என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • ஸ்டெம் செல் சிகிச்சை அனைத்து நோய்களுக்கும் தீர்வாக அமைகிறது.
    • குழந்தை பேறுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை அளிப்பது எப்படி?

    இன்றைய காலகட்டத்தில் ஸ்டெம் செல் சிகிச்சை என்பது அனைத்து விதமான நோய்களுக்கும் தீர்வாக அமைந்து வருகிறது. குழந்தையின்மை சிகிச்சையில் ஸ்டெம் செல் சிகிச்சை பெரும் பங்காற்றி வருகிறது.

    சினை முட்டைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதிலும், கர்ப்பப்பையில் உள்ள பிரச்சினைகளை தீர்த்து அதை வலுவாக்கி குழந்தை பேறு ஏற்படுத்தி கொடுப்பதிலும் ஸ்டெம் செல் சிகிச்சை முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்கான ஸ்டெம் செல் சிகிச்சை எப்படி அளிக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.


    குழந்தை பேறுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை அளிப்பது எப்படி?

    ஒரு பெண்ணின் வயிற்றில் உள்ள கொழுப்பு அல்லது எலும்பு மஜ்ஜையில் இருந்து ஸ்டெம் செல்லை பிரித்து எடுத்து, ஒரு சிறப்பு ஊசி மூலமாக சினைப்பையில் துளை போட்டு, சினைப்பைக்குள் இந்த ஸ்டெம் செல்லை செலுத்துகிறார்கள்.


    இந்த ஸ்டெம் செல்லானது சினைப்பைக்குள் சென்றதும் முட்டைகளின் வளர்ச்சியை தூண்டுகிறது. இதன் மூலம் பெண்களுக்கு முட்டைகளின் வளர்ச்சியும், எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

    மேலும் சினைப்பையில் இருக்கும் பழுதான முட்டைகளையும் ஸ்டெம் செல்லானது திறம்பட செயல்பட வைத்து நல்ல தரமான முட்டைகளாக மாற்றுகிறது. ஐ.வி.எப். சிகிச்சை தோல்வியில் முடிந்த நோயாளிகளுக்கு கூட ஸ்டெம்செல் சிகிச்சை அளித்தவுடன் கருமுட்டைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதன் கருவாக்கும் திறனும் அதிகரிக்கும்.

    இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. வழக்கமாக ஐ.வி.எப். சிகிச்சை மூலம் கருமுட்டை தானம் பெற்று பெண்கள் குழந்தை பேறு பெறும் போது, கரு முட்டையானது தானமாக கிடைத்தது தான், தன்னுடைய முட்டை இல்லை என்ற மனக்குறையும், ஏக்கமும் பெண்களுக்கு இருக்கும்.


    ஸ்டெம் செல் சிகிச்சையானது பெண்களின் அந்த ஏக்கத்தை போக்கி, அவர்களது சினைப்பையில் முட்டையை உருவாக்கி, அவர்களுடைய முட்டையிலேயே குழந்தை பேறு ஏற்படுத்தி கொடுக்கிறது. எனவே பெண்கள் தங்களது மரபணுவில் குழந்தை பேறு பெறுவதற்கு ஸ்டெம் செல் சிகிச்சை என்பது மிக முக்கியமான வழிமுறையாகும்.

    முகத்தில் சுருக்கம், முடி கொட்டுதலுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை:


    வயதாகும் போது நிறைய பெண்களுக்கு தலைமுடி கொட்டும் பிரச்சினை இருக்கும். அவர்களுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் தீர்வு காண முடியும். பெண்களுக்கு முடி கொட்டுவதற்கு கூந்தல் மாற்று சிகிச்சைக்கு பதிலாக ஸ்டெம் செல் மிகச் சிறந்த பலனை அளிக்கிறது.

    ஸ்டெம் செல் சிகிச்சை அளிக்கும் பெண்களுக்கு முடி வளர்ச்சி மிகவும் அழகாக இருக்கும். இந்த சிகிச்சையின் மூலம் பெண்களுக்கு இயற்கையாகவே முடி வளர்ச்சி நன்றாக இருக்கிறது.

    வயதாகும் போது ஒவ்வொருவருக்கும் முகத்தில் சுருக்கம் ஏற்படும். ஆண், பெண் இருவருக்குமே வயதாகும்போது முகத்தில் சுருக்கம் என்பது இயற்கையாகவே ஏற்படுகிறது. இந்த முகச்சுருக்கத்தை சரி செய்வதற்கு ஸ்டெம் செல் சிகிச்சை நல்லதொரு பலனை அளிக்கிறது.

