என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு அவர்கள் நேரடியாகச் சென்று படிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கும்பொழுது அவர்கள் நேர மேலாண்மையை கடைப்பிடிப்பது மிகவும் அவசியமாகும்.
    பெருந்தொற்று காலகட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் என அனைத்துமே மூடப்பட்டு வீட்டிலிருந்தபடியே ஆன்லைன்மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு படிப்பது, வேலை செய்வது என்று இருந்ததை அனைவரும் அறிவோம்..இதனால் மாணவர்கள் நேர மேலாண்மை இல்லாமல் மந்தமாக இருந்ததோடு எந்தவிதமான காலக்கெடு மற்றும் கண்காணிப்பும் இல்லாமல் இருந்தனர்.. இப்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு அவர்கள் நேரடியாகச் சென்று படிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கும்பொழுது அவர்கள் நேர மேலாண்மையை கடைப்பிடிப்பது மிகவும் அவசியமாகும். அவ்வாறு கடைப்பிடிக்க இதோ சில உதவிக் குறிப்புகள்:

    * நாட்காட்டியை பயன்படுத்துவது நேர மேலாண்மைக்கு இன்றியமையாததாகும். மிகவும் பரபரப்பான நேரத்தில் கால அட்டவணையை நிர்வகிக்க ஒரே வழி முன்கூட்டியே திட்டமிடுவதுதான்.. ஒவ்வொரு காலகட்டத்தின் தொடக்கத்திலும், மாணவர்கள் தங்கள் கடமைகளை நாட்காட்டி அல்லது டிஜிட்டல் நாட்காட்டியில் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்..அனைத்து வகுப்புகளுக்கான ஒதுக்கீட்டு தேதிகள் மற்றும் தேர்வு நேரங்கள் வண்ண குறியீட்டைப் பயன்படுத்தி காட்ட வேண்டும். அதாவது, காலக்கெடுவுக்கு சிவப்பு, தேர்வுகளுக்கு பச்சை என்று குறித்து வைத்துக் கொண்டால் அவற்றை பின்பற்றி அதற்கு ஏற்றார்போல் மாணவர்கள் தங்களை தயார் செய்து கொள்வது மிகவும் எளிதாக இருக்கும்.

    * தினசரி செய்ய வேண்டிய பட்டியல்களை உருவாக்கவும்.. ஒவ்வொரு நாளும் நிறைவேற்றப்பட வேண்டியவைகள் குறித்த பட்டியலை உருவாக்குவதும் சிறந்த நேரமேலாண்மை கருவியாகும்..இவ்வாறு திட்டமிட்டு செய்யப்படும் பணிகள் முடிந்தவுடன் அவற்றை கடந்து செல்வது நிம்மதி மற்றும் சாதனை உணர்வை வழங்கும்.

    * முன்னுரிமை கொடுக்க A -B-C முறையைப் பயன்படுத்தவும். முதலில் என்ன வேலை செய்ய வேண்டும் என முன்னுரிமைகளை அமைப்பது நேர மேலாண்மைக்கு மற்றொரு திறவுகோல் ஆகும். செய்யவேண்டிய அனைத்து வேலைகளையும் அதாவது படிப்பது,,வீட்டுப்பாடம் செய்வது என அனைத்தையும் A- B-C எ ன வரிசைப்படுத்தி எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்..A-இன்றே முடிக்க வேண்டியவை.B- இன்று முடிப்பது நன்றாக இருக்கும்.C- தேவைப்பட்டால் நாளை செய்யலாம்.

    * சில நேரங்களில் சில வேலைகளை முன்பின்னாக மாற்றி அமைக்க வேண்டும் என்பதை அறிந்து செயல்பட வேண்டும்..நேரத்தை நன்றாக நிர்வகிக்க தொய்வில்லாமை முக்கியம். C-லெவல் பணியானது A- லெவல் பணியாக மாறும் என்பதை தீர்மானிக்கும்போது அதனை தொய்வு இல்லாமல் மாற்றி அமைப்பது நம் கைகளில் உள்ளது. செய்ய வேண்டிய விஷயத்தை கவனம் செலுத்தி முடிப்பது மிகச் சிறந்தது. ஆனால், முக்கியத்துவம் குறைந்த ஒரு பணியை விடாப்பிடியாக செய்ய முனைவது நம்முடைய நேர மேலாண்மையை பின்னுக்கு தள்ளக்க் கூடிய ஒரு விஷயம் என்பதை அறிந்து செயல்பட வேண்டும்.

    * ஒரு நேரத்தில் ஒரு வேலையை திட்டமிட்டு செய்யுங்கள். ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்ய முயற்சிக்கும் போது வேலை பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது..

    * எந்த ஒரு வேலையைச் செய்யும் பொழுதும் அடிக்கடி இடைவெளி எடுத்து செய்வது சிறந்தது..ஏனென்றால், ஆழ்ந்த கவனம் சோர்வை கொடுக்கும். முழுமையான கவனம் தேவைப்படும் ஒன்றைச் செய்யும் பொழுது இடைவெளி எடுப்பது அவசியம். அதேபோல் கவனத்தை கட்டாயப்படுத்தக்கூடாது என்பதையும் கற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாக பாடங்களைப் படிக்கும் பொழுதும்,எழுதும் பொழுதும் தொடர்ச்சியாக அந்த வேலையை செய்யும் பொழுது சோர்வு ஏற்படாமல் இருக்க இடைவெளி விடுவது நல்லது..ஐந்து நிமிடம் அல்லது பத்து நிமிட இடைவெளியானது நம்மை மீண்டும் அந்த வேலையை செய்ய அமரும்பொழுது மிகவும் புத்துணர்ச்சி உடையவராக ஆக்கிவிடும்..

    * எந்த ஒரு வேலையையும் காலக்கெடு மற்றும் இலக்குகளை அமைத்து தொடங்க வேண்டும். அவற்றை பின்பற்ற கற்றுக் கொள்வது வெற்றியின் ஒரு பகுதியாகும். தங்கள் நேரத்தை சிறப்பாக நிர்வகிக்கும் நபர்கள் காலக்கெடுவை தவறவிட மாட்டார்கள். பாடங்கள் குறித்த கட்டுரைகளை எழுதும்போது காலக்கெடு மிகவும் முக்கியமானது. நாம் எழுதியவற்றை சரி பார்க்கவும், திருத்தம் செய்யவும் நேரம் ஒதுக்காமல் எழுதினால் வேலை பாதிக்கப்படும்.கிட்டத்தட்ட இரண்டு வருட கால இடைவெளிக்கு பிறகு பள்ளிகள் கல்லூரிகளுக்கு செல்லும் பொழுது ஒவ்வொரு வேலையையும் காலக்கெடுவை நிர்ணயித்து செய்யும்பொழுது வேலை செய்வது சுலபமாக இருக்கும்.பரிட்சை எழுதும் பொழுதும் ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு இவ்வளவு நேரம்,இரண்டு மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்களுக்கு இவ்வளவு நேரம் பத்து மதிப்பெண் வினாக்களுக்கு இவ்வளவு நேரம் என்று நமக்கு நாமே ஒரு காலக்கெடுவை நிர்ணயித்துக் கொண்டால் பரிட்சையை எந்தவித பயமும் பதட்டமும் இல்லாமல் எழுதிமுடிக்க முடியும்.

    * படிப்பதற்கு நம்முடைய நண்பர்களை குழுவாக அமைத்துக்கொண்டு படிக்கலாம். இவ்வாறு சேரும் பொழுது எந்த ஒரு வேலையையும் தள்ளிப்போடுவது தவிர்க்கப்படுகிறது.இன்று இத்தனை பாடங்களைப் படித்து விட வேண்டும்,இவ்வளவு கணக்குகளை முடித்து விட வேண்டும் என்று குழுவாக திட்டமிடும்போது அவற்றை நம்மால் தள்ளிப் போடவோ,தவிர்க்கவோ முடியாது..ஒருவருடன் ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு வேலைகளை முன்னதாக முடிக்க முயற்சி செய்வோம்..அதேபோல் குழுவாக இணைந்து படிக்கும் பொழுது மாணவர்கள் குறிப்புகளை பகிர்ந்து கொள்ளலாம், குழப்பமான தலைப்புகளைப் பற்றி விவாதிக்கலாம்,ஒரு வினாவுக்கு எவ்வாறெல்லாம் விடைகளை எழுதி அவற்றை ஹைலைட் செய்யும் பொழுது மதிப்பெண்கள் கிடைக்கும் என்று கலந்துரையாடலாம்.

