என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • தினசரி உணவில் சில காய்கறிகளை உட்கொள்வது அவசியமானது.
    • தினசரி அவசியம் சாப்பிடவேண்டிய ஊட்டச்சத்துமிக்க காய்கறிகள்.

    உடல் சோர்வு, செரிமான கோளாறு, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்ற பிரச்சனைகளை தொடர்ந்து அனுபவித்தால் தினசரி உணவில் சில காய்கறிகளை உட்கொள்வது அவசியமானது. அவை ஊட்டச்சத்து தேவைகளை திறம்பட நிறைவேற்றி ஆரோக்கியத்தை மேம்படுத்த வழிவகை செய்யும்.

    ஊட்டச்சத்தின் அவசியத்தை அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாகவும், அதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் ஆண்டு தோறும் செப்டம்பர் 1-ந் தேதி முதல் 7-ந்தேதி வரை தேசிய ஊட்டச்சத்து வாரம் கடைப்பிடிக்கப்படும் நிலையில் தினசரி அவசியம் சாப்பிடவேண்டிய ஊட்டச்சத்துமிக்க காய்கறிகள் இவை..


    பீர்க்கங்காய்:

    'டோரி' என்றும் அழைக்கப்படும் இந்த காயில் நார்ச்சத்து, வைட்டமின்கள் சி, ஏ, இரும்பு, மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது செரிமானத்தை மேம்படுத்துவதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் துணை புரியும்.


    கோவைக்காய்:

    வைட்டமின்கள் ஏ, சி, பி-காம்ப்ளக்ஸ் போன்ற வைட்டமின்களால் இந்த காய் நிரம்பியுள்ளது. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற அத்தியாவசிய தாதுக்களும் நிறைந்துள்ளது. அவை எலும்பு ஆரோக்கியத்திற்கும், ரத்த ஓட்டத்திற்கும் நன்மை பயக்கும்.


    புடலங்காய்:

    குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து கொண்ட இந்த காய், எடை மேலாண்மையை நிர்வகிக்கவும், செரிமான ஆரோக்கியத்திற்கும் உதவிடும் சிறந்த காய்கறியாகும். வைட்டமின் சி போன்றவைகளும் நிறைந்திருப்பது கூடுதல் பலம் சேர்க்கும்.


    சுரைக்காய்:

    இதனை அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் அபரிமிதமான ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். இதில் கலோரிகள் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் நீரேற்றத்துக்கும், உடல் எடை குறைப்புக்கும் சிறந்தது. மேலும் சுரைக்காயில் வைட்டமின்கள் சி, கே, கால்சியம், மெக்னீசியம் போன்றவையும் நிறைந்துள்ளன. ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், செரிமானத்தையும் மேம்படுத்தும்.

     



    பாகற்காய்:

    தனித்துவமான கசப்பான சுவை கொண்ட இந்த காய் ரத்த சர்க்கரை அளவை குறைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் வழிவகுக்கும். பாகற்காயில் வைட்டமின்கள் ஏ, சி, கே, இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து ஆகியவை அபரிமிதமாக நிறைந்துள்ளன.


    வெள்ளைப்பூசணி:

    மிகக் குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து கொண்ட இதுவும் உடல் எடை குறைப்புக்கு வழிவகுக்கும் ஊட்டச்சத்துக்கள் கொண்டது. இதில் வைட்டமின்கள் ஏ, சி போன்றவை மிகுந்துள்ளன. இதய ஆரோக்கியம் மற்றும் தசை செயல்பாட்டிற்கு முக்கியமான பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாதுக்களும் நிறைந்துள்ளன. இவைகளில் ஒன்றையாவது தினசரி உணவில் இடம் பெற செய்வது ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். உடலின் ஊட்டச்சத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும்.


    வெண்டைக்காய்

    'பிந்தி', 'லேடி பிங்கர்' என்றும் அழைக்கப்படும் இது குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து கொண்ட சுவையான காய்கறியாகும். உடல் எடை மேலாண்மைக்கும், செரிமானத்துக்கும் நன்மை பயக்கும். வைட்டமின்கள் ஏ, சி, பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் மிகுந்தது. உடலின் இணைப்பு பகுதிகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆரோக்கியத்திற்கு பாதகமாக செயல்படாது.
    • அதிகமான பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.

    சர்க்கரை நோயாளிகளில் பலர் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக குறைந்த கலோரிகள் கொண்ட செயற்கை இனிப்பூட்டிகளை பயன்படுத்துகின்றனர்.

    அஸ்பார்டேம், சாக்கிரின், சுக்ரலோஸ், ஸ்டிவியா, சார்பிட்டால், அசிசல் பேம் போன்றவை கலந்த செயற்கை இனிப்பூட்டிகள் ஐஸ்கிரீம், குளிர்பானங்கள், செயற்கை பழச்சாறுகள், சூயிங்கம் ஆகியவற்றில் சேர்க்கப்படுகிறது.

