என் மலர்
குழந்தை பராமரிப்பு
குழந்தைகளுக்கு ஏதேனும் காரணத்தினால் பல்லில் தொற்று ஏற்பட்டால், அறிகுறிகளை கண்டுபிடித்து பல் மருத்துவரிடம் உடனடியாக காண்பிக்க வேண்டும்.
பல்வலி என்பது மிக கொடுமையானது மற்றும் மன அழுத்தம் தருவது, அதுவும் குழந்தைகளுக்கு பல்லில் தொற்று ஏற்பட்டால், கேட்க வேண்டியதில்லை. சரியான நேரத்தில் பற்சிதைவை குணப்படுத்தாவிட்டால், பல்லை முற்றிலும் அழிக்கும் வல்லமை கொண்டது! குழந்தைகளை பொறுத்தவரை, பற்களை சரியாக விலக்கினால், பற்சிதைவை தவிர்க்கலாம். ஏதேனும் காரணத்தினால் குழந்தைகளுக்கு பல்லில் தொற்று ஏற்பட்டால், அறிகுறிகளை கண்டுபிடித்து பல் மருத்துவரிடம் உடனடியாக காண்பிக்க வேண்டும். உங்கள் குழந்தை பற்சிதைவினால் அவதிப்படுகிறது என்பதை அறிய சில அறிகுறிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
1. சூடான அல்லது குளிர்ந்த உணவை உண்ணும் போது, உங்கள் குழந்தை கூசுகிறது என்று சொன்னால், அது ஆபத்தின் அறிகுறி. பற்களில் அல்லது ஈறுகளில் ஏதேனும் தொற்று இருப்பதை அது உணர்த்துகிறது. இதனால் உணவை கடிக்கும் பொழுது அல்லது மெல்லும் பொழுது பல்லில் கூச்சம் அல்லது வலி ஏற்படும்.
2. பல் தொற்றின் ஆரம்ப நலை வாய் துர்நாற்றம் உங்கள் குழந்தைக்கு வாயில் துர்நாற்றம் அடித்தால் அவரது வாயில் தொற்று இருக்க நிறைய வாய்புண்டு. அப்படி இருக்கும் பொழுது, உங்கள் குழந்தையின் வாயை நன்றாக கழுவவும். தொற்றினால் வாயில் கசப்புத்தன்மை ஏற்படலாம். பல்லில் தோற்று ஏற்பட்டதற்கு கசப்பு தன்மை மற்றொரு அறிகுறி. வாயை கழுவிய பின்பும் துர்நாற்றம் அடித்தால், குழந்தையை மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும்.
3. உங்கள் குழந்தை பற்களில் தொல்லை என்று சொன்னால், முதலில் ஈறுகளை சரிபாருங்கள். ஈறுகள் முழுவதும் இளம் சிவப்பு நிறத்தில் இருந்தால் அது நலம். சில இடங்கள் வீக்கமடைந்தோ அல்லது அடர்ந்த சிவப்பு நிறத்தில் இருந்தால் அது தொற்றின் அறிகுறி.
4. நெடு நாட்களுக்கு தொற்று இருந்தால், சிறிய கருப்புபுள்ளி வளர்ந்து விடும். மற்ற பற்களை விட அந்த பல் அடர்ந்த நிறத்தில் தெரியும். உங்கள் குழந்தையின் பற்களை அவ்வப்போது இந்த அறிகுறிக்காக பாருங்கள்.
5. உங்கள் குழந்தை பல்லில் குத்தும் வலி இருக்கிறது என்று சொன்னால், அது பற்சிதைவாக இருக்கலாம். தொற்று ஆழமாக சென்றால், அது பெரிய தொல்லை ஏனென்றால் எதை உண்டாலும் கடுமையான வலி ஏற்படும். அந்த மாதிரி நேரத்தில் பல் மருத்துவரை பார்த்தால் அவசியம்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக பொம்மைகள் வாங்கும் பொழுது சில பாதுகாப்பான விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும். அதில் சிலவற்றை இங்கே காணலாம்:
குழந்தைப் பருவத்தில் நாம் அனைவரும் கடந்து வந்தவை பொம்மைகள். சரியான பொம்மைகள் குழந்தைகளின் கற்பனை மற்றும் ஒருங்கிணைப்பை வளர்க்க உதவும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக பொம்மைகள் வாங்கும் பொழுது சில பாதுகாப்பான விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும். அதில் சிலவற்றை இங்கே காணலாம்:
1) அனைத்து பொம்மைகளிலும், ‘லேபிள்கள்’ ஒட்டப்பட்டிருக்கும். அதனைத் தெளிவாக படித்த பின்னரே பொம்மைகள் வாங்க வேண்டும். அதில் எவ்வாறு பொம்மையை பயன்படுத்தலாம், எவ்வாறு பயன்படுத்தக் கூடாது போன்ற தகவல்கள் இருக்கும். அதனை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
2) பொம்மைகள் வாங்கும் போது எந்த வயது வரை அந்த பொம்மையை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். இதைப் பார்த்து குழந்தைகளின் வயதிற்கு ஏற்றார் போல தகுந்த பொம்மையை வாங்கித் தர வேண்டும்.
3) சிறிய பாகங்கள் கொண்ட பொம்மைகள், எளிதாக குழந்தைகளின் தொண்டையில் மாட்டிக் கொள்ளும் அபாயம் கொண்டவை. அதனால், குழந்தைகளின் வாயை விட, குறைந்தது 3 சென்டிமீட்டர் விட்டம் மற்றும் 6 சென்டிமீட்டர் நீளம் இருப்பது போன்ற பாகங்கள் கொண்ட பொம்மைகளையே வாங்க வேண்டும்.
4) பொம்மைகளின் பாகங்கள் அனைத்தும் உறுதியாக மற்றும் வலுவாக இருக்கிறதா? என்று சோதனை செய்ய வேண்டும். இல்லையென்றால் அந்த பாகங்கள் எளிதில் உடைந்து குழந்தைகளுக்கு காயம் ஏற்படுத்தலாம்.
5) சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பொம்மைகளை வாங்கித் தர வேண்டும். பிளாஸ்டிக்கைத் தவிர்த்து மறுசுழற்சி செய்யப்பட்ட அல்லது சுற்றுச்சூழலை பாதிக்காதப் பொருளால் செய்யப்பட்ட பொம்மைகளை வாங்கித் தரலாம்.
6) சிறிய வயதில் குழந்தைகளின் நினைவாற்றல் அதிகமாக இருக்கும் என்பதால், கற்றல் திறனை வளர்க்கும் விளையாட்டு பொம்மைகளை வாங்கித் தரலாம். அது அவர்களின் கற்பனைத் திறன் மற்றும் படைப்பாற்றலை அதிகரிக்கும்.
