என் மலர்
குழந்தை பராமரிப்பு
உலக அளவில் ஐந்து வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் அதன் வளர்ச்சி தடைப்படுகிறது.
இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக யுனிசெப் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘உலக அளவில் குழந்தைகளின் நிலை’ என்ற தலைப்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதில் 2018-ம் ஆண்டில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் 8.8 லட்சம் பேர் இறந்திருப்பதாகவும், இந்தியாதான் குழந்தைகள் இறப்பு விகிதத்தில் முதலிடத்தில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த வயதுக்குட்பட்ட குழந்தைகள் 1000 பேரில் 37 பேர் இறப்பது தெரியவந்துள்ளது.
ஊட்டச்சத்து குறைபாடு, உடல் பருமன், ரத்தசோகை உள்பட பிற சுகாதார பிரச்சினைகளை மையப்படுத்தி குழந்தைகளின் ஆரோக்கியத்தை மதிப்பீடு செய்யும் வகையில் இந்த அறிக்கை அமைந்திருக்கிறது. உலக அளவில் ஐந்து வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் அதன் வளர்ச்சி தடைபடுகிறது. இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை வைட்டமின்கள், ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்புக்குள்ளாவதும், பசியால் வாடுவதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் நகர்பகுதியில் 8 சதவீதம் பேரும், கிராமப்புறங்களில் 5 சதவீதம் பேரும் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு உள்ளாகிறார்கள். இந்தியாவில் சுகாதார உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கு ஆய்வறிக்கையில் பாராட்டு தெரிவிக்கப் பட்டுள்ளது.

குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்த பயன்படுத்தப்படும் சில செல்போன் செயலிகள் குறித்து சைபர் புலனாய்வு அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு மேலாண்மை மற்றும் பயன்பாட்டு தொழில்நுட்ப நிறுவனம் சார்பில், ‘சைபர்வெளியில் குழந்தைகளை பாதுகாத்தல்’ என்ற தலைப்பில் ஆன்லைன் கருத்தரங்கு ஒன்று நடந்தது. இதில் டோரண்டோவில் உள்ள சைபர் புலனாய்வுப்பிரிவு தலைவர் கெயித் எலியட் உரையாற்றினார். அப்போது அவர் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்த பயன்படுத்தப்படும் சில செல்போன் செயலிகள் குறித்து பட்டியலிட்டார்.
இதில் முதலாவதாக ‘ஐ.எம்.வி.யு.’ என்ற செயலியை அவர் சுட்டிக்காட்டினார். 3டி தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட இந்த செயலி பாலியல் வக்கிர குணம் கொண்டவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதைப்போல ‘விஸ்பர்’ என்ற செயலி இளம்பருவத்தினர், பதின்ம வயதினர் தங்கள் ரகசியங்களை பகிரும் தளமாக உள்ளதாகவும், இதைப்போல ‘கிக்ஸ் ஆப்’ எனப்படும் தகவல் அனுப்பும் செயலி, குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்பப்படுத்தும் பெரும்பாலனவர்கள் பயன்படுத்துவதாகவும் எச்சரித்தார்.
இதைத்தவிர ‘திண்டர் டேட்டிங் செயலி’, ‘ஓகேகியுபிட’, ‘சாட்ஸ்பின்’ ஆகிய செல்போன் செயலிகளால் குழந்தைகளுக்கு ஆபத்து நேருவதாகவும், எனவே இவற்றை குழந்தைகள் பயன்படுத்தாமல் இருப்பதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும் எனவும் கெயித் எலியட் வலியுறுத்தினார்.

விவாகரத்துப் பெற்றுப் பிரிந்த அல்லது துணையை இழந்த கணவன் அல்லது மனைவி, தமது குழந்தைகளை வளர்ப்பது எளிதான காரியமல்ல. அதிலும் தனியாக பெண் குழந்தைகளை வளர்க்கும் தந்தைகளின் தவிப்புகளை தனிப் பட்டியலே போடலாம்.

அதிகம் விவாதிக்கப்படாத ஒற்றைப் பெற்றோரின் கஷ்டங்கள் ஒரு மவுன சோகமாகவே நீடித்து வருகின்றன.
தனியாக பெண் குழந்தையை வளர்ப்பதற்குத் தடுமாறும் தந்தையர், தாங்கள் அன்றாடம் சந்திக்கும் சங்கடங்கள் அதிகம் என்கின்றனர். குறிப்பாக, ஒரு பெண் குழந்தை, சிறுமி என்ற நிலையில் இருந்து பெண் என்ற நிலைக்கு மாறும் பருவம். அந்தப் பருவத்து விஷயங்களை அவர்களுடன் பேசுவதற்கும், அவர்களுடன் போதுமான நேரத்தைக் கழிப்பதற்கும் தாங்கள் தடுமாறுவதாக ஒற்றைப் பெற்றோராக உள்ள தந்தையர் கூறுகின்றனர். இதற்கு உதாரணம், மனைவியைப் பிரிந்து 14 ஆண்டுகாலமாக தனது மகள், மகனை தனியாக வளர்ந்துவரும் ஷியாம்குமார். கட்டிடக் கலை நிபுணரான இவர், ‘‘எனது மகள் ஒன்பதாம் வகுப்பும், மகன் ஏழாம் வகுப்பு படிக்கின்றனர். அவர்கள் சிறுகுழந்தைகளாக இருந்தபோதே நானும் என் மனைவியும் விவாகரத்துப் பெற்றுப் பிரிந்துவிட்டோம். அதன்பிறகு குழந்தைகளை நான் மட்டும்தான் வளர்த்து வருகிறேன். எனது பெற்றோர் கொஞ்சம் உதவி செய்கின்றனர்’’ என்கிறார்.
ஷியாம்குமார் சொந்தமாக ஒரு நிறுவனத்தை நடத்துவதால், அவரால் தனது குழந்தைகளுக்கு ஏற்ப பணி நேரத்தை மாற்றிக்கொள்ள முடிகிறது. ‘‘நான் எப்போதுமே வீட்டுக்கு சீக்கிரமாகத் திரும்பி குழந்தைகளைக் கவனித்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன்’’ என்கிறார். ஆனாலும் அவருக்குப் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை.
அவர் மகள் ‘பெரியவளாகி’ விட்டாள். ‘‘ஆரம்பத்தில், மாதவிலக்கு போன்ற விஷயங்களை அவளிடம் பேசுவது கடினமாக இருந்தது. அந்த விஷயத்தில் எங்கம்மாவும், எனது சக பெண் ஊழியர்களும்தான் உதவினர். தற்போது நானும் இதுகுறித்து அவளிடம் படிப்படியாகப் பேச ஆரம்பித்துவிட்டேன்.’’
தற்போது இவர்களின் தந்தை - மகள் உறவு, உலகில் எந்த விஷயத்தைப் பற்றியும் பேசும் அளவுக்கு அழகாக மலர்ந்திருக்கிறது.