    வேதியியல் ரீதியாக தயாரிக்கப்படும் இவை வெள்ளை சர்க்கரையை விட 200 முதல் 700 மடங்கு இனிப்பு அதிகம் கொண்டவை. இது குளுக்கோசில் இருந்து மாறுபடுவதால் ரத்த சர்க்கரையை அதிகப்படுத்தாது.

    நிபுணர்கள் பரிந்துரையின்படி அஸ்பார்டேம் போன்ற செயற்கை இனிப்பூட்டிகளை ஒரு கிலோ உடல் எடைக்கு 40 மில்லி கிராம் வரை ஒருவர் உட்கொள்ளலாம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    செயற்கை இனிப்பூட்டிகளை பயன்படுத்துவதால் மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் என்று எந்த ஆராய்ச்சியும் இதுவரை நிரூபிக்கவில்லை. தினசரி உட்கொள்ளும் மிகக் குறைந்த அளவு செயற்கை இனிப்பூட்டிகளால் புற்றுநோய் ஏற்படாது.

    செயற்கை இனிப்பூட்டிகளை பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு பாதகமாக செயல்படாது. இருப்பினும் அதிகமான பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.

    • ஸ்டிக்கர் விலையுடனோ, தரத்துடனோ தொடர்புடையது அல்ல.
    • பழங்களை வாங்கும்போது கவனமுடன் செயல்படுவது நல்லது.

    சந்தையில் விற்பனை செய்யப்படும் ஆப்பிள் பழங்களில் பெரும்பாலும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். அப்படி ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஆப்பிள் தரமானது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. அதனால் அதன் விலை சற்று அதிகமாக இருக்கும் அதில் ஊட்டச்சத்துக்களும் கூடுதலாக இருக்கும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது.

    அதனால் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பளபளப்பான ஆப்பிளை தேர்ந்தெடுத்து வாங்குவதற்கும் சிலர் ஆர்வம் காட்டுவார்கள். உண்மையில் அந்த ஸ்டிக்கர் விலையுடனோ, தரத்துடனோ தொடர்புடையது அல்ல. ஆரோக்கியத்துடன்தான் நேரடி தொடர்புடையது.

    சில ஆப்பிள் பழங்களின் மீது ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரில் 4 இலக்க எண்கள் இடம் பெற்றிருக்கும். உதாரணமாக 4026, 4987, 4139 என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

    அந்த ஆப்பிள்கள் பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயனங்களை பயன்படுத்தி விளைவிக்கப்பட்டவை என்பதை விளக்கும் குறியீடுதான் அது.


    அந்த ஆப்பிள் பழங்கள் விளையும்போது பூச்சிகள், நோய் தாக்குதலுக்கு உள்ளாகாமல் தடுக்க பூச்சிக்கொல்லிகளை அதிகம் பயன்படுத்தி இருப்பார்கள். அதனால் அந்த ஆப்பிள் பழங்களில் அவற்றின் வீரியம் இருக்கக்கூடும். அதனை நன்கு கழுவி சாப்பிடுவது அவசியமானது.

    சில பழங்களின் ஸ்டிக்கரில் 5 இலக்க எண்கள் இருக்கும். அவை 84139, 86532 போன்ற எண் வரிசையை கொண்டிருக்கும். அந்த பழங்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்டவை. அதனால் அவற்றை இயற்கையான பழ இனங்களாக கருத முடியாது.

    மரபணு மாற்றம் மூலம் ஏராளமான காய்கறி, பழ இனங்கள் உருவாக்கப்படுவதால் அவற்றை சாப்பிடுவதை தவிர்க்கவும் முடியாது. என்றாலும் இந்த ஆப்பிள் பழங்கள் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்து விளைவிக்கப்பட்ட மற்ற பழங்களை விட சற்று விலை அதிகமாக இருக்கும்.


    9 என்ற எண்ணில் தொடங்கும் 5 இலக்க எண்களுடன் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஆப்பிள்களும் இருக்கின்றன. அதாவது, 94750.

    இந்த பழங்கள் இயற்கை முறையில் விளைந்தவை. அதாவது இந்த பழங்களின் விளைச்சலுக்கு பூச்சிக்கொல்லிகளோ, ரசாயன உரங்களோ பயன்படுத்தப்படவில்லை என்று அர்த்தம். அதனால் விலை கொஞ்சம் அதிகமாக இருக்கும்.


    ஆப்பிள் பழங்கள் மட்டுமல்ல ஆரஞ்சு போன்ற பழங்களிலும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. சிலர் போலி ஸ்டிக்கர்களை தயாரித்து பழங்களின் மீது ஒட்டுவதும் நடக்கிறது.

    அந்த பழங்கள் உயர்ந்த தரம் கொண்டவை, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனையாகின்றன என்பது போன்ற மாய தோற்றத்தை உருவாக்கவும் செய்வார்கள்.

    எனவே ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பழங்களை வாங்கும்போது கவனமுடன் செயல்படுவது நல்லது.

    • எந்தவிதமான சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
    • ஒருபோதும் மனதை அலைபாய விடாதீர்கள்.