7) சிறிய பேட்டரி மற்றும் காந்தம் போன்ற பாகங்கள் கொண்ட பொம்மைகளை வைத்து விளையாடும் போது, அந்த பேட்டரிகள் கையில் கிடைத்தால், குழந்தைகள் வாயில் போட்டுவிடுவார்கள். அதனால் பேட்டரிகள் மற்றும் மேக்னட்கள் உறுதியாக மற்றும் வலுவாக பொருத்தப்பட்டு இருக்கிறதா? என்பதை பரிசோதிக்க வேண்டும்.
பொம்மைகள் வாங்கும் போது தவிர்க்க வேண்டியவை:
1) பொம்மைகளில் தீட்டப்பட்ட வண்ணங்கள், குழந்தைகள் வாயில் எளிதாக கரையக்கூடும். அத்தகைய பொம்மைகளைத் தவிர்க்க வேண்டும்.
2) மெல்லிய பிளாஸ்டிக் பொம்மைகள் வாங்கினால் அது எளிதில் உடைந்து, கூர்மையான பகுதிகளாக மாறி குழந்தைகளுக்கு காயம் ஏற்படுத்தும். பெரும்பாலும் பிளாஸ்டிக் பொம்மைகளைத் தவிர்ப்பது நல்லது.
3) அதீத சத்தம் வெளிப்படுத்தும் பொம்மைகள் குழந்தைகளுக்கு பய உணர்வை தரும். எனவே அவற்றை தவிர்க்க வேண்டும்.
4) மின்சாரத்தால் இயங்கும் பொம்மைகளைத் தவிர்க்கவும்.

குழந்தைகளின் படைப்பாற்றலைக் கட்டுப்படுத்தாத சூழல் இருந்தால், முடிவுகள் எப்போதும் வியக்க வைக்கும் என்பதற்கு மாஜாவ் முன்னுதாரணமாக திகழ்கிறார்.
பள்ளிக் குழந்தைகள் சந்திக்கும் கொடுமை மற்றும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட, புதிய செயலி ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார் அசாம் மாநிலம் ஷில்லாங் அடுத்த சிலிகான் பள்ளத்தாக்கைச் சேர்ந்த 10 வயது சிறுமி மாய் மாய் மெய்தாபகுன் மாஜாவ்.
இளம் புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கான உலக அளவிலான போட்டியில் 7 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதில், 26 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 26 பேரில் 22 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள 4 பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். இதில் மாஜாவ் உருவாக்கிய செயலி, அனைவரையும் கவர்ந்துள்ளது. மழலையர் பள்ளியிலிருந்து 2-ம் வகுப்பு வரை தமக்கு ஏற்பட்ட மன அழுத்தமே இத்தகைய செயலியை உருவாக்கக் காரணமாக இருந்ததாக மாஜாவ் தெரிவிக்கிறார்.
இந்தச் செயலியின் மூலம் தங்கள் பிரச்சினையைப் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் மாணவர்கள் பகிர்ந்துகொள்ள முடியும். எத்தகைய பிரச்சினை என்று குறிப்பிட்டே அவர்கள் பகிர்ந்துகொண்டு, அதற்கான தீர்வு காண முடியும். இதனால் மன அழுத்தத்திலிருந்து அவர்கள் முழுமையாக வெளியே வர முடியும் என்று நம்பிக்கையாடு கூறுகிறார் மாஜாவ்.
குழந்தைகளின் படைப்பாற்றலைக் கட்டுப்படுத்தாத சூழல் இருந்தால், முடிவுகள் எப்போதும் வியக்க வைக்கும் என்பதற்கு மாஜாவ் முன்னுதாரணமாக திகழ்கிறார்.
இளம் புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கான உலக அளவிலான போட்டியில் 7 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதில், 26 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 26 பேரில் 22 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள 4 பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். இதில் மாஜாவ் உருவாக்கிய செயலி, அனைவரையும் கவர்ந்துள்ளது. மழலையர் பள்ளியிலிருந்து 2-ம் வகுப்பு வரை தமக்கு ஏற்பட்ட மன அழுத்தமே இத்தகைய செயலியை உருவாக்கக் காரணமாக இருந்ததாக மாஜாவ் தெரிவிக்கிறார்.
இந்தச் செயலியின் மூலம் தங்கள் பிரச்சினையைப் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் மாணவர்கள் பகிர்ந்துகொள்ள முடியும். எத்தகைய பிரச்சினை என்று குறிப்பிட்டே அவர்கள் பகிர்ந்துகொண்டு, அதற்கான தீர்வு காண முடியும். இதனால் மன அழுத்தத்திலிருந்து அவர்கள் முழுமையாக வெளியே வர முடியும் என்று நம்பிக்கையாடு கூறுகிறார் மாஜாவ்.
குழந்தைகளின் படைப்பாற்றலைக் கட்டுப்படுத்தாத சூழல் இருந்தால், முடிவுகள் எப்போதும் வியக்க வைக்கும் என்பதற்கு மாஜாவ் முன்னுதாரணமாக திகழ்கிறார்.
குழந்தைகளை அவர்களின் இயல்பில் வளர விடாமல், சாவி கொடுத்தால் ஓடும் பொம்மை போல வளர்க்கிறார்கள். இதற்காக சில பெற்றோர்கள் தனக்கு தெரிந்தவற்றையெல்லாம் குழந்தைகளிடம் திணிக்கிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அதனால் குழந்தைகளை வேலைக்காரர்களின் பொறுப்பிலோ, மழலையர் விடுதிகளின் பொறுப்பிலோ விட்டு விடுகின்றனர். அந்த குழந்தை பெற்றோர்களின் அன்புக்காக ஏங்குகிறது.அதிலும் பதின்ம வயது குழந்தைகளை வளர்ப்பது பெரும் சவாலாகவே உள்ளது.
தங்களுடைய நண்பர்களுக்குத் தான் எல்லாம் தெரியும் என நினைக்கும் பருவம். பெரும்பாலான பெற்றோர்கள் அவர்கள் கூறுவதை காது கொடுத்து கேட்க மறுக்கிறார்கள். பருவ வயது தடுமாறுவதற்கு காரணம் இணையம் எனும் இணையில்லாக் கருவி என்று சொன்னால் மிகையாகாது.அந்த நாளில் பெரியவர்கள் தங்கள் அனுபவத்தால் குழந்தைகளை வளர்த்தார்கள். ஆனால் இன்று அறிவியலால் குழந்தைகள் வளர்கிறார்கள். அதனால் இதில் குழந்தைகளிடையே சில ஏற்றத் தாழ்வுகள் இயல்பாகவே உள்ளது.