    வெளிநாடுகளை சேர்ந்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் பிரபலங்கள் பலர் தங்களின் வயதான தோற்றத்தை சீரமைத்து இளமையான தோற்றத்தை பெற ஸ்டெம் செல் சிகிச்சை பெறுகின்றனர். இதன் மூலம் அவர்கள் இளமையான தோற்றத்துடன் உடல் பொலிவையும் பெற்றுள்ளனர். எனவே உடல் தோற்றத்தை இளமையாக மாற்றுவதற்கு ஸ்டெம் செல் என்பது மிகவும் முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது.

    • தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி இந்தியாவில் தற்கொலை செய்துகொள்பவர்களில் 40 சதவீதம் 30 வயதுக்குக் கீழ் உள்ளவர்களே ஆவர்
    • உலக சராசரியை விட இந்திய இளைஞர்களின் தற்கொலை விகிதம் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.

    இளைய தலைமுறையிடம் தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டிய சூழல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது உருவாகியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் இளம் வயதினர் தற்கொலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என்ற கவலையளிக்கும் புள்ளிவிவரங்கள் வெளியாகி வருகின்றன. உலகளவில் மக்கள் தொகையில் அதிக இளைஞர்களை கொண்ட நாடாக இந்தியா உள்ள நிலையில் இந்த புள்ளிவிவரங்கள் கவனிக்கதக்கதாக உள்ளது.

    இன்று [செப்டம்பர் 10] உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்படும் நிலையில் இந்த வருடத்திற்கான குறிக்கோளான தற்கொலை குறித்த கருத்தியலை மாற்றுவது ["Changing the narrative on suicide"] குறித்த விவாதம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்தியாவில் 15 முதல் 19 வயதில் உள்ள இளைஞர்கள் உயிரிழப்புக்கு நான்காவது முக்கிய காரணமாகத் தற்கொலை உள்ளது.

    தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் (NCRB)  தரவுகளின்படி இந்தியாவில் தற்கொலை செய்துகொள்பவர்களில் 40 சதவீதம் 30 வயதுக்குக் கீழ் உள்ளவர்களே ஆவர். உலக சராசரியை விட இந்திய இளைஞர்களின் தற்கொலை விகிதம் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 160 இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். என்று எய்ம்ஸ் மனோதத்துவ பேராசிரியர் நந்த குமார் தெரிவிக்கிறார். NCRB அறிக்கைப்படி இந்தியாவில் கடந்த 2022 ஆம் ஆண்டில் 1.71 லட்சம் பேர் தற்கொலையால் உயிரிழந்துள்ளனர்.

    அழுத்தமான குடும்பச் சூழல், நிலையில்லாத மன ஆரோக்கியம், தீய பழக்கம், காதல் முறிவு, நண்பர்கள் இன்மை, தனிமை உள்ளிட்டவை இந்த தற்கொலைகளுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. 15 முதல் 39 வயதிலான நபர்களின் உயிரிழப்புக்குத் தற்கொலை முக்கிய காரணமாக மாறியுள்ள நிலையில் இது உலகளவில் நாம் எதிர்கொண்டுள்ள பொது சுகாதார பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. ஒட்டுமொத்தமாக மனதளவில் பலவீனமாக ஒரு தலைமுறையாக தற்போதைய தலைமுறை மாறி வரும் நிலையில் உரிய கவனிப்பும், மன ரீதியான சிக்கல்களுக்குத் தீர்வும் முக்கிய தேவையாக மாறியுள்ளது. 

    தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட உதவிக்கு 044 2464 0050 என்ற எண்ணை அழைக்கவும்.

    • ஆஸ்துமா இரண்டு வழிகளில் முக்கியமாக ஏற்படுகிறது.
    • இருமல், நெஞ்சு இறுக்கம், மூச்சுத் திணறல், விசில் சத்தம், தூக்கமின்மை போன்றவை இந்த நோய்க்கான அறிகுறிகள் ஆகும்.

    ஆஸ்துமா என்பது, பாதிக்கப்பட்டவரின் சுவாசப்பாதைகள் சுருங்கி, வீங்கி, கூடுதல் சளியை உருவாக்கும் ஒரு நிலை. இது சுவாசத்தை கடினமாக்குவதுடன் இருமலையும் ஏற்படுத்துகிறது, மூச்சு விடும்போது ஒரு வித விசில் சத்தம், மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.

    காரணங்கள்

    ஆஸ்துமாவுக்கான முக்கிய காரணம் ஒவ்வாமை (அலர்ஜி) ஆகும். ஆஸ்துமா இரண்டு வழிகளில் முக்கியமாக ஏற்படுகிறது. ஒன்று உட்புற ஆஸ்துமா. ஒருவருக்கு மரபணு மூலமாகவோ, பரம்பரை வழியாகவோ ஆஸ்துமா பாதிப்பு ஏற்படுவது உட்புற ஆஸ்துமா (இன்ட்ரின்சிக்) எனப்படுகிறது. இவ்வகையில் ஏற்படும் ஆஸ்துமா, சிறுவயதிலேயே அறிகுறிகளை வெளிப்படுகிறது. இது குழந்தைகளுக்கு பொதுவாக ஏற்படுகிறது.