    இன்றைய இளைஞர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஓரளவுக்கு வாழ்க்கையில் செட்டிலாகிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் கடுமையாக உழைக்கிறார்கள். ஓய்வெடுக்க நேரமின்றி சுழன்று கொண்டிருக்கிறார்கள்.

    வேலையை முடித்துவிட்ட போதிலும் அடுத்த நாளுக்குரிய வேலைக்கு திட்டமிடுதலை மேற்கொள்கிறார்கள். அவர்களுடைய மனமும், உடலும் ஓய்வெடுக்க விரும்புவதில்லை. வேலை, பணம் திரட்டுவது பற்றிய சிந்தனை மேலோங்கி கொண்டிருக்கும். இல்லாவிட்டால் எதையாவது பற்றி சிந்தனை செய்து கொண்டிருக்கும்.

     

    எத்தகைய கடினமான சூழ்நிலையை சந்திக்க நேர்ந்தாலும் தினமும் குறிப்பிட்ட நேரத்தை மனதுக்கு ஓய்வு கொடுக்க செலவிடுங்கள். அந்த சமயத்தில் மனம் அமைதியாக இருக்க வேண்டும். எந்தவிதமான சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

    ஒருபோதும் மனதை அலைபாய விடாதீர்கள். தினமும் குறிப்பிட்ட நேரத்தை மன அமைதிக்கான பயிற்சிக்கு ஒதுக்குவதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். அது முடியாத பட்சத்தில் தியான பயிற்சி மேற்கொள்ளும் இடங்களுக்கு செல்லுங்கள். அங்கு பயிற்சி செய்து மன அமைதியை தக்கவைக்கவும், மனதுக்கு ஓய்வு கொடுக்கவும் பழகிக்கொள்ளுங்கள்.

    • ஒழுங்கில்லாத ரத்த நாளங்களை ஒழுங்குபடுத்தி, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
    • விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படக்கூடிய தசை வலிகளுக்கு, தர்பூசணி ஜூஸ் சிறந்த நிவாரணி.

    ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்

    தர்பூசணியில் இருக்கும் சிட்ரூலின் அமினோ அமிலம், ஒழுங்கில்லாத ரத்த நாளங்களை ஒழுங்குபடுத்தி, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

    நல்ல கண் பார்வை

    தர்பூசணியில் பீட்டா கரோட்டீன், லீட்டின் மற்றும் வைட்டமின்-சி போன்ற சத்துக்கள் நிறைந்திருப்பதால், விரைவில் வயதாகும் தோற்றத்தை வரவிடாமல் தடுத்து, கண் ஆரோக்கியத்தை மெருகூட்டுகிறது.

     

    தசை வலி போக்கும்

    விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படக்கூடிய தசை வலிகளுக்கு, தர்பூசணி ஜூஸ் சிறந்த நிவாரணி. விளையாட்டு பயிற்சி, உடற்பயிற்சி, ஓட்டம் மற்றும் நடைப்பயிற்சி 'மேற்கொள்பவர்கள், தர்பூசணி ஜூஸ் குடிப்பது நல்லது.

    சிறுநீரக ஆரோக்கியம்

    தர்பூசணியில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், சிறுநீரகத்தை பாதிக்கும் அம்சங்களை விலக்கி, சிறுநீரகத்தில் கல் பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்கிறது.

    இதய நலன்

    லைக்கோபென், சிட்ரூலின் போன்றவை தர்பூசணியில் நிறைந்திருப்பதால், இதய நலன் காக்கப்படுகிறது. இதயம் தொடர்பான நோய் பாதிப்புகள் குறைகின்றன.

    • சேப்பங்கிழங்கு இலையில் அதிக சத்துக்கள் இருக்கிறது.
    • குடல்புண்களையும் ஆற்றுகிறது.

    சத்துக்கள் நிறைந்தது இந்த சேப்பங்கிழங்கு இலை ஆகும். பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டிஆக்சிடெண்ட் நிறைந்த சேப்பங்கிழங்கைவிட, இந்த கிழங்கின் இலையில் அதிக சத்துக்கள் இருக்கிறது.

    வைட்டமின் A, E, பாஸ்பரஸ், கால்சியம், நார்ச்சத்துக்கள் இந்த கிழங்கில் உள்ளன. கண்களுக்கும், பற்களுக்கும் எலும்புகளுக்கும், உறுதியையும், ஆரோக்கியத்தையும் இந்த கிழங்கு தரக்கூடியது.

     நார்ச்சத்து அதிகமுள்ள இந்த கிழங்கு செரிமான கோளாறை நிவர்த்தி செய்து, குடல்புண்களையும் ஆற்றுகிறது.

    முருங்கை கீரையை போலவே, இந்த சேப்பங்கிழங்கும் ஆண்மை குறைபாடு உள்ளவர்களுக்கு கை கொடுத்து உதவுகிறது.

    சேப்பங்கிழங்கு இவ்வளவு நன்மைகளை தந்தாலும், சேப்பங்கிழங்கு இலைகளில் கூடுதல் மருத்துவ தன்மைகள் நிறைந்துள்ளன.

