என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • குரங்கம்மை பொதுமக்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
    • குரங்கம்மை நோய் எப்படி பரவும்?

    'மங்கி பாக்ஸ்' எனப்படும் குரங்கம்மை நோய் உலகளவில் வேகமாக பரவி, பொதுமக்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

    விமானத்தில் பயணிப்பவர்கள் மூலம் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு எளிதாக ஊடுருவி விடுவதால் விமான நிலையங்களில் கண்காணிப்பும், கடும் பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த நோய் பற்றியும், அதன் தன்மை குறித்தும், அது ஏற்படுத்தும் அச்சுறுத்தல்கள், மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

    ஒருவருக்கு குரங்கம்மை நோய் எப்படி பரவும்?

    முக்கியமாக விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு பரவுகிறது. அதேவேளையில் ஒரு மனிதனிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவுவதும் சாத்தியம். குறிப்பாக பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து மற்றொருவருக்கு நெருங்கிய தொடர்பு மூலமாகவும், சுவாசத் துளிகள் மூலமாகவும் பரவக்கூடும்.

    விலங்குகளின் மூலம் பரவுவதை பொறுத்தவரை குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ள விலங்குடன் நெருங்கிய தொடர்பு கொள்வதன் மூலமாகவும், அந்நோய் பாதிப்புக்குள்ளான விலங்குகளின் இறைச்சியை உண்பதன் மூலமாகவும் பரவும்.

    மனிதர்களை பொறுத்தவரை குரங்கம்மை பாதிக்கப்பட்டவருடன் உடல் ரீதியாக நெருங்கிய தொடர்பில் இருப்பது, அவர்களின் உடைகள், படுக்கை அறை, துண்டு போன்றவற்றை உபயோகிப்பது மூலம் பரவும்.

    உமிழ்நீர், சுவாச துளிகள் (தும்மல், இருமல்) மூலமும், கருவில் வளரும் குழந்தைக்கு தாயின் நஞ்சுக்கொடி மூலமும் எளிதில் பரவக்கூடும்.


    குரங்கம்மை நோய்க்கு தடுப்பூசி உள்ளதா?

    சின்னம்மை ஒழிப்பு திட்டத்தின்போது பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிகளை இந்த நோயில் இருந்து தற்காத்துக்கொள்ள பயன்படுத்தலாம். இருப்பினும், 1980-ம் ஆண்டுக்கு உலக அளவில் சின்னம்மை ஒழிக்கப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்ததை தொடர்ந்து இந்தியாவில் தடுப்பூசி எதுவும் தயாரிக்கப்படவில்லை.

    ஜென்னோஸ்டம் என்ற பெயருடைய தடுப்பூசியை குரங்கு அம்மை, சின்னம்மை நோய்க்கு பயன்படுத்த அமெரிக்கா உரிமம் பெற்றுள்ளது.

    குழந்தைகளுக்கு இந்த நோய் எளிதில் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் விழிப்புணர்வுடன் தற்காப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது அவசியமானது.


    குரங்கம்மையின் அறிகுறிகள் என்ன?

    காய்ச்சல், முகம், கைகள், கால்கள், கண்கள், வாய் அல்லது பிறப்புறுப்புகளில் கொப்புளங்களுடன் கூடிய கடுமையான தோல் வெடிப்பு மற்றும் நிணநீர் கணுக்களில் வீக்கம் ஆகியவை முக்கியமான அறிகுறிகள்.

    காய்ச்சல் ஏற்பட்ட முதல் 3 நாட்களுக்குள் சொறி உணர்வு ஏற்படலாம். முதலில் வாய், நாக்கு பகுதியில் புண்கள் தோன்றும். பின்பு முகத்தில் சொறி உணர்வு தோன்றி 24 மணி நேரத்திற்குள் கைகள், கால்கள் என உடலில் மற்ற பகுதிகளுக்கு பரவி கொப்புளங்களாக மாறும்.

    4, 5-வது நாளில், கொப்புளங்கள் பெரிதாகிவிடும். 2-வது வார முடிவில், அவை உலர்ந்து விடும். இதனுடன் தொடர்புடைய மற்ற சில அறிகுறிகள்: ஆஸ்தீனியா (கடுமையான உடல் பலவீனம்), தலைவலி, தசை வலி, உடல் வலி, முதுகுவலி, தொண்டை புண், இருமல், வியர்வை, உடல் குளிர்ச்சி.

    சின்னம்மை போன்றது தானா?

    குரங்கம்மையும் சின்னம்மையை போன்றே போக்ஸ்விரிடே குடும்பத்தை சேர்ந்தது. நோய் அறிகுறிகளும் கிட்டத்தட்ட சின்னம்மை போலவே இருக்கும். ஆனால் கூடுதலாக நிணநீர் அழற்சியையும் (நிணநீர் கணுக்களில் வீக்கம்) ஏற்படுத்தும்.

    சின்னம்மையால் பாதிக்கப்படுபவர்களுக்கு இந்த அறிகுறி ஏற்படாது. அத்துடன் சின்னம்மையுடன் ஒப்பிடும்போது இறப்புக்கு வழிவகுக்கும் அச்சுறுத்தலையும் குரங்கம்மை நோய் கொண்டிருக்கிறது.

    மறுபுறம் சின்னம்மையை பொறுத்தவரை விரிசெல்லா-ஜோஸ்வர் வைரஸ் மூலம் ஏற்படுகிறது. இருப்பினும் சின்னம்மை, குரங்கம்மை இவை இரண்டும் சுவாசம் மற்றும் தோல் தொடர்பு மூலம் பரவுகின்றன.


    குரங்கம்மை என்றால் என்ன?

    இது வைரஸ் ஜூனோடிக் நோயாகும். அதாவது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ்தொற்று.

    இந்தியாவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா?