    இரண்டாவது புறக்காரணிகளால் (எக்ஸ்டிரின்சிக்) ஏற்படும் ஆஸ்துமா. இது காற்றில் உள்ள தூசிகள், புகை, குளிர்ந்த காற்று, வாசனை திரவியம், குறிப்பிட்ட சில உணவுகள், சிட்ரஸ் பழங்கள், அதிக உணர்ச்சி வசப்படுதல், அதிகமாக உடற்பயிற்சி செய்வது, நுரையீரல் நோய்த் தொற்றுக்கள் போன்ற காரணங்களால் ஆஸ்துமா வருகிறது.

    அறிகுறிகள்

    இருமல், நெஞ்சு இறுக்கம், மூச்சுத் திணறல், விசில் சத்தம், தூக்கமின்மை போன்றவை இந்த நோய்க்கான அறிகுறிகள் ஆகும்.

    சித்த மருத்துவ சிகிச்சைகள்

    1) தாளிசாதி சூரணம் 1 கிராம், சிவனார் அமிர்தம் 200 மி.கி, பலகரை பற்பம் 200 மி.கி. இவற்றை தேன் அல்லது வெந்நீரில் சாப்பிட வேண்டும்.

    2) சுவாச குடோரி மாத்திரை 1-2 வீதம் சாப்பிட வேண்டும்.

    3) கண்டங்கத்திரி அல்லது தூதுவளை லேகியம் 1-2 கிராம், காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும்.

    4) ஆடாதோடை மணப்பாகு 5-10 மி.லி. காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும்.

    சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இந்த மருந்துகளை சாப்பிட்டு பலன் பெறலாம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டார்க் சாக்லெட், ஒயிட் சாக்லெட் மற்றும் மில்க் சாக்லெட் என்று மூன்று வகையான சாக்லெட்டுகள் உள்ளன.
    • மன அழுத்தத்தை குறைத்து மூளை செயல்திறனை அதிகரிக்கிறது.

    சர்க்கரை நோயாளிகள் சாக்லெட் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சரியான சாக்லெட்டை தேர்வு செய்து சாப்பிட்டால் அது சர்க்கரை அளவை அதிகரிக்காது.

    டார்க் சாக்லெட், ஒயிட் சாக்லெட் மற்றும் மில்க் சாக்லெட் என்று மூன்று வகையான சாக்லெட்டுகள் உள்ளன. இவற்றில் டார்க் சாக்லெட்டில் 70-85 சதவிகிதம் கோக்கோ சாலிட்ஸ், அதிக அளவு நார்ச்சத்து மற்றும் மிகக்குறைந்த அளவு சர்க்கரை உள்ளது. மில்க் சாக்லெட்டில் 35-55 சதவிகிதம் கொக்கோ சாலிட்ஸ், கொக்கோ வெண்ணெய், பால், சர்க்கரை ஆகியவை உள்ளன.

    ஒயிட் சாக்லெட்டில் கொக்கோ சாலிட்ஸ் கிடையாது. இதில் கொக்கோ வெண்ணெய், பால் மற்றும் சர்க்கரை மட்டுமே உள்ளது. இம்மூன்றில் சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது கொக்கோ மற்றும் நார்ச்சத்து அதிகமுள்ள டார்க் சாக்லெட் ஆகும். இதை சாப்பிடுவதால் இதய ஆரோக்கியம் மேம்படுவதாக ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதில் உள்ள பாலிபெனால்ஸ், பிளாவனால்ஸ், தியோபுரோமின் போன்ற ஆன்டிஆக்சிடென்ட்ஸ், நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தியை அதிகரித்து ரத்த நாளங்களை தளர்த்தி, ரத்த அழுத்தத்தை குறைத்து இதயம் திறம்பட செயல்பட துணைபுரிகின்றன.

    மேலும் டார்க் சாக்லெட்டில் உள்ள கொக்கோவில் பாஸ்பரஸ், பொட்டாசியம், தாமிரம், இரும்புச்சத்து, துத்தநாகம், மெக்னீசியம் போன்ற தாதுக்களும் உள்ளன. டார்க் சாக்லெட் சாப்பிடுவதால்- ரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைந்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது, பிரீ ரேடிக்கல்ஸ்களால் ஏற்படும் செல் சேதத்தை தடுக்க உதவுகிறது, இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது, செல்களில் ஏற்படும் சேதத்தை தடுத்து முதுமை தோற்றதை தாமதப்படுத்துகிறது, மன அழுத்தத்தை குறைத்து மூளை செயல்திறனை அதிகரிக்கிறது.