    இதய வடிவில் காணப்படும், சேப்பங்கிழங்கு இலைகளில், வைட்டபின் B நிறைந்துள்ளது. எனவே, நரம்புத்தளர்ச்சி உள்ளவர்களுக்கு இந்த இலைகள் சிறந்த மருந்தாகிறது.

    வைட்டமின் C மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இந்த இலைகளில் நிறைந்துள்ளதால், புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கிறது. குறிப்பாக, குடல் புற்றுநோயை முற்றிலுமாக தடுக்கும் ஆற்றல் இந்த சேப்பங்கிழங்கு இலைகளுக்கு உண்டு.

    பெண்களை அதிக அளவு பாதிக்கும், மார்பக புற்று நோயையும் நெருங்க விடாமல் செய்ய இந்த சேப்பங்கிழங்கு இலைகள் துணைபுரிகின்றன.

    இலைகளில் புரதம், இரும்புச்சத்து, துத்தநாகம், தாமிரம், மக்னீசியம் போன்ற நுண் ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், மிகச்சிறந்த வலி நிவாரணியாக பயன்படுகிறது.

    உடல் எடை குறைய முயற்சிப்பவர்களும், இந்த கீரையை பயன்படுத்தலாம். இந்த சேப்பங்கிழங்கு இலைகளிலும் இரும்புச்சத்து அதிகமாகவே உள்ளன. அதனால், அனிமியா பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி சமைத்து சாப்பிட வேண்டும். இதிலிருக்கும் வைட்டமின் C நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.


    ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஒரு அருமருந்து எனலாம். ஏனென்றால், இந்த இலைகளில் சபோனின், டேனின்ஸ், கார்போஹைட்ரேட், ப்ளோனாய்டுகள் போன்ற பொருட்கள் அனைத்துமே, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவக்கூடிய அம்சங்களாகும். இந்த இலைகளின் சாறு, சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.

    எனவே, சேப்பங்கிழங்கு இலையில் ஜூஸ் தயாரித்து குடித்து வந்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு உடனடியாக குறைவதுடன், திடீரென சர்க்கரை அதிகரிக்கவும் செய்யாது.

    இந்த இலைகளை ஒரு கைப்பிடி எடுத்து சுத்தமாக கழுவி தண்ணீரில் கொதிக்க விட வேண்டும். அந்த நீரை வடிகட்டிவிட்டு, வேக வைத்த இலைகளை வைத்து, சமைத்து சாப்பிடலாம். ஆனால், பச்சையாக இலையை சாப்பிடக்கூடாது..

    சிலருக்கு இந்த இலைகளால் தோலில் அலர்ஜி ஏற்படலாம்.. சிலருக்கு சிறுநீரக கற்களையும் உருவாக்கலாம். எனவே, பச்சையாக சாப்பிடாமல் வேக வைத்து சாப்பிடலாம். இத்தனை சத்துக்கள் நிறைந்த சேப்பங்கிழங்கு இலைகளை, டாக்டர்களின் ஆலோசனையை பெற்று பயனடையலாம்.

    • ரத்த உறைவு ஏற்படும் அபாயம் உள்ளது.
    • ஏராளமானோர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

    பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 25 வயதிற்கு மேற்பட்ட நான்கு பேரில் ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

    இது எவ்வளவு தீவிரமானது என்பதைக் காட்டுகிறது. இது பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் காணப்படும். ஆனால் தற்போது 30 மற்றும் 40 வயதுக்குட்பட்ட பலர் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

    பக்கவாதத்தில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று-மூளைக்கு (இஸ்கிமிக்) ரத்தத்தை வழங்கும் பாத்திரங்களில் ரத்தக் கட்டிகளால் ஏற்படுகிறது. பக்கவாதம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் இது மிகவும் பொதுவானது.

    சுமார் 85 சதவீத மக்கள் இந்த வகையைக் கொண்டுள்ளனர். 2-மூளையில் உள்ள ரத்தக் குழாய்களின் சிதைவு மற்றும் ரத்தப்போக்கு ஆகியவற்றால் ஏற்படுகிறது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 15 சதவீதம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.

    உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, புகைபிடித்தல், மெல்லுதல் ஜர்தா, குட்கா, கைனி, அதிகப்படியான மது அருந்துதல், குடும்பத்தில் பக்கவாதத்தின் முந்தைய வரலாறு ஆகியவை முக்கிய ஆபத்து காரணிகள். ஒழுங்கற்ற இதயத் துடிப்பு போன்ற சில இதயப் பிரச்சனைகளும் காரணமாக இருக்கலாம்.

    அத்தகையவர்களுக்கு ரத்த உறைவு ஏற்படும் அபாயம் உள்ளது. இவை மூளையின் ரத்த நாளங்களை அடைந்து செயலிழப்பை ஏற்படுத்தும். மறுபுறம் மரபணு இயல்பும் இந்தியர்களை அச்சுறுத்துகிறது.