    * உகந்த நேரங்களில் வேலை செய்யுங்கள்: வேலை செய்யும் நேரம் நபருக்கு நபர் மாறுபடும்.. அதேபோல் படிப்பதும் சிலருக்கு இரவில் படித்தால்தான் நன்றாக ஞாபகம் வைத்துக்கொள்ள இயலும்..இன்னும் சிலருக்கு விடிகாலையில் படிக்கும்பொழுது நன்றாக ஞாபகம் வைத்துக்கொள்ள முடியும்.. எனவே அவரவருக்கு எந்த நேரத்தில் ஒரு வேலையைச் செய்யும் பொழுது சிறப்பான செயல் திறனை வெளிப்படுத்த முடிகின்றதோ அந்த நேரத்தை தேர்ந்தெடுத்து செய்வது சிறந்த பலன்களை கொடுக்கும்..

    * நேரத்தை பொன்னாகவும், பணமாகவும் கருதுங்கள். நேரத்தை விலையை நிர்ணயிக்க முடியாத மிக உயர்ந்த ஒரு பொருள் போல எண்ணி செலவிட கற்றுக்கொள்ளவேண்டும்.தேவையான பணிகளுக்கு நேரத்தை செலவிடுவது முடிவில் நல்ல பலனைத் தரும் என்பதை உணர்ந்து நேரத்தை செலவிட கற்றுக்கொள்ளவேண்டும்.
    மாணவர்களுக்கான ஸ்வாட் பகுப்பாய்வை மேற்கொள்ளும்போது, ஒவ்வொரு பிரிவிற்கும் உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய முக்கிய கேள்விகள் இங்கே:
    * இந்தப் பகுப்பாய்வின் மூலம் நீங்கள் அடைய விரும்பும் இறுதி இலக்கை அடையாளம் காணவும்.. நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.. உங்கள் இலக்கு அடையக் கூடியதாகவும்,நம்பகமானதாகவும், எதிர்பார்க்கப்படும் கால எல்லைக்குள்ளும் இருக்க வேண்டும்..

    *உங்கள் பலம் மற்றும் பலவீனத்தை அடையாளம் கண்டு அவற்றை பட்டியலிட்டு எழுதுங்கள்.

    * உங்களது வாய்ப்புகள் மற்றும் அச்சுறுத்தல்களை கண்டு பிடியுங்கள். அடுத்து, உங்கள் வாய்ப்புகளுக்கு தடையாக இருக்கும் உள் அல்லது வெளிப்புற அச்சுறுத்தல்களை சரி பார்க்கவும்..

    மாணவர்களுக்கான ஸ்வாட் பகுப்பாய்வை மேற்கொள்ளும்போது, ஒவ்வொரு பிரிவிற்கும் உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய முக்கிய கேள்விகள் இங்கே:

    *உங்கள் சிறந்த பண்புகள் என்ன?

    * கல்வித்தகுதிகள், பணி அனுபவம், இணையத்தளம் போன்றவற்றின் அடிப்படையில் உங்களிடம் என்ன வித்தியாசமான அனுகூலங்கள் இருக்கின்றன?

    * உங்கள் இலக்குகளை அடைய நீங்கள் என்ன உத்திகளை பயன்படுத்துகிறீர்கள்?

    * மற்றவர்கள் உங்களிடம் பார்க்கும் பிளஸ் புள்ளிகள் என்ன?

    *உங்கள் வாழ்க்கைப் பாதையில் முதலீடு செய்ய என்ன வகையான வளங்கள் உள்ளன?

    *எ ன்ன ஆளுமைப் பண்புகளை மேம்படுத்த வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

    * அறிவு அல்லது நம்பிக்கையின்மை காரணமாக எந்த வகையான பணிகளைத் தவிர்க்கிறீர்கள் ?

    *உங்கள் எதிர்மறை பண்புகள் அல்லது பழக்கவழக்கங்கள் என்ன?

    *உங்கள் வாழ்க்கையில் முன்னேற என்ன வகையான ஆதாரங்கள் இல்லை?

    * உங்கள் பலத்தை சாத்தியமான வாய்ப்புகளாக மாற்றுவதன் மூலம் அவற்றை எவ்வாறு பயன்படுத்தலாம்?

    * நீங்கள் தேர்ந்தெடுத்த துறையில் வளர்ந்து வரும் போக்குகள் என்ன மற்றும் அந்த போக்குகளை நீங்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம்?

    * சிறந்த வாய்ப்புகளை தேட உங்கள் நேரத்தை எவ்வாறு திறமையாக பயன்படுத்தலாம்?

    *நீங்கள் தேர்ந்தெடுத்த துறையில் எது போன்ற தடைகளை எதிர் கொள்கிறீர்கள்?

    *உங்கள் பலம் ஏதேனும் உங்களை தடுத்து நிறுத்துகிறதா ?

    *உங்கள் பலவீனங்கள் ஏதேனும் உங்களை வெற்றி பெற விடாமல் தடுக்கிறதா?

    இந்த பகுப்பாய்வு உங்களுக்கு பல வழிகளில் எவ்வாறு உதவுகின்றது என்பதை பார்ப்போம்:

    *உங்களை நீங்களே நன்றாக புரிந்துகொள்ள உதவுகின்றது.

    * உங்கள் பலவீனங்களை தெரிந்து அதில் வேலை செய்வதை தெளிவுபடுத்துகின்றது.

    * உ ங்கள் பலத்தில் கவனம் செலுத்த உதவுகின்றது..

    *உங்களுக்கு உண்டான வாய்ப்புகளை கண்டுகொள்ள உதவுகின்றது.

    * அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள உதவுகின்றது.

    * கால நிர்வாகம் செய்வதற்கு துணை நிற்கின்றது.
    மாணவர்களுக்கான ஸ்வாட் பகுப்பாய்வில் இது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் நீங்கள் பெற்ற திறன்கள் மற்றும் சாதனைகளை வரையறுக்கிறது..
    ஒரு வணிக முயற்சியை தொடங்குவதற்கு அல்லது புதிய பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு முன், பகுப்பாய்வு செய்வதைப்பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கலாம். இதுபோன்ற பகுப்பாய்வு மாணவர்களுக்கும் பொருந்தும் ..இந்த பகுப்பாய்வு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது. உங்கள் பலம் மற்றும் குறைபாடுகளை புரிந்துகொள்ள இது ஒரு அற்புதமான வழியாகும்.. ஸ்வாட் என்பது ‘ வலிமை’ ‘ பலவீனங்கள்’ ‘ வாய்ப்புகள்’ மற்றும் ‘அச்சுறுத்தல்கள்’ என்பதன் சுருக்கமாகும்..இது ஒரு மதிப்பீட்டு உத்தி என்றும் சொல்லலாம்..இந்த உத்தியை கையாண்டு உங்களது பலவீனங்களை கண்டுபிடித்து, உங்கள் பலத்தை மேம்படுத்தி உங்கள் எதிர்கால நடவடிக்கையை மிகவும் வலிமையானதாக தீர்மானிக்கமுடியும்.குறிப்பாக உயர் படிப்புக்காக செல்லும் மாணவர்கள் அடிப்படை திறன்கள் இல்லாதபோது பல்வேறு சிக்கல்களை சமாளிக்க வேண்டியுள்ளது..உங்களது திறமையை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளாத பொழுது இதுபோன்று நிகழ்கின்றது..

    ஸ்வாட் பகுப்பாய்வு ஏன் முக்கியமானது?

    முதலில் நம்மை நாமே அறிந்து கொள்வது நம் கனவுகளை நனவாக்குவதற்கான முதல் படி ஆகும். ஸ்வாட் பகுப்பாய்வைப் பயன்படுத்தி, மாணவர்கள் தங்கள் கண்டறியப்படாத திறமைகளை கண்டுபிடித்து, அவர்களுக்கு சரியான வாழ்க்கை பாதையை ஆராய்வதற்கு ஒரு அருமையான தீர்வை வழங்குகிறது. மேலும், இது உங்கள் பலத்தை நீட்டிக்கவும் உங்கள் குறைபாடுகளை சரியான நேரத்தில் சுட்டிக்காட்டவும் உதவுகிறது. இவ்வாறு உங்களை நீங்களே பகுப்பாய்வு செய்து கொள்ளும் பொழுது நீங்கள் ஒரு சிறந்த நபராக வெளிப்படுவீர்கள்..வாய்ப்புகளைத் தேடும் பொழுதும், ஒரு கூட்டத்தில் தனித்து நிற்கவும், அச்சுறுத்தல்களை தவிர்க்கும் பொழுதும் ஒரு மாணவன் தனது பலம் மற்றும் பலவீனங்களில் கவனம் செலுத்த வேண்டும்.அதைச் சரியாக செய்ய, நம்மை நாமே சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்.