    சர்க்கரை நோயாளிகள் பயமின்றி டார்க் சாக்லெட் அல்லது பாதாம் சாக்லெட் ஆகியவற்றை ஒரு நாளைக்கு 20 கிராம் வரை சாப்பிடலாம். கேரமல் கலந்த சாக்லெட், ஒயிட் சாக்லெட் மற்றும் பால் சாக்லெட்டுகளை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது.

    • இளம் வயதினரும் நியாபக மறதி பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள்.
    • தியானத்துக்கும், ஞாபக மறதிக்கும் தொடர்பு உண்டு.

    ஞாபக மறதியால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. முதியவர்கள் மட்டுமின்றி இளம் வயதினரும் இந்த பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். சில எளிய நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் ஞாபக மறதியை கட்டுப்படுத்தலாம்.


    * தியானத்துக்கும், ஞாபக மறதிக்கும் தொடர்பு உண்டு. தினமும் 10 நிமிடங்கள் தியானம் செய்து வருவது மனநலத்துக்கு மட்டுமல்ல ஞாபக மறதி பிரச்சனையின் வீரியத்தை குறைக்கவும் உதவும். குறிப்பாக நினைவுத்திறனையும், மனநிலையையும் மேம்படுத்தும்.


    * மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும் பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் அதன் செயல்திறனை அதிகரிக்க செய்யலாம். பொதுவாக எந்த வேலை செய்வதாக இருந்தாலும் வலது கையைத்தான் அதிகமாக பயன்படுத்துவோம். அதற்கு மாற்றாக இடது கையை உபயோகிக்கலாம். அதன் மூலம் மூளையின் செயல்திறன் மேம்படும். ஞாபக மறதியின் வீரியம் குறையும்.


    * ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்வதும் மூளை சிறப்பாக செயல்பட உதவும். அதனால் மூளைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் பயிற்சிகளை செய்து வரலாம். யோகாசனங்களும் பலன் கொடுக்கும். அவை ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், நினைவுத்திறனை மேம்படுத்தவும் உதவிடும்.

    * உணவுக்கட்டுப்பாடும் அவசியமானது. சரியான உணவுப்பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். அதுவும் நினைவாற்றல் திறனை அதிகரிக்க உதவும் புரோக்கோலி, அக்ரூட் பருப்புகள், பூசணி விதைகள், மீன் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    • இரவில் தூங்க செல்வதற்கு முன்பு பால் பருகுவதும் நல்லது.
    • மன அழுத்தத்தில் இருக்கும்போது பெர்ரி வகை பழங்களை உட்கொள்ளலாம்.

    இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தம் தவிர்க்க முடியாத தொற்று வியாதியாக பலரையும் ஆட்கொண்டிருக்கிறது. அந்த சமயத்தில் உட்கொள்ளும் உணவு தேர்வில் கவனம் செலுத்த வேண்டும்.


    இல்லாவிட்டால் மன அழுத்தத்தை கூடுதலாக தூண்டி பாதிப்பை அதிகரிக்கச் செய்துவிடும். மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்க சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.


    மன அழுத்தத்தில் இருக்கும்போது பெர்ரி வகை பழங்களை உட்கொள்ளலாம். ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்த அவை, செல்கள் சேதம் அடைவதை தடுக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும்.

    மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் துத்தநாகத்துக்கு முக்கிய பங்கு இருக்கிறது. உடலில் துத்தநாகம் குறைவாக இருந்தால் மன அழுத்த பாதிப்பு அதிகமாகிவிடும்.

    முந்திரி பருப்பில் 14 முதல் 20 சதவீதம் வரை துத்தநாகம் இருக்கிறது. அதனை உட்கொள்வது துத்தநாக குறைபாட்டை ஈடு செய்து மன அழுத்தத்தையும், கவலையையும் குறைக்க உதவும்.


    மெக்னீசியமும் மனநிலையை மேம்படுத்துவதற்கு வழிவகை செய்யும். சியா விதைகள், பூசணி விதைகள் மற்றும் முட்டையில் மெக்னீசியம் உள்ளது. இவை மனநிலை முன்னேற்றத்துக்கும் வித்திடும்.


    அவகேடோவிலும் மன அழுத்தத்தை எதிர்த்து போராடும் சேர்மங்கள் இருக்கின்றன. குறிப்பாக ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து, வைட்டமின்கள் சி, பி6 ஆகியவை உள்ளடக்கி இருக்கின்றன. அவை மனஅழுத்தத்தையும், ரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவிடும்.