    மேற்கத்திய நாடுகளை விட நம் நாட்டில் பக்கவாதம் 10 ஆண்டுகளுக்கு முன்பே தாக்குகிறது.

    தற்போது பெரியவர், சிறியவர் என்ற பாகு பாடின்றி பலர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஏராளமானோர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

    30 மற்றும் 40 வயதுக்குள் முடங்கிவிட்டால் நிலைமை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்யவே பயமாக இருக்கிறது. எனவே எல்லாம் கவனமாக இருக்க வேண்டும்.

    பக்கவாதத்தின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள் உள்ளன. இவற்றை அடையாளம் கண்டுகொ ள்வது மிகவும் அவசியம்.

    சிறுமூளையில் பக்கவாதம் ஏற்படும் போது, உடல் கட்டுப்பாட்டை இழந்து தலைச்சுற்றல் ஏற்பட்டு கீழே விழலாம். உங்களுக்கு தூக்கம் வரலாம்.

    வாய் முகத்தில் பக்கவாட்டில் திரும்பும். ஒரு கையின் பலவீனம்.

    பேச்சில் வேறுபாடு, தடுமாற்றம், தடுமாற்றம். இந்த அறிகுறிகள் எதுவும் புறக்கணிக்கப்படக்கூடாது. பக்கவாதத்திற்கு சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளும் உள்ள மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லுங்கள்.

    சுமார் 30 சதவீத மக்கள் பக்கவாதத்திற்குப் பிறகு முழுமையாக குணமடைகிறார்கள். மற்றவர்களுக்கு ஊனம் ஏற்படுகிறது. சரியாக நடக்க முடியாமல், பேச முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். மெல்ல மெல்ல முன்னேறி வருகிறார்கள். மறுவாழ்வு சிகிச்சையானது விரைவான மீட்புக்கு வழிவகுக்கும். இதில் பிசியோதெரபி முக்கியமானது.

    பக்கவாதம் ஏற்படும் போது உடல் வலிமை மட்டுமின்றி தன்னம்பி க்கையும் குறைகிறது. முதலில் கை கால்களை பிடித்து அவர்களை நம்ப வைக்கிறார்கள்.

    ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தொடர்ந்து மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    உணவில் உப்பைக் குறைக்கவும். நீரிழிவு நோயாளிகள் குளுக்கோஸ் அளவை கண்டிப்பாகக் கட்டுப்படுத்த வேண்டும். கார்போஹைட்ரேட் குறைக்கப்பட வேண்டும். மருந்துகள் பயன்படுத்தப்பட வேண்டும்.

    கொலஸ்ட்ராலையும் குறைக்க வேண்டும். உடற்பயிற்சியும் முக்கியமானது. புகைபிடிப்பதை நிறுத்துங்கள்.

    எடை கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மதுபானத்தில் ஈடுபட வேண்டாம். பழக்கம் இருந்தால் வரம்பைப் பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • Y குரோமோசோம்களில் இருந்த 1,438 மரபணுக்களில் 1,393 மரபணுக்கள் அழிந்துவிட்டன.
    • அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்விக்கும் விஞ்ஞானிகள் பதில் வைத்துள்ளனர்.

    மனிதர்களை ஆண்கள் பெண்கள் என தீர்மானிப்பது குரோமோசோம்கள் ஆகும். பெண்களுக்கு XX குரோமோசோம்களும் , ஆண்களுக்கு XY குரோமோசோம்களும் உள்ள நிலையில் ஆண்தன்மையை தீர்மானிக்கும் Y குரோமோசோம்கள் சுருங்கி வருவதாக புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. X குரோமோசோம்கள் Y குரோமோசோம்களுடன் சேரும்பொழுது ஆண் குழந்தைகள் பிறக்கின்ற நிலையில் அவற்றின் அழிவினால், வருங்காலங்களில் ஆண் குழந்தைகளே பிறக்காத நிலை ஏற்பட்டு அது இனப்பெருக்க சுழற்சியை உடைக்கலாம்.

    தொடக்கத்தில் மனிதனில் உள்ள Y குரோமோசோம்களில் 1,438 மரபணுக்கள் இருந்த நிலையில் கடந்த 300 மில்லியன் ஆண்டுகளில் அவற்றில் 1,393 மரபணுக்கள் அழிந்துவிட்டது. தற்போது Y குரோமோசோம்களில் 40 மரபணுக்கள் மட்டுமே மிச்சமுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த 11 மில்லியன் ஆண்டுகளில் அவை மொத்தமாக அழிந்துவிடும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

    எனவே 11 மில்லியன் ஆண்டுகள் கழித்து என்ன நடக்கும் என்ற கேள்விக்கும் விஞ்ஞானிகள் பதில் வைத்துள்ளனர். அதாவது, ஸ்பைனி எலிகளை வைத்து ஆராய்ச்சி செய்தபோது, அவற்றில் Y குரோமோசோம்கள் முற்றிலுமாக அழிந்த பிறகு புதிய வகையான குரோமோசோம்கள் பரிணமித்துள்ளது கண்டறியப்பட்டது. எனவே மனிதர்களிடம் Y குரோமோசோம்கள் முற்றிலுமாக அழியும் போது, புதிய வகையிலான பாலினங்கள் உருவாகும் என்று நம்பப்படுகிறது.