‘‘மகள் எந்த விஷயம் பற்றியும் என்னிடம் பேசுவதற்கும் தயங்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன். தற்போது மாதந்தோறும் நான்தான் அவளுக்கு சானிடரி நாப்கின் வாங்கிக் கொடுக்கிறேன். முதலில், நான் அதை வித்தியாசமாக நினைக்கக்கூடாது அல்லவா?’’ என்கிறார் ஷியாம்.
மகளுக்காக சின்னச் சின்ன அழகுசாதனப் பொருட்களைக்கூட தேடித் தேடி வாங்குவதில் ஆனந்தப்படுகிறார், ஷியாம். மகளைப் பற்றிப் பேசும்போதே அவர் முகம் பூரிக்கிறது.
‘‘அவளை முதன்முதலில் சலூனுக்கு முடி வெட்ட கூட்டிப்போனது ஞாபகம் இருக்கிறது. அவள் ரொம்பச் சுட்டி. சலூன் இருக்கையில் அவளை அமரவைப்பதற்கே மிகவும் கஷ்டப்பட வேண்டியிருந்தது. சரி, இனி நாம் அவளுக்கு வீட்டிலேயே முடிவெட்டி விடலாம் என்று முடிவெடுத்துவிட்டேன். யூடியூப் பார்த்துத்தான் முடிவெட்டக் கற்றுக்கொண்டேன். கொஞ்சம் கொஞ்சமாக, நன்றாகவே முடிவெட்ட ஆரம்பித்துவிட்டேன். மகளுக்கு எட்டு வயதாகும் வரை நான்தான் முடிவெட்டி விட்டேன்’’ என்று பழைய நினைவுகளை மீட்டெடுக்கிறார், ஷியாம்.
தனியாக குழந்தைகளை வளர்க்கும் மற்றொரு நபர், சங்கர். அவர் கூறுகையில்,
‘‘என்னை அறிந்த பலரும் சொல்வது, நான் குழந்தை வளர்க்கும்விதம் வித்தியாசமாக இருக்கிறது என்பது. நான் என் மகளை குழந்தை போலக் கொஞ்ச மாட்டேன், அதேநேரம் அவளது அறிவைச் சீண்டவும் மாட்டேன்’’ என்கிறார்.
குழந்தை வளர்ப்பில் முக்கியமான விஷயம், நேர்மை என்பது சங்கரின் கருத்து. குழந்தைகளிடம் தான் ஒருபோதும் பொய் சொல்வதில்லை என்பதுடன், அவர்களையும் எதையும் மறைக்காமல் சொல்லும்படி ஊக்குவிப்பதாகக் கூறுகிறார்.
‘‘எனது இந்தப் பழக்கம், அப்பாவிடம் எதையும் மனந்திறந்து பேசலாம் என்ற தைரியத்தை என் மகளுக்குத் தந்திருக்கிறது’’ என்கிறார்.
‘‘என் மகள் சாதனாவுக்கு ஒன்பது வயதாகிறது. ரொம்பப் புத்திசாலி. விண்வெளி விஷயங்கள் தொடங்கி, சுற்றுச்சூழல் மாசுபாடு வரை எல்லாவற்றைப் பற்றியும் நாங்கள் பேசுவோம். ஏன், சிலநேரங்களில் சில தத்துவங்கள் பற்றிக்கூட நாங்கள் விவாதிப்போம்’’ - சங்கரின் குரலில் ஒரு தந்தையின் பெருமிதம் தெரிகிறது.
இவர் தனது ஒரே மகளுடன் சமீபத்தில் புதுவீட்டுக்கு இடம்பெயர்ந்திருக்கிறார். அப்போது, சாதனா தனது அறையைக் காலி செய்தபோது, தனக்குத் தேவையில்லை என்று பல பொருட்களை அவளாகவே ஒதுக்கிவிட்டாளாம்.
‘‘நான் அதுபற்றி அவளிடம் எதுவும் சொல்லவில்லை. அவளாகவே முடிவெடுத்துச் செயல்பட்டாள். அப்போதுதான், நாம் நமது குழந்தைகளுக்குப் பலவற்றைப் போதிக்க முயல்கிறோம், ஆனால் அவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன என உணர்ந்தேன்’’ - மனப்பூர்வமாகச் சொல்கிறார், சங்கர்.
மனோவியல் மருத்துவரான ஸ்ரீதேவி, ‘‘தனியாக பெண் குழந்தையை வளர்க்கும் தந்தையும் அப்பெண் குழந்தையும் மனந்திறந்து பேசத் தயங்கும் இடங்கள் இருக்கின்றன. இயல்பாகவே, பெண் குழந்தைகள் தங்கள் உடம்பில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை தாயிடம்தான் எளிதாகப் பகிர்ந்துகொள்வார்கள். இயல்பாக, சரளமாகப் பேசுவதும், உறவாடுவதும், தந்தை- மகள் உறவு பரஸ்பர புரிதலுடன், வலுவாக வளர உதவும். தனியாக குழந்தைகளை, குறிப்பாக பெண் குழந்தைகளை வளர்க்கும் தந்தையர், அதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த விஷயத்தில் ஒரு நிபுணரின் ஆலோசனை தேவை என்றால், அதைப் பெறத் தயங்கக் கூடாது. காரணம், தந்தைகளால் பெண் குழந்தைகளின் சில பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள முடியாமல் போகலாம்’’ என்று எடுத்துரைக்கிறார்.
முதலில் தந்தை... அப்புறம் தோழன்
தாயின்றிக் குழந்தைகளை வளர்க்கிறோம் என்று ரொம்ப செல்லம் கொடுக்கக் கூடாது, தோழன் போல நடக்கிறேன் என்று ஓவராக போகக்கூடாது என்று சங்கர் கூறுகிறார். ‘‘நாம் முதலில் அவர்களின் பெற்றோர் என்பதை உணர்த்த வேண்டும். கண்டிப்பாக இருக்க வேண்டிய விஷயங்களில் நிச்சயம் கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்போது, சில நேரங்களில் நாமே வியக்கும்படி அவர்கள் முதிர்ச்சியை வெளிப்படுத்துவார்கள்’’ என்கிறார். ஆண், பெண் குழந்தைகள் இடையே பாகுபாடு கூடாது என்பது ஷியாம்குமார் கருத்து. ‘‘நான் என் மகனையும் மகளையும் ஒன்றுபோல நடத்துவதில் கவனமாக இருக்கிறேன். நாங்கள் ஒன்றாக கால்பந்து ஆடுவோம், நீச்சல்குளத்துக்குச் செல்வோம், புதிர் விளையாட்டுகள் விளையாடுவோம்’’ என்கிறார்.

குழந்தைகளைதொட்டுப் பேச வேண்டும் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள். இப்படி செய்வதால் குழந்தைகளின் மனநிலையில் நல்லதொரு மாற்றத்தை உருவாக்க முடியும் என்கிறார்கள் ஆய்வாளாகள்.