இன்றைய நிலையில் குழந்தைகள் வெளியே சென்று விளையாடுவது இல்லை. எந்நேரமும் கையில் தவழும் அலைபேசியோடு பொழுதைக் கழிக்கிறார்கள். திரையரங்கமும், தொலைக்காட்சியும் அலைபேசியில் அடங்கி விட்டது. ஓடி ஆடி விளையாட வேண்டிய வயதில் அலைபேசியோடு விளையாடுவதால் அவர்களின் உடலும், உள்ளமும் பாதிக்கப்படுகிறது.குழந்தைகளின் அழுகையை நிறுத்த பொம்மைகளை கொடுத்த காலம் மாறி, விலை உயர்ந்த அலைபேசியை கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அன்றைய காலத்தில் வீட்டில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்கள். ஆனால் இன்றோ ஆளுக்கொரு அலைபேசியோடு பேசிக்கொண்டும், பார்த்துக் கொண்டும் இருக்கிறார்கள். அதனால் குடும்ப உறவுகளுக்கும் விரிசல்கள் உண்டாகிறது.

குடும்பத்தில் மூத்த குழந்தைக்கும், இளைய குழந்தைக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்படுவது தவிர்க்க முடியாதது. பெற்றோர் சரியான விதத்தில் கையாண்டால் இதனை எளிதாக தீர்க்கலாம்.
குடும்பத்தில் மூத்த குழந்தைக்கும், இளைய குழந்தைக்கும் அதிக வயது வித்தியாசம் இருக்கும்போது, அவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்படுவது தவிர்க்க முடியாதது. பெற்றோர் சரியான விதத்தில் கையாண்டால் இதனை எளிதாக தீர்க்கலாம். அதற்கு சில வழிகள்:
பொறுப்பை உணர்த்துங்கள்:
ஒரே குழந்தையாக பல வசதிகளை அனுபவித்து வளரும் இடத்தில், இன்னொரு குழந்தை வரும்போது, இயற்கையாகவே பொறாமை ஏற்படும். இரண்டாவது குழந்தையின் மீது பெற்றோர் செலுத்தும் அக்கறையும், அன்பும் மூத்த குழந்தைக்கு இளைய சகோதர, சகோதரிகள் மீது வெறுப்பு ஏற்பட வைக்கும். இந்த நிலையை மாற்றுவதற்கு இளைய குழந்தையின் தேவையைக் கவனிக்கும் பொறுப்பை, மூத்த குழந்தையிடம் ஒப்படையுங்கள். இதன் மூலம் மூத்த குழந்தை இயல்பாக, இளைய குழந்தையிடம் பழகும்.
முக்கிய தருணங்களை ஏற்படுத்துங்கள்:
வீட்டில் சாதாரணமாக இருக்கும் நாட்களில்கூட, இரு குழந்தைகளுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையிலான தருணங்களை உருவாக்குங்கள். விளையாட்டுகள், வீட்டு விசேஷங்கள் போன்ற சமயங்களில் இரு குழந்தைகளையும் ஒரு அணியாக இணைந்து பங்கேற்கச் செய்யுங்கள். இதன் மூலம் இருவரிடையேயும் புரிதல் ஏற்படும். விட்டுக் கொடுத்துச் செல்லும் மனப்பான்மையும், மூத்த குழந்தைக்குத் தனது சகோதர, சகோதரிக்குக் கற்று தரும் பண்பும் மேம்படும். இதன் விளைவாக கருத்து வேறுபாடு மறைந்து இணக்கமான சூழல் ஏற்படும்.
போட்டியில் பங்கேற்கச் செய்யுங்கள்:
கல்வி நிறுவனங்கள், அமைப்புகள் நடத்தும் போட்டிகளில் குழந்தைகளை பங்கேற்கச் செய்யலாம். அந்த சமயத்தில், போட்டிக்கு தயாராவதற்கு ஒரு குழந்தை, மற்றொரு குழந்தைக்கு உதவி செய்ய வேண்டும். இதன் காரணமாக இருவரிடையேயும் கற்றுக் கொடுக்கும் பண்பும், பொறுப்புணர்வும் ஏற்படும்.
நண்பர்களாக்குங்கள்:
குழந்தைகளிடம் பழகும்போது, பெற்றோர் என்ற உணர்வுடன் பழகாமல், அவர்களின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொள்ளும் வகையில், நண்பர்களாக மாற வேண்டும். இரு குழந்தைகளுக்குள் உள்ள கருத்து வேறுபாட்டைக் களையவும் இதே உத்தியைப் பயன்படுத்தலாம். அவர்களைச் சகோதரர்கள் என்ற வட்டத்தில் இருந்து வெளிக்கொண்டு வந்து, நண்பர்களாக பழக முயற்சி செய்யுங்கள். இதன் மூலம் இருவருக்குமிடையே எப்போதும், சிறந்த தகவல் பரிமாற்றம் ஏற்படும். இது எதிர்காலத்தில் இருவருக்கும் இடையேயான புரிதலுக்கு வழிவகுக்கும்.
பாராட்டி, பரிசளிக்க வையுங்கள்:
இரு குழந்தைகளையும், வயது வித்தியாசம் காரணமாகக்கூட வேறுபடுத்திப் பார்க்காதீர்கள். மூத்த குழந்தை வளர்ந்திருந்தாலும், இளைய குழந்தை என்று வரும்போது, மனதிற்குள் பொறாமை குணம் எட்டி பார்க்கும். எனவே, பெற்றோர் இதைக் கவனமுடன் கையாள வேண்டும். இரு குழந்தைகளும் சிறந்த செயல்கள் செய்யும்போது, ஒரு குழந்தை மூலம் மற்றொரு குழந்தைக்குப் பரிசளித்துப் பாராட்டச் செய்யுங்கள். இது அவர்களுக்குள் தன்னம்பிக்கையை வளர்க்கும். பொறாமைக் குணத்தை நீக்கும். மேலும், உத்வேகத்துடன் செயல்பட வைக்கும்.
குழந்தைகளின் எண்ணத்தைப் புரிந்து சிறிய விஷயங்களில் மாற்றம் செய்தால், இரு குழந்தைகளுக்கும் இடையே வயது வித்தியாசம் என்பது கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தாது.

குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் தேவையான ஊட்டச்சத்து தேவைகள் மாறுபடும். எனவே, குழந்தைகளுக்கு எந்த பழங்களை கொடுக்கலாம் என்று தெரிந்துக் கொள்வோம்.
பழங்கள் அனைவருக்கும் ஆரோக்கியத்தைக் கொடுக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். வெவ்வேறு வண்ணப் பழங்கள் வெவ்வேறு ஊட்டச்சத்துக்களையும், வெவ்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன.
குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் தேவையான ஊட்டச்சத்து தேவைகள் மாறுபடும். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வண்ணங்களில் பலவிதமான பழங்களை நாம் சாப்பிடுவது முக்கியம். எனவே, குழந்தைகளுக்கு எந்தெந்தப் பழங்களை கொடுக்கலாம் என்று தெரிந்துக் கொள்வோம்.