    • 20 நாடுகளில் சுமார் 2 மில்லியன் பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • சிவப்பு இறைச்சி சாப்பிடுவதற்கும் நீரிழிவு அபாயத்திற்கும் தொடர்பு உள்ளது.

    இந்தியாவில் 2021-ல் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வின்படி 101 மில்லியன் மக்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதாக கண்டறியப்பட்டது.

    136 மில்லியன் மஞ்சள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 315 மில்லியன் மக்கள் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் `லான்செட்' நடத்திய சமீபத்திய ஆய்வில் சிவப்பு இறைச்சி சாப்பிடுவதால் நீரிழிவு நோய் பாதிப்பு அதிகரிக்கும் என்று தெரிய வந்துள்ளது. 20 நாடுகளில் சுமார் 2 மில்லியன் பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அதில் பன்றி இறைச்சி, கொத்து இறைச்சி போன்றவற்றை சாப்பிடுவதற்கும் 2-வது வகை நீரிழிவு நோய்க்கும் நேரடித் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.


    ஒரு நாளைக்கு 50 கிராம் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை வழக்கமாக உட்கொள்வது 2 துண்டு பன்றி இறைச்சியை சாப்பிடுவதற்கு சமம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

    இது அடுத்த 10 ஆண்டுகளில் 2-வது வகை நீரிழிவு நோய் வருவதற்கான 15 சதவீத ஆபத்தை ஏற்படுத்துகிறது. ஒரு நாளைக்கு 100 கிராம் பதப்படுத்தப்படாத சிவப்பு இறைச்சியை உட்கொள்வது 2-வது வகை நீரிழிவு நோயின் 10 சதவீத அதிக ஆபத்துடன் தொடர்புடைய ஒரு சிறிய மாமிசத்துக்கு சமம் என தெரியவந்துள்ளது.

    கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள், கோழி, வான்கோழி அல்லது வாத்து போன்ற 100 கிராம் கோழிகளை வழக்கமாக உட்கொள்வது 8 சதவீத அதிக ஆபத்துடன் தொடர்புடையது என்று கூறியுள்ளனர்.


    இதுகுறித்து சென்னை நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் வி.மோகன் கூறுகையில், `லான்செட்டில் வெளியிடப்பட்ட சமீபத்தின் ஆய்வுகள் சிவப்பு இறைச்சி சாப்பிடுவதற்கும் நீரிழிவு அபாயத்திற்கும் தொடர்பு உள்ளது.

    இந்த சான்றுகள் நமது உணவுத் தேர்வுகள் ஒட்டு மொத்த நல்வாழ்வை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை மேலும் ஆராய வைக்கிறது. ஆனாலும் இந்தியாவில் உட்கொள்ளப்படும் சிவப்பு இறைச்சியின் அளவு குறைவாகவே உள்ளது என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மனிதர்களின் குடலில் உணவு செரிமானத்திற்கு உதவும் நல்ல பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன.
    • வெங்காயம் அல்லியம் வகையைச் சேர்ந்த பூண்டு தாவரம்.

    உரிக்க உரிக்க ஒன்றும் இல்லாதது போல காணப்பட்டாலும் வெங்காயத்தில் இருக்கும் அரிய மருத்துவ குணங்கள் வேறு எதிலும் இல்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    வெங்காயம் அல்லியம் வகையைச் சேர்ந்த பூண்டு தாவரம் ஆகும். ஒரு கையளவு வெங்காயத்தில் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, சர்க்கரை, வைட்டமின்-சி, வைட்டமின்-பி 6, பொட்டாசியம், மாங்கனீசு, செம்பு உள்பட பல சத்துக்கள் உள்ளன.

    மனிதர்களின் குடலில் உணவு செரிமானத்திற்கு உதவும் நல்ல பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன. சில காரணங்களால் குடலில் இந்த பாக்டீரியாக்கள் குறைந்து விடும்போது நீரிழிவு முதல் பெருங்குடல் புற்றுநோய் வரை பல நோய்கள் ஏற்படுவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    வெங்காயத்தில் பிரக்டோலிகோ சாக்கரைடுகள் உள்ளன. அவை, குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கான உணவளிக்கும் ப்ரீபயாடிக்குகளாக செயல்படுகிறது. இதன் மூலம் உண்ணும் உணவு முழுமையாக சீரணம் ஆகி, உடலுக்கு ஆற்றல் கிடைக்கிறது. நோய்கள் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.