தொட்டால் பூ மலரும் என்றுதானில்லை. தொட்டால் பூ போன்ற குழந்தைகளும் மலர்வார்கள். குழந்தைகளை ஒரு நாளில் மூன்று நேரத்தில் தொட்டுப் பேச வேண்டும் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள். இப்படி செய்வதால் குழந்தைகளின் மனநிலையில் நல்லதொரு மாற்றத்தை உருவாக்க முடியும் என்கிறார்கள் ஆய்வாளாகள். தொடுங்கள் குழந்தைகளிடம் மாற்றம் காணுங்கள்.
காலை எழுந்ததும் குழந்தை அருகில் சென்று தூக்கி கொஞ்சி எழுப்ப வேண்டும். அப்படி கொண்டே வரலாம் அல்லது வீட்டுக்கு வந்ததும் உட்காரவைத்து தலையை கோதி முத்தமிட்டு அவர்களிடம் பேசி நடந்த விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். இதனால் அவர்களது பள்ளியில் என்னநடந்தது, அசிரியர்கள் என்ன சொன்னார்கள், நண்பர்களுடன் விவாதம் நடந்ததா? என அனைத்தையும் உங்களிடம் சொல்ல துவங்குவார்கள். இது குழந்தைகளை சரியான வழியில் செல்லத்தூண்டும்.
இரவு தூங்கபோகும் போது ஏதாவது ஒரு குட்டி கதையை சொல்வதோ அன்றைய நாளில் என்ன பிடித்தது என்ன பிடிக்கவில்லை என்று உரையாடுவதோ குழந்தைகளை சிந்திக் வைக்கும். அந்த நேரத்தில் குழந்தைகளின் கைகை பிடித்து கொண்டோ அல்லது அவர்களது முதுகில் கைவைத்து தடவியோ பேசுவது அவசியம்.
தொடு உணர்வும், தொடர்ந்த உரையாடலும் குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் நெருக்கத்தை அதிகரிப்பதுடன் எதையும் மறைக்காமல் பெற்றோர்களிடம் சொல்லும் துணிவும் வரும்.

இரவு நேரங்களில் சிறுவர், சிறுமிகளுக்கு துரித உணவுகள் கொடுக்கலாமா? என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி விளக்கியுள்ளார்.
நம்முடைய கால சூழ்நிலைக்கு தகுந்தவாறு நமது உணவு பழக்கம் தற்போது மிகவும் மாறியுள்ளது. ஒரு காலத்தில் இயற்கை உணவுகளை உண்டு வந்த நாம், தற்போது செயற்கை உணவுகளை ருசிக்காக உண்பதை வழக்கமாக்கிக் கொண்டோம். அதனால் ஏற்படும் பின் விளைவுகளை அறியாமல் திரும்பத் திரும்ப அந்த உணவுகளை உட்கொள்வதால் வியாதிகள் வருவதோடு மட்டுமல்லாமல் வயது ஆக ஆக உடலில் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்பட்டு மரணம் வரை அது கொண்டு செல்கிறது.
குழந்தைகள் அடம் பிடிக்கிறார்கள் என்று பெற்றோர்கள் அவர்கள் விரும்பும் துரித உணவுகளான பிரைட் ரைஸ், நூடுல்ஸ், புலாவ் ரைஸ் மற்றும் நாக்கில் எச்சில் ஊறும் சுவையான பலவிதமான உணவுகளை வாங்கித் தருகிறார்கள்.
அதை உட்கொள்ளும் குழந்தைகள் சிறுவயது முதலே அதற்கு அடிமையாகி வளர வளர அந்த உணவை மட்டுமே உட்கொள்ளும் பழக்கம் ஆக்கிக் கொள்கிறார்கள். இந்த துரித உணவுகளில், எம்.எஸ்.ஜி எனப்படும் மோனோ சோடியம் குளூட்டாமேட் எனப்படும் உப்பானது அதிகளவில் சுவைக்காக சேர்க்கப் படுகிறது. இது வளரும் பருவத்தில் உள்ள குழந்தைகளுக்கு ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது.
இதை சாப்பிடும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வயிற்று வலி, தலைவலி, வாந்தி மற்றும் நரம்புக் கோளாறுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் இந்தத் துரித உணவுகளை இரவு நேரங்களில் குழந்தைகள் உட்கொள்ளும் போது அது விஷ உணவாக (புட் பாய்சன்) ஆக மாறி உடலில் அதிகளவு கேடு விளைவிக்கும். இது போன்ற துரித உணவுகள் குழந்தைகள் விரும்பினால் பெற்றோர்கள் மாதத்துக்கு ஒரு முறை பகல் வேலையில் கொடுக்கலாம்.
ஆனால் அதுவே தவறு என்பது தான் எனது கருத்து. மேலும் தற்போது கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தமிழ்ச்செல்வன் உத்தரவின் பேரில், சூலூர் வட்டார பகுதிகளில் இது போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும் உணவுகளை தயாரிக்கும் ஓட்டல்கள், தள்ளுவண்டி பாஸ்ட் புட் கடைகள் மற்றும் இதர உணவு கடைகளில் அவ்வப்போது சோதனைகள் செய்யப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்று தொடர்ந்து செயல்படும் கடைகளுக்கு வரும் காலத்தில் சீல் வைக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த நிலையில், பிரைட் ரைஸ், நூடுல்ஸ் போன்ற துரித உணவுகளை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கொடுக்கவே கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.

குழந்தைகளை தாக்கும் பல் நோய்களுக்கான அறிகுறிகள் பற்றியும், அவற்றில் இருந்து தற்காத்துகொள்ளும் வழிமுறை குறித்தும் பார்க்கலாம்.
குழந்தைகளை பொறுத்தவரை மிட்டாய்கள், சாக்லேட், குக்கீஸ்கள் போன்ற இனிப்பு பலகாரங்களை அதிகம் சாப்பிடுவது பல் நோய்களுக்கு வழிவகுத்துவிடும். இதனால் பல் நோய்கள் பெரியவர்கள் மட்டுமின்றி சிறுவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். குழந்தைகளை தாக்கும் பல் நோய்களுக்கான அறிகுறிகள் பற்றியும், அவற்றில் இருந்து தற்காத்துகொள்ளும் வழிமுறை குறித்தும் பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு பற்சிதைவு ஏற்பட உணவு பழக்கம் மட்டுமே காரணம் அல்ல. பல்வலி, பல்லின் நிறத்தில் மாற்றம், ஏதாவது சாப்பிடும்போது அல்லது குடிக்கும்போது வலி ஏற்படுவது, துர்நாற்றம், எதை சாப்பிட்டாலும் கசப்பாக இருப்பது, எதிர்பாராதவிதமாக எடை இழப்பு போன்றவை பற்களில் நோய்தொற்று ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகளாகும்.
இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் பல் மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமானது. குழந்தைகள் ஊட்டச்சத்துமிக்க உணவுகளை விரும்பி சாப்பிட மாட்டார்கள். குறிப்பிட்ட நேரத்திற்குள்ளும் சாப்பிட்டு முடிக்க மாட்டார்கள். இனிப்பு பலகாரங்களைத்தான் அதிகம் விரும்புவார்கள். அதனை குறைத்து ஊட்டச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிட பழக்கப்படுத்த வேண்டும். சாப்பிட்டவுடன் வாய் கொப்பளிக்கும் வழக்கத்தையும் பின்பற்றச் செய்ய வேண்டும்.