ஸ்ட்ராபெர்ரி, தர்பூசணி, ராஸ்பெர்ரி, செர்ரி, ஆப்பிள், ஆரஞ்சு, மாம்பழம், பீச், ஆப்ரிகாட், அன்னாசி, வாழைப்பழம், எலுமிச்சை, கிவி, ஆப்பிள், திராட்சை, பேரிக்காய், நெல்லிக்காய், பிளம்ஸ், திராட்சை (Variety of Fruits) என பல பழங்களையும் கொடுக்கலாம்.
சரி, குழந்தைகளுக்கு பழமாகக் கொடுக்கலாமா? அல்லது சாறு பிழிந்து அதன் சத்துக்களை மட்டும் கொடுக்கலாமா என்ற சந்தேகமும் எழுகிறது.
இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பழங்களாகவே கொடுக்கலாம். ஆனால், குழந்தைகள் சாப்பிடமாட்டார்களோ என்ற சந்தேகத்திலேயே பெற்றோர் சாறு வடிவில் பழங்களைக் கொடுக்கின்றனர். அதேபோல், குழந்தைகள் வளர வளர, அவர்கள் பழங்களை உண்ணும் அளவும் குறைந்து போய்விடுகிறது.
பொதுவாக பழச்சாறுகளில் அதிக ஆற்றல் இருந்தாலும், பழத்தின் அடிப்படை நன்மையான நார்ச்சத்து (Fibre in Fruit) குறைந்துவிடுவதால், முழுப் பயனும் கிடைப்பதில்லை. இதனால், பற்கள் சேதமடையும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
எனவே, பழத்தை சாறாக கொடுப்பதைவிட, அப்படியே சாப்பிட பழக்க வேண்டும்.அதேபோல, புதியதாக விளைந்த பழங்கள் கிடைக்கவில்லை என்றால், உலர் பழங்களையாவது கொடுக்கவேண்டும்.
பழங்களை குழந்தைகளுக்கு கொடுப்பது தொடர்பான தவறான கருத்துக்களும் கட்டுக்கதைகளும் உலா வருகின்றன. சர்க்கரைச்சத்து அதிகமாக இருப்பதால், பழங்களை குழந்தைகளுக்கு குறைவாக கொடுப்பதை உதாரணமாக சொல்லலாம். குழந்தைகளின் பற்கள் சேதமடைந்துவிடும் என்பதால், பழங்களை கொடுக்காமல் இருக்கின்றனர்.
உண்மையில் இது தவறான எண்ணம் ஆகும். பழங்களில் உள்ள சர்க்கரையானது, செயற்கை சர்க்கரையைப்போல, தீங்கு செய்வதில்லை. பழங்களில் சர்க்கரைச் சத்து மட்டுமல்ல, வேறுபல முக்கியமான ஊட்டச்சத்துக்களும் உள்ளன.
பழங்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள், குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது என்பதோடு, நோய் மற்றும் தொற்றுநோயிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது.
சில பெற்றோர்கள் அதிக கண்டிப்போடு நடந்து கொள்வார்கள். இதனால் பிள்ளைகளிடம் சிந்திக்கும் திறன் குறைந்து எப்போதும் சரியான முடிவு எடுக்க முடியாமல் திணறுவார்கள்.
சிலருக்கு எதற்கொடுத்தாலும் பதற்றம் ஏற்படும். அதன் காரணமாக பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். இதை ஆரம்ப நிலையிலேயே கவனித்து சரி செய்யாவிட்டால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்புகளை உண்டாக்கும்.
ஒரு விஷயத்தில் அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பு வைத்து ஏமாறுவது, சமூக வலைத்தளங்களில் ஆதிக்கம், மன அழுத்தம், பயப்பட வைக்கும் சூழல், பெற்றோரிடம் இருந்து வரும் மறுப்பு போன்ற பல காரணங்களால் பதற்றம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இந்த பிரச்சனையை ஆரம்பத்திலேயே சரியான முறையில் கையாண்டால் எளிதாக குணப்படுத்த முடியும். அதற்கான சில வழிகள்...
சில பெற்றோர்கள் அதிக கண்டிப்போடு நடந்து கொள்வார்கள். இதனால் பிள்ளைகளிடம் சிந்திக்கும் திறன் குறைந்து எப்போதும் சரியான முடிவு எடுக்க முடியாமல் திணறுவார்கள்.
உணவு முதல் உடைகள் வரை அனைத்திலும் பிள்ளைகளின் விருப்பத்தையே முன்னிறுத்த வேண்டும். இந்த மாற்றத்தால் அவர்களுக்கு தன்னம்பிக்கை உருவாகும்.
பதற்ற உணர்வு நீடிக்கும் போது சிலர் திறமை இருந்தும் வெளிப்படுத்துவதில் தயக்கத்துடன் இருப்பார்கள். பதற்றத்துடன் பயமும் அதிகரிக்கும் போது எதையும் கூர்ந்து கவனிக்க முடியாக நிலை ஏற்படும். பள்ளியில் நடத்தும் பாடங்களில் ஆர்வம் குறையும். இதை தவிர்பபத்ற்கு தியானம், யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபடுமாறு பிள்ளைகளை ஊக்குவிக்க வேண்டும்.
வளர் இளம் பருவத்தில் உள்ள பிள்ளைகளை அவர்களுக்கு தெரியாமல் கவனிப்பது அவசியம். வழக்கமான செயல்களில் மாறுபாடு தெரிந்தால் இயல்பாக பேசி பிரச்சனையின் தீவிரத்தை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். பின்பு அதற்கான தீர்வை கூறி அவர்களே செயல்படுத்தும் படி தேவையான ஆலோசனையை வழங்கலாம்.
இதனால் அவர்களுக்குள் தன்னம்பிக்கையை வளர்க்க முடியும்.
வளர் இளம் பருவத்தில் இருக்கும் பிள்ளைகளுக்கு புரோட்டீன் வைட்டமின்கள் நிறைந்த சத்துள்ள உணவு அவசியமாகும். அதேபோல் போதுமான உறக்கமும் தேவை. இரவு நீண்ட நேரம் விழித்திருப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் மனதில் புத்துணர்வை ஏற்படுத்த முடியும்.
வளர்இளம் பருவத்தில் இருப்பவர்கள் ஒன்றின் மீது நீண்ட நேரம் கவனம் செலுத்த முடியாது. எனவே இடையிடையே மனதை இலகுவாக்கும் பயிற்சிகளில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும். செல்ல பிராணிகளை குளிக்க வைப்பது, நடைப்பயிற்சிக்கு அழைத்து செல்வது, வீட்டு வேலைகளில் ஈடுபடுவது என தினம் ஒரு பயிற்சியில் ஈடுபடுவது மனதை இலகுவாக்கும்.