    கீரைகளையும் உட்கொள்ளலாம். அதில் இருக்கும் போலேட்டுகள் பதற்றத்தை தணிக்க உதவும். சால்மன், மத்தி போன்ற மீன் வகைகளையும் உட்கொள்ளலாம். அதில் இருக்கும் வைட்டமின் டி, பதற்றம் மற்றும் மனநல கோளாறுகளை தணிக்கும்.

    இரவில் தூங்க செல்வதற்கு முன்பு பால் பருகுவதும் நல்லது. பாலில் இருக்கும் டிரிப்டோபன், மெலடோனின் மற்றும் பி-வைட்டமின்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் மன அழுத்தத்தைக் குறைத்து தூக்கத்தை தூண்டிவிடும்.

    • தக்காளியில் லைக்கோபீன்கள் காணப்படுகின்றன.
    • புற்றுநோய் செல்களின் அசாதாரண வளர்ச்சியை கட்டுப்படுத்தும் தன்மை பிரக்கோலிக்கு உண்டு.

    அடர் நிறங்களை கொண்ட காய்கறிகள், பழங்கள் (மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு, பச்சை, நீலம், ஊதா) மற்றும் முழுத்தானியங்களை உட்கொள்வது புற்றுநோய், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவும். அவற்றில் பைட்டோ கெமிக்கல் என்னும் சேர்மம் உள்ளது. அவை ஊட்டச்சத்துக்களின் பங்களிப்பை அதிகரிக்க செய்து நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்தி ஆரோக்கிய வாழ்க்கைக்கு வித்திடும்.

    * வெங்காயத்தில் அல்லிசின் உள்ளது. அவை பாக்டீரியா மற்றும் வைரஸ்களால் உடலில் உருவாகும் சில நச்சுக்களை தடுக்க உதவும்.

    * ராஸ்பெர்ரி, புளூபெர்ரி போன்ற சிவப்பு, நீல நிற பழங்களில் அந்தோசயனிகள் காணப்படுகின்றன. அவை விரைவில் வயதான தோற்றம் எட்டிப்பார்ப்பதை தடுக்கவும், இதய நோய் வராமல் தடுக்கவும் உதவுகின்றன.

    * தக்காளி, ஆரஞ்சு, இளஞ்சிவப்பு திராட்சைப்பழம் மற்றும் கீரை போன்ற அடர் நிற பழங்கள் மற்றும் காய்கறிகளில் கரோட்டினாய்டுகள் காணப்படுகின்றன. தேயிலை, ஆப்பிள், முட்டைக்கோஸ், பீன்ஸ் ஆகியவற்றில் பிளேவனாய்டுகள் காணப்படுகின்றன. அவை ஆரோக்கியத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன.

    * தக்காளியில் லைக்கோபீன்கள் காணப்படுகின்றன. அவை சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடெண்டாக செயல்படுகின்றன. உடலில் அதிக அளவு லைக்கோபின் உள்ளடங்கியிருக்கும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அபாயம் 22 சதவீதம் குறைவாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    * கிரீன் டீ உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டது. மார்பக புற்றுநோய் அபாயத்தை தடுக்கவும் உதவும். கிரீன் டீயை தொடர்ந்து பருகி வந்தால் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். உடல் எடை குறைப்புக்கும் துணைபுரியும்.

    * புற்றுநோய் செல்களின் அசாதாரண வளர்ச்சியை கட்டுப்படுத்தும் தன்மை பிரக்கோலிக்கு உண்டு. மார்பகம், சிறுநீர்ப்பை, நுரையீரல் போன்ற உறுப்புகளில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

    * பெண்கள் காளான்களை சமையலில் தொடர்ந்து சேர்ப்பதும் மார்பக புற்றுநோய் வராமல் தற்காத்துக்கொள்ள உதவிடும். மாதவிடாய் சுழற்சி முடிவடையும் நிலையில் இருக்கும் பெண்கள் காளான்களை தவறாமல் சாப்பிடுவது நல்லது.

    கேரட்டில் அதிக அளவு கரோட்டினாய்டு நிறைந்திருக்கிறது. அப்படி உடலில் கரோட்டினாய்டுகளின் அளவு அதிகம் இருந்தால் மார்பக புற்றுநோய்க்கான அபாயம் 28 சதவீதம் குறையும். அதனால் கேரட்டை தினமும் தவறாமல் சாப்பிடுவது நல்லது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அன்னாசி பழத்தில் புரோமெலைன் என்ற நொதி உள்ளது.
    • மாம்பழத்தில் இயற்கையான சர்க்கரையும், நார்ச்சத்தும் அதிகம்.