தினமும் இருமுறை பல்துலக்குவதற்கும் பழக்கப்படுத்த வேண்டும். இனிப்பு பலகாரங்களை அதிகம் சாப்பிடுவதற்கு அனுமதிக்கக்கூடாது. குறிப்பிட்ட அளவுதான் சாப்பிட வேண்டும் என்று வரையறுத்து அதன்படி செயல்பட வைக்க வேண்டும். காலை, மதியம், இரவு நேரத்தில் குறிப்பிட்ட நேரத்திற்குள் சாப்பிட வைத்துவிட வேண்டும். பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருந்தால் பற்களின் ஆரோக்கியத்தை காக்கலாம்.

குழந்தைகள் டீன் ஏஜ் வயதை தொட்டதும், பெற்றோருக்கு இனம் புரியாத பதற்றம் தொற்றிக்கொள்ளும். பிள்ளைகளுடன் பெற்றோர் நட்பாக பழகுவதன் மூலம், அவர்களை சிறப்பாக வழிநடத்த முடியும். அதற்கான 10 வழிகள் இதோ...
குழந்தைகள் டீன் ஏஜ் வயதை தொட்டதும், பெற்றோருக்கு இனம் புரியாத பதற்றம் தொற்றிக்கொள்ளும். ஏனெனில் டீன் ஏஜ் பருவத்தில் தடம் தவறி செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு என்ற கவலை பெற்றோரை வாட்டும். அந்த சமயத்தில் பிள்ளைகளுடன் பெற்றோர் நட்பாக பழகுவதன் மூலம், அவர்களை சிறப்பாக வழிநடத்த முடியும். அதற்கான 10 வழிகள் இதோ...
1. பொழுதுபோக்கை தேர்ந்தெடுங்கள்:
பிள்ளைகள் வீட்டிலிருக்கும் நேரங்களில் அவர்கள் உங்களுடன் நேரத்தை செலவிடும் வகையில் இருவருக்கும் பிடித்தமான பொழுதுபோக்கை தேர்ந்தெடுங்கள். இருவரும் புத்தகங்களைப் படித்து விவாதிக்கலாம். யோகா, நீச்சல், இசை, நடனம் போன்ற வகுப்புகளுக்கு சேர்ந்து செல்லலாம்.
2. பயணம் செய்யுங்கள்:
இருவரும் சேர்ந்து சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் அருகில் உள்ள இடங்களுக்கு செல்லுங்கள். அவ்வாறு செல்லும்போது நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். மாதம் ஒருமுறை பிள்ளைகளின் நண்பர்களுடன் சேர்ந்து மலையேற்றம், மினி சுற்றுலா என வித்தியாசமாக ஏதாவது செய்யலாம். ஒரே விஷயங்களை தொடர்ந்து பின்பற்றாமல் மாற்றங்களை புகுத்துவது இருவருக்கும் இடையே இணக்கத்தை அதிகப்படுத்தும்.
3. குழந்தைகளிடம் மாணவராகுங்கள்:
பெற்றோர் கற்ற விஷயங்களுக்கும், குழந்தைகள் கற்கும் விஷயங்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். பாடத்திட்டம், தொழில்நுட்பம் என புதிய விஷயங்களை பிள்ளைகள் வழியே கேட்டறிந்து ஆர்வத்துடன் கற்றுக்கொள்ளுங்கள். பிள்ளைகள் சொன்ன விஷயத்தை முயற்சித்து பார்க்கும்போது ‘நீ சொன்ன விஷயத்தை கடைப்பிடித்தேன். பயனுள்ளதாக இருந்தது’ என்று மனம் விட்டு பாராட்டுங்கள். அப்போதுதான் மேலும் பல விஷயங்களை உங்களுடன் பகிர முன்வருவார்கள்.
4. ஆசைகளுக்கு முக்கியத்துவம் அளியுங்கள்:
டீன் ஏஜ் பருவத்தை நெருங்கும்போது டிரெண்டிங்கான சிகை அலங்காரம், உடைகளை தேர்வு செய்வது பலருக்கும் பிடிக்கும். அவர்களின் ஆசைக்கு அணைபோடாதீர்கள். சூழலுக்கு ஏற்றவாறு அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுங்கள். தற்போது, ஆண் பிள்ளைகள் குடுமி வைத்துக்கொள்வது, தலையில் கோடு போல முடி வெட்டிக்கொள்வது பேஷனாக இருக்கிறது. இதுபோன்ற ஆசைகளை அவர்களது விடுமுறை காலங்களில் செய்துகொள்ள அனுமதியுங்கள்.
5. உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள்:
இப்பருவத்தில் காரணமே இல்லாமல் கோபப்படுவார்கள். சட்டென்று சந்தோஷமாவார்கள். அத்தகைய மாறிவரும் உணர்வுகளை புரிந்துகொண்டு அதற்கேற்ப அவர்களை வழிநடத்துங்கள். ‘நீ எப்படி கோபப்படலாம்? நான் சொல்வதைத்தான் நீ கேட்க வேண்டும்’ என அடக்க முயற்சி செய்யாதீர்கள்.
6. பேசக்கூடாத விஷயங்களை பேசுங்கள்:
ஆண், பெண் இணைந்து வாழும் வாழ்வில் பாலுறவு பற்றி பேசுவதும், முழுமையாக தெரிந்துகொள்ளுவதும் அவசியம். அதை பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம், எதிர்பாலின இனக்கவர்ச்சி போன்றவை டீன் ஏஜ் பருவத்தில் ஏற்படும். அவர்கள் கேட்காமலேயே பாலின ஈர்ப்பு பற்றிய அறிவியல் உண்மையை விளக்குங்கள். அதில் ஏற்படும் சந்தேகங்களை உங்களிடமே கேட்குமாறு அன்புடன் சொல்லுங்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கேற்ப பக்குவமான பதில்களைச் சொல்லுங்கள். எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் தவிர்க்காதீர்கள்.
7. சொந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள்:
இப்படிச் செய்யாதே; அப்படிச் செய்யாதே என்று சொல்வதைவிட, அது போன்ற செயல்களை செய்தபோது ஏற்பட்ட உங்கள் சொந்த அனுபவத்தை சுவாரசியமாக சொல்லுங்கள். அது அவர்கள் மனதில் எளிதாக பதிந்துவிடும். பின்பு சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்க பழகிவிடுவார்கள்.
8. சமூகத்தோடு பழக வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுங்கள்:
குழந்தைகளைச் சமூகத்தின் சிறந்த மனிதனாக உருவாக்குவது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. குழந்தைகளுக்கும் சமூகத்துக்கும் நிறைய தொடர்பு உள்ளது என்பதை உணர்த்துவதற்கான வாய்ப்பை வழங்குங்கள். முதியோர் இல்லங்களுக்கு சென்று பெரியவர்களிடம் பழகுதல், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுதல் போன்ற வழக்கத்தை ஏற்படுத்துங்கள்.