    கேரளாவில் மார்ச் மாதத்தில் முதல் நோய்த்தொற்று பதிவானது. சுமார் 30 பேர் இந்த நோய் தொற்று அறிகுறிகளுக்கு ஆளாகியுள்ளனர். இருப்பினும் குரங்கம்மை வைரஸ் தொற்று அதிகரிப்பதற்கான அபாயம் குறைவாக இருப்பதாகவும், பீதி அடைய தேவையில்லை என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.

    குரங்கம்மையை எவ்வாறு தடுப்பது?

    * அறிகுறிகள் தென்பட்டால் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து விலகி தனிமையில் இருக்க வேண்டும். உடனே மருத்துவரை அணுகவும்.

    * நோய் பாதிப்புக்குள்ளான அல்லது சந்தேகிக்கப்படும் நபருடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்கவும்.

    * நோயாளியுடன் தொடர்பில் இருக்கும் படுக்கை, பாத்திரங்கள் போன்ற எந்தவொரு பொருளையும் தொடுவதை தவிர்க்கவும்.

    * கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

    * பாதிக்கப்பட்ட நபரின் கொப்புளத்தைத் தொடுவதை தவிர்க்கவும்.

    முதல் நோய்த்தொற்று எப்போது உறுதிபடுத்தப்பட்டது?

    1970-ம் ஆண்டு காங்கோ நாட்டில் ஒரு குழந்தை இந்த நோய் பாதிப்புக்குள்ளாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் அந்த குழந்தைக்கு பெரியம்மை தொற்று இருப்பதாகவே சந்தேகிக்கப்பட்டது.

    தொடர் பரிசோதனையின் முடிவில் குரங்கம்மை தொற்றுக்கு ஆளாகி இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. குரங்குகளை தவிர அணில், அந்நாட்டை சேர்ந்த ஒரு வகை எலி, டார்மிஸ் போன்ற விலங்குகள் மூலமும் இந்த வைரஸ் தொற்று பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்த நோய் கொடியதா?

    குரங்கு அம்மை அறிகுறிகள் சில வாரங்களுக்குள் தானாகவே மறைந்துவிடும். ஆனால் சிலருக்கு இரண்டாம் நிலை நோய்த்தொற்றுகளான நிமோனியா, மூளை அழற்சி, கண் நோய்த்தொற்றுகள் (பார்வை இழப்புக்கு வழிவகுக்கக்கூடும்) மற்றும் மரணம் போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். எனவே ஆரம்ப நிலையிலேயே முறையான சிகிச்சைகளை மேற்கொள்வது அவசியமானது.

    குரங்குகளால் இந்த நோய் பரவுகிறதா?

    1958-ம் ஆண்டு, சிங்கப்பூரில் இருந்து டென்மார்க் ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பப்பட்ட குரங்குகள் நோய் பாதிப்புக்குள்ளாகி, இந்த நோய் பரவியது. எனவே `குரங்கம்மை' என்று அழைக்கப்படுகிறது.

      அலுவலக பணியில் ஈடுபடுபவர்கள் தங்கள் மேஜை பகுதியை அழகூட்டுவதற்கு உள் அலங்கார செடிகளையும் பயன்படுத்தலாம். அவை மேஜைக்கு அழகு தருவதோடு பணி சூழலுக்கும் இதமளிக்கும். காற்றையும் சுத்திகரிக்கும் தன்மையையும் கொண்டிருக்கும். அத்தகைய அலங்கார செடிகளில் சில..

      ஜேட்: போன்சாய் மர செடிகளை போலவே காட்சியளிக்கும் இவை அளவில் சிறியவை. சிறிய இலைகளையும் கொண்டவை, அதிர்ஷ்ட செடியாக கருதி பலரும் வளர்க்கிறார்கள்.

      பைகஸ்: அறையில் நிலவும் வெப்பத்தை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. காற்றில் கலக்கும் மாசுகளை குறைக்கும் சுத்திகரிப்பானாகவும் செயல்படக்கூடியது.

      பிட்டோனியா: மொசைக் கற்களை போல் கவர்ச்சியான தோற்றம் கொண்டிருக்கும். இதன் வளர்ச்சிக்கு குறைந்த வெளிச்சமே போதுமானது. இலைகளின் பிரகாசமும், வண்ணமும் மேஜைக்கு அழகூட்டும்.

      பெர்ன்: அறைக்குள் நிலவும் வெப்பத்தை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. கண்களுக்கு குளிர்ச்சி தரும் வசீகர அழகும் கொண்டது.

      • தேனீக்கள் சேகரித்த மகரந்தம், புரோபோலிஸ் மற்றும் ராயல் ஜெல்லி என்ற மெழுகு ஆகியவை அடங்கும்.
      • வெளிநாடுகளில் தேனடையுடன் தேன், காலை உணவாக உணவகங்கள் பரிமாறப்படுகிறது.

      தமிழ்க்கடவுள் முருகப்பெருமானுக்கு தேனும் தினை மாவும் தருவேன் என்று பாடினார், அவ்வையார்.

      தற்போது, தேனைவிட தேனடை மதிப்பு மிக்கதாக உண்ணப்படுகிறது தேனடை என்பது ஒரு தேன்கூடு. தேனீயின் வீடு.

      இந்த வீட்டில்தான் தேனீக்கள், மகரந்தத்தையும், தேனையும் சேமித்து வைக்கும். இது மெழுகு போன்று அமைந்திருக்கும்.

      பொதுவாக, வணிக ரீதியாக விற்பனை செய்யப்படும் தேன், பல்வேறு நிலைகளில் சுத்திகரிக்கப்படுகிறது. ஆனால், தேனடையில் நேரடியாக கிடைக்கும் தேன் இயற்கையானது.

      தேனீக்கள் சேகரித்த மகரந்தம், புரோபோலிஸ் மற்றும் ராயல் ஜெல்லி என்ற மெழுகு ஆகியவை அடங்கும். தனியாக பிழியப்பட்ட தேனில் இவை காணப்படாது.