    *பலம்:

    மாணவர்களுக்கான ஸ்வாட் பகுப்பாய்வில் இது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் நீங்கள் பெற்ற திறன்கள் மற்றும் சாதனைகளை வரையறுக்கிறது.. தொழில்முறை அல்லது கல்வி கண்ணோட்டத்தில், நீங்கள் பெற்ற திறன்கள் மற்றும் தொழில்முறை அறிவை பட்டியலிடலாம்..விமர்சன சிந்தனை, தலைமைத்துவம் மற்றும் நேர மேலாண்மை திறன்கள் போன்ற உங்கள் ஆளுமை தொடர்பான மற்ற பலன்களும் உங்களது பிளஸ் பாயிண்ட் ஆக இருக்கலாம்..அதேபோல் வெவ்வேறு சூழ்நிலைகளை கையாள்வதில் நீங்கள் எவ்வளவு லாவகமாகவும் நெகிழ்வாகவும் இருக்கிறீர்கள் என்பதை குறிப்பிட மறக்காதீர்கள்..

    *பலவீனங்கள்:

    கல்லூரிகளில் இணைவதற்கு முன்னர் நேர்காணல் குழுவை மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.. அவ்வாறு நேர்காணல் செய்பவர்களின் குழுவை எதிர்கொள்ளும்போது, உங்கள் ஸ்வாட் பகுப்பாய்வில் குறிப்பிடவேண்டிய நேர்மறையான புள்ளிகள் எதுவும் உங்களிடம் இல்லை என்றால் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.. அதேபோல் தேவைப்பட்டால் உங்கள் பலவீனங்களை பற்றி பேச வெட்கப்பட வேண்டாம்..உங்கள்பலவீனங்களை எதிரில் இருப்பவர்களுக்கு விளக்கும் பொழுது உங்களது பலவீனமானது உங்களை மிகவும் உண்மையானவர் ஆகவும் நம்பகமானவராகவும் காட்டும் என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம்..

    *வாய்ப்புகள்:

    ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் திறமை பெற்ற பிறகு, அவற்றை என்ன செய்வது என்று நீங்கள் சிந்திக்கலாம்.. வாய்ப்புகளுக்காகக் காத்திருப்பதை விட, வாய்ப்புகளை நாமே தேடிச் செல்வது ஒரு நேர்மறையான பண்பாகும்.. ஆயிரக்கணக்கான வாய்ப்புகளில் இருந்து உங்களுக்குச் சிறந்தது, பொருத்தமானது என்று நீங்கள் நினைப்பதை தேர்ந்தெடுப்பது நீங்கள் உள்வாங்க வேண்டிய ஒரு திறமையாகும்.

    *அச்சுறுத்தல்கள்:

    உங்கள் வாழ்க்கை பயணத்தின் போது அல்லது பல்கலைக்கழகத்தில் சேர்க்கை பெறும் போது நீங்கள் சந்திக்கும் அச்சுறுத்தல்களை பற்றி நீங்கள் கவலைப் படுகிறீர்கள் என்றால், இந்த சவால்கள் உங்களை வலிமையாக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்..ஒரு பல்கலைக்கழகத்தில் வரையறுக்கப்பட்ட இடங்கள் தான் இருக்கின்றன என்பதை தெரிந்து அந்தக் கல்லூரியில் நுழைவதற்கு முயற்சி செய்யும்பொழுது அல்லது நேர்காணலில் கடினமான சவாலை எதிர்கொள்ளும் பொழுதும் ஏற்படும் சிரமங்கள் செயல்முறையின் ஒரு பகுதியாகும் என்பதை புரிந்துகொண்டால் அச்சுறுத்தல்கள் குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை.
    பள்ளியில் ஆசிரியர்களும், வீட்டில் பெற்றோரும் மாணவர்களுடன் இயல்பாக பழக வேண்டும். அவர்களின் கருத்துக்கும், எண்ணத்துக்கும் ஆசிரியர்கள் மதிப்பு அளிக்க வேண்டும்.
    பிரச்சினைகள் நிறைந்தது தான் மனித வாழ்க்கை. இதற்கு யாரும் விதிவிலக்கு அல்ல. பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு நிலைகளிலும் பல்வேறு போராட்டங்களை கடந்து தான் வெற்றி கிடைக்கும். பிரச்சினைகளை கண்டு எந்த நிலையிலும் மன உறுதியை இழந்துவிடக் கூடாது. எப்போதும் மன உறுதியோடு இருக்க வேண்டும். வெற்றி, தோல்விகளின் தாக்கம் ஒருவனை நிலைகுலைய செய்துவிடக்கூடாது.

    இதை மாணவ, மாணவிகள் இளம்வயதிலேயே கற்று கொள்ள வேண்டும். நெருக்கடி ஏற்படுகிறபோது அதை சமாளிக்கவும், எதிர்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். அவதூறுகளை புறம் தள்ளிவிடவேண்டும். நம்மை பற்றிய குறைகளை கேட்கும்போது அதில் உண்மை இருந்தால் திருத்திக்கொள்ள வேண்டும். தவறான கருத்துகள் சொல்லப்படுமானால் அதை கண்டு கொள்ளாமல் அலட்சியப்படுத்தி விடவேண்டும்.

    மாணவர்கள் தங்களின் பொறுப்புகளையும் கடமைகளையும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அதுதொடர்பாக யார் அறிவுறுத்தினாலும் கேட்டு நடக்க முன்வரவேண்டும். மேலும் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் தெரிவித்து தீர்வுகாண வேண்டும். பள்ளி சூழலில் மாணவர்கள் நண்பர்களிடம் நல்லமுறையில் பேசிப்பழக வேண்டும். கோபம், விரோதம் போன்றவற்றுக்கு இடம் அளித்துவிடக் கூடாது. அது மனரீதியாக தவறான பாதைக்கு மாணவர்களை அழைத்து சென்றுவிடும். மன அழுத்தம் ஏற்படுத்தும் சம்பவம் ஏதும் நடந்தால் நல்ல முறையில் விவாதித்து தீர்வுகாண வேண்டும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்து விடக்கூடாது.

    எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு என்பது உண்டு. தீர்க்க முடியாத பிரச்சினை எதுவும் கிடையாது. எனவே மாணவர்கள் நேர்மறை சிந்தனையோடு பிரச்சினைகளை அணுகவேண்டும். பிரச்சினைகளை கடந்து போகும்போது தான் வெற்றி கிடைக்கும். நம்முடைய நடவடிக்கையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் அணுகி விமர்சனம் செய்வார்கள். அதை எதிர் கொள்ளத்தான் வேண்டும். எப்போது விமர்சனம் எழத் தொடங்குகிறதோ, அப்போது தான் ஒருவருக்கு வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும்.

    பள்ளியில் ஆசிரியர்களும், வீட்டில் பெற்றோரும் மாணவர்களுடன் இயல்பாக பழக வேண்டும். அவர்களின் கருத்துக்கும், எண்ணத்துக்கும் ஆசிரியர்கள் மதிப்பு அளிக்க வேண்டும். எதையும் காரணம் காட்டி மாணவர்களின் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தி விடக்கூடாது. அது அவர்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிடும் வாய்ப்பு உள்ளது. இளைய தலைமுறையினர் எதிர்கால வளர்ச்சியின் முக்கிய பங்காளர்கள். அவர்கள் எந்த நிலையிலும் மன உறுதியை இழந்து விடக்கூடாது. அதுதான் எல்லாவற்றையும் சாதிக்கக் கூடிய சக்தி என்ற நம்பிக்கையுடன் களம் இறங்க வேண்டும். அப்போது தான் வெற்றியாளனாக அல்ல சராசரி மனிதனாக நடமாட முடியும். எதையும் தைரியத்தோடும், நேர்மறையான சிந்தனையோடும் எதிர்கொள்ளும்போது எந்த பிரச்சினையிலும் இருந்து மீண்டு வரமுடியும். இதனை ஒவ்வொரு மாணவ-மாணவிகளும் உணர வேண்டும்.
    குழந்தை ஒரு குறிப்பிட்ட உறவினர், பராமரிப்பாளர்களிடம் பயம் கொண்டு, அதனை பெற்றோரிடம் சொல்லும் போது, பெற்றோர்கள் அதை நிராகரிப்பது நல்லது அல்ல.
    பொதுவாக குழந்தைகளுக்கு எதையாவது கண்டு பயப்படுவது, பேய் கதைகள் அல்லது ஏதாவது ஒரு உருவத்தை கண்டு பயம் கொள்வது போன்றவை இருக்கத்தான் செய்யும். அப்போது பெற்றோர்கள் அதனை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல், அவர்களின் பயத்தை போக்கும் வகையில் அன்பாக பணிவாக அவருக்கு புரியும் வகையில் எடுத்து கூறி பயத்தை போக்க வேண்டும். குழந்தைகள் சாப்பிட மறுத்தாலோ அல்லது அடம் பிடிக்கும் சமயத்திலோ, அவர்களுக்கு ‘பூச்சாண்டி’ காட்ட சொல்லும் பயமானது. மனதில் அப்படியே பதிந்து, எப்பொழுதும் அதே பயத்தில் இருப்பார்கள். சில சமயம் அந்த பயம் அவர்களுக்கு நிரந்தரமாகிவிடும்.

