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
    எலுமிச்சை சாறு - அரை டீஸ்பூன்
    மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    சிக்கன் ப்ரோக்கோலி வறுவல்

    செய்முறை:

    முதலில் ப்ரோக்கோலியை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி ஒரு கிண்ணத்தில் போடவும்.

    அத்துடன், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, சோயா சாஸ், எலுமிச்சை சாறு, கொரகொரப்பாக பொடித்த காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக கலந்து சுமார் 30 நிமிடங்கள் ஊறவிடவும்.

    பிறகு, வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் சிக்கன் துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும். சிக்கன் துண்டுகள் வெந்ததும் தனியாக எடுத்து வைக்கவும்.

    மீண்டும் வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும், பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

    அடுத்து அதில் ப்ரோக்கோலியை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.

    அடுத்து அதனுடன் தண்ணீர், உப்பு சேர்த்து மூடிப்போட்டு வேகவிடவும்.

    ப்ரோக்கோலி பாதியளவு வெந்ததும், பொரித்த சிக்கன் துண்டுகளை சேர்த்து மீண்டும் கிளறிவிடவும்.

    அத்துடன், ஒரு டீஸ்பூன் சோள மாவுடன் தண்ணீர் சேர்த்து கரைத்து சேர்த்து கிளறி வேகவிடவும்.

    இறுதியாக, மிளகுத்தூள் தூவி 2 நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்கவும்.

    சூப்பரான சிக்கன் ப்ரோக்கோலி ரெடி..

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தேங்காயில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று தேங்காய் சேர்த்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பச்சரிசி அரிசி - ஒரு கப்
    வெங்காயம் - 1
    ப.மிளகாய் - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு
    தேங்காய் - அரை கப்
    உப்பு - தேவையான அளவு

    தேங்காய் அடை

    செய்முறை:

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முதலில் கால் கப் பச்சரிசியை வாணலியில் மிதமான சூட்டில் வறுத்து பின்னர் மிக்ஸியில் பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

    பின்னர் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடானதும் அரிசி மாவை சேர்த்து கூழ் போன்று காய்ச்சவும். (கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்..)

    மீதமுள்ள அரிசியுடன், தேங்காய், உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

    கூழ் கலவை ஆறியதும், அதனுடன் வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, அரைத்த தேங்காய் கலவையும் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் வேகவிட்டு பரிமாறவும்.

    சுவையான தேங்காய் அடை ரெசி..!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காய்கறிகள் கைவசம் இல்லாத சமயத்தில், இந்தக் குழம்பு கை கொடுக்கும். 10 நிமிடங்களில் செய்யக்கூடிய இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    புளி - எலுமிச்சைப் பழ அளவு,
    சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன்,
    அப்பளம் - 2,
    கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 2,
    எண்ணெய் - 2 டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.

    அப்பள புளிக் குழம்பு

    செய்முறை:

    புளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு தாளித்து, காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு, அப்பளத்தை ஒன்று இரண்டாக உடைத்துப்போட்டு, சாம்பார் பொடியை சேர்த்து வறுக்கவும்.

    பிறகு, புளிக்கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

    சூப்பரான அப்பள புளிக்குழம்பு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சளி, இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்கள் மைசூர் ரசம் வைத்து சாப்பிட்டால் தொண்டைக்கு இதமாக இருக்கும். இன்று இந்த ரசம் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    துவரம் பருப்பு - 50 கிராம்,
    பெருங்காயத்தூள் -¼ தேக்கரண்டி,
    புளி - சிறிதளவு,
    தக்காளி - 1,
    மஞ்சள்தூள் - ½ தேக்கரண்டி,
    பூண்டுப்பல் - 5,
    உப்பு - தேவையான அளவு,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை- சிறிதளவு,
    எண்ணெய் - 1 தேக்கரண்டி,
    நெய் - 1 மேஜைக்கரண்டி,
    கடுகு - 1 தேக்கரண்டி.
    மிளகாய் வத்தல் - 1,
    கொத்தமல்லி, மிளகு, சீரகம், துவரம்பருப்பு - தலா 1 தேக்கரண்டி,
    தேங்காய் துருவல்- 4 மேஜைக்கரண்டி.

    செய்முறை:

    முதலில் புளியை தண்ணீரில் கரைத்து வைக்கவும்.

    தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை நன்றாக கரைத்து கொள்ளவும்.