      இதனால், தனி தேனை விட மகரந்தம், ராயல் ஜெல்லி மெழுகு அடங்கிய தேனில் மருத்துவ குணங்கள் அதிகம் என்று நம்பப்படுகிறது. வெளிநாடுகளில் தேனடையுடன் தேன், காலை உணவாக உணவகங்கள் பரிமாறப்படுகிறது.

      தேன் கூட்டில் செறிந்து கிடக்கும் தேனில் புரதங்கள், தாதுக்கள், நீர், மகரந்தம், பிரக்டோஸ், குளுக்கோஸ், கரிம அமிலங்கள், புரதங்கள் மற்றும் என்சைம்கள் ஆகியவை தாராளமாக உள்ளன.

      இதனை உண்ணும்போது மனித உடல் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை வலுவாக எதிர்த்து போராடும் வலிமையை அதிகரிக்கிறது. ஆதிகால மருத்துவத்தில் தும்மல், சளி மற்றும் கண்களில் நீர் வடிதல் போன்ற பிரச்சனைகளுக்கு தேனடையை மென்று சாப்பிட பரிந்துரைப்பது வழக்கம். இதனால், மேற்கண்ட உடல்நலக்குறைவு ஒரு சில நாட்களில் மறைந்து விடும் என்று நம்பப்படுகிறது.

      • வேர், தண்டு என அனைத்து பகுதிகளுமே மருத்துவ குணம் கொண்டவை.
      • சிறுநீரகக் கல், பித்தப்பை கல் பிரச்னைக்கு சிறந்த தீர்வாக உள்ளது.

      நாம் சர்வ சாதாரணமாக சாலையோரங்களிலும், தரிசு நிலப்பகுதிகளிலும் பரவலாக காணப்படும் ஒருவகை களைச்செடி தான் இந்த மூக்கிரட்டை கீரை. தெருவோரங்களிலும், வயல்களிலும் சாதாரணமாக வளர்ந்து கிடக்கும் இந்த கீரையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.

      இந்த கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளலாமா என்ற சந்தேகம் பெரும்பாலானோருக்கு உண்டு. ஆனால் நமது முன்னோர்கள் இந்த கீரையை உணவில் சேர்த்து வந்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன.

      இக்கீரைக்கு சாரணத்தி, சாரணைக் கொடு, புனர்நவர் எனும் வேறு பெயர்களும் உண்டு. இது கிராமப்புறங்களில் அனைத்து தட்பவெட்ப சூழலையும் ஏற்று நன்கு வளரக்கூடிய ஒருவகை கொடியாகும்.

      இந்த கீரையில் அடர்நீல நீற பூக்கள் மற்றும் வெண்மை நிற பூக்கள் காணப்படும். பூக்களின் நிறங்களின் அடிப்படையில் இருவகை மூக்கிரட்டை கீரை உள்ளன. ஆனால் இரண்டுமே பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டு சிறந்து விளங்குகிறது.

      மூக்கிரட்டை கீரையின் அறிவியல் பெயர் பெயர் ஹேவியா டிஃப்பூசா ஆகும். இது நிகீடாஜினேகி எனும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இது இந்தியா, இலங்கை, ஐரோப்பா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் காணப்படுகிறது.

      மேலும் இதனை ஒரு மூலிகைத் தாவரமாக நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்திருப்பது சிறப்புக்குரியது. மூக்கீரட்டையின் இலை, வேர், தண்டு என அனைத்து பகுதிகளுமே மருத்துவ குணம் கொண்டவை.

      மூக்கிரட்டையின் மருத்துவ குணங்கள்:

      மூக்கிரட்டை சிறுநீரகக் கல், பித்தப்பை கல் பிரச்னைக்கு ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.உடலில் ஏற்படும் வாதம் சம்பந்தமான நோய்களை நீக்க உதவுகிறது.

      மூளைக்கு ஆற்றலை அழித்து சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது. மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் நோய் பாதிப்பு கொண்டவர்களுக்கு வயிற்றுப் பகுதியில் நீர் தேங்கி வயிறு பெருத்து காணப்படும். அதற்கு மூக்கிரட்டையை கீழாநெல்லியுடன் சேர்த்து சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்த முடியும்.

      அந்த நீரை வெளியேற்ற மூக்கிரட்டை உதவுகிறது. மூக்கிரட்டையுடன் சீரகம், பெருங்காயம் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், மூட்டு வலி மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் குறையும்.

      செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் பிரச்னையை குறைக்க உதவும். சரும நோய்களை குணப்படுத்தி முகப்பொலிவினை மேம்படுத்த உதவும்.

      கீரைகள் இயல்பாகவே அதிக சத்துக்களைக் கொண்டுள்ளதால் ரத்தசோகை பிரச்னையை முழுவதும் குறைக்கக் கூடும்.சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் தேங்கியுள்ள நச்சுக்களை அகற்றி சிறப்புடன் செயல்பட உதவும்.

      உடலில் உள்ள தேவையற்ற நச்சுகளை அகற்றியும், கெட்ட கொழுப்புகளை நீக்கியும் உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள உதவும். இதயம் மற்றும் நுரையீரல் சம்பந்தமான பிரச்னைகளை சரி செய்யவும் உதவுகிறது.

      உணவாலோ வேறு பாதிப்பின் காரணமாகவோ, உடலில் ஒவ்வாமை ஏற்படும்போது, அதனால், உடலில் நமைச்சல் எனும் அரிப்பு உண்டாகும். இதனால், எப்போதும், கைகளால் அரிப்புள்ள பகுதியை சொரிய வேண்டிய நிலை ஏற்பட்டு, அதுவே, முக்கியமான அலுவல்களில் இருக்கும் போதும் நம்மை அறியாமல் சொரிய வைத்து, மற்றவர்கள் என்ன என்று கேட்கும் அளவுக்கு, மிக்க ஒரு மன வேதனையை அளிக்கும் செயலாக மாறிவிடும்.