9. திட்டுதல், அடித்தல் வேண்டாம்:
பிள்ளைகளின் சுயமரியாதையைப் பாதிக்கும் வகையில் பேசுவதோ, திட்டுவதோ வேண்டாம். இந்த வயதில் சமூக வலைத்தளம், எலக்ட்ரானிக் கேஜட்ஸ் போன்றவற்றின் மேல் ஆர்வமாக இருப்பார்கள். அதனால், சில தவறுகளும் நடக்கலாம். அதுபோன்ற சூழலில், நிலைமையைப் புரிந்துகொண்டு பின்விளைவுகளை எடுத்துக்கூறி வழிநடத்துங்கள். அதைவிடுத்து திட்டுவதும், அடிப்பதும் பிரச்சினையைத் தீர்க்காது.
10. மனதை ஒருமுகப்படுத்த உதவுங்கள்:
டீன்-ஏஜ் பருவத்தில் மனதை ஒருமுகப்படுத்த தியானம், யோகா, உடற்பயிற்சி போன்றவற்றை அறிமுகப்படுத்துங்கள். இறைவழிபாட்டை கற்றுக்கொடுங்கள். அதன் மூலம் உடலும், மனமும் புத்துணர்வு பெறுவதை உணர்வுப்பூர்வமாக உணர்வார்கள்.

பெற்றோர்கள் பேச்சுப்பயிற்சியாளர்களின் அறிவுரைப்படி குழந்தையின் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யுமாறு நடந்துக் கொள்ளவேண்டும்.
ஒருவருக்கு சரளமாக பேச முடியாமல் விட்டு விட்டு பேசும் நிலை இருந்தால் அவருக்கு திக்குவாய் குறை இருக்கிறது எனலாம். அவர்கள் பெரும்பாலும் சில சொற்களை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் பேசும் போது தங்கள் உடல் அசைவுகளால் தங்கள் குறையை ஈடு கட்ட முயலுவார்கள். பொது மக்கள் இந்த குறைபாட்டின் தன்மையை அறிந்து கொள்ளும் பொருட்டும் திக்குவாய் பாதிக்கப் பட்டவர்களிடம் அன்பாக நடந்து கொள்வதற்காகவும் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 22-ம் தேதி திக்குவாய் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
திக்குவாய் குறைபாட்டுக்கு பின்வரும் பல காரணங்கள் காரணிகளாய் அமைகின்றன. அவையாவன: மரபியல் ரீதியாக குடும்ப பரம்பரை, நரம்பு சம்பந்தமான பிரச்சினை, மனதை பாதிக்கும் சில பிரச்சினை, அதிக மனஉளைச்சல்கள் காரணமாகவும் இந்த பிரச்சினை ஏற்படும். திக்குவாய் உள்ள நண்பர்களை போல் பாவனை செய்துக் கொண்டிருப்பவர்களுக்கும் அந்தக் குறை ஏற்பட வாய்ப்புண்டு. உலக மக்கள் தொகையில் ஒரு சதவீதம் பேர் இந்த குறையால் பாதிக்கப்பட்டு உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் மட்டும் ஒரு கோடிக்கு மேல் இந்த குறை உள்ளவர்கள் இருக்கின்றனர். பெண்களை விட ஆண்களே இந்த குறையால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். திக்குவாய் குறைபாட்டை குணப்படுத்த மருந்துகள் எதுவும் இல்லை. இதன் அடிப்படை காரணத்தைத் தெரிந்துக்கொண்டு அதற்கு உண்டான பேச்சுப் பயிற்சி கொடுத்து தன்னம்பிக்கை ஊட்டுவதன் மூலமே இந்த குறையை குணப்படுத்த முடியும். இந்தப் பயிற்சி அளிப்பதற்கு குறிப்பிட்ட கால அளவை அறுதியிட்டு கூறமுடியாது. இந்த குறைபாட்டின் தீவிரத்தன்மையைப் பொறுத்தே இதனுடைய பயிற்சிக் காலம் தீர்மானிக்கப்படும்.
இந்த குறை உள்ளவர்கள் தன்னம்பிக்கை குறைவாக உள்ளவர்களாக இருப்பார்கள். வாழ்க்கை சூழல்களை எதிர்கொள்ள அச்சப்படுவார்கள். மற்றவர்களிடம் பேசுவதைத் தவிர்ப்பார்கள். சில சமயங்களில் பெற்றோரிடமும், நெருக்கமான நண்பர்களுடனும் பேசும்போது இவர்கள் திக்காமல் சரளமாகப் பேசுவார்கள். பாட்டுப் பாடும்போது இவர்களால் திக்காமல் பாடமுடியும். இவர்கள் மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்களில் பேசும்போதும், மிகவும் புதியவர்களிடம் பேசும்போதும், தன் மேல் அதிகாரிகளிடத்தில் பேசும்போதும், தொலை பேசியில் பேசும் போதும், மற்ற பாலினத்தவர்களுடன் பேசும் போதும், அந்நிய மொழியில் பேசும்போதும் அதிகமாக திக்குவார்கள்.
சிலர் தான் பேச நினைப்பதை வேகமாக பேசி முடிக்க முயல் வார்கள். இத்தகையவர்களுக்கு பேச்சுப் பயிற்சியாளர்கள் இவர்களின் எதிர் மறை எண்ணங்களை மாற்றி அவர்களுக்கு நல்ல தன்னம்பிக்கையை ஊட்டி அவர்களை ஊக்குவிப்பார்கள். ஒரு குழந்தையின் பேச்சு குறைபாட்டை அதன் பேச்சு ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் அதற்குரியப் பேச்சுப் பயிற்சி அளிப்பதன் மூலம் குறைந்த கால அளவிலேயே அதை குணப்படுத்த முடியும்.
பெற்றோர்கள் பேச்சுப்பயிற்சியாளர்களின் அறிவுரைப்படி குழந்தையின் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யுமாறு நடந்துக் கொள்ளவேண்டும். அவர்களின் மனதை பாதிக்கும் விதமாக எதையும் எப்போதும் செய்யக்கூடாது. மற்ற குழந்தைகளுடன் எப்போதும் ஒப்பிடக்கூடாது. குறை கூறக்கூடாது. அவர்கள் பேசும் போது பொறுமையுடன் கூர்ந்து கவனிப்பதுவும், உற்சாகப் படுத்துவதும், அவர்களிடம் அன்பாக நடந்து கொள்ளுவதும், அவர்களுக்கு ஏற்றாற் போல் நடந்து கொள்வதும் அவசியம் நல்ல பலனைத்தரும்.