    பருப்பை நன்றாக கழுவி அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அதனுடன் காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து, சூடானதும் மிளகாய் வத்தல், கொத்தமல்லி, மிளகு, துவரம்பருப்பு, தேங்காய் துருவல், பூண்டுப்பல் ஆகியவற்றை சேர்த்து அடுப்பை வைத்து லேசாக வறுக்கவும்.

    சீரகத்தை வறுத்த பொருட்களோடு சேர்த்து கிளறி ஆற விடவும்.

    ஆறிய பிறகு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் தக்காளியை போட்டு வதக்கவும்.

    தக்காளி வதங்கியதும் அரைத்து வைத்துள்ள பொடி, உப்பு மற்றும் புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    புளியின் பச்சை வாடை போனதும் அவித்து வைத்துள்ள பருப்பை நன்கு மசித்து சேர்க்கவும்.

    பிறகு கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை சேர்த்து இறக்கி விடவும்.

    பிறகு அடுப்பில் கடாயை வைத்து நெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளித்து ரசத்தில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும்.

    சுவையான மைசூர் ரசம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக இன்று முட்டை சேர்க்காமல் கிறிஸ்துமஸ் கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா - 150  கிராம்
    சர்க்கரை - 300 கிராம்
    வெனிலா எசென்ஸ் - 2 டீஸ்பூன்
    உப்பில்லா வெண்ணெய் - 75 கிராம்
    சூரியகாந்தி எண்ணெய் -  25 மில்லி
    பால் - அரை கப்
    வினிகர் - 2 டீஸ்பூன்
    பேரீச்சை - 10
    டூட்டி ஃப்ரூட்டி -  ஒரு கைப்பிடி அளவு  
    முந்திரி, பாதாம் மற்றும் உலர்ந்த திராட்சை -  ஒரு கைப்பிடியளவு
    கஸ்டர்ட் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்
    உப்பு - ஒரு சிட்டிகை
    பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன்
    கிராம்பு - ஒன்று
    பட்டை - சிறிய துண்டு
    ஏலக்காய் - 2
    ஜாதிக்காய் பொடி -  ஒரு சிட்டிகை

    கிறிஸ்துமஸ் கேக்

    செய்முறை:

    2 டேபிள்ஸ்பூன் சர்க்கரையைத் தனியாக எடுத்து வைக்கவும்.

    கிராம்பு, பட்டை, ஏலக்காயை தட்டி வைக்கவும்.

    பேரீச்சையுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து ஆறிய பின் விழுதாக அரைக்கவும்.

    வெண்ணெய், பாலை லேசாகச் சூடாக்கி, வெண்ணெய் உருகியதும் அடுப்பிலிருந்து இறக்கி, ஆறியதும் கிராம்பு, பட்டை, ஜாதிக்காய் பொடி, ஏலக்காய், வெனிலா எசென்ஸ், வினிகர், சூரியகாந்தி எண்ணெய், அரைத்த பேரீச்சை சேர்த்துக் கலக்கவும்.

    இதனுடன் சர்க்கரை சேர்க்கவும் (பழுப்பு நிற சர்க்கரை சேர்த்தால் மிகவும் நல்லது). 2 டேபிள்ஸ்பூன் சர்க்கரையில் கேரமல் செய்து இதனுடன் சேர்த்துக் கலக்கவும்.

    மைதாவுடன் உப்பு, பேக்கிங் சோடா, கஸ்டர்ட் பவுடர் சேர்த்து நன்கு சலிக்கவும்.

    இதைச் சிறிது சிறிதாக முதலில் செய்த கலவையுடன் சேர்க்கவும். தோசை மாவு பதம் வர வேண்டும். இல்லை என்றால் சிறிதளவு பால் சேர்த்துக்கொள்ளலாம்.

    ஒரு டீஸ்பூன் மாவுடன் டூட்டி ஃப்ரூட்டி நறுக்கிய நட்ஸ் - உலர்திராட்சை சேர்த்துப் பிசிறி இதை கேக் மாவுடன் சேர்த்து மெதுவாகக் கலக்கவும்.

    இந்தக் கலவையை கேக் பானில் ஊற்றி மைக்ரோவேவ் அவனில் அல்லது குக்கரில் வைத்து `பேக்’ செய்யவும்.

    இப்போது சூப்பரான முட்டை சேர்க்காத கிறிஸ்துமஸ் கேக் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×