    பழங்களில் இயற்கையான இனிப்பும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருப்பதால் அவை ஆரோக்கியத்திற்கு அவசியமானவையாக விளங்குகின்றன. இருப்பினும் எல்லா பழங்களையும் விரும்பிய நேரத்தில் சாப்பிடக்கூடாது. சில பழங்கள் இரவில் தூங்குவதற்கு முன்பு சாப்பிடுவதற்கு ஏற்றவை அல்ல. அந்த பழங்கள் பற்றியும், அவற்றை சாப்பிடக்கூடாததற்கான காரணங்களை பற்றியும் பார்க்கலாம்.

    சிட்ரஸ் பழங்கள்:

    ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் அமிலத்தன்மை கொண்டவை. தூங்குவதற்கு முன்பு அவற்றை உட்கொண்டால் சிலருக்கு அசிடிட்டி அல்லது நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.

    ஏனெனில் சிட்ரஸ் பழங்களில் உள்ள அதிக அமிலத்தன்மை வயிற்றின் குடல் பகுதியை எரிச்சலடைய செய்து செரிமான பிரச்சனைகள் மற்றும் அசவுகரியத்தை ஏற்படுத்தும். குறிப்பாக அசிடிட்டி, இரைப்பை உணவுக்குழாய் ரிப்ளக்ஸ் நோய் கொண்ட நபர்களுக்கு பாதிப்பை அதிகரிக்கச் செய்துவிடும்.

    அன்னாசி:

    அன்னாசி பழத்தில் புரோமெலைன் என்ற நொதி உள்ளது. இந்த நொதி செரிமானத்திற்கு உதவும். அதே வேளையில் அன்னாசி பழத்தை அதிகமாகவோ, வெறும் வயிற்றிலோ உட்கொள்ளும்போது இரைப்பையில் கோளாறுகளை ஏற்படுத்தும்.

    அதிலும் தூங்குவதற்கு முன்பு அன்னாசி பழம் சாப்பிடும்போது புரோமெலைன் நொதி இரைப்பை அமிலத்தின் உற்பத்தியை தூண்டி அஜீரணம், வீக்கம், வாயு தொல்லை உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகம்.

    மாம்பழம்:

    மாம்பழத்தில் இயற்கையான சர்க்கரையும், நார்ச்சத்தும் அதிகம். உறங்குவதற்கு முன்பு மாம்பழம் சாப்பிடும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு விரைவாக அதிகரிக்கக்கூடும். தூக்க முறையும் சீர்குலையும்.

    மாம்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருக்கும் நிலையில், வயிறு சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் அதனை இரவில் அதிகம் சாப்பிடுவது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

     

    தர்பூசணி:

    நீர்ச்சத்து நிறைந்த இந்த பழம் உடலுக்கு புத்துணர்ச்சியும் ஊட்டக்கூடியது. ஆனால் அதிக நீர் உள்ளடக்கம் காரணமாக டையூரிடிக் ஆக செயல்பட்டு சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்க செய்துவிடும்.

    இரவில் அடிக்கடி எழுந்து சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும் என்பதால் தூக்கம் தடைபடும். குறிப்பாக இரவில் அதிக அளவு தர்பூசணி சாப்பிட்டால் அதிகப்படியான நீர் மற்றும் சர்க்கரையை ஜீரணிக்க உடல் போராட வேண்டியிருக்கும்.

    வாழைப்பழம்:

    வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள், இயற்கை சர்க்கரைகள், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளன. இவை ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தும், உடலுக்கு விரைவான ஆற்றலை அளிக்கும்.

    தூங்குவதற்கு முன்பு வாழைப்பழம் சாப்பிடுவது நன்மை தரும் என்றாலும் அதிகமாக உட்கொள்வது அசவுகரியத்தை உண்டாக்கும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெண்களுக்கு கருத்தரித்தல் பிரச்சினை.
    • 3 ஆயிரம் ரசாயனங்களை நம்மை அறியாமலேயே நாம் பயன்படுத்துகிறோம்.

    உலக பாலியல் நல தினம், ஸ்டெம்செல் விழிப்புணர்வு தினத்தை யொட்டி பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வு அறிக்கையின் படி திருமணத்துக்கு பிறகு தாம்பத்திய உறவில் திருப்தி இல்லாதவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

    தற்போது ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு பிரச்சனைகளும், பெண்களுக்கு கருத்தரித்தல் பிரச்சினைகளும் அதிகரித்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

    வேலைப்பளுவால் ஏற்படும் மன அழுத்தம், சுற்றுச்சூழல் மாசு அதிகரிப்பு, ரசாயன பொருட்களின் பயன்பாடு அதிகரிப்பு ஆகியவையே இதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது.