சிலர் பழைய மூட நம்பிக்கையின் படி திக்குவாய் உள்ள குழந்தையின் வாயில் கூழாங்கற்களைப் போட்டு குழந்தையை சத்தமாகப் பேசச் சொல்வார்கள். இது குழந்தைக்கு சரியான சிகிச்சை கிடையாது. மேலும் குழந்தை தவறுதலாக அதை விழுங்க நேரிட்டு தொண்டையில் அடைத்துக் கொள்ளும் ஆபத்தும் விளைய வாய்ப்புண்டு. பேச்சுப் பயிற்சியாளர்கள் திக்குவாய் உள்ள குழந்தைகளுக்கு மூச்சுப் பயிற்சி அளித்து நிதானமாகப் பேச வைப்பார்கள். அவர்களை முதலில் தனித்தனியாக பேசப் பயிற்சியளிப்பார்கள்.
ஒவ்வொரு சொல்லாக பேசப்பயிற்சி அளித்துப் பின்னர் வாக்கியமாக பேச வைப்பார்கள். குழந்தைகளை ஐந்து அல்லது ஆறு பேராக குழுக்களாகப் பிரித்து அவர்களுக்குள் உரையாட வைப்பார்கள். அவர்களுக்கு துணிவை ஏற்படுத்தி அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசவைத்து பயிற்சி அளிப்பார்கள். இதே போல் கையின் கட்டை விரலை நாக்காகவும், மற்ற விரல்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு சொல்லாகவும் நினைக்க வைத்து எந்த விரல் கட்டை விரலைத் தொட வைக்கிறோமோ அதற்கு ஒதுக்கப் பட்ட சொல்லை சொல்லிப் பயிற்சி அளிப்பார்கள். பயிற்சிகள் எல்லோருக்கும் ஒரே மாதிரி கொடுக்கப்படுவதில்லை. வயதுக்கு ஏற்றாற் போலும், சூழலுக்கு ஏற்றவாறும் மற்றும் திக்குவாய் குறையின் அளவிற்கு ஏற்றவாறும் பயிற்சிகள் மாறுபடும்.
கலையரசி,
சிறப்பு கல்வி பயிற்சியாளர்

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சில உணவுகள் அவர்களின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பவை. இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எக்காரணம் கொண்டும் சர்க்கரை கொடுக்கக்கூடாது.
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சில உணவுகள் அவர்களின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பவை. குறிப்பாக சர்க்கரை கலந்த உணவு பதார்த்தங்களை கொடுப்பதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும்.
ஆப்பிள் சாப்பிட்டால் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்ற எண்ணம் பெற்றோரிடம் இருக்கிறது. ஆப்பிளை மென்று சாப்பிட விரும்பாத குழந்தைகளுக்கு அதனை ஜூஸ் ஆக்கி கொடுக்கிறார்கள். அதை எப்படியாவது பருக வைத்துவிட வேண்டும் என்பதற்காக அதில் சர்க்கரையை கலந்து கொடுக்கிறார்கள். அது தவறான பழக்கம். குழந்தைகளுக்கு சர்க்கரை ஏற்றதல்ல. சிறுவயது முதலே சர்க்கரையை பயன்படுத்தும்போது உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற பிரச்சினைகள் எதிர் காலத்தில் உருவாகும்.
இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எக்காரணம் கொண்டும் சர்க்கரை கொடுக்கக்கூடாது. குழந்தைகளுக்கு தேன் கொடுக்கும் வழக்கமும் நிறைய பெற்றோரிடம் இருக்கிறது. அதை சிறிதாவது கொடுத்தால்தான் எந்த உணவாக இருந்தாலும் குழந்தை சாப்பிடும் என்ற நிலையை ஏற்படுத்திவிடுவார்கள். தேனில் அதிக அளவு பிரக்டோஸ் சேர்ந்திருக்கிறது. அது உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் பாதிப்பை ஏற்படுத்தி விடும். ஒருவயதுக்குட்பட்ட குழந்தை களுக்கு அறவே தேன் கொடுக்கக் கூடாது. குளிர் பானங்களையும் பருக கொடுக்கக்கூடாது. 500 மி.லி. அளவு கொண்ட குளிர் பானத்தில் குழந்தைக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவை விட சர்க்கரை அளவு அதிகமாக இருக்கிறது.
செயற்கை வண்ணங்கள், சுவை நிறமிகள் சேர்க்கப்பட்ட பானங்கள் மட்டுமின்றி பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் கொடுக்கக் கூடாது. அத்தகைய உணவுகள் தலைவலி, மனநிலையில் மாற்றம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் கலந்திருக்கும் நைட்ரேட்டுகள் புற்றுநோயுடன் தொடர்புடையவை. நிறைய குழந்தைகள் நூடுல்ஸை விரும்பி சாப்பிடுகிறார்கள். நூடுல்ஸ் அரிசி மாவில் தயாரிக்கப்படுகிறது. அரிசி மாவு எளிதில் குளுக்கோஸாகவும் பின்னர் கொழுப்பாகவும் மாறும் தன்மை கொண்டது. அதனால் அதிகம் சாப்பிட அனுமதிக்கக்கூடாது.
பாலாடைக்கட்டியையும் அதிகம் சாப்பிட அனுமதிக்கக்கூடாது. அவை குழந்தைகளிடம் இன்சுலின் அளவை அதிகப்படுத்திவிடும். ஹார்மோன் சுரப்புகளுக்கும் பாதிப்பை உண்டாக்கும்.

நீங்கள் செய்யும் கல்விதானம் காலத்திற்கும் அழியாதது. ஆக நாம் பிறந்ததில் ஒரு துளியாவது உலக நன்மைக்காக அமைவது குறித்து மகிழ்வு கொள்வோம்! இன்றே செய்வீர் கல்வி தானம்.
கல்வி என்பது வெறும் எழுதுவதும், படிப்பதும் அல்ல. ஒருவரின் அறிவு பெருகவும், அவரது வாழ்க்கை உயரவும் அடிப்படையானது கல்விதான். கல்வி அறிவு பெற்ற ஒருவரால் பிறரைச் சார்ந்திராது கவுரவத்துடன் வாழ முடியும். கல்வி என்பது எந்த ஒரு விஷயத்திலும் அதன் காரணத்தை அறிவது ஆகும். எழுத, படிக்க கற்றுக் கொள்வதன் மூலம்தான் காரண அறிவினைப் பெற முடியும். இந்த காரண அறிவுதான் அனைத்து நாடுகளின் முன்னேற்றத்திற்கும் அடிப்படை ஆகின்றது.
• பல பிரிவுகளில் பாடங்களை படித்து, புரிந்து அதனை அவரவர் வாழ்வில் பயன்படுத்துவதே படிப்பு. இந்த பயன்பாட்டின் மூலம் ஒருவர் தன் வாழ்வின் தரத்தினையும், மற்றவர்களின் வாழ்வின் தரத்தினையும் உயர்த்த முடியும்.
• படிப்பு வாழ்வின் பல உண்மைகளை நம்மை அறிய வைக்கும்.
• கல்வியால் மட்டுமே உலகை வெல்ல முடியும். கத்தியால் அல்ல.
• கல்வியை கொண்டு நாம் வாழ்வினை கற்பதில்லை. மாறாக வாழ்வே கல்விதான்.