இதுவரை பள்ளிக்கு சென்று மட்டுமே படித்துக் கொண்டிருந்த பிள்ளைகள், ஆசிரியர் முன் தன்னுடைய கவனத்தை வைத்திருந்த பிள்ளைகள், இன்று நம் கணினியின் திரை முன் தன்னுடைய கவனத்தை வைக்க வேண்டியிருக்கிறது.
‘ஆன்-லைன்‘ கல்வி என்ற புதிய டிஜிட்டல் கல்வி முறையுடன் போராடிக் கொண்டு இருக்கிறோம். ‘ஆன்-லைன்‘ கல்வியால் நமக்கு ஏற்படும் உளவியல் ரீதியான சிக்கல்கள் என்ன?. அதை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்? இப்புதிய கல்வி முறையினால் ஏற்பட போகும் நன்மைகள் அல்லது தீமைகள் என்னவென்று அலச போகிறோம்.
நன்மைகள்
நன்மைகள் என்று எடுத்துக்கொண்டால், யார் வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் இருந்து இந்த கல்வியைப் பயில இயலும். தான் வேறு துறையை சார்ந்தவராக இருப்பினும், தான் விரும்பும் மற்றொரு துறையின் படிப்பையும் படிக்க இயலும்.
ஆனால், பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு இது எப்படி இருக்கிறது?. அவர்களுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு இது எப்படி இருக்கிறது?. இதை பெற்றோர்கள் எப்படி பார்க்கிறார்கள்?. இதை நாம் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
வித்தியாசமான அனுபவம்
இதுவரை பள்ளிக்கு சென்று மட்டுமே படித்துக் கொண்டிருந்த பிள்ளைகள், ஆசிரியர் முன் தன்னுடைய கவனத்தை வைத்திருந்த பிள்ளைகள், இன்று நம் கணினியின் திரை முன் தன்னுடைய கவனத்தை வைக்க வேண்டியிருக்கிறது.
இது அவர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. மேலும், இவர்களுக்கு பள்ளி செல்லும் காலங்களில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் இதற்கு தயாராகிறார்கள். ஆனால், இந்த ‘ஆன்-லைன்‘ கல்வியில் மேற்கூறியவற்றுக்கு எதற்கும் தேவை கிடையாது. உனக்கு ஒரு கணினி மட்டுமே தேவை. அதற்கு முன் இருக்க வேண்டியது அவசியமே தவிர வேறு எதுவும் அவசியமில்லை.
கவன சிதறல்
இந்த சூழ்நிலையில் அவர்களுக்கு ஒரு முன்தயாரிப்பு, அதாவது பள்ளி செல்லும் பிரிபரேஷன் கிடையாது. பள்ளிச் சூழலில் தனக்கு அருகாமையில் தன்னுடைய தோழனோ, தோழியோ இருப்பார்கள். ஆனால், எதுவுமே இல்லாமல் வீட்டில் வித்தியாசமான சூழ்நிலையில், அம்மா, அப்பா அங்கே பேசிக்கொண்டிருப்பார்கள். சகோதரனோ, சகோதரியோ டி.வி. பார்த்துக் கொண்டிருப்பார்கள். தாத்தா, பாட்டி பேசிக்கொண்டிருப்பார்கள். இந்த சூழ்நிலையில்தான் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
இந்த சூழலில் ‘ஆன்-லைன்’ மூலம் கல்வி கற்பது, பிள்ளைகளுக்கு சற்று கடினமாக இருக்கும். மேலும் கவன சிதறல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
சந்தேகத்தை போக்க...
கணினியின் திரையில் அவர்கள் முகமும், மற்ற தோழர்கள் முகமும் நேராக தெரிகிறது. அப்போது ஆசிரியர் என்ன சொல்கிறார் என்பதைக் காட்டிலும், தோழனோ, தோழியோ என்ன செய்கிறார்கள்?, அவர்கள் வேறு எப்படி இருக்கிறார்கள்? என்பதையே மனம் கவனிக்க செல்கிறது.
பள்ளிக் கூடத்தில் உட்கார்ந்து இருக்கும்பொழுது, பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் நண்பரிடமும், தோழிகளிடமும் தன்னுடைய சந்தேகங்களை கேட்க வாய்ப்பிருக்கிறது ஆனால், இப்போது அதற்கான வாய்ப்பு இல்லை.
கால அட்டவணை
இது பிள்ளைகளின் பிரச்சினை என்றால், ஆசிரியர்களின் பிரச்சினை என்ன?. பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்கள் அந்த எட்டு மணி நேரம் ஒரு ஆசிரியராக மட்டுமே இருந்தார்கள். ஆனால், இன்றைய சூழலில் ஒரு ஆசிரியை தாயாகவும், மனைவியாகவும், சகோதரியாகவும் அல்லது தகப்பனாகவும் பணியாற்ற வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. அதாவது குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு, அதே நேரத்தில் ஆசிரியர் பணியையும் செய்ய வேண்டி இருக்கிறது.
அவர்களுக்கு கால அட்டவணை இல்லாததால் மனதில் குழப்பம் தோன்றுகிறது.
கண்காணிப்பு
இரண்டாவது அவர்களுக்கும் இந்த கணினி மூலம் பயிற்றுவிப்பது என்பது புதிதான ஒன்று. பள்ளி வகுப்பறையில் ஆசிரியை மற்ற பிள்ளைகள் எல்லோரும் தன்னை கவனிக்கிறார்களா? என்று நோட்டமிட முடியும். ஆன்-லைனில் அதற்கு வாய்ப்பு கிடையாது. அப்படி வாய்ப்பு இருப்பினும் அந்த ஆசிரியரால் ஏதும் செய்ய இயலாது.
இதைத் தாண்டி சில பெற்றோர்கள் வகுப்பில் பாடம் நடக்கும் பொழுது, தன் பிள்ளைகள் அதை கவனிக்கிறார்களா? என்று பார்ப்பதற்காக அந்த கணினியின் பின்புறமோ அல்லது அருகிலோ அமர்ந்திருக்கிறார்கள். இது ஆசிரியர்களுக்கும் சரி, பிள்ளைகளுக்கும் சரி, ஒரு மிகப் பெரிய பிரச்சினையாகவே இருக்கிறது. இதனை ‘ஹெலிகாப்டர் பேரன்டிங்’ என்று கூறுவோம். அதாவது தன் பிள்ளைகளை சகஜமாக இருக்க விடாமல், எல்லா நேரமும் தங்கள் கண்காணிப்புக்கு கீழேயே வைத்திருப்பார்கள்.
பெற்றோர்கள்
தங்கள் பிள்ளை கல்வி கற்பது எப்படி? என்று பார்க்க வேண்டும். அதற்காக ஆன்-லைன் கல்வி நடக்கும் இடத்தில் நான் உட்கார்ந்து இருக்கிறேன். அல்லது ஆசிரியர் பயிற்றுவிப்பதை நானும் கற்றுக் கொண்டு என் குழந்தைக்கு சொல்லிக் கொடுக்கிறேன் என்று இருப்பார்கள். அவர்களை நான் பாராட்டுகிறேன். இருப்பினும் இது மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் என்பதை இவர்கள் உணர வேண்டும். ஆசிரியர் ஆகட்டும், உங்கள் பிள்ளைகள் ஆகட்டும், நீங்கள் அங்கு இருப்பதை நிச்சயமாக ஒரு இடைஞ்சலாக தான் பார்ப்பார்கள்.