    இப்போது பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்கி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உணவு பொருட்கள் நீண்ட காலம் கெட்டுப்போகாமல் இருக்க அதில் அதிக அளவில் ரசாயனம் சேர்க்கப்படுகிறது.


    நாம் அன்றாடம் பயன்படுத்தும் அழகுப்பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களிலுமே ரசாயனம் உள்ளது. வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையால் காற்று மாசுபடுகிறது. இந்த காற்றை சுவாசிப்பதாலும் நமது உடலுக்குள் ரசாயனம் செல்கிறது.

    இப்படி தினமும் 3 ஆயிரம் ரசாயனங்களை நம்மை அறியாமலேயே நாம் பயன்படுத்துகிறோம். இந்த ரசாயனங்கள் பெண்கள் கருத்தரிப்பதற்கு இடையூறாக இருப்பதற்கும், ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படுவதற்கும் ஒரு காரணமாக அமைகிறது.

    இதன் மூலம் ரசாயன பயன்பாடு தாம்பத்திய உறவை சீர்குலைப்பதற்கு ஒரு காரணமாக இருப்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. மேலும் சர்க்கரை நோயும் பலருக்கு ஆண்மைக்குறைவு ஏற்பட காரணமாக அமைகிறது.

    • பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
    • கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நிலவி வரும் பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ்-எஜிப்டை வகை கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி நோய்களைப் பரப்பி வருகின்றன.

    தமிழகத்தில் நிகழாண்டில் 11,743 போ் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளானதாகவும், அதில் 4 போ் உயிரிழந்ததாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

    இதையடுத்து, மாநிலம் முழுவதும் நோய்த் தடுப்பு மற்றும் கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது:-

    மாநிலம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொசு ஒழிப்புப் பணிகளில் 25,000 போ் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

    அவா்களுடன் ஊராட்சிக்கு ஒரு சுகாதார அலுவலரும், நகா்ப்புறங்களில் வாா்டுக்கு ஒரு சுகாதார அலுவலரும், மாநகராட்சிகளில் தெருக்களின் அடிப்படையில் சுகாதார அலுவலா்களும் நியமிக்கப்பட்டு வீடுகள்தோறும் மருத்துவ கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    காய்ச்சல் பாதிப்பு, மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சந்தேகங்களுக்கு 104 என்ற எண்ணுக்கு அழைக்க

    லாம். எத்தகைய சூழலையும் எதிா்கொண்டு சிகிச்சையளிக்கும் வகையில் மருத்துவமனைகளில் டெங்கு வாா்டுகளையும், படுக்கைகளையும் அமைத்து போதிய மருத்துவ வசதிகளைத் தயாா் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    ரத்த வங்கிகளையும் தயாா் நிலையில் வைத்திருக்கவும், அவசரகால சூழல்களை சமாளிக்கும் வகையில் விரைவு உதவிக் குழுக்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாள்பட்ட காபி பழக்கத்தை டாக்டர்கள் எச்சரித்துள்ளார்கள்.
    • இதய துடிப்பில் பிரச்சனையை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

    ஒரு காபி குடிச்சாத் தான் வேலை செய்ய மூடு வரும் என்று, செய்து கொண்டிருக்கும் வேலையை அப்படியே அரை குறையாக போட்டுவிட்டு எழுந்து சென்று காபி குடித்து விட்டு வருபவர்களை பார்க்கலாம்.

    வேலைக்கு புறப்பட்டு செல்லும்போதும், சரி திரும்பி வரும்போது சரி டீ கடை ஓரத்தில் வண்டியை நிறுத்தி ஒரு டீயோ அல்லது காபியோ குடித்துவிட்டுத் தான் உற்சாகமாக புறப்படுவார்கள்.

    காலையில் எழுந்தது முதல் இரவு தூங்க செல்வதற்குள் எப்படியும் ஐந்தாறு காபி குடித்து விடுவேன் என்று சொல்லும் பலரை தினமும் பார்த்து இருப்போம்.

    ஆனால் அந்த காபிக்குள் உற்சாகம் மட்டுமல்ல. உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் விவகாரமும் ஒளிந்து இருக்கிறது என்பது பலரும் அறியாத விஷயம்.

    டெல்லியில் அமெரிக்கன் கல்லூரியின் இதயவியல் துறையில் நடந்த கருத்தரங்கில் இந்த அதிர்ச்சி தகவலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். தினமும் 4 காபி குடிப்பதே இதயக்கோளாறுக்கு வழிவகுக்கலாம் என்று கூறி இருக்கிறார்கள்.