    பொதுவாகவே வயதானவர்களுக்கு எலும்பு பலவீனம் ஏற்படும். எலும்பு தேய்மானத்தை தடுப்பதில் வெங்காயத்துக்கு நிகர் எதுவும் இல்லை. வெங்காயத்தில் உள்ள கரிம சல்பர் கலவைகள் உடலில் கொழுப்பின் அளவை குறைத்து இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. நீரிழிவு நோய் வருவதை தடுக்க உதவுகிறது. எனவே வெங்காயத்தை உணவில் தவறாமல் சேர்ப்பது பல நன்மைகளை தரும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நம் வீட்டில் எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
    • நாம் சாப்பிட்ட தட்டை நாமே எடுத்து செல்லும் பண்பை குழந்தைகளிடம் வளர்ப்பது நல்லது.

    நம் வீட்டில் பெற்றோருடன் சாப்பிடுவதற்கும், வெளி இடங்களில் பலர் முன்னிலையில் சாப்பிடுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. நம் வீட்டில் ஆடி-ஓடி, உருண்டு-புரண்டு உணவு சாப்பிட்டாலும் அதில் தவறில்லை. ஆனால் வெளி இடங்களில், அதுவும் பலர் முன்னிலையில் உணவு சாப்பிட ஒரு வரைமுறை இருக்கிறது. உறவினர்களோடும், பள்ளி நண்பர்களோடும், தெரியாத நபர்களோடும் உணவு சாப்பிடும்போது, பல விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும். அவை என்னென்ன? என்பதை தெரிந்து கொள்வோம்.

    நம் வீட்டில் எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் பொது இடத்திலும், விருந்து நிகழ்ச்சியிலும் அடுத்தவர் முன்னிலையில் வாயை திறந்து மெல்லக்கூடாது. அது அடுத்தவர்களை அவமரியாதை செய்வதுபோல கருதப்படும்.

    அவசரம் அவசரமாக வாயில் அதிக உணவை திணித்து சாப்பிடுவது, தவறான பழக்கம். அதை எப்போதும் பழகாதீர்கள். உணவை மெல்ல மென்று, ருசிபார்த்து மெதுவாகவே விழுங்கவேண்டும். இந்த விஷயத்தை வீட்டிலும், வெளி இடங்களிலும் கட்டாயம் கடைப்பிடியுங்கள். அவசர அவசரமாக உணவை வாயில் திணிப்பதால், உங்களின் மரியாதை சபையில் குறையும்.

    'டைனிங் டேபிள்' விருந்தில் பலருடன் சாப்பிடும்போது, சில சமயங்களில் பேச வேண்டிவரும். அப்படி ஒரு சூழ்நிலை உருவானால், அடுத்தவர் ஒரு கருத்தை பேசி முடிக்கும் வரை காத்திருந்து பிறகு பேசுங்கள். ஏனெனில் பிறர் பேச்சை இடைமறித்து பேசுவது, அநாகரிகமாக கருதப்படும்.

    உங்களுக்கு பிடித்த உணவு பலகாரம் ஒன்று, நீங்கள் அமர்ந்து உண்ணும் இடத்திற்கு வெகு தொலைவில் இருந்தால், அதை கேட்டு வாங்கி சாப்பிடுங்கள். பிடித்த உணவை கேட்டு வாங்கி சுவைப்பது, தவறில்லை. ஆனால் தயக்கத்தோடு அடுத்தவர் தட்டை பார்ப்பது தவறு.

    நாம் சாப்பிட்ட தட்டை நாமே எடுத்து செல்லும் பண்பை குழந்தைகளிடம் வளர்ப்பது நல்லது. ஒருசில மேலை நாடுகளில், குழந்தைகளையே சாப்பாட்டு தட்டை எடுத்து செல்லச் சொல்கிறார்கள். ஒருசில நாடுகளில் சாப்பிட்ட தட்டை குழந்தைகளே கழுவி வைக்கிறார்கள். அதனால் நம் குழந்தைகளிடம், தட்டை கழுவும் இடத்தில் கொண்டு போய் போடும் பழக்கத்தையாவது வளர்க்கவேண்டும்.

    இவை டேபிள் மேனர்ஸின் ஒருசில பண்புகள்தான். இதுபோக நிறைய பண்புகள் இருக்கின்றன.

    • ரத்த வெள்ளை அணுக்கள் நோய்களை எதிர்த்து போராட உதவும்.
    • ரத்தத்தை உறைய வைப்பதற்கு பிளேட்லெட்டுகள் உதவும்.

    மனித உடலில் உள்ள ரத்த அணுக்கள் மூன்று வகைப்படும். அவை: ரத்த வெள்ளை அணுக்கள், ரத்த சிவப்பு அணுக்கள், 'பிளேட்லெட்' எனப்படும் ரத்த தட்டுக்கள். இவற்றுள் ரத்த சிவப்பணுக்கள் உடலில் உள்ள திசுக்களுக்கு ஆக்சிஜனை எடுத்து செல்லும் பணியை செய்யும்.

    ரத்த வெள்ளை அணுக்கள் நோய்களை எதிர்த்து போராட உதவும். விபத்தாலோ, வேறு ஏதேனும் காரணமாகவோ உடலில் ஏற்படும் காயங்களில் இருந்து வழியும் ரத்தத்தை உறைய வைப்பதற்கு பிளேட்லெட்டுகள் உதவும்.