      இந்த பாதிப்பைப் போக்க, உலர்த்திய மூக்கிரட்டை வேரை சற்று, இடித்து, ஒரு தம்ளர் நீரில் காய்ச்சி, ஆற வைத்து, அந்த நீரில் சற்று விளக்கெண்ணை கலந்து தினமும் இரு வேளை பருகி வர, ஒவ்வாமையால் ஏற்பட்ட உடல் அரிப்பு விலகி, சருமத்தில் புதுப்பொலிவு ஏற்படும்.

      ஆன்டி ஆக்ஸிடன்டுகள் இக்கீரையில் நிறைந்து உள்ளதால் தேவையில்லாத ஆக்ஸிஜன்களை உடலிலிருந்து அகற்றி நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது. இதன் இலைகள் கண் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. மலட்டுத்தன்மை போக்க உதவுகிறது.

      ரத்த சர்க்கரை அளவினை கட்டுப்படுத்த மூக்கிரட்டை உதவுகிறது. இவ்வாறு பல்வேறு நன்மைகளைக் கொண்ட இக்கீரையை சரியாக இனம் கண்டு முன்னோர்கள் அல்லது மருத்துவரின் ஆலோசனைப்படி உணவில் சேர்த்துக் கொள்வது நலம் பலன் கிடைக்கும்.

       மூக்கிரட்டை கீரையை சமைக்கும் முறைகள்:

      மூக்கிரட்டை கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டாகவோ அல்லது பொரியல் செய்தோ சாப்பிட்டால் உடலில் உள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கீல்வாதம், இரைப்பு, இதய நோய்கள், மண்ணீரல் வீக்கம், காச நோய் போன்றவற்றையும் இது கட்டுப்படுத்தும்.

      உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு பெஸ்ட் சாய்ஸ் இந்த மூக்கிரட்டை கீரை. மூக்கிரட்டை பொடி என்றே கடைகளில் விற்கிறார்கள். இந்த பொடியை வாங்கி வந்து வெந்நீரில் கலந்து குடித்து வர உடல் எடையை நன்கு கட்டுக்குள் கொண்டு வரலாம்.

      வேர்களை காயவைத்து, பொடிசெய்து, சுடுநீரில் கலந்து குடித்து வந்தால், கண்கள் சம்பந்தமான நோய்கள் தீர்ந்துவிடும்.மூக்கிரட்டை கீரையில் ரசம் வைத்து சாப்பிடலாம். இந்த கீரையை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

      ஒரு பாத்திரத்தில், 2 டம்ளர் தண்ணீர் விட்டு, அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்ததும் சுத்தம் செய்து வைத்துள்ள கீரையை அதில் போட்டு கொதிக்க விட வேண்டும். கீரை நன்றாக வெந்ததும், தட்டிய பூண்டு பற்கள், சீரகத் தூள், மஞ்சள் தூள், மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.இந்த ரசத்தை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள சிறுநீர் கடுப்பு முதல் சிறுநீரக தொற்று வரை பறந்துவிடும்

      • குரங்கம்மை பாதிப்பின் அறிகுறியானது ஒரு வாரத்தில் தெரிய வரும்.
      • குரங்கம்மை நோயினால் 3 முதல் 10 சதவீதம் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

      1958-ம் ஆண்டில் ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்ட குரங்குகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது, குரங்கம்மை நோய். தற்போது இந்த நோய் உலகளாவிய பொது சுகாதார முக்கியத்துவம் வாய்ந்த நோயாக மாறி உள்ளது. குரங்கம்மை பாதிப்பை பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திருக்கிறது.

      உலக நாடுகளில் பலருக்கும் இதன் பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன. தமிழகத்தில் யாருக்கும் இதுவரையில் பாதிப்பு இல்லை. தீவிர காய்ச்சல், உடல் வலி மற்றும் கொப்பளங்கள் ஆகியன குரங்கம்மை நோயின் அறிகுறியாகும்.

      குரங்கம்மை பாதிப்பின் அறிகுறியானது ஒரு வாரத்தில் தெரிய வரும். தும்மும் போது வெளியாகும் எச்சில் துளிகள் மூலம் இந்த நோய் பரவுகிறது. மேலும் உடலில் சிரங்கு, காயங்களை தொடுவதின் மூலமாகவோ, பாதிக்கப்பட்ட நபரின் கறைபட்ட ஆடைகள், கிருமி தொற்றியுள்ள துணிகள், படுக்கைகள் போன்றவற்றை தொடுவதின் மூலமும் குரங்கம்மை பரவுகிறது.

      உடலுறவு மூலம் இந்த நோய் அதிகம் பரவ வாய்ப்பு உள்ளது. சில நேரம் பாதிக்கப்பட்ட விலங்குகள் மூலம் மனிதனுக்கு பரவ வாய்ப்புகள் உள்ளது. இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களை, மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்த வேண்டும். அவர்களை பராமரிப்பவர்கள், பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டும்.

      மேலும், குரங்கம்மை நோயினால் 3 முதல் 10 சதவீதம் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே குரங்கம்மை நோய் குறித்த அறிகுறிகள் இருப்பது தெரிய வந்தால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிகளை அணுகி அதற்கான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

      • இரவு 10 மணிக்குள் தூங்குவது சர்க்கார்டியன் ரிதத்துக்கும் உகந்தது.
      • பல்வேறு நோய்களில் இருந்து உடலை பாதுகாக்கும்.

      இரவு சீக்கிரமாக தூங்க செல்வது இதய ஆரோக்கியம், மன ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பல்வேறு நன்மைகளை அளிக்கும். தாமதமாக தூங்குவதோ, தூக்கமின்மை பிரச்சினையால் அவதிப்படுவதோ மனச்சோர்வு, இதய நோய் உள்பட பல்வேறு உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனை பல்வேறு ஆய்வுகளும் உறுதிபடுத்தியுள்ளன.