    நாள்பட்ட காபி பழக்கத்தை டாக்டர்கள் எச்சரித்துள்ளார்கள். அதிகப்படியான டீ, காபி மற்றும் குளிர்பானங்கள் குடிப்பதால் இதய நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

    எவ்வளவு ஆரோக்கியமானவராக இருந்தாலும் ஒரு நாளைக்கு 400 மில்லி காபியின் நுகர்வு இதயக் கோளாறுக்கு வழிவகுக்கும். இது உடலின் 'பாராசிம்பேடிக்' அமைப்பை தொந்தரவு செய்யலாம். இது உயர் ரத்த அழுத்தத்தை உருவாக்கும்.

    இதய துடிப்பில் பிரச்சனையை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்கள். காபி, டீ மற்றும் பெப்சி, ரெட் புல், மான்ஸ்டர் ஆகிய பானங்களை அடிக்கடி குடிக்கும் 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களிடம் இந்த ஆய்வை நடத்தி இருக்கிறார்கள். அதில் பலருக்கு ரத்த அழுத்தம், இதய துடிப்பு பிரச்சனை இருப்பது தெரிய வந்தது.

    இந்த ஆய்வின் போது பெண்களிடமும் அதிக அளவு காபி அல்லது குளிர்பானங்கள் அருந்தும் பழக்கம் இருப்பது தெரிய வந்தது. நகர வாழ்க்கை முறை மற்றும் தொழில் ரீதியான பழக்கங்கள் தான் இதற்கு காரணம் என்கிறார்கள்.

    • மன உணர்வுகள் அதிகரித்து, தாம்பத்ய குறைபாடு நீங்கும்.
    • மனதுக்கும் உற்சாகத்தை தரும்.

    தாம்பத்திய குறைபாடு என்பது நரம்பு, ஹார்மோன், உடல் நலன் மற்றும் உளவியல் காரணிகளை அடிப்படையாக கொண்டது. இந்த பிரச்சனை நீங்க என்ன உணவுகள், பழக்கவழக்கங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

    எல்-ஆர்ஜினின், எல்-கார்னிடைன், எல்.சிட்ருலின், எல்.டைரோசின் ஆகிய அமினோ அமிலங்கள், புரோமிலென் என்ற என்சைம், லைக்கோபீன், ஒமேகா 3 மற்றும் 6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் உங்களுக்கு பயன்தரும். அந்த சத்துக்கள் நிறைந்த உணவுகள்:-


    காய்கறிகள்:

    தக்காளி, கேரட், பீட்ரூட், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், பூண்டு, முருங்கைக்காய், தூதுவளை கீரை, தாளிக்கீரை, பசலைக்கீரை


    பழங்கள்:

    நேந்திரன் வாழை, செவ்வாழை, பேரிச்சை, அத்திப்பழம், மாதுளம்பழம், மாம்பழம், பலாப்பழம், துரியன் பழம், தர்பூசணி, ஆரஞ்சு, எலுமிச்சை.


    விதைகள்:

    பூசணி விதைகள், எள், சோயாபீன்ஸ், வேர்க்கடலை, பட்டர் பீன்ஸ், பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்பு, கடற்பாசிகள். சாக்லேட்டுகள், கருப்பு திராட்சை


    அசைவ உணவுகள்:

    கோழி இறைச்சி, வான்கோழி, சிகப்பு இறைச்சி வகைகள், மத்திச்சாளை, சூரை மீன், கணவாய், இறால், நண்டு, முட்டை, பால்


    அரிசி:

    சிவப்பு அரிசி, மாப்பிள்ளை சம்பா, கறுப்பு கவுனி அரிசி

    மூலிகைகள்:

    சித்த மருத்துவத்தில் பயன்படுத்தும் மூலிகைகளில், நெருஞ்சில், இந்தியன் ஜின்செங் என்றழைக்கப்படும் அமுக்கராக் கிழங்கு, தண்ணீர் விட்டான் கிழங்கு, பால் மிதப்பன் கிழங்கு, வாலுழுவை, பூமி சர்க்கரைக் கிழங்கு, நிலப்பனைக் கிழங்கு, மதனகாமப் பூ, குங்குமப் பூ, பூனைக்காலி விதை போன்றவை நரம்புக்கு நல்ல வலுவைத் தந்து தாம்பத்தியத்தில் திருப்தியைத் தரும்.

    சித்த மருந்துகளில் மதன காமேஸ்வர லேகியம், சாலாமிசிறி லேகியம் ஆகியவற்றை தலா 1-2 கிராம் வீதம் காலை, இரவு இரு வேளை சாப்பிட வேண்டும்.

    மேலே குறிப்பிட்டுள்ள உணவு வகைகள், மருந்துகளை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் உற்சாகம் பெருகும். ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் சீராகும். மன உணர்வுகள் அதிகரித்து, தாம்பத்ய குறைபாடு நீக்கி உடலுக்கும், மனதுக்கும் உற்சாகத்தை தரும்.

    ×