    எனவே அவற்றை நிரந்தரமாக விடாமல், அதிலிருந்து அவர்களை காப்பது பெற்றோரின் கடமை. இப்போது குழந்தைகளின் பயத்தை எப்படியெல்லாம் போக்கலாம் என்று பார்ப்போமா!

    1. சிறு வயதில், அதாவது 1-2 வயது வரை குழந்தைகளை சாப்பிட வைக்க, பூச்சாண்டி காட்டி சாப்பிட வைப்பது, அடம் பிடிக்கும் போது அவர்களுக்கு பேய் வருகிறது என்று சொல்லும் கட்டுகதைகள் போன்றவற்றை அவர்கள் வளர வளர நாளடைவில் மாற்றி கொள்வது நல்லது.  பூச்சாண்டி காட்டி சாப்பிட வைப்பது அதாவது அவர்கள் அடம் பிடிக்கும் பொழுது, ஏதாவது பாட்டு அல்லது கதை சொல்லி அல்லது அவருக்கு பிடித்தமான ஒன்றை கொடுக்கிறேன் என்று சொல்லி, அவர்களை திசை திருப்பலாம். ஏனெனில் குழந்தைகள் உலகத்தை பெற்றோர்கள் மூலமாக காண்கின்றனர். அவர்களின் வாழ்வானது புதிய படைப்பாக இந்த உலகத்தில் ஆரம்பமாகி யுள்ளது. அதனால் அவர்களை பயமுறுத்தினால், பின் அவர்கள் பார்ப்பது, கேட்பது போன்றவை களை வைத்து ஒரு உருவத்தை அல்லது கற்பனை செய்து கொள்வர். பின் அவர்கள் இருட்டான இடத்தைப் பார்த்தால், அங்கு பேய் இருப்பது போல கற்பனை செய்து கொண்டு, அவர்களின் மனமானது பெரிதும் பாதிப்பிற் குள்ளாகி விடும். எனவே அப்போது அவர்களுக்கு உண்மையை சொல்லி புரிய வைக்க வேண்டும்.

    2. குழந்தைகள் அதிகமாக பயந்தால், அவர்களின் பயத்திற்கான காரணத்தை கண்டறிய, குழந்தைகளிடம் மனம் விட்டு பேச வேண்டும்.  குழந்தைகள் அதிகமாக பயந்தால் அவர்கள் எதனால் பயப்படுகிறார்கள் என்பதை அவர்களையே விளக்க சொல்லி, பின்னர் அவர்களுக்கு புரியும் வகையில் அந்த பயத்தை போக்கும் வகையில் எடுத்து சொல்ல வேண்டும். மேலும் இவை அனைத்து ஒரு மாயை என்பதையும் புரிய வைக்க வேண்டும்.

    3. குழந்தைகளுக்கு சரியானதை பொறுமையாக சொல்லி கொடுக்கவும். அதைவிட்டு கோபமாக சொன்னால், எதுவும் நடக்காது. அன்போடு அமைதியாக சொன்னால், குழந்தைகள் எதையும் பெற்றோரிடம் பயமின்றி, மனதில் இருப்பதை பகிர்ந்து கொள்வார்கள்.

    4. குழந்தை ஒரு குறிப்பிட்ட உறவினர், பராமரிப்பாளர்களிடம் பயம் கொண்டு, அதனை பெற்றோரிடம் சொல்லும் போது, பெற்றோர்கள் அதை நிராகரிப்பது நல்லது அல்ல. அந்த நிலையில் குழந்தையை அவர்களிடம் இருக்குமாறு கட்டாயப்படுத்த கூடாது. அவர்களால் குழந்தைக்கு என்ன பிரச்சினை, அவர்களைக் கண்டு ஏன் பயப்படுகி றார்கள் என்று குழந்தைகளிடம் கேட்டு, பின் அதனை சரி செய்ய முயற்சி செய்ய வேண்டும். அதை விட்டு குழந்தையை கண்டிக்கக் கூடாது.  குழந்தையை கேலி செய்தல்

    5. குழந்தைகளை அவர்களின் பயம் குறித்து கிண்டல் செய்யக் கூடாது. ஏனெனில் குழந்தையை கேலி செய்தல் மூலம் அந்த பயமானது குறையாது. அதற்குப் பதிலாக, அது அவர்களது கவலையை அதிகரிக்கும். அதே நேரத்தில் அவர்களது தன்னம்பிக்கை யையும் குறைக்கும். ஏனெனில் பெற்றோரே குழந்தையை கிண்டல் செய்வதன் மூலம், அவர்களது மனம் தளர்ந்து, பின் அவர்களுக்கு எப்போதும் எதிர் மறையான உணர்வுகள் மட்டுமே உருவாகும்.

    6. குழந்தைகள் பயந்து செய்யும் எந்த ஒரு செயலையும் செய்யுமாறு கட்டாயப்படுத்த வேண்டாம். அப்போது அவர்களின் பயத்தைப் புரிந்து கொண்டு, அவர்களின் அச்சத்தை நீக்க அவர்களுடன் அன்புடனும் ஆதரவுடனும் பேசி, பயத்தைப் போக்க முயற்சிக்க வேண்டும்.

    7. பெற்றோர்கள் குழந்தை களுக்கு தைரியத்தை கற்றுக் கொடுக்க, அவர்களின் முன் எப்போதும் தைரியாமாக எந்த ஒரு செயலையும் துணிச்சலோடு எதிர் கொண்டு, செய்து முடிப்பது போல் நடந்து கொள்ள வேண்டும். துணிச்சலோடு செய்து முடிக்க இதனால் அவர்கள் உங்கள் செய்கைகளைப் பார்த்து, அவர்களுக்கும் மனதில் தைரியம் ஏற்படும். மேலும் எதை செய்யலாம் எதை செய்யகூடாது என்பதையும் அவர்களுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்கவும்.

    8. குழந்தைகள் வீட்டில் உள்ள அறைக்குச் செல்ல அஞ்சுகின்றனர். என்றால், அந்த பகுதிக்கு அவர்களுடன் சென்று, அனைத்து கதவுகளை திறந்து, ஒளியைப் பயன்படுத்தி படுக்கைக்குக் கீழ் எதுவும் இல்லை பார் என்று காட்டவும். மேலும் ஏதாவது சப்தம் அல்லது நிழல் கண்டு பயந்தால், அப்போது அவர்களிடம் அந்த சப்தம் மற்றும் நிழல் எதனால் வந்தது என்று விளக்கமாக சொல்லிப் புரிய வைக்க வேண்டும். இவ்வா றெல்லாம் செய்தால், குழந்தைகளை பயத்தி லிருந்து விடுவிக்க முடியும்.

    ஒருவனது வாழ்க்கையின் திசையை, மாற்றும் வல்லமை கொண்ட நட்பை தேர்ந்தெடுக்கும் போது கவனமும், எச்சரிக்கையும் தேவை. அதுபற்றிய வழிகாட்டுதல் இதோ....
    தாய், தந்தை மற்றும் உடன்பிறந்தவர்களை நம்மால் தீர்மானிக்க முடியாது. ஆனால் நட்பை நம்மால் தீர்மானிக்க முடியும். கூடா நட்பு தூக்குமேடைக்கும், நல்ல நட்பு சிகரத்திற்கும் வழிகாட்டும் என்பார்கள். இவ்வாறு ஒருவனது வாழ்க்கையின் திசையை, மாற்றும் வல்லமை கொண்ட நட்பை தேர்ந்தெடுக்கும் போது கவனமும், எச்சரிக்கையும் தேவை. அதுபற்றிய வழிகாட்டுதல் இதோ....

    * உங்கள் நண்பர்களிடம் பேசும் போது, உங்கள் மனம் நேர் சிந்தனையில் உள்ளதா அல்லது எதிர்சிந்தனையில் மாறுகிறதா என்று பாருங்கள். உங்களது மனதை எதிர்சிந்தனையில் மாற்றும் நட்பு தவறானது என்பதை உணருங்கள்.

    * நல்ல நண்பர்களோடு பழகும் போது உங்களின் நல்ல குணாதிசயங்கள் எல்லாம் வளர்ந்து கொண்டே இருக்கும். எனவே அத்தகைய நண்பர்களை எப்போதும் அருகில் வைத்துக்கொள்ளுங்கள்.