      சீக்கிரமாக தூங்க செல்வதன் மூலம் நீண்ட நேரம் நல்ல தூக்கத்தை அனுபவிக்க வழி வகை செய்யும். மறுநாளை சீக்கிரமாக தொடங்குவதற்கும் வழிவகை ஏற்படுத்திக்கொடுக்கும். காலை நேர உடற்பயிற்சிகளை செய்வதற்கான சூழலையும் ஏற்படுத்திக்கொடுக்கும்.

      இரவு 10 மணி முதல் 11 மணிக்குள் தூங்குவது இதயம் மற்றும் ரத்த ஓட்டம் சார்ந்த நோய் அபாயத்தை குறைக்கும். இந்த நேரத்தை கடந்தும் காலதாமதமாக தூங்கும் வழக்கத்தை பின்பற்றுவது இதய நோய் அபாயத்தை அதிகரிக்க செய்துவிடும் என்பது ஐரோப்பிய இதய இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

      இரவு 10 மணி அல்லது அதற்கு முன்பு தூங்குவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.

      ஓய்வெடுக்க அனுமதிக்கும்

      இரவு சீக்கிரம் படுக்கைக்கு செல்வது இடையூறு இன்றி உடலை ஓய்வெடுப்பதற்கு வழி வகை செய்யும். ஆழ்ந்த உறக்கத்தை அனுபவிப்பதற்கான சூழலையும் உருவாக்கிக்கொடுக்கும். இரவு 8-9 மணி வரை தூங்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்ட இலக்கை எட்டுவதற்கான வாய்ப்பையும் தினம் தினம் ஏற்படுத்திக்கொடுக்கும்.

      இதய நோயை தடுக்கும்

      உடலில் 24 மணி நேரத்துக்கு ஒருமுறை நிகழும் உயிரியக்க மாற்றமான சர்க்கார்டியன் ரிதம் எனப்படும் சுழற்சி முறை சீர்குலைந்தால் விழிப்பு-தூக்க முறையில் பாதிப்பு உண்டாகும். இது முறையாக நடப்பதற்கு தூக்கம் அவசியமானதாகும். அந்த சுழற்சி அடிப்படையில் நன்றாக தூங்குவது உயர் ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்ட அபாயத்தை குறைக்கும். தூக்கமின்மைக்கும் உயர் ரத்த அழுத்தம், இதய நோய், நீரிழிவு நோய்க்கும் தொடர்பு இருக்கிறது. அதனால் நன்றாக தூங்குவது அவசியமானது.

      ஹார்மோன்கள் சமநிலை

      இரவு 10 மணிக்குள் தூங்குவது சர்க்கார்டியன் ரிதத்துக்கும் உகந்தது. இது மூளையில் உள்ள பினியல் சுரப்பி மற்றும் சுற்றுப்புற சூழலில் இரவு, அதிகாலையில் தென்படும் ஒளியின் அளவுகளுக்கு இடையிலான தொடர்புகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. அதில் மாற்றம் நிகழ்ந்தால் ஹார்மோன்களின் செயல்பாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இரவில் சரியான நேரத்தில் தூங்குவதன் மூலம் ஹார்மோன்களை சீராக நிர்வகிக்கலாம்.

      நோய் எதிர்ப்பு சக்தி

      இரவில் சீக்கிரமாக தூங்க செல்வது உடலுக்கு போதுமான ஓய்வை கொடுப்பதோடு நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்வாய்ப்படும் அபாயத்தை தடுப்பதுடன் தொடர்புடையது. தூக்கம், நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு அத்தியாவசியமானது. போதுமான மணி நேரம் ஆழ்ந்த தூக்கத்தை பெறுவது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் செய்யும். பல்வேறு நோய்களில் இருந்து உடலையும் பாதுகாக்கும். இரவில் நன்கு தூங்குவது உடலில் சேரும் தேவையற்ற கொழுப்பை எரிக்கவும் உதவும்.

      • உடலில் மெலனின் நிறமி இழப்பு என்று சொல்லப்படுகிறது.
      • மன இறுக்கம் இல்லாமல் இருக்க வேண்டும்.

      வெண்புள்ளிகள் என்றாலே எல்லோருக்கும் பயம் தான். உடலில் சருமத்தில் எந்த இடத்தில் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் இது வரக்கூடும். இந்த பாதிப்பை 'விட்டிலிகோ' என்று மருத்துவ மொழியில் அழைப்பதுண்டு.

      உடலில் `மெலனின் நிறமி இழப்பு' அதாவது `வெண்புள்ளி' ஏற்படுவதற்கு குறிப்பிட்ட தௌிவான காரணம் இல்லை. என்றாலும் மரபணு நரம்பு மண்டல பாதிப்பு வைரஸ் கிருமிகள் தாக்கம் போன்றவைகளினாலும் வெண்புள்ளி ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது.

      உடலுக்கு எதிர்ப்பு சக்தியை கூட்டக்கூடிய உணவுப்பொருட்கள், மீன் வகைகள், கொட்டை வகைகள், இறைச்சிகள், தானியங்கள், கோதுமை கலந்த உணவுப்பொருட்கள் முதலியவைகளில் உள்ள தாமிரச்சத்து மெலனின் அளவைக் கூட்டும்.

      வைட்டமின் 'ஏ' சத்து நிறைந்துள்ள மஞ்சள், சிவப்பு, பச்சைநிற காய்கறிகள், கீரைகள், கேரட், மாம்பழம், பப்பாளி, சிவப்பு மிளகு, உருளைக் கிழங்கு போன்றவைகள் மெலனின் அளவைக் கூட்டும்.