பெற்றோர்களும் இதை புரிந்து கொண்டு பிள்ளைகளுக்கு அந்த நேரத்தில் தனிமையை கொடுத்து, பாடத்தில் கவனத்தை செலுத்த உதவ வேண்டும்.
தவறான வகையில் பயன்படுத்த...
ஆன்-லைன் கல்வி கற்கிறேன் என்ற பெயரில், சில பிள்ளைகள் தவறாக கணினியைப் பயன்படுத்துவதை பெற்றோர் கண்காணித்து தடுக்க வேண்டும். பெற்றோரும், ஆசிரியர்களும் சரியான முறையில் தகவல்களை பரிமாறிக் கொள்ள வேண்டும். காலை, மதியம், மாலையில் எத்தனை மணிக்கு வகுப்பு என்று மாணவர்களுக்கு அவர்களுடைய பெற்றோர்கள் மூலம் ஆசிரியர் தெரிவிக்க வேண்டும். அந்த நேரத்தை கடந்தும் கணினி முன்பு மாணவர்கள் அமர்ந்து இருந்தால், அவர்களை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.
தேர்வு
மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆன்-லைனில் தேர்வு நடத்துகிறார்கள். இதை மாணவர்கள் எவ்வளவு நேர்மையாக செய்யப்போகிறார்கள் என்பது கேள்வி. இதற்கு அவர்களை தயார்படுத்த வேண்டும்.
ஆன்-லைன் கல்வியில் இவ்வளவு குழப்பங்கள் இருக்கிறதா? என்று பயப்படவேண்டாம். இதில் நன்மைகளும் இருக்கிறது, சிறுசிறு தீமைகளும் இருக்கிறது. முதலாவதாக நாம் ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் என்று பிள்ளைகளுக்கு போதிக்க வேண்டும். இரண்டாவதாக பிள்ளைகளை பெற்றோர்கள் சற்று கவனமாக கண்காணிக்க வேண்டும். ஆனால் எல்லா நேரமும் அவர்கள் கண்காணிப்பில் வைத்துக் கொண்டு பயமுறுத்த கூடாது. ஆசிரியர்களும் இந்தக் கல்வியை எதன் வழியாக போதித்தாலும் திறம்பட போதிப்பேன் என்ற எண்ணத்துடன் பிள்ளைகளுக்கு பயிற்றுவிக்க வேண்டும்.
அவ்வாறு பயிற்றுவித்தால், ஆன்-லைனில் படித்தாலும் சரி, வகுப்பறையில் படித்தாலும் சரி, அதிக மதிப்பெண்கள் பெறுவது திண்ணம்.
-நப்பின்னை சேரன், உளவியல் வல்லுனர்,
அகில இந்திய உளவியல் சங்க செயற்குழு உறுப்பினர் தமிழ்நாடு பிரதிநிதி.

30 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் கருப்பையில் இருந்து, கருத்தரிப்பு செயல்முறையின்போது ஒன்றுக்கும் மேற்பட்ட கரு முட்டைகள் வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
கடந்த சில ஆண்டுகளாக இரட்டைக்குழந்தைகள் பிறக்கும் விகிதம் கணிசமாக அதிகரித்துள்ளது. ஒரு பெண் இரட்டை குழந்தைகளை பெற்றெடுக்கும் விஷயத்தில் மரபியல் காரணங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் கருப்பையில் இருந்து, கருத்தரிப்பு செயல்முறையின்போது ஒன்றுக்கும் மேற்பட்ட கரு முட்டைகள் வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். உயரம், உணவுமுறை போன்ற பிற காரணிகளும் இரட்டை குழந்தைகளை பெற்றெடுக்கும் விஷயத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உயரமான பெண்களுக்கு இன்சுலின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். மேலும் இயல்பை விட சுமார் 5 மடங்கு அதிகமாக பால் உணவுகளை உட்கொள்ளும் தாய்மார்கள் சைவ உணவு உண்பவர்களை விட இரட்டை குழந்தைகளை கருத்தரிக்க அதிக வாய்ப்புள்ளது. இரட்டையர்கள் பற்றிய மேலும் பல சுவாரசியமான விஷயங்கள் என்னவென்று பார்ப்போமா?
* இரட்டையர்கள் என்பது ஒரே மாதிரியான உடல் அமைப்பு, அடையாளங்கள் கொண்ட குழந்தைகளை பெற்றெடுப்பதாகும். எனினும் கால் விரல் நகங்கள், நிறம், பிறப்பு அடையாளங்களில் சில வேறுபட்ட பண்புகளைக் கொண்டிருக்கலாம்.
* இரட்டையர்கள் ஒருவருக் கொருவர் நெருக்கமான பிணைப்பை கொண்டிருப்பார்கள். இருவருக்கும் இடையேயான பிணைப்பு கருப்பையிலேயே தொடங்கிவிடுகிறது. கர்ப்பத்தின் 14-வது வாரங்களில் இந்த பிணைப்பு ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் மதிப்பிடுகிறார்கள். சில குழந்தைகளிடத்தில் இந்த பிணைப்பு 14 வாரங்களுக்கு முன்போ அல்லது பின்போ ஏற்படலாம்.
* ஒரே மாதிரியான இரட்டையர்களாக இருந்தால், ஒரு கரு முட்டை இரண்டு பகுதிகளாகப் பிரிந்து, அதன் பிறகு கருத் தரித்தல் நடைபெறும். ஆனால் கரு முட்டைகள் பிளவுபடும் நேரம்தான் இரட்டைக் குழந்தைகள் தனி தனி பனிக்குட பைகள் மற்றும் நஞ்சுக்கொடிகளை பெறுகிறார்களா அல்லது அவற்றைப் பகிர்ந்து கொள்கிறார்களா என்பதை தீர்மானிக்கிறது. தாயின் வயிற்றில் கரு முட்டைகள் பிளவுபடும் நேரத்தைப் பொறுத்து பல வேறுபாடுகள் ஏற்படலாம்.
* ஒரே மாதிரியான இரட்டையர்களாக இருந்தால், ஒரு குழந்தைக்கு மற்ற குழந்தையை விட அதிக ஊட்டச்சத்து கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். நஞ்சுக்கொடி இருவராலும் பகிர்ந்து கொள்ளப்படுவதாலும், ஒருவருக்கு மற்றவரை விட ரத்த அளவு அதிகமாக இருப்பதாலும் இது நிகழ்கிறது. இதனால் ஒரு குழந்தையின் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகக்கூடும். ஊட்டச்சத்து குறைபாட்டையும் ஏற்படுத்தும். அதிர்ஷ்டவசமாக இதற்கான சிகிச்சைகள் நடைமுறையில் இருக்கின்றன. அடிக்கடி அல்ட்ராசவுண்ட் பரிசோதனைகள் செய்வதன் மூலம் இத்தகைய பாதிப்பை கண்டறிந்து விடலாம்.