    * உங்களோடு நெருங்கி பழகும் நண்பர்கள் நான்கு பேரை நினையுங்கள். அவர்கள் நல்லவர்களா அல்லது மோசமானவர்களா என இப்போது அளவிட்டு, தீய நண்பர்களை ஒதுக்குங்கள். தீய நண்பனோடு இருப்பதை விட நண்பன் இல்லாமல் இருப்பதே நல்லது.

    * பிற நண்பர்களைப்பற்றி உங்களிடம் தரக்குறைவாக பேசுவோரிடம் கவனமாய் இருங்கள். ஏனெனில், அவன் உங்களைப் பற்றி மற்றவர் களிடம் தவறாக பேசுவதற்கு வாய்ப்புண்டு.

    * தீய பழக்கங்கள் பெரும்பாலும் நண்பர்கள் மூலமே கற்றுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு ஒழுக்கத்தை மீறிய செயல்களை பின்பற்றினால் தான் நட்பாய் இருப்பேன் என நிபந்தனை விதிப்பவரின் நட்பை விலக்கி விடுங்கள்.

    * நட்பின் முக்கிய தேவையே, உதவுவது தான். ஆனால், தேவை உள்ள நேரத்தில் மட்டும் வரும் நண்பர்கள் சுயநலவாதிகள். எனவே, நண்பர்களை தேர்வு செய்யும் போது.... தேவை கவனம்.

    நீங்கள் நல்ல நட்பை எதிர்பார்ப்பதைப் போலவே, பிறரும் நல்ல நட்பை எதிர்பார்ப்பார்கள். எனவே நீங்கள் எப்போதும் நல்ல நண்பனாகவே இருக்க வேண்டும்.
    கொரோனா தொற்று நோயால் குழந்தைகளின் வாசிப்பு திறனும், எண்ணும் திறனும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு கருத்துக்கணிப்பு முடிவு கூறுகிறது.
    மேற்கு வங்காளத்தில் பிரதம் கல்வி அறக்கட்டளை மற்றும் கல்லீரல் அறக்கட்டளையும் இணைந்து ஒரு கருத்துக்கணிப்பை மேற்கு வங்காளத்தில் நடத்தி உள்ளன.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், மேற்கு வங்காளத்தின் 17 மாவட்டங்களில் 11 ஆயிரத்து 189 குழந்தைகள் இந்த கருத்துக்கணிப்பில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

    இதன் முடிவில் பல முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அவை வருமாறு:-

    * 3-ம் வகுப்பில் 2-ம் வகுப்பு பாடங்களை 2014-ல் 32.9 சதவீதத்தினரும், 2018-ல் 36.6 சதவீதத்தினரும் வாசிக்க முடிந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று காலத்தில் இது 27.7 சதவீதமாக குறைந்துள்ளது.

    * 5-ம் வகுப்பில் உள்ள மாணவர்களில் 2-ம் வகுப்பு பாடங்களை 2014-ல் 51.8 சதவீதத்தினரும், 2018-ல் 50.5 சதவீதத்தினரும் வாசிக்க முடிந்தது. தற்போது இது 48 சதவீதமாக குறைந்துள்ளது.

    * 2-ம் வகுப்பில் குறைந்தபட்சம் வார்த்தைகளை வாசிக்கிற திறன் 2014-ல் 54.8 சதவீதமாகவும், 2018-ல் 66.2 சதவீதமாகவும் இருந்தது. தற்போது 53 சதவீதமாக குறைந்துள்ளது.

    இந்த முடிவுகளை நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அபிஜித் விநாயக் பானர்ஜி, இணையவெளியில் வெளியிட்டார்.

    மாணவர்களின் வாசிப்பு திறன், எண்ணுகிற திறன் குறைந்திருப்பது குறித்து இவர் கருத்து தெரிவிக்கையில், “ஊரடங்கு பொதுமுடக்கம், மாணவர்களின் அடிப்படை கல்வி கற்றலுக்கு இடையூறாக உள்ளது. தற்போது கொரோனா நிலைமை மேம்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் கூடிய விரைவில் திறக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
    நீங்கள் தேர்வில் விரும்பும் மதிப்பெண்களை பெற்று சிறப்பான வெற்றியை அடைய வேண்டுமா? அதற்கான எளிய சூத்திரம் இதோ!!
    தேர்வுகள் நெருங்கி விட்டன. பொதுத் தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் மிகுந்த பரபரப்புக்கு உள்ளாகின்றனர்.

    நீங்கள் தேர்வில் விரும்பும் மதிப்பெண்களை பெற்று சிறப்பான வெற்றியை அடைய வேண்டுமா? அதற்கான எளிய சூத்திரம் இதோ!!

    உங்கள் தேர்வு எப்போது என்பதை குறித்துக் கொள்ளுங்கள். இன்னும் எத்தனை நாள் இருக்கின்றன? நீங்கள் பாடத்திட்டத்தில் எந்த அளவுக்குப் படித்துள்ளீர்கள்? இன்னமும் படிக்காத பாடங்கள் உள்ளனவா? மேற்படி படித்த பாடங்களை எத்தனை முறை (ரிவிஷன்) திரும்ப படித்து உள்ளீர்கள். அடுத்ததாக படித்தவற்றை பார்க்காமல் எத்தனை முறை எழுதிப் பார்த்து உள்ளீர்கள். முதலில் இவைகளை தெளிவாக குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் தற்போது தேர்வுக்காக நாம் எவ்வாறு தயாராக வேண்டும் என்பதை ஒரு அட்டவணைப் படுத்துங்கள். இவ்வாறு அட்டவணைப் படுத்தும்போது நேர மேலாண்மை மிக முக்கியம். பொதுவாக நாம் எல்லோரும் ஒரு நாளைக்கு அதிக அளவு படிக்கலாம் என்று திட்டம் போடுவோம். ஆனால் ஆரம்பித்த சில நாட்களில் அது முடியாமல் போனதும் முழு திட்டமும் வீணாகிவிடும்.

    எனவே நம்மால் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் முழு ஈடுபாட்டோடு படிக்க முடியும், எவ்வளவு நேரம் அதை எழுதிப் பார்க்க முடியும் என்பதை உண்மையாக உணர்ந்து அதற்கேற்ப திட்டம் வகுத்தால் சிறப்பாக இருக்கும். ஒவ்வொரு நாளும் நாம் குறிப்பிட்டுள்ள பாடங்களை அன்றைய தினமே சிறப்பாக படித்து விடும்பொழுது அல்லது திரும்ப படித்து விடும் பொழுது அல்லது எழுதிப் பார்த்து விடும் போது நமக்கு நாளுக்குநாள் தன்னம்பிக்கை மேம்படும். இதுதான் நம்மை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் பாதை. எப்போதும் படிப்பதை புரிந்து படிக்க வேண்டும் புரிந்து படித்தால் மனப்பாடம் செய்ய வேண்டிய அவசியமில்லை. மேலும் புரிந்து பாடத்திலுள்ள கருத்துக்களை சரியாக அறிந்து படித்தோம் என்றால் அது பசுமரத்தாணி போல எப்போதும் நம் மனதில் நிற்கும்.

    மாதிரி வினாத்தாள்களை வைத்துக்கொண்டு நீங்களாகவே வீட்டில் பொதுத் தேர்வு எழுதுவது போன்று அவ்வப்போது குறிப்பிட்ட நேரத்தில் எழுதிப் பார்ப்பது உங்களுக்கு தேர்வு எழுதும் போது நேர மேலாண்மை சிறப்பாக அமைய உதவும். இந்த பயிற்சி... தேர்வு எல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பது போல மிக இயல்பாக நம்மை தேர்வை எழுதவைக்கும் செய்யும்.

    நம் ஆரோக்கியம் மிக மிக முக்கியம் தேர்வு காலங்களில் அதிக நேரம் கண் விழித்து படித்து தேவையில்லாமல் நம்மை நாமே அதிகப்படியான சோர்வுக்கு உள்ளாக்கி கொள்ளக்கூடாது. நல்ல ஆரோக்கியமான உணவுகளை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். தேர்வு நேரத்தில் அதிக அளவு மூளை உழைப்பு செய்வதால் நமக்கு நன்கு பசி எடுக்கும். எனவே சத்தான ஆகாரம் அவ்வப்போது எடுத்துக் கொள்வது மிக அவசியம். இவற்றையெல்லாம் விட மிக முக்கியம் உற்சாகமான மனோபாவம் தன்னம்பிக்கையுடன் தெளிவான சிந்தனை கொண்டு சிறப்பாக செயல்படுவேன் என்ற உறுதியுடன் ஒவ்வொரு அடியையும் நீங்கள் எடுத்து வைக்க வேண்டும்.