• கல்வி ஒன்றே ஒருவருக்கு என்றும் குறையாத மரியாதையினையும், மதிப்பினையும் சமுதாயத்தில் பெற்றுத் தருகின்றது. இதனைத்தான் நம் முன்னோர், “கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு” என்றனர்.
• வெற்றிகளை குவிக்கும் மன்னர்கள் கூட கற்றறிந்த சான்றோர்களையே தன் ஆலோசகர்களாக வைத்திருந்தனர்.
• குழந்தைகளுக்கும், இளைய சமுதாயத்திற்கும் கல்வி ஒன்றே அவர்களின் வாழ்க்கையும், வருங்காலமும் ஆகும்.இவர்களே நாட்டின் வருங்கால தூண்கள்.
சிறு வயதில் கற்கும் கல்வி அக்குழந்தைகளின் வாழ்வின் அடிப்படை ஆகும். இக்குழந்தைகள் உடல் நலத்தோடும், மன நலத்தோடும் வளர்ந்து உயர் நிலை அடைய இக்கல்வி உதவும். சிறு வயதில் மனதில் படியும் நல்ல கருத்துகளே எதிர் காலத்தில் அவர்களால் சமுதாயத்தில் நிகழும் தீமைகளை அழிக்க உதவும். கல்வி மனதில் உறுதியினை உண்டாக்கும் வலிமை படைத்தது. மனிதன் உலகில் வாழவும், உலகை எதிர் கொள்ளும் சக்தியையும் கல்வி வெகுவாய் அளிக்கின்றது. படிக்கும் பிள்ளைகள் நல்ல பிரஜைகளாக உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.
கல்விக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.
• மனிதனுக்கு உறுதியான நிலையான வாழ்வினை கல்வியே அளிக்க முடியும்.
• மனித வாழ்வின் தரத்தினை கல்வியே உயர்த்துகின்றது.
• கல்வியே ஒருவருக்குத் தன்னம்பிக்கையினைத் தரும்.
• கல்வி அறிவு மனிதனை அநேக நேரங்களில் தவறான வாழ்க்கைக்குச்செல்லாமல் தவிர்த்து விடுகின்றது.
• வாழ்வு மகிழ்ச்சியானதாக மாற மனிதனுக்கு கல்வியே அவசியமாகின்றது.
• நல்ல வேலையும், சம்பளமும் கல்வியால் எளிதாய் கிடைக்கின்றது.
• நாட்டின் வளம் ஓங்குகின்றது.
உணவு, பொருள், செல்வம் இவற்றினைப் போல் அல்லாது கல்வி குறையவும் குறையாது. முடிந்தால் கூடிடவும் செய்யும். கைவசமே இருக்கும். திருட்டே போகாது.
இப்படிப்பட்ட கல்வியினை நாம் நம் குழந்தைகளுக்கு எப்பாடுபட்டாவது அளித்து விடுகின்றோம். மிக நல்லது. பாராட்டுதற்குரியது. ஆனால் அது மட்டுமே போதுமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். என்ன காரணம்? இப்பொழுது அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் விடுமுறை முடிந்து திறக்க இருக்கின்றன. நடுத்தர வர்க்கம் கூட பள்ளிச் செலவுகளால் சற்று கஷ்டப்படும் காலம்.
தண்ணீருக்காக குடத்தினை எடுத்துக்கொண்டு இரவு, பகலாய் அலைவதும் தண்ணீரை காசு கொடுத்து வாங்குவதுமே மிகப் பெரிய பிரச்சனையாக அநேகருக்கு இருக்கும் கால கட்டமாக இப்போது உள்ளது. இந்த நேரத்தில் அவர்களுக்கு பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அடிப்படை தேவைகளான புத்தகம், உடை, வாட்டர் பாட்டில், ஷ¨, பள்ளி கட்டணம் என எத்தனை கஷ்டங்கள் இருக்கும் என்பதனை சற்று சிந்திப்போமா! இவர்களுக்கு நாம் எந்த விதத்திலாவது உதவிட முடியுமா என்று யோசித்து இருப்போமா? சரி இவர்களுக்கு ஏதேனும் உதவ வேண்டும் என்று நினைத்தால் இவர்களை எங்கு தேடி செல்வது என்று நினைக்கின்றீர்களா? எங்கும் செல்ல வேண்டாம்.
உங்கள் கண் எதிரிலேயே இருக்கின்றார்கள். உங்கள் வீட்டிற்கு வீட்டு வேலை செய்ய வரும் உதவியாளர்களை சற்று உற்றுப் பாருங்கள். ஒரு நாள் அவர்கள் வரவில்லையென்றால் நமக்கு வாழ்வே இருண்டுவிடும். அவர்களுக்கு 2 வேளை உணவோ, நல்ல நாளோ, பண்டிகையோ, உடல் நல பாதிப்போ, குடும்ப பாதிப்போ இல்லாத ரோபோக்களாக அவர்களை நடத்துவார்கள் அநேகர். ஒருநாள் லீவுக்கு கறாராய் சம்பளம் பிடிக்கும் தனவான்களும் நம்மிடையே நிறைய உண்டு.
நம்மை நாம் சற்றாவது மாற்றிக் கொள்வோமே! நம் வீட்டு உதவியாளர்களின் பிள்ளைகளுக்கு நம்மால் முடிந்த ஒரு சிறிய அளவு உதவி செய்யலாமே.
• கல்வி கட்டணத்திற்காக முடிந்த அளவு கொடுக்கலாம்.
• பள்ளிப்பை, வாட்டர் பாட்டில், டிபன் பாக்ஸ், ஷ¨, செருப்பு, யூனிபார்ம் வாங்கிக் கொடுக்கலாம்.
• நம் குழந்தைகள் படித்த பழைய புத்தகங்களை கொடுக்கலாம்.
• எதுவுமே முடியாதா? அவர்கள் படிக்கும் பள்ளிக்கு செல்லுங்கள். அவர்கள் டீச்சரோடு அவர்களைப் பற்றி கேட்டறியுங்கள். தேவைப்படின் வாரம் இருமுறையாவது அவர்களுக்கு இலவச டியூசன் எடுக்கலாமே.
உண்மையில் நாம் ஒருவருக்கு செய்யும் உதவி அவருக்கே தெரியாமல் செய்வதே உயர்ந்தது ஆகும். நூறு ரூபாய் டியூப்லைட்டில் உபயம் என தனது பெயரினை கொட்டை, கொட்டையாய் டியூப் லைட்டினை விட பெரிதாய் எழுதி விளம்பரப்படுத்தும் பலர் நம்மிடமே உள்ளனர்.
அது போல் கல்வி தானத்திலும் நாம் செய்து விடக்கூடாது. நம் குழந்தைகளுக்கு ஒரு நல்ல எதிர்காலம் வேண்டுமெனில் நம் குழந்தைகள் மட்டும் படித்தால் போதாது. அனைத்து குழந்தைகளும் படிக்க வேண்டும். அப்பொழுதுதான் பாதுகாப்பான சமுதாயம் அமையும். ஆக நாம் செய்யும் எந்த தானத்திலும் நாம் உணராவிட்டாலும் சிறிது சுய நலம் கலந்து தான் உள்ளது. பரவாயில்லை. அனைவரும் ஒரு குழந்தைக்காவது கல்வி உதவி செய்து ஆத்ம திருப்தி பெறுவோம்!