* ஒரே மாதிரியான இரட்டையர்கள் என்பவர்கள் ஒரே கரு முட்டையிலிருந்து உருவாகி, தங்கள் பெற்றோரிடம் இருந்து அதே மரபணுவை பெறுகிறார்கள். ஒரே மாதிரியான இரட்டையர்களைப் பற்றிய மற்றொரு சுவாரசியமான உண்மை என்னவென்றால், பெரும்பாலான நிகழ்வுகளில் அவர்களின் டி.என்.ஏ கிட்டத்தட்ட 99.9 சதவீதம் பொருந்தும். இது ஒரே மாதிரியான மூளை வடிவங்களுக்கு வழிவகுக்கும். இதனால் ஐ.கியூ உருவாக்கம், நுண்ணறிவு ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் கைரேகைகள் மற்றும் பற்களின் அடையாளங்கள் வேறுபடலாம்.
* இரட்டைக் குழந்தைகள் பலர் இடது கை பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். அது அவர்களின் தனித்துவமான அடையாளம். இரட்டைக் குழந்தைகளில் 22 சதவீதம் பேர் இடது கை பழக்கம் கொண்டவர்களாக பிறக்கிறார்கள். அதேசமயம் ஒற்றை குழந்தைகளில் 10 சதவீதம் பேரே இடது கை பழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
* இரட்டையர்கள் ஒரே நாளில்தான் பிறந்திருக்க வேண்டும், அவர்களது பிறந்தநாள் ஒரே தேதியாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. சில நாட்கள் அல்லது வார இடைவெளியில் இரண்டு வெவ்வேறு நாட்களில் இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள். எனினும் சிசேரியன் மூலம் குழந்தை பிறக்கும் நிலை அதிகரித்து வருவதால் சில நிமிட இடைவெளியில் இரட்டை குழந்தைகள் பிறக்கிறார்கள்.
* இரட்டைக் குழந்தைகளில் பெரும்பாலானோர் சிசேரியன் வழியே பிறந்தவர்கள் என்பதை அறிந்திருக்கலாம். இருப்பினும் இது அவசியமில்லை. கருப்பையில் இரு குழந்தைகள் ஒன்றன் மேல் ஒன்றாக அமைந்துள்ளதால், ‘ஏ’ குழந்தையின் தலை கீழ்நோக்கி இருந்தால் சுக பிரசவம் சாத்தியமாகும். அப்படி சுக பிரசவம் மூலம் ‘ஏ’ குழந்தை பிறந்தால் அடுத்ததாக ‘பி’ குழந்தை பிறப்பது கடினமாக இருக்காது. இருப்பினும் தாய் - சேயின் உடல் நலனை கருத்தில் கொண்டு சிசேரியன் பரிந்துரைக்கப்படுகிறது.
* இரட்டைக் குழந்தைகளின் எடை ஒற்றை குழந்தையின் எடையை விட குறைவாகவே இருக்கும். ஒற்றை குழந்தையின் சராசரி எடை 3.500 கிலோ கிராம். ஆனால் இரட்டை குழந்தை களின் எடை 2.500 கிலோ கிராம் என்ற அளவிலேயே இருக்கும். அதற்காக இரட்டைக் குழந்தைகள் ஆரோக்கியமில்லாமல் பிறக்கிறார்கள் என்று அர்த்தமல்ல. அவர்கள் ஒற்றைக் குழந்தைகளைப் போலவே ஆரோக்கியமாக இருப்பார்கள்.
* பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இரட்டையர்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும், சில சமயங்களில் அவ்வாறு இருப்பதில்லை. அதாவது அவர்களின் முக அமைப்பு உள்ளிட்ட அடையாளங்கள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒரே கரு முட்டையில் இருந்து அல்லாமல் வெவ்வேறு கரு முட்டைகள் மூலம் கருவுறுதல் நிகழும்போது டி.ஏன்.ஏ. 75 சதவீதம் மட்டுமே பகிரப்படும். இது வளரும்போது அவர்களின் திறன்கள் மற்றும் செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அடிக்கடி வாந்தியோ, தொடர் வாந்தியோ இருந்தால், அவற்றுடன் வேறு நோய்கள் ஏதாவது இருந்தாலும், குழந்தையை உடனே மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்து சாயான சிகிச்சை அளிக்க வேண்டும்.
வாந்தி எடுப்பதற்கு காரணம் குடல் பாகம் இல்லா திருத்தல், குடல் இடம் மாற்றம், வால்வுகள், ரத்தத்தில் நோய்க் கிருமிகள், மூளைக் காய்ச்சல், மூச்சுத் திணறல், மூளையின் நீர் அதிகமாதல், தவறான முறையில் பால் புகட்டுதல் போன்ற காரணத்தால் சிறு குழந்தை களுக்கு வாந்தி ஏற்படுகிறது.
ஒரு வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் வாந்தி எடுப்பதற்கு காரணம் தவறான முறையில் பால் புகட்டுதல், அதிகப்பால் கொடுத்தல், பிறப்பிலேயே குடல் வீங்கி அடைத்துக் கொள்ளுதல், பேதி, மூளையில் கிருமிகள் தாக்கம், மூளையில் ரத்தக்கட்டு, மூளையில் நீர் அதிகமாதல், மாட்டுப்பால் அலர்ஜி மனநிலை பாதிப்பு, சிறுநீரில் கிருமி, மஞ்சள் காமாலை, நீரிழிவு நோய், நிமோனியா காய்ச்சல், குடல் அடைப்பு போன்ற காரணத்தால் சிறுவர்கள் வாந்தி எடுப்பதுண்டு.
நிறைய குழந்தைகள் சாதாரணமாகவே சிறு சிறு காரணங்களுக்காக வாந்தி எடுப்பார்கள். அதனால் பயப்பட வேண்டாம். சர்க்கரை - உப்புக் கரைசலை கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்தால் போதும். சில குழந்தைகள் வாந்தி எடுத்தாலும், அவற்றின் உடல் எடை மற்றும் செயல்பாடுகள் நன்றாக இருக்கும். அத்தகைய குழந்தைகளுக்குச் சிகிச்சை தேவையில்லை.