    அடுத்து மிக முக்கியம் தேவையில்லாமல் மற்ற மாணவர்களோடு உங்களை ஒப்பிட்டுப் பார்த்து கொள்ளாதீர்கள். இது உங்களுக்கு அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கையைக் கொடுத்து வீணாக்கி விடலாம்

    அதே நேரத்தில் தேவையற்ற பயத்தை கொடுத்து உங்களை பலவீனப்படுத்தும் விடலாம். இதை முக்கியமாக கவனத்தில் கொள்ளுங்கள். உங்கள் திறமை உங்கள் உழைப்பு இதுவே உங்களுக்கு வெற்றியை தரும் மற்றவர்களை பற்றி கவலை இல்லை என்ற மனோபாவம் இருக்கட்டும். சரியாக நம் திறமைகளை அறிந்து முறையாக திட்டமிட்டு கடினமாக உழைத்தால் வெற்றி என்பது நம் உள்ளங்கையில் தான் இருக்கிறது
    நீரிழிவு உள்ள குழந்தைகள் சரியான நேரத்தில் தேவையான அளவு உணவைச் சாப்பிட வேண்டும். டாக்டர் சொல்லாமல் மாத்திரை அல்லது இன்சுலின் அளவை மாற்றக்கூடாது.
    சில குழந்தைகளுக்கு டைப்-1 நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு அதிகம் என டாக்டர்கள் கூறுகிறார்கள். அதாவது, குழந்தைகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை குறைய ஆரம்பித்துவிட்டால், குழந்தையின் நடத்தையில் மாறுதல்கள் தெரியும். அதிகம் பசிக்கும், வியர்க்கும், படபடப்பு வரும், நாக்கு உலரும், உடல் நடுங்கும், பார்வை குறையும்.

    குறிப்பாக, குழந்தையின் பேச்சு குழறும்; குழப்பமான மனநிலையில் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் மயக்கம் வரும்; சில வேளைகளில் வலிப்பு வரலாம்.

    நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ரத்தச் சர்க்கரை குறைவதன் காரணமாக மயக்கம் ஏற்படும்போது, அவர்களுக்கு எவ்வளவு விரைவில் இனிப்புப் பொருள் கொடுக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு மயக்கம் விரைவில் தெளியும், ஆபத்து குறையும் என டாக்டர்கள் கூறுகிறார்கள்.

    எனவே, நீரிழிவு நோய் உள்ள குழந்தைகளுக்கு மயக்கம் ஏற்பட்டால், உடனே மாவு போலிருக்கும் குளுக்கோஸ் பவுடர், இனிப்பு மாவு போன்றவற்றில் ஒன்றைப் பிசைந்து, நாக்கிலும் பல் ஈறுகளிலும் தடவி, முன்பக்கத் தொண்டையைத் தடவிவிட வேண்டும். இப்படிச் செய்யும்போது, குழந்தை மயக்கத்தில் இருந்தாலும், அந்த இனிப்புப் பொருளை விழுங்கிவிடும். இதனால் மயக்கம் தெளிந்துவிடும். இந்த முதலுதவி தரப்பட வேண்டிய அவசியத்தை பள்ளியிலும் சொல்லிவைப்பது நல்லது என்றும் டாக்டர்கள் கூறுகிறார்கள்.

    எனவே நீரிழிவு உள்ள குழந்தைகள் சரியான நேரத்தில் தேவையான அளவு உணவைச் சாப்பிட வேண்டும். இடைவேளை உணவைத தவிர்க்கக் கூடாது. டாக்டர் சொல்லாமல் மாத்திரை அல்லது இன்சுலின் அளவை மாற்றக்கூடாது. டாக்டர்களின் ஆலோசனைகளை முறையாக முழுமையாக பின்பற்றி நடக்க வேண்டும்.
    குழந்தைகள் 8 வயதாகும்போது ஓரளவுக்கு இந்த உலகம் எப்படி இயங்குகிறது என்பதைப் புரிந்துகொள்ளத் தொடங்குவார்கள். அப்போது அவர்களுக்குப் பணத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.
    நன்றாகப் படித்து, நல்ல வேலையில் இருக்கும் ஒருவரால் முழுமையான பொருளாதார சுதந்திரத்தை எட்ட முடியாமல் போகிறது. அதே சமயம் சுமாராகப் படித்து, நிச்சயம் இல்லாத பணியில் இருக்கும் ஒருவரால் பொருளாதார வசதிகளோடு வாழ முடிகிறது. இதற்கான காரணம், பணத்தை கையாளுவதற்கான அடிப்படை, அவர்களுடைய குழந்தைப் பருவத்திலேயே தொடங்கியிருக்கும் என்பதே. குழந்தைகளுக்கு கல்வியோடு, பணம் குறித்த அறிவை வளர்ப்பதும்  முக்கியமானது. அதற்கான சில வழிகள்:

    இளம் வயதிலேயே தொடங்குங்கள்

    குழந்தைகள் 8 வயதாகும்போது ஓரளவுக்கு இந்த உலகம் எப்படி இயங்குகிறது என்பதைப் புரிந்துகொள்ளத் தொடங்குவார்கள். அப்போது அவர்களுக்குப் பணத்தை அறிமுகப்படுத்த வேண்டும். பணம் என்றால் என்ன, அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை விளக்குங்கள். பணம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் காண்பிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, கடைக்கு செல்கையில் கவுண்டரில் பணம் கொடுக்கும்போது, குழந்தைகளை அருகில் வைத்துக்கொண்டு கற்றுக்கொடுங்கள். இது பணம் குறித்த அடிப்படையை குழந்தைகளுக்குப் புரிய வைக்கும்.

    சேமிக்கும் பழக்கம்

    பணத்தைச் சேமிக்க வேண்டும் என்பதை சிறு வயதில் இருந்தே அவர்களுக்குக் கற்பிப்பது முக்கியம். சேமிப்பு, இலக்கு நிர்ணயம் மற்றும் திட்டமிடல் ஆகியவற்றைக் கற்றுக்கொடுக்கிறது. பாதுகாப்பையும், சுதந்திரத்தையும் உருவாக்குகிறது.

    உண்டியல் கொடுப்பதன் மூலம் உங்கள் குழந்தைகளுக்கு சேமிக்கும் பழக்கத்தைக் கற்றுத்தரலாம். எதிர்காலத்திற்காக அல்லாமல், அவர்கள் விரும்பும் பொம்மை வாங்குவது போன்ற குறுகிய கால இலக்குகளுக்காக சேமிக்கக் கற்றுக்கொடுக்கலாம்.

    பெற்றோரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் வங்கி அல்லது அஞ்சல் அலுவலகச் சேமிப்புக் கணக்கையும் அவர்களுக்குத் தொடங்கித் தரலாம். இதன் மூலம் அவர்களது சேமிப்பு, வட்டியின் மூலம் பெருகும் வழியையும் காட்டலாம்.

    பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குங்கள்

    பிள்ளைகளுக்கென்று சில பொறுப்பான பணிகளை வீட்டில் கொடுங்கள். அதைச் செய்து முடிக்கும்போது மட்டும், அவர்களுக்குப் பாக்கெட் மணி கொடுங்கள். அதுதான் அவர்களின் சம்பளம். ஒவ்வொரு மாதமும் சம்பளத்தை சரியான நேரத்துக்கு அவர்களுடைய வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யுங்கள். இதன் மூலம் எந்தவொரு கெட்ட பழக்கத்தின் பின்பும் உங்கள் குழந்தைகள் செல்ல மாட்டார்கள். சரியானமுறையில்  செலவு செய்வது எப்படி என்று அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

    உதவி செய்வதற்கு ஊக்கப்படுத்துங்கள்

    பிறருக்கு உதவுவதைப் பழக்கமாக மாற்றி அந்த மதிப்பை வளர்க்கலாம். பிறந்த நாள் அல்லது பண்டிகை நாட்களில் குறிப்பிட்ட உதவிகளைச் செய்யும்படி உங்கள் குழந்தைகளை ஊக்கப்படுத்துங்கள். கொடுப்பதன் மூலமாக பணத்தின் மதிப்பை அவர்கள் புரிந்துகொள்வார்கள்.