      இதேபோல் வைட்டமின் 'ஈ' சத்து நிறைந்துள்ள விதைகள், முளை கட்டிய பயிறு வகைகள், கடல் வாழ் உயிரினங்கள், கரும்பச்சை காய்கறிகள், சூரியகாந்தி விதை, பாதாம்பருப்பு, வேர்க்கடலை, பீட்ரூட், குளத்து மீன், பட்டர் புரூட், அவகோடா பழம் போன்றவைகளும் மெலனின் அளவைக் கூட்டும்.

      இதுபோக மன இறுக்கம் இல்லாமல் இருக்க வேண்டும். உங்களுடைய சருமமும், முடியும் அதிக சூரிய ஒளியில் படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

      ரசாயனப் பொருட்கள் கலந்த எண்ணெய், ஷாம்பூ, கிரீம் லோஷன் போன்றவைகளை தலைமுடிக்கோ உடலுக்கோ உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இவையெல்லாம் செய்து வந்தால் மெலனின் அளவு உங்கள் உடலில் எப்பொழுதும் குறையாமல் இருக்கும். வெண்புள்ளியை நினைத்து பயப்பட வேண்டாம். 

      இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
      • கல்லீரலில் கொழுப்பு படிவதால் வருகிறது.
      • ஆல்கஹால் அல்லாத கொழுப்பு நோய் என்றழைக்கப்படும்.

      கல்லீரலில் கொழுப்பு படிவதால் இந்நோய் வருகிறது. இது மதுப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் வருகின்ற சாதாரண கல்லீரல் நோய் ஆகும். ஆகவே இது ஆல்கஹால் அல்லாத கொழுப்பு நோய் என்றழைக்கப்படும்.

      இது ஆண், பெண் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் வருகிறது, உடல் பருமனாக இருப்பவர்களிடம் அதிகமாக இது காணப்படுகிறது.

      கல்லீரலில் கொழுப்பு உடைய சிலருக்கு, 'ஆல்கஹால் அல்லாத ஸ்டீடோஹெபடைடிஸ்' என்ற நோய் நிலை ஏற்படுகிறது. இது கொழுப்பு கல்லீரல் நோயின் தீவிர நிலையாகும்.

      இந்நிலையில், கொழுப்பு படிவுகளால் கல்லீரல் வீங்கி சேதமடைகிறது. இதை கவனிக்காமல் விட்டால் நிலைமை மோசமடைந்து, சிரோசிஸ் எனப்படும் கடுமையான கல்லீரல் வடு மற்றும் கல்லீரல் புற்றுநோய்க்கு கூட ஒரு சிலருக்கு வழிவகுத்து விடும்.

      கல்லீரல் கொழுப்பு நோயின் பொதுவான அறிகுறிகள்:-

      உடல் சோர்வு, சுறுசுறுப்பில்லாமல் சோம்பலாக இருப்பது, சிறு வேலை செய்தாலும் படுக்க வேண்டும் என்று நினைப்பது, உடல்நலக்குறைவு, வயிற்றின் வலது மேல் பகுதியில் வலி அல்லது அசவுகரியம், சிறிதளவு உணவு சாப்பிட்டாலும் வயிற்றுப் பொருமலுடன் காணப்படுவது.

      நோய்க்கான காரணம்:

      1. மரபியல்

      2. அதிக எடை அல்லது உடல் பருமன்

      3. இன்சுலின் எதிர்ப்பு, இது உடல் செல்கள் இன்சுலின் ஹார்மோனுக்கு பதில் சர்க்கரையை எடுத்துக் கொள்ளாதபோது நிகழ்கிறது

      4. டைப் 2 வகை நீரிழிவு

      5. உடற்பயிற்சி, உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை

       கல்லீரல் கொழுப்பு நோயாளிகளுக்கான உணவு பழக்க வழக்கங்கள்:-

      கல்லீரலின் ஆரோக்கியம் நல்ல உணவில் இருந்து ஆரம்பிக்கிறது. பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், இவைகளை சாப்பிட வேண்டும். மது குடிப்பது கல்லீரலை சேதப்படுத்துவதால் அதை தவிர்க்க வேண்டும்.

      ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க வேண்டும், அதிக கொழுப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும்.

      உணவில் பூண்டு, இஞ்சி, சின்ன வெங்காயம், சீரகம், கருஞ்சீரகம், சுரைக்காய், முள்ளங்கிக்காய், பாகற்காய், வெள்ளரிக்காய், பச்சைக் காய்கறிகள், கீரைகள், முழுத்தானியங்கள், பாதாம், வால்நட், ப்ளாக் சீட்ஸ் (அலிசி விதை) ஆளி விதை, பூசணி விதை இவைகளை எடுக்க வேண்டும்.

      சித்த மருத்துவம்:

      1. கீழாநெல்லிச் சூரணம் 1 கிராம், குங்கிலிய பற்பம் 200 மி.கி. மூன்று வேளை வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.

      2. சாந்த சந்திரோய மாத்திரை 1-2 வீதம் மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

      3. கரிசாலை, மூக்கிரட்டை, பிடங்குநாறி இவைகளின் பொடியை தலா 1 கிராம் எடுத்து, தண்ணீரில் காய்ச்சி 60 மி.லி. குடிநீராக அருந்த வேண்டும்.

      • எப்போதும் உற்சாகமாக வேலையை செய்யுங்கள்.
      • உங்கள் மீது நீங்களே அன்பு செலுத்துங்கள்.

      நல்லதையே நினைப்போம்... நல்லதையே செய்வோம்... நல்லதே நடக்கும்... என பொதுவாக பெரியவர்கள் சொல்வார்கள். ஒருவரின் எண்ணத்தை பொறுத்து தான் அவரது வாழ்க்கை அமையும்.

      நீங்கள் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் சரி, வாழ்வில் உயர்ந்த இடத்துக்குச் செல்ல வேண்டுமெனில் உங்களுக்கு மிக மிக அத்தியாவசியமானது நேர்மறை எண்ணம். எந்தவொரு விஷயத்தையும் நேர்மறை எண்ணத்தோடும், புத்திசாலித்தனத்தோடும் அணுகிப்பாருங்கள். உங்களை வெற்றி தேவதை தொற்றிக்கொள்ளும்.