அடிக்கடி வாந்தியோ, தொடர் வாந்தியோ இருந்தால், அவற்றுடன் வேறு நோய்கள் ஏதாவது இருந்தாலும், குழந்தையை உடனே மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்து சாயான சிகிச்சை அளிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் பெற்றோர்கள் தாமாகவே சிகிச்சை அளிக்கவோ, வீட்டில் இருக்கும் மருந்துகளைக் கொடுக்கவே கூடாது. அதனால், குழந்தை யின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் எச்சரிக்கை யாகவும், கவனமா கவும் இருக்க வேண்டும்.

பல சந்தர்ப்பங்களில் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் செயல்பாடுகளை கண்காணிக்க தவறிவிடுகின்றனர். வேலைக்கு செல்லும் பெற்றோர் பிள்ளைகளின் நடவடிக்கைகள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட போக்சோ சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் கடந்த 2021-ம் ஆண்டில் 11 மாதங்களில் மட்டும் முந்தைய ஆண்டை விட 15 சதவீதம் வழக்குகள் கூடுதலாக பதிவாகியுள்ளது.
அங்கு 2020-ம் ஆண்டில் 2,107 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் 2021-ம் ஆண்டு நவம்பர் வரையிலான காலகட்டத்தில் 2,427 வழக்குகளே பதிவாகி இருந்தன. அதேவேளையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழங்கப்படும் தண்டனை எண்ணிக்கை பெருமளவில் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. 2019-ம் ஆண்டில் 49 பேர் தண்டிக்கப்பட்டனர். ஆனால் 2021-ம் ஆண்டு இரண்டு பேர் மட்டுமே குற்றங்களுக்கு தண்டனை பெற்றிருக்கிறார்கள்.
2019-ம் ஆண்டை விட (2,146 வழக்குகள்) 2020-ம் ஆண்டில் (2,107) வழக்குகள் குறைந்திருந்த நிலையில் மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருப்பது கவலைக்குரிய விஷயம் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.
சமூக ஊடகங்கள் மற்றும் மொபைல் போன்களின் பயன்பாடு அதிகரிப்பதே இதற்கு காரணம் என்கிறார், அரசு வழக்கறிஞர் ஜி.வி.காயத்ரி ராஜு. ``இந்த தலைமுறை சிறார்களுக்கு இலவச இணைய சேவையை பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
தங்கள் மொபைல் போனில் தாங்கள் விரும்பும் எதையும் பார்க்கலாம். இன்று மொபைல் போன்கள் தகவல் தொடர்புக்கு மட்டும் பயன்படுத்தப்படவில்லை. வீடியோக்கள், படங்கள், செய்திகள் என பல விஷயங்களை பார்க்க முடியும். அவை இளம் மனதை சுபலமாக ஈர்க்கின்றன. பல சந்தர்ப்பங்களில் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் செயல்பாடுகளை கண்காணிக்க தவறிவிடுகின்றனர். வேலைக்கு செல்லும் பெற்றோர் பிள்ளைகளின் நடவடிக்கைகள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்’’ என்றும் சொல்கிறார்.

2021-ம் ஆண்டில் கடத்தப்பட்ட மைனர் சிறுமிகளின் வழக்குகளில் பெரும்பாலானவை ஆண்டின் கடைசி காலாண்டில் பதிவாகியுள்ளன என்றும் காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
கர்நாடகாவில் வீட்டை விட்டு வெளியேறி காணாமல் போய், கண்டுபிடிக்கப்படாத மைனர் பெண்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்துள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. குடும்ப தகராறு, வீட்டு சூழல், பொருளாதார நிலைமை, தங்களின் விருப்பம் இல்லாமல் திருமணம் செய்வதற்கு நிர்பந்திக்கப்படுவது போன்றவை காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
2021-ம் ஆண்டில் கடத்தப்பட்ட மைனர் சிறுமிகளின் வழக்குகளில் பெரும்பாலானவை ஆண்டின் கடைசி காலாண்டில் பதிவாகியுள்ளன என்றும் காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது. அவர்கள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது. கடத்தப்பட்ட 578 சிறுமிகளில் 105 சிறுமிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று காவல்துறை பதிவுகள் காட்டுகின்றன.
இந்த எண்ணிக்கை 2020-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்படாத சிறுமிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது பத்து மடங்கு அதிகமாகும். அதாவது 2020-ம் ஆண்டில் 463 சிறுமிகள் கடத்தப்பட்டனர். அதில் 453 பேர் மீட்கப்பட்டுவிட்டனர். 2019-ம் ஆண்டில் 600 சிறுமிகள் கடத்தப்பட்டனர். அவர்களில் 585 பேர் மீட்கப்பட்டுவிட்டனர். 15 பேர் மட்டுமே கண்டுபிடிக்கப்படவில்லை.
காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘காணாமல் போனவர்களில் 90 சதவீத வழக்குகளில் தொடர்புடையவர்கள் வீட்டை விட்டு திட்டமிட்டு சென்றவர்கள். அவர்கள் மாநிலத்திற்குள்ளோ, அல்லது வேறு மாநிலத்திற்குள்ளோ ஏதோவொரு மூலையில் குடியேறுவதால் காவல்துறையினரால் கண்டுபிடிப்பது கடினம்’’ என்கிறார். மேலும் பல வழக்குகளில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கும், அவர் விரும்பிய நபருக்கும் திருமணம் நடந்திருக்கும் என்றும் சொல்கிறார்.
‘‘போலீசார் தங்களை தேடுவது தெரிந்துவிட்டால் மொபைல்போன்களை பயன்படுத்துவதை நிறுத்துவிடுவார்கள். அல்லது மற்றவர்கள் தொடர்பு கொள்ளாமல் இருப்பதற்காக செல்போன் எண்ணை மாற்றிவிடுவார்கள்.
சில சமயங்களில் தங்களது குடும்ப உறவினர்கள் அல்லது நண்பர்களை தொடர்பு கொண்டு பேசுவதன் மூலம் அவர்களின் இருப்பிடத்தை அறிந்து கொள்ள முடியும். இப்படிப்பட்ட வழக்குகளில் சில விரைவாக முடிவுக்கு வந்துவிடும். பெரும்பாலானவை இழுபறியாகவே நீடிக்கும்’’ என்கிறார்.
மைனர் சிறுமிகளில் பலர் பெற்றோருக்கு தெரியாமல் விரும்பியவர்களுடன் சென்றார்களா? அல்லது கடத்தப்பட்டார்களா என்பது உறுதியாக தெரியாததால் முதல்கட்டமாக வழக்கு பதிவு செய்வதில் குழப்பம் இருப்பதாகவும் காவல்துறை கூறுகிறது.
உலகளவில் காணாமல் போகும் பெண்கள் பற்றிய வழக்குகளில் பாதிக்கும் மேற்பட்டவை இந்தியாவில் பதிவாகுவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. மேலும் சமூக-பொருளாதார, வரலாற்று மற்றும் கலாசார காரணிகளால் ஆண்களை விட பெண்கள் அதிக பாகுபாட்டை எதிர்கொள்கிறார்கள் என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.