    பணம் பெருகும் என்பதைக் கற்றுக்கொடுங்கள்

    பணத்தை சேமிப்பது மட்டுமில்லாமல், முதலீடு செய்வது பற்றியும் அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். முதலீடு செய்வது சரியாகப் புரியவில்லை என்றால், அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்கும் புத்தகத்தை உங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
    இந்தியாவின் தலைசிறந்த பேராசிரியர்கள், உலக தரத்திலான சோதனை கூட வசதிகள் இருக்கும் ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்ந்து படிக்க, இந்த ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு வழிகாட்டுகிறது.
    இந்தியாவின் பொறியியல் படிப்புக்கு புகழ்பெற்ற என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.டி. போன்ற கல்வி நிறுவனங்களில் சேர ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு (J.E.E. - Joint Entrance Exam) அவசியமாகிறது. அதுபற்றிய விரிவான விளக்கங்களை வழங்குகிறார், ஸ்ரீராம். தஞ்சாவூரை சேர்ந்தவரான இவர், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி குறித்த வழிகாட்டுதல் பணியை கடந்த 5 வருடமாக, இலவசமாக செய்து வருகிறார். அவரிடம், ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு பற்றிய சிறு நேர்காணல்...

    ஜே.இ.இ.தேர்வு பற்றி கூறுங்கள்?

    இந்தியாவின் தலைசிறந்த பேராசிரியர்கள், உலக தரத்திலான சோதனை கூட வசதிகள் இருக்கும் ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்ந்து படிக்க, இந்த ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு வழிகாட்டுகிறது.

    யாரெல்லாம் எழுதலாம்?

    பிளஸ்-2 வகுப்பில் கணிதம், வேதியியல், இயற்பியல் பாடம் பயின்றவர்கள் யார் வேண்டுமானாலும், தமிழ் உள்பட 13 விருப்ப மொழிகளில் இந்த தேர்வினை எழுதலாம். குறிப்பாக சி.பி.எஸ்.இ., அரசுப்பள்ளி, மெட்ரிக்குலேஷன்... என எல்லா விதமான பாடத்திட்டங்களில் பயின்றவர்களும், இந்த தேர்வினை எழுதலாம்.

    எப்போது, இந்த தேர்வு நடைபெறும்?

    முன்பு ஒரு ஆண்டிற்கு, இரு முறை நடத்தப்பட்ட ஜே.இ.இ.தேர்வு, இப்போது 4 முறை நடத்தப்படுகிறது. பிளஸ்-2 மாணவர்கள், நான்கு முறையும் எழுதலாம். நான்கு தேர்விலும், அதிகபட்ச மதிப்பெண் பெறும் தேர்வினை தகுதியாக எடுத்துக் கொள்வார்கள்.

    இதில் தேர்ச்சி பெற்றால், எங்கெல்லாம் படிக்கலாம்?

    மெட்ராஸ் ஐ.ஐ.டி., திருச்சி என்.ஐ.டி. போன்று இந்தியா முழுக்க இருக்கும் 23 ஐ.ஐ.டி., 31 என்.ஐ.டி., 19 மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், பல தனியார் கல்லூரிகள் என பல கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயில, இந்த தேர்வு வழிவகுக்கும்.

    என்னென்ன பொறியியல் படிப்புகளை படிக்கலாம்?

    60-க்கும் மேற்பட்ட படிப்புகளில் சேர இந்தத் தேர்வு அரிய வாய்ப்பு அளிக்கிறது. பி.டெக். பி.பிளானிங், பி.டிசைன், பி.ஆர்க்., போன்ற இளநிலை பொறியியல் படிப்புகளில் சேரலாம். எம்.பிளானிங், எம்.எஸ்சி., எம்.டெக்., எம்.பி.ஏ., போன்ற இரட்டை பட்டப்படிப்புகளிலும் சேர்ந்து படிக்கலாம். ஒருங்கிணைந்த முதுநிலை படிப்புகளிலும் சேரலாம்.

    பிளஸ்-2 மாணவர்கள் எழுதலாமா?

    ஆம்...! பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள்கூட, எதிர்காலத்தை கட்டமைக்கும் நோக்கில் இத்தேர்வை எழுதலாம். அதேபோல 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்டிலிருந்து தொடர்ந்து மூன்று ஆண்டுகள் இத்தேர்வை எழுதலாம். அதாவது 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்டிலும் அடுத்த இரண்டு ஆண்டுகளிலும் ஜே.இ.இ. தேர்வை எழுத முடியும்.

    தேர்வு நடைமுறை எப்படி இருக்கும்?

    இரண்டு கட்டமாக ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படும். முதல் தேர்வு ஜே.இ.இ. மெயின் (JEE Main) எனப்படுகிறது. இரண்டாம் தேர்வு ஜே.இ.இ. அட்வான்ஸ்ட் (JEE Advanced) என அழைக்கப்படுகிறது. இரண்டும் இரு தாள்களைக் கொண்டது. முதலில் ஜே.இ.இ.மெயின் தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெற்றுவிட்டால், என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. (I.I.I.T-International Institute of Information Technology) நிறுவனங்களில் சேர்ந்து படிக்கலாம். ஆனால் ஐ.ஐ.டி. (I.I.T-Indian Institute of Technology) கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க, ஜே.இ.இ. அட்வான்ஸ்ட் தேர்வையும் முடித்திருக்க வேண்டும்.

    அதாவது... இந்தியாவின் ஒட்டுமொத்த பிளஸ்-2 மாணவர்களில் இருந்து சிறப்பானவர்களை தேர்ந்தெடுக்க ஜே.இ.இ. மெயின் தேர்வு உதவுகிறது என்றால், இதில் தேர்ச்சி பெற்றவர்களில் மிக சிறப்பானவர்களை தேர்ந்தெடுத்து ஐ.ஐ.டி.வளாகங்களுக்குள் அனுப்ப ஜே.இ.இ.அட்வான்ஸ்ட் வழிகாட்டும்.

    வினாத்தாள் தயாரிப்பு எப்படி இருக்கும்?

    300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும். கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடத்திட்டத்தில் இருந்து, தலா 30 கேள்விகள் கேட்கப்படும். அதில் முதல் 20 கேள்விகள், கொள்குறி வினாக்களாக இருக்கும். கடைசி 10 வினாக்கள் கோடிட்ட இடங்களை நிரப்புவதாக இருக்கும். கேட்கப்படும் 90 கேள்விகளில், 75 கேள்விகளுக்கு கட்டாயம் பதில் அளிக்க வேண்டும்.

    தேர்வுக்கு தயாராவது எப்படி?

    சி.பி.எஸ்.சி. மற்றும் மாநில அரசுப்பள்ளிகளின் பாடத்திட்ட அடிப்படையிலேயே கேள்வித்தாள் தயாரிக்கப்படும். கேள்வி-பதில்களை மனப்பாடம் செய்வது, இதுபோன்ற நுழைவு தேர்வுகளில் பலன் தராது. அதேபோல ஏற்கனவே கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களை மட்டும் தயார் செய்தால் போதாது. எந்த விதமான கேள்விக்கும் சுயமாக பதில் அளிக்கும் வகையில் பாடத்தை விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும்.

    * ஜே.இ.இ. மெயின் பற்றி விளக்கமாக கூறுங்கள்?

    இரண்டு தாள்களாக நடத்தப்படும் ஜே.இ.இ. மெயின் (JEE Main) தேர்வில் இரு தாள்களுக்கும் தேர்வு நேரம் 3 மணி நேரம். முதல் தாள் ஆன்லைன் தேர்வாக கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படும். சரியான விடையைத் தேர்வு செய்யும் முறையில் கேள்விகள் அமையும். இதில் கணக்கு, இயற்பியல் மற்றும் வேதியியல் மூன்று பாடங்களுக்கும் சம அளவு மதிப்பெண்கள் ஒதுக்கப்படும். இரண்டாம் தாளில் கணக்கு, வரைபடம் மற்றும் ஆப்டிடியூட் ஆகியவற்றிலிருந்து கேள்விகள் இடம்பெறும். ஆப்டிடியூட் கேள்விகள் சரியான விடையைத் தேர்வு செய்யும் முறையில் இருக்கும். சரியான பதிலுக்கு 4 மதிப்பெண்கள் கிடைக்கும். தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும் (நெகட்டிவ் மார்க்). கேள்விக்கு பதில் அளிக்காமல் விட்டுவிட்டால் மதிப்பெண் குறைப்பு இல்லை. எனவே பதில் தெரியாத கேள்விக்கு பதிலளிப்பதைத் தவிர்த்துவிடலாம்.

    * ஜே.இ.இ. அட்வான்ஸ் பற்றி விளக்குங்கள்?

    ஜே.இ.இ. மெயின் (JEE Main) தேர்வில் வெற்றி பெற்றவர்களில் மதிப்பெண் அடிப்படையில் முதல் 54,453 பேர் மட்டுமே ஜே.இ.இ. அட்வான்ஸ் (JEE Advanced) தேர்வுக்கு தகுதி பெறுவார்கள். ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வு எழுதுபவர்கள் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். 2 ஆண்டுகளுக்குள் ஜே.இ.இ. மெயின் தேர்வில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். முந்தைய ஆண்டிலோ நடப்பு ஆண்டிலோ 12-ம் வகுப்புத் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எந்த ஐ.ஐ.டியிலும் ஏற்கனவே அட்மிஷன் பெற்றிருக்கக் கூடாது.