    ஒருவரது உடலில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் முதல் 4 லட்சத்து 50 ஆயிரம் வரையிலான எண்ணிக்கையில் பிளேட்லெட்டுகள் இருக்கும். ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் குறைவாக பிளேட்லெட்டுகள் இருந்தால் ரத்தம் உறைவதில் பிரச்சினை ஏற்படும்.

    டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சல், இதய நோய் பாதிப்புக்கு ஆளாகுவது, ஒருசில மருந்துகள் உட்கொள்வது பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறைவதற்கு முதன்மையான காரணங்களாக இருக்கின்றன.

    பிளேட்லெட் எண்ணிக்கை குறைந்தால் பப்பாளி இலையை சாறு எடுத்து பருகும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. வேறு சில காய்கறிகள், பழங்கள், உணவுப்பொருட்களும் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரித்து ரத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

    * மாதுளம் பழத்தில் ஆன்டிஆக்சிடென்டுகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை பிளேட்லெட் எண்ணிக்கையையும், ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு செயல்பாட்டையும் மேம்படுத்த உதவும்.

    * கீரை, முட்டைக்கோஸ் மற்றும் புரோக்கோலி போன்ற காய்கறிகளில் வைட்டமின் கே அதிகமாக உள்ளன. ரத்தம் உறைதலுக்கு இவை அவசியமானவை. சாலட்டுகள், ஸ்மூத்திகள் மற்றும் சமையலில் சேர்த்து உட்கொள்வதன் மூலம் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யலாம்.

    * பூசணிக்காயில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. பிளேட்லெட்டுகள் உற்பத்திக்கு உதவுவதோடு, நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் வலுப்படுத்தும். பூசணிக்காயை உணவில் சேர்ப்பதுடன் சூப், சாலட் வடிவிலும் உட்கொள்ளலாம்.

    * பீட்ரூட்டில் இரும்பு மற்றும் போலேட் அதிகம் உள்ளது. ரத்த சிவப்பணுக்கள் மற்றும் பிளேட்லெட்டுகள் உற்பத்திக்கு இவை உதவும். பீட்ரூட்டை சாலடுகள், ஸ்மூத்திகள், ஜூஸ்களில் கலந்து உட்கொள்ளலாம்.

    * கேரட்டில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. இது நோய் எதிர்ப்பு செயல்பாடுக்கும், பிளேட்லெட் உற்பத்திக்கும் உதவும். கேரட்டை பச்சையாகவோ, வேகவைத்தோ, ஜூஸாகவோ, சாலட்டுகளில் கலந்தோ சாப்பிடலாம்.

    வைட்டமின் ஏ பிளேட்லெட் உற்பத்திக்கு உதவும். சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பால், அனைத்து வண்ண காய்கறிகள், பழங்களிலும் வைட்டமின் ஏ நிறைந்திருக்கும்.

    * வைட்டமின் சி நோய் எதிர்ப்பு செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிப்பதுடன் பிளேட்லெட்டுகள் சரியாக வேலை செய்ய உதவும். இரும்புச்சத்தை உறிஞ்சும் திறனை மேம்படுத்தும். ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது பிளேட்லெட் உற்பத்தியை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உதவும்.

    அதுபோல் கிவி, பெர்ரி, ஸ்ட்ராபெரி, மாம்பழம், அன்னாசி, சிவப்பு, பச்சை நிற குடை மிளகாய், புரோக்கோலி, நெல்லிக்காய் போன்றவையும் வைட்டமின் சி நிறைந்தவை. இந்த உணவுகளை சாப்பிடுவதுன் மூலமும் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யலாம்.

    * ஆரோக்கியமான ரத்த அணுக்களுக்கு போலேட் அவசியம். இது முக்கியமாக பச்சை இலை காய்கறிகளில் காணப்படுகிறது. கீரை, அஸ்பாரகஸ், பட்டாணி போன்றவைகளில் மிகுந்திருக்கிறது. உடலில் போலேட் குறைபாடு ஏற்பட்டால் பிளேட்லெட் எண்ணிக்கையும் பாதிப்புக்குள்ளாகும். எனவே போலேட் நிறைந்த உணவுகளை உட்கொள்வது பிளேட்லெட் எண்னிக்கையை அதிகரிக்க உதவி செய்யும்.

    * முட்டை, இறைச்சி போன்றவைகளில் வைட்டமின் கே உள்ளன. ரத்த உறைவுக்கும், எலும்பு ஆரோக்கியத்திற்கும் வைட்டமின் கே அவசியம். இவற்றை உட்கொள்வது பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கவும் துணை புரியும்.

    * நல்லெண்ணெய்யில் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதனால் சமையலில் தவறாமல் பயன்படுத்தி வருவது நல்லது.

    * இஞ்சி, மஞ்சள், பாதாம், பூண்டு உள்ளிட்டவற்றை உண்டு வருவதும் பலன் அளிக்கும்.

    ×