      1. பாசிட்டிவாக இருப்பவர்களோடு பழகுங்கள்

      நம்மைச் சுற்றி எப்போதுமே பாசிட்டிவ் வைப்ரேஷன் இருந்தால் நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விஷயத்தை செய்வோம். எனவே எதிர்மறை எண்ணத்தோடு ஒரு செயலை செய்பவர்களை எப்போதும் பக்கத்தில் வைத்துக்கொள்ளாதீர்கள்.

      2. உற்சாகமாக இருங்கள்

      சோகத்தை விட்டொழியுங்கள். எப்போதும் உற்சாகமாக வேலையை செய்யுங்கள். இந்த வேலையைச் செய்ய வேண்டுமே என செய்து முடிக்காமல், இந்த வேலையை நம்மை விட வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக செய்துவிட முடியாது என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என எண்ணி வேலை பாருங்கள்.

      3. மதிப்புமிக்கவராக உணருங்கள்

      உடல் வலிமை, பண வலிமை எல்லாவற்றையும் தாண்டி மனவலிமை மிக முக்கியம். உங்களைப்போல இந்த உலகத்தில் `பவர்புல்லான'வர் யாருமில்லை. உடனே சிரிக்காதீர்கள். இது தான் நிஜம். உங்களின் பெஸ்ட் எது என்பது உங்களுக்கே இன்னும் தெரியவில்லை. உங்கள் வலிமையை உணர்ந்து செயலாற்றினால் நிச்சயம் சாதிப்பீர்கள்.

      4. உங்களை நேசியுங்கள்

      உங்களை நீங்களே நேசியுங்கள். இந்த உலகத்தில் தன்னை நேசிக்காத மனிதனால் வெற்றியடையவே முடியாது. உங்களை உங்களுக்கு பிடிக்க, உங்களை எப்படி மாற்ற வேண்டுமோ அப்படி மாற்றுங்கள். உங்களின் முதல் காதலியோ, காதலனோ நீங்களாகவே இருங்கள்.

      உங்களை நீங்களே வெறுக்காதீர்கள். உங்கள் மீது நீங்களே அன்பு செலுத்துங்கள். நீங்கள் வெகுண்டெழுந்தால் உங்களை வெல்ல யாருமே இல்லை என்பதை உங்கள் மனதுக்கு உணர்த்துங்கள்.

      உங்களை போல அழகானவர் யாரும் இல்லை, உங்களை போல திறமையானவர் யாரும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் உங்களுக்கே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

      5. பயணப்படுங்கள்

      வாழ்க்கை ஒரு பயணம். அடுத்த நிமிடம் உங்களுக்கு என்ன நடக்கும் என உங்களுக்கே தெரியாது. இந்த நீண்ட நெடும் பயணத்தில் ஒரு சிலருக்கு வெற்றிகள் எளிதில் வரும், சிலருக்கு தாமதமாக வரும். அதற்காக சோர்ந்து விடக்கூடாது. வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து அதை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே இருங்கள்.

      வாழ்க்கை நிரந்தரம் இல்லாதது. ஆனால் பாசிட்டிவ் எண்ணத்துடன் தொடர்ந்து பயணம் செய்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ, உங்கள் பயணம் மகிழ்ச்சியாகவும், உங்களுக்கு பிடித்தமானதாகவும் இருக்கும். அடுத்த ஐந்தாண்டுக்குள் உங்களுடைய ஆசைகள் நிறைவேறி இருக்கும்.

      • குரங்கம்மை வைரஸ் ஆனது நெருங்கியத் தொடர்புகள் மூலம் பரவக்கூடும்.
      • காய்ச்சல் மற்றும் தோலில் அதிக புண்களை ஏற்படுத்தும்.

      குரங்கம்மை பாதிப்பை பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திருக்கிறது. உலக அளவில் குரங்கம்மை பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து இதை உயரிய எச்சரிக்கையுடன் இருக்கும் நோய் பாதிப்பாக அந்த அமைப்பு வகைப்படுத்தியிருக்கிறது.

      இதையடுத்து உலக சுகாதார அமைப்பு நேற்று (புதன்கிழமை) mpox பரவுவதை உலகளாவிய பொது சுகாதார அவசரநிலை என்று அறிவித்தது.

      குரங்கம்மை வைரஸ் ஆனது நெருங்கியத் தொடர்புகள் மூலம் பரவக்கூடும். இதன் அறிகுறிகள் காய்ச்சல் மற்றும் தோலில் அதிக புண்களை ஏற்படுத்தும்.

      ஆப்பிரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், குரங்கம்மை காய்ச்சல் பொது சுகாதார அவசரகால நிலையாக உருவாகி உள்ளது. 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். அதனால், இதனை தடுத்து நிறுத்த சர்வதேச உதவி வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.

      இதன்படி, நடப்பு ஆண்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என 13 நாடுகளில் குரங்கம்மை கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் காங்கோ நாட்டில் 96 சதவீதம் அளவுக்கு பாதிப்புகளும் மற்றும் மரணங்களும் ஏற்பட்டு உள்ளன.

      கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடும்போது, காங்கோவில் பாதிப்புகள் 160 சதவீதமும், மரணங்கள் 19 சதவீதமும் உயர்ந்து உள்ளன. இதுவரை 524 பேர் பலியாகி உள்ளனர். 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன என்றும் தெரிவித்து இருந்தது.

      ஆப்பிரிக்க நாடுகளில் புது வடிவிலான வைரசானது பரவி வருகிறது. காங்கோவில் இருந்து புரூண்டி, கென்யா, ருவாண்டா மற்றும் உகாண்டா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் பரவியுள்ளது. எனினும், ஆப்பிரிக்காவில் குறைந்த தடுப்பூசி டோஸ்களே இருப்பில் உள்ளன.

      இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறும்போது, நாம் அனைவரும் கவலைப்பட வேண்டிய விசயம். இந்த வைரசானது ஆப்பிரிக்காவை கடந்து பரவ கூடிய ஆற்றல் படைத்துள்ளது என்பது அதிக வருத்தத்திற்குரியது என்று கூறியுள்ளார்.

      இந்த சூழலில் உலக சுகாதார அமைப்பு, குரங்கம்மையை சர்வதேச சுகாதார அவசரகால நிலையாக அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

      இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
      • சாப்பிடும்போது மெதுவாக சாப்பிட வேண்டும்.
      • ஆலிவ் எண்ணெய், நட்ஸ், விதைகள் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் செரிமானத்தை மேம்படுத்தும்.

      ஏப்பம் என்பது நமது உடலில் உள்ள வாயுக்கள் வாய் வழியாக வெளியேறும் நிகழ்வாகும். இது சாதாரணமானது என்றாலும், அடிக்கடி ஏப்பம் உண்டாவது பிரச்சனையாக மாறிவிடும்

      சாப்பிடும்போது மெதுவாக சாப்பிட வேண்டும். வேகமாக சாப்பிடும்போது அதிக காற்று உள்ளே சென்று விடுகிறது. இது ஏப்பத்தை உண்டாக்கும்.

      அடிக்கடி கொழுப்பு நிறந்த உணவுகளான எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்களை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதும் ஏப்பத்தை ஏற்படுத்துகிறது.

      சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பதால், உடலில் உணவுக்கான இடத்தை காற்று நிரப்பிவிடுகிறது. இதனாலும் ஏப்பம் அடிக்கடி வரும்.

      உணவை நன்றாக மென்று சாப்பிடுவதால் செரிமானம் எளிதாகும். இதனால் ஏப்பம் வருவது குறையும்.

      ஆலிவ் எண்ணெய், நட்ஸ், விதைகள் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் செரிமானத்தை மேம்படுத்தும்.

      அதிகப்படியான ஏப்பம் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருந்தால், வயிற்றில் புண் இருக்கிறது என்று அர்த்தம். இதனால் கடுமையான வயிற்று வலியும் உண்டாகும்.

      நீண்ட நாட்களாக மன அழுத்தம், தூக்கமின்மை, சோகமாகவே இருப்பது, மன இறுக்கம் போன்ற பிரச்சனைகளும் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும். செரிமான பிரச்சனைகளால் ஏப்பம் அடிக்கடி வரும். எனவே மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

      அடிக்கடி ஏப்பம் வருவதுடன், வயிற்று வலி, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் போன்ற மற்ற அறிகுறிகளும், ஏப்பம் வருவது அன்றாட வாழ்க்கை முறையில் பாதிப்பை ஏற்படுத்தினால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

      • பருவமழை காலங்களில் காய்ச்சல், சளி வழக்கமானது தான்.
      • மூளைக்காயச்சலை ஆரம்ப நிலையில் கண்டு பிடித்தால் குணமாக்கி விடலாம்.

      சென்னை:

      சென்னையில் பருவமழை அவ்வப்போது பெய்வதால் காய்ச்சல் அறிகுறியுடன் ஏராளமான குழந்தைகள் ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்து செல்லப்படு கிறார்கள்.

      அவ்வாறு அழைத்து செல்லபபடும் குழந்தைகளில் பல குழந்தைகள் வாந்தி, கழுத்து வலி, மாறுபட்ட மன நிலைகளுடன் காணப்பட்டன.

      இந்த அறிகுறியுடன் காணப்பட்ட குழந்தைகள் சாப்பிட மறுக்கிறார்கள். தொடர்ந்து அழுகிறார்கள். இந்த மாதிரி குழந்தைகள் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.

      இதுபற்றி சூரியா மருத்துவமனையின் குழந்தைகள் நல மூத்த மருத்துவர் டாக்டர் தீபாஸ்ஹரிகரன் கூறியதாவது:-

      பருவமழை காலங்களில் காய்ச்சல், சளி வழக்கமானது தான். ஆனால் காய்ச்சல் வந்ததும் மருந்து கொடுத்தும் 48 மணி நேரத்துக்கும் மேலாக காய்ச்சல் நீடித்தாலோ, குழந்தைகள் சோர்ந்து போனாலோ உடனே மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும்.

      காய்ச்சல் வந்தாலும் அது 103 டிகிரி அளவுக்கு நெருப்பாக கொதிப்பது, சமாதானப்படுத்த முடியாமல் அழுது கொண்டிருப்பது, கொஞ்சம் கூட பால் குடிக்க முடியாமல் சோர்ந்து இருப்பது, 6 முறைக்கு மேல் வாந்தி, பேதி ஏற்படுவது, இருமும்போது முச்சு வாங்குவது போன்ற அறிகுறிகள் இருந்தாலும உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

      மூளைக்காயச்சலை ஆரம்ப நிலையில் கண்டு பிடித்தால் குணமாக்கி விடலாம். பள்ளிகள் திறந்ததும் யாராவது ஓரு குழந்தைக்கு காய்ச்சல் காணப்பட்டாலும் மற்றவர்களுக்கு எளிதாக பரவிவிடும்.

      குழந்தைகளுக்கு அனைத்து தடுப்பூசிகளையும் பொதுவாக குழந்தைகள் 4 வயதாகும் போது 4-வது பூஸ்டர் ஊசியை பலர் போடாமல் இருந்து விடுகிறார்கள். அது தவறு.

      அதிமாக சளி பிடிக்கும் குழந்தைகளுக்கு ஆண்டு தோறும் பன்றி காய்ச்சல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

      முக்கியமாக காய்ச்சல், சளி இருக்கும் குழந்தைகள் கை, குட்டையை வைத்து இருமுவதற்கு பழக்கி கொடுக்க வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவவும் சொல்லித்தர வேண்டும் என்றார்.

      ×