    * ஜே.இ.இ. தேர்வில் வெற்றிபெறுவது கடினமான விஷயமா?

    இல்லை. சுலபமான ஒன்றுதான். ஆனால் தமிழ்நாட்டு மாணவர்கள் மத்தியில், கடினமான தேர்வு என்ற தவறான புரிதல் இருக்கிறது. அதனால்தான், ஜே.இ.இ. தேர்வு பற்றி தெரிந்தவர்கள்கூட, அதில் பங்கேற்பதில்லை. இன்னும் சில மாணவர்களுக்கு, இப்படி ஒரு தேர்வு இருப்பதே தெரிவதில்லை. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் ஏராளமான மத்திய கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. அதில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு என பிரத்யேக இட ஒதுக்கீடும் இருக்கிறது. இதனால் வருங்கால மாணவர்கள் ஜே.இ.இ.தேர்வில் கவனம் செலுத்த வேண்டும்.

    * சலுகைகள் எதுவும் உண்டா?

    மிகக்குறைந்த கல்வி கட்டணம், உயர்தர அறிவியல் சோதனை கூடங்கள், திறமையான பேராசிரியர்கள், கற்பனை செய்திராத கல்லூரி வாழ்க்கை இவற்றோடு, மாணவர்களுக்கு உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. குறிப்பாக மாற்றுத்திறனாளி மாணவர்கள், பட்டியலின மாணவர்களுக்கு குறைந்த மதிப்பெண்களே, தேர்ச்சிக்கான தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    * பொறியியல் துறையில் வேலைவாய்ப்பு இருக்கிறதா?

    தனியார் கல்லூரி மாணவர்களைவிட, மத்திய கல்வி நிறுவனங்களில் படிக்கும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அரசு/தனியார் துறைகளில் பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது. 3-ம் ஆண்டிலேயே, சம்பந்தப்பட்ட துறை நிறுவனங்களின் நேர்காணல் நடத்தப்பட்டு, மாதம் 50 ஆயிரத்திற்கும் குறைவில்லாத சம்பளத்தில் பணியமர்த்தப்படுகிறார்கள்.

    இரத்தத்தில் தேவையான சிவப்பு இரத்த அணுக்கள் குறையும் பொழுதோ அல்லது ஆக்சிஜனை எடுத்துச் செல்ல போதுமென்ற அளவு ஹீமோகுளோபின் இல்லாத பொழுதோ ஏற்படும் நிலை அனீமியா/இரத்த சோகை எனப்படுகிறது.
    பொதுவாக, இரத்தசோகை, குறைந்த ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தான் ஏற்படுகிறது என்று நினைக்கிறோம். துரதிஷ்டவசமாக இது உண்மையல்ல. இங்கே உங்களுக்காக சில பொதுவான இரத்த சோகைக்கான ஆரம்ப கால அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

    1.வெளிரிய தன்மை

    பொதுவாக ரோஜா நிற கன்னங்களையுடைய குழந்தைகளுக்கு வெளிரிய, மஞ்சள் அல்லது சாம்பல் நிற தோல் மற்றும் கண்களும், இளஞ்சிவப்பு நிறமற்ற உதடுகளும், நகங்களும் இருந்தால் அக்குழந்தைகள் இரத்த சோகையால பாதிக்கப்பட்டிருக்கலாம். கண்களின் வெள்ளைப் பகுதியில் லேசான நீல நிற சுவடு இருப்பது மற்றொரு அறிகுரியாகும். இரத்தசோகையால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு இந்த மாற்றங்கள் மெதுவாகத்தான்  தெரிய தொடங்கும் என்பதால், அதற்கான மற்ற அறிகுறிகளையும் காண்போம்.

    2.நிலையான உடல் சோர்வு

    இரத்தசோகையுடைய குழந்தைகள் எளிதாக உடல் சோர்வடைவர். அவர்களுக்கு தூக்க கலக்கம், லேசான தலைசுற்றல், வேகமான இதய துடிப்பு, மூச்சு திணறல் அல்லது மூச்சிறைப்பு போன்றவை ஏற்படலாம். கடினமான, உடல் உழைப்பு தேவைப்படும் எந்த வேலையையும் அவர்களால் செய்யவோ, ஓடி ஆடி விளையாடவோ முடியாது. சாதரணமாக படியேறுவதைக்கூட அவர்கள் மிகவும் சிரமமாக உணர்வார்கள்.

    3.மாறான உணவு ஆசை

    இயற்கையாகவே நம் உடலில் எதவாது சத்து குறைபாடு ஏற்பட்டால் அந்த குறைப்பாட்டை சரி செய்யும் விதமாக அது சம்பந்தப்பட்ட உணவுக்காக அடங்காத ஆசை ஏற்படும். அதனால் தான் குழந்தைகள் வினோதமாக களிமண், தூசி, சோளமாவு, ஐஸ் போன்றவைகளை உண்ண அதிக ஆர்வத்தை காண்பிக்கின்றனர். இது உடலில் ஏற்பட்டுள்ள இரும்புச்சத்து குறைபாட்டினால் கூட இருக்கலாம். இம்மாதிரி உணர்வை ஆங்கிலத்தில் ‘பிகா’ என்று கூறுகின்றனர்.

    4.தாமதமான வளர்ச்சி மற்றும் முன்னேற்றம்

    தாமதமான வளர்ச்சி, நடத்தையில் பிரச்சினைகளான கவனக் குறைவு, குறையும் மோட்டார் திறன்கள், சமூக தொடர்பின்மை போன்றவை இரத்த சோகை சம்பந்தப்பட்டவை ஆகும். இவையனைத்தும் சேர்ந்து குறைந்த ஆற்றல் நிலை, மற்றும் கற்பதில் பிரச்சினை ஆகியவற்றிற்கும் இட்டுச் செல்லும்.

    5.குணமடைவதில் தாமதம்

    இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு காயங்கள், பழுதடைந்த திசுக்கள் குணமாக தாமதமாகும். உடல்நலக் குறைவு அடிக்கடி உண்டாகும். சிவப்பு இரத்த அணுக்களால் ஆன்டிபாடிகளை  எடுத்துச் செல்ல முடியாததால் குழந்தைகளுக்கு எளிதாக தொற்று ஏற்படும். காயங்கள் குணமடைய தாமதமாகி, நாட்கணக்கில் காயங்களுடன் இருக்க வைக்கிறது.
     
    6.மற்ற அறிகுறிகள்

    இரத்தசோகையுடைய குழந்தைகளிடம் காணப்படும் மற்ற அறிகுறிகள் நாக்கில் வீக்கம், புண், எரிச்சல், தீராத தலைவலி, விரிவான மண்ணீரல்(ஸ்ப்லீன்), மஞ்சட்காமாலை நோய் மற்றும் தேநீர்- நிற சிறு நீர் போன்றவை ஆகும்.

    இரத்தசோகையை கண்டறிவது எப்படி

    இரத்தசோகையால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை மேற்கூறிய அனைத்து அறிகுறிகளையும் கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. ஆனால் இதில் ஏதாவது ஒன்று காணப்பட்டால் கூட கண்டிப்பாக அக்குழந்தையை குழந்தை நல மருத்துவரிடம் கூட்டிச்சென்று, இரத்தசோகை இருப்பதற்கான மருத்துவ பரிசோதனை செய்து கண்டுப்பிடித்தல் அவசியம்.

    இரத்தசோகை பல காரணங்களால் உண்டாவதால், அந்நோயின் தீவிரத்தை பொறுத்து மருத்துவர் அதற்கான பரிசோதனை முறையை பரிந்துரை செய்வார். முழுமையான இரத்த எண்ணிக்கை பரிசோதனை, இரத்த ஸ்மியர் பரிசோதனை, இரும்புச்சத்து பரிசோதனை, ஹீமோக்ளோபின் எலக்ட்ரோப்ஹோரெசிஸ், எலும்பு மஜ்ஜை ஆஸ்பிரேஷன் மற்றும் திசு பரிசோதனை போன்றவைகளால் இந்த நோயை கண்டறிய முடியும்.

    இரத்தசோகை என்னும் நோய் இருப்பதை ஆரம்ப காலக் கட்டத்தில் கண்டறிவதன மூலம் அதனால் ஏற்படும் விபரீத விளைவுகளை தடுத்து எளிதில் குணமாக்கி விடலாம்.
    ×