அதிலும் பெண் குழந்தைகளுக்கு கல்வி இந்த காலத்தில் எத்தனை அவசியம் தெரியுமா? ‘பெண் படித்தால் ஒரு குடும்பமே படித்ததற்கு சமம்’ என்பது மிக உண்மையே. மேலும் கல்விதான் ஒரு பெண்ணுக்கு தன்னைக் காத்துக் கொள்ளும் திறனையும், தன்னம்பிக்கையினையும், தைரியத்தினையும், சமயோசித புத்திசாலி தனத்தினையும் அளிக்கின்றது. இனி வரும் காலங்களில் ஒவ்வொரு பெண்ணுக்கும் இத்தகு குணங்கள் மிக அவசியமாகும்.அதற்கு ஒவ்வொரு பெண்ணுக்கும் கல்வி அவசியம். அன்றாடம் இளம் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை கேட்கும், பார்க்கும் அவல நிலை நீங்க பெண் குழந்தைகளுக்கும் கல்வி தானம் செய்யுங்கள்.
உடனே உங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆதரவற்றோருக்கு உதவும் பல நல்ல சேவை நிறுவனங்களை சரி பார்த்து அறிந்து வைத்துக் கொள்ளுங்கள். முடியும் பொழுது தனியாகவோ, கூட்டாகவோ உங்களால் முடிந்ததைச் செய்யலாமே!
நீங்கள் செய்யும் கல்விதானம் காலத்திற்கும் அழியாதது. ஆக நாம் பிறந்ததில் ஒரு துளியாவது உலக நன்மைக்காக அமைவது குறித்து மகிழ்வு கொள்வோம்!
இன்றே செய்வீர் கல்வி தானம்.
போட்டிக்கும், பொறாமைக்கும் நூலிழைதான் வித்தியாசம். அந்த எல்லையை பெற்றோர் புரிந்துகொண்டு, குழந்தைகளுக்கும் தெளிவாக்கவேண்டும்.
பொறாமைக் குணம் கொண்ட குழந்தைகள் எளிதாக அடையாளம் காணப்பட்டு, மற்றவர்களால் ஓரங்கட்டப்படுவார்கள். அப்படி ஓரங்கட்டப்படும் போது, அவர்களுக்குள் அது வெறுப்பை உருவாக்கும். அதனால் அவர்களுடைய செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். அப்போது மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கவும் முயற்சிப்பார்கள். அதுவே குற்றச் செயலாகி, இளங்குற்றவாளியாகி விடுவார்கள்.
குழந்தைகளிடம் பொறாமை குணம் வளர பெற்றோர்களும் ஒரு விதத்தில் காரணம். பின்விளைவுகளைப் பற்றி அறியாமல் இரு குழந்தைகளிடையே அவர்கள் போட்டி மனப்பான்மையை உருவாக்கி விடுகிறார்கள். குழந்தைகளின் வேகத்தையும், திறமைகளையும் வெளிக் கொண்டுவர போட்டி மிகவும் அவசியம். இரு குழந்தைகளுக்கு இடையே போட்டி இருந்தால் தான் அவர்கள் உற்சாகத்துடன் செயல்படுவார்கள் என்பது உண்மைதான். ஆனால் அந்த போட்டி நாளடைவில் பொறாமையாக மாறிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
அதுபோல் வெற்றி பெற்ற குழந்தைகளை தலையில் தூக்கி வைத்து பாராட்டுவதும், தோற்றுப்போன குழந்தைகளை இகழ்வதும் அவர்கள் மனதை வெகுவாக காயப்படுத்திவிடும். குழந்தைகளுக்கு தோல்வி ஏற்படும்போது பெற்றோர்கள் அறிவுபூர்வமாக செயல்பட்டு, குழந்தைகளின் மனதில் தொய்வு ஏற்பட்டுவிடாமல் சீராக்கவேண்டும். இல்லையென்றால் அது குழந்தைகளை பொறாமை என்னும் இருளில் தள்ளிவிடும். போட்டிக்கும், பொறாமைக்கும் நூலிழைதான் வித்தியாசம். அந்த எல்லையை பெற்றோர் புரிந்துகொண்டு, குழந்தைகளுக்கும் தெளிவாக்கவேண்டும்.
எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. மனநிலை, உடல்நிலை, செயல்பாடுகளில் ஒவ்வொரு குழந்தைக்கும் வித்தியாசம் இருக்கும். இதில் குறை நிறை என்று எதையும் பிரித்துப் பார்க்க முடியாது. அவர்களை தன் போக்கில் வளரவிட வேண்டும். தவறுகளை சுட்டிக் காட்டும் போதும் ஒரு பக்குவம் வேண்டும். மற்றவர்கள் முன் குறை கூறுவதும், மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு தாழ்த்தி பேசுவதும் அவர்களின் குறைகளை களைய உதவாது. குழந்தைகளால் ஒருபோதும் அவமரியாதைகளை தாங்கிக் கொள்ளமுடியாது.

சர்வதேச குழந்தைபருவ புற்றுநோய் தினம் என்பது குழந்தைப்பருவ புற்றுநோயை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவை வெளிப்படுத்துவதற்கும், ஆண்டுதோறும் பிப்ரவரி 15-ம் நாள் அனுசரிக்கப்படுகிறது.
சர்வதேச குழந்தைபருவ புற்றுநோய் தினம் என்பது குழந்தைப்பருவ புற்றுநோயை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவை வெளிப்படுத்துவதற்கும், ஆண்டுதோறும் பிப்ரவரி 15-ம் நாள் அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உலகில் எங்கு வாழ்ந்தாலும், அவர்களுக்கு சிறந்த சிகிச்சை, கவனிப்பு மற்றும் ஆதரவு கிடைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் சுமார் 3 லட்சும் குழந்தைகள் பற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். இந்தியாவிலும் இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளது. லுகேமியா எனப்படும் ரத்தப்புற்றுநோய் தான் குழந்தைகளில் அதிகமாக காணப்படுகிறது. ஆரம்ப நிலையிலேயே இதை கண்டறிந்தால் குணப்படுத்தலாம். வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதில் வருத்தப்பட வேண்டிய உண்மை என்னவென்றால் வறுமை, சமுதாய ஏற்றத்தாழ்வுகள் போதிய சிகிச்சையின்மை போன்ற காரணங்களால் பல குழந்தைகள் இதிலிருந்து மீள்வதில்லை என்பது தான் அரசுகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இந்த நிலையை மாற்றுவற்கான பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
நாம் வசிக்கும் பகுதிகளிலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சந்திக்க நேரிடலாம். அத்தகைய குழந்தைகளை பார்க்க நேர்ந்தால் அவர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் நம்மால் முடிந்த ஆதரவினை அளிக்க முன்வர வேண்டும்.